ஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் | Dinamalar
Advertisement
ஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர்
Updated : ஆக 12, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (252)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
9:47 AM IST
7 லட்சத்து 45 ஆயிரத்து 927 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 12ம் தேதி ) காலை: 09;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 5லட்சத்து 22 ஆயிரத்து , 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 45 ஆயிரத்து 927 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டுள்ளனர்.

5:07 AM IST
மஹாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மேலும் 10,014 பேர் மீட்பு

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,014 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,68,435 ஆக உயர்ந்தது. மஹா.,வில் தற்போது 1,48,553 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் நோய் பாதிப்பு 5 லட்சத்தை தாண்டி செல்கிறது.

2:45 AM IST
கொரோனா நெருக்கடியை சமாளிக்க திரிணமுல் அரசு தவறிவிட்டது

மேற்கு வங்கத்தில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க திரிணமுல் அரசு தவறி விட்டதாக மாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

12:55 AM IST
பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி கொரோனாவுக்கு பலி

ம.பி., மாநிலத்தை சேர்ந்த பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

11:45 PM IST
மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை ரத்து: மத்திய அரசு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தெரிவித்துள்ளது. அதே சமயம், சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

9:39 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 71.84 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 71.84 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

9:05 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 69.79 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக குறைந்தது. கொரோனா மீட்பு விகிதம் 69.79 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:35 PM IST
கொரோனா தடுப்பூசிக்கான நிபுணர் குழு கூட்டம் நாளை கூடுகிறது!

இந்தியாவில் மூன்று கொரோனா தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட ஆய்வில் உள்ள நிலையில், புதனன்று கொரோனா தடுப்பூசிக்கான நிபுணர் குழு கூட்டம் கூட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

7:50 PM IST
இந்தோனேசியா: மூன்றாம் கட்ட கொரோனா பரிசோதனை தொடக்கம்

இந்தோனேசியா கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தை தொடங்குவதாக தெரிவித்துள்ளது. உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு தனது அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட விரும்புவதால் இந்தோனேசியா பல கூட்டாளர்களுடன் ஒத்துழைக்கிறது. இது 2021 ஆம் ஆண்டின் மத்தியில் தயாராகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

7:12 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,108 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 97,574 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 388 பேருக்கும், திருவள்ளூரில் 362 பேருக்கும், ராணிப்பேட்டையில் 333 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 330 பேருக்கும், கோவையில் 324 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும், கடலூரில் 281 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,108 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,574 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருநெல்வேலியில் 496 பேரும், விருதுநகரில் 374 பேரும், காஞ்சிபுரத்தில் 368 பேரும், தேனியில் 342 பேரும், கடலூரில் 323 பேரும், செங்கல்பட்டில் 291 பேரும், மதுரையில் 278 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:45 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 2.5 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று (ஆக.,11) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,814 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 131 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-70) மூலமாக, இன்று மட்டும் 67,492 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 33 லட்சத்து 60 ஆயிரத்து 450 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 6,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். அதில், 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,159 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,810 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:05 PM IST
7 லட்சத்து 39 ஆயிரத்து 785 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 11ம் தேதி ) மாலை: 05;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 2லட்சத்து 81 ஆயிரத்து , 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 39 ஆயிரத்து 785 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 32 லட்சத்து 05 ஆயிரத்து 974 பேர் மீண்டுள்ளனர்.

12:10 PM IST
7 லட்சத்து 38 ஆயிரத்து 965 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 11ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 2லட்சத்து 58 ஆயிரத்து , 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 38 ஆயிரத்து 965 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 31 லட்சத்து 89 ஆயிரத்து 347 பேர் மீண்டுள்ளனர்.

6:55 AM IST
ஒரு கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 312 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 11ம் தேதி ) காலை: 06;55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்து, 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 37 ஆயிரத்து 912 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 312 பேர் மீண்டுள்ளனர்.

6:07 AM IST
இலங்கையில், மீண்டும் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் 4 மாதங்களுக்கு பின் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன.

5:06 AM IST
கர்நாடகா: 99,126 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 99,126 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 54 சதவீதமாக உள்ளது.

4:05 AM IST
கேரளாவில் ஒரே நாளில் 784 பேர் குணமடைந்தனர்

கேரளாவில் ஒரே நாளில் 784 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,616 ஆக உயர்ந்தது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் மாநில அளவில் 63.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

3:04 AM IST
மஹாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மேலும் 6,711 பேர் மீட்பு

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 6,711 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மஹா.,வில் தற்போது 1,47,735 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் நோய் பாதிப்பு 5 லட்சத்தை தாண்டி செல்கிறது. மும்பையை பொறுத்தவரை நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 925 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். மும்பையின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,24,307 ஆக உள்ளது. மேலும் 46 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது மும்பையில் 19,172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


2:03 AM IST
பிச்சை எடுத்த பணத்தில் ரூ.80 ஆயிரம் கொரோனா நிதி

பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.இவர், மே முதல் பிச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 7 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.

1:02 AM IST
அரபு எமிரேட்சில் மேலும் 198 பேர் மீட்பு

அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 198 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

12:00 AM IST
தந்தையின் உடலை பார்க்க மகனிடம் ரூ 51,000 லஞ்சம்

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உடலைக் காட்ட மருத்துவமனை நிர்வாகம் அவர் மகனிடம் ரூ 51,000 லஞ்சம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்நிகழ்வுகளை மொபைலில் படம் எடுத்த குடும்பத்தினரின் மொபைலையும் அவர்கள் பறித்து கொண்டனர். இறுதியில் குடும்பத்தினரிடம் காட்டாமலேயே இறந்தவரின் உடலை தகனம் செய்து விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், இறந்தவரின் முகவரி தெரியாத காரணத்தால், தாங்களே உடம்பை தகனம் செய்து விட்டதாக கூறி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முறையாக போலீசில் புகார் செய்ய சாகர் குப்தா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

11:05 PM IST
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் மீட்பு

திருப்பதியில் கொரோனா பாதிக்கப்பட்ட தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10:00 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 69.33 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 69.33 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.

9:30 PM IST
உள்நாட்டு விமான சேவை: 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்

உள்நாட்டு விமான சேவையால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

9:05 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 71.31 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 71.31 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:30 PM IST
குஜராத்தில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்

குஜராத்தில் கொரோனா பாதிப்புகளையொட்டி, பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

7:55 PM IST
சென்னை: 4வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 96,466 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 976 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 483 பேருக்கும், திருவள்ளூரில் 399 பேருக்கும், தேனியில் 357 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 310 பேருக்கும், கோவையில் 292 பேருக்கும், கடலூரில் 287 பேருக்கும், கன்னியாகுமரியில் 205 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,305 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,466 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 388 பேரும், விருதுநகரில் 355 பேரும், செங்கல்பட்டில் 341 பேரும், திருவள்ளூரில் 337 பேரும், தேனியில் 321 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், மதுரையில் 298 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

7:30 PM IST
தமிழகத்தில் 2.44 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,10) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,037 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.44 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,879 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 35 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 130 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-69) மூலமாக, இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 114 பேர் உயிரிழந்தனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 80 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,099 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7:05 PM IST
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எடியூரப்பா

கொரோனாவிலிருந்து குணமடைந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா,77 இன்று வீடு திரும்பினார்.கர்நாடகா பா.ஜ. முதல்வர் எடியூரப்பாவின் முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கடந்த வாரம் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து எடியூரப்பாவிற்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரானா தொற்று உறுதியானது. பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நோய் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.

5:32 PM IST
2 கோடியே 46 ஆயிரத்து, 652 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 10ம் தேதி ) மாலை: 12;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 46 ஆயிரத்து, 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 34 ஆயிரத்து 528 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் மீண்டுள்ளனர்.

1:02 PM IST
7 லட்சத்து 34 ஆயிரத்து 025 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 10ம் தேதி ) மதியம்: 12;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 26 ஆயிரத்து, 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 34 ஆயிரத்து 025 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 29 லட்சத்து 757 பேர் மீண்டுள்ளனர்.

6:55 AM IST
ஒரு கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 479 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 10ம் தேதி ) காலை : 06;55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 16 ஆயிரத்து, 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 33 ஆயிரத்து 607 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 479 பேர் மீண்டுள்ளனர்.

6:40 AM IST
தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு

தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், இன்று(ஆக., 10) முதல் செயல்பட உள்ளன.பயிற்சி பெறுவோர், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
சாதாரண முக கவசம் அணிய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் மட்டுமே, ஒரு கருவியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பயிற்சி பெறுவோரின் உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும், இன்று முதல் செயல்பட உள்ளன.

4:46 AM IST
தமிழகத்தில் தளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்

தமிழகத்தில், தளர்வில்லாத முழு ஊரடங்கு, நேற்று நிறைவடைந்தது. இன்று(ஆக.,10) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.நேற்று மாநிலம் முழுதும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன், முழு ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

4:03 AM IST
கர்நாடகாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமானது

கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 93,908 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது.

3:45 AM IST
கேரளாவில் இதுவரை 21,836 பேர் குணமடைந்தனர்

கேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 63.5 சதவிகிதமானது.இன்றைய தேதியில் கேரளாவில் 1,49,357 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 12,347 பேர் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

2:24 AM IST
சவுதியில் கொரோனாவில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு

சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 1,599 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 1,599 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 2,52,039 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 33,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 1,816 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர்.

1:22 AM IST
தெலுங்கானா: செப்., இறுதிக்குள் தொற்று பாதிப்பு விகிதம் குறையும்

தெலுங்கானாவில் செப்.,மாத இறுதிக்குள் கொரோனா தொற்றின் பாதிப்பு விகிதம் (Curve Flatten) குறையலாம் என சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக பொது சுகாதார இயக்குனர் டாக்டர்.ஜி சீனிவாச ராவ் கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்புகள் GHMC யின் கீழ் குறைந்து வருவதால், ஊக்கமளிக்கும் அறிகுறிகள் உள்ளன. ஆக.,இறுதியில் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பலவீனமடையும் என மதிப்பீடுகளில் தெரியவந்தது. தற்சமயம், ரங்காரெட்டி, மேட்சல், வாரங்கல் போன்ற மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில், செப்., இறுதிக்குள், கொரோனா தொற்று நோய் மாநிலத்தில் அதன் போக்கை இயக்கியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

12:22 AM IST
டில்லியில் கொரோனா பாதிப்பு உயர வெளி நோயாளிகளும் காரணம்

டில்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளில் வெளி நோயாளிகள் அதிகமாக இருப்பதும் காரணம் என சுகாதாரதுறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

11:45 PM IST
பிரிட்டனில் செப்., முதல் பள்ளிகள் திறப்பது அவசியம் : போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அவசியம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும்' இவ்வாறு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

10:58 PM IST
ரஷ்யாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 78 சதவீதம்

ரஷ்யாவில் இதுவரை 6.93 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 78 சதவிகிதமாக உள்ளது.இந்நிலையில் அந்நாட்டின் கமேலியா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து வரும் ஆக., 12ம் தேதி பதிவு செய்யப்பட உள்ளது. பதிவுக்கு பின் 1,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

9:40 PM IST
சிங்கப்பூரில் ஆரம்ப கட்ட கொரோனா சோதனை தொடக்கம்

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசிக்கான ஆரம்ப கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிக்கான ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனை சிங்கப்பூரிலும் தொடங்கப்பட்டு உள்ளது.முதல் தடுப்பூசிகள் அடுத்த வாரம் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

9:05 PM IST
நேபாளத்திற்கு வென்டிலேட்டர்கள் வழங்கியது இந்தியா

நேபாளத்திற்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது.நேபாள தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டிற்கு, 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.8 கோடி. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டதாக இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:35 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 70 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:05 PM IST
இந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 68.78 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7:35 PM IST
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, காங்., மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

7:05 PM IST
சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 94,100 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 396 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 251 பேருக்கும், திருவண்ணாமலையில் 222 பேருக்கும், ராணிப்பேட்டையில் 219 பேருக்கும், கோவையில் 217 பேருக்கும், விருதுநகரில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,061 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,161 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று மதுரையில் 463 பேரும், காஞ்சிபுரத்தில் 431 பேரும், செங்கல்பட்டில் 356 பேரும், விருதுநகரில் 338 பேரும், திண்டுக்கலில் 327 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:35 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,09) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.38 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,974 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 129 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-68) மூலமாக, இன்று மட்டும் 70,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 32 லட்சத்து 25 ஆயிரத்து 805 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 85 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,336 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:27 PM IST
ஒரு கோடியே 98 லட்சத்து , 30 ஆயிரத்து, 355 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 9ம் தேதி ) மாலை : 04;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 98 லட்சத்து , 30 ஆயிரத்து, 355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 30 ஆயிரத்து 151 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 689 பேர் மீண்டுள்ளனர்.

6:55 AM IST
ஒரு கோடியே 27 லட்சத்து 13 ஆயிரத்து 871 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 9ம் தேதி ) காலை ; 06;50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 97 லட்சத்து , 94 ஆயிரத்து, 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 28 ஆயிரத்து 788 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 27 லட்சத்து 13 ஆயிரத்து 871 பேர் மீண்டுள்ளனர்.

6:05 AM IST
இன்று எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு

தமிழகம் முழுதும், இன்று எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், இம்மாதம், 31ம் தேதி வரை, பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

5:05 AM IST
கேரளாவில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,866 ஆனது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 63 சதவிகிதமானது.

4:00 AM IST
கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து 89,238 பேர் குணமடைந்தனர்

கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 52 சதவிகிதமாக உள்ளது.

3:30 AM IST
அரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 பேர் மீட்பு

அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 230 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 230 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 56,245 ஆக உயர்த்தியுள்ளது.

2:40 AM IST
கொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்

கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில் பலர் நுரையிரல் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயினும், அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில், பலரும் நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகளாலபாதிக்கப்படுவதாக சுகாதாரதுறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

1:30 AM IST
பஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு

பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 331 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 40,276 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 2,872 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 40 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர். பஹ்ரைனில் நோய் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 9,395 பேர் பரிசோதிக்கப்பட்டனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 8,86,095 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

12:21 AM IST
அறிகுறியற்ற நபர்கள் மூலமாகவும் நோய் தொற்று பரவும் அபாயம்

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் தொற்று பாதிக்கப்பட்ட (அறிகுறியுடையவர்களை) போல் தொற்றை பரப்புவதாக தென் கொரிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:40 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 68.32 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.

10:25 PM IST
கோழிக்கோடு மீட்பு பணி: கொரோனா பரிசோதனை

கோழிக்கோடு விமான விபத்து நேரிட்ட இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அறிவித்துள்ளார்.

9:30 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 70 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:35 PM IST
உ.பி.,யின் நொய்டாவில் 400 படுக்கைகளுடன் மருத்துவமனை

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று திறந்து வைத்தார்.

7:50 PM IST
மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரானா பாதிப்பு

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோரை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

7:04 PM IST
சென்னை: 2வது நாளாக ஆயிரத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 94,100 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, தேனியில் 452 பேருக்கும், செங்கல்பட்டில் 425 பேருக்கும், திருவள்ளூரில் 391 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 284 பேருக்கும், தூத்துக்குடியில் 247 பேருக்கும், விருதுநகரில் 246 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், தென்காசியில் 203 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 869 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,100 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று ராணிப்பேட்டையில் 366 பேரும், திருவள்ளூரில் 327 பேரும், விழுப்புரத்தில் 277 பேரும், மதுரையில் 256 பேரும், தேனியில் 252 பேரும், தூத்துக்குடியில் 229 பேரும், சேலத்தில் 226 பேரும், கள்ளக்குறிச்சியில் 210 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:35 PM IST
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2.32 லட்சம் பேர் மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,08) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.32 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,866 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 17 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 129 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-68) மூலமாக, இன்று மட்டும் 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 31 லட்சத்து 55 ஆயிரத்து 619 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 618 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். தற்போது 53,481 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:20 PM IST
7 லட்சத்து 24 ஆயிரத்து 744 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 8ம் தேதி ) மாலை ; 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 95 லட்சத்து , 75 ஆயிரத்து, 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 24 ஆயிரத்து 744 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 25 லட்சத்து 70 ஆயிரத்து 831 பேர் மீண்டுள்ளனர்.

12:56 PM IST
7 லட்சத்து 24 ஆயிரத்து 149 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்-8ம் தேதி ) நன்பகல்; 12;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 95 லட்சத்து , 48 ஆயிரத்து, 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 24 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 24 லட்சத்து 65 ஆயிரத்து 149 பேர் மீண்டுள்ளனர்.

