5 லட்சத்து 19 ஆயிரத்து 585 பேர் பலி | Dinamalar
Advertisement
5 லட்சத்து 19 ஆயிரத்து 585 பேர் பலி
Updated : ஜூலை 02, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (248)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
10:04 PM IST
மஹா.,வில் புதிய உச்சம்; ஒரே நாளில் 6,330 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 125 பேர் பலியாகினர்.
இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 2) மட்டும் 6,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,86,626 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 125 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 8,178 ஆக உயர்ந்தது. புதிதாக 8,018 பேர் குணமானதையடுத்து, இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,01,172 ஆக உயர்ந்தது.

9:30 PM IST
டில்லியில் புதிதாக 2,373 பேருக்கு கொரோனா; 61 பேர் பலி

தலைநகர் டில்லியில், இன்று (ஜூலை 2) ஒரே நாளில் 2,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 61 பேர் பலியாகினர்.டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 61 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 92,175 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 2,864 ஆனது. இதுவரை 63,007 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 26,304 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். டில்லியில், இன்று மட்டும் 20,822 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:00 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களில் 59.52% பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 59.52 சதவீதம் பேர் குணமடைந்ததாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சற்று ஆறுதலான விஷயமாக இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 859 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 881 பேர் குணைமடைந்துள்ளனர்.இதுவரை குணைமடைந்தவர்களின் விகிதம் 59.52 சதவீதமாக உள்ளது. மொத்தம் 2,26,947 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோரின் வரிசையில் முதலாவதாக மஹாராஷ்டிரமும், அடுத்தடுத்த இடங்களில், டில்லி மற்றும் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டிகர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக சதவீதத்தில் மக்கள் குணமடைந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:29 PM IST
பெங்களூருவில் சிகிச்சைக்கு மறுப்பு; கொரோனா நோயாளி உயிரிழப்பு!

பெங்களூருவைச் சேர்ந்த 52 வயது நபர், 18 மருத்துவமனைகளால் சிகிச்சை மறுக்கப்பட்ட பின், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 52 வயதாகும் பவர்லால் சுஜானி என்பவருக்கு, தொடர்ந்து வாந்தி மற்றும் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பவர்லாலை, அவரது சகோதரன் தினேஷ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் எந்த வொரு மருத்துவமனையிலும் அவருக்கு சிக்கிச்சையளிக்க வில்லை. இந்நிலையில் பவர்லால் உயிரிழந்துள்ளார்.

8:02 PM IST
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை: விஜயபாஸ்கர்

சென்னையில் சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழகத்தில் இதுவரை குடிசை பகுதி மக்களுக்காக 46 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரை, ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொரோனா பாசிட்டிவ் வந்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

7:36 PM IST
சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா

இன்று (ஜூலை 02) சென்னையில் 2,027 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 38,947 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 22,686 பேர் சிகிச்சையில் உள்ளனர். 964 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:00 PM IST
தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா; ஒரே நாளில் 4,343 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 02) புதிதாக 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,270 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 73 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 33,488 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 692 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,551 பேர் ஆண்கள், 1,792 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 60,395 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 37,975 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் 91 ஆய்வகங்கள் (அரசு-48 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 021 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:32 PM IST
60 லட்சத்து 54 ஆயிரத்து 016 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.2ம் தேதி ) மாலை; 05;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 8 லட்சத்து ,34 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 19 ஆயிரத்து 585 பேர் பலியாகி உள்ளனர். 60 லட்சத்து 54 ஆயிரத்து 016 பேர் மீண்டுள்ளனர்.

12:06 PM IST
5 லட்சத்து 19 ஆயிரத்து 085 பேர் பலி

இன்று ( ஜூலை.2ம் தேதி ) நன்பகல்; 12;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 8 லட்சத்து ,10 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 19 ஆயிரத்து 085 பேர் பலியாகி உள்ளனர். 60 லட்சத்து 32 ஆயிரத்து 985 பேர் மீண்டுள்ளனர்.

10:29 AM IST
6 லட்சத்தை தாண்டியது

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,85,493 ல் இருந்து 6,04,641 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 434 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 17, 834 ஆக அதிகரித்துள்ளது.

8:41 AM IST
முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

8:41 AM IST

வேலூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது.

6:33 PM IST

தமிழகத்தில் இன்று (ஜூலை 01) புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 63 பேர் உயிரிழந்தனர். அதில், 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது.

6:10 PM IST
தமிழகத்தில் மேலும் 3,882 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 63 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 39,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

1:33 PM IST

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை காணும் போது சீனா மீதான எனது கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

10:32 AM IST

இந்தியாவில் ஒரே நாளில் 18,653 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,85,493 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 17,400 ஆக அதிகரித்துள்ளது.

6:54 AM IST
ஒரு கோடியே 5 லட்சத்து , 77 ஆயிரத்து 756 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை .1 ம் தேதி ) காலை; 06;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 5 லட்சத்து , 77 ஆயிரத்து 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 13 ஆயிரத்து 186 பேர் பலியாகி உள்ளனர். 57 லட்சத்து 90 ஆயிரத்து 762 பேர் மீண்டுள்ளனர்.

6:00 AM IST
வங்கிகளில் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து

சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும். பிற பகுதிகளில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும்.

ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம். பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜென்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் டீலர்களிடம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது. இருந்தாலும் 6ம் தேதி முதல் 31ம் தேதிவரை 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல மாலை 4:00 மணி வரை வங்கிகள் செயல்படும்.

5:21 AM IST
தமிழகத்தில் ஜூனில் தான் கோரதாண்டவம்

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனாவால் 67 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டு 1028 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் மார்ச் 7 முதல் நேற்று வரை 90 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜூன் மாதத்தில் மட்டும் 67 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 1201 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில் 1028 பேர் ஜூனில் இறந்துள்ளனர்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் அதிகளவு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், மதுரை, வேலுார், திருவண்ணாமலை என 15 மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது 4000 என்ற எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படுவதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சுகாதாரத் துறைக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

4:25 AM IST
நீலகிரியில் 5 பேருக்கு தொற்று; பாதிப்பு 89 ஆக அதிகரிப்பு

நீலகிரியில், நேற்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் படி தொற்று எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று எண்ணிக்கை, 89 ஆக அதிகரித்தது. இதில், முதன் முறையாக ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் தந்தை பணி புரியும் இடத்தில் தொற்று ஏற்பட்டு, தாய் மூலம் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 5,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

3:49 AM IST
தீட்சிதர்கள் வீடுகளில் 'நோட்டீஸ்' : சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீடுகளில், 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்' என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், 150 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இரு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த, 10 பேர் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு தொற்று இல்லை என தெரிந்ததும், 60 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தீட்சிதர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, வருவாய் துறை உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், பாதிக்கப்பட்டவர் பெயர் குறிக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், 100க்கும் மேற்பட்டோர், 'கொரோனா தொற்று பாதிக்காதவர்களின் வீடுகளில், அறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியது ஏன்' என கேட்டு, நகராட்சி சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் அரிதாஸ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தீட்சிதர்களிடம் பேசினர். பின், தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.

2:39 AM IST
ஒரே பள்ளத்தில் 9 சடலங்களை வீசி எறிந்த கொடுமை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒன்பது சடலங்களை, மனிதாபிமானம் இல்லாமல், ஒரே பள்ளத்தில் வீசி எறிந்த வீடியோ, பல்லாரியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.பல்லாரி மாவட்ட கலெக்டர் நகுல், நேற்று கூறியதாவது:பல்லாரியில் இரண்டு நாட்களாக, ஒன்பது பேர், கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை, குக்கரஹட்டி என்ற ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைக்கப்பட்டன.

சடலங்களை மனிதாபிமானமற்ற முறையில் புதைத்து இருந்தால், அத்தகைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

2:01 AM IST

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட டில்லியில் ஜூம்மா மசூதி, வரும் 4ம் தேதி திறக்கப்படும் என இம்மசூதியின் ஷாகி இமாம் தெரிவித்துள்ளார்.

1:10 AM IST
வழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : அரசு உத்தரவு

வழி பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, அனுமதிக்கப்பட்ட சிறிய வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள்அனுமதிக்க வேண்டும். வழிபாட்டுதலங்களுக்கு வருபவர் 6 அடி தள்ளி நின்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமேவழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.பஜனை உள்ளிட்ட இறைபாடல்கள் பாட அனுமதி இல்லை. அன்னதான கூடங்களில்தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகள் சுத்தமாக தோன்றினாலும் மீண்டும் ஒருமுறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பிரசாதம் ,தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை. தேங்காய் ,பூ,பழங்கள் போன்றவற்றை வழங்க கூடாது.வழிபாட்டு தலங்களில் உள்ள கடைகளில் பிரசாதம் வாங்கினாலும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சிலைகள் , புனித நூல்களை தொட்டு வணங்க கூடாது. என அரசு வெளியிட்டுள்ள வழிபாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:11 AM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 421 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 421 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,667 ஆக அதிகரித்தது. அரபு எமிரேட்சில் புதிதாக ஒருவர் பலியானார். நாட்டில் தற்போது வரை 315 பேர் பலியாகியுள்ளனர். 63,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அரபு எமிரேட்சில் இன்று 490 பேர் புதிதாக குணமடைந்தனர். மொத்தமாக 37,566 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தற்போது 11,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11:18 PM IST
பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.இந்நிலையில் பாக்.,கில் கடந்த 24 மணிநேத்தில் புதிதாக 2,846 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையொட்டி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,337 ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 118 பேர் பலியாகினர். பாக்.,கின் கொரோனா தொற்றுக்கு இதுவரை 4,304 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 98,503 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

10:30 PM IST
யு.ஏ.இ.,யில் அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை முதல் திறப்பு

ஐக்கிய அரபு எமிரேட்சில்(யு.ஏ.இ.,) மசூதிகள், கோவில்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் நாளை(ஜூலை 1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.அதேசமயம் மறுஉத்தரவு வரும் வரை, வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், தொழில்துறை பகுதிகள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மசூதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10:02 PM IST
மாஸ்க் அணியுங்கள் என கூறிய பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி

ஆந்திர மாநிலம் நெல்லூரில், அம்மாநில சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் துணை மேலாளராக பாஸ்கர் என்பவர் உள்ளார். அவர் மாஸ்க் அணியாமல் ஊழியர்களிடம் பேசியதாக தெரிகிறது. அவரை மாஸ்க் அணிந்து பேசும்படி சக பெண் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திமடைந்த துணை மேலாளர், அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.ஆத்திரம் அடங்காத அவர், பெண்ணை கீழே தள்ளி, தலைமுடியை பிடித்து அடித்தும், கட்டையால் கடுமையாக தாக்கியும் உள்ளார். ஜூன் 27ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகாரில், நெல்லூர் போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

9:06 PM IST
கோவையில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 538 ஆக உயர்வு

கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், ஒரு வயது பெண் குழந்தை உட்பட இன்று ஒரே நாளில், 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.போத்தனுார் அழகு நகர், துடியலுார், விளாங்குறிச்சி, வடவள்ளி, செட்டி வீதி, தெலுங்கு வீதி, பீளமேடு, சுண்டக்காமுத்துார், வெள்ளக்கிணர் பிரிவு, மதுக்கரை, தெலுங்கு பாளையம், மசக்காளிபாளையம், பாலன் நகர் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம், 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 538 ஆக உயர்ந்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மூவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

8:15 PM IST
மதுரையில் ஒரே நாளில் 257 பேர் பாதிப்பு; பலி 3

மதுரையில் இன்று 257 பேருக்கு தொற்று உறுதியானது. பெண் உட்பட மூவர் பலியாகினர்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர், நர்ஸ், சுகாதாரப்பணியாளர்கள், போலீஸ் என 51 பேர், காய்ச்சல் அறிகுறியுடன் 122 பேர், ஏற்கனவே பாதித்தோருடன் தொடர்பில் இருந்த 59 பேர், கர்ப்பிணிகள் இருவர், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 11 பேர் உட்பட 257 பேருக்கு இன்று தொற்று உறுதியானது. இவர்கள் கொரோனா மருத்துவமனை, தோப்பூர், கல்லுாரி முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். 67 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்த பாதிப்பு 2,557 ஆக உயர்ந்தது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண், 65 வயது மூதாட்டி, 70 வயது முதியவர் இறந்தனர். இதில் இருவருக்கு கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்தது. ஒருவர் மூச்சுத்திணறி பலியானார். மொத்த பலி 32 ஆக உயர்ந்தது.

7:40 PM IST
கேரளத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கேரளாவில் இன்று மேலும் 131 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்தார்.

இது குறித்து அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் கூறுகையில், கேரளத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,311 ஆக உயர்ந்தது.

தற்போது வரை 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,304 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர். மருத்துவ மனையிலும், வீடுகளிலும் 2,781 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 1,84,657 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

7:05 PM IST
அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியானது

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: ‛தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்தது. இதனால், இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பழகனுக்கு கொரோனா இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அமைச்சர் மறுத்திருந்தார்.

6:30 PM IST
சென்னையில் இன்று அதிகபட்சமாக 2,393 பேருக்கு பாதிப்பு

இன்று (ஜூன் 30) அதிகபட்சமாக சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 34,828 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 22,160 பேர் சிகிச்சையில் உள்ளனர். 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 30) ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 87 பேர். இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு-47 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 074 ஆக உள்ளது.

5:51 PM IST
5 லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் பலி

இன்று ( ஜூன் .30ம் தேதி ) மாலை; 05;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 4 லட்சத்து ,35 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 8 ஆயிரத்து 855 பேர் பலியாகி உள்ளனர். 56 லட்சத்து 93 ஆயிரத்து 520 பேர் மீண்டுள்ளனர்.

5:28 PM IST
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

இன்று (ஜூன்30 ) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: ஊரடங்கு தளர்வுகள் வந்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். உரியநேரத்தில் ஊரடங்கு வந்ததால் பல லட்சம் பேர் தப்பினர். மழைக்காலம் வந்து விட்டதால் , புளூ காய்ச்சல் மற்றும் சளி , மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது இதனால் வரும் நவம்பர் மாதம் வரை உணவு, தானியம் ரேசன் மூலம் இலவசமாக வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

12:02 PM IST
56 லட்சத்து 68 ஆயிரத்து 668 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .30ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 4 லட்சத்து ,12 ஆயிரத்து 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 8 ஆயிரத்து 230 பேர் பலியாகி உள்ளனர். 56 லட்சத்து 68 ஆயிரத்து 668 பேர் மீண்டுள்ளனர்.

2:08 AM IST
ஒரு கோடியே 3 லட்சத்து , 52 ஆயிரத்து 533 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .29ம் தேதி ) நள்ளிரவு; 02;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 3 லட்சத்து , 52 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 6 ஆயிரத்து 369 பேர் பலியாகி உள்ளனர். 56 லட்சத்து 13 ஆயிரத்து 264 பேர் மீண்டுள்ளனர்.

1:31 AM IST
கேரளாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,310 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி 23 ஆனது. பாதிப்பு அடைந்தவர்களில் 2,057 பேருக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீதிப் பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

12:20 AM IST
கிராமங்களில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் வரும், சிறிய திருக்கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

11:31 PM IST
ஆந்திராவில் மேலும் 793 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 793 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,891 ஆக உயர்ந்தது. நேற்று நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 813 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று 302 பேர் நோயில் இருந்து குணமடைந்தனர். மொத்தமாக 6,232 ஆக உயர்ந்தது. தற்போது 7,479 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் புதிதாக 11 பேர் பலியாகினர். இதையொட்டி, மாநிலத்தின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தது.

11:03 PM IST
கோவையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடக்கும்: ஐ.சி.எம்.ஆர்., எச்சரிக்கை

'கோவையில் ஜூலை 3வது வாரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்கும்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறுகையில், 'கோவையில் பொதுப் போக்குவரத்து துவங்கிய பின்னரே கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ஜூலை 3வது வாரத்தில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தைக் கடக்கும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. தற்போது, 4,000 படுக்கை வசதிகள் உள்ளன. கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

10:30 PM IST
நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

நாளை மாலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுகிறார்.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்கிறது. இதில் 5 -ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2ம் கட்ட தளர்வுகள் குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த சூழ்நிலையில், நாளை மாலை 4மணிக்கு பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடுகிறார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச உள்ளார்.

10:00 PM IST
2 ம் கட்ட ஊரடங்கு தளர்வு: வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

நாடுமுழுவதும் 2 கட்ட தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. அதன்படி,நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை ஜூலை 31 வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், கலாச்சார மற்றும் மத ரீதியான அமைப்புகள் திறக்க ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உள்நாட்டு விமான சேவை துவக்க ஆலோசனை நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் , வழிபாட்டுதலங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட தடைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:30 PM IST
சிங்கப்பூரில் மேலும் 202 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று புதிதாக 202 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு (இன்று) நிலவரப்படி, 202 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் மொத்தமாக 43,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதுவரை 26 பேர் பலியாகினர். சிங்கப்பூரில் நோய் தொற்றில் இருந்து 37,508 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

8:49 PM IST
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு

சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

8:20 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவு

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

7:23 PM IST
கொரோனாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் எம்ஜிஎம் மருத்துவமனை

லேசான அறிகுறியுடன் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்ட கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் சிறப்பு திட்டத்தை எம்ஜிஎம் மருத்துவமனை அறிவித்துள்ளது.

எம்ஜிஎம்@ ஹோம் என்ற 14 நாள் கண்காணிப்பு திட்டத்தின்படி, லேசான கொரோனா அறிகுறியுடன் வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டு, டாக்டர்களின் ஆலோசனையை பெறலாம். இதனால் மருத்துவமனையில் ஆகும் செலவை தவிர்க்க முடியும்.

6:45 PM IST
சென்னையில் அதிகபட்சமாக 2,167 பேருக்கு பாதிப்பு

அதிகபட்சமாக சென்னையில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில், 33,441 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 21,681 பேர் சிகிச்சையில் உள்ளனர். 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:16 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 86,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், மொத்தம் 47,749 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 37,331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

4:11 PM IST
5 லட்சத்து 4 ஆயிரத்து 785 பேர் பலி

இன்று ( ஜூன் .29ம் தேதி ) மாலை; 04;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 2 லட்சத்து ,67 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 4 ஆயிரத்து 785 பேர் பலியாகி உள்ளனர். 55 லட்சத்து 68 ஆயிரத்து 890 பேர் மீண்டுள்ளனர்.

1:15 PM IST
ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை இல்லை: தமிழக மருத்துவக்குழு

தமிழகத்தில் 80 சதவீதத்தினர் பேருக்கு லேசான கொரோனா அறிகுறியுடன் இருப்பதால் யாரும் அச்சசப்பட வேண்டாம். தனிமைப்படுத்துவதை யாரும் அச்சப்பட வேண்டும். தமிழகத்தில் பரிசோதனையை அதிகரிக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொது ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்தாது. திருச்சி, மதுரை, வேலூரில் கொரோனா இரட்டிப்பாகி உள்ளது. சென்னையை போல் திருச்சி, மதுரை,வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளோம்.

12:38 PM IST
55 லட்சத்து 58 ஆயிரத்து 160 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .29ம் தேதி ) நன்பகல் ; 12;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 2 லட்சத்து ,50 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 4 ஆயிரத்து 505 பேர் பலியாகி உள்ளனர். 55 லட்சத்து 58 ஆயிரத்து 160 பேர் மீண்டுள்ளனர்.

9:13 AM IST

வேலூர் மாவட்டத்தில், இன்று ஒரு வயது குழந்தை மற்றும் 77 வயது முதியவர் உட்பட மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,378 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

2:19 AM IST
ஒரு கோடியே 1 லட்சத்து 95 ஆயிரத்து 031 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .28ம் தேதி ) நள்ளிரவு ; 12;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 1 லட்சத்து ,95 ஆயிரத்து 031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 3 ஆயிரத்து 139 பேர் பலியாகி உள்ளனர். 55 லட்சத்து 19 ஆயிரத்து 046 பேர் மீண்டுள்ளனர்.

1:18 AM IST
கொரோனாவுக்கு புதிய 3 அறிகுறிகள் அறிவிப்பு

கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி மணம்-சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

12:25 AM IST
ரஷ்யாவில் புதிதாக 6,791 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று புதிதாக 6,791 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,34,437 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,073 ஆக அதிகரித்தது.மேலும் ஒரே நாளில் நாட்டில் 5,735 பேர் குணமடைந்தனர். நாட்டில் இதுவரை நோய் பாதிப்புகளில் இருந்து 3,99,087 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாஸ்கோ நகரில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


11:43 PM IST
சளி மாதிரி சேகரிக்க ரோபோ: கோவை இளைஞர் கண்டுபிடிப்பு

இன்ஜி., பட்டதாரி வடிவமைத்துள்ள கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கான தானியங்கி ரோபோ எந்திரம் பாராட்டை பெற்றுள்ளது.இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது: ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை சளி மாதிரி எடுக்க மனித ஆற்றலுக்கு மாற்றாக இந்த ரோபோடிக் எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல்போன் செயலி மூலம், இணையம் வாயிலாக இந்த ரோபோவை இயக்க முடியும். மேலும், தாமதமின்றி துரிதமாக இரண்டு நிமிடத்தில் பரிசோதனை செய்ய முடியும். சளி மாதிரிகள் பலருக்கு எடுக்கப்பட வேண்டும் என்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இந்த ரோபோவை பயன்படுத்தும் போது, எந்திரம் தானியங்கி முறையில் சுத்தம் செய்து கொள்ளவும், சளி மாதரி எடுப்பவர்கள் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. எந்திரத்தை 360 டிகிரி முறையில் கட்டுப்படுத்த முடியும். 'கோவிட் -19 ஸ்மார்ட் ஸ்வாப்' என பெயரிடப்பட்டுள்ளது. இது 'செமி ஆட்டோமேட்டிக்' வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழு தானியங்கி எந்திரத்தை வடிவமைக்க அரசு உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

11:00 PM IST
தெலுங்கானாவில் ஊரடங்கு குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை

தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார்.இது தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் , GHMC பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது. ஐதராபாத் ஒரு கோடி மக்களைக் கொண்ட ஒரு பெருநகர நகரம். நாட்டின் பிற நகரங்களைப் போலவே, கொரோனா வைரஸின் பரவலும் இங்கு அதிகமாக இருப்பது இயற்கையானது. ஊரடங்கு அகற்றப்பட்ட பின்னர் மக்கள் வெளியே வரத்துவங்கினர். இதுவே நோய் பரவுதலுக்கு காரணமாக இருந்தது. இந்த பிரச்சினையை கையாள மாநில அரசு முழுமையாக ஆயுதம் (முன்னெச்சரிக்கை நடவடிக்கையை) தயாராக உள்ளதால் அதிகரித்து வரும் பாதிப்பு குறித்து பீதியடைய தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

10:23 PM IST
தாராவியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று

மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா தொற்றுக்கு மேலும் 13 பேர் இன்று பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக தாராவியில் நோய் பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் 13 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. தாராவியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்தது. தாராவியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,615 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,393 ஆக அதிகரித்தது.

தொடர்ந்து, தாதரில் ஒரே நாளில் 29 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக 15 பேர் சராசரியாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். தாதரில் மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. தாதரில் 409 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறுதெரிவிக்கப்பட்டது.

9:30 PM IST
விதி மீறி கல்யாணம்: மணமகனின் தந்தைக்கு ரூ 6 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி நடந்த கல்யாணத்தில் மணமகனின் தந்தைக்கு ரூ 6,26,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மாநிலத்தின் பில்வாரா நகரில் 50 விருந்தினர்களுடன் மகனின் திருமணத்தை நடத்திக் கொள்ள கீசுலால் ரதி என்பவருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் 250க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். திருமணத்திற்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா இருப்பதும் உறுதியானது. இதனால் ஏற்பட்ட தொற்றினால் மணமகனின் தாத்தா உயிரிழந்துள்ளார்.

மேலும் 58 பேர் தனிமைக் காவலில் வைக்கப்பட்டனர்.திருமணம் நடத்தியவர்களின் அலட்சியத்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தனிமை வார்டு அமைத்தல், சோதனை, உணவு என ஏற்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டது. செலவின் மொத்த தொகையான ரூ 6,26,500 மணமகனின் தந்தைக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தொகையினை 3 நாட்களுக்குள் செலுத்தும் மாவட்ட நிர்வாகம் மணமகனின் தந்தைக்கு கெடு விதித்துள்ளது.

8:41 PM IST
குஜராத் முன்னாள் முதல்வருக்கு கொரோனா உறுதி

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வகேலாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

குஜராத்தில் 1996 - 97ல் முதல்வராக இருந்தவர் சங்கர்சிங் வகேலா. முதலில் பா.ஜ.,வில் இருந்தவர், பின் காங்., கட்சிக்கு தாவி, பின் தேசியவாத காங்., கட்சியில் ஐக்கியமானார். அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தவர், சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் அடிப்பினர் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வகேலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர், இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, வகேலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

8:00 PM IST
ஊரடங்கால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: பஞ்சாப் போலீசார் தகவல்

கொரோனா ஊரடங்கு காலங்களில் பஞ்சாப்பில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் சுமார் 13000 க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. வீட்டு வன்முறை ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் இது ஒரு சமூக வேதனையாகும். குடும்ப வன்முறையின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

7:15 PM IST
வந்தேபாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் 170 விமானங்களை இயக்க முடிவு

வந்தேபாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் 170 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் படி கடந்த மாதம் 7 ம் தேதி முதல் ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு கட்டமாக இந்திய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நான்காம் கட்டமாக வரும் 3ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்க 170 விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, தாய்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும்.

6:45 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா; 34 பேர் பலி

சென்னையில் 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 34 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 31,858 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 21,094 பேர் சிகிச்சையில் உள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:25 PM IST
தமிழகத்தில் இதுவரை 82,275 பேருக்கு கொரோனா; 1,079 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 28) ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3761 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 179 பேர். இன்று மட்டும் 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 10 ஆயிரத்து 402 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,399 பேர் ஆண்கள், 1,541 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 50,745 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 31,509 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,079 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு-47 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 1,443 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 537 ஆக உள்ளது.

5:39 PM IST
5 லட்சத்து ஆயிரத்து 880 பேர் பலி

இன்று ( ஜூன் .28ம் தேதி ) மாலை ; 05;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 1 லட்சத்து ,11 ஆயிரத்து 063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து ஆயிரத்து 880 பேர் பலியாகி உள்ளனர். 54 லட்சத்து 83 ஆயிரத்து 530 பேர் மீண்டுள்ளனர்.

2:42 PM IST
செஞ்சி தி.மு.க., எம்.எல்.ஏ., க்கு கொரோனா

இந்நிலையில், செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12:31 PM IST
5 லட்சத்து ஆயிரத்து 436 பேர் பலி

இன்று ( ஜூன் .28ம் தேதி ) நன்பகல் ; 12;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 87 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து ஆயிரத்து 436 பேர் பலியாகி உள்ளனர். 54 லட்சத்து 66 ஆயிரத்து 330 பேர் மீண்டுள்ளனர்.

10:14 AM IST
இந்தியாவில் 3 லட்சம் பேர் குணமடைந்தனர்

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 19 ஆயிரத்து, 906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 28 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 03 ஆயிரத்து 051 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 9 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


6:35 AM IST
கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது

இன்று ( ஜூன் 28ம் தேதி ) காலை; 06;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 1 கோடியே 75 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 626 பேர் பலியாகி உள்ளனர். 54 லட்சத்து 54 ஆயிரத்து 548 பேர் மீண்டுள்ளனர்.

5:50 AM IST
கொரோனா தொற்று ஒழிய ஏழுமலையானிடம் பிரார்த்தனை ; சிவராஜ்சிங் சவுகான்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒழியவும், நாட்டின் பாதுகாப்பிற்காக ஏழுமலையானிடம் வேண்டுதல் நடத்தியதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.

4:55 AM IST
தெலுங்கானா: ஒரே நாளில் 1087 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.தெலுங்கானாவில் நேற்று 1,087 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,928 ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

3:52 AM IST
சென்னை, மதுரை மாவட்டங்களில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. போலீஸ் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்.. காய்கறி, மளிகை கடை என, எந்த கடைகளும் திறந்திருக்காது; வாகனங்கள் எதுவும் இயங்காது.

தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அரசு உத்தரவை மீறி, வெளியில் வருவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் வீடுகளிலே இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.


