தமிழகத்தில் 8,000 த்தை தாண்டியது 'கொரோனா' பாதிப்பு | Dinamalar
Advertisement
தமிழகத்தில் 8,000 த்தை தாண்டியது 'கொரோனா' பாதிப்பு
Updated : மே 12, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (22)
 • Live
 •  
 • Sort by:
 • Latest
 • Oldest
 • Auto update:
 • ON
 • OFF
2:00 PM IST
100 போலீசாருக்கு கொரோனா

சென்னையில் கூடுதல் கமிஷனர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு உதவி கமிஷனர், துணை கமிஷனருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் மட்டும் 100 போலீசாருக்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11:51 AM IST
ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது.

11:32 AM IST
முதியவர் உயிரிழப்பு

சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று உயிரிழந்தார்.

11:30 AM IST
போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா

சென்னையில் மேலும் ஒரு போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அண்ண நகர் துணை கமிஷனருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மற்றொரு துணை கமிஷனருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

11:15 AM IST
காஞ்சிபுரத்தில் 147 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 5 சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

11:00 AM IST

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதன் மூலம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

11:00 AM IST
ரூ.5.11 கோடி அபராதம்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,79,312 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெளியே சுற்றிய 4,59,05,534 பேர் கைதாகி ஜாமினில் வந்துள்ளனர். 4,32,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.5,11,26,279 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

10:45 AM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10:20 AM IST
நெல்லையில் மேலும் 3 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் பெண் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் மஹாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் சென்னையில் இருந்தும் ஊர் திரும்பியவர்கள். இதனால், நெல்லையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

9:25 AM IST
தனிமைபடுத்தப்பட்ட பகுதி

சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8:00 AM IST

சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு விபரம்:

சென்னை : தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று மட்டும், 798 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை, 8,002 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்து, திருவள்ளூர் இரண்டாம்
இடம் பிடித்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன், 4,273 பேர், அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு வார்டுகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து, 584 பேருக்கு கொரோனா பரிசோதனைசெய்யப்பட்டது. அதில், 798 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 538 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தில், 97 பேர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 90 பேர்; அரியலுார் மாவட்டத்தில், 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில், ஒற்றை இலக்குகளில் பாதிப்பு உள்ளது.
இதுவரை, 2.43 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 8,002 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,421 பேர் ஆண்கள்; 2,579 பேர் பெண்கள்; இரண்டு பேர் திருநங்கையர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில், 4,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக, திருவள்ளூர் மாவட்டத்தில், 440 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், திருவள்ளூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சிகிச்சையில் குணமடைந்து, நேற்று, 92 பேர் உட்பட, இதுவரை, 2,051 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னையை சேர்ந்த, 50 வயது நபர், 6ம் தேதியும், 67 வயது முதியவர், 9ம் தேதியும் உயிரிழந்தனர்.
அதேபோல, இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, கடலுாரை சேர்ந்த, 50 வயது நபரும், சென்னையை சேர்ந்த 36 வயது பெண்ணும், 6 மற்றும் 9ம் தேதிகளில் உயிரிழந்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, சென்னையை சேர்ந்த, 66 வயது மூதாட்டி, நேற்று உயிரிழந்தார். அவருக்கு, வேறு உடல் நல பிரச்னைகள் இருந்தன.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 65 வயது நபரும், 9ம் தேதி உயிரிழந்தார். இதன் வாயிலாக உயிரிழந்தோர் எண்ணிக்கை, 53 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (22)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
12-மே-202019:14:53 IST Report Abuse
S.Ganesan பலரும் இப்போதும் விதி முறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக , கல்லூரிகளில் படிப்பதாக சொல்லும் இளைஞர்கள் , மாஸ்க் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் இருவர் , மூவராக வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பாதிப்பு இன்னும் ஆயிரங்களை தாண்டி லட்சங்களை எட்டினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.
Rate this:
Cancel
12-மே-202016:47:54 IST Report Abuse
ஆப்பு கொரோனாவை கட்டுப் படுத்தி கடை கண்ணிகளை தொறந்தாச்சு.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) தமிழகம் முழுவதும் கொரோனாவை திட்டமிட்டே பரப்பிய தேசத்துரோகி மூர்க்கனுங்களுக்கு ஹோம் போடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X