6:57 AM IST
ஒரு கோடியே 25 லட்சத்து 37 ஆயிரத்து 854 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 8ம் தேதி )காலை ; 06;55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 95 லட்சத்து , 32 ஆயிரத்து, 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 23 ஆயிரத்து 184 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 25 லட்சத்து 37 ஆயிரத்து 854 பேர் மீண்டுள்ளனர்.

6:09 AM IST
இந்தியா, சீனா செல்ல அமெரிக்கர்களுக்கு தடை

கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா நீக்கியுள்ளது. எனினும், 'இந்தியா, சீனா உட்பட, 50 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்' என, மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

3:31 AM IST
சவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்பு

சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 1,859 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 2,48,948 ஆக உயர்த்தியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 1,892 பேர் உள்ளனர்.

1:31 AM IST
தடுப்பூசி பரிசோதனை: விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்

தெலுங்கானாவில் தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகளுக்கு விரைவாக ஒப்புதல்களை வழங்க வேண்டுமென அம்மாநில அமைச்சர் கே.டி ராமாராவ் மத்திய அரசை வலியுறுத்தினார்.

12:14 AM IST
ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம்

ரஷ்யா அவசர கதியில் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து ஜார்ஜ் டவுன் பல்கலை, சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் கூறியதாவது:ரஷ்யா, விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்காது. மாறாக, சுகாதார சீர்கேடு தான் ஏற்படும். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், தடுப்பூசி மருந்தின் தன்மை தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

11:22 PM IST
தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 70.7 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 70.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


9:35 PM IST
கோவிட்ஷீல்டின் விலை ரூ.225 ஆக நிர்ணயம்

ஆக்ஸ்போர்டு பல்கலை கொரோனா தடுப்பூசி, கோவிட்ஷீல்டின் விலை இந்தியாவில் ரூ 225 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

8:33 PM IST
பாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்

கொரோனா பரவல் காரணமாக, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் 9ம் தேதி (ஞாயிறு) முதல் துவக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 21 முதல் சர்வதேச விமான போக்குவரத்தும், மார்ச் 26 முதல் உள்நாட்டு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 9ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

7:30 PM IST
ஆந்திராவில் 'க்யூ ஆர் கோடு' வசதி அறிமுகம்

ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை பெற க்யூ ஆர் கோடு உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

6:45 PM IST
சென்னையில் ஆயிரத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் பல நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 93,231 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 984 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 388 பேருக்கும், தேனியில் 351 பேருக்கும், செங்கல்பட்டில் 319 பேருக்கும், ராணிப்பேட்டையில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 252 பேருக்கும், கோவையில் 228 பேருக்கும், தஞ்சாவூரில் 217 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும், திருநெல்வேலியில் 200 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,103 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 93,231 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவண்ணாமலையில் 620 பேரும், திருவள்ளூரில் 449 பேரும், காஞ்சிபுரத்தில் 356 பேரும், ராணிப்பேட்டையில் 354 பேரும், செங்கல்பட்டில் 337 பேரும், கன்னியாகுமரியில் 298 பேரும், தேனியில் 276 பேரும், தூத்துக்குடியில் 240 பேரும், கோவையில் 224 பேரும், வேலூரில் 211 பேரும், விருதுநகரில் 205 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:20 PM IST
தமிழகத்தில் 6,488 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 24 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 126 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-65) மூலமாக, இன்று மட்டும் 67,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 30 லட்சத்து 88 ஆயிரத்து 066 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 575 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,759 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:26 PM IST
ஒரு கோடியே 92 லட்சத்து , 93 ஆயிரத்து, 828 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 7ம் தேதி ) மாலை ; 05;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 92 லட்சத்து , 93 ஆயிரத்து, 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 18 ஆயிரத்து 338 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 168 பேர் மீண்டுள்ளனர்.

12:51 PM IST
7 லட்சத்து 17 ஆயிரத்து 799 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 7ம் தேதி ) நன்பகல்; 12;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 92 லட்சத்து , 66 ஆயிரத்து, 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 17 ஆயிரத்து 799 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 521 பேர் மீண்டுள்ளனர்.

5:56 AM IST
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் இந்தியர்கள் மீட்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த 9.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

4:08 AM IST
மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 10,854 பேர் டிஸ்சார்ஜ்

மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,854 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேவேளையில் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது.இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,16,375 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2:40 AM IST
கர்நாடகா: 5,602 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,602 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்.இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,281 ஆனது. இதனால் அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 51 சதவீதமாக ஆனது.இன்றைய தேதியில் கர்நாடகாவில் மொத்தம் 75,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 671 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் 100க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

1:25 AM IST
கேரளா: 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.இதையடுத்து கொரோனாவாலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,300 ஆக உள்ளது. இதன் படி மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 60.40 சதவீதமாக உள்ளது.மாநிலத்தில் இதுவரை மொத்தம் 11,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,48,039 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,205 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

12:30 AM IST
பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்

கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது


9:10 PM IST
டிரம்ப் பதிவு நீக்கியது பேஸ்புக்; முடக்கியது டுவிட்டர்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்துக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியது; அவரது தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை முடக்கி டுவிட்டர், நடவடிக்கை எடுத்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில், பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் கொரோனாவை கொண்டு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா குறித்து தவறான தகவலை பதிவிட்டதால், அவரது பதிவை முதன்முறையாக நீக்கி பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான பதிவை நீக்கினால் மட்டுமே மீண்டும் டுவிட் செய்ய முடியும் என்ற டுவிட்டர் நிறுவனத்தின் விதிமுறைப்படி, டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.

8:27 PM IST
மாநிலங்களுக்கு ரூ.890.32 கோடி கொரோனா நிதி

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, 2வது தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழகம், மஹா., உ.பி., ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, 2வது தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மருத்துவப் பரிசோதனைக்கான பொது சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்த இந்த 2வது தவணை நிதி செலவிடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பி.சி.ஆர். சாதனங்கள் கொள்முதல், திறன் வளர்த்தல், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆஷா திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


7:50 PM IST
சென்னையில் இதுவரை 92,128 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,272 பேர் இன்று (ஆக.,06) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 1,162 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,091 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,06,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும், ராணிப்பேட்டையில் 270 பேருக்கும், திருநெல்வேலியில் 250 பேருக்கும், தூத்துக்குடியில் 239 பேருக்கும், கன்னியாகுமரியில் 222 பேருக்கும், கடலூரில் 214 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,162 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,128 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 447 பேரும், திருவள்ளூரில் 394 பேரும், மதுரையில் 330 பேரும், காஞ்சிபுரத்தில் 309 பேரும், திருவண்ணாமலையில் 301 பேரும், தேனியில் 276 பேரும், திருச்சியில் 248 பேரும், தூத்துக்குடியில் 246 பேரும், கன்னியாகுமரியில் 242 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

7:30 PM IST
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2.21 லட்சம் பேர் மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,06) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.21 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,642 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 42 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 126 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-65) மூலமாக, இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 30 லட்சத்து 20 ஆயிரத்து 714 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,380 பேர் ஆண்கள், 2,304 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,68,889 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,10,228 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 087 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 110 பேர் உயிரிழந்தனர். தற்போது 53,486 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

12:16 PM IST
7 லட்சத்து 11 ஆயிரத்து 277 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 6ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 89 லட்சத்து , 79 ஆயிரத்து, 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 11 ஆயிரத்து 277 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 21 லட்சத்து 71 ஆயிரத்து 965 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 387 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 6ம் தேதி ) காலை ; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 89 லட்சத்து , 65 ஆயிரத்து, 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 10 ஆயிரத்து 287 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 387 பேர் மீண்டுள்ளனர்.

2:16 PM IST
7 லட்சத்து 04 ஆயிரத்து 635 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 5ம் தேதி ) மதியம் ; 02;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 87 லட்சத்து , 17 ஆயிரத்து, 086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 04 ஆயிரத்து 635 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 19 லட்சத்து 9 ஆயிரத்து 511 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 5ம் தேதி ) காலை ; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 86 லட்சத்து , 92 ஆயிரத்து, 376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 3 ஆயிரத்து 381 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 19 லட்சத்து 9 ஆயிரத்து 511 பேர் மீண்டுள்ளனர்.


5:13 AM IST
கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்

'கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும், பி.பி.இ., எனப்படும், தனிநபர் பாதுகாப்பு உடையில் இருந்து, எரிபொருளை உருவாக்கலாம்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

4:10 AM IST
கத்தாரில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 252 பேர் மீட்பு

கத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 252 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கத்தாரில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 252 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 1,08,254 ஆக உயர்த்தியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 390 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 2,356 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. கத்தாரில் இதுவரை 5,05,148 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

3:09 AM IST
மஹாராஷ்டிரா: கொரோனா மீட்பு விகிதம் 65.37 சதவீதமாக உயர்வு

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொரோனா மீட்பு விகிதம் 65.37 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மஹா,வில் மும்பையில் நேற்று கொரோனா தொற்று காரணமாக 709 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 56 பேர் பலியாகி யுள்ளனர். மும்பையில் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,18,130 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 6,546 ஆகவும் அதிகரித்தது. ஆயினும் மும்பையில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 90,962 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 20,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2:08 AM IST
அரபு எமிரேட்சில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதமாக உயர்வு

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 90 சதவீதமாக உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒரே நாளில் 227 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,090 ஆக உயர்ந்துள்ளது. எமிரேட்சில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதமாக உள்ளது. உலகின் அதிக மீட்பு விகிதங்களில் இது முன்னணியில் உள்ளது. தற்போது 5,911 பேர் சிகிச்சையில் உள்ளனர். எமிரேட்சில் இதுவரை 5.18 மில்லியன்சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:07 AM IST
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஐதராபாத்தில் இருந்து வரும்

கொரோனாவிற்கு எதிரான போரில் உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் தெலுங்கானா தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாக அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் தெரிவித்தார்.கொரோனா சோதனை காலங்களில் ஐதராபாத் மருந்துதுறை தனது திறமையை நிரூபித்ததுடன், உலகின் தடுப்பூசி மூல தனங்களில் தனது நிலையை உறுதி செய்துள்ளது.


12:07 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 % குறைவு

அமெரிக்காவில் கொரோனாவிற்கான இறப்புகள் உயர்ந்து வருகின்றன. நோய் தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவீதமாக குறைகின்றன என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் கொரோனாவிற்கான சோதனை கடந்த வாரம் 6 சதவீதமாக குறைந்துள்ளது. இது மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து முதல் சரிவு என கூறப்படுகிறது. தேசிய அளவில் 8.2 சதவீத சோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் கருத்தில் கொண்ட 5 சதவீத அளவை விட இன்னும் அதிகமாக உள்ளது. ஏனெனில் சமூகத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நோய் பாதிப்புகள் அதிகம் இருப்பதாக இது தெரிவிக்கிறது. பகுப்பாய்வின் படி, அமெரிக்காவின் 31 மாநிலங்களில் கொரோனாவிற்கான பாதிப்பு விகிதங்கள் 5 சதவீதத்திற்கும் மேல் இருந்தன. இவற்றில் அலபாமாவில் 22 சதவீதம், மிசிசிப்பியில் 21 சதவீதம் , புளோரிடா மற்றும் கன்சாஸ் மாகாணங்களில் 19 சதவீதமாக உள்ளன.

11:08 PM IST
கோவையில் இன்று ஒரே நாளில் 233 பேர் 'டிஸ்சார்ஜ்'

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 233 பேர் இன்று தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,918 ஆக உயர்ந்தது.கோவை மாவட்டத்தில், கொரோனாவால் பதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, 4,897 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 2,921 படுக்கைகள் மருத்துவனைகளிலும், 1,976 கொரோனா சிகிச்சை மையங்களிலும் உள்ளன. தற்போது, 1,714 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதில், 1,021 பேர் மருத்துவமனைகளிலும், 653 பேர் சிறப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

10:06 PM IST
ஒடிசாவில் கொரோனா பாதிப்பு ஆக.,ல் 50,000 வரை உயரும்

ஒடிசாவின் மொத்த கொரோனா பாதிப்புகள் ஆக, மாதத்தில் 50,000 ஆக உயரக் கூடும் என சுகாதாரதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து Institute of Life Sciences (ILS) இயக்குனர் அஜய் பரிதா கூறுகையில், கொரோனாவின் தனிமைகள் வெவ்வேறாக இருப்பதால் ஆக.,மாதத்தில் மொத்த பாதிப்புகள் என்னவாக இருக்கும் என துல்லியமாக கணிக்க முடியாது. ILS என்பது இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் ஒரு ஆராய்ச்சி ஆய்வகமாகும், மேலும் ஒடிசாவில் கோவிட் -19 கொள்கை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

9:01 PM IST
தெலுங்கானா:கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:00 PM IST
பத்து மாநிலங்களில் 82 சதவீதம் கொரோனா பாதிப்பு

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 82 சதவீதம் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


7:40 PM IST
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா

மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பரவல் வேகமெடுத்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடியூரப்பா, சிவராஜ்சிங் சவுகான், திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

7:15 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,501 பேர் இன்று (ஆக.,04) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,023 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 424 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், தேனியில் 292 பேருக்கும், கடலூரில் 264 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், கோவையில் 228 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், தூத்துக்குடியில் 189 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,143 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,969 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று காஞ்சிபுரத்தில் 559 பேரும், விருதுநகரில் 447 பேரும், செங்கல்பட்டு, தென்காசியில் தலா 386 பேரும், தூத்துக்குடியில் 349 பேரும், திருவள்ளூரில் 319 பேரும், கோவையில் 233 பேரும், தஞ்சாவூரில் 200 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:49 PM IST
தமிழகத்தில் குறையும் பாதிப்பு; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று (ஆக.,04) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது நேற்றைய டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை (5,800 பேர்) விட அதிகமாகும். அதேபோல், இன்று 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நேற்றைய பாதிப்பை (5,609 பேர்) விட குறைவாகும். இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைவாகவும், குணமடைந்தவர்கள் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 28 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 125 ஆய்வகங்கள் (அரசு-60 மற்றும் தனியார் 65) மூலமாக, இன்று மட்டும் 55,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 28 லட்சத்து 92 ஆயிரத்து 395 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 08 ஆயிரத்து 784 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 108 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:53 PM IST
ஒரு கோடியே 84 லட்சத்து , 80 ஆயிரத்து, 294 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 4ம் தேதி ) மாலை ; 05;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 84 லட்சத்து , 80 ஆயிரத்து, 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 98 ஆயிரத்து 254 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 17 லட்சத்து 5 ஆயிரத்து 588 பேர் மீண்டுள்ளனர்.

11:40 AM IST
6 லட்சத்து 97 ஆயிரத்து 244 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 4ம் தேதி ) காலை ; 11;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 84 லட்சத்து , 47 ஆயிரத்து, 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 97 ஆயிரத்து 244 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 16 லட்சத்து 80 ஆயிரத்து 369 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 16 லட்சத்து 65 ஆயிரத்து 884 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்.4ம் தேதி ) காலை ; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 84 லட்சத்து , 35 ஆயிரத்து, 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 96 ஆயிரத்து 823 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 16 லட்சத்து 65 ஆயிரத்து 884 பேர் மீண்டுள்ளனர்.

6:19 AM IST
சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு

சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.இதில் சென்னை, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் இனப்பெருக்க விகிதம் ('ஆர்' மதிப்பு) குறைந்துள்ளது.
அந்தவகையில் டில்லியில் இந்த மதிப்பு 0.66 ஆக உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒவ்வொரு 100 பேரிடம் இருந்தும் சராசரியாக 60 பேருக்கு மட்டுமே கொரோனா பரவுகிறது. இது மும்பையில் 0.81 ஆகவும், சென்னையில் 0.86 ஆகவும் உள்ளது

5:10 AM IST
கர்நாடகாவில் 62,500 பேர் மீண்டனர்

கர்நாடகாவில் இதுவரை 62,500 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமைடைந்தவர்கள் விகிதம் 44.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.


4:28 AM IST
அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து 248 பேர் மீட்பு

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 248 பேர் குணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,863 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,949 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களுடனாக 43,000 க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அறிவித்துள்ளது.

4:09 AM IST
தனிமைப்படுத்திக்கொண்டார் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார்

கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நேற்று திரிபுரா பா.ஜ. முதல்வர் பிப்லப் தேவ் குமார் தனது டுவிட்டரில் கூறியது, கடந்த சில தினங்களுக்கு எனது குடும்ப உறுப்பினர் சிலருடன் தொடர்பில் இருந்ததையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது.