3:12 AM IST
ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா

ராஜஸ்தானில் ஊரடங்கை மீறி மகன் திருமணத்தை நடத்தி 15 பேருக்கு கொரோனா வைரசை பரப்பிய மணமகன் தந்தைக்கு மாவட்ட நிர்வாகம் ரூ 6 லட்சம் அபராதம் விதித்தது.ஊரடங்கு விதிகளை மீறி அதிக நபர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தை மீது ஊரடங்கு சட்டத்தை மீறியது, கொடிய தொற்று நோயை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. பிஹீல்வாடா மாவட்ட கலெக்டர் 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

2:48 AM IST
கேரளாவில் புதிதாக 195 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.071 ஆனது. இதுவரை 2 ஆயிரத்து எட்டு பேர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 1,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1:32 AM IST
சவுதியில் மேலும் புதிதாக 3,927 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று அதிகரித்து சவுதி அரேபியாவில் புதிதாக 3,927 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 37 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மொத்தமாக நாட்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,78,504 ஆக அதிகரித்தது. மேலும் நோய் தொற்றால் 37 பேர் பலியாகினர். சவுதியில் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,511 ஆக உயர்ந்தது.நாட்டின் நோய் தொற்றுக்கு இன்று மேலும், 1,657 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,128 ஆக உள்ளது. தற்போது நோய் பாதிப்புகளில் சிக்கி 54,865 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

12:34 AM IST
உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை: அமித்ஷா நேரில் ஆய்வு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் தயாராகி வரும் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையினை உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வருடன் நேற்று (ஜூன் 27) நேரில் சென்று ஆய்வு செய்தார்.ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு மருத்துவமனை இரண்டு பிரிவுகளை கொண்டது. கொரோனா பராமரிப்பு மையத்தில் அறிகுறி அற்ற கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள். மருத்துவமனையில் அறிகுறி உள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுவார்கள். தற்போது 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அவை திங்களன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.12:06 AM IST
உலகளவில் கொரோனாவுக்கு ஒரு கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது.இந்த கொடிய வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது. . 54 லட்சம் பேர் இந்நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும் பலியானோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது.


11:32 PM IST
அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலகளவில் முன்னணி

பிரிட்டனைச் சேர்ந்த அஜ்ட்ரோஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலக அளவில் முன்னணியிலும் மிகவும் மேம்பட்ட கட்டத்திலும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

11:03 PM IST
மஹாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 5,318 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,318 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,59,133 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 167 பேர் பலியாகினர். இன்று மேலும் 4,430 பேர் குணமாகினர்; 84,245 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 67,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


10:34 PM IST
கனடாவில் மேலும் 173 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 173 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 4 பேர் பலியாகினர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,700 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றுக்கு புதிதாக 4 பேர் பலியாகினர். மொத்தமாக 8,508 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணத்தில் பதிவாகுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டில் 65,000 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நோய் தொற்றுக்கு 2.7 மில்லியன் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.10:00 PM IST
எஸ்.ஐ., மனைவிக்கு தொற்று போலீஸ் ஸ்டேஷன் மூடல்

சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானதால், அவர் கணவர் பணியாற்றி வரும், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஒருவர், போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மனைவி சென்னையில், எஸ்.ஐ., யாக உள்ளார்; அவர், 24ம் தேதி, சென்னையில் இருந்து திருப்பூர் வந்தார்.
மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அவரது வீட்டில் கணவர், மகள், மாமனார், மாமியார் ஆகியோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

போலீஸ் குடியிருப்பு, 'பேரிகார்டு' வைத்து, 'சீல்' வைக்கப்பட்டது. பெண் எஸ்.ஐ., கணவர் பணியாற்றி வரும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. அனைத்து பகுதிகளிலும், கிருமி நாசினி அடிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

9:28 PM IST
'8 மாநிலங்களில் இந்தியாவின் 85% பாதிப்பு, 87% பலி'

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 85 சதவீதம், மொத்த பலியில் 87 சதவீதம், மஹா., டில்லி, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

9:00 PM IST
தமிழகத்தில் ஜூலை 15 வரையில் சிறப்பு ரயில்கள் ரத்து

தமிழக அரசின் வேண்டுகோளின் படி தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இருப்பதை அடுத்து தமிழக அரசு சிறப்பு ரயில்கள் இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் நாளை மறுநாள் (29 ம் தேதி) முதல் ஜூலை 15 ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

8:20 PM IST
கோவாவில் கொரோனா சமூகப்பரவலாக மாறி உள்ளது: முதல்வர் தகவல்

கோவாவில் கொரோனா சமூக பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது; பலி 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கோவாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 1,039 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 2 பேர் பலியாகி உள்ளனர். 370 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.இந்நிலையில், கோவாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கோவாவில் கொரோனா தொற்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டறியப்பட்டு வருகிறது. இங்கு சமூக பரவலாக மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் திறமையாக பணியாற்றி வருகின்றனர். மக்கள் தான் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

7:40 PM IST
கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.மதுரையில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும். இறப்பு விகித்தை கண்காணிக்க வல்லுநர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீரியம் மிக்க மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு விகிதம் குறையும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

7:16 PM IST
டில்லியில் புதிதாக 2,948 பேருக்கு கொரோனா

தலைநகர் டில்லியில் புதிதாக 2,948 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 66 பேர் ஒரே நாளில் பலியாகினர்.இதையடுத்து, இங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 80 ஆயிரத்து, 188 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 66 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி 2,558 ஆக உயர்ந்துள்ளது. 28 ஆயிரத்து, 329 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 49 ஆயிரத்து, 301 பேர் குணமடைந்து உள்ளனர்.

6:45 PM IST
சென்னையில் 51 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னையில் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 51 ஆயிரத்தை கடந்தது.சென்னையில் மட்டும் 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 31,045 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 19,877 பேர் சிகிச்சையில் உள்ளனர். 776 பேர் உயிரிழந்தனர்.

6:30 PM IST
தமிழகத்தில் இதுவரை 78,335 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 2,737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 094 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3624 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். 8 பேர் வெளிநாட்டில் இருந்தும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.

இன்று மட்டும் 34,805 பரிசோதனைகள் நடந்தது. இதனுடன் சேர்த்து, இதுவரை 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 பரிசோதனைகள் நடந்தது. அதேபோல், இன்று மட்டும் 32 ஆயிரத்து 068 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால், பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 059 ஆக அதிகரித்துள்ளது.

6:16 PM IST
தமிழகத்தில் 78 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3624 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். 8 பேர் வெளிநாட்டில் இருந்தும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.

3:24 PM IST
4 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் பலி

இன்று ( ஜூன் .27ம் தேதி ) மாலை; 03;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 99 லட்சத்து 27 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் பலியாகி உள்ளனர். 53 லட்சத்து 76 ஆயிரத்து 460 பேர் மீண்டுள்ளனர்.

10:11 AM IST
5 லட்சத்தை தாண்டியது


மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை:நேற்று ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 552 பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து 881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 384 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது.

10:00 AM IST
பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா


திருப்பூர்: திருப்பூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரின் மனைவி சென்னையில் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். சமீபத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் திருப்பூர் வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், அவருக்கு கொரோனா பரிசோதனை உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6:59 AM IST
அமெரிக்கா, பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6:37 AM IST
53 லட்சத்து 53 ஆயிரத்து 440 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .27ம் தேதி ) காலை ; 05;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 98 லட்சத்து 98 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 96 ஆயிரத்து 077 பேர் பலியாகி உள்ளனர். 53 லட்சத்து 53 ஆயிரத்து 440 பேர் மீண்டுள்ளனர்.

5:29 AM IST
ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரூ.620 கோடி ஒதுக்கீடு

ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கும், தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ் கூறியதாவது: ரயில் பெட்டிகளை தனிமை வார்டாக மாற்று வதற்கு, மத்திய அரசிடமிருந்து, 620 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. ஒவ் வொரு பெட்டியையும் வார்டாக மாற்றுவதற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவாகிறது. கொரோனாவால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், ஏற்கனவே சிறப்பு ரயில்கள் மூலமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டனர்.

4:35 AM IST
மே.வங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.கொரோன வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக மேற்கு வங்க மாநிலமும் ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தது.

3:25 AM IST
கொரோனாவில் இறந்த முதியவர் உடலை ஜெ.சி.பி.யில் எடுத்துச்சென்ற கொடூரம்

ஆந்திராவில் கொரோனாவில் இறந்த 72 வயது முதியவரின் உடலை புதைக்க ஜெ.சி.பி. இயந்திரத்தில் மயானத்திற்கு கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 72 வயது ஒய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் உதயபுரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மயானத்திற்கு கொண்டு செல்ல யாரும் முன்வராத நிலையில் மாநகராட்சியினர் ஜெ.சி.பி. எனப்படும் மண் அள்ளும் இயந்திரம் மூலம் உடலை கொண்டு சென்றனர்.

2:33 AM IST
கேரளாவில் புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதி

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,876 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் 1,63,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2.397 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

1:30 AM IST
'கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.2.3 லட்சம் கோடி தேவை'

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட உலக சுகாதார நிறுவனம் தலைமையிலான கூட்டணிக்கு அடுத்த 12 மாதங்கள் ரூ.2.3 லட்சம் கோடி தேவை, தற்போது உடனடியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை என வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.அடுத்த 12 மாதங்களுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசிகளுக்காக 31.3 பில்லியன் டாலர் (ரூ.2.3 லட்சம் கோடி) தேவை. தற்போது வரை 3.4 பில்லியன் டாலர்களை சேகரித்துள்ளோம். 27.9 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதில் 13.7 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) உடனடியாக தேவைப்படுகிறது. ஐ.எம்.எப்., மதிப்பீட்டின்படி இந்த் நிதி தேவையானது, தொற்றுநோயால் தற்போது உலக பொருளாதாரம் ஒவ்வொரு மாதமும் இழந்து வரும் தொகையில் பத்தில் ஒரு பங்கை விட குறைவானது. ஏற்கனவே 468,000 ஆயிரம் பேர் உயிர்களை இழந்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12:26 AM IST
கோவை தீயாய் பரவுது கொரோனா: பாதிப்பு 393 ஆக உயர்வு

கோவையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் இன்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12:00 AM IST
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,800 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6800 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 620,794 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் ரஷ்யாவில், 7,113 பேர் பாதிக்கப்பட்டனர்.அங்கு ஒரே நாளில் 176 பேர் பலியாகினர். ரஷ்யாவில் மேலும் 92 பேர் நோய் தொற்றால் பலியாகினர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,781 ஆக அதிகரித்தது. நோய் பாதிப்புகளில் இருந்து இதுவரை 3,84,000 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

11:30 PM IST
தெலுங்கானாவில் 2 நாட்களுக்கு கொரோனா பரிசோதனை நிறுத்தம்

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையை ஐதராபாத் மற்றும் சுற்றிய பகுதிகளில் தற்காலிகமாக 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

11:00 PM IST
டில்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடில்லியில் வரும் ஜூலை 31 வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுடில்லியில் உள்ள பள்ளிகள் வரும் ஜூலை 31-ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

10:22 PM IST
தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மாஸ்க்

மாஸ்க் தயாரிப்பில் பலவித புதுமைகளை ஜப்பானியர்கள் செய்து வருகின்றனர்.ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ளதுபோல இந்த மாஸ்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுடன் ப்ளூடூத் மூலம் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. அவ்வாறு தொடர்பு கொள்வதால் இந்த மாஸ்க்குகள் பலவிதங்களில் பயன்படுகிறது. வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்ப இந்த மாஸ்க்குகளை அணிந்துகொண்டு பேசினாலே போதுமானது. நமது பேச்சை அப்படியே மெசேஜில் டைப் செய்துவிடும்.கொரோனா தாக்கம் உலக அளவில் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் மாஸ்க்குகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்திய இந்த ஜப்பானிய நிறுவனத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.

10:06 PM IST
பெங்களூருவில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடியூரப்பா

பெங்களூருவில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

9:28 PM IST
மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா

கொரோனா பாதிப்புகளையொட்டி, மேற்கு வங்கத்தில் ஊரடங்குகளை ஜூலை 31 வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.காலை 5 முதல் இரவு 10 வரை ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும். இரவு ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை இருக்கும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஜூலை 1 முதல் மெட்ரோ ரயில் சேவையை துவங்க விரும்புகிறோம்.

8:30 PM IST
மதுரை தேனியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

மதுரை தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.இது குறித்து மின் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இம் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையிலான மின் கட்டணத்தை ஜூலை 15ம் தேதி செலுத்தலாம்.

8:05 PM IST
வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் டில்லி சுகாதார அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, இன்று (ஜூன் 26) எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.இதனால் அவர் இன்று மாலை வீடு திரும்ப உள்ளார்.

7:15 PM IST
'அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா'; சுகாதாரத்துறை

'அமெரிக்காவில் தற்போதுவரை, குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' என, அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது

6:45 PM IST
சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28,823 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 20,136 பேர் சிகிச்சையில் உள்ளனர். 730 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:26 PM IST
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 74,622 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 37 பேர் உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

3:18 PM IST
பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவுகிறது

மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இதுவரை பதிவான பாதிப்பு எண்ணிக்கையை விட 40 சதவீதத்திற்கும் மேல் கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனா பதிவாகியுள்ளது.

11:54 AM IST
4 லட்சத்து 91 ஆயிரத்து 855 பேர் பலி

இன்று ( ஜூன் .26ம் தேதி ) காலை ; 11;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 97 லட்சத்து 14 ஆயிரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 91 ஆயிரத்து 855 பேர் பலியாகி உள்ளனர். 52 லட்சத்து 60 ஆயிரத்து 087 பேர் மீண்டுள்ளனர்.

6:44 AM IST
கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியது

இன்று ( ஜூன் .26ம் தேதி ) காலை 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 97 லட்சத்து ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 90 ஆயிரத்து 978 பேர் பலியாகி உள்ளனர். 52 லட்சத்து 54 ஆயிரத்து 966 பேர் மீண்டுள்ளனர்.

5:08 AM IST
படுக்கைகள் அதிகரிப்பு: ஆனால் டாக்டர்கள் இல்லை

'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள டில்லியில், நிலைமையை சமாளிக்க, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போதிய டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.டில்லியில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போர், தனிமைப்படுத்தப் படுகின்றனர். அதனால், மருத்துவப் பணியாளர்களை, கொரோனா பணிக்கு அனுப்ப குடும்பத்தார் தயங்குகின்றனர்.

4:30 AM IST
டில்லியில் ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா

டில்லியில் ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73,780 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 64 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,429 ஆக உயர்ந்துள்ளது.மேலும், ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3328 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 44,765 ஆக அதிகரித்துள்ளது என டில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

3:42 AM IST
பிரேசிலில் கொரோனா பாதிப்பு 12 லட்சத்தை தாண்டியது

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது.பிரேசிலில் ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

2:39 AM IST
பாக்.,கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,92,970 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 044 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 3,903 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

1:36 AM IST
மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 4841 பேருக்கு பாதிப்பு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 4 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 192 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,931 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,661 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 63 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

12:33 AM IST
கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு ; மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்புகளையொட்டி, சுகாதார பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தயாரிப்பு விதிமுறைகளில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


11:31 PM IST
ஆக.,12ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து

நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயங்கும் அனைத்து ரயில்களின் சேவைகளும், ஆக.,12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் நேர அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆக.,12ம் தேதி வரை இயக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஆக.,12 வரை பதிவு செய்யப்பட்ட, அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10:25 PM IST
தாராவியில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா தொற்றுக்கு மேலும் 11 பேர் இன்று பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.தாராவியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,210 ஆக உயர்ந்தது. தாராவியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,021 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,108 ஆக அதிகரித்தது. இம்மாதத்தில் தாராவியில் கொரோனா வளர்ச்சி விகிதம் 1.02 சதவீதமாக குறைந்தது.


9:33 PM IST
ஆந்திராவில் மேலும் 477 பேருக்கு கொரோனா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 477 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது மாநிலத்தில் நோய் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,085 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்தது. 7 பேர் புதிதாக பலியாகினர். இதுவரை மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்தது.

8:32 PM IST
திருப்பதியில் நாளை முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (ஜூன் 26) முதல் நாளொன்றுக்கு மேலும் 3000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

7:45 PM IST
கர்நாடகா, தெலுங்கானாவில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,444 ஆனது.

கர்நாடகாவில் ஒரே நாளில் 173 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,118 ஆக உள்ளது.

6:40 PM IST
சென்னையில் இன்று 1,834 பேருக்கு கொரோனா

சென்னையில் 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், 27,986 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 18,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். 694 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:18 PM IST
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 70,977 ஆக உயர்ந்துள்ளது. இன்று 45 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.-- தமிழக சுகாதாரத்துறை

5:48 PM IST
52 லட்சத்து 690 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .25ம் தேதி ) மாலை 5;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 95 லட்சத்து 60 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 85 ஆயிரத்து 625 பேர் பலியாகி உள்ளனர். 52 லட்சத்து 690 பேர் மீண்டுள்ளனர்.

4:08 PM IST
மதுரையில் 12 பேர் பலி

மதுரையில் இன்று (ஜூன் 25) ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 12 பேர் உயிரிழந்தனர்.

12:18 PM IST
95 லட்சத்து 33 ஆயிரத்து 445 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .25ம் தேதி ) நன்பகல் 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 95 லட்சத்து 33 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 85 ஆயிரத்து 160 பேர் பலியாகி உள்ளனர். 51 லட்சத்து 79 ஆயிரத்து 400 பேர் மீண்டுள்ளனர்.

10:34 AM IST

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

9:33 AM IST
4.7 லட்சம் பேருக்கு கொரோனா

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 16,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 71 ஆயிரத்து 697 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8:31 AM IST

மதுரை பரவை மார்க்கெட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,009 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 24 பேருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து, அந்த சந்தையில் பணியாற்றிய 2 ஆயிரம் பேரை கண்காணிக்கவும், 100 பேரை தனிமைபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

6:39 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 2,865 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 67,468 ஆக உயர்ந்துள்ளது. இன்று 33 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

10:17 AM IST
மருத்துவ உதவியாளர் பலி

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது நபர், திருப்பூரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு 18 ல் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக, திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

9:49 AM IST

செங்கல்பட்டில் மேலும் 46 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிப்பு 4,076 ஆக அதிகரித்துள்ளது

9:46 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:11 AM IST
மீண்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தொடுகிறது

இன்று ( ஜூன் .23ம் தேதி ) நள்ளிரவு; 02;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 92 லட்சத்து 90 ஆயிரத்து 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 77 ஆயிரத்து 178 பேர் பலியாகி உள்ளனர். 49 லட்சத்து 97 ஆயிரத்து 877 பேர் மீண்டுள்ளனர்.

1:25 AM IST
கேரளாவில் புதிதாக 141 பேருக்கு கொரோனா

கேரளாவில் 141 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,503 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 22 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.இன்று மட்டும் மாநிலத்தில் 60 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


12:13 AM IST
மதுரையில் துவங்கியது முழு ஊரடங்கு

வேகமாக பரவும் கொரோனா தொற்றை தவிர்க்க மதுரையில் முழு ஊரடங்கு நள்ளிரவு 12:00 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா தீவிரத்தை உணர்ந்து ஜூன் 30 நள்ளிரவு வரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

11:14 PM IST
2 மீட்டர் லட்சியம், ஒரு மீட்டர் நிச்சயம்: போரீஸ் ஜான்சனின் ஊரடங்கு விதி!

இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் சமூக இடைவெளி விதியை தளர்த்தி வணிகங்களை திறக்க உள்ளனர். அப்போது முடிந்த வரை 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி நிச்சயம் என பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

10:37 PM IST
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்

தேனி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது, காய்கறி,மளிகை, உள்ளிட்ட கடைகள் மதியம் 2 மணி வரை செயல்படும், ஓட்டல்கள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை ஆகியன திறக்க அனுமதியில்லை.கம்பம், தேனி, போடி நாயக்கனூர், கூடலூர், சின்னமனூர் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் இயங்காது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:50 PM IST
கொரோனா தடுப்பு பதஞ்சலி மருந்து: நிறுத்தி வைக்க ஆயுஷ் அமைச்சகம் உத்தரவு

கொரோனா தடுப்பு மருந்து பற்றி விளம்பரம் செய்ய வேண்டாம்; அது பற்றிய விபரங்களை உடன் தெரிவியுங்கள் ' என, யோகா குரு, ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பதஞ்சலி அறிமுகப்படுத்திய கொரோனா தடுப்பு மருந்து பற்றிய விபரங்கள் தெரியவில்லை. அதில், இடம் பெற்றுள்ள மூலிகைககளின் விபரங்களும் தெரியவில்லை.

இது பற்றி, ஆயுஷ் அமைச்சகத்திடம் தெரிவிக்க, பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்து, எந்த மருத்துவமனையில், எந்த நோயாளிக்கு வழங்கி ஆய்வு செய்யப்பட்டது என்ற விபரத்தையும் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஆயுஷ் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறும் வரையில், மருந்து பற்றி விளம்பரம் செய்ய கூடாது என, பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

9:02 PM IST
கோவை அரசு மருத்துவமனை நர்ஸ்சுக்கு கொரோனா:பாதிப்பு எண்ணிக்கை 292 ஆக உயர்வு

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உட்பட, 22 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.அனைவரும் இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 8 ஆண்கள், 4 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

8:30 PM IST
கொரோனா சிகிச்சை: கர்நாடகா தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் குறைப்பு

கர்நாடகாவில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது சுகாதார வசதிகளால் குறிப்பிடப்படும் நோயாளிகளுக்கு ரூ.5200 முதல் ரூ,10,000 வரையும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரூ,10,000 முதல் ரூ. 25,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

8:00 PM IST
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ், இதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் பிரபல யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது: நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். அனைவருமே 100% குணமடைந்துவிட்டனர். கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம் என்றார்.

7:30 PM IST
சீனா கட்டியதை விட 10 மடங்கு பெரிய கொரோனா மருத்துவமனை தயார்

டில்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகள் 10,200 பேரை தங்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையை இந்தோ - திபெத் எல்லை போலீஸின் மருத்துவ பணியாளர்களை கொண்டு உள்துறை அமைச்சகம் அமைத்து வருகிறது. ஒரு லட்சம் சதுர மீட்டரில் அமைய உள்ள இம்மருத்துவமனை சீனா அமைத்ததை விட 10 மடங்கு பெரியதாகும்.

6:48 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,380 பேருக்கு பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 23) 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 24,670 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 18,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.645 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:23 PM IST
தமிழகத்தில் பாதிப்பு 64,603 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் உட்பட 39 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 833 ஆனது. இன்று மட்டும் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

2:32 PM IST
4 லட்சத்து 74 ஆயிரத்து 668 பேர் பலி

இன்று ( ஜூன் .23ம் தேதி ) மதியம்; 1;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 92 லட்சத்து 2 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 74 ஆயிரத்து 668 பேர் பலியாகி உள்ளனர். 49 லட்சத்து 53 ஆயிரத்து 900 பேர் மீண்டுள்ளனர்.

2:06 AM IST
48 லட்சத்து 95 ஆயிரத்து 922 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .22ம் தேதி ) நள்ளிரவு 02;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 91 லட்சத்து 39 ஆயிரத்து 201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 72 ஆயிரத்து 514 பேர் பலியாகி உள்ளனர். 48 லட்சத்து 95 ஆயிரத்து 922 பேர் மீண்டுள்ளனர்.

1:35 AM IST
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது.இங்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 617 ஆக உள்ளது.


12:22 AM IST
ரஷ்யாவில் ஒரே நாளில் 7,600 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,600 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 95 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் நோய் தொற்றுகளால் 95 பேர் பலியாகினர். கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் இதுவரை 8,206 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவில் சராசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்தது தற்போது 8 ஆயிரமாக குறைந்துள்ளது. நாட்டில் தற்போது வரை 344,416 பேர் நோய் பாதிப்புகளில் இருந்து குணமடைந்துள்ளனர்.


11:45 PM IST
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 443 பேருக்கு கொரோனா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 443 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் 5 பேர் பலியாகினர். இதுவரை நோய் தொற்றால் ஆந்திர பிரதேசத்தில் 111 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 83 பேர் குணமடைந்தனர். ஆந்திர மாநிலத்தில் தற்போது வரை 4,826 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் பாதிப்புகளில் இருந்து 4,435 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 44 பேர் வெளி மாநிலத்தையும், 4 பேர் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் மற்ற 392 பேர் மாநிலத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

11:10 PM IST
மைசூருவில் தாய்க்கு கொரோனா ; பிறந்த குழந்தைக்கு இல்லை தொற்று

கர்நாடகாவின் மாண்டியை சேர்ந்த கர்ப்பிணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.10:34 PM IST
கொரோனா மருந்து தயாரிப்பால் எகிறியது கிளென்மார்க் நிறுவன பங்கு மதிப்பு

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிளென்மார்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது.இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இம் மருந்து பங்குச் சந்தையில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை உடனடியாக கணித்து விட முடியாது. இதன் குணப்படுத்தும் தன்மை, நீடித்த ஆற்றல் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி ஒரு நோயாளிக்கு இம்மருந்தின் மூலமான அதிகபட்ச சிகிச்சை செலவு ரூ 12,556 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

9:47 PM IST
தாராவியில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்

மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இதனால் அரசின் நடவடிக்கை பலனளித்ததாக மத்திய சுகாதாரதுறை பாராட்டு தெரிவித்துள்ளது.

9:05 PM IST
நெல்லையில் சோதனைக்கூட டாக்டர், ஊழியர்களுக்கு கொரோனா

கொரோனா சோதனை மைய டாக்டர், ஊழியர்களுக்கு தொற்று பரவியதால் மையம் முழுமையாக செயல்படவில்லை. இன்று பாதிப்பு வெறும் 5 பேர் என தகவல் தெரிவித்தனர்.திருநெல்வேலி லேப்பில் பணியாற்றிய ஒரு டாக்டர், இரு தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. எனவே லேப்பில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். தற்போது லேப்பில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சோதனை நடத்துவதிலும், முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.


8:35 PM IST
பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை ; சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தை பக்தர்கள் இன்றி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் விழாவை நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

8:00 PM IST
நீலகிரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா: விதிமீறிய லாட்ஜ்க்கு சீல்

நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனிடையே விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த லாட்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

7:45 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,487 பேருக்கு பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 22) 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 42,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23,756 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 18, 372 பேர் சிகிச்சையில் உள்ளனர். 623 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

7:25 PM IST
தமிழகத்தில் 62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 22) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆகவும், பலி எண்ணிக்கை 794 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 62,087 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,592 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,19,204 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,178 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:50 PM IST
நாளை நள்ளிரவு முதல் மதுரையில் முழு ஊரடங்கு

சென்னை போல் இன்னொரு முழு ஊரடங்கு மதுரைக்கு தேவை என ஜூன் 20 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மதுரை மாவட்டத்தில் நாளை ( ஜூன் 23 நள்ளிரவு 12:00 மணி முதல் முதல் ஜூன் 30 நள்ளிரவு 12: 00 மணி வரை ஏழு நாள் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். தொடர்ந்து ஊரடங்கு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்படி, மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை டவுன் பஞ்சாயத்து, திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரக பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

1:37 PM IST
90 லட்சத்து 60 ஆயிரத்து 780 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .22ம் தேதி ) மாலை 1;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 90 லட்சத்து 60 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 70 ஆயிரத்து 940 பேர் பலியாகி உள்ளனர். 48 லட்சத்து 47 ஆயிரத்து 018 பேர் மீண்டுள்ளனர்.

9:22 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 196 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:52 AM IST
47 லட்சத்து 92 ஆயிரத்து 450 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் . 21ம் தேதி ) நள்ளிரவு : 02:45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 90 லட்சத்து 23 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 69 ஆயிரத்து 382 பேர் பலியாகி உள்ளனர். 47 லட்சத்து 92 ஆயிரத்து 450 பேர் மீண்டுள்ளனர்.

1:14 AM IST
பாக்கில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலி

பாக்., கில் ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 3,501 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பாக்., கில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,954 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,617 ஆக உள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 67,892 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

12:26 AM IST
கனடாவில் புதிதாக 390 பேருக்கு கொரோனா

கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 390 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 64 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 390 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 101,002 ஆக அதிகரித்தது. நாட்டில் நோய் தொற்றால் நேற்று 64 பேர் பலியாகினர். இதனால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 8,410 ஆக உயர்ந்தது.

