Advertisement
வேலூர் லோக்சபா தேர்தல்; தி.மு.க., வெற்றி
Updated : ஆக 09, 2019 | Added : ஆக 09, 2019 | கருத்துகள் (271)
 • Live
 •  
 • Sort by:
 • Latest
 • Oldest
 • Auto update:
 • ON
 • OFF
5:14 PM IST
ஸ்டாலின் நன்றி

வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி- ஸ்டாலின்

5:03 PM IST
அமைச்சர் பேட்டி

எங்களுக்கு மகத்தான ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. ஒரு மோசமான, மோசடியான வெற்றி. பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது. ; - அமைச்சர் ஜெயக்குமார்.

4:47 PM IST
கதிர் ஆனந்த் பேட்டி

இந்த வெற்றி ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கையாக செலுத்துவோம்.

4:45 PM IST
வெற்றி சான்று

கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரிடம் வெற்றிச்சான்று வழங்கப்பட்டது.

3:30 PM IST
ஓட்டுக்கள் விவரம்

கதிர் ஆனந்த் (திமுக) ; 4, 85,340 ஏ.சி.சண்முகம் (அ.திமுக) : 4, 77,199 தீப லட்சுமி (நாம் தமிழர் )26,995 வெற்றி வித்தியாசம்; 8,141 ஓட்டுக்கள்

3:30 PM IST
திமுக வெற்றி

வேலூர்: கதிர் ஆனந்த் 9,018 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி

2:23 PM IST
வெற்றி முகம்

வேலூர் லோக்சபா; தி.மு.க., வெற்றி முகம்

2:19 PM IST
அதிக ஓட்டு

வேலூரில் மட்டும் இரு கட்சிகளும் அதிக ஓட்டு பெற்றது

2:12 PM IST
திமுக முன்னிலை

கதிர் ஆனந்த்; 8,460 முன்னிலை கதிர் ஆனந்த்; 4, 78, 855 ஏ.சி.சண்முகம்; 4, 70 395

1:56 PM IST

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 9,858 ஓட்டு வித்தியாசம், மொத்தம் 4,75,152 அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம்; 4,65,294 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

1:48 PM IST

திமுக வேட்பாளர், கதிர் ஆனந்த், அதிமுகவின் ஏ.சி.சண்முகத்தை விட கூடுதலாக 11,644 ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றார். கதிர் ஆனந்திற்கு 4,64,877 ஓட்டு, ஏ.சி.சண்முகத்திற்கு 4,53,295 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

முழு விபரம்:

வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4, 85,340 ஓட்டுகளும், அதிமுக வை சேர்ந்த ஏ.சி.சண்முகம் 4, 77,199 ஓட்டுகளும் , நாம்தமிழர் கட்சியை சேர்ந்த சேர்ந்த வேட்பாளருக்கு 26,995 ஓட்டுக்கள் கிடைத்தது.
வேலுார் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், சண்முகம், தி.மு.க., சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட, 28 பேர் போட்டியிட்டனர்.கடந்த, 5ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம், 71.51 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. பதிவான ஓட்டுகள், எண்ணும் பணி சட்டசபை தொகுதி வாரியாக, இன்று காலை, 8:00 மணிக்கு, துவங்கியது. முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

ஓட்டு எண்ணும் மையத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 1,073 போலீசார்; 100 துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது .


இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. ஸ்டாலினுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம் என துரைமுருகன் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (271)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201911:16:20 IST Report Abuse
மனிதன் இப்போ மட்டும் இந்த EVM மெஷின் எல்லாம் சரியாக வேலை செய்தது என்று நாங்கள் கூவுவோம் ஆனால் தோற்றுப்போய் இருந்தால் குய்யோ முறையோ என்று கூவுவோம் என்னங்கடா உங்க நியாயம் திருந்தாத நம் மக்கள் இருக்கும் வரை எதை புரட்சியாளர்கள் வந்தாலும் அவன் கத்தி கத்தி சாகவேண்டியது தானேயொழிய மாற்றம் எதுவுமே நடக்கபோறதில்லை ஆனால் வக்கனையா மாற்றம் வேண்டும் என்று மட்டும் கூவுவோம் கடைசியில் குவாட்டர் பிரியாணி பணம் இந்த மூன்றும் தந்தால் வாக்கை அவனுக்கு இடுவோம் இந்த கேடுகெட்ட பழக்கம் மாறும்வரை கொள்ளையர்களின் கூடாரம்தான் நம் தமிழ்நாடு விடிவே இல்லை இனி ...............
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
11-ஆக-201908:25:10 IST Report Abuse
Bharathi இப்ப மட்டும் EVM நல்லா வேலை செஞ்சதாமா?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-ஆக-201910:33:26 IST Report Abuse
bal இவ்வளவு பணம் சிக்கியதனால்தான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது..அதையும் மீறி மக்கள் அவர்களுக்கே வோட்டு போட்டிருப்பதனால் தெள்ளத்தெளிவாக உள்ளது. குவாட்டர் பிரியாணி துட்டு வேலை செய்துள்ளது. மக்கள் எப்போதுதான் திருந்துவார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X