இதையடுத்து எனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையறிந்து உடல் பரிசோதனை செய்து கொண்டுள்ளேன்.அதன் முடிவு இன்னும் வரவில்லை. இதையடுத்து எனது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

3:08 AM IST
சவுதியில் ஒரே நாளில் 1,972 பேர் மீட்பு

சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1972 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 1972 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 2,42,053 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சவுதியில் கொரோனா மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 2,017 பேர் உட்பட தற்போது மருத்துவ சிகிச்சையில் 35,091 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 36,666 க்கும் மேற்பட்ட பிசிஆர் சோதனைகளை (PCR Test) நடத்தியது. அதன்பின் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

2:07 AM IST
கொரோனா தடுப்பூசி; 'சீரம்' நிறுவனத்தின் அடுத்த கட்ட ஆய்வு

'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம், மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி, முதற்கட்ட ஆய்வை முடித்ததை அடுத்து, அடுத்த இரு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் அனுமதியை பெற்றுள்ளது.

1:07 AM IST
எடியூரப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நேற்று இரவு ( ஆக.,2) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 77 வயதாகும் எடியூரப்பாவுக்கு உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12:06 AM IST
ஓமனில் இருந்து நாடு திரும்பிய 50,000 இந்தியர்கள்

ஓமனில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 50,000 பேர் இந்தியா வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக லட்சக் கணக்கான இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். 5 ம் கட்ட திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர அரசு திட்டமிட்டுள்ளது.ஓமன் உள்ளிட்ட நாடுகளில் எண்ணற்ற இந்தியர்கள் வேலை செய்கின்றனர். ஓமனில் 7,70,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் எனவும், சிலர் தொழில் வல்லுனர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதும், கொரோனா தொற்றுக்கு சோதனை செய்யப்படுவர். பிறகு தனிமைப்படுத்துதலுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:05 PM IST
டில்லியில் ஒரே நாளில் 937 பேர் மீட்பு

டில்லியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 937 பேர் மீட்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.டில்லியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுவோரின் விகிதமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 937 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,24,254 ஆக உயர்ந்தது. தற்போது 10,207 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 10,133 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. டில்லியில் இதுவரை 10,73,802 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன.

10:04 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 10,221 பேர் மீண்டனர்

மஹா.,வில் இன்று(ஆக.,3) ஒரே நாளில் 10,221 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று மட்டும் 8,968 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 4,50,196 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 266 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 15,842 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 10,221 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனையடுத்து குணமாகி வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,030 ஆக அதிகரித்துள்ளது. 1,47,018 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:02 PM IST
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஆன்டிஜென் சோதனை

உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த விரைவான ஆன்டிஜென் சோதனைகளை பயன்படுத்துவதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


8:35 PM IST
கொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் முன்பதிவு

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் முன்பணம் பெற்றுக் கொண்டு பணக்காரர்களுக்கும், வி.ஐ.பி.,க்களுக்கும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை முன்பதிவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து விசாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தங்களுக்கு கொரோனா வந்தால் படுக்கை வேண்டும் என்பதற்காக செல்வந்தர்கள் பலர் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை கொடுத்து முன்பதிவு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நகரில் உள்ள 4 கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இந்த தவறு நடப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இம்மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள் இடம் இல்லை என்று கூறி விரட்டப்படும் அவலம் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக இம்முறைகேடு நடந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

8:05 PM IST
சிவராஜ் சிங் சவுகானுக்கு ராக்கி கட்டிய நர்ஸ்

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு, அங்கு பணியாற்றும் நர்ஸ் ஒருவர், ராக்கி கட்சி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகானுக்கு, சகோதரர்கள் தின விழாவான ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்த நர்ஸ் ஒருவர், அவருக்கு ராக்கி அணிவித்தார். அவர் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் பணிபுரியும் நர்ஸ் சரோஜ் என்பவர் ராக்கி கட்டிவிட்டு, ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து அவரை ஆசிர்வதித்த சவுகான், அவருக்கு நன்றி தெரிவித்தார்.

7:35 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 71.8 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 71.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 1,019 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,609 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 71.3 சதவீதமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 11,911 பேர் வீட்டுத் தனிமையிலும், 18,500 பேர் சிகிச்சையிலும்உள்ளனர். தினமும் 20,000 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 983 பேருக்கு தொற்று உறுதியானது.

6:35 PM IST
சென்னையில் 1,222 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,03) கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரில் அதிகபட்சமாக சென்னையில் 1,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,222 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 88,826 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று காஞ்சிபுரத்தில் 528 பேரும், செங்கல்பட்டில் 438 பேரும், திருவள்ளூரில் 337 பேரும், விழுப்புரத்தில் 250 பேரும், வேலூரில் 246 பேரும், விருதுநகரில் 238 பேரும், தூத்துக்குடியில் 227 பேரும், கடலூரில் 216 பேரும், திருநெல்வேலியில் 211 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,021 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, ராணிப்பேட்டையில் 382 பேருக்கும், விருதுநகரில் 348 பேருக்கும், திருவள்ளூரில் 332 பேருக்கும், செங்கல்பட்டில் 331 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 322 பேருக்கும், தேனியில் 305 பேருக்கும், கோவையில் 227 பேருக்கும், கன்னியாகுமரி, தூத்துக்குடியில் தலா 215 பேருக்கும், திருவண்ணாமலையில் 212 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

6:10 PM IST
தமிழகம்: கொரோனா டிஸ்சார்ஜ் 2 லட்சத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,03) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,577 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 32 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 122 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 63) மூலமாக, இன்று மட்டும் 58,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 28 லட்சத்து 37 ஆயிரத்து 273 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 02 ஆயிரத்து 283 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 109 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,241 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,698 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:29 PM IST
ஒரு கோடியே 82 லட்சத்து , 61 ஆயிரத்து, 354 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்.3ம் தேதி ) மாலை ; 05;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 82 லட்சத்து , 61 ஆயிரத்து, 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 93 ஆயிரத்து 411 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 14 லட்சத்து 62 ஆயிரத்து 033 பேர் மீண்டுள்ளனர்.

12:24 PM IST
6 லட்சத்து 92 ஆயிரத்து 893 பேர்

இன்று ( ஆகஸ்ட்.3ம் தேதி ) நன்பகல்; 12;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 82 லட்சத்து , 39 ஆயிரத்து, 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 92 ஆயிரத்து 893 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 14 லட்சத்து 50 ஆயிரத்து 127 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்.3ம் தேதி ) காலை; 6;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 82 லட்சத்து , 21 ஆயிரத்து, 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 92 ஆயிரத்து 384 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் மீண்டுள்ளனர்.

4:18 AM IST
கேரளா: 14,467 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கேரளாவில் இதுவரை 14,467 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கடந்த ஒரு நாளில் மட்டும் 682 பேர் புதிதாக தொற்றிலிருந்து குணமடைந்தனர் இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 56 சதவீதமாக உள்ளது.

3:44 AM IST
புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்

தமிழகம் முழுவதும், நேற்று அமல்படுத்தப்பட்ட, தளர்வில்லாத முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இன்று (ஆக.,3) முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகிறது.தமிழகம் முழுவதும், வரும், 31ம் தேதி வரை, தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

3:00 AM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2:18 AM IST
கர்நாடகா: 57,725 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை மொத்தம் 57,725 பேர் மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 42.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேலும் 4,077 பேர் குணமடைந்துள்ளனர்.30 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இன்றைய தேதியில் அங்கு 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 638 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.

1:16 AM IST
சவுதியில் கொரோனா மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்வு

சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படும் நோயாளிகளின் மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 2,553 பேர் முழுமையாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 2,40,081 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சவுதியில் கொரோனா மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 2,011 பேர் உட்பட தற்போது மருத்துவ சிகிச்சையில் 35,837 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 36,666 க்கும் மேற்பட்ட பிசிஆர் சோதனைகளை (PCR Test) நடத்தியது. அதன்பின் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

12:20 AM IST
பஹ்ரைனில் கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை

பஹ்ரைனில் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் வேண்டுமென்றே மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனாவை பரப்ப முயன்றதால் அவருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.இதுகுறித்து சுகாதாரதுறை கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தொற்று பரிசோதிக்கப்பட்ட பிறகு, தனது முக கவசத்தை (மாஸ்க்) வேண்டுமென்றே கழற்றி விட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியுள்ளார், பின் தன் கைகளில் மூச்சு திணறலை உள்ளிழுத்து, விரைவாக தொற்றை பரப்புவதற்காக மருத்துவர்களை தொட்டார். இது போன்ற விதிமீறல் / குற்ற செயல்களுக்காக தண்டனையை கீழ் குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தது.

11:20 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 9,926 பேர் மீண்டனர்

மஹா.,வில் இன்று(ஆக.,2) ஒரே நாளில் 9,926 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இதனையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 2,76,809 ஆக அதிகரித்துள்ளது.1,48,537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

10:16 PM IST
கொரோனா சிகிச்சை:தெலுங்கானா அரசு எச்சரிக்கை

தெலுங்கானாவில் கொரோனா சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவ மனைகளுக்கு அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்த நோயாளிகள் மற்றும் உறவினர்களிடமிருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக பல புகார்கள் வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றை குறைக்க போராடும் காலகட்டங்களில், சில தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, படுக்கைகளின் செயற்கை பற்றாக்குறையை உருவாக்குதல், முன்கூட்டியே 3-4 லட்சம் வரை கோருதல், சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு லட்சம் ரூபாய் வரை வசூலித்தல் மற்றும் மருத்துவ பில்கள் முடிக்கப்படாவிட்டால் நோயாளியின் உடலை விடுவிக்காதது, அறிகுறியற்ற வழக்குகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் பெருக்கம் போன்ற பல புகார்களை நாங்கள் பெற்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

9:18 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2.13 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.

9:15 PM IST
குவைத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 688 பேர் மீட்பு

குவைத்தில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 688 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.நாட்டில் நோய் தொற்றில் இருந்து மீ்ட்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 59,213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,041 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை 509,561 பேரின் மாதிரிகள் சேகரிக்கபப்ட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.


8:16 PM IST
14 நாள் தனிமை கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சகம்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வரும்.14 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்துதல் செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். அதில் 7 நாட்கள் சொந்த செலவில் முகாமிலும், 7 நாடுகளில் வீட்டிலும் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.

7:15 PM IST
சென்னையில் 1,303 பேர், செங்கல்பட்டில் 674 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,02) கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரில் அதிகபட்சமாக சென்னையில் 1,303 பேரும், செங்கல்பட்டில் 674 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,303 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 87,604 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 674 பேரும், திருவள்ளூரில் 376 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், ராணிப்பேட்டையில் 259 பேரும், தூத்துக்குடியில் 241 பேரும், வேலூரில் 231 பேரும், கோவையில் 224 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:36 PM IST
தமிழகம்: கொரோனா டிஸ்சார்ஜ் 2 லட்சத்தை நெருங்கியது

தமிழகத்தில் இன்று (ஆக.,02) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 122 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 63) மூலமாக, இன்று மட்டும் 60,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27 லட்சத்து 79 ஆயிரத்து 062 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 98 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,132 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,998 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:43 PM IST
6 லட்சத்து 89 ஆயிரத்து 497 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்.2ம் தேதி ) மாலை; 05;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 80 லட்சத்து , 52 ஆயிரத்து, 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 89 ஆயிரத்து 497 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 13 லட்சத்து 48 ஆயிரத்து 350 பேர் மீண்டுள்ளனர்.

12:26 PM IST
உலக கொரோனா: 1,80, 26,297 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்.2ம் தேதி ) நன்பகல்; 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 80 லட்சத்து , 26 ஆயிரத்து, 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 88 ஆயிரத்து 974 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 13 லட்சத்து 34 ஆயிரத்து 686 பேர் மீண்டுள்ளனர்.

7:11 AM IST
செப்.1-ல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அசாம் அரசு முடிவு

அசாமில் பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

6:45 AM IST
ஒரு கோடியே 13 லட்சத்து 19 ஆயிரத்து 560 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்.2ம் தேதி ) காலை ; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 80 லட்சத்து , 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 87 ஆயிரத்து 812 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 13 லட்சத்து 19 ஆயிரத்து 560 பேர் மீண்டுள்ளனர்.

5:45 AM IST
மாஸ்க் அணிய மறுப்பு: புறப்பட்ட இடத்திற்கு வந்த விமானம்

அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் கொண்டுவந்தனர்.

4:40 AM IST
கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவு: ரஷ்யா

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷ்யா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

3:18 AM IST
நான் மாஸ்க் அணியனும்னா ஊழல் ஒழியனும்: மெக்சிகோ அதிபர்

ஊழல் ஒழிந்தால்தான் நான் மாஸ்க் அணிவேன் என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் மாஸ்க் அணிவேன். பொருளாதாரம் மேம்பட மாஸ்க் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

2:30 AM IST
கேரளாவி்ல் 13,779 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கேரளாவில் இதுவரை மொத்தம் 13,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். கடந்த ஒரு நாளில் மட்டும் 752 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். 10,862 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் இதுவரை 13,779 பேர் மீண்டுள்ளதால் அங்கு கொரோனா மீட்பு விகிதம் 56 சதவீதமாக உள்ளது.

1:25 AM IST
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

தமிழகம் முழுதும், இன்று (ஆக.2) தளர்வில்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

12:30 AM IST
கொரோனா கட்டுப்பாடு:ஜெர்மனியில் போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று மேலும் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அங்கு அமலில் இருந்து வருகின்றன.இந்நிலையில் சனிக்கிழமை அந்நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள பிரான்ட்பர்க் கேட்டிலிருந்து டியர்கார்டன் பார்க் வரை மக்கள் ஊர்வலமாக சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர். இந்த ஊர்வலத்தில் பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

11:30 PM IST
ஆந்திரா: ஒரே மாதத்தில் பத்து மடங்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திராவில் கடந்த ஜூன் இறுதியில் 14,600 ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் பத்து மடங்கு உயர்ந்து தற்போது 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

10:35 PM IST
அரபு எமிரேட்சில் மேலும் 346 பேர் மீண்டனர்

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 346 பேர் குணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒரே நாளில் 346 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,255 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,154 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களுடனாக 43,000 க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அறிவித்துள்ளது.

10:05 PM IST
அக்டோபரில் கொரோனா தடுப்பூசி ; ரஷ்யா திட்டம்

ரஷ்யாவில் கொரோனா தொற்றை எதிர்ப்பதற்கான தடுப்பூசி அக்., மாதத்தில் தயாராகும் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்தது.இது தொடர்பாக ரஷ்யாவின் சுகாதாரதுறை கூறுகையில், ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி சிறப்பான கட்டத்தில் உள்ளது. மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை பெரும்பாலும் முடித்துவிட்டது. அதனை பதிவு செய்வதற்கான ஆவணங்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அக்., மாதத்தில் தொற்றுக்கான தடுப்பூசியை திட்டமிட்டுள்ளோம். இது விரைவில் உள்ளூர் ஒழுங்குமுறை ஒப்புதலை பெறும் மற்றும் விரைவில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

9:35 PM IST
கர்நாடகா: கொரோனாவிலிருந்து 53,648 பேர் மீண்டனர்

கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களில் 53,648 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 73,219 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 602 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இருப்பினும் நேற்று ஒரே நாளில் புதிதாக அங்கு 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாநில அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,287 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 2,412 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் மட்டும் புதிதாக 1,852 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். ஒரே நாளில் பெங்களூருவில் மட்டும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.மாநிலத்தில் மொத்தம் 53,648 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 41.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

9:01 PM IST
30 நொடிகளில் கொரோனா பரிசோதனை

30 நொடிகளில் கொரோனாவை பரிசோதிக்கும் இஸ்ரேல் விஞ்ஞானிகளின் 4 தொழில் நுட்பங்கள் டில்லியில் பரிசோதிக்கப்பட உள்ளன.இஸ்ரேல் விஞ்ஞானிகள் டெராஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்காப்பி தொழில் நுட்பம், ஐசோதெர்மல் டெஸ்ட், அமினோஆசிட் முறை, பேச்சு அடிப்படையிலான பரிசோதனை என நான்கு தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த 4 தொழில்நுட்பங்களும் டில்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் இரு முறைகளில் பரிசோதிக்கப்பட உள்ளனர். முதலில் ஆர்டி-பிசிஆர் முறையிலும், இரண்டாவதாக இஸ்ரேல் தொழில்நுட்ப அடிப்படையில் ப்ரீதேலைசர் கருவியை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்படும்.

8:22 PM IST
கோவாக்சின் பரிசோதனை: அனைவரும் நலம்

இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

7:45 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 71.7 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 71.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 1,114 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,502 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 71.7 சதவீதமாக உள்ளது. ஒப்பிடுகையில் தேசிய சராசரி 64 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 11,359 பேர் வீட்டுத் தனிமையிலும், 17,754 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் நேற்றிரவு வரை 21,011 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 2,083 பேருக்கு தொற்று உறுதியானது.