11:50 PM IST
கொரோனா தடுப்பூசிக்கான 2 ம் கட்ட பரிசோதனையை தொடங்கியது சீனா

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையை சீன ஆராய்ச்சியாளர்கள் துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையை சீன ஆராய்ச்சியாளர்கள் துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:15 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 88 போலீசாருக்கு கொரோனா

மஹா.,வில் கடந்த 24 மணி நேரத்தில் 88 போலீசாருக்கு கொரோனா உறுதியானது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.புதிதாக கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள போலீசாரையும் சேர்த்து இதுவரை மொத்தம் 4,048 போலீசார் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஒரு போலீசார் பலியாகி உள்ளார். இதையடுத்து மஹாவில் கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

10:31 PM IST
கோவையில் இன்று 15 பேருக்கு கொரோனா

கோவை: கோவையில், கொரோனாவுக்கு பலியான முதியவர் உட்பட, இன்று ஒரே நாளில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை ராமநாதபுரம், சிறுமுகை, காளப்பட்டி, வடசித்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 15 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை சின்னியம்பாளையம், பூமார்கெட், ராஜவீதி, பெரியகடைவீதி, பூமார்கெட், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கோவை காந்திபுரம், நான்கு மற்றும் ஐந்தாவது வீதிகள் அடைக்கப்பட்டன.

10:08 PM IST
டில்லியில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா

டில்லியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 63 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 59,746 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 2,175 ஆனது. இதுவரை 33,013 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:43 PM IST
ஆந்திராவிற்கு பேருந்துகளை இயக்க தயாராகும் டிஎஸ்ஆர்டிசி

கொரோனா ஊரடங்குகளை தொடர்ந்து, தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு விரைவில் பஸ்களை இயக்க டிஎஸ்ஆர்டிசி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


9:03 PM IST
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.49 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.49 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் 13,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,925 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2,27,755 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55.49 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

8:38 PM IST
பிரச்னைகளிலிருந்து மீண்டு வர யோகா உதவும்: சத்குரு

உங்கள் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் இன்று(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சத்குரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம், கடந்த சில மாதங்களாக கொரோனா எனும் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. நம் தலைமுறையில் சந்திக்கும் மிகப்பெரும் சவால் இது. நம் சுற்றுப்புறம் இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருக்கும் போது, நமது உள்நிலை சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.நெருக்கடியான காலங்களில் உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்கள் நெருக்கடிக்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு பிந்தைய காலத்திலும் மனிதர்கள் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகள் தான் சவாலானவை. இதற்கு யோகா ஒன்றே சிறந்த வழி.இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

7:29 PM IST
யோகா பயிற்சியாளர்களுக்கு கொரோனா ஏற்படும் வாய்ப்பு குறைவு: ஆயுஷ் அமைச்சர்

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், யோகா பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு ஆயுஷ் அமைச்சர் அளித்த பேட்டியில், மோடி தலைமையிலான ஆட்சியின் போது நாடு மற்றும் உலகம் முழுவதும் யோகாவை பரப்பியது கொரோனாவை எதிர்த்து போராட பெரியளவில் உதவியது. யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சுவாச அமைப்பை பலப்படுத்தும். இது கொரோனா போன்ற நோய்களுக்கு எதிராக தடையை உருவாக்க உதவுகிறது. மக்கள் இன்றைய தினம் வீட்டிலிருந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் பங்கேற்றனர். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.

6:45 PM IST
சென்னையில் இன்று 1493 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 21) 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 41,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 22,887 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 17,683 பேர் சிகிச்சையில் உள்ளனர். 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:17 PM IST
தமிழகத்தில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 21) ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆகவும், பலி எண்ணிக்கை 757 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 52 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 59,377 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 86 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,92,612 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1:49 PM IST
4 லட்சத்து 66 ஆயிரத்து 901 பேர் பலி

இன்று ( ஜூன் .21ம் தேதி ) மதியம் 1;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 89 லட்சத்து 23 ஆயிரத்து 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 66 ஆயிரத்து 901 பேர் பலியாகி உள்ளனர். 47 லட்சத்து 43 ஆயிரத்து 922 பேர் மீண்டுள்ளனர்.

9:31 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 27 ஆயிரத்து 756 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:44 AM IST
89 லட்சத்து 08 ஆயிரத்து 556 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் . 21ம் தேதி ) காலை: 06:40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 89 லட்சத்து 08 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 66 ஆயிரத்து 266 பேர் பலியாகி உள்ளனர். 47 லட்சத்து 33 ஆயிரத்து 454 பேர் மீண்டுள்ளனர்.

5:50 AM IST
கர்நாடகாவில் மேலும் 416 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,697 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இம்மாநிலத்தில் 182 பேர் 5,391 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 181 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் 3,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.5:18 AM IST
வங்கதேச முன்னாள் கேப்டன் மொர்டாசாவுக்கு கொரோனா

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் மொர்டசா, நஷ்முல் இஸ்லாம், நபீஸ் இக்பால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் தென்பட்ட, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொர்டஷாவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வங்க தேச அணிக்காக அவர், 36 டெஸ்ட், 220 ஒருநாள், 54 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.


4:16 AM IST
கேரளாவில் புதிதாக 127 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதயைடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து 3,039 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு மாநிலத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.


4:00 AM IST
ஒரே நாளில் டில்லியில் 7 ஆயிரத்து 725 பேர் குணமடைந்தனர்

டில்லியில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 725 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.டில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, அங்கு நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 630 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டில்லியில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டில்லியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.


3:22 AM IST
லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த ம.பி., பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

ம.பி.,யில் பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்தலில் அவர் ஓட்டளித்தால், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.ம.பி., மாநிலத்தில், ஜாவாத் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ஓம்பிரகாஷ் சக்லேச்சாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியானது.இந்நிலையில், நேற்று ம.பி.,யில் 3 லோக்சபா உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், கொரோனா பாதிப்புக்குள்ளான எம்.எல்.ஏ.,வும் ஓட்டளித்திருந்தார். இதனையடுத்து ம.பி.,யில் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டளிக்க வந்த எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

2:30 AM IST
பிரிட்டனில் கொரோனா ; தெற்காசிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு பிரிட்டனில் உள்ள மருத்துவ மனைகளில் தெற்காசியாவை சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படவும், பலியாகவும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
எடின்பர்க் பல்கலை ஆய்வில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு 1000 வெள்ளையின மக்களில் 290 பேர் பலியாகின்றனர் என தெரியவந்தது. அதேசமயம், ஒவ்வொரு 1000 தெற்காசிய மக்களில் 350 பேர் பலியாகின்றனர் என தெரியவந்தது. மேலும் தெற்காசிய மக்களின், இறப்பு விகிதமும், தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்தது. பிரிட்டனில் உள்ள தெற்காசியாவை சேர்ந்த நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் நீரிழிவு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது.

1:45 AM IST
மஹா.,வில் 48 மணிநேரத்தில் 140 போலீசாருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 48 மணிநேரத்தில் 140 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


1:33 AM IST
பிரேசிலில் உச்சத்தை எட்டும் கொரோனா

பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 54,771 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.பிரேசிலில் ஒரே நாளில் 1,206 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,954 ஆக உள்ளது. நாட்டில் நோய் தொற்றுக்கு இதுவரை 5,20,000 பேர் வரை குணமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:50 AM IST
சீனாவில் இரண்டாவது அலை வீசும் கொரோனா: புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா உறுதியானது.
சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி வருவதால் தலைநகர் பீஜிங்கில் அவசரநிலை பிகடனப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

12:05 AM IST
கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

கோவையில் இன்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.'கோவையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், ஆண்கள் 43.7 சதவீதம், பெண்கள் 56.3 சதவீதமாகும். ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16.1 சதவீதம், வெளிமாட்டங்களில் இருந்து வந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 29.9 சதவீதம், வெளிமாவட்டங்கள் செல்லாமல் கோவையிலேயே வசித்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 23 சதவீதம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்து பாசிட்டிவ் ஆனவர்கள் 31 சதவீதம் பேர்' என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

11:28 PM IST
வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால் கொரோனா நோயாளி பலி

ராஜஸ்தானின் கோட்டா மருத்துவமனையில், ஏர் கூலரை பயன்படுத்த, தவறுதலாக வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால் கொரோனா பாதித்த 40 வயதான நோயாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11:00 PM IST
ஒருவருக்கு கொரோனா தொற்று : எல்லநள்ளியில் ஊசி தொழிற்சாலை மூடல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - ஊட்டி சாலை, எல்லநள்ளியில் உள்ள தனியார் ஊசி தொழிற்சாலையில், ஒருவருக்கு தொற்று காரணமாக மூடப்பட்டது.

10:27 PM IST
இந்தியாவில் ஒரேநாளில் 1.89 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.89 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

10:02 PM IST
கோவையில் இ-பாஸ் இன்றி ஊழியர்களை பணியமர்த்திய நகை கடைக்கு 'சீல்'

இ-பாஸ் பெறாமல், சென்னையிலிருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்துவந்து, தனிமைப்படுத்தாமல் நேரடியாக பணியமர்த்திய தனியார் நகை கடைக்கு வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்தனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'சென்னையிலிருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்டவர் களை தனிமைப்படுத்தாமல், நேரடியாகக் கடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால், கடைக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும்' என்றனர்.

9:17 PM IST
ஃபேவிஃபிராவிர் மருந்திற்கு இந்தியாவில் ஒப்புதல்

கொரோனா சிகிச்சையில் பயன்படும் ஃபேவிஃபிராவிர் மருந்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இம்மருந்து குறித்து கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், ' இந்தியாவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் மருந்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம். இம்மருந்தினை வழங்குவதன் மூலம் நான்கு நாட்களில் நோயாளியிடம் நல்ல முன்னேற்றத்தினை காண முடியும். லேசான மிதமான பாதிப்பு உள்ளவர்களிடம் 88 சதவீதம் வரை வெற்றி கிடைக்கும். இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து என்பதால் சிகிச்சை முறையும் எளிதானது. நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இம் மருந்தினை விரைவாக கொண்டு சேர்க்க அரசுடன் கிளென்மார்க் நிறுவனம் இணைந்து செயல்படும் இவ்வாறு அவர் கூறினார்.

8:37 PM IST
இந்தியாவின் சர்வதேச விமான சேவை ; ஹர்தீப் சிங் பூரி விளக்கம்

இந்தியாவில் சர்வதேச விமானசேவை எப்போது துவங்கும் என்பது தொடர்பாக விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தெரிவித்தார்.

மற்ற நாடுகள் தங்கள் விமான இடத்தையோ அல்லது எல்லைகளையோ திறந்த பின்னரே சர்வதேச விமான நடவடிக்கைகள் தொடங்கும். சர்வதேச சிவில் விமானப் பயணத்தை மீண்டும் தொடங்குவது குறித்து உறுதியான முடிவு இல்லாத நிலையில், நிர்வகிக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் வெளியேற்றம் மற்றும் திருப்பி அனுப்பும் விமானங்களைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கூறினார்.

8:00 PM IST
இ-பாஸ் இன்றி வருவோரை பிடிக்க கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு

நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருந்த போது, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், வெளிநாடு, பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களால், கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் 13 சோதனைச் சாவடிகளிலும், மாவட்ட எல்லையில் 13 சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாளையார், கணியூர் சோதனை சாவடிகளில் டி.எஸ்.பி., தலைமையிலும், கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இ-பாஸ் இன்றி, முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன,'' என்றார்.

7:23 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 19) 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 21,796 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 17,285 பேர் சிகிச்சையில் உள்ளனர். 559 பேர் உயிரிழந்துள்ளனர்.
7:01 PM IST
தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூன் 20) ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், பலி எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 64 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 56,845 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 85 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,186 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,61,211 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:31 PM IST
46 லட்சத்து 47 ஆயிரத்து 155 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .20ம் தேதி ) மாலை: 04;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 87 லட்சத்து 86 ஆயிரத்து 935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 63 ஆயிரத்து 155 பேர் பலியாகி உள்ளனர். 46 லட்சத்து 47 ஆயிரத்து 155 பேர் மீண்டுள்ளனர்.

12:10 PM IST
87 லட்சத்து 66 ஆயிரத்து 035 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .20ம் தேதி ) நன்பகல்: 12;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 87 லட்சத்து 66 ஆயிரத்து 035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 62 ஆயிரத்து 695 பேர் பலியாகி உள்ளனர். 46 லட்சத்து 27 ஆயிரத்து 883 பேர் மீண்டுள்ளனர்.

10:58 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 048 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:56 AM IST
பிரேசிலில் ஒரே நாளில் 55,209 பேருக்கு கொரோனா

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 55,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10 லட்சத்து 38 ஆயிரத்து 568 ஆனது. 49,090 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரத்து 360 பேர் மீண்டுள்ளனர்.

6:54 AM IST
உலகில் கொரோனாவால் 87 லட்சத்து 50 ஆயிரத்து 990 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .20ம் தேதி ) காலை; 06;50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 87 லட்சத்து 50 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 61 ஆயிரத்து 820 பேர் பலியாகி உள்ளனர். 46 லட்சத்து 20 ஆயிரத்து 378 பேர் மீண்டுள்ளனர்.

4:55 AM IST
'வந்தே பாரத்' திட்டத்தால் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பயன்

கொரோனா ஊரடங்கால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் லட்சக் கணக்கான இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளனர். பாதுகாப்பாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:46 AM IST
அபாயகரமான கட்டத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளில் கொரோனா மிக அதி தீவிரமாக பரவுகிறது என்றும் நாம் புதிய மற்றும் அபாயகரமான ஒரு கட்டத்தில் உள்ளோம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2:39 AM IST
உடுமலையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், எகிப்து நாட்டிலிருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி மூடப்பட்டது. 1,128 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உடுமலையில், மீண்டும் 'கொரோனா' பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.

1:30 AM IST
சீனாவில் 32 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் கடந்த சில தினங்களில் சீனாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் 293 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

12:41 AM IST
கேரளாவில் புதிதாக 118 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒரே நாளில் 118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 2,912 பேர் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இதுவரை மொத்தம் 1,509 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர், இன்னும் 1380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11:39 PM IST
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்

உள்நாட்டு தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு, உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

10:47 PM IST
சிங்கப்பூரில் இன்று மேலும் 142 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இன்று புதிதாக 142 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 41,615 ஆக அதிகரித்தது.நாட்டில் இதுவரை 26 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். மேலும் 32,712 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:16 PM IST
சுகாதார பணியாளர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் குறைப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் தனிமைப்படுத்தம் நாட்களை 7 நாட்களாக குறைத்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

9:30 PM IST
தமிழகம் முழுவதும் பார்சல் மட்டுமே: ஓட்டல் சங்கம் முடிவு

தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் வரும் 30 ம் தேதி வரையில் பார்சல் மட்டுமே வழங்குவது என ஓட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது.

9:04 PM IST
கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு; மேலும் 14 பேர் பாதிப்பு

கோவையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வருகிறது. ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த மேலும் ஏழு பேர் உள்பட மொத்தம் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 'இதே நிலை நீடித்தால் சென்னை போல் கோவையும் கொரோனா மையமாக மாறக்கூடும்' என, மக்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

8:36 PM IST
ஜெர்மனியில் 100 பேரிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை

ஜெர்மனியில் கொரோனா பாதித்தவர்கள் 100 பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படுகிறது.
அந்நாட்டின் மருந்து நிறுவனமான கியூர்வாக் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மனிதர்களிடம் துவக்கி உள்ளது. டுபின்ஜன் பல்கலையில் நடக்கும் இந்த சோதனையில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 பேரிடம் தடுப்பூசி ஆய்வு நடக்கிறது.

8:00 PM IST
ராஜ்யசபா தேர்தலில் பி.பி.இ. கவச உடையுடன் ஓட்டளித்த காங்.எம்.எல்.ஏ.,

ம.பி.யில் இன்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஒட்டளிக்க வந்த காங். எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனா தொற்று பீதியால் பி.பி.இ. எனப்படும் கவச உடையுடன் வந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒட்டளிக்க வந்தனர். அப்போது குணால் சவுத்ரி என்ற காங்.எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அணியும் பி.பி.இ. எனப்படும் கவச உடையுடன் வந்து ஒட்டளித்தார். இவர் ஓட்டளித்துசென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

7:35 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (ஜூன் 19) 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 38,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,098 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 16,699 பேர் சிகிச்சையில் உள்ளனர். 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:09 PM IST
தமிழகத்தில் 55 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 54,449 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 29 பேர் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 30,271 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.-- தமிழக சுகாதாரத்துறை

5:43 PM IST
86 லட்சத்து 9 ஆயிரத்து 679 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .19ம் தேதி ) மாலை ; 05;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 86 லட்சத்து 9 ஆயிரத்து 679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 56 ஆயிரத்து 965 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சத்து 60 ஆயிரத்து 33 பேர் மீண்டுள்ளனர்.

3:38 PM IST
சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வீடு, வீடாக வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கொரோனா அறிகுறி இருந்தால் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

12:20 PM IST
4 லட்சத்து 56 ஆயிரத்து 458 பேர் பலி

இன்று ( ஜூன் .19ம் தேதி ) நன்பகல்; 12;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 85 லட்சத்து 86 ஆயிரத்து 115பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 56 ஆயிரத்து 458 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சத்து 35 ஆயிரத்து 245 பேர் மீண்டுள்ளனர்.

11:24 AM IST

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 04 ஆயிரத்து 711 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10,386 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:47 AM IST
அமெரிக்காவில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 651 பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரத்து 688 பேர் பலியாகி உள்ளனர். 9 லட்சத்து 30 ஆயிரத்து 994 பேர் மீண்டுள்ளனர்.

6:23 AM IST
85 லட்சத்து 70 ஆயிரத்து 227 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .19ம் தேதி ) காலை; 06;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 85 லட்சத்து 70 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 55 ஆயிரத்து 578 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சத்து 09 ஆயிரத்து 255 பேர் மீண்டுள்ளனர்.

4:16 AM IST
ரஷ்யாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி; 18 பேருக்கு பரிசோதனை

ரஷ்யாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3:19 AM IST
அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு?

தமிழக அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், முதல்வர் அலுவலகத்தில், ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2:40 AM IST
டில்லி சுகாதார அமைச்சருக்கு காய்ச்சல் குறையவில்லை

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ள டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று ஓரளவு முன்னேற்றம் கண்டார், ஆனால் அவரது காய்ச்சல் இன்னும் குறையவில்லை என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


2:00 AM IST
மகாராஷ்டிராவில் 3752 பேருக்கு கொரோனா: 100 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 3752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,20,504 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 100 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5,751 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1672 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,838 ஆக அதிகரித்துள்ளது.

1:20 AM IST
இரண்டாவது முறை கொரோனா : முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் உஷார்

இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்படுவதால் முதிய வர்கள், நாள்பட்ட நோயாளிகள் உஷாராக இருக்க வேண்டும்' என சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது.

12:18 AM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்

சென்னையிலும், சுற்றியுள்ள மாவட்டங்களில் சில பகுதிகளிலும், இன்று அதிகாலை முதல், முழு ஊரடங்கு துவங்கியது. அத்தியாவசிய பொருட்கள் சப்ளைக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

11:50 PM IST
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வாய்ப்பு இல்லை ; உத்தவ் தாக்கரே

கொரோனா அச்சுறுத்தலால் மஹாராஷ்டிராவில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தெரிவித்துள்ளார்.

11:14 PM IST
அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதியில்,(சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இந்த நடைமுறை இம்மாதம் 19 முதல் 30ம் தேதி வரை இருக்கும் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


10:51 PM IST
கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கேரளாவில் மேலும் 97 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.கேரளாவின் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,794 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 1,358 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு 21 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு கூறினார்.


10:05 PM IST
தாராவியில் புதிதாக 28 பேருக்கு கொரோனா

மஹா.,வில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் தாராவியில் புதிதாக 28 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

9:05 PM IST
கொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி

உலகில் கொரோனா கட்டுக்குள் வந்தபின், யோகா மேலும் பிரபலமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி 6வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு, வீடியோ வாயிலாக தெரிவித்ததாவது: கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு 'வீட்டுக்குள் யோகா', 'குடும்பத்துடன் யோகா'வை மக்கள் பின்பற்ற வேண்டும்.யோகா நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வலுவான மனதையும், ஆரோக்கியமான உடலையும் அளிக்கும். கொரோனா கட்டுக்குள் வந்த பின், நோய் தடுப்பு, சுகாதாரத்துக்கான கவனம் மேலும் கூடும். எனவே உலகில் யோகா மேலும் பிரபலமாகும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

8:05 PM IST
'என் குழந்தைகளை மிஸ் செய்கிறேன்': அப்ரிடி உருக்கம்

சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாகவும், தனது குழந்தைகளை மிஸ் செய்வதாகவும், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

7:30 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 18) 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 37,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,686 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 16,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7:11 PM IST
தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 52,334 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 40 பேர் உட்பட மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

6:36 PM IST
84 லட்சத்து 6 ஆயிரத்து 660 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .18ம் தேதி ) மாலை; 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 84 லட்சத்து 6 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 51 ஆயிரத்து 958 பேர் பலியாகி உள்ளனர். 44 லட்சத்து 39 ஆயிரத்து 352 பேர் மீண்டுள்ளனர்.

4:49 PM IST
62 லட்சத்து 49 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா சோதனை

இந்தியாவில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 324 பேர் நலம் பெற்றுள்ளனர். 52.96 சதவீதம் பேர் மீளும் சதமாக உயர்ந்துள்ளது. 62 லட்சத்து 49 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடந்துள்ளது. - மத்திய சுகாதார அமைச்சகம்.

3:07 PM IST
ஆத்தூர் புதுப்பேட்டை தனியார் மருத்துவமனை மூடல்

சேலம் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஆத்தூர் புதுப்பேட்டை தனியார் மருத்துவமனையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

11:45 AM IST
4 லட்சத்து 51 ஆயிரத்து 429 பேர் பலி

இன்று ( ஜூன் .18ம் தேதி ) காலை; 11;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 84 லட்சத்து 6 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 51 ஆயிரத்து 429 பேர் பலியாகி உள்ளனர். 44 லட்சத்து 17 ஆயிரத்து 386 பேர் மீண்டுள்ளனர்.

9:33 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 12,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

11:22 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது

11:22 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது

11:22 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 065 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 935 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 2003 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 6 ஆயிரத்து 922 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7:12 AM IST
15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று(ஜூன் 17) ஆலோசனை நடத்த உள்ளார்.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி, குஜராத் உள்ளிட்ட, 15 மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் இன்றும் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, ஊரடங்கு ஆகியவை தொடர்பாக, இந்த மாநிலங்களின் முதல்வர்களின் கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை பிரதமர் அறிவிப்பார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


6:54 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 8 ஆயிரத்து 400. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 132 . 9லட்சத்து 3 ஆயிரத்து 041 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

6:38 AM IST
கொரோனாவால் 82 லட்சத்து 51 ஆயிரத்து 224 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .17ம் தேதி ) காலை: 06;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 82 லட்சத்து 51 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 45 ஆயிரத்து 188 பேர் பலியாகி உள்ளனர். 43 லட்சத்து 02 ஆயிரத்து 787 பேர் மீண்டுள்ளனர்.

5:35 AM IST
சர்வதேச விமான போக்குவரத்து குறித்து அடுத்த மாதம் முடிவு

சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான முடிவுகளை அடுத்த மாதத்தில் தொடங்குவோம் என இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்


இதுகுறித்து ஹர்தீப் சிங் பூரி கூறுகையில் ''வரும் மாதத்தில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது குறித்து முடிவு எடுப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பயணிகள் நம்பிக்கை கொள்வது அவசியம்''என்றார்.

4:35 AM IST
டில்லியில் இன்று 1859 பேர் கொரோனாவால் பாதிப்பு

இன்று 1859 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை டில்லியில் 44,688 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1837 பேர் உயிரிழந்துள்ளனர்.

3:28 AM IST
3 நாட்கள் கட்டாய தனிமை: கர்நாடக அரசு கறார்

சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டல பகுதிகளிலிருந்து வருவோரை, கர்நாடகா அரசு, கட்டாயமாக, மூன்று நாள் தனிமைப்படுத்தி வருகிறது.

2:30 AM IST
ஆகஸ்ட்- செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் நியூயார்க் கவர்னர் தெரிவித்துள்ளார்.மேலும், போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


1:22 AM IST
பிரிட்டனில் 5 பவுண்ட் செலவில் கொரோனா மரணங்களை தடுக்கும் மருந்து

பிரிட்டனில் கொரோனா மரணங்களை 5 பவுண்ட் செலவில் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறுகையில்,' இது மிகப் பெரிய அற்புதமான முன்னேற்றம், நமது விஞ்ஞானிகள் நல்லதொரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்து ஆரம்பித்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இது விலை குறைந்த மருந்து. தயாரிப்பிலும் சிக்கல் இல்லாதது' இவ்வாறு அவர் கூறினார்

12:04 AM IST
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,248 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 8,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 545,458 ஆக அதிகரித்தது.

ரஷ்யாவில் நோய் தொற்றுக்கு நேற்று மட்டும் 193 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவிற்கு 7,284 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 9,767 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,94,306 ஆக உயர்ந்தது. மாஸ்கோ உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நோய் பாதிப்பு குறித்து பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

11:12 PM IST
கொரோனா பரவலால் பீஜிங்கில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் தலைகாட்ட துவங்கி உள்ளதால் நகரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜின்ஃபாடி சந்தையை மையப்புள்ளியாக வைத்து பீஜிங்கில் கொரோனா பரவல் துவங்கி உள்ளது. இதுவரை பீஜிங்கில் 106 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து நகரின் 22 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பீஜிங்கிலிருந்து சிச்சுவான் மாகாணம் சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

10:30 PM IST
தென்கொரிய பரிசோதனை கருவிகளை பயன்படுத்த பரிந்துரை

இந்தியாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது.

10:00 PM IST
பாகிஸ்தான் அமைச்சருக்கு கொரோனா

பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சையத் அமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 16) உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானின் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவரான சையத் அமினுல் ஹக், கடந்த ஏப்.6ம் தேதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்ந்ததை அடுத்து தனிமைப்படுத்தி கொண்டதாக அவர் தெரிவித்தார்.

9:29 PM IST
கோவையில் ஒரே நாளில் 15 பேருக்கு பாதிப்பு

கோவையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயாளி உள்பட 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

8:23 PM IST
கேரளாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,366 ஆக உயர்ந்தது.இதுவரை 1,234 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7:00 PM IST
சென்னையில் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 16) 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18,565 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 15,257 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,019

தமிழகத்தில் இன்று (ஜூன் 16) ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், பலி எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:36 PM IST
81 லட்சத்து 42 ஆயிரத்து 604 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .15ம் தேதி ) மாலை: 05;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 81 லட்சத்து 42 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 39 ஆயிரத்து 755 பேர் பலியாகி உள்ளனர். 42 லட்சத்து 53 ஆயிரத்து 403 பேர் மீண்டுள்ளனர்.

1:16 PM IST
42 லட்சத்து 32 ஆயிரத்து 356 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .16ம் தேதி ) மதியம் 01;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 81 லட்சத்து 20 ஆயிரத்து 087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 39 ஆயிரத்து 228 பேர் பலியாகி உள்ளனர். 42 லட்சத்து 32 ஆயிரத்து 356 பேர் மீண்டுள்ளனர்.

11:18 AM IST

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,364 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,426 பேரும், தேனாம்பேட்டையில் 4,031 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11:17 AM IST

நேற்று இரவு 9 மணி முதல் தற்போது வரை சென்னையில் கொரோனாவுக்கு பாதித்து சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழந்தனர். அரசு மருததுவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனையிலும் 2 பேரும் உயிரிழந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 5 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் உயிரிழப்பு 501ஆக அதிகரித்துள்ளது.

9:16 AM IST
10 ஆயிரத்தை நெருங்கும் பலி

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 013 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 215 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8:59 AM IST

மஹாராஷ்டிராவில் கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் 227 போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 3,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர், 2,187 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 1,388 போலீசார் சிகிச்சையில் உள்ளனர்.

2:09 AM IST
41லட்சத்து 78 ஆயிரத்து 578 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

இன்று ( ஜூன் .15ம் தேதி ) நள்ளிரவு: 02;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 80 லட்சத்து 71 ஆயிரத்து 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 37 ஆயிரத்து 473 பேர் பலியாகி உள்ளனர். 41 லட்சத்து 78 ஆயிரத்து 578 பேர் மீண்டுள்ளனர்.

