Advertisement
தமிழகத்தில் 1520 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு; 17 பேர் பலி
Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 20, 2020 | கருத்துகள் (26)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
6:25 AM IST
பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சோதனை

கோவையில், பத்திரிகையாளர்களுக்கு, 'ரேபிட் கிட்' மூலம் கொரோனா பரிசோதனை செய்யவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

9:31 PM IST
கோவையில் ஊரடங்கு மீறிய 10,421 பேர் கைது

கோவை மாவட்டத்தில், கடந்த மார்ச் 25 முதல் ஏப்., 19 வரை, ஊரடங்கை மீறியதாக, 9,272 வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 10 ஆயிரத்து 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7:52 PM IST
கோவையில் பெண் போலீசுக்கு கொரோனா

கோவை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அன்னூர் பகுதியில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 39 வயது பெண் போலீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

7:31 PM IST
கொரோனா இல்லாத 2 மாவட்டங்கள்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மட்டும் இதுவரை கொரோனா பாதிக்காத மாவட்டங்களாக உள்ளன. நேற்று வரை கொரோனா பாதிப்பில்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு விபரம்:

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,20) ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520 ஆகவும், பலி எண்ணிக்கை 17 ஆகவும் அதிகரித்துள்ளது.





தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6109 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 47,710 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கே அதிகம் பாதிப்பு இருந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.




இன்று 46 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஒரு டாக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 பரிசோதனை ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்டு 33 ஆக உயர்ந்துள்ளது. அதில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள். இன்று ஒரே நாளில் 6109 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிட் பரிசோதனைகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி வருவதாக பாராட்டி கூறுகிறது. அதிலும் தமிழகத்தில் சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
21-ஏப்-202016:40:21 IST Report Abuse
Baskar இந்த வைரஸ் பரவ காரணமே ஒரு பிரிவினர் தான். நேற்று பாருங்கள் ஒரு மதகுரு இறந்து விட்டானாம் அதற்க்கு கூடி கூட்டம் ஒரு லட்சம் பேர்களாம். இனி வங்க தேசம் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கும் போது தெரியும் யாரால் வந்த வியாதி என்று.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
21-ஏப்-202015:51:37 IST Report Abuse
unmaitamil இப்போது நம் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்துக்கு நகருகிறது. உயிர்பலியானவர்கள் மொத்தம் 17 பேர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக குறைவு. எதிர்க்கட்சிகள் 1500 தக்ளிப் நோய் பரப்பிகளைவைத்து தமிழ்நாட்டில் பரப்பியும் கூட, நம் மருத்துவ குழுக்களின் கடும் உழைப்பாலும், அரசின் திட்டமிட்ட நல்ல முயற்சியாலும், நம் காவல்துறையின் கண்காணிப்பிலும் 1500 நோயாளிகளுக்கு பரப்பப்பட்டும் , 17 பேரைத்தவிர மற்ற பலரும் காப்பாற்றப்பட்டனர். நம் மனவெறுப்புகளை மறந்து, குற்றம் கூறாமல் இதில் உழைத்த அனைவரையும் மனமார பாராட்டுவோம். அதுதான் மனித பண்பு.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-ஏப்-202012:22:32 IST Report Abuse
தமிழர்நீதி கொரோனாவால் இறந்தவர் உடலில் இருந்து கொரோனா நோய்தொற்று பரவாது என்பது மருத்துவஉண்மை . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X