உலகில் கொரோனா பலி 82,020 | Dinamalar
Advertisement
உலகில் கொரோனா பலி 82,020
Updated : ஏப் 08, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (183)
 • Live
 •  
 • Sort by:
 • Latest
 • Oldest
 • Auto update:
 • ON
 • OFF
2:10 AM IST
கொரோனா: சவுதியில் 2 லட்சத்தை தொடும்

சவுதி அரேபியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2795 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் 2 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக சவுதி சுகாதார அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.

2:05 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று ; 8 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

2:04 AM IST
கொரோனா: குணமடைந்த 3 லட்சம் பேர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

1:57 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று ; 8 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் ஒருவருக்கு பரவியதால் கொரோனாவுக்கு பலி 8 ஆக உயர்ந்துள்ளது.

11:52 PM IST
ஒரே நாளில் பிரான்சில் 1,417; அமெரிக்காவில் 1,375 பேர் பலி

ஏப்.7 (இன்று) ஒரே நாளில் கொரோனாவுக்கு பிரான்சில் 1,417 பேரும் அமெரிக்காவில் 1,375 பேரும் பலியாகி உள்ளனர்.

11:35 PM IST
கொரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 28ஆயிரத்து 428ஆனது. சிகிச்சை பெற்று 3 லட்சத்து 733 பேர் மீண்டுள்ளனர்.

10:36 PM IST
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.தனியார் மருத்துவமனையில் 45 வயதுடைய சென்னை நபர் உயிரிழந்தார்..இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.

10:23 PM IST
கொரோனா பலி 79 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 86 ஆயிரத்து 771 ஆனது. பலியானவர்களின் எண்ணிக்கை 79,037 ஆனது. சிகிச்சை பெற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 477 ஆனது.

8:21 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1018 ஆனது

நாட்டிலேயே அதிகமாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1018 ஆனது.

7:55 PM IST
இந்தியாவில் 4,789 பேருக்கு கொரோனா: 124 பேர் பலி

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆனது. 353 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

7:08 PM IST
13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

இரும்பு, உரம், சிமெண்ட், ஸ்டீல், டயர், சுத்திகரிப்பு, காகிதம் உள்ளிட்ட 13 வகை தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

6:04 PM IST
தமிழக பாதிப்பு 690 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ( ஏப். 7 ம் தேதி ) 69 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

5:39 PM IST
76 ஆயிரத்து 201 பேர் பலி

இன்று ( ஏப்.7ம் தேதி) மாலை 5.30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 61 ஆயிரத்து 024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்து 201 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 93 ஆயிரத்து 617 பேர் மீண்டுள்ளனர்.

4:18 PM IST
ஜப்பானில் 5 மாகாணங்களில் ஊரடங்கு

கொரோனாவை ஒழிக்க டோக்கியோ உள்ளிட்ட 5 மாகாணங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே அறிவித்துள்ளார்.

3:12 PM IST
தென்கொரியா போல் நடவடிக்கை

கொரோனா பாதிப்பபில் அடையாளம் காணவும், பரிசோதிக்கவும் , தனிமைப்படுத்தவும், தேவைப்படும் பகுதிகளை சீல் வைக்கவும், தீவிரமாக நடவடிக்கை எடுப்போம். தென் கொரியா எடுத்த வழிமுறைகளை கையாள்வோம். - டில்லி முதல்வர் கெஜ்ரிவால்.

11:39 AM IST
2 லட்சத்து 85 ஆயிரத்து 101 பேர் மீண்டனர்

இன்று ( ஏப்.7ம் தேதி) காலை 11.30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்து 480 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்து 85 ஆயிரத்து 101 பேர் மீண்டுள்ளனர். கடந்த 19 மணி நேரத்தில் 62,852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19 மணி நேரத்தில் 13, 380 பேர் மீண்டுள்ளனர். 4,160 பேர் பலியாகி உள்ளனர்.

12:17 AM IST
அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை கடந்தது

கொரோனோ வைரஸால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 10,490 ஆனது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,56,414 ஆனது. 19,247 பேர் மீண்டுள்ளனர்.

11:26 PM IST
கோவையில் 58 வயதானவருக்கு கொரோனா தொற்று

கோவை கவுண்டம்பாளையம் சிவா நகரில் 58 வயதானவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர். சுய பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தன்னை அனுமதித்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. இதை ஒட்டி சிவா நகர் தெருக்கள் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டன. அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

10:12 PM IST
கொரோனா பாதிப்பு: 13 லட்சத்தை தாண்டியது

இன்று ( ஏப்.6ம் தேதி) இரவு 10.10 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரத்து 494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 636 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 75 ஆயிரத்து 068 பேர் மீண்டுள்ளனர்.

9:53 PM IST
ஒரேநாளில் இங்கிலாந்து 439 பேர், ஸ்பெயினில் 528 பேர் பலி

கொரோனா தொற்றால் இன்று ஒரேநாளில், இங்கிலாந்தில் 439, ஸ்பெயினில் 528, பெல்ஜியத்தில் 185, ஈரானில் 136 பேர் உயிரிழந்தனர்.

9:27 PM IST
கொரோனா பாதிப்பு: 13 லட்சத்தை தொடுகிறது

இன்று ( ஏப்.6ம் தேதி) இரவு 9.25 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 12 லட்சத்து 97 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 ஆயிரத்து 270 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 72 ஆயிரத்து 819 பேர் மீண்டுள்ளனர்.

8:12 PM IST
12 லட்சத்து 89 ஆயிரத்து 111 பேர் பாதிப்பு

இன்று ( ஏப்.6ம் தேதி) இரவு 8 மணி நிலவரப்படி, கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 12 லட்சத்து 89 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்து 601 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 72 ஆயிரத்து 074 பேர் மீண்டுள்ளனர்.

7:29 PM IST
இந்தியாவில் 4,281 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 4,281 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 111 ஆனது. 319 பேர் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்.

6:17 PM IST
தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 91 , 851 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 205 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். 1475 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் பலி 6 ஆக உயர்ந்துள்ளது. - பீலா ராஜேஷ், சுகாதார துறை செயலர்.

4:33 PM IST
2 லட்சத்து 71 ஆயிரத்து 721 பேர் மீண்டனர்

இன்று ( ஏப்.6ம் தேதி) மாலை 4.15 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 84 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்து 320 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 71 ஆயிரத்து 721 பேர் மீண்டுள்ளனர்.

1:42 PM IST
புதிதாக 2500 வென்டிலேட்டர்கள் வாங்க முடிவு: முதல்வர்

தமிழகத்தில் 4, 612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கண்காணிப்பில் 90, 541 பேர் உள்ளனர். 571 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தடையை மீறிய 94 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 2500 வென்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. - முதல்வர் இபிஎஸ்

12:33 PM IST
2லட்சத்து 65 ஆயிரத்து 863 பேர் மீண்டனர்

இன்று ( ஏப்.6ம் தேதி) நன்பகல் 12. 20 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 74 ஆயிரத்து 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 ஆயிரத்து 496 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 65 ஆயிரத்து 863 பேர் மீண்டுள்ளனர்.

9:07 AM IST
ஆப்கனில் 367 பேருக்கு கொரோனா


ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது,.

9:06 AM IST

ம.பி., மாநிலம் போபாலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 62 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்தார். இதனால், அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

3:14 AM IST
கொரோனா பாதிப்பு: 12லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியது

இன்று அதிகாலை3 மணிக்கு உலகளவில் 12லட்சத்து 66 ஆயிரத்து 782 ஆனது. பலியானவர்களின் எண்ணிக்கை 69, 177 ஆனது. 2,61,177 பேர் மீண்டனர்.

9:15 PM IST
தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கு ஏந்தினார்

தமிழக முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் விளக்கு ஏந்தினார்.

9:15 PM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபம் ஏற்றினார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இல்லத்தில் தீபம் ஏற்றினார்.

9:09 PM IST
பிரதமர் மோடி விளக்கு ஏற்றி பிரார்த்தனை

நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

8:34 PM IST
தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு: 5 பேர் பலி

தமிழகத்தில், மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5 ஆக உள்ளது.

7:32 PM IST
3,577 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,577 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் அதிகரித்துள்ளது.

7:04 PM IST
தமிழகத்தில் கோவை 2வது இடம்

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் கோவை 2வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 571 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோவையில் 58 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 56 டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர்.

7:02 PM IST

தமிழகத்தில், மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.

4:42 PM IST
உலக பாதிப்பு: 12, 14, 487 பேர்

இன்று ( ஏப்.5ம் தேதி) மாலை 4. 35 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 14 ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரத்து 603 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 53 ஆயிரத்து 626 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 83 ஆயிரத்து 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2:36 PM IST
தடையை மீறிய 78 ஆயிரம் பேர் கைது

தமிழகத்தில் தடையை மீறியதாக 78 வழக்குகள் பதியப்பட்டு 78 ஆயிரத்து 770 பேர் கைது செய்யப்பட்டுளளனர். 60 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

12:39 PM IST
இரண்டே முக்ககால் லட்சம் பேர் மீண்டனர்

இன்று ( ஏப்.5ம் தேதி) காலை12.35 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 3 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 ஆயிரத்து 747 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 46 ஆயிரத்து 760 பேர் மீண்டுள்ளனர்.

12:22 PM IST

ஆந்திராவில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226ஆக அதிகரித்துள்ளது.