1:27 AM IST
'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள் மிரட்டல்

ஊட்டியில் உள்ள, 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், கடனை செலுத்த கோரி வாடிக்கையாளர்களை மிரட்டி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையால், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. வியாபாரம் இல்லாததால் வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், கடன் கொடுத்த தனியார் வங்கிகள், கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம், கடன் தொகையை உடனே செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருவதுடன், மிரட்டல் விடுத்து வருகின்றன. இதனால், மகளிர் குழுவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 'கடனை செலுத்த அவர்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்,' என, மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். எனினும்,மிரட்டல் தொடர்கிறது.

வாடிக்கையாளர்கள் கூறுகையில்,'கொரோனா ஊரடங்கால், பெற்ற கடனை குறிப்பிட்ட தேதியில் செலுத்த முடியவில்லை. இயல்பு நிலைக்கு திரும்பியதும் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்துவதாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவித்துள்ளோம். இருந்தாலும், நெருக்கடி கொடுத்து வருவதால், இது குறித்து கலெக்டரிடம் மீண்டும் புகார் தெரிவிக்க உள்ளோம்,' என்றனர்.

12:52 AM IST
முதல்வர்கள் - பிரதமர் இன்றும் நாளையும் ஆலோசனை

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.


12:00 AM IST
அமெரிக்கா போராடுது: புடின் பச்சாதாபம்

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், அமெரிக்கா போராடுவதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, ரஷ்யா வெளியேறி வருவதாகவும், அமெரிக்கா போராடுவதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

11:05 PM IST
ரஷ்யாவில் கொரோனா பலி 7 ஆயிரத்தை கடந்தது

ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,246 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,37,210 ஆக அதிகரித்துள்ளது.மேலும் நேற்று ஒரு நாளில் 143 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,091 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 2,84,539 பேர் குணமடைந்துள்ளனர்.10:30 PM IST
கொரோனா வார்டுகளாக பயன்படும் ரயில் பெட்டிகள்

ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் அவற்றை பல மாநிலங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளன.இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் கொரோனா சிகிச்சை தனிமை வார்டுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பல மாதங்களுக்கு முன்னாலேயே வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது பயன்பாட்டிற்கு வரத் துவங்கி உள்ளன.தற்போது டில்லி அரசால் 54 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உ.பி., யில் 70 ரயில் பெட்டிகளும், தெலுங்கானாவில் 60 ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன.தற்போது டில்லி அரசால் 54 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உ.பி., யில் 70 ரயில் பெட்டிகளும், தெலுங்கானாவில் 60 ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

10:02 PM IST
பாக்.,கில் ஜூலைக்குள் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்

பாகிஸ்தானில் மக்கள் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாததால், ஜூலை இறுதிக்குள் 10 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாக்., திட்டத்துறை அமைச்சர் ஆசாத் உமர் , 'கொரோனா கட்டுப்பாடு நடைமுறைகளை எளிதாக எடுத்துகொண்டதால், ஜூன் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சம் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரிக்க கூடுமென அஞ்சுகிறோம்'இவ்வாறு அவர் கூறினார்.

9:30 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு ரயில்கள் ; டில்லியில் குவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 900 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்களை டில்லிக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் தகவல் தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், 8 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் டில்லிக்கு 500 ரயில் பெட்டிகளை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.ஷாகுர் பஸ்தி பகுதிக்கு 50 ரயில் பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 900 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் ஏ.சி. அல்லாத 160 படுக்கைகள் கொண்ட 10 பெட்டிகளை தனிப்படுத்துவதற்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக ஏ.சி. வசதி கொண்ட ஒரு பெட்டி உட்பட ஆனந்த் விஹார் உள்ளிட்ட மற்ற ரயில் நிலையங்களில் நாளை ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

9:00 PM IST
முதல் கொரோனா: 100 நாட்களைக் கடந்திருக்கிறது தமிழ்நாடு!

முதல் கொரோனா தொற்று ஏற்பட்டு இன்றுடன் 100 நாட்களைக் தமிழ்நாடு கடந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தில் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

8:36 PM IST
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 51.08 % ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 51.08 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 7 ஆயிரத்து 419 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1,69,797 ஆக அதிகரித்துள்ளது.

8:00 PM IST
தெலுங்கானாவில் கொரோனா சோதனை கட்டணம் குறைப்பு

தெலுங்கானாவில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் ஐசிஎம்ஆரால் அங்கீகாரம் செய்யப்பட்ட தனியார் ஆய்வகங்களில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை ஒன்றுக்கான கட்டணத்தை ரூ 2,200 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போன்று தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டண விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்துள்ளார்

7:31 PM IST
சென்னையில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (ஜூன் 15) 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 17,476 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.15,385 பேர் சிகிச்சையில் உள்ளனர். 382 பேர் பலியாகி உள்ளனர்.

7:12 PM IST
தமிழகத்தில் 46 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 15) ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆகவும், பலி எண்ணிக்கை 479 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 54 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 46,504 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 18,403 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,29,002 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய உயிரிழப்புகளில் 32 பேர் அரசு மருத்துவமனையிலும், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,678 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6:21 PM IST
4 லட்சத்து 36 ஆயிரத்து 206 பேர் பலி

இன்று ( ஜூன் .15ம் தேதி ) மாலை: 06;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 80 லட்சத்து 24 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 36 ஆயிரத்து 206 பேர் பலியாகி உள்ளனர். 41 லட்சத்து 44 ஆயிரத்து 545 பேர் மீண்டுள்ளனர்.

4:44 PM IST
சென்னை, காஞ்சி, செங்கபல்பட்டு, திருவள்ளூரில் முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஜூன் 19 நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு*பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,*திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் , திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்*செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்டப்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

1:22 PM IST
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வரும்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தளர்வுகளை குறைத்து மேலும் கட்டுப்பாடுகள் அமபடுத்துவது குறித்து பரிந்துரைத்துள்ளோம்: மருத்துவ நிபுணர்குழு

12:50 PM IST
4 லட்சத்து 35 ஆயிரத்து 697 பேர் பலி

இன்று ( ஜூன் .15ம் தேதி ) நன்பகல்: 12;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 79 லட்சத்து 98 ஆயிரத்து 006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 35 ஆயிரத்து 697 பேர் பலியாகி உள்ளனர். 41 லட்சத்து 29 ஆயிரத்து 371 பேர் மீண்டுள்ளனர்.

10:57 AM IST
3.2 லட்சம் பேருக்கு கொரோனா

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 798 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:19 AM IST
கொரோனாவிலிருந்து 40 லட்சத்து 89 ஆயிரத்து 098 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .14ம் தேதி ) நள்ளிரவு: 02;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 79 லட்சத்து 55 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 34 ஆயிரத்து 278 பேர் பலியாகி உள்ளனர். 40 லட்சத்து 89 ஆயிரத்து 098 பேர் மீண்டுள்ளனர்.

1:11 AM IST
டில்லியில் புதிய உச்சம்; ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா

தலைநகர் டில்லியில், புதிய உச்சமாக ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 56 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 41,182 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 1,327 ஆனது. இதுவரை 15,823 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 24,032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

12:30 AM IST
மஹா.,வில் புதிதாக 3,390 பேருக்கு கொரோனா; 120 பேர் பலி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1.08 லட்சத்தை நெருங்கியது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,07,958 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 120 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 3,950 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 1,632 பேர் குணமாகினர்; 50,978 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.மீண்டுள்ளனர்.

12:00 AM IST
கேரளாவில் 'கொரோனா தேவி'க்கு தினந்தோறும் சிறப்பு வழிபாடு

உலக மக்களுக்கு, பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் கொரோனா வைரசை, தெய்வமாக நினைத்து, கேரளாவில் ஒருவர், தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து, அனிலன் கூறியதாவது:அரசியலமைப்பில் எனக்குள்ள, அடிப்படை உரிமையின் பேரில், கொரோனா வைரசை தெய்வமாக நினைத்து, தினந்தோறும் பூஜைகளை நடத்துகிறேன். மக்களுக்காக உழைக்கும் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், போலீசார், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

11:20 PM IST
மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10:37 PM IST
விமான, ரயில் பயணங்களில் ஆரோக்ய சேது செயலி கட்டாயமல்ல

விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்ய, ஆரோக்ய சேது செயலி கட்டாயம் அல்ல என, மத்திய அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரயில், விமானத்தில் பயணம் செய்வோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை. இந்த செயலியை பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய உறுதி மொழி கடிதத்தை தரலாம். இதையடுத்து தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ், மத்திய அரசின் வழக்கறிஞர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி இவ்வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

10:05 PM IST
சிங்கப்பூரில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா

சிங்கப்பூர் : கொரோனா பாதிப்பு அதிகரித்து சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 347 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 40,197 ஆக அதிகரித்தது. புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் சிங்கப்பூர் குடிமக்கள். மற்ற 345 பேர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.

9:49 PM IST
கொரோனாவில் இருந்து பிழைத்தவருக்கு ஷாக் கொடுத்த மருத்துவமனை 'பில்'

அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த 70 வயது நோயாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை கட்டணமாக 1.1 மில்லியன் டாலர்கள் விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பொதுவாக மருத்துவமனை பில் ஒரு தாள் (பக்கம்) வரும். ஆனால் இவருக்கோ 181 பக்கம் கொண்ட நோட்டு பில்லாக அனுப்பப்பட்டது. அதில் மொத்தமாக 1.1 மில்லியன் டாலர் ( $1,122,501.04) இந்திய மதிப்பில் தோராயமாக 8,35,52,700 ரூபாய் பில் ஆகும். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 9,736 டாலர்கள் எனவும், வென்டிலேட்டர் பயன்படுத்தியதற்காக 82,000 டாலர்கள் மற்றும் , தீவிர சிறப்பு சிகிச்சைகளுக்காக 2 நாட்களுக்கு1 லட்சம் டாலர்கள் என பில் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் அரசின் காப்பீடு புளோருக்கு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.

9:00 PM IST
அமெரிக்காவை விட சிறப்பாக கொரோனாவை கையாள்கிறோம்: புடின்

கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதில் அமெரிக்காவை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புடின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 'நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றை நம்பிக்கையுடனும், குறைந்த இழப்புகளுடனும் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வருகிறோம். ஆனால் அமெரிக்காவில் அது நடக்கவில்லை. ரஷ்ய அரசியலமைப்பு, கொரோனா நெருக்கடியை அமெரிக்காவை விட சிறப்பாக கையாண்டு வருகிறது என்றார்.

8:31 PM IST
நாட்டில் கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் 50% ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்பவர்கள் விகிதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 62 ஆயிரத்து 378 பேர் மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பிடியிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 50.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நோய் பாதிப்புக்குள்ளானவர்களில் பாதி பேர் குணமடைவது தெரிகிறது.

8:00 PM IST
2 மாதங்களுக்கு பிறகு சீனாவில் மீ்ண்டும் பரவும் கொரோனா

சீனாவில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று உறுதியானது.

புதிதாக தொற்று ஏற்பட்ட 57 பேரில் 36 பேர் பீஜிங்கை சேர்ந்தவர்கள் என்றும் தொற்று உள்ளூர் நபர்களிடமிருந்து பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 83,132 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏற்படாத நிலையில் பலி எண்ணிக்கை 4,634 ஆக நீடிக்கிறது.

7:30 PM IST
கொரோனாவிற்கு விரைவில் தடுப்பு மருந்து ; நிதின் கட்கரி நம்பிக்கை

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு விஞ்ஞானிகள் விரைவில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் தொற்று நோய்க்கு எதிராக போராடி கொண்டிருக்கின்றன. நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் சோதனை முயற்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகளும் இரவு பகலாக தீவிரமாக களமிறங்கி, பல்வேறு ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்கள் கவலைபட வேண்டாம். இவ்வாறு கூறினார்.

6:45 PM IST
சென்னையில் மேலும் 1,415 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (ஜூன் 14) 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14,667 பேர் சிகிச்சையில் உள்ளனர். 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:19 PM IST
தமிழகத்தில் 45 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 44,661 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 31 பேர் உட்பட மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

5:11 PM IST
4 லட்சத்து 32 ஆயிரத்து 894 பேர் பலி

இன்று ( ஜூன் .14ம் தேதி ) மாலை: 05;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 78 லட்சத்து 97 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 32 ஆயிரத்து 894 பேர் பலியாகி உள்ளனர். 40 லட்சத்து 57 ஆயிரத்து 511 பேர் மீண்டுள்ளனர்.

11:44 AM IST
24 மணி நேரத்தில் 1,32,151 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .13ம் தேதி ) காலை: 11;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 78 லட்சத்து 72 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் பலியாகி உள்ளனர். 40 லட்சத்து 42 ஆயிரத்து 466 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,32,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11:07 AM IST
ராயபுரத்தில் 5,056 பேருக்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி பகுதியில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி ராயபுரத்தில் 5,056 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 3,928 பேரும், தேனாம்பேட்டையில் 3,652 பேரும், கோடம்பாக்கத்தில் 3,267 பேரும், திருவிக நகரில் 2772 பேரும், அடையாறில் 1,725 பேரும், வளசரவாக்கத்தில் 1,338 பேரும், திருவொற்றியூரில் 1,113 பேரும், அம்பத்தூரில் 1,058 பேரும், மாதவரத்தில் 814 பேரும், ஆலந்தூரில் 593 பேரும், சோழிங்கநல்லூரில் 560 பேரும், பெருங்குடியில் 551 பேரும், மணலியில் 434 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9:37 AM IST
3.20 லட்சம் பேருக்கு கொரோனா

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:14 AM IST
ஜூன் 15 ல் இந்தியா வரும் அமெரிக்க வெண்டிலேட்டர்கள்

அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3:38 AM IST
பாக்.,கில் கொரோனாவுக்கு 2,551 பேர் பலி

பாகிஸ்தானில், ஒரே நாளில், 6,472 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 2,551 பேர் பலியாகி உள்ளனர்.அண்டை நாடான பாகிஸ்தானில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 29 ஆயிரத்து, 850 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், இதுவரை இல்லாத வகையில், 6,472 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 405 ஆக உயர்ந்துள்ளது.

2:45 AM IST
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: பீஜிங்கில் சந்தைகள் மூடல்

சீனாவின் பீஜிங்கில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சந்தைகள் மூடப்பட்டன.இந்நிலையில் புதிதாக 12 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. அதில் 6 தொற்றுகள் பீஜிங்கில் கண்டறியப்பட்டன. இதையடுத்து நகரில் உள்ள மொத்த விற்பனை சந்தை ஷின்பாடி உட்பட அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன. பீஜிங்கில் புதிதாக இறக்குமதியான சாலமன் மீனில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் கடைக்காரர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சந்தையில் வைரஸ் கண்டறியப்பட்டதால் தொடர்புடைய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.2:11 AM IST
திருநெல்வேலியில் நகைகடை ஊழியர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 15 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மும்பையில் இருந்து வந்த ஒருவருக்கும் கத்தார் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.திருநெல்வேலி, நெல்லையப்பர் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநகராட்சியினர் அங்கு கிருமிநாசினி தெளித்தனர். வரும் 15 வரை கடையை திறக்க கூடாது என சீல் வைக்கப்பட்டது.


1:15 AM IST
தூத்துக்குடி பயிற்சி டாக்டர்கள் உள்பட 28 பேருக்கு கொரோனா

துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 28 பேருக்கும், மும்பையில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியானது. துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட பயிற்சி மருத்துவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர்.

12:37 AM IST
கேரளாவில் புதிதாக 85 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து கேரளாவில் இன்று புதிதாக 85 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதையொட்டி, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்தது.கேரளாவில், 1,045 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் வீடுகள், கண்காணிப்பு மையங்கள் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,35,418 பேர் கண்காணிக்கப்பட்டனர். மேலும் 1,989 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.


11:43 PM IST
கனடாவில் புதிதாக 415 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று அதிகரித்து கனடாவில் மேலும் 415 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 55 பேர் பலியாகினர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கனடாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,368 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நோய் பாதிப்புகளில் சிக்கி மேலும் 55 பேர் பலியாகினர். கனடாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,105 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்புகளில் இருந்து இதுவரை 59,333 பேர் குணமடைந்துள்ளனர்.


10:50 PM IST
கொரோனாவிலிருந்து அப்ரிடி மீள வேண்டுகிறேன்: கம்பீர்

பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள வேண்டுகிறேன் என, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

10:12 PM IST
கொரோனா தடுப்புக்கு மைக்ரோ திட்டம்:சென்னை மாநகராட்சி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சி மைக்ரோ திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து உள்ளார்.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மைக்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் படி 15 மண்டலங்களில் 200 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னையில் 11,500 பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துவர் . நோய் தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

9:45 PM IST
டில்லி கவர்னர், முதல்வருடன் அமித் ஷா நாளை ஆலோசனை

டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஜூன் 14) ஆலோசனை நடத்துகிறார்.

9:08 PM IST
கோவையில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா

கோவையில் இன்று ஒரே நாளில், 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

8:22 PM IST
மஹா.,வில் தனியார் கொரோனா சோதனை மையங்களில் கட்டணம் குறைப்பு

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து மாநிலத்தில் தனியார் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

7:49 PM IST
கொரோனா நிலை: அரசுக்கு எதிராக நேபாளத்தில் போராட்டம்

நேபாளத்தில் கொரோனா நிலைமையை அரசு கையாளும் விதத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 273 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.இந்நிலையில் கொரோனா நிலையை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இவ்விஷயத்தில் அரசு கையாளும் முறையை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் காட்மாண்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7:00 PM IST
அவசர காலத்தை எதிர்கொள்ள சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுரை

அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மத்திய சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து கொரோனா தடுப்புநடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார்.


நாளை அவசர ஆலோனை:தமிழகம், மகாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவா ஆகியோரிடம்,நோயாளிகளுக்கான பரிசோதனை , படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து நாளை (14ம் தேதி) அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என கூறப்படுகிறது.

6:30 PM IST
சென்னையில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 13) 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,947 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 14,180 பேர் சிகிச்சையில் உள்ளனர். 316 பேர் உயிரிந்துள்ளனர்.

6:13 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேர் பாதிப்பு, 30 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 42,687 ஆக உயர்ந்துள்ளது. இன்று 30 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

3:54 PM IST
இரவு ஊரடங்கை கடுமையாக்குங்கள்: மத்திய அரசு

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு.

11:35 AM IST


திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 89 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், ஆவடியில் 15 பேரும், வில்லிவாக்கத்தில் 11 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதனையடுத்து, அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,832 ஆக அதிகரித்துள்ளது.

11:30 AM IST
77 லட்சத்து 40 ஆயிரத்து 505 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .13ம் தேதி ) காலை: 11;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 77 லட்சத்து 40 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 28 ஆயிரத்து 342 பேர் பலியாகி உள்ளனர். 39 லட்சத்து 66 ஆயிரத்து 566 பேர் மீண்டுள்ளனர்.

11:27 AM IST

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.அதன்படி அதிகபட்சமாக ராயபரம் மண்டலத்தில் 4,821 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 3,781 பேரும், தேனாம்பேட்டையில் 3,464 பேரும், கோடம்பாக்கத்தில் 3,108 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9:27 AM IST
இந்தியாவில் 8,884 பேர் பலி
சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 08 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 330 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 386 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:58 AM IST
சென்னையில் கொரோனா தடுக்க 192 ஆம்புலன்ஸ்களில் சேவை

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, வெளிமாவட்டங்களிலிருந்து, 192 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சேர்த்து, 80 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், சுழற்சி முறையில், 240 ஓட்டுனர்கள், 120 அவசர சிகிச்சை உதவியாளர்கள் பணியில் உள்ளனர்

5:00 AM IST
ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பக்தர்கள்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் பலர் தரிசனம் கிடைக்காமல் நிராசையுடன் செல்கின்றனர்.

திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3,000 தரிசன டிக்கெட்டுகள் 'ஆன்லைன்' மூலமும் 3,000 டிக்கெட்டுகள் நேரடி முன்பதிவு டோக்கன்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைன் டிக்கெட்டுகள் ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரடி தரிசன டோக்கன்கள் ஜூன் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டது.தரிசன டோக்கன்கள் 17ம் தேதி வரை வழங்கப்பட்டு விட்டதை தெரிவித்தனர்.அத்தனை நாட்கள் திருப்பதியில் தங்க முடியாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


4:18 AM IST
கொரோனா சிகிச்சை பெற்று 39 லட்சம் பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியுள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது.கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 830-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

3:17 AM IST
அமெரிக்காவில் 21 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது.உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா தொற்றில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

2:31 AM IST
சித்த மருத்துவ சிகிச்சையில் 30 பேர் குணமடைந்தனர்

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், 30 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.சென்னையில், கொரோனா பாதித்தவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா இணைந்து அளிக்கும், கூட்டு மருத்துவ சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது.1:53 AM IST
பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 1,239 பேர் பலி

பிரேசில் நாட்டில் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நேற்று கொரோனாவுக்கு 30,412 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 806,000 ஆக அதிகரித்துள்ளது.பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,058 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,97,000 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


1:15 AM IST
கேரளாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதியானது

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2224 ஆக உயர்ந்தது. கேரளாவில் 128 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

12:30 AM IST
டில்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது: மாநில அரசு அறிவிப்பு

டில்லியில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

12:00 AM IST
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 258 பேருக்கு கொரோனா

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 258 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,85,674 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் பலியானவர்களின் விகிதம் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 8 பேர் பலியாகினர். ஜெர்மனியில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,763 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புகளில் இருந்து 1.71 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


11:34 PM IST
குருவாயூர் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் நாளை (ஜூன் 13) முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை கேரள அரசும் ஏற்பதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
10:46 PM IST
மஹா.,வில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது

மஹாராஷ்டிராவில் புதிதாக 3,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது. அங்கு இதுவரை 1,01,141 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.இன்று புதிதாக 127 பேர் உயிரிழந்ததையடுத்து. மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்தது. புதிதாக 1,718 பேர் குணமடைந்ததையடுத்து, மாநிலத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 47,793 ஆக உயர்ந்தது.

10:08 PM IST
உக்ரைன் அதிபரின் மனைவிக்கு கொரோனா

உக்ரைன் அதிபர் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.உக்ரைன் நட்டின் அதிபராக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளார். இவரது மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

9:17 PM IST
மாநில முதல்வர்களுடன் 16,17 ம் தேதிகளில் மோடி ஆலோசனை

வரும் 16 மற்றும் 17 ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


8:27 PM IST
மஹாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா உறுதி

மஹாவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சமூக நீதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான தனன்ஜேமுன்டேக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே தெரிவித்தார். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அவருக்கு அறிகுறி எதுவும் தென்படாமல் இருந்தது. கொரோனா தொற்று உறுதியானதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உதவியாளர்கள் டிரைவர், சமையல்காரர் என 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

7:49 PM IST
கோவையில் இருவருக்கு கொரோனா

கோவையில், இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விமானத்தில் கோவை வந்த, 29 மற்றும் 52 வயது நபர், இருவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மலேசியாவில் இருந்து திருப்பூர் வந்த, மூன்று பேர், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்; இவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடக்கிறது.

7:11 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 12) 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,723 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 13,906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:19 PM IST
தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 40,698 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 22,047 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். -- தமிழக சுகாதாரத்துறை

5:36 PM IST
4 லட்சத்து 24 ஆயிரத்து 365 பேர் பலி

இன்று ( ஜூன் .12ம் தேதி ) மாலை; 05;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 76 லட்சத்து 24 ஆயிரத்து 055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 24 ஆயிரத்து 365 பேர் பலியாகி உள்ளனர். 38 லட்சத்து 62 ஆயிரத்து 299 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 4 வது இடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா என பட்டியலில் டாப்பில் உள்ளது.

12:04 PM IST
38 லட்சத்து 43 ஆயிரத்து 309 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .12ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 75 லட்சத்து 98 ஆயிரத்து 927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 23 ஆயிரத்து 869 பேர் பலியாகி உள்ளனர். 38 லட்சத்து 43 ஆயிரத்து 309 பேர் மீண்டுள்ளனர்.

10:09 AM IST
ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனாமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

6:01 AM IST
சென்னையில் 191 கர்ப்பிணியருக்கு கொரோனா

சென்னையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான, 191 கர்ப்பிணியர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5:36 AM IST
நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் குழந்தை பிறப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 80 தினங்களில் 29,723 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 628 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,திருநெல்வேலி மாவட்டத்தில் 18,518 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 471 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறுகையில்,தற்போது ஆயிரத்து 100 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. 72 வென்டிலேட்டர் வசதி உள்ளது. பிளாஸ்மா சிகிச்சைக்கும் தயாராக உள்ளோம். இங்கு 509 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

5:00 AM IST
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


4:13 AM IST
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது.“ ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 2லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

3:15 AM IST
வங்கதேசத்தில் ஒரே நாளில் 3,187 பேருக்கு கொரோனா

வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

2:30 AM IST
3 மாதங்கள் சம்பளம் வழங்கவில்லை: டில்லி டாக்டர்கள் புகார்

டில்லி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

கொரோனா உலகையே மிரட்டி வரும் வேளையில் இந்தியாவிலும் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கள் உயிரை பணையம் வைத்து நாட்டில் லட்சக்கணக்கான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டில்லி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் ரெசிடென்ட் டாக்டர்களுக்கு கடந்த மார்ச் முதல் சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

2:00 AM IST
கல்லூரி தேர்வுகள் ரத்து: ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசாவில் நடத்தப்படாமல் இருக்கும் இளநிலை, முதுநிலை கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளது.இந்நிலையில் ஒடிசாவில், எஞ்சியுள்ள அனைத்து இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறவித்துள்ளது. தேர்வு முடிவுகள் பல்கலை., மானிய குழு எடுக்கும் முடிவின் படி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

1:15 AM IST
பிரிட்டனில் மீண்டு வரும் தொழில் செயல்பாடுகள்

பிரிட்டனில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தொழில் செயல்பாடுகள் மீண்டும் இயக்கத்திற்கு வரத் துவங்கி உள்ளது.

12:28 AM IST
சென்னையில் 236 கொரோனா பலி மறைப்பு: அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த 236 பேர் கணக்கிற்கே வராத தகவல் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஜூன் 8 நிலவரப்படி சென்னையில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 224. இது தமிழக சுகாதாரத்துறை சொல்லும் கணக்கு.

ஆனால், சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இறக்கும் கொரோனா நோயாளிகள் பற்றிய தகவல்கள் மொத்த பலி கணக்கில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைக்கின்றன.இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்ட போது, ''இறப்புகளை மறைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல; பலி எண்ணிக்கையை திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.''

12:09 AM IST
பெயிலில் வந்த கொரோனா நோயாளி ; போலீசில் சிக்கிய பரிதாபம்

ஹரியானாவில் கொரோனா பாதித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியது. நோய் குறித்து அவர் தப்பித்து செல்ல முயன்று போலீசிடம் சிக்கி கொண்ட கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அந்த சிறை டி.எஸ்.பி., தரம்பீர் சிங் கூறுகையில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டவர். இந்த வாரம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியானது.அதனால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு கோர்ட் பெயில் கொடுத்ததால் அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் பகுதியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் திடீரென தப்பியோடிவிட்டார். அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விரைவில் பிடிப்போம். இவ்வாறு கூறினார். இந்நிலையில் நேற்று மாலை தப்பியோடிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்ததாக தகவல் வெளியானது.

11:00 PM IST
இமாச்சலில் புதிதாக 7 பேருக்கு கொரோனா

இமாச்சல பிரதேசத்தில் இன்று புதிதாக 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரதுறை சிறப்பு செயலாளர் நிபூன் ஜிண்டால் கூறுகையில், மாநிலத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இமாச்சலில் கொரோனா பாதிப்புக்கு 459 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 259 பேர் குணமடைந்துள்ளனர்.

10:29 PM IST
கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் இன்று புதிதாக 473 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிதாக 473 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 97,328 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவில் நோய் பாதிப்புக்கு புதிதாக 64 பேர் பலியாகினர். இதனால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 7,972 ஆக உயர்ந்தது. மேலும் சிகிச்சை பெற்று இதுவரை 57,144 பேர் குணமடைந்துள்ளனர்.

9:45 PM IST
மஹா.,வில் புதிய உச்சம்; ஒரே நாளில் 3,607 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3,607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது.

இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 11) மட்டும் 3,607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 97,648 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 152 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்தது. 46,078 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 47,980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,562 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

9:15 PM IST
கொரோனாவுக்கான முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகம்

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகமாகி உள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு 'அவிஃபாவிர்' என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இம்மருந்தினை உற்பத்தி செய்துள்ளது. ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் மிக குறைந்த சமயத்திலேயே, அதாவது சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இம்மருந்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

8:35 PM IST
மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆ்ர்.கருவிகள் தமிழகம் வருகை

தென் கொரியாவில் இருந்து மேலும் ஒருலட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

8:12 PM IST
கிராமங்களை விட நகரங்களில் கொரோனா பரவும் ஆபத்து அதிகம்

கிராமங்களை விட நகரங்களில் கொரோனா பரவும் ஆபத்து 1.09% அதிகம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர்., அமைப்பின் பேராசிரியர் பார்கவா கூறியதாவது: பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளி, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது அவசியம். கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பை மாநில அரசுகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

7:09 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13,808 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளனர். 13,310 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 279 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:21 PM IST
தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று 23 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

6:01 PM IST
74 லட்சத்து 85 ஆயிரத்து 802 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் .11ம் தேதி ) மாலை: 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 74 லட்சத்து 85 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 19 ஆயிரத்து 540 பேர் பலியாகி உள்ளனர். 38 லட்சத்து 590 பேர் மீண்டுள்ளனர்.

4:44 PM IST
இந்தியாவில் 1.41 லட்சம் பேர் மீண்டனர்

1.41 லட்சம் பேர் இந்தியாவில் குணம் அடைந்துள்ளனர். ஒரு லட்சம் மக்களுக்கு பாதிப்பு என்ற விகிதம் பார்க்கையில் இந்தியாவில் மிக குறைவானவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீளுவோர் 49.2 சதவிகிதமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. - பல்ராம் பகர்வா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக டைரக்டர் ஜெனரல்.

2:45 PM IST
கோவையில் மேலும் இருவருக்கு கொரோனா

சென்னையில் இருந்து கோவை வந்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபருக்கு கடந்த 8 ம் தேதி கொரோனா உறுதியானது. அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவருடன் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் வசித்த தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தும்பணி நடந்தது.

2:30 PM IST
ஊட்டியில் மேலும் இருவருக்கு கொரோனா

சென்னையில் இருந்து ஊட்டி திரும்பிய கர்ப்பிணி உள்ளிட்ட இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11:44 AM IST
37 லட்சத்து 78 ஆயிரத்து 5371 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .11ம் தேதி ) காலை: 11;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 74 லட்சத்து 59 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 19 ஆயிரத்து 041 பேர் பலியாகி உள்ளனர். 37 லட்சத்து 78 ஆயிரத்து 537 பேர் மீண்டுள்ளனர்.

10:23 AM IST
8 ஆயிரத்தை தாண்டியது பலி


இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 86 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 029 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 357 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:20 PM IST
தமிழகத்தில் புது உச்சம்

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 36,841 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,933 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30,850 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,085 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1:22 PM IST
போலீஸ் ஸ்டேசன் மூடல்

திருவள்ளூரில் இன்று மேலும் 88 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,564 ஆக அதிகரித்துள்ளது. பொன்னேரி போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது.

12:55 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(ஜூன் 10) மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,285 ஆக அதிகரித்துள்ளது.

10:56 AM IST
சென்னையில் பாதிப்பு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவினால் பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில், 4,192 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 3,192 பேரும், திருவிக நகரில் 2351 பேரும், அண்ணா நகரில் 2178 பேரும், தேனாம்பேட்டையில், 2846 பேரும், கோடம்பாக்கத்தில் 2656 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9:54 AM IST
இந்தியாவில் ஒரே நாளில் 9,985 பேருக்கு கொரோனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:05 AM IST
35 லட்சத்து 82 ஆயிரத்து 158 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .9ம் தேதி ) நள்ளிரவு : 02;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 72 லட்சத்து 75 ஆயிரத்து 409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 11 ஆயிரத்து 871 பேர் பலியாகி உள்ளனர். 35 லட்சத்து 82 ஆயிரத்து 158 பேர் மீண்டுள்ளனர்.

1:42 AM IST
என்ன செய்ய போகிறீர்கள்? இம்ரான் அரசுக்கு கோர்ட் உத்தரவு

பாகிஸ்தானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும் என இம்ரான் அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், 'நாட்டில், கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதை, அரசு, சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கை மற்றம் சட்டம் பற்றி தெரிவிக்க வேண்டும் ' என, பிரதமர், இம்ரான் கான் தலமையிலான அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

12:41 AM IST
கேரளாவில் புதிதாக 91 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கான பலி இதுவரை 16 ஆக உள்ளது.இதில் 51 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 27 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சுகாதாரப் பணியாளர்களும் அடக்கம். கேரளாவில் இதுவரை மொத்தம் 848 பேர் குணமடைந்தனர். கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாக 10 பகுதிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவற்றின் மொத்த எண்ணிக்கை 158 ஆக உள்ளது.


12:05 AM IST
நாமே தீர்வாக மாறுவோம்

நாம் இணைந்து உழைத்தால் பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம் நாமே தீர்வாக மாறுவோம் என மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம்.

தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே... வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்! இணைந்து மீட்போம் சென்னையை என பதிவிட்டுள்ளார். மேலும் 6369811111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

11:40 PM IST
தெலுங்கானாவில் ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தாக்கம் அதிகரித்து தெலுங்கானாவில் நேற்று 92 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியாகினர். 25 மாவட்டங்களில் பாதிப்புகளே இல்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு நோய் பரவியுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 5 பேர் பலியானதுடன் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது. இதுவரை 1863 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:00 PM IST
அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா அரிதாகவே பரவும்

அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா அரிதாகவே பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி மரியா வான் கொக்கோவ், ' அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஆய்வு செய்ததில் தொற்று பரவியதாக கண்டறியப்படவில்லை என்றும், அப்படி பரவிய நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடந்துள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் மூலம் ஏன் பரவுவதில்லை என்பதை விளக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

10:26 PM IST
மஹா.,வில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்துள்ளது; மும்பையில் மட்டும் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இன்று(ஜூன் 9) மட்டும் 2,259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது. அங்கு இதுவரை 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,289 ஆக அதிகரித்தது. கொரோனாவிலிருந்து இன்று 1,664 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,639 ஆனது. 47,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9:48 PM IST
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 171 பேர் பலி

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8,595 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 171 பேர் பலியாகினர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் 171 பேர் பலியாகினர். இதையொட்டி மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 6,142 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் 2,42,397 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:00 PM IST
மும்பையில் இதுவரை 1,871 போலீசாருக்கு கொரோனா

மும்பையில் இதுவரை 1,871 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர். மாநில ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் 82 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மும்பை போலீசாரில் 853 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.

8:10 PM IST
கோவையில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவையில், புற்றுநோய் பாதித்தவர் உட்பட இன்று ஒரே நாளில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

7:37 PM IST
அன்பழகனுக்கு மருந்து அனுப்பி தமிழிசை உதவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும் தெலுங்கானா கவர்னருமான தமிழசை சவுந்தரராஜன் மருந்து அனுப்பி உதவி உள்ளார்.

7:00 PM IST
சென்னையில் 1,234 பேருக்கு கொரோனா

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6:45 PM IST
தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூன் 9) ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 36 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 34,914 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 13,219 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,21,171 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 18,325 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:36 PM IST
கெஜ்ரிவாலுக்கு கொரோனா இல்லை

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

5:45 PM IST
35 லட்சத்து 59 ஆயிரத்து 421 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .9ம் தேதி ) மாலை: 05;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 72 லட்சத்து 24 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 09 ஆயிரத்து 762 பேர் பலியாகி உள்ளனர். 35 லட்சத்து 59 ஆயிரத்து 421 பேர் மீண்டுள்ளனர்.

4:48 PM IST
சென்னையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி

கொரோனா பாதிப்புக்கென சென்னையில் உள்ளவர்கள் 044-40067108 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவை பெறலாம் இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமுமின்றி பெறுவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


12:21 PM IST
4 லட்சத்து 08 ஆயிரத்து 744 பேர் பலி

இன்று ( ஜூன் .9ம் தேதி ) நன்பகல் : 12;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 72 லட்சத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 08 ஆயிரத்து 744 பேர் பலியாகி உள்ளனர். 35 லட்சத்து 36 ஆயிரத்து 977 பேர் மீண்டுள்ளனர்.

2:10 AM IST
71 லட்சத்து 61 ஆயிரத்து 279 பேர் கொரோனாவால் பாதிப்பு

இன்று ( ஜூன் .8ம் தேதி ) நள்ளிரவு: 02;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 71 லட்சத்து 61 ஆயிரத்து 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 07 ஆயிரத்து 210 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து 99 ஆயிரத்து 246 பேர் மீண்டுள்ளனர்.

1:00 AM IST
தலைமைச் செயலகத்தில் 70 பேருக்கு கொரோனா?

சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் அச்சத்துடனே, அலுவலகம் வந்து செல்கின்றனர்.

12:29 AM IST
டில்லியில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா

டில்லியில் ஒரே நாளில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,943 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 874 பேர் பலியாகி உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 17,712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11,357 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

12:00 AM IST
மஹா.,வில் புதிதாக 2,553 பேருக்கு கொரோனா; 109 பேர் பலி

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; புதிதாக 109 பேர் பலியாகினர்.மாநிலத்தில் மொத்த பாதிப்பு 88,528 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 109 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்தது. கொரோனாவிலிருந்து இன்று 1,661 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40,975 ஆனது. 44,374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11:17 PM IST
ஓமனில் புதிதாக 604 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து ஓமனில் புதிதாக 604 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 6 பேர் பலியாகினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,486 ஆக உயர்ந்தது. நோய்தொற்றால் 6 பேர் பலியானதையொட்டி மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் ஓமன் நாட்டையும் மற்றவர்கள் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் இன்று 2,697 பேருக்க கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

10:49 PM IST
சவுதியில் புதிதாக 3,369 பேருக்கு கொரோனா

சவுதியில் மேலும் 3,369 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 34 பேர் பலியாகினர். இதனால் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105,283 ஆக அதிகரித்தது. இதுவரை 746 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றில் இருந்து புதிதாக 1707 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாட்டில் இதுவரை 74,524 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:00 PM IST
நெல்லை ஆவின், சிறை அதிகாரிகளுக்கு கொரோனா

திருநெல்வேலி:நெல்லை ஆவின் பால்பண்ணை அதிகாரி, மத்திய சிறை வார்டன் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆவின் பால் பண்ணையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மத்திய சிறையில் கைதிகள் இருவருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில்வார்டன் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

9:19 PM IST
மதுரையில் முதன்முறையாக முதியவருக்கு பிளாஸ்மா சிகிச்சை

சென்னையை தொடர்ந்து மதுரையில் முதன்முறையாக 72 வயது முதியவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.டீன் கூறுகையில், 'இது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை. முதியவருக்கு நல்ல பலனை தந்துள்ளது. அவர் விரைவில் குணமடைந்துவிடுவார். இதுவரை இருவர் மட்டுமே பிளாஸ்மா தானம் தந்துள்ளனர். ஏற்கனவே குணமடைந்த மற்றவர்களும் தானம் செய்ய முன்வரலாம். ' என்றார்.

8:45 PM IST
தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று

மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 7 நாட்களாக நோய் தொற்றால் யாரும் பலியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:05 PM IST
சென்னையில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (8 ம் தேதி) 1,149 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மட்டும் இன்று (8 ம் தேதி) 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் இது வரை 224 பேர் உயிரிழந்துள்ளனர்.6:50 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் இன்றும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 17 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டில்லியில் இருந்தும், 22 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் ஹரியானாவில் இருந்தும், 6 பேர் டில்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5:14 PM IST
4 லட்சத்து 06 ஆயிரத்து 549 பேர் பலி

இன்று ( ஜூன் .8ம் தேதி ) மாலை : 05;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 71 லட்சத்து 13 ஆயிரத்து 020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 06 ஆயிரத்து 549 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து 72 ஆயிரத்து 109 பேர் மீண்டுள்ளனர்.

4:22 PM IST
டில்லி முதல்வருக்கு கொரோனாவா ?

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் அவர் உடல் நலத்தில் முழுக்கவனம் எடுத்து கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

12:13 PM IST
34 லட்சத்து 62 ஆயிரத்து 185 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் .8ம் தேதி ) நன்பகல் : 12;05மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 70 லட்சத்து 92 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 06 ஆயிரத்து 207 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து 62 ஆயிரத்து 185 பேர் மீண்டுள்ளனர்.

9:26 AM IST

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 094 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:16 AM IST
34 லட்சத்து 50 ஆயிரத்து 904 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 7ம் தேதி ) நள்ளிரவு : 02;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 70 லட்சத்து 61 ஆயிரத்து 908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 04 ஆயிரத்து 528 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து 50 ஆயிரத்து 904 பேர் மீண்டுள்ளனர்.

1:19 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 20லட்சத்து 3 ஆயிரத்து 542 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 421 ஆனது. 7 லட்சத்து 57 ஆயிரத்து 046 பேர் மீண்டுள்ளனர்.

12:18 AM IST
டில்லியில் ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா

தலைநகர் டில்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி 1000 பேருக்கு மேல் கொரோனா பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களில் எண்ணிக்கை 28,936 ஆகி உள்ளது.இதுவரை தலைநகரில் கொரோனாவுக்கு 812 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்களில் மொத்தம் 17,125 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 10,999 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

10:39 PM IST
இந்தியாவில் 46.66 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 46.66 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 2.46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

10:00 PM IST
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை விபரம் வெளியீடு

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

9:36 PM IST
ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,67,673 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5,859 பேர் பலியாகி உள்ளனர்.உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை பாதிப்பை பொருத்தமட்டில் குறைவாக உள்ளது. இது வரை அந்நாட்டில் மொத்தம் 2,26,731 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

8:45 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 3007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மொத்த பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 7) மட்டும் 3,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 85,975 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்தது. கொரோனாவிலிருந்து இன்று 1,924 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,314 ஆனது. 43,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8:00 PM IST
சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்கள் நாளை முதல் திறக்கலாம்

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை நாளை(ஜூன் 8) முதல் திறக்க மத்திய கலாசாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களை திறந்து கொள்ளலாம் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவை கட்டாயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

7:00 PM IST
சென்னையில் 22ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (7 ம் தேதி) புதிய உச்சமாக 1,156 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று (7 ம் தேதி) 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் இது வரை 212 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ,667

தமிழகத்தில் தொடர்ந்து 8 வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று (7 ம் தேதி), 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆகவும், மேலும் 18 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 269ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் இன்று ( 7ம் தேதி) 1,515 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,671மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,92, 970 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.13503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4:13 PM IST
4 லட்சத்து 02 ஆயிரத்து 650 பேர் பலி

இன்று ( ஜூன் 7ம் தேதி ) மாலை : 04;10மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 70 லட்சத்து 3 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 02 ஆயிரத்து 650 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து 24 ஆயிரத்து 707 பேர் மீண்டுள்ளனர்.

2:23 PM IST
சென்னையில் 20,993 பேருக்கு கொரோனா

சென்னையில் நேற்று 1,145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராயபுரம் பகுதி 3, 717 பேருடன் முதலிடத்தில் உள்ளது. தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் தலா 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகர், அடையாறு வளசரவாக்கம் மண்டலங்களில் தலா ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12:05 PM IST
34 லட்சத்து 13 ஆயிரத்து 441 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 7ம் தேதி ) நன்பகல்: 12;00மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 69 லட்சத்து 82 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 02 ஆயிரத்து 273 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து 13 ஆயிரத்து 441 பேர் மீண்டுள்ளனர்.

9:41 AM IST
5வது இடத்தில் இந்தியா

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 293 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2:12 AM IST
34 லட்சத்து ஆயிரத்து 045 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

இன்று ( ஜூன் 6.ம் தேதி ) நள்ளிரவு 02;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 69 லட்சத்து 41 ஆயிரத்து 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 லட்சத்து 838 பேர் பலியாகி உள்ளனர். 34 லட்சத்து ஆயிரத்து 045 பேர் மீண்டுள்ளனர்.


1:47 AM IST
கொரோனா ஆட்டி படைத்தாலும் சென்னையில் 10 ஆயிரம் பேர் குணம்

சென்னையில், கொரோனா தொற்றால் பாதித்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால், சுகாதார துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா தொற்று, மே துவக்கத்தில், தமிழகத்தில் தன் ஆட்டத்தை துவங்கியது. நேற்றைய நிலவரப்படி(ஜூன் 6), சென்னையில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 19 ஆயிரத்து, 826. மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னையில், மக்கள் அடர்த்தி, கோயம்பேடு மார்க்கெட் தொற்று, வெளிநாடு மற்றும் பிற மாநில மக்கள் வருகை போன்றவை, தொற்று அதிகரிக்க காரணமானது.

12:18 AM IST
பாக்., கில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா

பாக்.,கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,983 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 97 பேர் பலியான நிலையில் கொரோனாவால் இதுவரை மொத்தம் 1,935 பேர் பலியாகி உள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59,467 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை மொத்தம் 32,581 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 35,308 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

11:35 PM IST
"அண்ணன் நலமுடன் உள்ளார்": தாவூத்தின் தம்பி

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்தியாக பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் உறுதி செய்துள்ளார்.


11:01 PM IST
20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 20 லட்சம் அளவில் அமெரிக்கா ஏற்கனவே தயாரித்துள்ளது, பாதுகாப்பு பரிசோதனைகளை முடிந்த பின் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.


10:30 PM IST
ஹோட்டல்கள் திறப்பு : தமிழக அரசு வழிகாட்டுமுறை வெளியீடு

வரும் 8 ம் தேதி முதல் ஹோட்டல்களை திறக்க உத்தரவிட்டுள்ள அரசு, வழிகாட்டு நெறி முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

வழிகாட்டு நெறி முறைகளில் கூறி இருப்பதாவது:

*உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

*உணவகங்களுக்கு வரும் வாடிக்கயைாளர்களுக்கு கை கழுவ சோப்பு சானிடைசர் வழங்க வேண்டும்.

*உணவை தயார் செய்யும் ஊழியர்கள் ஆபரணங்கள் கை கடிகாரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

*ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி விட வேண்டும்.

*மொத்தம் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட வேண்டும்.

*உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசியினால் சுத்தப்படுத்த வேண்டும்

*வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் சரிஇல்லாதவர்களை ,பணியில் அமர்த்த கூடாது

*பண பரிவர்த்தனையை தவிர்த்து கூடுமான வரையில் செயலி வழி பரிவர்த்தனையை மேற்கொள்ள வேணடும்.

*உணவகங்களில் ஏசி பயன்படுத்தகூடாது சன்னல்கள் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு உள்ளது.

9:47 PM IST
மே. வங்கத்தில் கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தார் அஞ்சலி செலுத்த 30 நிமிடங்கள் அனுமதிக்கப்படுவர் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

9:00 PM IST
மஹா.,வில் புதிதாக 2,739 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் புதிதாக 2,739 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 83 ஆயிரத்தை நெருங்கியது.மாநிலத்தில் மொத்த பாதிப்பு 82,968 ஆக அதிகரித்தது. இன்று மட்டும் 120 பேர் உயிரிழந்தனர்.கொரோனாவிலிருந்து இன்று 2,234 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,390 ஆனது. 42,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8:00 PM IST
கொள்ளையன் மூலமாக 6 போலீசாருக்கு பரவிய கொரோனா

சென்னையில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் 6 பேருக்கு கொள்ளையன் ஒருவன் மூலம் கொரோனா பரவியது.

7:00 PM IST
சென்னையில் 21 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (6 ம் தேதி) புதிய உச்சமாக 1,146 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20, 993 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:28 PM IST
தமிழக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தின் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று, 1,458 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆகவும், மேலும் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 251 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் மட்டும் 5,76, 695 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 16,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். 13503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5:24 PM IST
33 லட்சத்து 63 ஆயிரத்து 594 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 6.ம் தேதி ) மாலை 05;10மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 68 லட்சத்து 69 ஆயிரத்து 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 98 ஆயிரத்து 587 பேர் பலியாகி உள்ளனர். 33 லட்சத்து 63 ஆயிரத்து 594 பேர் மீண்டுள்ளனர்.

11:03 AM IST
33 லட்சத்து 51 ஆயிரத்து 249பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 6.ம் தேதி ) காலை 11மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 68 லட்சத்து 50 ஆயிரத்து 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 98 ஆயிரத்து 244 பேர் பலியாகி உள்ளனர். 33 லட்சத்து 51 ஆயிரத்து 249பேர் மீண்டுள்ளனர்.

10:53 AM IST
6வது இடத்தில் இந்தியா

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 294 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது.

2:07 AM IST
33 லட்சத்து 04 ஆயிரத்து 636 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 5.ம் தேதி ) நள்ளிரவு 02.05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 67 லட்சத்து 90 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 96 ஆயிரத்து 267 பேர் பலியாகி உள்ளனர். 33 லட்சத்து 04 ஆயிரத்து 636 பேர் மீண்டுள்ளனர்.

1:22 AM IST
டில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது

டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,349 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு 25,004 ஆக உயர்ந்தது. மேலும் ஒரே நாளில் புதிதாக 22 பேர் கொரோனாவால் பலியானதையடுத்து மொத்த கொரோனா பலி 650 ஆக உயர்ந்துள்ளது.பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 9,898 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக மாநில சுகாதாரத்துறை அறிவித்தது.

12:14 AM IST
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 394 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,271 ஆக அதிகரித்தது.நேற்று ஒரு நாளில் 26 பேர் பலியாகினர். இதுவரை 8,631 பேர் பலியாகினர். ஜெர்மனியில் கொரோனா சிகிச்சையால் 1.87 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

11:14 PM IST
சவுதியில் 2,591 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து சவுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,591 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,748 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 31 பேர் நோய் தொற்றால் பலியாகினர். தொடர்ந்து இதுவரை சவுதியில் 642 பேர் பலியாகினர்.என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.

10:25 PM IST
பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா

பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89,249 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கொரோனாவுக்கு 68 பேர் பலியானதையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்தது. அதே நேரம் கொரோனாவிலிருந்து இது வரை 31,198 பேர் குணமைடைந்தனர்.

9:43 PM IST
ஓமனில் புதிதாக 770 பேருக்கு கொரோனா

ஓமனில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 770 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,086 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனாவால் நேற்று 5 பேர் பலியாகினர். கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.ஓமனில் இதுவரை 3,451 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,463 பேர் பரிசோதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 60 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

9:00 PM IST
மஹா.,வில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது

மஹாராஷ்டிராவில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது.
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 5) மட்டும் 2,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 80,229 ஆக அதிகரித்தது.
இன்று மட்டும் 139 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 2,710 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 1,475 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,156 ஆனது. 42,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8:38 PM IST
கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு

கேரள மாநிலத்தி்ல் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

7:45 PM IST
தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா

நிழலுலக தாதாவகவும் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர் பாக்.,கின் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் மனைவி சூபினா ஷெரினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கராச்சியில் அவரின் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பாக்., நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

7:00 PM IST
சென்னையில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று புதிய உச்சமாக 1,116 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19, 826 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இன்று உயிரிழந்த 12 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால். சென்னையில் மட்டும் இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:30 PM IST
தமிழக கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தின் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று, 1,438 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆகவும், மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 232 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,60, 673 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இது தான் இந்தியாவில் அதிகம். இன்று 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.12697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

5:03 PM IST
32 லட்சத்து 69 ஆயிரத்து 792பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 5.ம் தேதி ) மாலை 5 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 67 லட்சத்து 26 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 93 ஆயிரத்து 616 பேர் பலியாகி உள்ளனர். 32 லட்சத்து 69 ஆயிரத்து 792பேர் மீண்டுள்ளனர்.

12:01 PM IST
3 லட்சத்து 93 ஆயிரத்து 233 பேர் பலி

இன்று ( ஜூன் 5.ம் தேதி ) நன்பகல் 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 67 லட்சத்து 4 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 93 ஆயிரத்து 233 பேர் பலியாகி உள்ளனர். 32 லட்சத்து 52 ஆயிரத்து 562பேர் மீண்டுள்ளனர்.

11:29 AM IST
ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.

12:00 AM IST
தெலுங்கானாவில் புதிதாக 127 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளால் இன்று 127 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. 6 பேர் பலியாகினர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. தெலுங்கானாவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக இன்று அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்ததாவது : மாநிலத்தில் இன்று அதிகரித்த நோய் பாதிப்புக்கு 127 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,147 ஆக உயர்ந்தது. நோய் பாதிப்புக்கு 6 பேர் புதிதாக பலியானதை தொடர்ந்து, மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.

11:24 PM IST
ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

ஊரடங்கு விதிமுறைகளையொட்டி, அரபு எமிரேட்ஸில் ஜூன் 15 முதல் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் விமான சேவைகளை மீண்டும் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாண்டவம் ஆடி லட்சக்கணக்கானோரை பாதித்தது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் ஊரங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஜூன் 15 முதல் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் விமான சேவையை தொடங்குகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கும் பயணிகள் விமானங்களில் செல்ல முடியும் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூன் 15 முதல் துபாய் உள்ளிட்ட 16 வெவ்வேறு நகரங்களுக்கு இடையே பயணிகள் விமானங்களை இயக்கவுள்ளது.

10:15 PM IST
தமிழகத்தில் டாக்டர்கள், நர்ஸ்கள் அறிவித்த போராட்டம் வாபஸ்

தமிழகம் முழுதுவதும் (ஜூன்5) போராட்டத்தில் ஈடுபட இருந்த கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்


9:18 PM IST
குவைத்தில் புதிதாக 562 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து குவைத்தில் மேலும் 562 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 6 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது. இதனால் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,921 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் நேற்று 6 பேர் பலியானதை யொட்டி, இதுவரை 236 பேர் பலியானதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:14 PM IST
'ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று ': பிரேத பரிசோதனையில் தகவல்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:10 PM IST
சென்னையில் இன்று 1,072 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று 1,072 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,609 ஆக அதிகரித்துள்ளது.

6:45 PM IST
தமிழகத்தில் 1,384 பேருக்கு கொரோனா: பாதிப்பு 27,256 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 27,256 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில், இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை , 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல், இன்று வரை 15,991 பேருக்கும், மொத்தம் 5,20,286 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள். தற்போது வரை 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், த மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14901 ஆகவும், இன்று மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 220 ஆகவும் அதிகரித்துள்ளது.

6:17 PM IST
கேரளாவில் இன்று 94 பேருக்கு கொரோனா


கேரளாவில் ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதில் 47 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள். இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்பு 884 ஆக அதிகரித்துள்ளது.

12:44 PM IST
கட்டணம் நிர்ணயம்

தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு அளித்த பரிந்துரையில், தனியார் மருத்துவமனைகளில், லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.தீவிரி சிகிச்சை பெறும் நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.43 ஆயிரம் வரை வசூலிக்கலாம். மருத்துவர்கள், தனிமைபடுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம். இவ்வாறு இந்திய மருத்துவ கழகம் பரிந்துரை செய்துள்ளது.

9:30 AM IST
6 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 4) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 16 ,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 6,075 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 260 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8:43 AM IST

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தலாம் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

7:42 AM IST
பாதுகாப்பு துறை செயலருக்கு கொரோனா தொற்று ?


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1:26 PM IST

திருவள்ளூரில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், பாதிப்பு 1056 ஆக அதிகரித்துள்ளது.

1:08 PM IST

செங்கல்பட்டில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

12:46 PM IST

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியார் மருத்துவமனையில் 50% படுக்கைகளும் ஒதுக்க கோரிய கோரிக்கையும் நிராகரித்த நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு உள்ளதால் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது.

12:46 PM IST
தள்ளுபடி


கொரோனா நிவாரண தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

12:23 PM IST

இன்று (ஜூன் 3) காலை 11:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,815 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 1,01,497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர்.

2:06 AM IST
29 லட்சத்து 49 ஆயிரத்து 063 பேர் மீண்டனர்

இன்று ( ஜூன் 2.ம் தேதி ) நள்ளிரவு: 02;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 64 லட்சத்து 45 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 80 ஆயிரத்து 586 பேர் பலியாகி உள்ளனர். 29 லட்சத்து 49 ஆயிரத்து 063 பேர் மீண்டுள்ளனர்.

