Advertisement
தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் சந்திரயான்-2
Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (4)
 • Live
 •  
 • Sort by:
 • Latest
 • Oldest
 • Auto update:
 • ON
 • OFF
11:54 AM IST
#Chandrayaan2

சந்திரயான்-2 தற்போது டுவிட்டரில் டிரண்டிங்கில் வந்தது.

முழு விபரம்:

பெங்களூரு: தாய் வீட்டில் இருந்து மணப்பெண் புகுந்த வீட்டிற்குள் நுழைவது போல் சந்திரயான்-2 நிலவுக்குள் மாறும் என இஸ்ரோ தலைவர் டாக்டர்.கே.சிவன் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
சந்திரயான் தற்போது நிலவை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நாளை முதல் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழும். மணமகள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு செல்வது போல சந்திரயான் 2 பூமியில் இருந்து நிலவுக்கு சென்றுள்ளது. இது பெருமைகுரிய ஒரு நிகழ்வு. நிலவுக்குள் சந்திரயான் நுழையும் நாளில் பிரதமர் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திட்டமிட்டபடி சந்திரயான் முன்னேற்றம் அடைந்துள்ளது. நிலவில் கால்பதித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்தது. செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், மிகப்பெரிய சாதனை நிகழ்வு,இதன் மூலம் இலக்கை நாம் நெருங்கி வருகிறோம். சந்திரயான் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றார்.

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன் -2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.

நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் உள்ளதா; அங்கே மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை ஜூலை 22ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான'இஸ்ரோ' வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் நிலவு வட்டப் பாதையை நெருங்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் படிப்படியாக அதன் புவி வட்டப்பாதையை அதிகரித்தனர்.


இந்நிலையில், திரவ இன்ஜினை இயக்கி சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், திட்டமிட்டபடி காலை 9.02 மணிக்கு நிலவின் பாதையில் சந்திராயன் -2 கொண்டு செல்லப்பட்டது. நாளை(ஆக.,21), ஆக., 28, 30 மற்றும் செப்.,1 ல் நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் -2 விண்கலத்தின் திசை 4 முறை மாற்றப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் நாளை பகல் 12.30 மணி முதல் 1.30 மணிககுள் சந்திராயன்-2ன் திசை மாற்றப்படுகிறது.

4 முறை திசையை மாற்றிய பிறகு 100 கி.மீ.., தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன் - 2 அடையும். சந்திராயன்- 2ல் இருந்து செப்., 2ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும். பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை இரண்டு முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர்,,செப்., 7 ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, விக்ரம் லேண்டர் ஆய்வை துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (4)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஆக-201918:01:28 IST Report Abuse
மலரின் மகள்கள் அருமையான உவமை. விஞ்ஞானிகளுக்கு தமிழும் தவழ்கிறது. மீண்டும் எழுபதுகளின் அறிவின் ஆளுமை தமிழின் ஆளுமை வெளிப்படுகிறது போலும். பட்ஜெட்டில் கூட திருக்குறள் தான். மனதிற்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சிவன் அவர்களே. எவ்வளவு தான் ஆங்கில காலையிலேயே படித்து முன்னேறினாலும் தமிழின் சிறப்பாலும் தாய் மொழியின் பால் இயற்கையான ஈடுபாடாலும் தமிழை ஏற்பாடு பட்டாகிலும் தொடர்ந்து படித்து சிறப்பு பெறுகிறோம். தமிழ் வாழ்க. தமிழ் தொண்டில் தன்னை இணைத்து கொண்ட அனைவரும் வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
20-ஆக-201914:56:30 IST Report Abuse
V.B.RAM மோடிக்கு இதே வேலைய போச்சு. போன வாரம் அண்டை மாநிலமான காஷ்மீரில் போய் அத்துமீறி நுழைந்து 370 பறித்தார். அதற்குத்தான் ஸ்டாலின் தலைமையில் தில்லியில் போராட்டம் நடத்தப்போறோம். அதற்குள் அடுத்த கிரகமான சந்திரனில் அத்துமீறி நுழைகிறார். இது எதோச்சதிகாரம். இதை ஸ்டாலில், திருமா, திருமுருக காந்தி,சீமான் வைகோ வேல்முருகன் போன்றவர்களின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் . தமிழ் மக்கள் பொங்கி எழுவார்கள். போர் முரசு கொட்டட்டும் , புரட்சி வெடிக்கும்
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-ஆக-201904:38:11 IST Report Abuse
 nicolethomsonசெம சார்...
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
20-ஆக-201912:17:56 IST Report Abuse
G.BABU பதட்டம் .....எதிர்பார்ப்பு .....பெருமை.... என உணர்வுகள் கலவையாக வெளிப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை
>

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X