12:13 PM IST
661 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் இன்று (ஏப்.,5) மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது

9:30 AM IST
பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 3,374 ஆகவும்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 77 ஆகவும் அதிகரித்துள்ளது. 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

9:29 AM IST
தமிழகத்தில் 4 பேர் உயிரிழப்பு

கடந்த ஏப்.,3 ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

5:37 AM IST
கொரோனா பாதிப்பு: உலகளவில் 12 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 12லட்சத்து 319 ஆனது. பலியானவர்கள் எண்ணிக்கை 64,667 ஆனது. 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் மீண்டுள்ளனர்.

2:57 AM IST
இந்தியாவில் ' கொரோனா' பாதிப்பு 3,671 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,671 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 99 ஆக அதிகரித்துள்ளது.283 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2:36 AM IST
கொரோனா தொற்று: உலகளவில் 12 லட்சத்தை தொடுகிறது

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 93 ஆயிரத்து 763 ஆனது. உயிரிழப்பு 64,384 ஆனது. 2 லட்சத்து 46 ஆயிரத்து 110 பேர் மீண்டுள்ளனர்.

1:02 AM IST
கொரோனா: உலகளவில் பாதிப்பு 11 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,88,489 ஆனது. பலியானவர்களின் எண்ணிக்கை 64,103 ஆனது. 2 லட்சத்து 46 ஆயிரத்து 019 பேர் மீண்டுள்ளனர்.

12:59 AM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,573 ஆனது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3,573 ஆனது. 99 பேர் உயிரிழந்துள்ளனர். 281 பேர் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்,

11:04 PM IST
கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் 3 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3லட்சத்து 236 ஆனது. பலியானவர்கள் எண்ணிக்கை 8,145 ஆனது.

10:58 PM IST
இந்தியாவில் 3,501 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,501 ஆக அதிகரித்துள்ளது. இதில் 266 பேர் குணமடைந்துள்ளனர். 91 பேர் பலியாகி உள்ளனர்.

9:29 PM IST
இந்தியாவில் 3,490 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 3,490 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 91 ஆனது. 262 பேர் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். 3,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9:05 PM IST
கொரோனா பாதிப்பு: 11லட்சத்து 41 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸால் உலகில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 427 பேர் பாதிப்படைந்துள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 205 ஆனது. 2 லட்சத்து 38 ஆயிரத்து 498 பேர் மீண்டுள்ளனர்.

8:54 PM IST
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை பெட்ரோல் விற்பனை

தமிழகத்தில் அரசு உத்தரவுபடி மதியம் 1 மணி வரையே பெட்ரோல் , டீசல் விற்பனை செய்யப்படும் என விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மதியம் 2.30 மணி வரை விற்பனை என்ற நிலையிலிருந்து தற்போது மதியம் 1 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

6:14 PM IST
தமிழகத்தில் 90 ,543 பேர் தனிமை

இன்று ( ஏப்.4 ம் தேதி ) ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று தமிழகதில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 90 ,543 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டில்லி மாநாட்டில் பங்கேற்ற 422 பேருக்கு கொரோனா உறுதியானது. - பீலா ராஜேஷ், சுகாதார துறை செயலர்.

4:25 PM IST
60 ஆயிரத்து 146 பேர் பலி

இன்று ( ஏப்.4ம் தேதி) மாலை 4.15 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 11 லட்சத்து 30 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்து 146 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 35 ஆயிரத்து 880 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 939 பேர் பலியாகினர், 15, 984 பேர் மீண்டுள்ளனர்.

2:52 PM IST
டில்லியில் டாக்டர்கள், நர்சுகள் என 108 பேர் தனிமை

டில்லி கங்காராம் மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என 108 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் மொத்தம் 386 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் 250 பேர் தப்பலிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

2:02 PM IST
மருத்துவ உபகரண ஏற்றுமதிக்கு தடை

இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் மருத்துவ உபகரண பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என இந்திய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனை மத்திய வர்த்தக துறை அமைச்சகம் கூறியுள்ளது.

1:17 PM IST
மாஸ் அணியுங்கள்: மத்திய அரசு உத்தரவு

வீட்டில் இருந்து வெளியே வந்தால் அனைவரும் மாஸ்க் ( முககவசம்) அணிய வேண்டும்; மத்திய அரசு உத்தரவாக பிறப்பித்தது.

11:54 AM IST
உலக பாதிப்பு ; 11 லட்சத்து 17 ஆயிரத்து 324 பேர்

இன்று ( ஏப்.4ம் தேதி) காலை 11.40 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 11 லட்சத்து 17 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 ஆயிரத்து 201 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 29 ஆயிரத்து 145 பேர் மீண்டுள்ளனர். கடந்த 20 மணிநேரத்தில் உலகம் முழுவதும் 9 ஆயிரத்து 249 பேர் மீண்டுள்ளனர்.

10:42 AM IST

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும் அதிகரித்துள்ளது. 184 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

9:19 AM IST
ராஜஸ்தானில் முதல் பலி

ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில், 60 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், இன்று உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. இதில் டில்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் 41 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

6:15 AM IST
கொரோனா பலி 59 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவுக்கு உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 59,140 ஆனது.

5:57 AM IST
பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு ஒரேநாளில் பிரான்சில் நேற்று முதல் இன்று காலை வரை 1355 பேர் உயிரிழந்துள்ளனர்.

4:27 AM IST
அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலி 7 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 821 ஆனது. பலியானவர்களின் எண்ணிக்கை 7,088ஆனது.

3:08 AM IST
கொரோனா பாதிப்பு 10 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்தது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10லட்சத்து 93 ஆயிரத்து 107 ஆனது.

1:22 AM IST
கொரோனா பாதிப்பு 10 லட்சத்து 87 ஆயிரமானது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10லட்சத்து 87 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.


11:37 PM IST
கொரோனா பாதிப்பு: 10 லட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10லட்சத்து 79 ஆயிரத்து 978 ஆனது.2 லட்சத்து 27 ஆயிரத்து 668 பேர் மீண்டுள்ளனர்.

11:36 PM IST
கொரோனா: பலி 58 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவுக்கு உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 58,110 ஆனது.

10:43 PM IST
கொரோனா:அமெரிக்காவில் 2லட்சத்து 59 ஆயிரம் பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 750 ஆனது. பலியானவர்களின் எண்ணிக்கை 6,603 ஆனது.

10:27 PM IST
கொரோனோ பலி 56 ஆயிரத்தை கடந்தது

உலகளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56 ,752 ஆனது. 2 லட்சத்து 26 ஆயிரத்து 039 பேர் மீண்டுள்ளனர்.

10:24 PM IST
கொரோனா தொற்று 10 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்தது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10லட்சத்து 67 ஆயிரத்து 748ஆக அதிகரித்துள்ளது.

9:03 PM IST
கொரோனா பலி 55 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு உலகளவில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 359 பேரும், கொரோனாவுக்கு 55 ஆயிரத்து 737 பேர் உயிரிழந்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 891 பேர் மீண்டுள்ளனர்.

8:55 PM IST
இந்தியாவில் 2,547 பேர் பாதிப்பு

இன்று ( ஏப்.3ம் தேதி) இரவு 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 2 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:08 PM IST
உலக பாதிப்பு 10 லட்சத்து 39 ஆயிரத்து 922 பேர்

இன்று ( ஏப்.3ம் தேதி) இரவு 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 39 ஆயிரத்து 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 ஆயிரத்து 170 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 20 ஆயிரத்து 105 பேர் மீண்டுள்ளனர். இன்று 5 மணிநேரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

5:05 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று (ஏப்.3 ம் தேதி) ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

4:27 PM IST
உலக பாதிப்பு 10 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர்

இன்று ( ஏப்.3ம் தேதி) மாலை 4 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரத்து 207 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 19 ஆயிரத்து 896 பேர் மீண்டுள்ளனர். இன்று 5 மணிநேரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

2:33 PM IST
144 தடை உத்தரவை கடுமையாக்குவோம்: முதல்வர்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.

12:54 PM IST
உ. பி.,யில் 285 பேருக்கு கொரோனா

உ. பி.,யில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் டில்லி மதச்சார்பு மாநாட்டில் பங்றே்றவர்கள் 42 பேர் ஆவர்.

10:33 AM IST
இந்தியாவில் 2, 543 பேர் பாதிப்பு

இன்று ( ஏப்.3ம் தேதி) காலை 10.30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்து 218 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 12 ஆயிரத்து 993 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் 2 ஆயிரத்து 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

9:48 AM IST
ஏப்-5 ல் தீபமேற்றுங்கள்: மோடி

ஊரடங்கில் எடுத்துக்காட்டாக விளங்கிய மக்களை பாராட்டுகிறேன். கொரோனா ஒழிப்பில் ஒன்றுபட்ட மக்கள் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். ஒற்றுமையை வெளிக்காட்ட ஏப்.5ல் இரவு 9மணிக்கு மின்விளக்கை அனையுங்கள். அகல்விளக்கு, டார்ச், மொபைல்போன் போன் மூலம் ஒளி ஏற்றலாம். 9 நிமிடங்கள் ஏற்றவும். - பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரை.

8:04 AM IST
பலி 53 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,190 ஆக உள்ளது.

8:01 AM IST
1,169 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,169 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஜ் ஹோப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

5:49 AM IST
இந்தியாவில் 2543 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,543 ஆக அதிகரித்திருக்கிறது.

4:01 AM IST
கொரோனா: 10 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு உலகளவில் பத்து லட்சத்து 11 ஆயிரத்து 667 ஆனது.

