Advertisement
இந்தியாவில் இதுவரை 223 பேருக்கு கொரோனா பாதிப்பு
Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (9)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
6:34 AM IST
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆனது

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 236 ஆனது. கொரோனாவால் இதுவரை மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர்.

6:00 AM IST
உலகளவில் கொரோனா பலி 11,384 ஆனது

உலக அளவில் கொரோனா பலி 11,384 ஆனது. உலக அளவில் மொத்தம் கொரோனாவால் 2,75, 525 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்

5:49 AM IST
அமெரிக்காவிலும் இத்தாலியிலும் வேகமாக பரவும் கொரோனா

தற்போது கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் இத்தாலியிலும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 5,604 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 19,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா புதிதாக பரவியுள்ளது. பலி எண்ணிக்கை ஒரே நாளில் 627 ஆனது. இது வரை மொத்தம் 4,032 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 41 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். ஸ்பெயினில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 262 பேர் பலியானார்கள். அந்நாட்டில் மொத்தம் 21,510 பேர் பாதிப்பு அடைந்த நிலையில் ஒரே நாளில் 3,433 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

12:59 AM IST
உலகளவில் கொரோனா பலி 11 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பலி 11 ஆயிரத்தை தாண்டியது

10:08 PM IST
பாலிவுட் பாடகிக்கு கொரோனா தொற்று

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

9:09 PM IST
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மையம் 7 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மையம் 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

9:04 PM IST
பயணிகள் ரயில் மார்ச் 22 அன்று இயங்காது

மார்ச் 22 அன்று இரவு 10 மணி வரை பயணிகள் இயங்காது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

7:34 PM IST
வெளிமாநில வாகனங்கள் வர தடை: தமிழக அரசு

நாளை(மார்ச்-21) முதல் மார்ச்-31 வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

7:31 PM IST
மார்ச்-22ல் தமிழகத்தில் லாரிகள் இயங்காது:

தமிழகம் முழுவதும் மார்ச்-22 அன்று மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, லாரிகள் இயங்காது என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

5:25 PM IST
சென்னை மெட்ரோ ரத்து

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 22ம் தேதி, மக்கள் ஊரடங்கு உத்தரவில் இருக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அன்றைய தினம் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5:21 PM IST
223ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கு 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 191 இந்தியர்களும், வெளிநாட்டவர் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12:08 PM IST
5வது மரணம்

இந்நிலையில், இந்தியாவிற்கு வந்த இத்தாலியை சேர்ந்த 69 வயதான சுற்றுலா பயணிக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

11:00 AM IST

மஹாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் 3 பேருக்கு மேலும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

9:11 AM IST
ஒடிசாவில் 2வது நபருக்கு கொரோனா

ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று உள்ளவர்களி்ன் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

9:08 AM IST
திரைப்பட விழா ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.

9:07 AM IST

அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கலிபோர்னியாவில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டு, நகரம் மூடப்பட்டுள்ளது. இதனால்,4 கோடி பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

9:06 AM IST
3 பேருக்கு கொரோனா

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

9:06 AM IST
ஒரு லட்சத்தை தாண்டிய பாதிப்பு

ஐரோப்பாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

7:18 AM IST
இந்தியாவில் 195 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருவர் பலியானதால், பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20 பேர் சிகிச்சைக்குப்பின் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

11:45 AM IST
அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது.

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில், இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு இதுவரை 10,041 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,073 ஆக உயர்ந்துள்ளது. அதில், 88,151 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டனர்.






சீனாவை மிஞ்சிய இத்தாலி:


இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 41,035 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5,322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,440 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் நேற்று 3 பேர் பலியாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,248 ஆக அதிகரித்தது. அங்கு 39 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். ஈரானில் 1,284 பேர், ஸ்பெயினில் 831 பேர், அமெரிக்காவில் 214 பேர், பிரான்சில் 372 பேர், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மார்-202007:21:14 IST Report Abuse
VENKATASUBRAMANIAN People don't have sense..
Rate this:
Share this comment
Cancel
Elamurugu -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202007:10:10 IST Report Abuse
Elamurugu Your is very late. It already crossed 270 by Friday night itself.
Rate this:
Share this comment
Cancel
parimala - trichy,இந்தியா
20-மார்-202020:59:42 IST Report Abuse
parimala தேவை இல்லாமல் பயணம் செய்தால் தண்டனை தர வேண்டும். சமூக சிந்தனை இல்லமால் இருக்கிறார்கள் ஏற்கனவே நிறைய பேருக்கு சளி உள்ளது. வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களில் முந்தைய நான்கு மாதங்களுக்கு தகவல் சேகரித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை
>

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X