7:18 PM IST
இரு மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரில் இன்று (ஆக.,01) அதிகபட்சமாக சென்னையில் 1,385 பேரும், விருதுநகரில் 1,084 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, காஞ்சிபுரத்தில் 368 பேருக்கும், தேனியில் 327 பேருக்கும், செங்கல்பட்டில் 314 பேருக்கும், திருவள்ளூரில் 305 பேருக்கும், விருதுநகரில் 286 பேருக்கும், தூத்துக்குடியில் 243 பேருக்கும், திருவண்ணாமலையில் 242 பேருக்கும், கோவையில் 238 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,385 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று விருதுநகரில் 1,084 பேரும், செங்கல்பட்டில் 435 பேரும், திருவள்ளூரில் 392 பேரும், தூத்துக்குடியில் 337 பேரும், தேனியில் 299 பேரும், தஞ்சாவூரில் 288 பேரும், காஞ்சிபுரத்தில் 268 பேரும், ராணிப்பேட்டையில் 241 பேரும், கோவையில் 216 பேரும், மதுரையில் 208 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:45 PM IST
தமிழகத்தில் இதுவரை 1.90 லட்சம் பேர் மீண்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,01) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,010 ஆக உள்ளது. இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரித்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,822 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 57 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 121 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 62) மூலமாக, இன்று மட்டும் 60,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27 லட்சத்து 18 ஆயிரத்து 718 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 966 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 99 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,738 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:19 PM IST
ஒரு கோடியே 77 லட்சத்து , 94 ஆயிரத்து, 572 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்.1ம் தேதி ) மாலை ; 05;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 77 லட்சத்து , 94 ஆயிரத்து, 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 83 ஆயிரத்து 798 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 775 பேர் மீண்டுள்ளனர்.

10:08 AM IST
6 லட்சத்து 82 ஆயிரத்து 999 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்.1ம் தேதி ) காலை ; 10;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 77 லட்சத்து , 58 ஆயிரத்து, 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 82 ஆயிரத்து 999 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 11 லட்சத்து 61 ஆயிரத்து 510 பேர் மீண்டுள்ளனர்.

6:28 AM IST
மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ்

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றனர்.இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.


6:05 AM IST
பிரிட்டனில் ஊரடங்கு தளர்வு இல்லை

பிரிட்டனில் வடக்கு பகுதியில் கொரோனா பரவல் மீண்டும் துவங்கி இருப்பதால் ஊரடங்கு தளர்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


5:25 AM IST
குவைத்தில் கொரோனா தொற்றில் இருந்து 602 பேர் மீட்பு

குவைத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 602 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. குவைத்தில் தொற்று பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் இன்று புதிதாக 428 பேர் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 66,957 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக 2 பேர் பலியாகினர். குவைத்தில் இதுவரை 447 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 296 பேர் குவைத்தையும், 132 பேர் பிறநாடுகளையும் சேர்ந்தவர்கள்.குவைத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 602 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 57,932 ஆக உயர்ந்தது. இவர்களில் 134 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 2,920 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


4:35 AM IST
பஹ்ரைனில் கொரோனாவில் இருந்து புதிதாக 437 பேர் மீட்பு

பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 437 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.பஹ்ரைனில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 437 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 37,357 ஆக உயர்ந்தது. தற்போது 3,252 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.இதனால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 40,755 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 147 பேர் பலியாகியுள்ளனர்.

4:03 AM IST
தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 816 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,388 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உள்ளது. ஒப்பிடுகையில் தேசிய சராசரி 64 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 10,632 பேர் வீட்டுத் தனிமையிலும், 16,796 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் நேற்றிரவு வரை 21,380 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,986 பேருக்கு தொற்று உறுதியானது.


3:34 AM IST
8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% வரை சரிவு

நாட்டின் 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம், 15 சதவீதம் வரை சரிந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சில மாதங்களாகவே முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின், ஜூன் மாதத்திற்கான வளர்ச்சி விகிதங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

3:05 AM IST
கர்நாடகாவில் ஒரே நாளில் 3,130 பேர் மீண்டனர்

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,130 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணி்க்கை 49,788 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 72,005 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2:35 AM IST
தேர்தலை தள்ளிவைத்த ஹாங்காங் அரசு..!

ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, வரும் செப்டம்பரில் நடைபெறவிருந்த சட்டசபை தேர்தலை ஓராண்டுக்கு தள்ளிவைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.


2:05 AM IST
ஜார்க்கண்டில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகளையொட்டி ஆக.,31 வரை ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


1:35 AM IST
மாஸ்க்கினை பெட்ரோல் கொண்டு சுத்தம் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் மாஸ்க் பயன்படுத்துபவர்கள் அதை பெட்ரோல் கொண்டு சுத்தம் செய்யலாம் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்டே தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளியன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர், மாஸ்கினை சுத்தம் செய்ய கிருமி நாசினி இல்லாதவர்கள் பெட்ரோலை உபயோகப்படுத்துங்கள். ஒரு சில துளிகள் விட்டாலே போதும். நான் தமாஷாக பேசவில்லை என்று கூறினார்.

1:05 AM IST
ஆந்திராவில் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை

ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

12:30 AM IST
ஆந்திராவில் ஒரே நாளில் 3,822 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

ஆந்திராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,822 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் மூன்றாவது நாளாக 10,000 ஐ தாண்டி நோய் பாதிப்பு செல்வதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திராவில் இன்று புதிதாக 10,376 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,40,933 ஆக அதிகரித்தது. தொற்றுக்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 68 பேர் பலியாகினர். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,349 ஆக உயர்ந்தது.ஆந்திராவில் ஒரே நாளில் 3,822 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 63,864 ஆக உயர்ந்தது. தற்போது 75,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 19,51,776 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

11:46 PM IST
வியட்நாமில் கொரோனாவுக்கு முதல் பலி

வியட்நாம் நாட்டில், கொரோனாவுக்கு 70 வயது நபர் பலியானார். இது அந்நாட்டின் முதல் பலியாக பதிவாகி உள்ளது.9 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வியட்நாம், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. 99 நாட்களாக யாரும் கொரோனாவுக்கு பாதிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில், ஹோய் நான் பகுதியில், கொரோனா பாதிப்புக்குள்ளான 70 வயது நபர் உயிரிழந்தார். இது அந்நாட்டில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் பலியாக பதிவானது.வியட்நாம் பிரதமர் நேயென் ஜுவான் கூறியதாவது: டா மாங் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

10:46 PM IST
மாலவி நாட்டில் 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 மாணவிகள் கர்ப்பம்

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மாலவியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் 5 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து அந்நாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா பேசியதாவது, ' கடந்த ஐந்து மாத காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த சூழலில் 7,000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். பாலோம்பே நகரில் மட்டும் 1000 மாணவிகளும், மிசம்பா மற்றும் நசான்ஜே நகரில் 724 மாணவிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர்.' இவ்வாறு தெரிவித்தார்.

9:35 PM IST
வென்டிலேட்டர் சிகிச்சையில் 0.28 சதவீத நோயாளிகள்

இந்தியாவில் கொரோனா பாதித்த நோயாளிகளில் 0.28 சதவீதத்தினர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.இந்தியாவில் தொற்று பாதிப்பு விகிதம் குறைய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் தொற்றில் இருந்து மீ்ட்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மீட்டெடுப்புகளுடன் தற்போதைய தேசிய மீட்பு வீதம் 64.54% ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 0.28 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டர் ஆதரவு சிகிச்சையில் உள்ளனர். 1.61 சதவீத நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவிலும் (ஐசியு) , 2.32 சதவீத நோயாளிகள் ஆக்சிஜன் ஆதரவு சிகிச்சையிலும் உள்ளனர்.

9:03 PM IST
கோவையில் 3,029 பேர் 'டிஸ்சார்ஜ்'

கோவை மாவட்டத்தில் இன்று, 161 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதையடுத்து பாதிப்பிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை, 3,029 ஆக உயர்ந்துள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அதேவேளையில், தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கோவை மாவட்டத்தில் இன்று 169 பேருக்கு தொற்று உறுதியானதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4,821 ஆக உயர்ந்துள்ளது.கோவையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 184 பேர் குணமடைந்த நிலையில் நேற்று, 257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று, 161 பேர் குணமடைந்தனர். இதுவரை, 3,029 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 1,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானாலும், பாதிப்பிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதற்கு நிகராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


8:02 PM IST
3-ம் கட்ட தளர்வுகள்: கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் மோதல்

3-ம் கட்ட ஊரடங்கில் கெஜ்ரிவால் முடிவுக்கு கவர்னர் ஒப்பதல் தர துணை நிலை கவர்னர் மறுத்தார்.

'கொரோனா' ஊரடங்கில் ஆக., 1ம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின் 'மெட்ரோ' ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கலை அரங்கங்கள் இயங்காது. அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சமூக,- கலாச்சார கூட்டங்களுக்கான தடை உத்தரவு தொடரும் என்ற .அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் கட்ட தளர்வுகளில் ஓட்டல்கள், வாரச்சந்தைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஒப்புதல் தர மறுத்தார். தேசிய பேரிடர் மேலாண்மையின் மத்திய அரசின் பிரதிநிதி துணை நிலை கவர்னர் என்பதால் டில்லி அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்கும் அதிகாரம் உள்ளதாக கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

7:05 PM IST
சென்னை: குணமடைந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் இன்று (ஜூலை 31) அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 1,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை நெருங்கியது.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,013 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 99,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கன்னியாகுமரியில் 485 பேருக்கும், திருவள்ளூரில் 373 பேருக்கும், ராணிப்பேட்டையில் 359 பேருக்கும், விருதுநகரில் 357 பேருக்கும், செங்கல்பட்டில் 334 பேருக்கும், தேனியில் 299 பேருக்கும், தூத்துக்குடியில் 284 பேருக்கும், திருநெல்வேலியில் 222 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,026 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 84,916 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 663 பேரும், செங்கல்பட்டில் 649 பேரும், தூத்துக்குடியில் 352 பேரும், காஞ்சிபுரத்தில் 267 பேரும், ராணிப்பேட்டையில் 237 பேரும், மதுரையில் 202 பேரும், கள்ளக்குறிச்சியில் 199 பேரும், விருதுநகரில் 188 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:40 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 5,778 கொரோனாவில் இருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஜூலை 31) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.83 லட்சமாக அதிகரித்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,850 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 31 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 120 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 61) மூலமாக, இன்று மட்டும் 60,276 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 26 லட்சத்து 58 ஆயிரத்து 138 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 5,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 956 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,935 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 57,968 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:49 PM IST
ஒரு கோடியே 75 லட்சத்து , 12 ஆயிரத்து, 830 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.31ம் தேதி ) மாலை ; 05;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 75 லட்சத்து , 12 ஆயிரத்து, 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 77 ஆயிரத்து 550 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 9 லட்சத்து 66 ஆயிரத்து 392 பேர் மீண்டுள்ளனர்.

12:19 PM IST
ஒரு கோடியே 74 லட்சத்து , 82 ஆயிரத்து, 248 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.31ம் தேதி ) நன்பகல்; 12;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 74 லட்சத்து , 82 ஆயிரத்து, 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 76 ஆயிரத்து 825 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 911 பேர் மீண்டுள்ளனர்.

4:54 AM IST
கேரளாவில் 798 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 798 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,163 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,056 பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரளாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 54.5 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2:11 AM IST
கொரோனாவுடன் இனி மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்..ஜெனிவா நகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியது, உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


1:20 AM IST
கர்நாடகாவில் 3,793 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் மொத்தம் 3,793 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,694 ஆக உயர்ந்துள்ளது. இதன் படி கொரோனா பாதித்தவர்களில் மொத்தம் 39 சதவீதம் பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் மொத்தம் 69,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

12:23 AM IST
பஞ்சாபில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா இலவசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் இலவசமாக வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாபில் 14,946 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 10,213 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 361 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா இலவசமாக வழங்கப்படும் என பஞசாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பஞ்சாபில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற எனது அரசு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பிளாஸ்மாவை வாங்கவோ, விற்கவோ அனுமதி இல்லை. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், பிறர் உயிரை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

10:35 PM IST
கொரோனாவால் 51 வயதில் 10 ம் வகுப்பு பாஸ்

33 ஆண்டுகளாக10 ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனா உபயத்தால் ஆல் பாஸ் ஆகி உள்ளார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களும் 10 ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் அளித்துள்ளது. அதே நேரத்தில் பிளஸ் 1-ல் எந்த குரூப் கிடைக்கும் என்பதில் மாணவர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. அதே நேரத்தில் 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த ஒருவர் இந்த கொரோனா உபயத்தால் ஆல் பாஸ் ஆகி மகிழ்சியில் திளைத்துவருகிறார் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர்.

தெலுங்கானா மாநிலம் ஐ தராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987 ம் ஆண்டு 10 ம் வகுப்பு பொது தேர்வை எழுத துவங்கினார். அப்போது எழுதி தேர்வு முடிவில் ஆங்கிலத்தில் பெயிலாகி தேர்வில் தோல்வியடைந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி போதும் பாஸ் ஆவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33,34 என பெற்று தோல்வியையே தழுவிவந்தார்.இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு10 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் ஆல் பாஸ் என தெலுங்கானா மாநிலம் அறிவித்தது. இதனையடுத்து நூரூதினும் ஆல் பாஸ் ஆனார். இதனையடுத்து முதல்வர் சந்திரசேகரராவிற்கு நன்றி என கூறி உள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்தவர் முதல்வர் சந்திரசேகரராவ்.


8:05 PM IST
பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கம்

பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை ஓட்டினார்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்ட பல்வேறு நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பிரிட்டனில் மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக சைக்கள் உடற்பயிற்சி இயக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிமுகம் செய்து நம் நாட்டில் தயாரான ஹீரோ சைக்கிளை ஓட்டிச் சென்றார்.போரிஸ் ஜான்சன் தங்கள் நிறுவன சைக்கிளை ஒட்டியது குறித்து, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பங்கஜ் எம். முஞ்சல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


7:25 PM IST
கோவையில் 61% பேர் 'டிஸ்சார்ஜ்': குணமடைவோர் தொடர்ந்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று, 257 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் பாதிப்பிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை, 3,000த்தை நெருங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அதேவேளையில், தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோவையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 296 பேர் குணமடைந்த நிலையில் நேற்று, 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று, 257 பேர் குணமடைந்தனர். இதுவரை, 2,851 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானாலும், பாதிப்பிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதற்கு நிகராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6:45 PM IST
சென்னையில் 1,126 பேர், செங்கல்பட்டில் 580 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஜூலை 30) அதிகபட்சமாக சென்னையில் 1,126 பேரும், செங்கல்பட்டில் 580 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 98,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 354 பேருக்கும், திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும், திருநெல்வேலியில் 277 பேருக்கும், ராணிப்பேட்டையில் 272 பேருக்கும், தேனியில் 261 பேருக்கும், கன்னியாகுமரியில் 248 பேருக்கும், விருதுநகரில் 244 பேருக்கும், மதுரை மற்றும் தூத்துக்குடியில் தலா 220 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,126 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 580 பேரும், திருவள்ளூரில் 443 பேரும், தூத்துக்குடியில் 370 பேரும், காஞ்சிபுரத்தில் 263 பேரும், கோவையில் 257 பேரும், மதுரையில் 226 பேரும், ராணிப்பேட்டையில் 212 பேரும், கன்னியாகுமரியில் 176 பேரும், வேலூரில் 174 பேரும், தேனியில் 162 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:05 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது

தமிழகத்தில் இன்று (ஜூலை 30) ஒரே நாளில் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை (6,426) விட குறைவான பாதிப்பாகும்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 53 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 61) மூலமாக, இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 25 லட்சத்து 97 ஆயிரத்து 862 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,962 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:58 PM IST
ஒரு கோடியே 72 லட்சத்து , 17 ஆயிரத்து, 829 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.30ம் தேதி ) மதியம் ; 01;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 72 லட்சத்து , 17 ஆயிரத்து, 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 70 ஆயிரத்து 943 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 7 லட்சத்து 29 ஆயிரத்து 644 பேர் மீண்டுள்ளனர்.

1:32 PM IST
6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலி

இன்று ( ஜூலை.30ம் தேதி ) மதியம் ; 01;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 72 லட்சத்து , ஆயிரத்து, 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் மீண்டுள்ளனர்.

6:25 PM IST
தமிழகத்தில் இன்று 5,927 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,927 பேர்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 883 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 82 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,493 பேர் சிகிச்சையில் உள்ளனர். --தமிழக சுகாதாரத்துறை

4:27 PM IST
ஒரு கோடியே 69 லட்சத்து , 22 ஆயிரத்து, 232 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.29ம் தேதி ) மாலை; 04;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 69 லட்சத்து , 22 ஆயிரத்து, 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 64 ஆயிரத்து 172 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 4 லட்சத்து 85 ஆயிரத்து 634 பேர் மீண்டுள்ளனர்.