3:36 AM IST
கொரோனாவை எச்சரிக்கையோடு எதிர்கொள்வோம்

மலேசியாவில் உலக சுகாதார அமைப்பு கணித்தது போலவே ஏப்ரல் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.நாங்கள் அதனை எச்சரிக்கையோடு எதிர்கொள்வோம் என நம்புவதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

2:57 AM IST
2 லட்சத்து 11 ஆயிரம் பேர் மீண்டனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 879 பேர் மீண்டனர்.

1:09 AM IST
கொரோனா: இந்தியாவில் பலி 72: பாதிப்பு 2,536 ஆனது

இந்தியாவில் கெரோனாவுக்கு பாதிப்பானவர்களின் எண்ணிக்கை 2,356. பலியானவர்களின் எண்ணிக்கை 72 .மீண்டவர்கள் எண்ணிக்கை 189 ஆனது

11:48 PM IST
கொரோனா: பலி 52 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவுக்கு உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 52,597 ஆனது.

11:46 PM IST
கொரோனா பாதிப்பு: 10 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10லட்சத்து 177 ஆக அதிகரித்துள்ளது.

11:45 PM IST
டில்லியில் 219 பேர் பாதிப்பு

டில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 219 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 51 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.நிஜாமுதீன் பகுதி யிலிருந்து, 2,346 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில், 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

10:11 PM IST
கொரோனா: உலகளவில் பலி 50 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் தாக்குதலில் உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 395 ஆனது.

9:08 PM IST
கொரோனா: இந்தியாவில் பலி 68 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு 2341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் பலியாகி உள்ளனர். 177 பேர் மீண்டுள்ளனர்.

8:07 PM IST
காம்பீர் 2 ஆண்டு எம்.பி.,சம்பளம் நன்கொடை

பிரதமரின் கொரோனா வைரஸ் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 ஆண்டு எம்.பி.,சம்பளத்தை அளிக்க உறுதி கொண்டுள்ளதாக காம்பிர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

7:28 PM IST
உலகில் பலி 49 ஆயிரத்தை தாண்டியது

இன்று ( ஏப்.2ம் தேதி) மாலை 7. 25 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 61 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 ஆயிரத்து 163 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் 2 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் மீண்டுள்ளனர்.

6:25 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக உயர்வு

இன்று ( ஏப்.2 ம் தேதி ) மாலையில் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ல் இருந்து 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் . டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் சமுதாய தொற்று ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5:50 PM IST
48 ஆயிரத்து 555 பேர் பலி

இன்று ( ஏப்.2ம் தேதி) மாலை 5. 50 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 54 ஆயிரத்து 367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து 555 பேர் பலியாகி உள்ளனர். 2லட்சத்து 2 ஆயிரத்து 928 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் 2 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

5:39 PM IST
வென்டிலேட்டரில் 5 சதவீதம் பேர் மட்டுமே

நாடு முழுவதும் 9.86 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 9 ஆயிரம் பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு பரிசோதனை நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் குணம் அடைந்துள்னர். மருத்துவர்களை இந்தூரில் தாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது. இந்தியாவில் 5 சதவீதம் பேர் மட்டுமே வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். - @subtitle@மத்திய சுகாதார துறை அதிகாரிகள் பேட்டி. @@subtitle@@

4:46 PM IST
50 டாக்டர்களுக்கு கொரோனா

50 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.- மத்திய அரசு தரப்பு தகவல்

3:29 PM IST
உலக பாதிப்பு 9, 46 , 874

இன்று ( ஏப்.2ம் தேதி) காலை 11 30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 46 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து135 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்து 317 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் 2 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

3:13 PM IST
டில்லி டாக்கடர்களுக்கு கொரோனா

டில்லியில் இன்றுடன் 7 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

2:04 PM IST
பிரதமர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

1:17 PM IST
மது வழங்க தடை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், மதுவிற்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவிற்கு 3 வாரம் தடை விதித்து உத்தரவிட்டனர்.

11:30 AM IST
ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பாதிப்பு

இன்று ( ஏப்.2ம் தேதி) காலை 11 30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 36 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்து 249 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 578 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டம் லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

11:19 AM IST
அமைச்சர் எச்சரிக்கை

கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி கூறுகையில், ஜாதி, மதம் பார்த்து கொரோனா வருவது கிடையாது. வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வது. ஜாதி, மதம் பார்த்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

11:17 AM IST
ஆந்திராவில் 132 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் மேலும் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

11:13 AM IST
ராமேஸ்வரத்தில் 2 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், டில்லி, நிஜாமுதீனில் நடந்த முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்று விட்டு 17 பேர் ராமேஸ்வரத்திற்கு வந்தனர். அதில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 15 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

11:04 AM IST
2 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. 151 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 1764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7:00 AM IST
கொரோனா: அமெரிக்காவில் பலி 5 ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5,109 ஆனது.

6:30 AM IST
அமெரிக்காவில் 2.15 லட்சம் பேருக்கு 'கொரோனா'

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 2,லட்சத்து 15 ஆயிரத்து 003 ஆனது

5:05 AM IST
கொரோனா: உலகளவில் பலி 47 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 47,175 ஆனது.

4:51 AM IST
பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான குழந்த இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது

3:35 AM IST
டில்லி மாநாடு:போலீசாரிடம் சிக்கிய 275 வெளிநாட்டினர்

டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 275 வெளிநாட்டினரை போலீஸ் பிடித்து தனிமைபடுத்தியுள்ளனர்.

11:10 PM IST
கொரோனா தொற்று: அமெரிக்காவில் 2 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 35 ஆனது.

11:06 PM IST
கொரோனா: உலகளவில் பலி 45 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவுக்கு உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 45,532 ஆனது. பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 541 ஆனது.

9:16 PM IST
கொரோனா: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

கெரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 2020 ஆம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டது. 2 ஆம் உலகப்போருக்கு பின்னர் தற்போது தான் ரத்து செய்யப்பட்டுள்ளது.

8:48 PM IST
தாராளமாக கொடுங்கள் !

தர்மவான்களே ! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள், நாள்தோறும் கிடைக்கும் கூலியை நம்பி வாழும் மக்கள், ஏழைகள், குடிசைவாழ் மக்கள், சாலையோரம் வசிப்பவர்கள் என பலரும் ஒரு வேளை உணவுக்கு சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஆங்காங்கே தர்மவான்கள் வழங்கும் உணவை பெற காத்திருக்கும் கவலை தரும் காட்சிகள்.

6:19 PM IST
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 234 ஆனது

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆனது. இது குறித்து தமிழக சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழகத்தில் டில்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

3:01 PM IST
ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 127 பேர் மீண்டனர்

இன்று ( ஏப்.1ம் தேதி) மாலை 3 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 8 லட்சத்து 62 ஆயிரத்து 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்து 528 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 127 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1:35 PM IST
மேலப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இங்கு அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனரர். மேலும் யாரும் வெளியே செல்லாமல் போலீசார் தடுப்பு வளையங்களை அமைத்துள்ளனர்.

12:36 PM IST
நீலகிரியில் எப்படி நிலை ?

நீலகிரியில், யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளிநாட்டிலிருந்து 142 நபர்கள் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த நபர்கள் 28 நாட்கள் வீட்டில் தனி அறையில் இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.

10:08 AM IST
100 பேர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருச்சி, உறையூர், பாலக்கரையை சேர்ந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8:29 AM IST
மேலும் இருவருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், டில்லியில் நடந்த மதரீதியிலான மாநாட்டிற்கு சென்றவர்கள். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது. மாஹேயில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

6:52 AM IST
இந்தியா: கொரோனா பாதிப்பு 1397 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,397 ஆக உயர்ந்துள்ளது. இது வரை இந்தியாவில் மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர்

6:49 AM IST
இத்தாலி: 837, ஸ்பெயின்: 748

இத்தாலி, ஸ்பெயினிில் கொரோனா கோரத்தாண்டவம் தொடர்கிறது. இத்தாலியில் ஒரே நாளில் 837 பேரும் ஸ்பெயினில் ஒரே நாளில் 748 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

6:47 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் பலி

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 865 பேர் உயிரிழந்தனர். இது வரை இல்லாத அளவுக்கு அந்நாட்டில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

6:45 AM IST
கொரோனா உலக பலி 42 ஆயிரத்தை தாண்டியது

உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்பால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன

6:40 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 23,559 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 23,559 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டது.

6:37 AM IST
கொரோனா உலக அளவில் கொரோனாவால் 8.5 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு

உலகில் 202 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் இது வரை 8, 56,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1,75,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

12:18 AM IST
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1396 ஆனது

கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1396 ஆனது. பலியானோர் எண்ணிக்கை 35 என்றும் 123 பேர் மீண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:15 AM IST
கொரோனா : உலக பலி 41 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா தொற்றால் உலகில் பலியானவர்கள் எண்ணிக்கை 41,253 ஆனது.

10:36 PM IST
இந்தியாவில் 1,397 பேருக்கு கொரோனா

புதுடில்லி; இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது. இதில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகி உள்ளனர்.

10:03 PM IST
உலகளவில் கொரோனா பலி 40 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40,639 ஆனது.

9:00 PM IST
கொரோனா தொற்று: தமிழகத்தில் 124 ஆனது

தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலியில் 22 பேரும் துாத்துக்குடியில் ஒருவரும், கன்னியாகுமரியில் 4 பேரும், நாமக்கல்லில் 18 பேர் என 124 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

7:22 PM IST

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:21 PM IST
மம்தா நிதி


பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும், மே.வங்க மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும் அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

7:20 PM IST

காஷ்மீரில் இன்று(மார்ச் 31) மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

7:19 PM IST

அசாமில் 52 வயது நபருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சில்சார் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அசாமில் கொரோனா பாதித்த முதல் நபர் இவர் என அம்மாநிலஅரசு தெரிவித்துள்ளது.