1:20 AM IST
ரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ஆராய்ச்சி தீவிரம்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தை, நெபுலைசர் மூலம் வீட்டிலுள்ளவர்களும் சுவாசித்து குணமடையக் கூடிய வகையில் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

12:35 AM IST
கேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,412 ஆக உயர்ந்துள்ளது.புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 26 வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. ஜூன் 2ம் தேதி மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு அடைந்த 1412 பேர்களில் 627 குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


12:15 AM IST
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3200 ஆக அதிகரித்தது. ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து 64 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 450 பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் 927 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆந்திராவை தவிர்த்து, பிற நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், மாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்குள் வந்தவர்கள் என மொத்தம் 112 பேரில் 479 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.


11:35 PM IST
பாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 3,938 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் மொத்த பாதிப்பு 76,398 ஆக அதிகரித்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.நோய் பாதிப்புகளில் சிக்கி 78 பேர் பலியாகினர். பாக்.,கில் பலியானவர் களின் மொத்த எண்ணிக்கை 1,631 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,110 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


11:00 PM IST
2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் திறப்பு

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.ஆரம்பநிலை பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் ஜூன் 2 முதல் திறக்கப்பட்டன.பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. கையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் வசதியும் வகுப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் முககவசம் அணிந்து வரும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10:40 PM IST
ஈரானில் ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா

ஈரானில் ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஈரானில் கொரோனா தொற்று சமீப காலத்தில் சற்று குறைந்திருந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டில் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,562 ஆக உள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 64 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 7,942 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை 1,23,077 பேர் கொரோனாவின் பிடியிலிருந்து குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

9:45 PM IST
ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா

ரஷ்யாவில் கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரித்து மேலும் 8,863 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 423,741 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 182 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,037 ஆக உயர்ந்தது. புதிதாக 11,108 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதனை தொடர்ந்து, நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 186,985 ஆக அதிகரித்தது.

9:00 PM IST
கொரோனா சிகிச்சையில் 'ரெம்டெசிவர்' மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மருந்தினை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனாவுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவரை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மூலம் நல்ல பலன் கிடைத்ததையடுத்து இம்மருந்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது

8:30 PM IST
மும்பை நோயாளிகள் வருகை அதிகரிப்பு: தென்மாவட்டங்களில் கிடுகிடு உயர்வு

தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் உள்ளூர் மக்களை விட மும்பையில் இருந்துவந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்த உள்ளூர் நபர்கள் 107 பேர். ஆனால் மும்பையில் இருந்து வந்தவர்களின் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உள்ளது. இவர்களில் இன்று வந்தவர்கள் 11 பேர். குணமாகி சென்றவர்கள் தவிர தற்போது 89 பேர் சிகிச்சையில் உள்ளனர்.துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களில் நோய் பாதித்தவர்கள் 109 பேர். மும்பையில் இருந்து துாத்துக்குடிக்கு வந்தவர்களில் நோய் பாதித்தவர்கள் 168 பேர். துாத்துக்குடிக்கு இன்று மட்டும் 20 பேர் மும்பையில் இருந்து வந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 126 பேர். தென்காசி மாவட்டத்தில் நோய் பாதித்தவர்கள் 68 பேர். மும்பையில் இருந்து வந்தவர்களின் நோய் பாதித்தவர்கள் 22 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 22 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.


7:27 PM IST
'உலக நாடுகளில் இந்தியாவில் தான் குறைவான இறப்பு விகிதம்'

உலக நாடுகளில் இந்தியாவில் தான் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதம் என குறைந்த அளவில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்ததாவது: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது. உலக நாடுகளின் இறப்பு சதவீதம் 6.13 ஆக உள்துடன் ஒப்பிடும் போது, இது உலகிலேயே மிகக்குறைந்த இறப்பு சதவீதம். இந்தியாவில் கொரோனா பாதிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல், இந்தியாவின் மக்கள் தொகையையும் பார்க்க வேண்டும். இந்தியாவை போல அதிக மக்கள் தொகை கொண்ட 14 நாடுகளில், நம்மை விட 22.5 மடங்கு வைரஸ் பாதிப்புகளையும், 55.2 மடங்கு இறப்புகளையும் கொண்டுள்ளன.நம் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்பவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதனால் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

6:30 PM IST
சென்னையில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது.

6:15 PM IST
தமிழகத்தில் 24 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், பலி எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

4:38 PM IST
3 லட்சத்து 77 ஆயிரத்து 966 பேர் பலி

இன்று ( ஜூன் 2.ம் தேதி ) மாலை: 04;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 63 லட்சத்து 94 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 77 ஆயிரத்து 966 பேர் பலியாகி உள்ளனர். 29 லட்சத்து 26 ஆயிரத்து 892பேர் மீண்டுள்ளனர்.

2:32 PM IST
கட்டுக்குள் உள்ளது கொரோனா

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. @block@- முதல்வர் இபிஎஸ் .@@block@@11:49 AM IST
63 லட்சத்து 71 ஆயிரத்து 746 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் 2.ம் தேதி ) காலை: 11;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 63 லட்சத்து 71 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 77 ஆயிரத்து 560 பேர் பலியாகி உள்ளனர். 29 லட்சத்து 4 ஆயிரத்து 995பேர் மீண்டுள்ளனர்.

10:57 AM IST

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் போலீஸ் ஒருவருக்கும், ராமநாதபுரத்தில் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

10:57 AM IST
ஆவின் அதிகாரிக்கு கொரோனாசென்னையில் ஆவின் இணை இயக்குநருக்கு கொரோனா உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாதவரம் பால்பண்ணையில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

10:41 AM IST
இந்தியாவில் 5,598 பேர் பலி

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 2) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:13 AM IST
63 லட்சத்து 40 ஆயிரத்து 480 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் 1.ம் தேதி ) நள்ளிரவு : 02;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 63 லட்சத்து 40 ஆயிரத்து 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 76 ஆயிரத்து 216 பேர் பலியாகி உள்ளனர். 28 லட்சத்து 86 ஆயிரத்து 189 பேர் மீண்டுள்ளனர்.

1:10 AM IST
ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார்.ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 7,878 பேர் பலியாகி உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

12:12 AM IST
கர்நாடகா கோவில்களில் ரூ 600 கோடி வருமானம் இழப்பு

கொரோனா ஊரடங்கால் கர்நாடகா கோவில்களில் ரூ 600 கோடி அளவிற்கு வருமானம் பாதித்துள்ளதாக மாநில அமைச்சர் கோடா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தார்.

11:20 PM IST
டில்லியில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது

டில்லியில் புதிதாக 990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது.இதுவரை 20,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் 500ஐ கடந்தது.இதுவரை 523 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 8,746 பேர் மீண்டுள்ளனர். 8,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10:20 PM IST
கொரோனாவுக்கான மருந்து: ரஷ்யா அடுத்த வாரம் சோதனை

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை வரும் ஜூன் 11ம் தேதி மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்க உள்ளனர்.ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதி உதவியுடன் கெம்ரார் என்ற மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்ற ஆன்டிவைரல் மருந்தினை தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜூன் 11 முதல் நோயாளிகளுக்கு இம்மருந்து வழங்கப்படும் என ஆர்டிஐஎப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.

9:18 PM IST
கொரோனாவை கட்டுப்படுத்த ஒழுக்கம்,கட்டுப்பாடு நல்லிணக்கம் தேவை:மோடி

கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒழுக்கம் ,கட்டுப்பாடு, நல்லிணக்கம் தேவை என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: இசை மற்றும் யோகா இரண்டும் மகத்தான ஆற்றல் மூலங்கள். இவை இரண்டும் தியானம் மற்றும் உந்துதல் சக்தியை கொண்டு இருக்கின்றன. யோகா மற்றும் இசை மூலம் நமது உள்சக்தியை நாம் கட்டுப்படுத்தும் போது மக்கதான ஆற்றல் கிடைக்கிறது.இசையில் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் தேவைப்படுவது போல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் நல்லிணக்கம் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை.130 கோடி இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக கைதட்டியும், இசை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.

8:15 PM IST
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,964 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,964 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,460 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்புகளில் சிக்கி புதிதாக 60 பேர் பலியாகினர். நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,083 பேர் கொரோனா சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7:26 PM IST
சென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூன் 1) ஒரே நாளில் 967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 15,770 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் ஒரே நாளில் 900ஐ கடப்பது இதுவே முதல்முறையாகும்.

7:03 PM IST

தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 23,495 ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

5:07 PM IST
62 லட்சத்து 90 ஆயிரத்து 758 பேர் பாதிப்பு

இன்று ( ஜூன் 1.ம் தேதி ) மாலை: 5;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 62 லட்சத்து 90 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 74 ஆயிரத்து 335 பேர் பலியாகி உள்ளனர். 28 லட்சத்து 62ஆயிரத்து 065பேர் மீண்டுள்ளனர்.

3:32 PM IST
நிதி ஆயோக் அலுவலகம் மூடல்

டில்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

12:17 PM IST
3 லட்சத்து 73 ஆயிரத்து 962 பேர் பலி

இன்று ( ஜூன் 1.ம் தேதி ) நன்பகல்: 12;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 62 லட்சத்து 67 ஆயிரத்து 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 73 ஆயிரத்து 962 பேர் பலியாகி உள்ளனர். 28 லட்சத்து 4 ஆயிரத்து 303பேர் மீண்டுள்ளனர்.

10:11 AM IST
இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா


சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 1) காலை 09:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,394 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,818 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 93,322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4:31 AM IST
ரஷ்யாவில் 4 லட்சம் பேருக்கு கொரோனா

ரஷ்யாவில், நேற்று(மே 31) மட்டும், புதிதாக, 9,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு, 4 லட்சத்து 5 ஆயிரத்து 843ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 4,693 பேர் இறந்துள்ளனர்.

2:10 AM IST
62 லட்சத்து 33 ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா

இன்று ( மே.31ம் தேதி ) நள்ளிரவு; 02;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 62 லட்சத்து 33 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 73 ஆயிரத்து 094 பேர் பலியாகி உள்ளனர். 27 லட்சத்து 80 ஆயிரத்து 729 பேர் மீண்டுள்ளனர்.

1:33 AM IST
டில்லியில் ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா

டில்லியில் ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு டில்லியில் 473 பேர் பலியாகி உள்ளனர்.

12:11 AM IST
பிரேசிலில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. இதனால் கொரோனா பாதிப்பில் உலகநாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.,கடந்த 24 மணிநேரத்தில் 956 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 28,834 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பலி எண்ணிக்கையில் உலக நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளது.

11:19 PM IST
தென் கொரியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து தென் கொரியாவில் புதிதாக 39 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.தென்கொரியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,441 ஆக அதிகரித்தது.இதுவரை 269 பேர் பலியாகினர்.

10:10 PM IST
சவுதி, ஜெருசலேமில் மசூதிகள் திறப்பு

சவுதி அரேபியா மற்றும் ஜெருசலேம் நாடுகளில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக மூடப்பட்டிருந்த மசூதிகள் இன்று வழிபாட்டிற்காக திறக்கப்பட்டன.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணாக உலகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் , மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் இருந்து சவுதி, ஜெருசலேம் நாடுகளில் மசூதிகள் மூடபட்டன.இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சவுதியில் உள்ள 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தல் புனிததலமான மெக்காவில் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

9:41 PM IST
தமிழகத்தில் காலை 6 மணி டூ இரவு 9 மணி வரை பஸ் சேவை

தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.மண்டலங்களுக்குள் பஸ் இயக்கப்படுமே தவிர ஒரு மண்டலப்பகுதியில் இருந்து அடுத்த மண்டல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாது என அரசு தெரிவித்து உள்ளது.

9:00 PM IST
மஹா.,வில் புதிதாக 2,487 பேருக்கு கொரோனா; 89 பேர் பலி

மஹாராஷ்டிராவில் இன்று(மே 31) புதிதாக 2,487 பேருக்கு கொரோனா உறுதியானது.மாநிலத்தில் மொத்த பாதிப்பு 67,655 ஆக அதிகரித்தது. 89 பேர் பலியாயினர். இதனால் மொத்த பலி 2,286 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 1,248 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 29,329 ஆனது. 36,040 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8:32 PM IST
தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 74 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 74 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,499 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் பலியாகினர். இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆக உள்ளது. இவ்வாறு அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

7:54 PM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 661 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து அரபு எமிரேட்சில் புதிதாக 661 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் அரபு எமிரேட்சில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,557 ஆக அதிகரித்தது. தொடர்ந்து நாட்டில் பலியானர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக உள்ளது.சிகிச்சைக்கு பின் 386 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,932 ஆக அதிகரித்தது. இதுவரை 37000 பேர் வரை பரிசோதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:00 PM IST
சென்னையில் ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 31) ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பில் 14,802 ஆக அதிகரித்துள்ளது.

6:31 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை கடந்த பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 22,333 ஆக உயர்ந்துள்ளது. இன்று 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

4:05 PM IST
3 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேர் பலி

இன்று ( மே.31ம் தேதி ) மாலை; 04;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 61 லட்சத்து 78 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேர் பலியாகி உள்ளனர். 27 லட்சத்து 46 ஆயிரத்து 144 பேர் மீண்டுள்ளனர்.

12:27 PM IST
3 லட்சத்து 71 ஆயிரத்து 016 பேர் பலி

இன்று ( மே.31ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 61 லட்சத்து 61 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 71 ஆயிரத்து 016 பேர் பலியாகி உள்ளனர். 27 லட்சத்து 38 ஆயிரத்து 333 பேர் மீண்டுள்ளனர்.

2:17 AM IST
27 லட்சத்து 12 ஆயிரத்து 194 பேர் மீண்டனர்

இன்று ( மே.30ம் தேதி ) நள்ளிரவு ; 02;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 61 லட்சத்து 11 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 69 ஆயிரத்து 391 பேர் பலியாகி உள்ளனர். 27 லட்சத்து 12 ஆயிரத்து 194 பேர் மீண்டுள்ளனர்.


1:20 AM IST
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 4.5% உயர்வு: மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் சதவீதம் 4.5 சதவீதம் உயர்வு அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தள்ளது.

12:19 AM IST
பூரி கோயில் திருவிழா 23-ல் துவக்கம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

உலகப்புகழ் பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழா வரும் 23ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் கோவில் திருவிழாக்கள் அனைத்தையும் டி.வி.யில் நேரலையாக காண்பிக்கும் படி மாநில அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இல்லாமல் ரத யாத்திரை நடத்த அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

11:33 PM IST
கேரளாவில் புதிதாக 58 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 624 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை நோய் தொற்றால் 575 பேர் குணமடைந்தனர்.

10:22 PM IST
ராஜஸ்தானில் 8,617 பேருக்கு கொரோனா: இதுவரை 193 பேர் பலி

ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,617 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 193 ஆக உள்ளது.
மாநிலத்தில் சனிக்கிழமை புதிதாக 252 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,617 ஆனது. ஜல்ராபதான், அக்லேரா மற்றும் ஜலவார் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவர் பலியான நிலையில் மொத்த கொரோனா பலி 193 ஆக உள்ளது. இன்று மட்டும் 495 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதுவரை 5,739 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 2,685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

9:41 PM IST
தெலுங்கானாவில் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 169 பேர் பாதிக்கப்பட்டனர். 4 பேர் பலியாகினர். இவ்வாறு அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் புதிதாக 169 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 4 பேர் பலியானதுடன் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உள்ளது.

8:26 PM IST
புதிய தளர்வுகளுடன் நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நான்காம் கட்டமாக புதிய தளர்வுகளுடன் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில், 5-ம் கட்டமாக இன்று மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

7:22 PM IST
கனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 906 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

6:40 PM IST
சென்னையில் 14 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 30) ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பில் 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது.

6:18 PM IST
தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (மே 30) புதிய உச்சமாக ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 82 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 21,184 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,605 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று உயிரிழந்த 6 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

4:05 PM IST
3 லட்சத்து 67 ஆயிரத்து 229 பேர் பலி

இன்று ( மே.30ம் தேதி ) மாலை ; 04;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 60 லட்சத்து 48 ஆயிரத்து 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 67 ஆயிரத்து 229 பேர் பலியாகி உள்ளனர். 26 லட்சத்து 72 ஆயிரத்து 868 பேர் மீண்டுள்ளனர்.

3:39 PM IST
டில்லியில் பாதிப்பு அதிகம்தான்: முதல்வர்

டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதற்காக யாரும் பீதியடைய வேண்டாம். இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை இருந்தாலோ டில்லியின் நிலைமை பற்றி கவலைப்பட வேண்டும். நிரந்தர ஊரடங்கால் எந்த தீர்வும் இல்லை. - அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் .

12:10 PM IST
60 லட்சத்து 35 ஆயிரத்து 071 பேர் உலக பாதிப்பு

இன்று ( மே.30ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 60 லட்சத்து 35 ஆயிரத்து 071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 66 ஆயிரத்து 913 பேர் பலியாகி உள்ளனர். 26 லட்சத்து 61 ஆயிரத்து 658 பேர் மீண்டுள்ளனர்.

11:44 AM IST
5 ஆயிரத்தை தொடுகிறது இந்தியா

இன்று (மே 30) காலை 11:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799 ல் இருந்து 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,706 ல் இருந்து 4,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106 ல் இருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. 265 பேர் உயிரிழந்துள்ளனர்.

11:09 AM IST
1.73 லட்சம் பேருக்கு கெரோனா

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 30) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799 ல் இருந்து 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,706 ல் இருந்து 4,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106 ல் இருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. 265 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:08 AM IST
26 லட்சத்து 34 ஆயிரத்து 954 பேர் மீண்டனர்

இன்று ( மே.29ம் தேதி ) நள்ளிரவு 02: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 59 லட்சத்து 91 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 65 ஆயிரத்து 304 பேர் பலியாகி உள்ளனர். 26 லட்சத்து 34 ஆயிரத்து 954 பேர் மீண்டுள்ளனர்.

1:54 AM IST
சவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து சவுதி அரேபியாவில் புதிதாக 1,581 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 81,766 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். சவுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 458 ஆக உள்ளது. நோய் தொற்றுகளில் இருந்து புதிதாக 2,460 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,013 ஆக உள்ளது.

12:54 AM IST
மஹா.,வில் கொரோனா பலி 2 ஆயிரத்தை கடந்தது

மஹாராஷ்டிராவில் புதிதாக 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி 2 ஆயிரத்தை கடந்தது.இன்று(மே 29) மட்டும் 2,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 62,228 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 116 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 2,098 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 8,381 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 26,997 ஆனது. 33,133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11:52 PM IST
ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஜூன் 1-முதல் முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.


11:05 PM IST
ரிப்பன் மாளிகையில் 60 பேருக்கு கொரோனா

சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை, 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9:52 PM IST
மும்பையில் பெரும்பாலும் நிரம்பியது ஐசியு படுக்கைகள்

கொரோனா தாக்கம் காரணமாக மஹாராஷ்டிராவில் தீவிர சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலும் ஐசியு படுக்கைகள் நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:55 PM IST
உலகம் முழுவதும் 26 லட்சத்து 8 ஆயிரம் பேர் மீண்டனர்

இன்று ( மே.29ம் தேதி ) இரவு 08: 50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 59 லட்சத்து 46 ஆயிரத்து 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 62 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர். 26 லட்சத்து 08 ஆயிரத்து 515 பேர் மீண்டுள்ளனர்.

8:14 PM IST
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: இந்தோனேசிய அமைச்சர் கருத்தால் சர்ச்சை

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. அதனை ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது என்பதை கற்றுக்கொள்வீர்கள் என்று கூறிய இந்தோனேசிய அமைச்சருக்கு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

7:24 PM IST
சென்னையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 29) ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 6,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6:19 PM IST
தமிழகத்தில் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 154 ஆக உள்ளது. இன்று 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

9:19 PM IST
ம.பி., யில் தனிமைப்படுத்துதல் விதியை மீறுவோருக்கு ரூ 2000 அபராதம்

மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்துதல் விதியை மீறுவோருக்கு ரூ 2000 அபராதம் விதிக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.


8:18 PM IST
தென்கொரியாவில் மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்

தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக, சில சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் நாளை (மே 29) முதல் இரண்டு வாரங்களுக்கு அமலுக்கு வரவுள்ளது.

7:00 PM IST
சென்னையில் ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆனது. 6,304 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 6,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 106 பேர் பலியாகி உள்ளனர்.

6:16 PM IST
தமிழக பாதிப்பு ; 20 ஆயிரத்தை தொடுகிறது

தமிழகத்தில் இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372 பேராக அதிகரித்துள்ளது. இன்று (28 ம் தேதி) மேலும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இன்று 639 பேர் குணமடைந்தனர். மொத்தம் 10, 558 பேர் குணம் பெற்றனர். சென்னையில் மொத்த பாதிப்பு 12, 872 பேர்.

5:27 PM IST
58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் பாதிப்பு

இன்று ( மே.28ம் தேதி ) மாலை ; 05;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 896 பேர் பலியாகி உள்ளனர். 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளனர்.

4:13 PM IST
கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி

நீலகிரி கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இம்மாவட்டத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

3:52 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் கூடாது

இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்வே நிர்வாகமும், மாநில அரசுகளும் உணவு , தண்ணீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும். கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. - சுப்ரீம் கோர்ட் .

12:01 PM IST
57 லட்சத்து 92 ஆயிரத்து 992 பேர் பாதிப்பு

இன்று ( மே.28ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 57 லட்சத்து 92 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 480 பேர் பலியாகி உள்ளனர். 24 லட்சத்து 99 ஆயிரத்து 167 பேர் மீண்டுள்ளனர்.

11:59 AM IST

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 விசாரணை கைதிகளுக்கு கொரோனா உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

10:57 AM IST
சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டிய நிலையில் மேலும் 5 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை, அண்ணா நகர், தண்டையார்ப்பேட்டையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

10:56 AM IST
விழுப்புரத்தில் மேலும் 26 பேருக்கு தொற்று

விழுபபுரத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

9:33 AM IST
டில்லியில் வந்த இருவருக்கு கொரோனா

டில்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்து நாமக்கல் சென்ற இருவருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கோவையில் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

9:31 AM IST
சென்னையில் மேலும் 4 பேர் பலி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று இரவு முதல் காலை வரை கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். கேகேநகர், திருவொற்றியூர், செங்குன்றத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

9:23 AM IST
1.58 லட்சம் பேருக்கு கொரோனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 28) காலை 9:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767 ல் இருந்து 1,58,333 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,337 ல் இருந்து 4,531 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,426 ல் இருந்து 67,692 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்புடன் தற்போது 86,110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

5:29 AM IST
மெக்சிகோவில் ஒரே நாளில் 500 பேர் பலி

மெக்சிகோ:வட அமெரிக்காவைச் சேர்ந்த, மெக்சிகோவில், முதன் முறையாக, நேற்று ஒரே நாளில், 500 பேர் கொரேனாவுக்கு பலியாகியுள்ளனர்; புதிதாக, 3,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 74 ஆயிரத்து, 560 ஆக உயர்ந்துள்ளது; 8,135 பேர் பலியாகியுள்ளனர். தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசிலில், தினமும், 800க்கும் அதிகமானோர் பலியாகின்றனர். இது, அமெரிக்காவில், 600 ஆக உள்ளது. இந்நிலையில், தினந்தோறும் ஏற்படும் உயிரிழப்பில், மெக்சிகோ, அமெரிக்காவை விஞ்சும் என, தெரிகிறது.

5:28 AM IST
சீனாவில் அறிகுறியின்றி 28 பேர் பாதிப்பு

பீஜிங்: சீனாவில், நேற்று, 28 பேர், அறிகுறியின்றி, கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில், 22 பேர், கொரோனா உருவான, வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், அறிகுறியின்றி, கொரேனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, 404 ஆக அதிகரித்துள்ளது. வூஹான் நகரில் மீண்டும் நோய் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, அங்குள்ள, 1.12 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

5:21 AM IST
பாக்.,கில் 59,151 பேர் பாதிப்பு

அண்டை நாடான பாக்.,கில், நேற்று, 1,446 பேரிடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 59 ஆயிரத்து, 151 ஆக உயர்ந்துள்ளது. 28 பேர் பலியான நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை, 1,225 ஆக மாறியுள்ளது.சிந்து மாகாணத்தில், 23 ஆயிரத்து, 507 பேர், வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், அது, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மாகாணம், 21 ஆயிரத்து, 118 பேருடன், அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், 8,491 பேருடன், இதுவரை, 4 லட்சத்து, 99 ஆயிரத்து, 399 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது; 19 ஆயிரத்து, 412 பேர், பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

2:12 AM IST
24 லட்சத்து 74 ஆயிரத்து 091 பேர் மீண்டனர்

இன்று ( மே.27ம் தேதி ) நள்ளிரவு 02.10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 57 லட்சத்து 55 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 55 ஆயிரத்து 669 பேர் பலியாகி உள்ளனர். 24 லட்சத்து 74 ஆயிரத்து 091 பேர் மீண்டுள்ளனர்.

1:37 AM IST
ஊரடங்கு விதியால் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து

ஊரடங்கு விதிகள் காரணமாக குஜராத் மாநிலத்தில் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

11:48 PM IST
மொபைல் போன்கள் ஏற்றுமதி 14.6 சதவீதம் குறையும்

கொரோனா பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக மொபைல் போன்கள் ஏற்றுமதி பாதிக்கும் என கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

11:04 PM IST
சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் 23 பேர் இதுவரை பலியாகினர். மேலும் 16,444 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிங்கப்பூரையும், மற்றவர்கள் பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

10:30 PM IST
தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் பாதிப்புகளால் தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 71 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,991 ஆக அதிகரித்தது. மேலும் ஒருவர் பலியானாதால், மாநிலத்தில் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தது.மாநிலத்தில் தொற்றில் இருந்து மேலும் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,284 ஆக இருந்தது. இதனால் காந்தி மருத்துவமனையில் 650 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

10:00 PM IST
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்துகிறார் ராகுல்

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை ராகுல் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

9:25 PM IST
கொரோனாவை பரப்புகிறது ரயில்வே; மம்தா குற்றச்சாட்டு

மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மேற்குவங்கத்திற்கு ரயில்வே கொரோனாவை பரப்புவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.மஹாராஷ்டிராவிலிருந்து கொரோனாவை, மேற்கு வங்கத்தில் பரவ விடும் வேலையை ரயில்வே செய்கிறது. எங்களிடம் ஆலோசனை செய்யாமல், ரயில்களை இயக்குவதால், மஹா.,வுடன் எங்களுக்கு மோதல் ஏற்படும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

8:49 PM IST
கத்தாரில் ஒரே நாளில் புதிதாக 1,740 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து கத்தாரில் மேலும் 1,740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,947 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 2 பேர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புக்கு 35,634 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,193 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,283 ஆக உள்ளது. இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

7:30 PM IST
2.25 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்

கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு 2.25 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

7:00 PM IST
சென்னையில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 27) ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 12,203 ஆக அதிகரித்துள்ளது.

6:30 PM IST
தமிழகத்தில் 18,545 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (மே 27) 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 133 ஆக உள்ளது. 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:25 PM IST

தமிழகத்தில் இன்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 133 ஆக உள்ளது. 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

2:35 PM IST

ஆந்திராவில் இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

2:29 PM IST
டில்லியில் பாதிப்பு அதிகரிப்பு

டில்லியில் ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,257 ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் இறந்ததை தொடர்ந்து, உயிரிழப்பு 393 ஆக அதிகரித்துள்ளது.

11:27 AM IST
பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது

சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே.,27) காலை 9:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380 ல் இருந்து 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,167 ல் இருந்து 4,337 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,491 ல் இருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 83,004 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

2:08 AM IST
24 லட்சத்து 09 ஆயிரத்து 907 பேர் மீண்டனர்

இன்று ( மே.26ம் தேதி ) நள்ளிரவு ; 02;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 56 லட்சத்து 48 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 50 ஆயிரத்து 288 பேர் பலியாகி உள்ளனர். 24 லட்சத்து 9 ஆயிரத்து 907 பேர் மீண்டுள்ளனர்.

1:31 AM IST
டில்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.இதையடுத்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.

1:02 AM IST
மஹா., அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று

மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போது அமைச்சரான அசோக் சவான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காங். கட்சியைச் சேர்ந்த அசோக் சவானுக்கு கடந்த ஞாயின்று மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

12:30 AM IST
பாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.


12:00 AM IST
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

11:21 PM IST
கொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பு!