5:45 AM IST
குஜராத்: பெட்ரோல் டீலர்களுக்கு ரூ400 கோடி இழப்பு

லாக்டவுன் காலகட்டத்தில் குஜராத் மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4:55 AM IST
தடுப்பூசி காப்பாற்றுமா: டிரம்ப் நம்பிக்கை

உலக அளவில், அதிக பாதிப்பு மற்றும் அதிக பலியில், அமெரிக்கா தொடர்ந்து பல நாட்களாக முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு, 42 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 1.46 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தவில்லை என்ற விமர்சனம், டிரம்ப் நிர்வாகத்தின் மீது உள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலின் வெற்றி, தோல்வியை, கொரோனா வைரஸ் பாதிப்பும், தடுப்பூசியும் நிர்ணயிக்க உள்ளன என்பது மட்டும் நிச்சயம்.
3:19 AM IST
குறைந்தது கொரோனா பாதிப்பு; மும்பை மக்கள் நிம்மதி

மும்பையில் கடந்த 100 நாட்களுக்கு பிறகு, ஒரே நாளில் இன்று(ஜூலை 28) 700 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்ததால், மும்பை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


2:47 AM IST
3 மாநிலங்களில் குறைந்த கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களில், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், இந்திய அளவிலான பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது.டில்லியில் நேற்றைய பாதிப்பை விட இன்று 40 சதவீத கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது, இதே போல், ஆந்திராவில் 20 சதவீதம், மஹா.,வில் 16 சதவீத பாதிப்பு குறைந்துள்ளது. டில்லி, ஆந்திரா மற்றும் மஹா., ஆகிய 3 மாநிலங்கள் முறையே நேற்று(ஜூலை 27) 1,073 பேர், 7,627 பேர் மற்றும் 9,431 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இந்நிலையில், அதே மாநிலங்களில் இன்று(ஜூலை 28) முறையே 613 பேர், 6,051 பேர் மற்றும் 7,924 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி உள்ளது.

1:58 AM IST
ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 8,888 பேர் மீட்பு

ரஷ்யாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 8,888 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ரஷ்யாவில் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பரிசோதனை தொடர்ந்து அதிகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,23,515 ஆக அதிகரித்தது.அதே நேரத்தில் ஒரே நாளில் ரஷ்யாவில் நோய் பாதிப்புகளில் இருந்து 8,888 பேர் மீட்கப்பட்டனர். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,12,217 ஆக உயர்ந்தது. மேலும் 2,61,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

12:46 AM IST
மஹா.,வில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் மீண்டனர்

மஹா.,வில் இன்று(ஜூலை 28) ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 28) மட்டும் 7,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,91,440 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 282 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 14,165 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 10,333 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதையடுத்து, இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,32,277 ஆக உயர்ந்தது. குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,44,694 ஆக குறைந்துள்ளது.

11:45 PM IST
அசாம் சபாநாயகருக்கு கொரோனா: டிரைவருக்கு பாதிப்பு

அசாம் சட்டசபை சபாநாயகர் அமினுல் ஹக் லஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் பா.ஜ. எம்.எல்.ஏ.வும் சட்டசபை சபாநாயகருமான அமினுல் ஹக் தனது முகநூலில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது, நேற்று எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு முகநூலில் அமினுல் ஹக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அமினுல் ஹக்கின் கார் டிரைவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


10:40 PM IST
அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து 395 பேர் மீட்பு

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 395 பேர் குணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,905 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

10:00 PM IST
தெலுங்கானாவில் மீட்பு விகிதம் 75.1 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 75.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 803 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,909 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 75.1 சதவீதமாக உள்ளது.

9:38 PM IST
கோவையில் இன்று 296 பேர் 'டிஸ்சார்ஜ்'

கோவை மாவட்டத்தில் இன்று, 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; அதேவேளையில், 296 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், பாதிப்பிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது மக்களிடையே நம்பிக்கையை விதைத்து வருகிறது.

9:00 PM IST
இந்தியாவின் மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 64 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.

8:30 PM IST
மேற்கு வங்கத்தில் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் ஆக.,31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வாரத்தில் 2 நாட்கள் மட்டும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆக., 1ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், அன்றைய தினம் ஊரடங்கு இருக்காது எனவும் அறிவித்துள்ளார்.


8:00 PM IST
'ஸ்பெயினுக்கு செல்ல வேண்டாம்': ஜெர்மனி வேண்டுகோள்

ஜெர்மனி அரசின் மருத்துவ நிறுவனமான ராபர்ட் கோச், 'கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்று வந்தால் தொற்று அதிகரிக்கும். குறிப்பாக ஸ்பெயினில் தொற்று அதிகமுள்ளது. அங்கு சென்று வந்தால் ஜெர்மனியிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, எச்சரிக்கை விடுத்துள்ளது.

7:35 PM IST
தமிழகத்தில் மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் நிலவரம்

தமிழகத்தில் இன்று (ஜூலை 28) அதிகபட்சமாக சென்னையில் 769 பேரும், ராணிப்பேட்டையில் 418 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 769 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டையில் 418 பேரும், விருதுநகரில் 413 பேரும், தூத்துக்குடியில் 319 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், திருவள்ளூரில் 303 பேரும், கோவையில் 296 பேரும், செங்கல்பட்டில் 249 பேரும், தேனியில் 213 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், தேனியில் 283 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

7:00 PM IST
தமிழகத்தில் மேலும் 4,707 பேர் மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஜூலை 28) ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,972 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 61) மூலமாக, இன்று மட்டும் 61,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரத்து 866 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,233 பேர் ஆண்கள், 2,739 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,38,163 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 89,502 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,659 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:40 PM IST
ஒரு கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 499 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.28ம் தேதி ) மாலை; 04;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 66 லட்சத்து , 72 ஆயிரத்து, 855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 57 ஆயிரத்து 270 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 499 பேர் மீண்டுள்ளனர்.

11:51 AM IST
6 லட்சத்து 56 ஆயிரத்து 673 பேர் பலி

இன்று ( ஜூலை.28ம் தேதி ) காலை; 11;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 66 லட்சத்து , 52 ஆயிரத்து, 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 56 ஆயிரத்து 673 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 2 லட்சத்து 42 ஆயிரத்து 468 பேர் மீண்டுள்ளனர்.

7:18 AM IST
ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 863 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.28ம் தேதி ) காலை ; 07;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 66 லட்சத்து , 35 ஆயிரத்து, 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 56 ஆயிரத்து 081 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 863 பேர் மீண்டுள்ளனர்.


5:14 AM IST
குவைத்தில் ஒரே நாளில் 684 பேர் மீண்டனர்

குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 684 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,379 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 358 பேர் குவைத்தையும், 248 பேர் பிறநாடுகளையும் சேர்ந்தவர்கள். நோய் தொற்றுக்கு புதிதாக 5 பேர் பலியாகினர். குவைத்தில்பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 438 ஆக உயர்ந்துள்ளது.குவைத்தில் 121 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 684 பேர் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். குவைத்தில் தொற்று பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55,057 ஆக அதிகரித்தது.


4:13 AM IST
பாக்.,கில் 88 சதவீதம் பேர் மீண்டனர்

பாக்.,கில் கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதம் பேர் தொற்றிலிருந்து மீண்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.பாக்.கில் இதுவரை மொத்தம் 2,74,289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 2,41,026 பேர் தொற்றிலிருந்து குணமைடந்துள்ளனர். தற்போது 27,421 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தொற்றினால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,74,289 ஆக அதிகரித்தது. கடந்த ஒரு நாளில் 20க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,842 ஆக அதிகரித்துள்ளது.

3:01 AM IST
கர்நாடகாவில் ஒரே நாளில் 1,847 பேர் குணம் அடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 1,847 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,685 ஆக உயர்ந்தது. இன்றைய தேதியில் மொத்தம் 61,819 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 598 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

1:55 AM IST
பஹ்ரைனில் 484 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்பு

பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 484 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.தொற்றுக்கு புதிதாக பலியானவர்களில் 199 பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனவும், 177 பேர் உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் 8 பேர் பயணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டது. பஹ்ரைனில் நேற்று ஒர நாளில் கொரோனாவில் இருந்து 484 பேர் மீட்கப்பட்டனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,689 ஆக உயர்ந்தது.மொத்தம் 3,302 பாதிப்புகளில் 3,254 பாதிப்புகள் நிலையானவை என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:05 AM IST
கேரளாவில் இதுவரை 10,049 பேர் மீண்டனர்

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10,049 பேர் மீண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 51 சதவீதமாக உள்ளது.இன்றைய தேதியில் 9,609 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,417 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் கேரளாவில் மொத்தம் 495 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

12:10 AM IST
லாலுவுக்கு கொரோனா பாதிப்பில்லை

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத்துக்கு(72) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் உடல்நலன் பாதிப்பால், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியாகி உள்ளது. லாலுவின் உதவியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.


11:25 PM IST
மஹா.,வில் கொரோனா மீட்பு விகிதம் உயர்வு

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 56.74 சதவீதமாக உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்தது.


11:03 PM IST
வீட்டிலிருந்து பணி: 2021 ஜூன் வரை நீட்டித்தது 'கூகுள்'

உலக அளவில் கொரோனா தாக்கம் காரணமாக அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான 'கூகுள்' தனது ஊழியர்களை 2012 ஜூன் வரை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

10:21 PM IST
சவுதியில் சுற்றுலா விசா மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளையொட்டி, சவுதி அரேபியா சுற்றுலா விசாவை (வருகை விசா) மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.இதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலம் அங்கு சென்றவர்கள் கூடுதலாக மூன்று மாதம் சவூதியில் தங்கி கொள்ளலாம். தொற்று நோயால் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சவுதியின் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவே, மன்னர் சல்மான், தொடர்ச்சியான முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

9:30 PM IST
தெலுங்கானாவில் ஒரே நாளில் 774 பேர் டிஸ்சார்ஜ்

தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றில் இருந்து 774 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,106 ஆக அதிகரித்தது. நேற்று நிலவரப்படி, 12,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

9:00 PM IST
அபுதாபியில் விதிமுறைகள் அவசியம் பின்பற்ற வேண்டும்

அபுதாபிக்கு வரும் அனைத்து பயணிகளும் தொற்று இல்லாததை உறுதி செய்யும் பிசிஆர் சோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் புதிய விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்ற வேண்டும் எனவும் எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

8:31 PM IST
இந்தியாவில் தொடர்ந்து 4வது நாளாக 30,000 பேர் குணமாகினர்

இந்தியாவில் தொடர்ந்து 4வது நாளாக 30,000 பேர் கொரோனாவிலிருந்து, குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் வெறும் 2.28 சதவீதம் மட்டுமே இறப்பு வீதம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தீவிர பரிசோதனை மூலம், கொரோனா தொற்றினை ஆரம்ப நிலையில், கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.நாட்டில், தற்போது 4,85,114 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9,17,568 பேர் குணமாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:00 PM IST
மகளுடன் ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்

பாலிவுட் நடிகைஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானதில் ஜூலை 11-ம் தேதி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா அறிகுறி தென்பட்டது.இருவரும் கடந்த 17-ம் தேதி பாலிவுட் நடிகை ஐஸ்வர் ராய், அவரது மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 10 நாட்கள் அவர்கள் இருவருக்கும் பரிசோதனைகள் நடந்த நிலையில் ஐஸ்வர் ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

7:35 PM IST
கோவையில் கொரோனாவில் இருந்து மீள்வோர் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று, 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; அதேவேளையில், 202 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளது. அதேவேளையில், தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது 1,602 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

7:00 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,821 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஜூலை 27) அதிகபட்சமாக சென்னையில் 1,821 பேரும், விருதுநகரில் 628 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,064 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

6:32 PM IST
தமிழகத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 1.62 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (ஜூலை 27) ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.62 லட்சத்தை தாண்டியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,956 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 37 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 117 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 59) மூலமாக, இன்று மட்டும் 63,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 24 லட்சத்து 14 ஆயிரத்து 713 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 5,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 ஆக உள்ளது. தற்போது 54,896 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:14 PM IST
உலகில் மீளுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று ( ஜூலை.27ம் தேதி ) மாலை ; 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 64 லட்சத்து , 48 ஆயிரத்து, 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 52 ஆயிரத்து 883 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 69 ஆயிரத்து 542 பேர் மீண்டுள்ளனர்.

12:55 PM IST
உலக மீட்பு அதிகரிப்பு

இன்று ( ஜூலை.27ம் தேதி ) நன்பகல்; 12;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 64 லட்சத்து , 22 ஆயிரத்து, 064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 52 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 52 ஆயிரத்து 502 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 64 லட்சத்து , 5 ஆயிரத்து, 543 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.27ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 64 லட்சத்து , 5 ஆயிரத்து, 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 51 ஆயிரத்து 678 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 37 ஆயிரத்து 637 பேர் மீண்டுள்ளனர்.

5:46 AM IST
டில்லியில் ஒரே நாளில் 1,075 பேருக்கு கொரோனா

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,606 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 21 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 3,827 ஆக உயர்ந்தது.மேலும் ஒரே நாளில் டில்லியில் 1,807 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். அதன்படி இதுவரை அங்கு மொத்தம் 1,14,875 பேர் குணமடைந்தனர். இன்றைய தேதியில் அங்கு 11,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4:45 AM IST
ரஷ்யாவில் ஒரே நாளில் 5765 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 8,12,485 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு நாளில் 77 பேர் புதிதாக கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,269 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,00,250 பேர் அதிலிருந்து குணமடைந்தனர்.


3:43 AM IST
ரஷ்யாவில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று துவக்கம்

ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று (ஜூலை 27) துவங்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யாவில் முதற்கட்ட பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதற்கட்டமாக ரஷ்யாவில் 3 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 17 கோடி தடுப்பூசி மருந்துகள் 5 வெளிநாடுகளுக்கு தயாரித்துக் கொடுக்க தயாராக உள்ளது.

3:41 AM IST
ஜெர்மனியில் ஒரே நாளில் 305 பேருக்கு கொரோனா

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 305 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,05,269 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,118 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை தொற்றில் இருந்து 1.90 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

2:40 AM IST
தெலுங்கானாவின் ஒரே நாளில் 1,593 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,593 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,059 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 8 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 998 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,332 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் நேற்று நிலவரப்படி, 12,264 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


1:44 AM IST
கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,199 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,199 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது.

இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,141 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் மொத்தம் 58,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பெங்களூருவில் மட்டும் 45,453 பேர் கொரோனா பாதிப்பில் உள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெங்களூருவில் புதிதாக 1,950 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். மாநிலத்தில் ஒரே நாளில் 82 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து இதுவரை அங்கு மொத்தம் 1,886 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


1:05 AM IST
துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம்

துபாய் விமான நிலையங்களில் ஆக.,1 முதல் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.எமிரேட்ஸ் வழியாக பயணிப்பவர்கள் உட்பட, துபாய் நாட்டிற்கு வரும் அனைத்து விமான பயணிகளும் கட்டாயமாக தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதாவது பரிசோதனை செய்யப்பட்ட விமான நிலையத்தில் இருந்து (பயணிகள் கிளம்பும் விமான நிலையத்தில்) புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என விமானநிறுவனங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, ஆக., 1 முதல் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை (PCR Test) கட்டாயமாக இருக்கும். அதற்கான 29 நாடுகளின் பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

12:35 AM IST
கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 'சீரம்' நிறுவனம் விண்ணப்பம்

இந்தியாவில் 1,600 பேருக்கு கொரோனா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் புனேயைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.


11:40 PM IST
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 8.14 லட்சம் இந்தியர்கள் மீட்பு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 8.14 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திருப்பி அழைத்து வரப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

11:05 PM IST
முதலில் பிரியாணி: லாக்டவுனில் இந்தியர்கள் விருப்பம்

லாக்டவுன் காலகட்டத்தில் உணவுக்கு ஆர்டர் செய்த வகைகளில் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.உணவு டெலிவரி செய்துவரும் ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: லாக்டவுன் கால கட்டத்தில் இந்தியர்கள் புகழ் பெற்ற ஓட்டல்களில் இருந்து 5.5 லட்சம் முறை பிரியாணிக்காக ஆர்டர் செய்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக பட்டர்நான் 3,35,185 முறையும், மசால் தோசை 3,31,423 முறையும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக லாக்டவுன் காலகட்டத்தில் சுமார் 40 மில்லியன் அளவிற்கு ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.மேலும் 73 ஆயிரம் சானிடைசர்கள்,47 ஆயிரம் மாஸ்க்குகளும் டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:36 PM IST
கொரோனா பாதித்தால் அச்சப்படாதீர்கள்: ம.பி., முதல்வர் சவுகான்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அச்சப்படாதீர்கள் என கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சவுகான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நண்பர்களே நான் நலமுடன் இருக்கிறேன். சுயநலமின்றி, அர்ப்பணிப்புடன், உயிரை பணயம் வைத்து பணியாற்றும் கொரோனா வாரியர்சின் சேவை மதிப்பு வாய்ந்தது. கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைவருக்கும் எனது சல்யூட்.