7:19 PM IST

மஹாராஷ்டிராவில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது.

7:18 PM IST

ஹரியானா மாநிலம் சிர்சாவில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

7:17 PM IST

கேரளாவில் கொரோனா பாதித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

7:14 PM IST
பிரதமர் தாயார் நிதி

பிரதமர் நிவாரண நிதிக்கு, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளார்.

7:13 PM IST

மேற்கு வங்க மாநிலம் 24 பராகன்ஸ் மாவட்டத்தை சேர்ந்த 57 வயது முதியவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் வெளிநாடு சென்றதற்கான எந்த தகவலும் இல்லை.

7:12 PM IST
கொரோனா: பிரதமர் மோடி தாயார் ஹீராபென் ரூ.25 ஆயிரம் நிதி

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் ரூ.25 ஆயிரத்தை தனது சிறுசேமிப்புலிருந்து பிரதமர் நிதிக்கு நன்கொடையாக அளித்தார்.

7:08 PM IST
கவர்னருக்கு கடிதம்

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது : டில்லியில் கொரோனா தொற்று உள்ள 97 பேரில் 24 பேர் நிஜாமுதீன்பகுதியில் நடந்த முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றவர்கள். 41 பேர் வெளிநாடு சென்றவர்கள். 22 பேர், வெளிநாடு சென்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். முஸ்லீம் மாநாடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கான உத்தரவை அவர் விரைவில் பிறப்பிப்பார் என நம்புகிறோம். அதிகாரிகள், தங்களது கடமையை புறக்கணித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

7:07 PM IST
ஜார்க்கண்டில் முதல் பாதிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மலேஷியாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர் ராஞ்சியில் உள்ள கேல் கோவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல் நபர் இவர் ஆவார்.

7:04 PM IST
நிவாரண நிதி

பிரதமரின் நிவாரண நிதிக்கு, 'கோல் இந்தியா' நிறுவனம் ரூ.220 கோடியும், என்எல்சி இந்தியாவும் ரூ.25 கோடியும் வழங்கும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

6:11 PM IST
ராமநாதபுரத்தில் 11 பேர் தனிமை

ராமநாதபுரத்தில் இருந்து டில்லி மத சார்பு மாநாட்டில் பங்கேற்ற 29 பேரில் 15 பேர் திரும்பினர். இவர்களில் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ராமநாதபுரம் கும்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார்.

4:55 PM IST
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மீண்டனர்

இன்று ( 31 ம் தேதி) மாலை 4.50 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 8 லட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 748 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

4:46 PM IST
கவர்னருடன் முதல்வர் இபிஎஸ் சந்திப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலாலுடன் முதல்வர் இபிஎஸ் சந்தித்து கொரோனா குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

4:36 PM IST
21 ஆயிரம் நிவாரண முகாம்கள்

இந்தியாவில் 21 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு ரயில்களில் 80 ஆயிரம் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 123 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 42 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது. - மத்திய சுகாதார துறை அதிகாரிகள்.

4:03 PM IST
வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை

தமிழகத்தில் தொழிலாளர்களிடம் வாடகை தொந்தரவு செய்ய கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வீட்டு வாடகை வசூலிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

11:31 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனுடன் மொத்தம் 74 ஆக உயர்ந்துள்ளது.

9:36 AM IST

இத்தாலியில் மட்டும் 11 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 1,64, 248 பேர் பாதிக்கப்பட்டு 3, 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

9:36 AM IST

உலகெங்கும், 'கொரோனா' வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பப்பட்டு, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர்.

6:51 AM IST
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா

முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.

6:29 AM IST
ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை, ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது. இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.

6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்

1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.

11:11 PM IST
கொரோனா: இந்தியாவில் பலி 32 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் பலியாகி உள்ளனர். 102 பேர் மீண்டுள்ளனர்.

10:13 PM IST
கொரோனா: உலகளவில் பலி 36 ஆயிரத்தை கடந்தது.

உலகளவில் கொரோனாவுக்கு பலி 36, 207 ஆக அதிகரித்துள்ளது.

10:11 PM IST
கொரோனா தொற்று: இத்தாலியில் ஒரு லட்சத்தை தாண்டியது

இத்தாலியில் கொரோனா தொற்று பரவல் 1 லட்சத்து ஆயிரத்து 739 பேராக அதிகரித்துள்ளது.

10:08 PM IST
கொரோனா தொற்று: இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி

இத்தாலியில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 812 பேர் பலியாகினர்.

8:46 PM IST
கொரோனா: தமிழகத்தில் 6 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

6:44 PM IST
டில்லி சென்று வந்த நபர்களுக்கு கொரோனா

டில்லியில் ஒரு அமைப்பு சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

6:32 PM IST
கேரளாவில் பாதிப்பு உயர்வு

கேரளாவில் கொரோனா பாதிப்பு 213 ஆக உயர்ந்தது.

3:28 PM IST
கொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு

இன்று ( 30 ம் தேதி) மாலை 3.20 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 30 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்து 572 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 262 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

3:09 PM IST
தமிழக கவர்னர் ரூ.2 கோடி நிதி

கொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

3:04 PM IST
தமிழக கவர்னர் ரூ.2 கோடி நிதி

கொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

12:28 PM IST
தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா: முதல்வர்

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் குணம் பெற்றுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஒன்றரை கோடி மாஸ்க்குகள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் வாங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முதல்வர் இபிஎஸ் கூறி உள்ளார்.

11:13 AM IST
கொரோனா நிதிக்கு திமுக ரூ. 1 கோடி நிதி

திமுக சார்பில் கொரோனா பாதிப்பு முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

11:03 AM IST
இந்தியாவில் கொரோனாவுக்கு 29 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 29 பேர் பலியாகினர்.

9:45 AM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்.,14க்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தெரிவித்துள்ளார்.

9:35 AM IST
மே.வங்கத்தில் 2 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

9:34 AM IST

மஹாராஷ்டிராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

8:07 AM IST
இலவச மாஸ்க்குகள்

மதுரை நடராஜ் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் சதிஷ்குமார் என்பவர், 8 ஆயிரம் மாஸ்க்குகள் தயாரித்து போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். மேலும், கூடுதலாக மாஸ்க் தயாரிக்க முடிவு செய்துள்ள சதீஷ்குமார், இதற்காக துணிகளை வழங்கும்படி மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

8:07 AM IST

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் சமூக இடைவெளி நடைமுறையை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

6:16 AM IST
அமெரிக்காவில் 1.41 லட்சம் பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில கொரேனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,41,854 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 18,276 பேர் கொரோவா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் 255 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 2,475ஆக அதிகரித்துள்ளது. 4,435 பேர் கொரோனாவிலிருந்து அங்கு மீண்டுள்ளனர்.

6:02 AM IST
7 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுடில்லி: உலகளவில் கொரேனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 412 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,956 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 51 ஆயிரத்து 4 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளனர்.

10:28 PM IST
ஜெர்மனி: ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால், ஜெர்மனி நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேபர் தற்கொலை செய்துகொண்டார்.

10:10 PM IST
கெரோனாவுக்கு பலி 33 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 178 ஆக உயர்ந்தது.

10:08 PM IST
கொரோனா பாதிப்பு: உலகில் 7 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 2 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

7:35 PM IST
கொரோனா: உலக பலி 32 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவால் உலகில் பலி எண்ணிக்கை 32,155 ஆக அதிகரித்துள்ளது.

6:41 PM IST
வெளி மாநில தொழிலாளர்களுக்கு குழு அமைப்பு

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு கூடுதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட இரு குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

5:55 PM IST
தமிழக பாதிப்பு 50 ஆனது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆனது. 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். @subtitle@- சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ். @@subtitle@@

5:39 PM IST
உலகம் முழுவதும் பாதிப்பு 7 லட்சத்தை தொடுகிறது

இன்று ( 29 ம் தேதி) மாலை 5.35 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 6லட்சத்து 79 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரத்து 771 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 345 பேர் மீண்டுள்ளனர். உலகிலேயே சீனாவை விட அமெரிக்காவில் 3 மடங்கு நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 4, ஆயிரத்து 256 பேருக்கு இந்நோய் பரவி உள்ளது. இந்தியாவில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

4:25 PM IST
சென்னையில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 2 பேர் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், 2 பேரும் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' ஆனாலும் அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 பேர் குணமடைந்துள்ளனர்.

4:10 PM IST
ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானிக்கு கொரோனா

புதுடில்லி: ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானிக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசியாக அவர், சென்னை - டில்லி இடையே விமானத்தை கடந்த 21ம் தேதி இயக்கி உள்ளார். அவருடன் நெருக்கமாக இருந்த ஊழியர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

4:05 PM IST
'காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது'

புதுடில்லி: கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் கொரேவானாவால் பாதிக்கப்பட்டவர் பேசினாலோ, தும்மினாலோ அல்லது இருமினாலோ ஒரு மீட்டர் தொலைவிற்குள் இருந்தால் மட்டுமே கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

3:43 PM IST
2 மாதங்களுக்குபின் ரயில் சேவை

உலகில் முதன்முதலாக கொரோனா பரவிய சீனாவின் வுஹானில் 2 மாதங்களுக்கு பின் ரயில்சேவை துவங்கியது.