முன்மாதிரி தடுப்பூசி ஒன்று கொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளது.

10:30 PM IST
அமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 30 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் இது வரை 17 லட்சத்து 300 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

10:00 PM IST
'ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் இல்லை': ஐ.சி.எம்.ஆர்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பெரிய பக்க விளைவுகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

9:38 PM IST
கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி

கர்நாடக மாநிலத்தில் வரும் 1 -ம் தேதி முதல் வழிபாட்டுதலங்கள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

9:05 PM IST
குறைந்த செலவில் வென்டிலேட்டர்:இந்திய வம்சாவளி தம்பதி சாதனை

கொரோனா சிகிக்சைக்கு தேவைப்பபடும் வென்டிலேட்டரை குறைந்த செலவில் தயாரித்து அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி தம்பதியினர் சாதித்துள்ளனர்.

8:30 PM IST
கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் பாதிப்புகள் அதிகரித்து மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும், 33 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:58 PM IST
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மே.30ல் முடிவு

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என வரும் 30 ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

7:00 PM IST
சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 26) ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 646 பேரில் சென்னையில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தெலுங்கானாவில் இருந்து தமிழகம் வந்தவர் ஆவார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.

6:31 PM IST
தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

4:25 PM IST
23 லட்சத்து 86 ஆயிரத்து 321 பேர் மீண்டனர்

இன்று ( மே.26ம் தேதி ) மாலை; 04;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 56 லட்சத்து 9 ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 48 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர். 23 லட்சத்து 86 ஆயிரத்து 321 பேர் மீண்டுள்ளனர்.

3:14 PM IST
ஊரடங்கு கட்டுப்பாடுகள் ; உலக சுகாதார துறை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். - உலக சுகாதார துறை .

12:15 PM IST
55 லட்சத்து 90 ஆயிரத்து 671 பேர் பாதிப்பு

இன்று ( மே.26ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 55 லட்சத்து 90 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 47 ஆயிரத்து 922 பேர் பலியாகி உள்ளனர். 23 லட்சத்து 67 ஆயிரத்து 589 பேர் மீண்டுள்ளனர்.

9:30 AM IST
1.45 லட்சம் பேருக்கு கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று( மே.,26) காலை 9:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ல் இருந்து 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,021 ல் இருந்து 4,167 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,721 ல் இருந்து 60, 491 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 80, 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

2:07 AM IST
கொரோனா உலக பாதிப்பு 55 லட்சத்து 64 ஆயிரத்து 616

இன்று ( மே.25ம் தேதி ) நள்ளிரவு 02;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 55 லட்சத்து 64 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 46 ஆயிரத்து 750 பேர் பலியாகி உள்ளனர். 23 லட்சத்து 50 ஆயிரத்து 120 பேர் மீண்டுள்ளனர்.

1:46 AM IST
மாலத்தீவில் இருந்து திரும்பியவர் 'தனிமை'

மாலத்தீவில் இருந்து திருப்பூர் திரும்பியவர், கொரோனா வார்டில், கண்காணிப்பில் உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில், 2ம் தேதிக்கு பிறகு, புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வீட்டு கண்காணிப்பில், 1656 பேர் உள்ளனர். மாலத்தீவில் இருந்து உடுமலை திரும்பிய ஒருவர் உட்பட, 23 பேர், கொரோனா வார்டில், கண்காணிப்பில் உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

12:44 AM IST
விமானத்தில் கோவை வந்த 134 பேர் கண்காணிப்பு

கோவை விமான நிலையத்துக்கு இன்று வந்த, 134 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தினர்.
சென்னையை சேர்ந்த 61 பேர், டில்லியை சேர்ந்த 75 பேர் என, மொத்தம், 136 பேர் கோவை விமான நிலையம் வந்தனர். இதில், கோவையை சேர்ந்த 60 பேரை, சுகாதாரத் துறையினர் பிரத்யேக கண்காணிப்பு மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்களிடத்தில், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பிரத்யேக வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவையில், 22வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

12:08 AM IST
குவைத்தில் மேலும் 665 பேருக்கு கொரோனா

குவைத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 665 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், 9 பேர் பலியானதாகவும் அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,967 ஆக அதிகரித்துள்ளது. குவைத்தில் நோய் பாதிப்புகளில் சிக்கி 9 பேர் பலியாகினர். இதையொட்டி, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது.

11:07 PM IST
டில்லியில் ஒரே நாளில் 635 பேருக்கு கொரோனா

டில்லியில் ஒரே நாளில் 635 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதையடுத்து அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,053 ஆக உள்ளது. இதில் 7,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,771 பேர் குணமாகி விட்டனர். மாநிலத்தில் இது வரை 276 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்..

10:24 PM IST
விமானத்தில் கோவை வந்த 134 பேர் கண்காணிப்பு

கோவை விமான நிலையத்துக்கு இன்று வந்த, 134 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தினர்.சென்னையை சேர்ந்த 61 பேர், டில்லியை சேர்ந்த 75 பேர் என, மொத்தம், 136 பேர் கோவை விமான நிலையம் வந்தனர்.

10:08 PM IST
ஜப்பானில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு

ஜப்பானில் அமலில் உள்ள தேசிய அவசர நிலை மற்றும் ஊரடங்கை தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

பல வளர்ந்த நாடுகளை விட, குறைவான அளவிலேயே கொரோனா தொற்றுகளையும், மரணங்களையும் ஜப்பான் சந்தித்துள்ளது. அங்கு இதுவரை, 16,569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அதில், 825 பேர் உயிரிழ்ந்துள்ளனர்; 13,244 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடுதிரும்பி உள்ளனர்.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஜப்பானில் ஊரடங்கைத் தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

9:27 PM IST
நியூயார்க் பொருளாதார மீட்பு குழுவில் 2 இந்தியர்களுக்கு இடம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டங்களை வகுக்கும் குழுவில் புலிட்சர் பரிசு வென்ற இந்தியரான சித்தார்த்தா முகர்ஜி, திரிபாதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

8:25 PM IST
மும்பையில் இருந்து தெலுங்கானா திரும்பிய 2 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கத்தால் மும்பையில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.

7:19 PM IST
சென்னையில் இன்று மட்டும் 549 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று(மே 25) மட்டும் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.சென்னையில் இதுவரை 11,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,135 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 5,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6:30 PM IST
தமிழகத்தில் 17 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (மே 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 805 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆகவும், பலி எண்ணிக்கை 118 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் இன்று 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 491 ஆண்கள், 314 பெண்கள். மொத்த பாதிப்பு 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதில், 5 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று மொத்தம் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 51.11 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும் உள்ளது என்றார்.

3:19 PM IST
23 லட்சத்து 10 ஆயிரத்து 249 பேர் மீண்டனர்

இன்று ( மே.25ம் தேதி ) மாலை 03;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 55 லட்சத்து 17 ஆயிரத்து 014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 46 ஆயிரத்து 949 பேர் பலியாகி உள்ளனர். 23 லட்சத்து 10 ஆயிரத்து 249 பேர் மீண்டுள்ளனர்.

1:49 PM IST
சென்னையில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா

சென்னையில், அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 70 பேரும், கோடம்பாக்கத்தில் 69 பேரும், தேனாம்பேட்டையில் 64 பேரும், திரு.வி.க.நகரில் 55 பேரும், அடையாறில் 46 பேரும், அண்ணாநகரில் 38 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், திருவொற்றியூரில் 26 பேரும், வளசரவாக்கத்தில் 24 பேரும், மாதவரத்தில் 10 பேரும், பெருங்குடியில் 16 பேரும், மணலியில் 16 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

11:24 AM IST
3 லட்சத்து 46 ஆயிரத்து 761 பேர் பலி

இன்று ( மே.25ம் தேதி ) காலை 11;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 55 லட்சத்து 2 ஆயிரத்து 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 46 ஆயிரத்து 761 பேர் பலியாகி உள்ளனர். 23 லட்சத்து 3 ஆயிரத்து 369 பேர் மீண்டுள்ளனர்.

9:40 AM IST
பலி 4 ஆயிரத்தை தாண்டியது

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று( மே.,25) காலை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ல் இருந்து 1,38, 845 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,867 ல் இருந்து 4,021 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,441 ல் இருந்து 57, 721 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 77, 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:03 AM IST
டில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயித்தை கடந்தது.

1:30 AM IST
தமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்

தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மே.25 முதல்(நாளை) உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

12:07 AM IST
பாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் பலியாகினர் எனவும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,601 ஆக உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

11:30 PM IST
பிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 3,047 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


11:12 PM IST
பெருவில் ஒரே நாளில் 4,056 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து பெரு நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,056 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் பெருவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,754 ஆக அதிகரித்தது. இதுவரை 3,373 பேர் பலியாகினர்.


10:11 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் மேலும் 119 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில் 119 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இத்தாலியில் முன்பை விட தினசரி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,735 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,29,327 ஆக அதிகரித்தது.9:03 PM IST
கேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா உறுதி

கேரளாவில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, மாநிலத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச தொற்று ஆகும்.

9:00 PM IST
சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அதிகரித்து வரும் 'கொரோனா'

இன்று(மே 24) ஒரே நாளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பிற்குள்ளான சி.ஆர்.பி.எப். வீரர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 220 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 2 பேர் பலியாகி உள்ளனர்.

8:15 PM IST
கோவாவில் 54 பேருக்கு கொரோனா

கோவா மாநிலத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

7:23 PM IST
மஹா.,வில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது

மஹாராஷ்டிராவில் இன்று(மே.24) மேலும் 3041 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,0231 ஆக உயர்ந்தது. இன்று பலி 58 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,635 ஆனது. இன்று 1,196 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 14,600 ஆனது. மாநிலத்தில் 33,988 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7:00 PM IST
சென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 24) ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 10,576 ஆக அதிகரித்துள்ளது.

6:14 PM IST

தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

4:25 PM IST
54 லட்சத்து 26 ஆயிரத்து 482 பேர் பாதிப்பு

இன்று ( மே.24ம் தேதி ) மாலை 04;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 54 லட்சத்து 26 ஆயிரத்து 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 44 ஆயிரத்து 409 பேர் பலியாகி உள்ளனர். 22 லட்சத்து 59 ஆயிரத்து 047 பேர் மீண்டுள்ளனர்.

3:14 PM IST
ஒரு லட்சம் படுக்கைகள் தயார்

மஹாராஷ்டிராவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமாக ஆக உள்ளது. இருப்பினும் யாரும் கவலைப்பட தேவையில்லை. மருத்துவ துறையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். வயதானவர்கள் அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். இது ஒரு நல்ல செய்தி. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. - முதல்வர் உத்தவ் தாக்கரே.12:07 PM IST
கொரோனாவுக்கு உலக பாதிப்பு ; 54 லட்சத்து 7 ஆயிரத்து 414 பேர்

இன்று ( மே.24ம் தேதி ) காலை 11;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 54 லட்சத்து 7 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 44 ஆயிரத்து 25 பேர் பலியாகி உள்ளனர். 22 லட்சத்து 48 ஆயிரத்து 363 பேர் மீண்டுள்ளனர்.

10:21 AM IST
இந்தியாவில் இன்றைய நிலவரம்

இந்தியாவில் இன்று(மே 24) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,767 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2:13 AM IST
கொரோனா: மீண்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது

இன்று ( மே.23ம் தேதி ) நள்ளிரவு 02.;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 53 லட்சத்து 83 ஆயிரத்து 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 43 ஆயிரத்து 097 பேர் பலியாகி உள்ளனர். 22 லட்சத்து 34 ஆயிரத்து 393 பேர் மீண்டுள்ளனர்.

1:29 AM IST
மஹா.,வில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

மஹாராஷ்டிராவில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது.


12:15 AM IST
ஆந்திராவில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 47 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.

11:14 PM IST
மதுரையில் அரசு பெண் டாக்டருக்கு கொரோனா

மதுரையில் அரசு பெண் டாக்டர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மொத்த பாதிப்பு 226 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 113 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

10:30 PM IST
மஸ்கட்டிலிருந்து 177 இந்தியர்கள் கொச்சி வந்தனர்

வந்தே பாரத் மிஷனில் ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து, 177 இந்தியர்கள், ஏர் இந்தியா சிறப்பு விமானம்(IX 442) மூலம் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

10:08 PM IST
சிக்கிமிலும் கால் பதித்த கொரோனா

டில்லியிலிருந்து சிக்கிம் திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிக்கிமில் முதல் நபருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

9:07 PM IST
சாத்தியமான உதவிகளை அளிப்போம்: கோத்பயவுக்கு மோடி உறுதி

கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது கொரோனா பரவல் குறித்தும், அதனால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் பொருளாதார தாக்கும் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் உரையாடினர். அப்போது, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும், இந்தியா இலங்கைக்கு அளிக்கும் என ராஜபக்சேயிடம் மோடி உறுதி அளித்தார்.

7:58 PM IST
நிதி நெருக்கடி:ஐ.பி.எம்.மில் ஆயிரம் பேர் பணி நீக்கம்

பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக செலவை குறைக்கும் வகையில் ஐ.பி.எம்., நிறுவனம் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருப்பதாவது: போட்டி நிறைந்த சந்தையில் நிறுவனத்தை தக்கவைத்து கொள்ளவும், பொருளாதார சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டி உள்ளது. இதன் காரணமாக பென்சில்வேனியா, கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

6:53 PM IST

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 759 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மஹாராஷ்டிரா - 24 பேர், ராஜஸ்தான் - 6 பேர், மேற்குவங்கம் -3 பேர், டில்லி, தெலுங்கானா, உ.பி., ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர், பிலிப்பைன்சில் இருந்து வந்தவர்கள் 5 பேர், லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

6:46 PM IST
சென்னையில் இன்று மட்டும் 625 பேருக்கு கொரோனா

சென்னையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 625 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவத் தொடங்கிய சில நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்பை சென்னை பதிவு செய்து வருகிறது. தொடர்ந்து அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று (மே 23) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 759 பேரில், சென்னையில் மட்டும் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ராஜஸ்தானில் இருந்து வந்தவர் ஆவார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 600க்கு மேல் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

6:23 PM IST
தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 759 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,915 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

3:04 PM IST
3 லட்சத்து 40 ஆயிரத்து 286 பேர் பலி

இன்று ( மே.23ம் தேதி ) மதியம் 03.;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 53 லட்சத்து 21 ஆயிரத்து 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 40 ஆயிரத்து 286 பேர் பலியாகி உள்ளனர். 21 லட்சத்து 70 ஆயிரத்து 664 பேர் மீண்டுள்ளனர்.

2:03 AM IST
காங்., கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு கொரோனா

காங்., கட்சியின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா, பல தேசிய செய்தி சேனல்களில், விவாதங்களில் காங்., சார்பில் பங்கேற்பவர். மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருபவர். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

1:20 AM IST
பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ள பேஸ்புக் ஊழியர்கள்

கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர்.

12:26 AM IST
சிங்கப்பூரில் புதிதாக 614 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து சிங்கப்பூரில் மேலும் 614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று (மே.,22) சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூரில் மேலும் 614 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 30,426 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து தங்கி பணியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.

10:12 PM IST
மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் மொத்தம் 44,582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 63 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மஹாவில் மொத்தம் 1,517 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 12,583 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். 30,474 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

10:11 PM IST
சிக்கிம்மில் ஜூன் 15 ல் கல்வி நிறுவனங்கள் திறப்பு

தொற்று இல்லா சிக்கிம் மாநிலத்தில் வரும் 15ம் தேதி முதல் கல்வி நிறுவனங்களை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.

9:22 PM IST
பிலிப்பைன்சில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று

பிலிப்பைன்சில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 163 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,597 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 11 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 857 ஆக உள்ளது. 3000 க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்தனர்.8:40 PM IST
கத்தாரில் மேலும் 1,830 பேருக்கு கொரோனா

கத்தாரில் மேலும் 1,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (மே.,22) தெரிவித்ததாவது : கத்தாரில் கொரோனா அதிகரித்து, ஒரே நாளில் புதிதாக 1,830 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,481 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 2 பேர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32,569 ஆக உள்ளது. 175 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

8:00 PM IST
20,000 பேரை பணிநீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய ஜப்பான் கார் நிறுவனமான நிசான் முடிவு எடுத்துள்ளது.

7:30 PM IST
மஹா., அரசு கட்டுப்பாட்டிற்குள் 80% தனியார் மருத்துவமனை படுக்கைகள்

மஹாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் 80 சதவீத படுக்கைகளை மாநில அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

6:50 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் இன்று (மே 22) புதிதாக 569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9364 ஆக உயர்ந்துள்ளது.

6:30 PM IST
தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா; பலி 98 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று (மே 22) மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 14,753 ஆகவும், பலி எண்ணிக்கை 98 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,128 ஆனது. மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:47 PM IST
20 லட்சத்து 97 ஆயிரத்து 402 பேர் மீண்டனர்

இன்று ( மே.22ம் தேதி ) மாலை 05;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 52 லட்சத்து 20 ஆயிரத்து 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 35 ஆயிரத்து 162 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்து 97 ஆயிரத்து 402 பேர் மீண்டுள்ளனர்.

3:20 PM IST
சென்னை பாதிப்பு விவரம்

தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 62.9 சதவீதமாக உள்ளது. நேற்றைய பாதிப்புகளில் ராயபுரம் மண்டலத்தில் 161 பேரும், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 57 பேரும், திரு.வி.க.நகரில் 56 பேரும், தண்டையார்பேட்டையில் 50 பேரும், கோடம்பாக்கம் 39 பேரும், வளசரவாக்கத்தில் 35 பேரும், அடையாறு 26 பேரும், அம்பத்தூரில் 24 பேரும், சோழிங்கநல்லூரில் 17 பேரும், மாதவரத்தில் 14 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மணலி மற்றும் திருவொற்றியூரில் தலா 7 பேரும், ஆலந்தூரில் 6 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

12:02 PM IST
20 லட்சத்து 82 ஆயிரத்து 950 பேர் மீண்டனர்

இன்று ( மே.22ம் தேதி ) காலை 11;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 51 லட்சத்து 97 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 34 ஆயிரத்து 680 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்து 82 ஆயிரத்து 950 பேர் மீண்டுள்ளனர்.

9:19 AM IST

இந்தியாவில் இன்று(மே 22) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 660,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

2:46 AM IST
ஆந்திராவில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 45 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:20 AM IST
திருப்பூரில் இயல்பு நிலை

திருப்பூர் மாவட்டத்திலும், புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. மாவட்டத்தில், கொரோனா பாதித்திருந்த, 114 பேரும் குணமாகிவிட்டனர். தினமும், 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த, 19 நாட்களாக, புதிய கொரோனா தொற்று இல்லை. மாவட்டத்தின் அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களும், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

12:37 AM IST
கோவையில் புதிய தொற்று இல்லை

கோவையில் 18 வது நாளாக, புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. மகாராஷ்டிரா மற்றும் ஐதராபாத்தில் இருந்து வந்த, 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 6 பேர் இன்று வந்தனர். சுகாதாரதுறையினர் அவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து வருகின்றனர்.
* கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, 'லக்ஷயா' சான்றிதழ் வழங்குவது, தொடர்பாக மத்திய குழுவினர், நடத்திய ஆய்வில் பிளாட்டினம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

12:03 AM IST
மஹாவில் 41,000 கடந்த கொரோனா பாதிப்பு

மஹாவில் இன்று புதிதாக 2,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41,642 ஆனது.

11:20 PM IST
கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

10:28 PM IST
கத்தாரில் புதிதாக 1,554 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து கத்தாரில் மேலும் 1,544 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:27 PM IST
அமெரிக்காவில் பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து ஆயிரத்து 466 ஆனது. உயிரிழப்பு 95 ஆயிரத்து 306 ஆனது. 3 லட்சத்து 71 ஆயிரத்து 496 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

9:56 PM IST
கனடாவில் கொரோனா பலி 6 ஆயிரத்தை கடந்தது

கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து பலியானவர்களின் எண்ணிக்கை 6000 ஐ தாண்டியதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

8:20 PM IST
'கொரோனா தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு வல்லரசுகள் உதவ வேண்டும்!'

'கொரோனா வைரஸ் தொற்று ஏழை நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதைச் சமாளிக்க வல்லரசு நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

7:26 PM IST
சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (மே 21) ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை தொடர்ந்து சென்னை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8795 ஆக அதிகரித்துள்ளது.

6:22 PM IST
தமிழகத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 776 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 13,967 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6282 ஆக அதிகரித்துள்ளது.
-- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

5:21 PM IST
20 லட்சத்து 38 ஆயிரத்து 509 பேர் மீண்டனர்

இன்று ( மே.21ம் தேதி ) மாலை 5;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 51 லட்சத்து 10 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 30 ஆயிரத்து 106 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்து 38 ஆயிரத்து 509 பேர் மீண்டுள்ளனர்.

3:44 PM IST
மஹாராஷ்ட்டிராவில் கொரோனா பாதித்தவர்கள்

மஹாராஷ்ட்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வரை 39, 297 பேர் பாதிக்கப்பட்டு 1,318 பேர் மீண்டுள்ளனர். மும்பையில் மட்டும் 24000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,390 பேர் பலியாகி உள்ளனர்.

11:31 AM IST
3 லட்சத்து 29 ஆயிரத்து 739 பேர் பலி

இன்று ( மே.21ம் தேதி ) காலை 11;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 50 லட்சத்து 90 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 29 ஆயிரத்து 739 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்து 24 ஆயிரத்து 329 பேர் மீண்டுள்ளனர்.

10:24 AM IST
1.12 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் இன்று(மே 21) காலை 9:30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக அதிகரித்துள்ளது. 3,435பேர் பலியாகி உள்ளனர். 63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

2:12 AM IST
ஜெர்மனியில் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் மேலும் 797 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:46 AM IST
கொரோனாவில் மீண்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது

இன்று ( மே.19ம் தேதி ) நள்ளிரவு 01; 40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 51 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 27 ஆயிரத்து 751 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்து 4 ஆயிரத்து 982 பேர் மீண்டுள்ளனர்.

1:18 AM IST
200 ரயில்களுக்கான முன் பதிவு துவக்கம்

ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று(மே.21) முன்பதிவு துவக்கப்படுகிறது.

12:30 AM IST
ஓமனில் மேலும் 372 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து ஓமனில் புதிதாக 372 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.

11:41 PM IST
சவுதி அரேபியாவில் மேலும் 2,691 பேருக்கு கொரோனா தொற்று

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து ஒரே நாளில் 2,691 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10:53 PM IST
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 39.62 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 39.62 சதவீதமாக அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.10:52 PM IST
கத்தாரிலிருந்து ஐதராபாத் வந்த 184 இந்தியர்கள்

வந்தே பாரத் மிஷனில் கத்தாரின் தோஹா நகரிலிருந்து 184 இந்தியர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்தடைந்தனர்.

10:17 PM IST
ஆந்திராவில் நாளை முதல் பஸ் சேவை துவக்கம்

ஆந்திராவில், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் நாளை(மே 21) முதல் பஸ் சேவை துவங்குகிறது. பயணிகள், மொபைலில் ஆரோக்கிய சேது ஆப் கட்டாயம் டவுன்லோடு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:41 PM IST
இயல்பு நிலைக்கு திரும்பியது தெலுங்கானா

தெலுங்கானாவில் கட்டுப்பாடுகளுடன் கடைகள், நிறுவனங்களை திறக்க மாநில அரசு அனுமதியளித்ததால் தளர்வுகளுடன் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

8:55 PM IST
தென்கொரியாவில் 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா தாக்கம் காரணமாக தென் கொரியாவில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8:22 PM IST
ஸ்பெயினில் நாளை முதல் முக கவசம் அணிவது கட்டாயம்

ஸ்பெயினில் நாளை முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத பொது இடங்களில் முக கவசம் அவசியமாகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ 8,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

7:15 PM IST
சென்னையில் இன்று 557 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் (மே 20) ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,228 ஆக அதிகரித்துள்ளது.


6:48 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா; 13 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

தமிழகத்தில் இன்று (மே 20) மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 13,191 ஆகவும், பலி எண்ணிக்கை 87 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 83 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 987 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,882 ஆக உள்ளது.

தற்போது 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 63 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று 11,894 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 803 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 11,381 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1007 பேரும் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:22 PM IST

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. 3 லட்சத்து 25 ஆயிரத்து 156 பேர் பலியாகி உள்ளனர். 19 லட்சத்து 70 ஆயிரத்து 978 பேர் மீண்டுள்ளனர்.

5:43 AM IST
பாகிஸ்தானில் ஒரே நாளில் 1,841 பேர் பாதிப்பு

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், நேற்று, ஒரே நாளில், 1,841 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 44 ஆயிரமாக உயர்ந்துள்ளது; 939 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர், இஸ்லாமாபாத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த, 24 மணிநேரத்தில், 12 ஆயிரத்து, 957 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

5:43 AM IST
நேபாளத்தில் பாதிப்பு அதிகரிப்பு

காட்மண்டு: அண்டை நாடான நேபாளத்தில், நேற்று, ஒரே நாளில், 18 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 375 ஆக உயர்ந்துள்ளது. இருவர் பலியாகியுள்ளனர். நேற்று, பன்கி மாவட்டத்தில், 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனுஷா மாவட்டத்தில் இருவரும், கேடங், தைலக், சன்சரி, ஜப்பா மாவட்டங்களில் தலா, ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நேபாள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2:17 AM IST
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 57 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,339 ஆக அதிகரித்தது. ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து 50 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

2:08 AM IST
19 லட்சத்து 48 ஆயிரத்து 592 பேர் மீண்டனர்

உலகில் கொரோனாவால் 49 லட்சத்து 65 ஆயிரத்து 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 23 ஆயிரத்து 585 பேர் பலியாகி உள்ளனர். 19 லட்சத்து 48 ஆயிரத்து 592 பேர் மீண்டுள்ளனர்.


1:49 AM IST
நீலகிரி ரவுண்ட் அப்:நீலகிரியில் பரண் அமைத்து காவல்

நீலகிரி மாவட்டம், பந்தலுார் மற்றும் கூடலுார் வழியாக, கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநில தொழிலாளர்கள் எந்த அனுமதியும் பெறாமல் லாரிகளில் ஏறி, தங்கள் ஊர்களுக்கு தப்பி செல்கின்றனர்., நாடுகாணி, பாட்டவயல் உட்பட அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பரண் அமைத்து, அதன் மீது ஏறிநின்று போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

12:44 AM IST
மலேசியாவில் 6 ஆயிரத்தை கடந்தது கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரேநாளில் 47 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது. மலேசியாவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் (கடந்த 24 மணிநேரம்) புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,941 ஆக அதிகரித்தது.

12:08 AM IST
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா ; ஒரே நாளில் 674 பேர் பலி

கொரோனா பாதிப்பு அதிகரித்து பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 674 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.

11:34 PM IST
கொழும்பு - தூத்துக்குடி கப்பல் ஜூன் 1 ல் இயக்கம்

இலங்கையில் உள்ள இந்திய மக்களை அழைத்து வர ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் ஜூன் 1 ஆம் தேதி இயக்கப்படுகிறது.

10:58 PM IST
தெலுங்கானாவில் கட்டுப்பாடுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ஊரடங்குகளில் தளர்வுகளுடன் கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்கலாம் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

10:15 PM IST
தெலுங்கானாவில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று

தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.

9:51 PM IST
ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்க முடிவு: பியூஷ் கோயல்

ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.முதல்கட்டமாக ஏ.சி.அல்லாத 200 ரயில்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த 200 ரயில் பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும். ரயில்களில் பயணிக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

9:31 PM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 873 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு எமிரேட்சின் பல நகரங்களிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாக 873 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் பலியாகினர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

9:05 PM IST
கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து : தமிழக அரசு

கொரோனா தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக ஹோமியோபதி மருந்து பயன்படுத்தப்படுவதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்து உள்ளது.

8:35 PM IST
ஆந்திராவில் ஆக.,3ல் பள்ளிகள் திறப்பு: ஜெகன் அறிவிப்பு

ஆந்திராவில் ஆக.,3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

8:09 PM IST
சென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று(மே 19) கொரோனா உறுதி செய்யப்பட்ட 688 பேரில், 552 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனையடுத்து சென்னையில், மொத்த பாதிப்பு 7,672 ஆக உயர்ந்தது.

7:27 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

தமிழகத்தில் இன்று(மே 19) புதிதாக 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாய், குவைத், மலேசியாவிலிருந்து வந்த 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் இன்று உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த உயிர் பலி 84 ஆனது. இன்று ஒரே நாளில் குணமாகி 489 பேர் வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமானோர் எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்தது.