10:01 PM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 351 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 351 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,913 ஆக உயர்ந்துள்ளது.புதிதாக ஒருவர் பலியானதை தொடர்ந்து நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. அரபு எமிரேட்சில் நோய் தொற்றில் இருந்து இதுவரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,182 ஆக உயர்ந்துள்ளது.

9:33 PM IST
திருப்பதியில் கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயதான மூதாட்டி

திருப்பதியில் கொரோனா பாதித்த 101 வயதான மூதாட்டி நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

9:00 PM IST
கொரோனாவை ஒழிக்க அனுமன் மந்திரம் பாராயணம்

கொரோனா வைரசை ஒழிக்க நாள்தோறும் 5 முறை அனுமன் மந்திரத்தை ஆக வரை சொன்னால் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று பிரக்யாசிங் தாக்கூர் டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்.

8:30 PM IST
சிக்கிமில் ஆக.,1 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

சிக்கிமில் கொரோனாவுக்கு முதல் நபராக ஒருவர் பலியானதையடுத்து ஊரடங்கு ஆக.,1ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

8:00 PM IST
ஆகஸ்டில் விற்பனைக்கு வரும் கொரோனா சிகிச்சை மாத்திரை

இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வர உள்ள சிப்லென்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ 68 என சிப்லா நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து சிப்லா நிறுவனம், 'கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் இந்த மாத்திரை விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அனைவருக்கும் மாத்திரைகள் கிடைக்கும் வகையில் மருத்துவமனைகள் மற்றும் மருந்துக்கடைகளில் இந்த மாத்திரைகள் விரைவில் வழங்கப்படும்' இவ்வாறு அறிவித்துள்ளது

7:30 PM IST
அமெரிக்காவில் தினமும் ஆயிரகணக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தினசரி ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை(ஜூலை 24) 1,130 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 900 பேர் உயிரிழந்தனர். 65 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, கொரோனாவுக்கு, அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,460 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மரணங்கள் அதிகரித்து வருவதால், ஆக.,15க்குள் மொத்த உயிரிழப்பு 1,75,000 ஆக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வில், அதேகாலகட்டத்தில் மொத்த உயிரிழப்பு 1,65,000 ஆக இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருவதால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

6:50 PM IST
சென்னையில் 1,315 பேர், திருவண்ணாமலையில் 681 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஜூலை 26) அதிகபட்சமாக சென்னையில் 1,315 பேரும், திருவண்ணாமலையில் 681 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,155 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 480 பேருக்கும், விருதுநகரில் 385 பேருக்கும், ராணிப்பேட்டையில் 367 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 363 பேருக்கும், தூத்துக்குடியில் 248 பேருக்கும், கோவையில் 220 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,315 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலையில் 681 பேரும், திருவள்ளூரில் 524 பேரும், தூத்துக்குடியில் 302 பேரும், சிவகங்கையில் 256 பேரும், மதுரையில் 249 பேரும், திருநெல்வேலியில் 231 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:17 PM IST
தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூலை 26) ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,911 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 75 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 116 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 58) மூலமாக, இன்று மட்டும் 64,129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 23 லட்சத்து 51 ஆயிரத்து 463 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 5,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,494 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:23 PM IST
ஒரு கோடியே 62 லட்சத்து , 33 ஆயிரத்து, 279 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.26ம் தேதி ) மாலை: 05;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 62 லட்சத்து , 33 ஆயிரத்து, 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 49 ஆயிரத்து 134 பேர் பலியாகி உள்ளனர். 99 லட்சத்து 33 ஆயிரத்து 182 பேர் மீண்டுள்ளனர்.

12:40 PM IST
6 லட்சத்து 48 ஆயிரத்து 477 பேர் பலி

இன்று ( ஜூலை.26ம் தேதி ) மதியம்: 12;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 62 லட்சத்து , 05 ஆயிரத்து, 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 48 ஆயிரத்து 477 பேர் பலியாகி உள்ளனர். 99 லட்சத்து 14 ஆயிரத்து 063 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
99 லட்சத்து 7 ஆயிரத்து 432 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.26ம் தேதி ) காலை : 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 61 லட்சத்து , 89 ஆயிரத்து, 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 47 ஆயிரத்து 598 பேர் பலியாகி உள்ளனர். 99 லட்சத்து 7 ஆயிரத்து 432 பேர் மீண்டுள்ளனர்.

5:45 AM IST
மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு 3.75 லட்சத்தை கடந்தது

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.75 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.2.42 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

4:35 AM IST
கேரளாவில் புதிதாக 1,103 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக ஒரே நாளில் 1,103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 18,098 ஆனது. ஒரே நாளில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.பாதிப்பு அடைந்தவர்களில் 9,420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 8,613 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 119 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 106 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். அவர்களில் 72 பேருக்கு யார் மூலமாக தொற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. 838 பேருக்கு கொரோனா நோயாளிகள் தொடர்பில் தொற்று ஏற்பட்டுள்ளது.

3:14 AM IST
அரபு எமிரேட்சில் 24 மணிநேரத்தில் தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஜூலையில் தற்போது மூன்றாவது முறையாக 24 மணிநேரத்தில் தொற்றால் யாரும் பலியாகவில்லை என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்த மாதத்தில்மூன்றாவது முறையாக (24 மணிநேரத்தில்) எந்தவொரு நபரும் தொற்றால் பலியாகவில்லை என அந்நாட்டின் சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அத்துடன் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்து மேலும் 393 பேர் குணமடைந்துள்ளனர்

2:30 AM IST
டில்லியில் குணமடைந்தோர் விகிதம் 87 சதவீதமாக உயர்வு

தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,142 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து தலைநகரில் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,531 ஆக உள்ளது, ஆனால், 2,137 பேர் ஒரே நாளில் தொற்றிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 1,13,068 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

தற்போது டில்லியில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,657 ஆக உள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 9.77 சதவீதம் பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் நாடு முழுவதும் 63 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 29 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்தம் 3,806 பேர் பலியாகி உள்ள நிலையில் அங்கு கொரோனா மரண விகிதம் 2.93 ஆக உள்ளது.


1:34 AM IST
தெலுங்கானாவின் ஒரே நாளில் 1,640 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,640 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 1,007 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,334 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 77.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, 11,677 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரு நாளில் 15,445 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

12:30 AM IST
கர்நாடகாவில் புதிதாக 5,072 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் புதிதாக 5.072 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 90,942 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 72 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்தம் 1,796 பேர் பலியாகி உள்ளனர்.

11:32 PM IST
அபுதாபியில் மூன்றாம் கட்ட கொரோனா பரிசோதனை

கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் அரபு எமிரேட்சில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வைரசை எதிர்கொள்ள ஐக்கிய அரபு எமிரேட் சமூகம் ஒன்றிணைந்ததன் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 20 வெவ்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஏராளமான தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக முன்வந்துள்ளனர். சோதனைகள் செயல்திறனுக்கான அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதை நிரூபிக்க இது உதவும்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்க ஒரு நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமை எங்களுக்கு உதவியது. இந்த பிரச்சாரம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், தடுப்பூசியின் விளைவுகளை அளவிடுவதற்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறையை வழங்கும் என்று தேசிய மருத்துவக் குழுவின் தலைவர்டாக்டர் நவல் அல்-காபி கூறியுள்ளார்.

10:30 PM IST
மும்பையில் பருவகால நோய்களும் பரவும் அபாயம்

மஹாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுடன் மலேரியா, டெங்கு போன்ற பருவகால நோய்களும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9:48 PM IST
ஓமனில் ஒரே நாளில் 1,067 பேருக்கு கொரோனா தொற்று

ஓமனில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 1,067 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரதுறை கூறுகையில், ஓமனில் இன்று கொரோனாவிற்கு 1,067 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,858 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றுக்கு ஒரு நாளில் 12 பேர் பலியாகினர். இதுவரை தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 371 ஆக அதிகரித்தது.

9:00 PM IST
102 வயதில் கொரோனாவை வென்ற கர்நாடகா மூதாட்டி

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 102 மூதாட்டி ஒருவர் முற்றிலும் குணமடைந்தார்.மாநில பெல்லாரி மாவட்டம் ஹுவின ஹடகளியைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஹல்லம்மா. இவர் வங்கியில் பணிபுரியும் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த ஜூலை 16ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தது தெரிய வந்துள்ளது.

8:35 PM IST
உலகின் தடுப்பூசி: 3ல் 1 பங்கு ஐதராபாத் உற்பத்தி செய்கிறது

கொரோனாவிற்கு எதிரான போரில் உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக தெலுங்கானாவின் தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் தெரிவித்தார்.

8:00 PM IST
பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மஹா அரசு முடிவு

மஹாராஷ்டிராவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவும் சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மஹாராஷ்டிர கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மஹாராஷ்டிரப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.

7:22 PM IST
தடுப்பு மருந்தை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்: போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு நூறு யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது. 11 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாஸ்க் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னதாக விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார். பிரிட்டனில் தடுப்பு மருந்து சோதனையை விமர்சித்தவர்களை முட்டாள்கள் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரச்சாரத்தில் விமர்சித்துள்ளார். மேலும் மாஸ்க் அணிவதை அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஜான்சன் திடீரென மருந்து கடைகள், ஷாப்பிங் மால்கள் என பொது இடங்களுக்கு மாஸ்க் அணிந்து சென்று மக்கள் முன் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புடன் அங்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்புக்கும் ஆளாகும் மக்களும் அதிகரித்துள்ளதால் அதற்கும் பிரிட்டன் தேசிய மருத்துவ அமைப்பான என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6:30 PM IST
தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,926 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 62 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 115 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 57) மூலமாக, இன்று மட்டும் 64,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 22 லட்சத்து 87 ஆயிரத்து 334 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 055 ஆக உள்ளது.. தற்போது 52,273 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,409 ஆக அதிகரித்துள்ளது.

5:32 PM IST
6 லட்சத்து 43 ஆயிரத்து 451 பேர் பலி

இன்று ( ஜூலை.26ம் தேதி ) மாலை: 05;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 59 லட்சத்து , 74 ஆயிரத்து, 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 43 ஆயிரத்து 451 பேர் பலியாகி உள்ளனர். 97 லட்சத்து 66 ஆயிரத்து 785 பேர் மீண்டுள்ளனர்.

12:25 PM IST
97 லட்சத்து 43 ஆயிரத்து 590 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.25ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 59 லட்சத்து , 47 ஆயிரத்து, 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 42 ஆயிரத்து 829பேர் பலியாகி உள்ளனர். 97 லட்சத்து 43 ஆயிரத்து 590 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
97 லட்சத்து 16 ஆயிரத்து 442 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.25ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 59 லட்சத்து , 30 ஆயிரத்து, 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 41 ஆயிரத்து 880 பேர் பலியாகி உள்ளனர். 97 லட்சத்து 16 ஆயிரத்து 442 பேர் மீண்டுள்ளனர்.

5:30 AM IST
டில்லி கொரோனா: குணமடைவோர் 86 சதவீதமாக அதிகரிப்பு

டில்லியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்ந்துள்ளது.

4:27 AM IST
கொரோனா பரிசோதனை:தெலுங்கானா புது முடிவு

தெலுங்கானாவில் தினசரி நடத்தப்படும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:26 AM IST
கர்நாடகாவில் புதிதாக 5,007 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மாநிலம் முழுவதும் 110 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்தது.

2:25 AM IST
கொரோனாவிலிருந்து மீண்ட முன்னாள் குஜராத் முதல்வர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து 80 வயது முன்னாள் குஜராத் முதல்வர் மீண்டுள்ளார்.ஜூலை 16ம் தேதி கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார்.வீடு திரும்பிய முன்னாள் முதல்வர் வகேலா முடங்கி விடவில்லை. தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் வாக்கிங் செல்வது மட்டுமில்லாமல் பளு தூக்கும் பயிற்சியிலும் ஈடுபட்டார். பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டார். 'Body fit+Mind fit= Life hit' என்ற தலைப்பில் சங்கர்சிங் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்ளில் வைரலாகின.

1:23 AM IST
லாக்டவுன் தளர்வுக்கு பின் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லை

லாக்டவுன் தளர்விற்கு பின்னர் நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.12:22 AM IST
சவுதியில் மேலும் 2,378 பேருக்கு கொரோனா

சவுதியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,378 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,772 ஆக உயர்ந்துள்ளது.இவற்றில் 44,369 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 2,143 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சவுதியில் ஒரே நாளில் 2,241 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,15,731 பேர் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,672 ஆகவும் உயர்ந்துள்ளது. நாட்டில் 52,502 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


11:21 PM IST
கேரளாவில் புதிதாக 885 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக ஒரே நாளில் 885 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,995 ஆனது, இன்று ஒரே நாளில் 4 பேர் மேலும் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 54 ஆனது.தற்போது கேரளாவில் 9,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 7,564 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இன்று ஜூலை 24ம் தேதி மட்டும் 968 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

10:00 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, பலி குறைவு

உலகிலேயே இந்தியாவில் தான் குறைவான கொரோனா பாதிப்பு மற்றும் குறைவான உயிர்பலி நேரிடுவதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

9:30 PM IST
ஆன்லைன் வகுப்பு: பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை

கொரோனாவால், பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வரும் நிலையில், தனது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்காக தந்தை ஒருவர், தனது குடும்பத்துக்கு வருமானம் தரும் பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய நிகழ்வு ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.

9:10 PM IST
விரைவில் விற்பனைக்கு 'பேவிபிராவிர்

கொரோனா சிகிச்சையில் பயன்படக்கூடிய மருந்தான 'பேவிபிராவிர்' இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


8:45 PM IST
தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.3 சதவீதம்

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மாநிலத்தின் நோய் தொற்றின் மீட்பு விகிதம் 77.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:25 PM IST
திரிபுராவில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை

திரிபுராவில் கொரோனா பாதித்தவர்களுக்கு விரைவில் பிளாஸ்மா சிகிச்சையை மாநில அரசு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


7:54 PM IST
கொரோனாவை எதிர்த்து போராடும் பாபிஜி அப்பளம்

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 'பாபிஜி' என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தி, அது கொரோனாவை எதிர்த்துப் போராடும் எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த அப்பளம் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வீடியோவில் பேசுகையில், 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ், 'பாபிஜி அப்பளம்' என்ற பெயரில் அப்பள நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். இந்த அப்பளம் கொரோனாவை எதிர்த்து பேராட உதவியாக இருக்கும்' என பேசியுள்ளார். அமைச்சரின் இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

7:25 PM IST
கோவையில் நாளை மாலை முதல் ஊரடங்கு

கோவையில் மேலும் 187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நாளை(ஜூலை 25) மாலை முதல் 27 காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2966 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1,275 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.ஞாயிறு தோறும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், கோவையில் சனிக்கிழமை மாலை முதல் இறைச்சி வாங்க மக்கள் அதிகம் கூடுகின்றனர். இதனால், கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6:47 PM IST
சென்னையில் மேலும் 1,299 பேருக்கு கொரோனா

இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 1,11வ பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 13,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் மேலும் 6,785 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூலை 24) புதிய உச்சமாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,729 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,729 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 56 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 114 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 56) மூலமாக, இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 019 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 ஆக உள்ளது.தற்போது 53,132 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:09 PM IST
ஒரு கோடியே 56 லட்சத்து , 84 ஆயிரத்து, 786 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.24ம் தேதி ) மாலை: 05;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 56 லட்சத்து , 84 ஆயிரத்து, 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 37 ஆயிரத்து 222பேர் பலியாகி உள்ளனர். 95 லட்சத்து 68 ஆயிரத்து 956 பேர் மீண்டுள்ளனர்.

12:34 PM IST
6 லட்சத்து 36 ஆயிரத்து 583 பேர் பலி

இன்று ( ஜூலை.24ம் தேதி ) நன்பகல்: 12;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 56 லட்சத்து , 56 ஆயிரத்து, 924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 36 ஆயிரத்து 583 பேர் பலியாகி உள்ளனர். 95 லட்சத்து 44 ஆயிரத்து 827 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து, 987 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.24ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து, 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 35 ஆயிரத்து 666 பேர் பலியாகி உள்ளனர். 95 லட்சத்து 30 ஆயிரத்து 135 பேர் மீண்டுள்ளனர்.