3:07 PM IST
பலி 31 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பலி 31 ஆயிரத்தை தாண்டியது. 31,020 பேர் உயிரிழந்துள்ளனர். 6,68,351 பாதிக்கப்பட்டதில் 1,42, 758 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 5,032 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2:45 PM IST
ரூ.151 கோடி நிதி வழங்கிய ரயில்வே துறை

கொரோனா வைரஸ் பாதிப்பு பிரதமர் நிவாரண நிதிக்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 151 கோடி வழங்கி உள்ளது.

1:22 PM IST
ஒரு ஏக்கர் கோதுமையை தானமாக வழங்கிய விவசாயி

மஹாராஷ்ட்டிராவில் ஒரு ஏக்கரில் பயிரான கோதுமையை தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க போவதாக தத்தா ராம் பாட்டீல் என்ற விவசாயி அறிவித்துள்ளார்.

11:55 AM IST
ஏழைகளிடம் மோடி மன்னிப்பு கோரினார்

கொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். எடுத்திருக்கும் ஊரடங்கு முடிவால் ஏழைகள், தொழிலாளர்கள் பலரும் சிரமப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த கடின முடிவை தவிர வேறு வழி இல்லை. ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

10:51 AM IST
ஸ்பெயின் இளவரசி பலி

கொரோனா தொற்று காரணமாக ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 29) உயிரிழந்தார்.
ஸ்பெயின் அரச குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் இவர் தான்.

10:45 AM IST
குமரியில் இறந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை

கன்னியாகுமரியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று (மார்ச் 28) உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அவர்களது தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

10:36 AM IST
இந்தியாவில் கொரோனா பலி 25 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 979 பாதிக்கப்பட்டு, அதில் 86 பேர் குணமடைந்துள்ளனர்.

9:17 AM IST
குஜராத்தில் 5 பேர் பலி

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குஜராத்தின் ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இதன் மூலம், அங்கு , கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

9:17 AM IST
பலி 30 ஆயிரத்தை தாண்டியது

உலகெங்கும், 'கொரோனா' வைரஸ் தாக்கி உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் பலியாகியுள்ளனர். அங்கு இதுவரை 19,923 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் , நேற்று 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 92, 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் 1,21, 000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6:38 AM IST
உலக அளவில் கொரோனா பலி 31,000 ஐ நெருங்குகிறது

உலக நாடுகளில் கொரோனா பலி 31,000 ஐ நெருங்குகிறது

6:35 AM IST
இத்தாலியில் 10, ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி

கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்த இத்தாலியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனா பலி 2000 ஐ கடந்தது. நேற்று ஒரே நாளில் 19,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் 1,23,000 ஐ கடந்தது

2:34 AM IST
உலக அளவிலான கொரோனா பலி 30 ஆயிரத்தை கடந்தது

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிற்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 30,000 ஐ கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிர் பலியால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் குறையாமல் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்

11:19 PM IST
6 லட்சத்தை தாண்டிய பாதிப்பு

இன்று ( 28 ம் தேதி) இரவு 11 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 6லட்சத்து 45 ஆயிரத்து 054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்து 941 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 545 பேர் மீண்டுள்ளனர்.

7:53 PM IST
அவசர பயணம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னையில் இருந்து இறப்பு, திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, அவசர பயணங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்க 7530001100 என்ணில் வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ், மூலம் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

7:48 PM IST
ஏப்.3ல் ரேஷன் கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு

தமிழகத்தில் ஏப்ரல் 3 ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

7:16 PM IST
கொரோனா தொற்று: தமிழகத்தில் 42 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 41 லிருந்து 42 ஆக அதிகரித்துள்ளது.

6:34 PM IST
அமெரிக்காவில் படுவேக பலி

இன்று ( 28 ம் தேதி) 24 மணி நேரத்தில் 345 பேர் பலியாகி உள்ளனர் . தற்போது அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 704 பேராக அதிகரித்துள்ளது.

5:21 PM IST
நிதி வழங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரானா பாதிப்புக்கு உதவுவதற்காக மக்கள் நிதி வழங்குங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம். பொதுமக்களின் சிறிய உதவிகளையும் அரசு ஏற்று கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3:34 PM IST
ரயில் கட்டணம் வாபஸ் !

முன்பதிவு செய்த ரயில் பயணிகளின் கட்டணம் திரும்ப கிடைக்கும்: ரயில்வே அமைச்சர், பியூஷ்கோயல்.

3:07 PM IST
ஊர் நோக்கி புறப்பட்ட சோக பயணம் !

உ.பி., மற்றும் அண்டைய மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு தழுவிய ஊரடங்கால் வேலை இழந்தவர்கள் தங்க இடம் இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் மிக சோகத்துயரத்துடன் கால்களை நம்பி தங்களின் இல்லங்களுக்கு கிளம்பி உள்ளனர். பலர் சிறப்பு பஸ்களில் போட்டி போட்டு இடம் பிடித்தனர். இடம்: டில்லி தேசிய நெடுஞ்சாலை, காஸியாபாத்.

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

இடம்: டில்லி தேசிய நெடுஞ்சாலை, காஸியாபாத்.

Photo Gallery
Prev
1:59 PM IST
அமெரிக்காவில் ஒரு லட்சத்து 4, ஆயிரத்து 256

இன்று ( 28 ம் தேதி) மதியம் 1.55 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்து 417 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 426 பேர் மீண்டுள்ளனர். உலகிலேயே சீனாவை விட அமெரிக்காவில் 3 மடங்கு நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 4, ஆயிரத்து 256 பேருக்கு இந்நோய் பரவி உள்ளது.

1:44 PM IST
6 லட்சத்தை தொடுகிறது பாதிப்பு

இன்று ( 28 ம் தேதி) மதியம் 1.45 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 5லட்சத்து 98 ஆயிரத்து 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்து 372 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 418 பேர் மீண்டுள்ளனர்.

12:27 PM IST
கொரோனாவால் கேரளாவில் முதல் பலி

கொச்சி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

11:53 AM IST
கன்னியாகுமரியில் 3 பேர் மரணம்

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனை, சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களில், ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (28 ம் தேதி) ஒரே நாளில், குழந்தை உள்ளிட்ட 3 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் வரவில்லை. முடிவுகள் வந்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

11:30 AM IST
தமிழக கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு

பிரிட்டனில் இருந்து காட்பாடி திரும்பிய , மேற்கு இந்திய தீவுக்கு சென்று கும்பகோணம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று 40 ஆக உயர்ந்துள்ளது.

8:44 AM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

7:05 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 748 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:54 AM IST
ஒரே நாளில் உலக அளவில் 3000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 3000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து இத்தாலியில் அதிக பட்சமாக நேற்று மட்டும் 919 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, அந்நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என தெரிகிறது.

3:53 AM IST
அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,01,159 ஆக உயர்ந்தது. பலியானோர் எண்ணிக்கையும் 1,559 ஆக அதிகரித்துள்ளது.

9:23 PM IST
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக அதிகரித்தது.

8:12 PM IST
மளிகை, காய்கறி, பெட்ரோல்: நேரக்கட்டுப்பாடு

மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது போல் பெட்ரோல் நிலையங்களும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் எனவும் அறிவிக்கப்படும்.

7:43 PM IST
நீட் தேர்வு ஒத்திவைப்பு

வரும் மே-3 ல் நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7:15 PM IST
பிரிட்டன் பிரதமர் போரிஸ் குணமடைய மோடி பிரார்த்தனை

பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா என்ற தகவல் கவலை அளிக்கிறது. நீங்கள் மீண்டு வருவீர்கள். குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

6:33 PM IST
கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ்

கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

5:02 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2,642 விசாரணை கைதிகள் ஜாமினி்ல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

5:00 PM IST

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5:00 PM IST

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3:24 PM IST
மக்கள் உதவுங்கள்: முதல்வர் இ.பி.எஸ்.,

கொரோனா பணிக்கு மக்கள் உதவி செய்ய வேண்டும். கொரோனா பணிக்கென மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும்: நன்கொடைக்கு 80 ஜியின் கீழ் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். என முதல்வர் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2:37 PM IST
ஒன்னேகால் லட்சம் பேர் மீண்டனர்

இன்று (27 ம் தேதி ) மதியம் 2.30 மணி நிலவரப்படி 'கொரோனா' வைரஸ் தாக்கி உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து135 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 37 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 451 பேர் மீண்டனர். இந்தியாவில் இதுவரை 753 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 35 பேரை பாதித்துள்ளது.

1:53 PM IST
அரியலூர் பெண்ணுக்கு கொரோனா உறுதி

அரியலூரை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர், கடந்த 16ம் தேதி வரை சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அங்கிருந்து அரியலூருக்கு திரும்பிய அவர் 18ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 27) அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

12:54 PM IST
கர்நாடகாவில் மேலும் ஒருவர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் கடந்த மார்ச் 5ம் தேதி டில்லிக்கு ரயிலில் பயணம் செய்து, மார்ச் 11ம் தேதி திரும்பியுள்ளார் எனவும், அவருடன் ரயிலில் பயணத்த அனைவரையும் கண்காணிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

12:36 PM IST
தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜன.,15ம் தேதி மலேசியாவில் இருந்து வந்த இளைஞரை, கொரோனா அச்சத்தால் குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்ட அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

9:39 AM IST
குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 43லிருந்து 67 பேராக உயர்ந்துள்ளது.

