டில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ: 43 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம் | Dinamalar
Advertisement
டில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ: 43 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்
Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (21)
 • Live
 •  
 • Sort by:
 • Latest
 • Oldest
 • Auto update:
 • ON
 • OFF
12:30 PM IST
வழக்குப்பதிவு

உயிரிழப்புக்கு காரணமானதாக குற்றப்பிரிவு போலீசார் 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

12:00 PM IST
இழப்பீடு அறிவிப்பு

சம்பவ இடத்தை பார்வையிட்ட முதல்வர் கெஜ்ரிவால், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

12:00 PM IST

தீவிபத்து நடந்த இடத்தை தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.

11:14 AM IST
கெஜ்ரிவால் நேரில் பார்வை

தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் பார்வையிட்டார்.

10:30 AM IST
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கிய இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

9:30 AM IST
அதிகாலையில் தீ விபத்து

தொழிலாளர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது.

முழு விபரம்:

புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தீயைணைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்னர்.டில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு, அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்த கட்டடத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தீவிபத்தில் படுகாயமடைந்து, டில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற சிலர் காயங்களுடன், ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
09-டிச-201901:23:40 IST Report Abuse
Allah Daniel இது மட்டும் தமிழ் நாட்டில் நடந்திருந்தால்....சுடலை கேவலமான அரசியல் செஞ்சிருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
08-டிச-201921:26:09 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மோடி ஷா இருக்கிற இடம் எல்லாம் புகையுது
Rate this:
Share this comment
Cancel
Saravanan Kumar - nellai ,இந்தியா
08-டிச-201921:13:24 IST Report Abuse
Saravanan Kumar எங்கே போனார் பிண அரசியல்வாதி சுடாலின் இது தமிழகத்தில் நடக்கவில்லையே என்று ரொம்ப வறுத்த பட்டிருப்பார் பாவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை
>

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X