7:09 PM IST
கொரோனா:49 லட்சத்து 24 ஆயிரத்து 208 பேர் பாதிப்பு

இன்று ( மே.19ம் தேதி ) மாலை 07;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 49 லட்சத்து 24 ஆயிரத்து 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 20 ஆயிரத்து 807 பேர் பலியாகி உள்ளனர். 19 லட்சத்து 28 ஆயிரத்து 313 பேர் மீண்டுள்ளனர்.

6:21 PM IST
கொரோனாவை 4 நாளில் குணப்படுத்தும் மருந்து கலவை

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

6:19 PM IST
64 நாட்களில் ஒரு லட்சம்: இந்தியாவில் மெதுவாக பரவும் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 100ல் இருந்து ஒரு லட்சத்தை தொட 64 நாட்கள் ஆகியுள்ளது. அதே நேரத்தில், இது அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளில், பாதிப்பு ஒரு லட்சத்தை, குறைந்த நாட்களில் எட்டியது தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து வோர்ல்ட் மீட்டர் என்ற இணையதளத்தை நிர்வகித்து வருகிறது. இது உலகளவில் கொரோனா பாதிப்பை குறித்த விவரங்களை வழங்கி வருகிறது. இதில் உள்ள தகவல்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100ல் இருந்து ஒரு லட்சத்தை 64வது நாளில்( மே 19) தொட்டது. அதேநேரத்தில், கொரோனா தொற்று பல நாடுகளை கணக்கிடும் போது, இந்தியாவில் கொரோனா பரவல் குறைவாக தான் உள்ளது.

11:53 AM IST
3 லட்சத்து 20 ஆயிரத்து 189 பேர் பலி

இன்று ( மே.19ம் தேதி ) காலை 11;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 48 லட்சத்து 94 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 20 ஆயிரத்து 189 பேர் பலியாகி உள்ளனர். 19 லட்சத்து 08 ஆயிரத்து 111 பேர் மீண்டுள்ளனர்.

2:13 AM IST
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,926 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8,926 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.

1:20 AM IST
ஓமனில் மேலும் 193 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்புகளால் ஓமன் நாட்டில் மேலும் 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.

12:30 AM IST
கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

12:11 AM IST
மதுரையில் 3 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று 5 மாத ஆண் குழந்தை உட்பட மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கருங்காலக்குடி அருகே நெல்லுக்குண்டப்பட்டியில் கொரோனா பாதித்த 20 வயது பெண்ணின் குழந்தை. இன்னொருவர் மதுரை தத்தனேரி பாரதிநகர் 42 வயது ஆண். சளி, இருமலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா உறுதியானது. மும்பையில் இருந்து திரும்பிய டி.கல்லுப்பட்டியை சேர்ந்த 44 வயது ஆணுக்கு கொரோனா உறுதியானது.நேற்று ஒருவர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார். இதுவரை மாவட்டத்தில் 164 பேரை கொரோனா பாதித்துள்ளது. 112 பேர் மீண்டுள்ளனர்.

11:12 PM IST
கர்நாடகா: 4 மாநிலத்தவர்கள் நுழைய எடியூரப்பா தடை

குஜராத், மகாராஷ்டிரம், கேரளா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் மேற்கண்ட மாநில மக்கள் கர்நாடகாவிற்குள் நுழைய வரும் 31ம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது.


11:11 PM IST
பாக்.,கில் ஒரே நாளில் 1,119 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,119 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.

10:11 PM IST
திருப்பூரில் புதிய தொற்று இல்லை

திருப்பூர் மாவட்டத்தில், 16 நாட்களாக, புதிய கொரோனா தொற்று பதிவாகவில்லை. மாவட்டத்தில், 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமாகியுள்ளனர்.

9:30 PM IST
கோவையில் 15 வது நாளாக கொரோனா தொற்று இல்லை

கோவையில் 15வது நாளாக இன்று புதிதாக யாருக்கும், 'கொரோனா' தொற்று கண்டறியப்படவில்லை.

9:04 PM IST
மும்பையில் இருந்து தெலுங்கானா திரும்பிய 2 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லாவில் மும்பையில் இருந்து திரும்பிய 2 வெளி மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.

8:24 PM IST
யாசகம் பெற்று ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய முதியவர்

மதுரையில் முதியவர் ஒருவர் தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டரிடம் வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.

7:45 PM IST
சொந்த ஊர் செல்ல 1.5 கி.மீ., தூரம் காத்திருக்கும் தொழிலாளர்கள்

மஹாராஷ்டிர மாநிலம் தானேயில், சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் பயணிக்க வெளிமாநில தொழிலாளர்கள் 1.5 கி.மீ., தூரம் காத்திருக்கின்றனர்.

7:15 PM IST
டில்லியில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி

டில்லியில் பஸ், ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கபடுகிறது. பஸ்களில் 20 பேர், ஆட்டோவில் ஒருவர், டாக்ஸியில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கான தடை தொடரும். உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை தொடங்கலாம். நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இல்லை. இவ்வாறு முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

6:48 PM IST
சென்னையில் ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 18) ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,117 ஆக அதிகரித்துள்ளது.

6:47 PM IST
தமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா; 81 பேர் பலி

தமிழகத்தில் இன்று (மே 18) மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆகவும், பலி எண்ணிக்கை 81 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர்.
இன்று மட்டும் 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் விகிதம் 37.46 ஆக உள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது உயிரிழப்பு விகிதம் 0.68 ஆக உள்ளது.தற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

5:04 PM IST
3 லட்சத்து 16 ஆயிரத்து 969 பேர் பலி

இன்று ( மே.18ம் தேதி ) மாலை 5;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 48 லட்சத்து 20 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 16 ஆயிரத்து 969 பேர் பலியாகி உள்ளனர். 18 லட்சத்து 64 ஆயிரத்து 472 பேர் மீண்டுள்ளனர்.

4:52 PM IST
கர்நாடகாவில் மேலும் தளர்வு

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று அளித்த பேட்டியில் ; அரசு, தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கேரளாவிலும் பஸ்கள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அத்தியாவசியம் இல்லாத பொருட்களையும் ஆன்லைனில் விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

11:24 AM IST
24 மணி நேரத்தில் 47,862 பேர் மீண்டனர்

இன்று ( மே.18ம் தேதி ) காலை 11;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 48 லட்சத்து 5 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 16 ஆயிரத்து 732 பேர் பலியாகி உள்ளனர். 18 லட்சத்து 60 ஆயிரத்து 51 பேர் மீண்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 47,862 பேர் மீண்டுள்ளனர்.

6:41 AM IST
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 90 ஆயிரம் பேர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 90,978 பேர் பலியாகி உள்ளனர். 15,27,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3.46 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

2:19 AM IST
சிறப்பு ரயில்கள் மூலம் 69 கோடி ரூபாய் வருவாய்

'ராஜ்தானி' சிறப்பு ரயில்களில், கடந்த ஐந்து நாட்களில், 3.5 லட்சம் பயணியரால், 69 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ள தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

1:41 AM IST
மதுரையில் 13 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதித்தோர் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது.

12:05 AM IST
ஆந்திராவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

11:15 PM IST
ஊரடங்கால் 61 சதவீதம் இந்தியர்கள் மனநிலை பாதிப்பு: ஆய்வில் தகவல்

ஊரடங்கால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 61 சதவீத இந்தியர்கள் மனநலம் தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

10:36 PM IST
கேரளாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

கேரளாவில் 14 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

10:36 PM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 731 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 731 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:20 PM IST
பாக்.,கில் பிரதமர் மாளிகையின் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில், பிரதமர் மாளிகையின் ஊழியர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.

9:10 PM IST
மும்பையில் இருந்து வந்த 3 மாவட்டங்களில் 29 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி:நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு நேற்று மும்பையில் இருந்து வந்த 29 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் எல்காட் வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மும்பையில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.துாத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த 12 பேருக்கும், தென்காசி மாவட்டத்திற்கு வந்த 3 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே 114 பேர் சிகிச்சையில் இருந்தனர். உள்ளூர் நபர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து 129 பேருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்படுகிறது.
துாத்துக்குடி மாவட்டத்தில ஒரு உள்ளூர் நபரை சேர்த்து 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 24 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

8:53 PM IST
மஹா.,வில் இன்று 2,347 பேருக்கு கொரோனா; பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது

மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று(மே 17) புதிதாக 2,347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது.

8:00 PM IST
மஹாவில் சிறை கைதிகள் 7200 பேர் விடுதலை

மஹா சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 7,200 கைதிகளை இடக்கால ஜாமீனில் அம்மாநில அரசு விடுதலை செய்துள்ளது.

7:15 PM IST
நாடு முழுவதும் மே.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இரண்டு வாரம் (மே 31 வரை) நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்டிஎம்ஏ) பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மே.31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

6:53 PM IST
சென்னையில் ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (மே 17) ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 480 பேரும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,750 ஆக அதிகரித்துள்ளது.

6:26 PM IST
தமிழகத்தில் 11 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 558 பேர் தமிழகத்திலும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தவர்களும் அடங்கும். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது. 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,172 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- தமிழக சுகாதாரத்துறை

5:02 PM IST
47 லட்சத்து 43 ஆயிரத்து 444 பேர் பாதிப்பு

இன்று ( மே.17ம் தேதி ) மாலை 5;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 47 லட்சத்து 43 ஆயிரத்து 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 13 ஆயிரத்து 704 பேர் பலியாகி உள்ளனர். 18 லட்சத்து 26 ஆயிரத்து 290 பேர் மீண்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரத்து 113 பேர் பலியாகி உள்ளனர்.

3:47 PM IST
மே 31 வரை தமிழகத்தில் ஊரடங்கு

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், 25 மாவட்டங்களில் மேலும் புதிய தளர்வுகளுடனும், சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் ஏதும் இல்லை என முதல்வர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

11:03 AM IST
அமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரத்து 113 பேர் பலி

இன்று ( மே.17ம் தேதி ) காலை 11;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 47 லட்சத்து 21 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 13 ஆயிரத்து 263 பேர் பலியாகி உள்ளனர். 18 லட்சத்து 12 ஆயிரத்து 189 பேர் மீண்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரத்து 113 பேர் பலியாகி உள்ளனர்.

6:46 AM IST
முழு அடைப்பு இனியும் தாங்காது: பாக்., பிரதமர் இம்ரான் கான்

'பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு அடைப்பால், 15 கோடி மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்; முழு அடைப்பை, காலவரையின்றி தொடர்வது சாத்தியமில்லை; எனவே, கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

5:51 AM IST
கொரோனாவுக்கு நேபாளத்தில் முதல் உயிரிழப்பு

நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


4:41 AM IST
சவுதியில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து 50 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.4:06 AM IST
டில்லி சிறையில் கைதிகளுக்கு கொரோனா தொற்று

டில்லி சிறையில், 15 கைதிகளுக்கும், தலைமை வார்டனுக்கும், 'கொரோனா' வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

3:25 AM IST
ஆந்திராவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ஆந்திராவில் புதிதாக நோய் பாதித்தவர்களில், கர்னூல் மற்றும் நெல்லூரில் தலா 9 பேர் மற்றும் சித்தூரில் 8 பேர் என தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் நோய் தொற்றுக்கு 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1353 பேர் நோய் தொற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

2:27 AM IST
கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் 15 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 2 ஆயிரத்து 476 ஆனது. பலியானவர்கள் எண்ணிக்கை 89,409 ஆனது.3 லட்சத்து 37 ஆயிரத்து 145 பேர் மீண்டுள்ளனர்.

1:44 AM IST
பஞ்சாபில் ஊரடங்கு 31 வரை நீட்டிப்பு

அமிர்தசரஸ்: நான்காம் கட்ட ஊரடங்கு, நாடு முழுதும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், பஞ்சாபில், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், நேற்று இரவு கூறியதாவது:மாநிலத்தில் ஊரடங்கு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நாளை முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படும். பொது போக்குவரத்தை குறைந்த அளவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் தொழில்கள் துவக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1:33 AM IST
துபாயிலிருந்து கேரளா வந்த 181 இந்தியர்கள்

வந்தே பாரத் மிஷனில் துபாயிலிருந்து 181 பேர் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.

12:27 AM IST
திருப்பதி: கட்டுப்பாடுகளுடன் தரிசனத்திற்கு விரைவில் அனுமதி

திருப்பதியில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்க முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகிறது.


12:08 AM IST
முகக்கவசம் அணிந்து ஜாகிங் செல்வது உயிருக்கு ஆபத்து!

சீனாவை சேர்ந்த 26 வயது இளைஞர் முகக்கவசம் அணிந்த படி பல கி.மீ ஜாகிங் சென்று போது, அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நாடுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முகக்கவசத்தை பல மணி நேரம் அணிந்திருப்பதும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்கள்.

11:15 PM IST
எப்போதும் மாஸ்க் அணியும் இவாங்கா

அமெரிக்க அதிபரின் மகளும் டிரம்பின் மூத்த ஆலோசகர்களில் ஒருவருமான இவாங்கா, அதிபரை சந்திக்கும் போதுமட்டுமல்லாமல் எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்கிறார்.

இது குறித்து இவாங்கா கூறியதாவது:கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த ஊழியர்களுக்கு நடந்த பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிபர் டிரம்ப் உடன் இருக்கும் யாரும் மாஸ்க் அணியவில்லை. ஆனால், இந்த வாரம் தனது தந்தை டிரம்ப் உடன் இருக்கும் போதும் சரி மற்ற நேரங்களில் எப்போதும் தான் மாஸ்க் அணிவதாகவும், மேலும் அதிபர் டிரம்ப்பை சந்திக்க வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

10:04 PM IST
மகாராஷ்டிராவில் 1,440 போலீசாருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் 1,440 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மஹாவில் இதுவரை மொத்தம் 27,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 1,019 பேர் பலியாகி உள்ளனர்.

9:10 PM IST
ரஷ்யாவில் புதிதாக 9,200 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 119 பேர் கொரோனவிற்கு பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:34 PM IST
பொது போக்குவரத்தை தவிர்க்க இந்தியர்கள் முடிவு:ஆய்வில் தகவல்

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இந்தியர்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

8:26 PM IST
அரசு ஊழியர்களுக்கு பஸ்வசதி: அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்லுவதற்கு ஏதுவாக பஸ் வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


8:00 PM IST
கொரோனாவிலிருந்து விடுபட்ட கம்போடியா

கம்போடியாவில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு மக்கள் அதன் பிடியில் இருந்து தப்பி உள்ளனர்.

7:31 PM IST
வெளி மாநில தொழிலாளர்களை சந்தித்தார் ராகுல்

டில்லியில் புலம் பெயர்ந்து சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களை காங். எம்.பி. ராகுல் சந்தித்து பேசினார்.

7:05 PM IST
சென்னையில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (மே 16) ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,271 ஆக உயர்ந்துள்ளது.

6:45 PM IST
தமிழகத்தில் 10,585 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (மே 16) புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585 ஆகவும், பலி எண்ணிக்கை 74 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 384 பேரும், பிற நாட்டில் இருந்து வந்த 4 பேர், பிற மாநிலங்களை சேர்ந்த 89 பேர் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 6970 சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு கூறினார்.

3:23 PM IST
17 லட்சத்து 68 ஆயிரத்து 315 பேர் மீண்டனர்

இன்று ( மே.16ம் தேதி ) மாலை 03 ;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 46 லட்சத்து 42 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 8 ஆயிரத்து 923 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்து 68 ஆயிரத்து 315 பேர் மீண்டுள்ளனர்.

11:38 AM IST
3 லட்சத்து 8 ஆயிரத்து 651 பேர் பலி

இன்று ( மே.16ம் தேதி ) காலை 11 ;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 46 லட்சத்து 28 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 8 ஆயிரத்து 651 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்து 59 ஆயிரத்து 673 பேர் மீண்டுள்ளனர்.

6:28 AM IST
ஈரானில் ஒரு மாதத்துக்கு பின் ஒரே நாளில் 2,102 பேருக்கு கரோனா

ஈரானில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவு ஒரே நாளில் சுமார் 2,102 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5:24 AM IST
சென்னையில் பெண் மருத்துவர், மருத்துவ மாணவியருக்கு கொரோனா

சென்னை மருத்துவ கல்லுாரி மாணவியர் நால்வர், அரசு மருத்துவர் உட்பட, 61 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

4:23 AM IST
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் நன்கொடை : டிரம்ப்

இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரி்ல் பதவிவேற்றியது,
பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை வீழ்த்த இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்.

3:51 AM IST
கொரோனா ; சவுதியில் மேலும் 9 பேர் பலி

கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து சவுதியில் இன்று 9 பேர் பலியாகினர். கொரோனா பாதிப்புகளில் இருந்து 2,307 பேர் குணமடைந்தனர்.

3:10 AM IST
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்காது

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்காது என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


2:50 AM IST
அரபு எமிரேட்சில் புதிதாக 747 பேருக்கு கொரோனா

கொரோனா னைரசின் பாதிப்பு அதிகரித்து ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2:05 AM IST
சிங்கப்பூரில் மேலும் 793 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து சிங்கப்பூரில் புதிதாக 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:26 AM IST
கொரோனாவை முதலில் விரட்டியடித்த ஸ்லோவேனியா

புதிய கொரோனா தொற்று இல்லாத நிலையில் ஸ்லோவேனியா தனது எல்லைகளை திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை முதலில் விரட்டிய ஐரோப்பிய நாடு ஸ்லோவேனியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

1:15 AM IST
மஹாவில் புதிதாக ஒரே நாளில் 1,576 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,576 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த ஒரு நாளில் 41 பேர் கொரோனாவுக்கு மாநிலத்தில் பலியாகி உள்ளனர்.

12:35 AM IST
ரஷ்யாவில் புதிதாக 10,598 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


11:43 PM IST
50 சதவீத நோயாளிகளிடம் அறிகுறி இல்லை; சமூகப் பரவலால் மலேசியா கவலை

மலேசிய சுகாதார அமைச்சக பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரில் 50 சதவீதத்தினருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகள் வெளிப்படையாக தென்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.வைரஸ் தொற்றிய பலரிடம் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும், அறிகுறிகள் தென்படுவோரின் உடலில் எந்தளவுக்கு வைரஸ் தாக்கம் உள்ளதோ அதே அளவுக்கு இவர்களது உடலிலும் வைரஸ் பரவியிருக்கிறது.அறிகுறிகள் தென்படாதோர் மூலமாகவும் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும். இதனால் சமூகத்தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.10:45 PM IST
ஆந்திராவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:06 PM IST
கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா

கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்புள்ள நாடுகளில் 11வது இடம் பிடித்தது.இன்று(மே 15) மாலை 4.02 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 546ஆக உயர்ந்தது. சீனாவில் கொரோனா பாதிப்பு 82,933.

9:29 PM IST
தெலுங்கானாவில் கொரோனாவை கண்காணிக்க டி.டி.எஸ் திட்டம்

தெலுங்கானாவில் கொரோனாவை கண்காணிக்க பல இடங்களில் டிடிஎஸ் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

8:29 PM IST
சென்னையில் புதிதாக 310 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (மே 15) புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக உயர்ந்தது.அதிகபட்சமாக சென்னையில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், சென்னை வந்த மாலத்தீவை சேர்ந்த ஒருவரும் இதில் அடக்கம். இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக உயர்ந்தது.

8:15 PM IST
தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா; ஒரே நாளில் 434 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று (மே 15) புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் 4 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

7:28 PM IST
மங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா

துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மங்களூருக்கு வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:00 PM IST
கொரோனா பரவல்: சிலியில் தயார் நிலையில் கல்லறைகள்

தென்அமெரிக்க நாடான சிலியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் தோண்டப்பட்டு தயார்நிலையில் உள்ளன.

5:28 PM IST
17 லட்சத்து 17 ஆயிரத்து134 பேர் மீண்டனர்

இன்று ( மே.15ம் தேதி ) மாலை 5 ;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 45 லட்சத்து 46 ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 3 ஆயிரத்து 880 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்து 17 ஆயிரத்து134 பேர் மீண்டுள்ளனர்.

11:40 AM IST
45 லட்சத்து 27 ஆயிரத்து 291 பேர் பாதிப்பு

இன்று ( மே.15ம் தேதி ) காலை 11 ;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 45 லட்சத்து 27 ஆயிரத்து 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 3 ஆயிரத்து 418 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்து 5 ஆயிரத்து 835 பேர் மீண்டுள்ளனர்.

7:14 AM IST
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த வியட்நாம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது வியட்நாம்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வாங்கி உள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 312 ஆக உள்ளது. இதில், 260 பேர் சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6:18 AM IST
கொரோனா: 17 லட்சத்து 2 ஆயிரத்து 113 பேர் மீண்டனர்

இன்று ( மே.15ம் தேதி ) காலை 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 45 லட்சத்து 21 ஆயிரத்து 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 3 ஆயிரத்து 070 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்து 2 ஆயிரத்து 113 பேர் மீண்டுள்ளனர்.

4:24 AM IST
உலக பாதிப்பு : 45 லட்சத்தை தாண்டியது

இன்று ( மே.15ம் தேதி ) அதிகாலை 04 ;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 45 லட்சத்து 16 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 2 ஆயிரத்து 894 பேர் பலியாகி உள்ளனர். 16 லட்சத்து 98 ஆயிரத்து 290 பேர் மீண்டுள்ளனர்.

4:04 AM IST
கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

3:30 AM IST
பிரேசிலில் கொரோனா பலி 13 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து பலியானவர்களின் எண்ணிக்கை 13,240 ஆக அதிகரித்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

3:00 AM IST
கொரோனாவால் உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும்

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா., சபை கணித்துள்ளது.

2:38 AM IST
துபாயில் இருந்து ஒடிசா வந்த 149 இந்தியர்கள்

சவுதி அரேபியாவில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு149 இந்தியர்கள் நேற்று இரவு வந்திறங்கினர்.

1:26 AM IST
சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் மக்கள் ; மணிப்பூர் முதல்வர் வேண்டுகோள்

கொரோனாவால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மணிப்பூர் மாநில மக்கள் தங்களது பயணம் குறித்த விபரங்களை அரசிடம் மறைக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்தார்.

12:30 AM IST
ஒரே மாதத்தில் 4 மடங்கு அதிகரித்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 3,722 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்காக அதிகரித்ததாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

11:33 PM IST
நெல்லை, தென்காசியில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10:41 PM IST
கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

9:38 PM IST
கோவை ரவுண்ட் அப்: கோவை, திருப்பூரில் தொற்று பாதிப்பு இல்லை

கோவையில் தொடர்ந்து, 10 வது நாளாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்த, 114 நபர்களும் குணமாகிவிட்டனர். கடந்த, 12 நாட்களாக புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.

8:59 PM IST
கொரோனா பாதிப்பு வழிகாட்டுதல்நெறி முறை தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் சோதனை நடத்தப்பட வேண்டும். அதே போல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டும்.

8:32 PM IST
ஆந்திராவில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,205 ஆக உள்ளது.இவ்வாறு அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

7:48 PM IST
70 சதவீத கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் ரஷ்யா

ரஷ்யாவில் இதுவரை, சுமார் 2.52 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53,530 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 2,305 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழ்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

7:00 PM IST
சென்னையில் ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (மே 14) ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 5,637 ஆக அதிகரித்துள்ளது.

6:53 PM IST

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 253 ஆண்கள் மற்றும் 194 பெண்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது. சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:23 PM IST
தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது. சென்னையில்இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 7365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

5:15 PM IST
மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்; நிர்மலா

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு இலவசமாக வழங்கப்படும். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தங்கும் முகாம் அமைக்கப்படும். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தங்கும் முகாம் அமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4200 கோடி ஒதுக்கீடு. விவசாயிகள் 3 மாத தவணைகள் வழங்க வேண்டியதில்லை. விவசாயிகள் கடனுக்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம். @subtitle@- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி@@subtitle@@

4:57 PM IST
பதினாறே முக்கால் லட்சம் பேர் மீண்டனர்

இன்று ( மே.14ம் தேதி ) மாலை 04 ;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 44 லட்சத்து 52 ஆயிரத்து 806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 2 லட்சத்து 98 ஆயிரத்து 737 பேர் பலியாகி உள்ளனர். 16 லட்சத்து 75 ஆயிரத்து 928 பேர் மீண்டுள்ளனர்.

3:43 PM IST
ரஷ்யாவில் 2,42,271 பேர் பாதிப்பு

ரஷ்யாவில் நேற்று (மே 13) 10,029 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,42,271 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக 11வது நாளாக ரஷ்யாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஸ்பெயினுக்கு அடுத்ததாக அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அங்கு இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,212 ஆக உயர்ந்துள்ளது.

11:26 AM IST
15 லட்சத்து 27 ஆயிரத்து 583 பேர் மீண்டனர்

இன்று ( மே.14ம் தேதி ) காலை 11;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 44 லட்சத்து 29 ஆயிரத்து 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 2 லட்சத்து 98 ஆயிரத்து 180 பேர் பலியாகி உள்ளனர். 15 லட்சத்து 27 ஆயிரத்து 583 பேர் மீண்டுள்ளனர்.

9:21 AM IST

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,281 லிருந்து 78,003 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,415 லிருந்து 2,549 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,386ல் இருந்து 26,235 ஆகவும் அதிகரித்தது. 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 134 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7:14 AM IST
ஐ.நா., சபை தலைமையகம் ஜூன் 30ம் தேதி வரை மூடல்

கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், ஜூன், 30ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

6:38 AM IST
சீனா மீது பொருளாதார தடை? ; அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

'கொரோனா வைரஸ் குறித்து உரிய தகவல்களை அளிக்க மறுத்தால், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்க வேண்டும்' என, அமெரிக்க பார்லியில், தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

6:02 AM IST
கொரோனாவை மட்டுமே கவனித்தால் மலேரியா, காசநோய் இறப்புகள் இரட்டிப்பாகும் !

ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் கொரோனா வைரஸை சமாளிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் காசநோய், எய்ட்ஸ், மலேரியா இறப்புகள் இந்தியா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

5:37 AM IST
மேலும் 13 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து, நேற்று மேலும் 13 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5:02 AM IST
இந்தியாவுக்கு ரூ 7,500 கோடி கடன் வழங்கியது, பிரிக்ஸ் வங்கி

இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, 'பிரிக்ஸ்' நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

4:09 AM IST
துபாயின் கோல்ட் சூக்கில் திறக்கப்பட்ட 500 கடைகள்

கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து, துபாயின் கோல்ட் சூக்கில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடையே துபாயில் கோல்ட் சூக் பார்வையாளர்களை மீண்டும் வரவேற்கிறது.

3:02 AM IST
தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

2:21 AM IST
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 4 தாசில்தார்களுக்கு கொரோனா தொற்று

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்த, மேலும், இரண்டு பெண் தாசில்தார்கள் உட்பட, மூவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1:57 AM IST
அமெரிக்காவில் டிஸ்சார்ஜ் 3 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 22 ஆயிரத்து 217 ஆனது. 84,554 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 6 ஆயிரத்து 298 பேர் குணமடைந்தனர்.

1:16 AM IST
சிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து சிங்கப்பூரில் மேலும் 675 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

12:37 AM IST
குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் பாதிப்புகளால் குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12:25 AM IST
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 881 பேர் பலி

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் (கடந்த 24 மணிநேரத்தில்) கொரோனா தொற்றால் 881 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

11:36 PM IST
சீனாவின் ஜிலின் நகரில் கொரோனா அச்சம்

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

11:10 PM IST
கொரோனாவுக்கு ஜப்பான் சுமோ மல்யுத்த வீரர் பலி

கொரோனா வைரஸுக்கு முதல் சுமோ மல்யுத்த வீரர் பலியாகி உள்ளார். இதை ஜப்பான் சுமோ அசோசியேஷன் (ஜேஎஸ்ஏ) உறுதிபடுத்தியுள்ளது.கடந்த மாதம் ஐந்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் தான் இப்போது உயிரிழந்துள்ளார். பலியான சுமோ வீரரின் பெயர் ஷோபுஷி. அவரது நிஜபெயர் கியோடகா சூட்டகே. அவரது வயது 28 மட்டுமே. அவர் மூன்றாம் நிலை சுமோ வீரர் ஆவார்.

10:50 PM IST
கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்

ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பஸ்போக்குவரத்து த