9:34 AM IST
இந்தியாவில் பலி 17 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 694லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில், 677 இந்தியர்களும், 47 வெளிநாட்டினரும் அடங்கும். அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மஹாராஷ்டிராவில் 130 பேரும், கர்நாடகாவில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5:03 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 17,166 பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று(மார்ச் 26) ஒரே நாளில் 17,166 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,377 ஆக அதிகரித்துள்ளது. 1295 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில், சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி, அமெரிக்கா முதலிடம் பிடித்தது.

10:10 PM IST
கொரோனா பாதிப்பு: உலகளவில் 5 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 லட்சத்து 2 ஆயிரத்து 854 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

8:44 PM IST
கொரோனா: இந்தியாவில் பலி 16 ஆக உயர்வு

கொரோனா வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

8:35 PM IST
ஏப்.2 முதல் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000: தமிழக அரசு

ஏப்.2 முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

7:19 PM IST
கொரோனா பாதிப்பு: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நிதியுதவி

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, அதிமுக எம்.பி.க்கள்., தலா ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது.

7:12 PM IST
கொரோனா தொற்று: தமிழகத்தில் 29 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று 29 ஆக அதிகரித்துள்ளது.

5:52 PM IST

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அகர்வால் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று 42 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 649 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி 17 மாநிலங்கள், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி வருகின்றன என்றார்.

4:58 PM IST
54 ஆயிரம் பேரை கண்காணிக்க உத்தரவு

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 54 ஆயிரம் பேரை கண்காணிக்க கலெக்டர்களுக்கு மாநில அரசு விவர பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

3:10 PM IST
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு

கொரோனாவால் மக்கள் வெளியே வர முடியாத நிலையால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை வழங்கப்படும். ஜன்தன் வங்கிகணக்கு பெண்களுக்கு மாதம் ரூ.500 வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு சமையல் காஸ் இலவசம். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ். முதியவர், மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும். - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா.

12:30 PM IST
தடையை மீறிய 1, 100 பேர் மீது வழக்கு

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக 1, 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

10:58 AM IST

மும்பையில் கடந்த 24ம் தேதி உயிரிழந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

10:57 AM IST

இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகவும் அதிகரித்துள்ளது.

10:39 AM IST
இந்தியாவில் கொரோனா பலி 13, பாதிப்பு 649 ஆக உயர்வு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606லிருந்து 649 ஆக உயர்ந்துள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

4:29 AM IST
கேரள பாதிப்பு 95 ஆனது

திருவனந்தபுரம்: கேரளாவில் 64 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 383 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி 'வார்டு'களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளா திரும்பிய 25 பேர் உட்பட 28 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இந்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐவர் கண்ணுாரையும் இருவர் எர்ணாகுளத்தையும் மற்ற இருவர் முறையே பத்தனம்திட்டா மற்றும் திருச்சூரை சேர்ந்தவர்கள்.

9:41 PM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டில்லியில் இருந்து வந்தவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

9:40 PM IST
முதல்வர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., நாளை(மார்ச்26) வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

7:13 PM IST
600 ஐ தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக அதிகரித்துள்ளது.

6:28 PM IST

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

6:27 PM IST
டில்லியில் 35 பேருக்கு கொரோனா

டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

4:38 PM IST
சார்லசுக்கு கொரோனா

பிரிட்டன் இளவரசர் சார்லஸ்(71) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

4:00 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார்.

3:41 PM IST

கொரோனா வைரஸ் பலி உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது.

3:13 PM IST
மேலும் 5 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1:00 PM IST
மதுரையில் கொரோனா பரிசோதனை மையம்

மதுரையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமையும் இந்த மையம், தமிழகத்தில் அமையும் 8வது பரிசோதனை மையமாகும்.

11:53 AM IST
பாகிஸ்தானில் 1000 பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 1000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

11:22 AM IST
முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படட நிலையில் பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலாகும் என அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இது குறித்து சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

10:58 AM IST
டில்லியில் இறந்தவருக்கு கொரோனா இல்லை

கொரோனா தொற்றால் டில்லியில் 2வதாக ஒருவர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

10:47 AM IST
மஹா.,வில் 112, குஜராத்தில் 38 ஆக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மஹாராஷ்டிராவில் 112 ஆகவும், குஜராத்தில் 38 ஆகவும் உயர்ந்துள்ளது.

10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 8 பேர் அனுமதி

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் கொரோனா அறிகுறியுடன் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேரும் மாலைப்பட்டி பள்ளிவாசலில் 4 நாட்கள் தங்கி இருந்ததாகவும், மார்ச் 31ம் தேதி அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு திரும்ப செல்ல இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

9:40 AM IST
இந்தியாவில் பாதிப்பு 562 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. இதில், 519 இந்தியர்கள் எனவும்,43 வெளிநாட்டினர் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6:55 AM IST
இத்தாலியில் ஒரே நாளில் 743 பேர் பலி

ரோம்: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடான இத்தாலியில், நேற்று(மார்ச் 24) ஒரே நாளில் 743 பேர் பலியானதையடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,820ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,176 ஆக உள்ளது. புதிதாக 5,249 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2:40 AM IST
கொரோனா: தமிழகத்தில் முதல் பலி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவானது.

1:16 AM IST
கோவையில் 25 பேருக்கு கொரோனா அறிகுறி

கோவையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதை அடுத்து அவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.

10:50 PM IST
கொரோனா தொற்று: தமிழகத்தில் 18 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று 18 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 18 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

10:05 PM IST
17ஆயிரம் பேர் இறந்தனர்

இன்று (24 ம் தேதி ) இரவு 10 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 4 லட்சத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 750 பேர் மீண்டனர்.

9:36 PM IST
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு்ள்ளது. .நியூசிலாந்து மற்றும் லணடனில் இருந்து வந்துவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

8:48 PM IST
நாட்டு மக்களுக்கு மோடி உரை

கொரோனா குறித்து இன்று (24 ம் தேதி) இரவு 8 மணி யளிவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு ஒன்றே முக்கிய வழி . இதனால் நாம் 21 நாட்கள் முழு ஊரடங்கை பின்பற்ற வேண்டிய நிலையில இருக்கிறோம். முடக்கம் ஒன்றே கொரோனாவை ஒழிக்க வழி இவ்வாறு மோடி கூறினார்.

7:39 PM IST
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 492 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 492 பேருக்கு உறுதியாகி உள்ளது

7:10 PM IST
ரூ.2 ஆயிரம் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர்

கொரோனா பாதிப்பால் புதுச்சேரியில் ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

3:52 PM IST
கூடுதல் வசதிகள் செய்யுங்கள் !

மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

3:12 PM IST
ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்

இன்று (24 ம் தேதி ) மாலை 3 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்.

2:34 PM IST

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

12:30 PM IST

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் குணமடைந்து வீடு திரும்பும் முதல் நபர் ஆவார்.

12:28 PM IST
ரஜினி நிதியுதவி

கொரோனாவால் படப்பிடிப்பு ஏதும் நடக்கவில்லை. இதனால், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

12:27 PM IST
அலட்சியம் வேண்டாம்

கொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா பரவாமல் தடுக்க அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., கேட்டு கொண்டுள்ளார்.

12:27 PM IST
511 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10பேர் உயிரிழந்துள்ளனர்.24 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

11:57 AM IST
டில்லியில் புதிதாக பாதிப்பில்லை

டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை எனவும், 5 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

11:42 AM IST
பயண கட்டுப்பாடுகள் தளர்வு

சீனாவின் ஹூபே நகரின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதை தொடர்ந்து, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, கொரோனா குறைந்ததை தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

11:41 AM IST
கைதட்டல்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

11:40 AM IST
தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வரும் 26 ல் நடக்க இருந்த ராஜ்யசபா தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11:40 AM IST
பிரதமர் உரை

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடி , இன்று(மார்ச் 24) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்ற உள்ளார்.

10:44 AM IST
மணிப்பூர் பெண்ணுக்கு கொரோனா

பிரிட்டனில் இருந்து மணிப்பூர் திரும்பிய 23 வயது பெண்ணுக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

10:38 AM IST
33 பேருக்கு கொரோனா


குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

10:36 AM IST
தமிழகத்தில் நிவாரண நிதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறத்தல் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்துள்ளார்

8:50 AM IST
இந்தியாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 492 ஆனது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது. இதில் 451 இந்தியர்கள் மற்றும் 41 வெளிநாட்டினர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 37 பேர் குணமடைநதுள்ளனர்.

7:01 AM IST
உலக அளவில் கொரோனா பலி 16,500ஐ தாண்டியது

உலக அளவில் கொரோனா பலி 16 ஆயிரத்து 500 ஐ தாண்டியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500 ஐ நெருங்கும் நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

10:40 PM IST
கொரோனா தொற்று:தமிழகத்தில் 12 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு 12 ஆக உயர்ந்துள்ளது.

10:37 PM IST
கொரோனா: இந்தியாவில் பலி 10 ஆக உயர்வு

கொரோனா வைரஸால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

10:36 PM IST
தனிமைப்படுத்தப்பட்டோர் 12,519 பேர்: விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, 12,519 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

8:49 PM IST
11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு

மார்ச்-26 ம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடிநடக்கும். டாஸ்மாக் கடைகள் நாளை(மார்ச்-24)முதல் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

7:16 PM IST
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 433 ஆக உயர்வு

கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் 433 பேருக்கு உறுதியாகி உள்ளதாகவும் அதில் புதிதாக 37 பேருக்கு பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6:46 PM IST
11, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்

உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிகல்விதுறை தெரிவித்துள்ளது. தேர்வு நேரம்: 10.30 டூ 1.45 மணி .