5:28 AM IST
பிளாஸ்மா தானம் செய்யுங்கள்:உத்தவ் தாக்கரே

இந்த வருடம் பிறந்தநாளை தான் கொண்டாடமாட்டேன் எனவும், தொண்டர்கள் போஸ்டர், பேனர் என எதுவும் ஏற்பாடு செய்யாமல் பிளாஸ்மா மற்றும் ரத்ததான முகாம்களை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

4:25 AM IST
30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் கருவி

கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறியும் வகையில் பரிசோதனை கருவியை இணைந்து தயாரிக்க இஸ்ரேல் குழு இந்தியா வர உள்ளது.

3:35 AM IST
இங்கிலாந்தில் இன்று முதல் முக கவசம் கட்டாயம்

இங்கிலாந்தில் இன்று முதல் பொது மக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

2:35 AM IST
போலிவிய அதிபர் தேர்தல்:2-வது முறை ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போலிவியாவில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் 2-வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1:30 AM IST
கர்நாடகாவில் புதிதாக 5,030 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,030 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,863 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்துள்ளது.

12:35 AM IST
கேரளாவில் புதிதாக 1,078 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 1,078 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,110 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக தொற்று 5 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 104 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 115 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

11:35 PM IST
ஐ.ஐ.எம் முதுகலை மாணவர்கள் 95 பேருக்கு கொரோனா

கர்நாடக மாநிலத்தின் இந்தியன் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

10:30 PM IST
மேற்குவங்கத்தில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

மேற்குவங்கத்தில் இன்று(ஜூலை 23) ஒரே நாளில் 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோவா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 51,757 ஆக உயர்ந்தது.

9:30 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா

மஹா.,வில் இன்று(ஜூலை 23) ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3.47 லட்சமாக உயர்ந்தது.
இன்று மட்டும் 298 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 12,854 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 6,484 பேர் குணமாகினர்; இதனையடுத்து இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,94,253 ஆக உயர்ந்தது. 1,36,980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9:00 PM IST
கொரோனா காலத்தில் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: குஜராத்

கொரோனா பாதிப்பால் மூடப்பட்டு கிடந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

8:00 PM IST
'2021 வரை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை'

2021ம் ஆண்டு தொடக்கத்தில் தான் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதை 2021ம் ஆண்டு வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும். தடுப்பூசிகள் பலவும் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை.

அடுத்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகப் பரவல் இருக்கும் பகுதிகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் எச்சரிக்கை தேவை. வைரஸ் பரவல் குறைத்த பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

6:30 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 23) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆகவும், பலி எண்ணிக்கை 3,232 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,423 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 49 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக உள்ளது.தற்போது 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:12 PM IST
6 லட்சத்து 30 ஆயிரத்து 781 பேர் பலி

இன்று ( ஜூலை.23ம் தேதி ) மாலை: 05;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 54 லட்சத்து , 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 30 ஆயிரத்து 781 பேர் பலியாகி உள்ளனர். 93 லட்சத்து 77 ஆயிரத்து 142 பேர் மீண்டுள்ளனர்.

3:50 PM IST
நெகடிவ் - பாசிட்டிவ் என மாறியது

காஷ்மீரில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேருக்கு பரிசோதனையில் நெகடிவ் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்த சில மணிநேரத்தில் அவர்களது மாதிரிகளை இரண்டாம்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 12 பேருக்கு பாசிடிவ் வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

12:19 PM IST
93 லட்சத்து 55 ஆயிரத்து 528 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.23ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 53 லட்சத்து , 80 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 30 ஆயிரத்து 345 பேர் பலியாகி உள்ளனர். 93 லட்சத்து 55 ஆயிரத்து 528 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 53 லட்சத்து , 65 ஆயிரத்து 414 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.23ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 53 லட்சத்து , 65 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 29 ஆயிரத்து 346 பேர் பலியாகி உள்ளனர். 93 லட்சத்து 44 ஆயிரத்து 454 பேர் மீண்டுள்ளனர்.

11:21 AM IST

இந்தியாவில் நேற்று (ஜூலை 21) ஒரே நாளில் 37,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,92,915 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 648 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28,732 ஆனது. 7,53,050 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 4,11,133 சிகிச்சையில் உள்ளனர்.

10:48 AM IST
ஒரு கோடியே 50 லட்சத்து , 97 ஆயிரத்து 696 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.22ம் தேதி ) காலை: 10;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 50 லட்சத்து , 97 ஆயிரத்து 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 19 ஆயிரத்து 560 பேர் பலியாகி உள்ளனர். 91 லட்சத்து 15 ஆயிரத்து 482 பேர் மீண்டுள்ளனர்.

7:11 AM IST
91 லட்சத்து 5 ஆயிரத்து 030 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.22ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 50 லட்சத்து , 84 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 18 ஆயிரத்து 485 பேர் பலியாகி உள்ளனர். 91 லட்சத்து 5 ஆயிரத்து 030 பேர் மீண்டுள்ளனர்.

5:54 AM IST
பிரேசில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா

பிரேசில் நாட்டில் ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், கல்வி அமைச்சர் மில்டன் ரிபெய்ரோ, குடியுரிமை அமைச்சர் ஓனிக்ஸ் லோரென்சோனி ஆகியோர் ஆவர். அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு தங்களது பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4:52 AM IST
தமிழகத்தில், 'கோவாக்சின்' சோதனை

தமிழகத்தில், 'கோவாக்சின்' தடுப்பு மருந்து பரிசோதனை, சென்னையை அடுத்த, காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் துவங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ஐதராபாதில் செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது.மனிதர்களுக்கு மருந்தை அளித்து, பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த மருந்து, ஆக., 15க்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

3:51 AM IST
முதன் முறையாக நோபல் மெகா விருந்து நிகழ்ச்சி ரத்து

இந்தாண்டு நோபல் பரிசு வழங்கும் விழாவில் நடக்கவுள்ள பாரம்பரிய மெகா விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் கடந்த 1956-ம் ஆண்டு இரண்டு உலக போர் காரணமாக ரத்து செய்யப்பட்டதற்கு பின்னர் முதன்முறையாக இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

2:48 AM IST
திருப்பதி கோயில் ஆக. 5 வரை மூடல்

திருமலை திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருப்பதி கோயில் கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (14 நாட்களுக்கு) ஆக. 5 வரை கோயிலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

1:43 AM IST
சிங்கப்பூரில் மேலும் 399 பேருக்கு கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 399 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சிங்கப்பூரில் தொடர்ந்து கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகளை கூடி வருவதாக சுகாதாரதுறை தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 399 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,434 ஆக உயர்ந்தது.

12:41 AM IST
பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம்:மலேசியா

மலேசியாவிற்கு வரும் பயணிகள் அரசின் நியமிக்கப்பட்ட முகாம்களில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

11:39 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 8,369 பேருக்கு கொரோனா

மஹா.,வில் இன்று(ஜூலை 21) ஒரே நாளில் 8,369 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3.27 லட்சமாக உயர்ந்தது.இன்று மட்டும் 246 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 12,276 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 7,188 பேர் குணமாகினர்; இதனையடுத்து இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,82,217 (55.72%) ஆக உயர்ந்தது. 1,32,236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10:37 PM IST
இந்தோனேசியாவில் இன்று புதிதாக 1,655 பேருக்கு கொரோனா

இந்தோனேசியாவில் இன்று கொரோனா தொற்றுக்கு 1,655 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவில் கொரோனாவால் மேலும் 81 பேர் பலியாகினர். நாட்டில் நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,320 ஆக உயர்ந்தது. இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து இதுவரை 48,466 பேர் குணமடைந்துள்ளனர்.

9:12 PM IST
கேரளத்தில் ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து மேலும் 720 பேர் பாதிக்கப் பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,994 ஆக உயர்ந்தது. இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 8,056 பேர் சிகிச்சையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

8:33 PM IST
கொரோனா பாதிப்பு : இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8:00 PM IST
‛இந்தாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி சந்தேகம் தான்'

‛கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது' என ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

7:36 PM IST
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.43%: மத்திய அரசு

இந்தியாவில், கொரோனா இறப்பு விகிதம் 2.43 சதவீதமாக உள்ளதாகவும், கொரோனா பாதிப்பில் மொத்த பாதிப்பை பார்க்காமல், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை மட்டும் பார்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் சதவீதத்தை 5க்கு கீழ் கொண்டு வர முயற்சி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

6:50 PM IST
கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது

கொரோனா பிரச்னைக்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. நாளை (ஜூலை 22)முதல், கர்நாடகாவில் ஊரடங்கு இருக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால், மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நிலைநாட்டி கொண்டே கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். கொரோனாவிற்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

6:33 PM IST
தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி

தமிழகத்தில் இன்று (ஜூலை 21) புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,887 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 78 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20 லட்சத்து 35 ஆயிரத்து 645 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 ஆக உள்ளது.தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

5:09 PM IST
6 லட்சத்து 13 ஆயிரத்து 996 பேர் பலி

இன்று ( ஜூலை.21ம் தேதி ) மாலை: 5;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 48 லட்சத்து , 81 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 13 ஆயிரத்து 996 பேர் பலியாகி உள்ளனர். 89 லட்சத்து 36 ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்.

12:14 PM IST
89 லட்சத்து 11 ஆயிரத்து 341 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.21ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 48 லட்சத்து , 59 ஆயிரத்து 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 13 ஆயிரத்து 354 பேர் பலியாகி உள்ளனர். 89 லட்சத்து 11 ஆயிரத்து 341 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 48 லட்சத்து , 45 ஆயிரத்து 684 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.21ம் தேதி ) காலை; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 48 லட்சத்து , 45 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 12 ஆயிரத்து 842 பேர் பலியாகி உள்ளனர். 89 லட்சத்து ஆயிரத்து 621 பேர் மீண்டுள்ளனர்.


6:33 AM IST
ஆக.,5ம் தேதி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு

திருப்பதியில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இன்று(ஜூலை 21) முதல் ஆக.,5ம் தேதி வரை 15 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்து சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

5:05 AM IST
மஹாராஷ்டிரா ஜவுளித்துறை அமைச்சருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநில ஜவுளித்துறை அமைச்சர் அஸ்லாம் ஷாயிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். எனவே என்னுடன் தொடர்புடையவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.


4:39 AM IST
சுகாதார செயலர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழக சுகாதாரத்தறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி மகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்வதால் வீட்டிற்கு போகாமல் அரசினர் விடுதியில் தங்கியுள்ளார்.இந்நிலையில் மதுரையில் இருந்து அவரது மாமனார் மற்றும் மாமியார் சென்னை வந்துள்ளனர். முறைப்படி அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அவர்களுடன் தொடர்பில் இருந்த ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு பரிசோதனை நடந்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்கள் நால்வரும் சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செயலர் ராதாகிருஷ்ணனுக்கும் பரிசோதனை நடந்தது. அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை.

3:40 AM IST
டில்லியில் ஒரே நாளில் 954 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 954 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,23,747 ஆனது. இன்று புதிதாக 35 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,663 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் டில்லியில் 1,784 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 1.04,918 பேர் குணமடைந்தனர். தற்போது வரை டில்லியில் 15,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,30,459 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. டில்லியில் கொரோனாவால் இறப்பு விகிதம் 2.96 ஆக உள்ளது. அங்கு குணமடைவோர் விகிதம் 84.78 ஆக உள்ளது.

2:27 AM IST
ரஷ்யாவில் புதிதாக 5,940 பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 5,940 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.நாட்டில் நேற்று ஒரு நாளில் நோய் தொற்றுக்கு 85 பேர் பலியாகினர். ரஷ்யாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,427 ஆக உயர்ந்தது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 5,54000 பேர் குணமடைந்துள்ளனர்.

1:26 AM IST
ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசிக்கான மனித பரிசோதனை தொடங்கியது

தெலுங்கானாவில் நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் (NIMS) இன்று கொரோனா தடுப்பூசிக்கான மனித பரிசோதனை தொடங்கப்பட்டது. தன்னார்வலர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டு கண்காணிக்கப் படுவதாக கூறப்படுகிறது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்ட முதல் உள்நாட்டு தடுப்பூசி, இது NIMS ல் ஆரோக்யமான 30 நபர்களுக்கு பரிசோதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்டு, சோதனைக்கு பின் ஐசியு பராமரிப்பில் கண்காணிக்கப்படுகிறார்கள். இதற்கான மருத்துவ பரிசோதனைகளில், பொது மருத்துவம், மயக்க மருந்து மற்றும் சுவாச மருத்துவம் ஆகிய மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி சோதனைக்கான முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ஜூலை 29 வரை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) அனுமதி பெற்றனர்.

12:22 AM IST
கேரளாவில் புதிதாக 794 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,274 ஆக உயர்ந்தது. மேலும் இருவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,274 ஆக உயர்ந்தது. மேலும் இருவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

11:30 PM IST
கொரேனாவிலிருந்து மீண்ட அக்கா; டான்ஸ் ஆடி வரவேற்ற தங்கை

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய அக்காவுக்கு, குத்தாட்டம் போட்டு தங்கை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு மும்பைக்கு அடுத்து புனே அதிக பாதிப்புள்ள நகராக உள்ளது. புனேவை சேர்ந்த சலோனி என்ற பெண்ணின் வீட்டில், அவரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் தனது அக்கா குணமாகி வீடு திரும்ப, அவரை வரவேற்கும் விதமாக ரோட்டில் இறங்கி தங்கை குத்தாட்டம் போட்டு ஆடி, பாடி வரவேற்றுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் அவர் பதிவிட அது வைரலானது.

11:13 PM IST
மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் ஊரடங்கு அமல்படுத்த திட்டம்

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் வாரம் இரண்டு நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவர் கூறுகையில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலத்தின் முக்கிய வல்லுனர்கள், மருத்துவர்கள், போலீசார் மற்றும் அமலாக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் பரிமாற்ற சங்கிலியை உடைக்க மாநிலம் முழுவதும் வாரம் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்தவாரம் மேற்கு வங்கம் முழுவதும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுப்பாட்டு மண்டல அணுகுமுறையை இயக்குவதோடு, முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் சமூக பரவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு நாட்களில் அனைத்து அலுவலகங்கள், போக்குவரத்து சேவைகள் மூடப்படும்.கட்டுப்பாட்டு மண்டலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் இருக்கும்.


10:06 PM IST
கொரோனா தடுப்பு மருந்து: ஆக்ஸ்போர்டு பல்கலை., சோதனை வெற்றி

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பு மருந்தான 'ஆஸ்ட்ராஜெனிகா' தடுப்பு மருந்து, மனிதர்கள் மீது நடத்தப்பட்ட 3ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள பிரிட்டன், 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, ஆக்ஸ்போர்டு பல்கலை.,யிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் பிரிட்டன் மக்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

9:30 PM IST
அனுமதியின்றி தனிநபர் நிகழ்ச்சி நடத்தினால் 1 ஆண்டு சிறை

முறையான அனுமதியின்றி திருமணம் உள்ளிட்ட தனிநபர் நிகழ்ச்சி நடத்தினால், 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் மாஸ்க் அணியாமலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் கீழ், சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

9:01 PM IST
2,300 பேரை ஆட்குறைப்பு செய்ய இன்டிகோ விமான நிறுவனம் முடிவு

கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தனது ஊழியர்களில் 2,300 பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய இன்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.


அரியானாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்டிகோ விமான நிறுவனத்தில் சி.இ.ஓ. ரோனோஜாய் தத்தா கூறியது,கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அனைத்து தரப்பிலும் மதிப்பாய்வு செய்ததில் நிதி நெருக்கடி காரணமாக எங்கள் நிறுவனத்தில் 10 சதவீத பணியாளர்களை ( 2,300 பணியாளர்கள்) ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது இன்டிகோ வரலாற்றில் முதன்முறையாக எடுத்த வேதனையாக முடிவு என்றார்.