6:41 PM IST
கொரோனா : கேரளா மாநிலம் முடக்கம்

கோரோனா வைரஸ் தொற்று பரவலால் கேரள மாநிலம் முடக்கப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

6:16 PM IST

5:20 PM IST
கோவையில் 387 பேர் கண்காணிப்பு

கோவையில் 387 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்தவர்கள் ஆவர்.

4:46 PM IST
விமான சேவைகள் முடக்கம்

இந்தியாவில் நாடு முழுவதும் விமான நிலையங்கள் ( நாளை முதல் 24 ம் தேதி நள்ளிரவுக்கு பின்) மூடப்படுகிறது . இது போல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்படுகிறது.

4:14 PM IST
3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர்

இன்று (23 ம் தேதி ) மாலை 4 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3:54 PM IST
எல்லை மூடல்

ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து நாமக்கல் மாவட்டம் கொமரபாளையம் செல்லும் பாலத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட போலீசார் தடைவிதித்தது தடுப்பு அமைத்து உள்ளனர்.

ஈரோட்டில் எல்லை மூடல் .

Photo Gallery

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் எல்லை மூடல் .

Photo Gallery
Prev
2:50 PM IST
தமிழகத்தில் 144 தடை உத்தரவு

தமிழகத்தில் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

2:12 PM IST
சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமை

சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே என போஸ்டர் ஓட்டப்படும்.

1:46 PM IST
ஈரோட்டில் கொரோனா மருத்துவமனை

ஈரோட்டில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. - கலெக்டர் கதிரவன்.

1:32 PM IST
பஞ்சாபில் முழு ஊரடங்கு

பஞ்சாபில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு.

1:31 PM IST
ராமநாதபுரத்தில் கடைகள் மூடல்

ராமநாதபுரத்திலும் அனைத்து கடைகளையும் அடைக்க கலெக்டர் உத்தரவு.

1:14 PM IST
மீடியாக்களுடன் பிரதமர் ஆலோசனை

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி உயர் நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

1:08 PM IST
கைதிகளுக்கு பரோல்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு அமைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

1:00 PM IST
சுகாதார அமைச்சர் கலெக்டர்களுடன் ஆலோசனை

அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

12:34 PM IST
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடல்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை வரும் 31 ம் தேதி வரை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

12:24 PM IST
கேரள ஐகோர்ட் ஏப்.8 வரை மூடல்

கேரள ஐகோர்ட்டுகளை வரும் ஏப்.8 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

11:52 AM IST
சுப்ரீம் கோரட்டில் அதிரடி மாற்றம்

சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும். வக்கீல்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே ஆஜராக வேண்டும்.- பதிவாளர்.

11:34 AM IST
31ம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரம் நகைக்கடைகள் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார்.

11:31 AM IST
ஈரோட்டில் ஊரடங்கை கடுமையாக்குங்கள்

காஞ்சிபுரம், ஈரோட்டில் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

11:04 AM IST
3 லட்சத்து 39 ஆயிரத்து 25 பேர்

இன்று (23 ம் தேதி )காலை 11 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலி பாதிப்பு 9 பேர்.

10:21 AM IST
தமிழக அமைச்சர் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை சிலர் பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். இதுபோல் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

6:52 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 33,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 419 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:06 AM IST
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 14,613 ஆனது

உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 14,613 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 3,36,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6:02 AM IST
இத்தாலியில் கொரோனா பலி 5,000ஐ தாண்டியது

ரோம்: இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,436 ஆனது. அங்கு 59.138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

1:05 AM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 396ஆக அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது.

10:14 PM IST
கொரோனா தொற்று:தமிழகத்தில் 10 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

9:31 PM IST
11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

தமிழகத்தில் திட்டமிட்டப்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:45 PM IST
மாநகர பஸ்கள் நாளை வழக்கம் போல் இயங்கும்

அனைத்து மாவட்டங்களிலும் நாளை வழக்கம் போல் மாநகர பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

7:05 PM IST
கைதட்டி நன்றி தெரிவித்தவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

சுய ஊரடங்கை பின்பற்றி, மருத்துவர்களுக்கும் மற்றும் சேவை செய்தவர்களுக்கும் மாலை 5 மணிக்கு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

6:49 PM IST
மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம்

மார்ச்-31 வரை மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

6:46 PM IST
முதல்வர் இபிஎஸ் கை தட்டல்

நாடு முழுவதும் கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழக முதல்வர் இபிஎஸ் அதிகாரிகளுடன் அவரது இல்லத்தில் நின்றபடி கைத்தட்ட பாராட்டினார்.

6:44 PM IST
வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்க தடை

மார்ச்-31 வரை தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு அரசு, தனியார் பஸ்களை இயக்க தடை விதித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

5:34 PM IST
சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு

கொரோனா பாதிப்பால், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மாவட்டங்களிலும் பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சேவைகள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுகின்றன.

5:31 PM IST
விண்ணை முட்டிய கரகோஷம்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் சேவையில் உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட பணியார்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் பிரைம் அபார்ட்மென்டில் கைதட்டிய பொதுமக்கள்.

Photo Gallery

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் சேவையில் உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட பணியார்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் பிரைம் அபார்ட்மென்டில் கைதட்டிய பொதுமக்கள்.

Photo Gallery

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி மருத்துவ சேவையை பாராட்டி கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

Photo Gallery
Prev
4:59 PM IST
சேவையாளர்களுக்கு நன்றி கரகோஷம்

பிரதமர் மோடி கேட்டு கொண்டதன்பேரில் நாடு முழுவதும் மக்கள் வெளியே வந்து கைத்தட்டி கரோஷம் எழுப்பி சேவையாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

4:21 PM IST
டில்லியில் 144 தடை உத்தரவு

டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3:23 PM IST
பிறமாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

மஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

3:17 PM IST

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில வாகனங்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3:08 PM IST
75 மாவட்டங்களில் கொரோனா !

இந்தியாவில் 75 மாவட்டங்களில் கொரோனா இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு .

2:42 PM IST
மார்ச் 31 வரை பயணிகள் ரயில், மெட்ரோ ரயில் ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரயில் மட்டும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31 வரை ரத்து செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2:28 PM IST

இன்று(மார்ச்–22 ம் தேதி ) நடந்த சுயஊரடங்கின் காட்சி.

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

இன்று(மார்ச்–22 ம் தேதி ) நடந்த சுயஊரடங்கின் காட்சி.

Photo Gallery
Prev
1:28 PM IST
காலை 5 மணி வரை ஊரடங்கு

தமிழகத்தில் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

1:17 PM IST

கோவையில், இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை அரசு மருத்துவமனை டீன் உறுதி செய்துள்ளார்.

12:32 PM IST

இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் ஆள்நடமாட்டமின்றி காணப்படும் சாலை.

Photo Gallery

மக்கள் ஊரடங்கு காரணமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மக்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது

Photo Gallery
Prev
12:06 PM IST
இந்தியாவில் ஒரேநாளில் 2 பலி

இந்தியாவில் இன்று (மார்ச்22) ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் 63 வயது முதியவரும், பீகாரில் 38 வயதுடைய ஒருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தனர்.

12:01 PM IST
இந்தியாவில் பாதிப்பு 341 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 324ல் இருந்து 341 ஆக உயர்ந்துள்ளது.

11:20 AM IST
13 ஆயிரம் பேர் உயிரிழப்பு !

22 ம் தேதி காலை 11 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சத்து 8 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13, 69 பேர் மரணமடைந்துள்ளனர்.

10:22 AM IST
முக்கிய நகரங்கள் வெறிச் !

கொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு இன்று (22 ம் தேதி ) நாடு முழுவதும் பெரும் அமைதி ஏற்பட்டது. டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட பெருநகரங்கள் வெறிச்சோடின.

6:46 AM IST
இத்தாலியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகிறது. அந்நாட்டில் நேற்று மட்டும் 793 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ உதவியை இத்தாலி நாடியுள்ளது.

6:20 AM IST
கொரோனா: உலக அளவிலான பலி 13 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 13 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மொத்தம் 332 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

10:11 PM IST
கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தொடுகிறது

இன்று ( 21 ம் தேதி) இரவு 10 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 38 ஆனது. பலி 12 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ளது. 93 ஆயிரத்து 618 பேர் மீண்டுள்ளனர்.

8:45 PM IST
கொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி

கேரோனாவை தடுக்க, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

8:09 PM IST
கொரோனா பாதிப்புக்கு மருந்து : டிரம்ப் தகவல்

அசித்ரோமைசின், ஹை ட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை ஒன்றாக எடுத்து கொண்டால் கொரோனா நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

6:55 PM IST
கல்லுாரி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

மார்ச்-31 வரை கல்லுாரி மற்றும் சி.பி.எஸ். இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

6:32 PM IST
கொரோனா வைரஸ் : மதுரையில் 51 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, மதுரை சிறையில் உள்ள 51 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

6:20 PM IST
வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் பா.ஜ.க ., தலைவருமான வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:16 PM IST
சென்னைகடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து

நாளை(மார்ச்-22) சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

5:43 PM IST
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

தாய்லாந்திலருந்து வந்த 2 பேருக்கும், நியூஸிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆனது. - சுகாதார துறை அமைச்சர் , விஜயகுமார்.

5:36 PM IST
ரஜினி பேட்டி !

நாளை ( 22 ம் தேதி ) ஊரடங்கு நடக்கவுள்ள நிலையில் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ரஜினி வேண்டுகோள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4:23 PM IST
மோடி வேண்டுகோள் !

தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். மருத்துவர்களின் அறிவுரையை கடைபிடிக்க வேண்டிய நேரமிது; பிரதமர் மோடி.

2:57 PM IST
கட்டண சலுகை ரத்து

கொரோனா உள்ள சூழ்நிலையில், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், கர்நாடகாவில் அரசு பஸ்களில் முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவீத கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

2:56 PM IST

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஜோர்டான் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2:55 PM IST

அமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

2:55 PM IST

பாகிஸ்தானில், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2:54 PM IST

துருக்கியில் ஓட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளின் விவரங்களை சேகரிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

2:53 PM IST

சுற்றுலா பயணிகள் கியூபா வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

2:52 PM IST

ராமநவமி அன்று யாரும் அயோத்தி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள சாதுக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2:50 PM IST

அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

2:47 PM IST
ரயிலில் சென்றவர்களுக்கு கொரோனா


மார்ச் 13 ல் ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10:15 AM IST

பஞ்சாபில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

9:58 AM IST
258 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் இதுவரை 258 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8:02 AM IST
அதிகரிப்பு

ஹிமாச்சல பிரதேச மாநிலம் டேராடூரனில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

7:55 AM IST
4 ஆயிரம் பேர் பலி

இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 627 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 4,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 47,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7:55 AM IST
5 ஆயிரத்தை தாண்டியது

நியூசிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.

7:54 AM IST
41 பேர் பாதிப்பு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

7:53 AM IST
78 பேர் பலி

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:53 AM IST
வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

7:52 AM IST
பெண்டகனில் கொரோனா

அமெரிக்காவின் பெண்டகனில் 2 பேருக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளது.

7:00 AM IST
2.75 லட்சம் பேருக்கு பாதிப்பு

கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர்.

5:38 PM IST
அதிகரிக்கும் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,03,661 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 8,231 ஆகவும் அதிகரித்துள்ளன.

3:07 PM IST
8 ஆயிரத்தை தாண்டிய பலி


உலகளவில், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,99,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 82,802 பேர் குணமடைந்துள்ளனர்.

3:03 PM IST
276 வெளிநாடு இந்தியர்களுக்கு கொரோனா

ஈரான், ஐக்கிய அரபு எமீரேட்ஸ், இத்தாலி, குவைத், ருவாண்டா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் 255 பேருக்கும், யுஏஇ.,யில் வசிக்கும் இந்தியர்கள் 12 பேருக்கும், இத்தாலியில் வசிக்கும் 5 பேருக்கும், குவைத். ருவாண்டா, இலங்கையில் தலா ஒரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2:33 PM IST
உ.பி, கர்நாடகாவில் தலா இருவருக்கு பாதிப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரங்களில் தலா இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆனது.

12:08 PM IST
புளியறை எல்லை மூடல்

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இத்தாலிக்கு சென்று வந்த குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இருப்பினும் அவர்கள் முன்னெச்சரிக்கையின்றி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வந்ததால் பலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கேரளாவின் எல்லை மாவட்டமான தென்காசி, புளியறை எல்லை வழியாக பாதிப்புள்ளோரை அனுமதிக்க கூடாது என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புளியரையில் நிறுத்தி கேரளாவிற்கே திருப்பியனுப்படுகின்றனர் அவசரம் கருதியும், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் கேரளாவிற்கு அனுமதிக்கப்படுகின்றன.

11:06 AM IST
பஸ்கள் நிறுத்தம்

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக, வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுரை வழங்கியது. கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவையில் இருந்து கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், பயணிகளின் வருகை குறைவு காரணமாக, கோவை, பொள்ளாச்சியில் 168 பஸ்களின் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

10:40 AM IST
பக்தர்களுக்கு அனுமதியில்லை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற மார்ச் 31ம் தேதி வரை உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. தினமும் வழக்கம் போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கும்பகோணம், ஐராதீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

9:57 AM IST
147 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த 122 பேர், வெளிநாட்டை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9:53 AM IST
அச்சம் வேண்டாம்

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை 24 மணி நேரமும் நடந்து வருகிறது. தி.நகரில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவே, பெரிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

9:52 AM IST
பயணத்தை தவிருங்கள்


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தேவையற்ற பயணங்களையும், பொது வெளியில் கூடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். நம்மிடம் அதிகமான மாஸ்க்குகள் உள்ளன. கூடுதலாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

9:52 AM IST
முறையாக பரிசோதனை


சென்னை பல்லவன் இல்லம் பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பஸ்களை தினமும் தூய்மைபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் மாஸ்க் அணிய வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை 21 சோதனை சாவடிகளில் முறையாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். வெளிமாநில பஸ்களை தூய்மைபடுத்தவும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

8:51 AM IST
தனிமையில் எம்.பி.,

பா.ஜ., எம்.பி., சுரேஷ் பிரபு சவுதி அரேபியாவில் கடந்த 10ம் தேதியன்று நடந்த மாநாட்டில் பங்கேற்றார். அவருக்குல நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

8:49 AM IST
42 பேருக்கு பாதிப்பு

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து சென்று வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மஹாராஷ்டிராவில் 42 ஆகவும், புனேயில் 18 ஆகவும் அதிகரித்துள்ளது.

8:37 AM IST
பூங்காக்கள் மூடல்

கொரோனாவை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையைாக, தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, சென்னையில் திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் பூங்காக்களை மூடப்பட்டுள்ளன.

8:25 AM IST
ராணுவ வீரருக்கு கொரோனா


இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. அவரின் தந்தை, சமீபத்தில் ஈரான் சென்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரருக்கும், தந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8:04 AM IST
மனிதர்களிடம் சோதனை


கொரோனாவுக்கு கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய சீனா உத்தரவுபிறப்பித்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா துவக்கிய நிலையில், மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

8:00 AM IST
மருந்து பொருட்களுக்கு முக்கியத்துவம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேவை அதிகமுள்ளதால், மருந்து பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விநியோகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.

முழு விபரம்:

இன்று ( ஏப்.7) இரவு 11.30 மணி நிலவரப்படி 'கொரோனா' வைரசால் உலகம் முழுவதும் 14 லட்சத்து, 10 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 ஆயிரத்து 020 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 1,802 பேர் மீண்டுள்ளனர்.
ஜப்பானில் கொரோனாவை ஒழிக்க டோக்கியோ உள்ளிட்ட 5 மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உலக அளவில் பாதித்தவர்கள்:


சீனாவில், வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 81,708 ஆகவும், பலி எண்ணிக்கை, 3,331 ஆகவும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக, இத்தாலியில் கடும் பாதிப்பு உள்ளது. இத்தாலி தான் உலகிலேயே அதிக பலி எண்ணிக்கையை (17,127) கொண்டுள்ளது.முதலிடத்தில் அமெரிக்கா


அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 25,900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட, மொத்த பாதிப்பு 3 லட்சத்து 86 ஆயிரத்து 194 ஆக அதிகரித்தது. பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. மொத்த பலி 12,246 ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் அங்கு 1,375 பேர் பலியாகினர்.


10 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு


ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 13,897 ஆக உயர்ந்துள்ளது. ஈரான் மற்றும் பிரான்சில், பலி எண்ணிக்கை முறையே 3,872 மற்றும் 10,328 ஆக உள்ளது. பிரான்சில் இன்று ஒரே நாளில் 1,417 பேர் பலியாகினர்.இந்தியா:


இந்தியாவில் 4,858 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 136 பேர் உயிரிழந்துள்ளனர்; 283 பேர் குணமடைந்துள்ளனர். உபி.,யில் 285, கர்நாடகாவில் 125 பேர் இந்த நோயினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.தமிழகத்தில் 690 ஆக உயர்வு


தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:வீட்டு கண்காணிப்பில் 66,431 பேரும், அரசு கண்காணிப்பில் 353 பேரும் உள்ளனர். 23 நாள் கண்காணிப்பு முடிந்து 27,414 பேர் திரும்பியுள்ளனர். ஈரோட்டில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,305 பேருக்கு பரிசோதனை நடந்தது. இன்று(ஏப்.,07) 69 பேருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. அதில் 63 பேர், டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மேலும் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் வெளிமாநிலம் சென்று வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (183)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Krismoo - Vellore,இந்தியா
07-ஏப்-202010:02:14 IST Report Abuse
Krismoo ஜெயா குமார் இது கொரோன வேர்ல்ட் ரிப்போர்ட் லைவ். அப்டேட் மட்டும் பார்த்துக்கோ. சும்மா கமெண்ட் பக்கம் வராதே
Rate this:
Cancel
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202009:16:34 IST Report Abuse
jeya kumar 15 days same title change pannala.
Rate this:
Cancel
natarajan -  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202022:58:53 IST Report Abuse
natarajan தினமலர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என் பணிவுடன் வணக்கம் நான் புதுச்சேரியை சார்ந்தவன் எங்கள் ஊரில் கொரோன சம்பந்தமாக எந்த தொலைக்காட்சியிலும் உடனுக்குடன் தகவல் கிடைப்பதில்லை ஆகையால் நீங்களாவது கொறோன பற்றிய தகவலை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி புதுச்சேரி மக்கள்
Rate this:
NTK ஆரோக்கிய ராஜ், சேலம் மாவட்டம்Puducherry தமிழ்நாட்டை சார்ந்தது இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X