8:35 PM IST
சீனாவில் திறக்கப்பட்ட திரையரங்குகள்: உற்சாகத்தில் மக்கள்

கொரோனா பரவல் காரணமாக சீனாவில் நீண்ட நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் உற்சாகம் அடைந்தனர். சீனாவில் கொரோனா கட்டுக்குள் வரப்பட்டதையடுத்து அந்நாட்டின் ஷாங்காய், ஹங்சோயு, குய்லின் ஆகிய நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களாக நோய்த் தொற்று பதிவாகாத இடங்களில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்த ரசிகர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். தாங்கள் திரையரங்குகளுக்குள் அமர்ந்திருப்பதை செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

8:11 PM IST
டில்லியில் உச்சத்தில் கொரோனா: எய்ம்ஸ் இயக்குநர்

டில்லியில் குறிப்பிட்ட பகுதிகளில், கொரோனா உச்சமடைந்துவிட்டதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டில்லியில் 1,22,793 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 16,031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,628 பேர் மரணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: டில்லியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா உச்சத்தை அடைந்துள்ளது. மற்ற சில பகுதிகளில் உச்சமடைய வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு, இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று உச்சமடையும். டில்லியில் சில இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. நகரபகுதிகில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு உள்ளூர் பரவல் நிகழ்ந்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

7:30 PM IST
கோவையில் மாவட்ட கலெக்டர் உட்பட 46 பேர் 'டிஸ்சார்ஜ்'

கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; பாதிப்புக்கு உள்ளான மாவட்ட கலெக்டர் உட்பட, 46 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று புதிதாக 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,183 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஐந்து நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உட்பட, 46 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7:00 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.75 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் இன்று (ஜூலை 20) புதிதாக 4,985 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆகவும், பலி எண்ணிக்கை 2,551 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,930 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 112 ஆய்வகங்கள் (அரசு-57 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 52,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 19 லட்சத்து 84 ஆயிரத்து 579 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 3,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக உள்ளது.தற்போது 51,348 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:40 PM IST
87 லட்சத்து 58 ஆயிரத்து 504 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.20ம் தேதி ) மாலை; 6;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 46 லட்சத்து , 73 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 9 ஆயிரத்து 603பேர் பலியாகி உள்ளனர். 87 லட்சத்து 58 ஆயிரத்து 504 பேர் மீண்டுள்ளனர்.

11:53 AM IST
ஒரு கோடியே 46 லட்சத்து , 46 ஆயிரத்து 51 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.20ம் தேதி ) காலை; 11;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 46 லட்சத்து , 46 ஆயிரத்து 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 8 ஆயிரத்து 978 பேர் பலியாகி உள்ளனர். 87 லட்சத்து 37 ஆயிரத்து 835பேர் மீண்டுள்ளனர்.

6:30 AM IST
சுவீடன் சிறார் பள்ளிகள் திறப்பு

ஐரோப்பிய நாடான சுவீடனில் சிறார்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதர ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் ஒரு கருத்துக்கணிப்பின் முடிவில் ஸ்வீடனில் பள்ளி செல்லும் சிறார்கள் மூலமாக பரவ வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

5:32 AM IST
'பிளாஸ்மா வாரியர்ஸ்': டில்லி போலீசாரை பாராட்டிய ஹர்ஷவர்தன்

கொரோனாவிலிருந்து மீண்டு பிளாஸ்மா தானம் செய்து வரும் டில்லி போலீசாரை, 'பிளாஸ்மா வாரியர்ஸ்' என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'பிளாஸ்மா தானம் செய்து வரும் 'கொரோனா வாரியர்ஸ்' டில்லி போலீசாருக்கு எனது நன்றி. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், மாதத்திற்கு 2 முறை பிளாஸ்மா தானம் செய்யலாம்' என்றார்.

4:24 AM IST
கோவில் கட்டினால் கொரோனாவை ஒழிக்க முடியுமா: சரத் பவார்

'கோவில் கட்டினால் கொரோனாவை ஒழித்துவிட முடியும் என சிலர் நம்புகின்றனர்' என ராமர் கோவில் கட்டுமானம் குறித்து தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கூறுகையில், 'கொரோனா வைரசுக்கு எதிரான போரை எவ்வாறு நடத்துவது என நாங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறோம். அதே நேரம், கோவிலை கட்டுவதால் கொரோனாவை ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். அதன் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்' எனக் கூறினார்.


3:43 AM IST
அரபு எமிரேட்சில் மேலும் 211 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 மணிநேரத்தில் 211 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ஒரு நாளில் 352 பேர் குணமடைந்து உள்ளனர். அரபு எமிரேட்சில் இதுவரை பாதிப்புகளில் இருந்து 49,269 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 7,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

3:05 AM IST
மஹா.,வில் புதிய உச்சம்: ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா

மஹா.,வில் புதிய உச்சமாக நேற்று(ஜூலை 19) ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3.10 லட்சமாக உயர்ந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக நேற்று(ஜூலை 19) மட்டும் 9,518 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,10,455 ஆக அதிகரித்தது.நேற்று மட்டும் 258 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 11,854 ஆக உயர்ந்தது.நேற்று மட்டும் 3,906 பேர் குணமாகினர்; இதனையடுத்து இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,69,569 ஆக உயர்ந்தது.


2:10 AM IST
சவுதியில் மேலும் 2,504 பேருக்கு கொரோனா

தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, மாநில கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நேற்று கலந்துரையாடினார்.

1:05 AM IST
சவுதியில் மேலும் 2,504 பேருக்கு கொரோனா

சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று புதிதாக 2,504 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 39 பேர் பலியாகினர் என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 3,517 பேர் குணமடைந்துள்ளனர். சவுதியில் இதுவரை 1,97,735 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா மீட்பு விகிதம் 78.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்தது. தற்போது 50,699 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,180 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். சிக்கலான பாதிப்புகளின் எண்ணிக்கை 2.5 சதவீதம் குறைந்துஉள்ளது. தினசரி அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவான நகரங்களின் பட்டியலில், ரியாத்தில் 178, ஜெடா 177,ஹோபுப் 163 என பதிவு செய்யப்பட்டுள்ளது.


12:05 AM IST
ஹாங்காங்கில் புதிதாக வேகமெடுக்கும் கொரோனா

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஹாங்காங்கில் கொரோனா வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த இரு வார காலமாக நகரின் பல இடங்களில் மீண்டும் கொரோனா பரவல் துவங்கி உள்ளது.

11:35 PM IST
மீண்டும் நகரங்களுக்கு திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்

ஆயிரக் கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மெட்ரோ பணிகளுக்காக திரும்பி அழைத்து வரப்படுவதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (MMRDA) தெரிவித்தள்ளது.


11:05 PM IST
உ.பி., டில்லியில் கொரோனா பாதிப்பு நிலவரம

உ.பி., மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,036 ஆனது. தொற்றிலிருந்து இதுவரை 28,664 பேர் குணமடைந்தனர். 18,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு அங்கு 1,108 பேர் பலியாகி உள்ளனர்.

டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,793 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,628 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து இதுவரை மொத்தம் 1,03,134 பேர் குணமடைந்தனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

10:08 PM IST
கொரோனா நெருக்கடி: ஒருவேளை உணவை இழந்த 55 % பேர்..!

இந்தியாவில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்த ஏப்.1 முதல் மே 15 வரையிலான காலத்தில், 55 சதவீத மக்கள் , ஒருநாளைக்கு இருவேளை மட்டுமே உணவு எடுத்து கொண்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

9:30 PM IST
ஊரெல்லாம் அச்சம்: ஊட்டியில் ஆனந்த நடனம்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஊட்டி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

9:15 PM IST
கேரளாவில் புதிதாக 821 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று(ஜூலை 19) புதிதாக 821 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது. 5,373 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்; 7,063 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக இருவர் பலியானதையடுத்து மொத்த பலி 42 ஆக உயர்ந்துள்ளது.

8:45 PM IST
சீனாவில் திறப்புக்கு தயாராகும் திரையரங்குகள்

சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து ஊரடங்கில் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டில் திரையரங்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8:35 PM IST
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: 7 இந்திய நிறுவனங்கள் தீவிரம்

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் 7 இந்திய நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.இந்தியாவில் மட்டும் 'பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட், ஜைடஸ் கடிலா, பனசியா பயோடெக், இந்தியன் இம்முனோலாஜிகல், மின்வாக்ஸ், பயோலாஜிகள் இ' ஆகிய நிறுவனங்கள், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. பொதுவாக ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவும், அதனை கொள்முதல் செய்யவும் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக விரைவில் மருந்தை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

8:15 PM IST
கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. உலகின் குறைவான இறப்பு விகிதமாக இது உள்ளதாகவும் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7:52 PM IST
பஞ்சாப் காங்., எம்.எல்.ஏ., க்கள் இருவருக்கு கொரோனா

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பஞ்சாப்பின் பக்வாரா தொகுதி காங்., எம்.எல்.ஏ., பல்விந்தர் தலிவால் மற்றும் டார்ன்டாரன் தொகுதி காங்., எம்.எல்.ஏ., டாக்டர் தரம்பீருக்கும் கொரோனா உறுதியானதாக மாநில முதல்வர் அமாரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய விரும்புவதாக மேலும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மாநில அமைச்சர் ராஜிந்தர் சிங் பஜ்வாவுக்கும் கொரோனா உறுதியானது. இவர் பஞ்சாப்பில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த முதல் அமைச்சராக உள்ளார். பின்னர் இவரது மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

7:30 PM IST
2,000த்தை கடந்தது கோவை; இன்று 135 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதனால் கோவையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 2,043 ஆக உயர்ந்துள்ளது.

7:15 PM IST
ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கொரோனா

இன்று (ஜூலை 19) ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் செங்குட்டுவன், 63; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். காய்ச்சலால் அவதிப்பட்ட அவர், ஓசூரிலுள்ள, காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. எம்.எல்.ஏ., செங்குட்டுவனுக்கு ஏற்கனவே, இருதய ஆப்ரேஷன் செய்யப்பட்டு உள்ளது.

வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6:45 PM IST
ஒரு கோடியே 44 லட்சத்து , 14 ஆயிரத்து 451 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.19ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 44 லட்சத்து , 14 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 4 ஆயிரத்து 240 பேர் பலியாகி உள்ளனர். 86 லட்சத்து 6 ஆயிரத்து 611 பேர் மீண்டுள்ளனர்.

6:28 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூலை 19) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆகவும், பலி எண்ணிக்கை 2,481 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,979 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,902 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 77 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 112 ஆய்வகங்கள் (அரசு-57 மற்றும் தனியார்-55) மூலமாக, இன்று மட்டும் 52,993 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 19 லட்சத்து 32 ஆயிரத்து 492 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக உள்ளது.தற்போது 50,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


3:00 PM IST
திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா

வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

9:59 AM IST
10.7 லட்சம் பேருக்கு தொற்று


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.7 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில், 543 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்துள்ளது.

8:59 AM IST
கிருஷ்ணகிரி எம்எல்ஏ.,வுக்கு கொரோனா

கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் செங்குட்டுவன், 63; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார்.காய்ச்சலால் அவதிப்பட்ட அவர், ஓசூரிலுள்ள, காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது.

5:30 AM IST
பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் தங்கள் பிளாஸ்மா அணுக்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4:27 AM IST
கொரோனா தடுப்பூசி சோதனை - நாளை தொடங்குகிறது எய்ம்ஸ்

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை முயற்சியை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் நாளை முதல் தொடங்க உள்ளது.பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு எந்த வித நோயும் இல்லாமல் பூரண உடல் நடத்துடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு நடைமுறை திங்கள்கிழமை முதல் நடைபெறும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சஞ்ஜெய் ராய் தெரித்துள்ளார்.

3:40 AM IST
பிரேசிலில் கொரோனா பரவல் சீராக உள்ளது

பிரேசிலில் கொரோனா பரவல் சீராக உள்ளதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அந்நாட்டை கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் மைக்கில் ரேயான் கூறுகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர் மூலம் சராசரியாக 2 பேருக்கு வைரஸ் பரவி வந்தது.ஆனால் தற்போது அந்த விகிதம் வெகுவாக குறைந்து 0.5 முதல் 1.5 என்ற அளவில் உள்ளது என்றார்.

2:38 AM IST
கர்நாடகாவில் ஒரே நாளில் 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 56,652 ஆக உயர்ந்தது, ஒரே நாளில் மாநிலத்தில் கொரோனாவுக்கு 93 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 1,240 ஆக அதிகரித்து உள்ளது. இருப்பினும் மாநிலத்தில் அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை மொத்தம் 21,775 பேர் குணமடைந்தனர். இன்றைய தேதியில் 36,631 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1:36 AM IST
மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிதாக 8,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,00,937 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் நேற்று மட்டும் 144 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,596 ஆக உயர்ந்தது. பாதிப்பு அடைந்தவர்களில் 1,65,663 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் புதிதாக மாநில அளவில் 5,307 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளவனர்.

12:34 AM IST
மஹா.,வில் கொரோனா சிகிச்சை கட்டணம் ; மருத்துவமனைகள் மோசடி

மஹா.,வின் தானேவில் உள்ள, 15 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கு வந்தவர்களிடம், 27 லட்சம் ரூபாயை கூடுதலாக வசூலித்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

11:35 PM IST
கேரளாவில் ஒரே நாளில் மேலும் 593 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அங்கு அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,659 ஆனது. இதுவரை கொரேனாவுக்கு 38 பேர் பலியான நிலையில் மேலும் இருவர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளூர் பரவலால் பாதிப்பு அடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் 2 இடங்களில் சமூகப்பரவலாக மாறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் 6,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வழிகாட்டுதல்களை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

10:46 PM IST
குவைத்தில் மேலும் 683 பேருக்கு கொரோனா

குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 683 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,904 ஆக உயர்ந்துள்ளது.குவைத்தில் கொரோனா பாதிப்புகளால் இதுவரை 407 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக தொற்று பாதித்த நோயாளிகளில் 430 பேர் குவைத்தையும், 253 பேர் பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 137 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

9:44 PM IST
அதிகாரிக்கு கொரோனா: முதல்வர் அலுவலகத்துக்கு சீல்!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முதல்வர் அலுவலகத்தை பூட்டி 48 மணி நேரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

8:42 PM IST
'ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதி'

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதியானதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். மேலும் 3.5 கோடி தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

7:59 PM IST
திட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


6:39 PM IST
தமிழகத்தில் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் புதிய உச்சம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,403 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 49,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

5:18 PM IST
6 லட்சத்து 150 பேர் பலி

இன்று ( ஜூலை.18ம் தேதி ) மாலை: 05;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 42 லட்சத்து , 23 ஆயிரத்து 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 150 பேர் பலியாகி உள்ளனர். 84 லட்சத்து 91 ஆயிரத்து 520 பேர் மீண்டுள்ளனர்.

12:43 PM IST
ஒரு கோடியே 41 லட்சத்து , 95 ஆயிரத்து 271 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.18ம் தேதி ) நன்பகல்: 12;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 41 லட்சத்து , 95 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 99 ஆயிரத்து 450 பேர் பலியாகி உள்ளனர். 84 லட்சத்து 71 ஆயிரத்து 094 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 41 லட்சத்து , 79 ஆயிரத்து 750 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.18ம் தேதி ) காலை : 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 41 லட்சத்து , 79 ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 98 ஆயிரத்து 537 பேர் பலியாகி உள்ளனர். 84 லட்சத்து 48 ஆயிரத்து 879 பேர் மீண்டுள்ளனர்.

6:26 AM IST
பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்தது

பாக்.கில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சத்தை கடந்தது

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,085 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,6 லட்சத்தை கடந்தது. அந்நாட்டில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,475 ஆனது. இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 1,83,737 பேர் குணமடைந்தனர், இருப்பினும் 1,895 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


5:25 AM IST
கொரோனா காலத்தில் தேர்தல்: தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு கடிதம்

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது, கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தொடர்பாக நாடு முழுவதும் கட்சிகளின் கருத்தை கேட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

4:45 AM IST
ஓமனில் ஒரே நாளில் 1,619 பேருக்கு கொரோனா

ஓமனில் கொரோனா பாதிப்புகளால் இன்று புதிதாக 1,619 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகியுள்ளனர்.நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 1,249 பேர் ஓமானியர்கள் மற்றும் 370 பேர் பிற நாடுகளை சேர்ந்தவர்கள். தொற்று நோயில் இருந்து இதுவரை மொத்தமாக 41,450 பேர் குணமடைந்துள்ளனர்.

3:45 AM IST
தெலுங்கானா: மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் துப்புறவு ஊழியர்களின் ஊக்கத்தொகையை உயர்த்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2:47 AM IST
கொரோனா பாதிப்பு: நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்

கொரோனா தொற்றால் நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதில் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இந்நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

1:52 AM IST
ஈரானில் கொரோனா பாதிப்பு 2.69 லட்சமாக உயர்வு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். .

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,69,440 ஆக உயர்ந்தது. இருப்பினும் அந்நாட்டில் 2,32,873 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 183 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 13,791 ஆக உயர்ந்துள்ளது

12:35 AM IST
மஹா.,வில் ஒரே நாளில் 8,308 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (ஜூலை 17) ஒரே நாளில் 8,308 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2.92 லட்சமாக உயர்ந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக நேற்று மட்டும் 8,308 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,92,589 ஆக அதிகரித்தது.நேற்று மட்டும் 258 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 11,452 ஆக உயர்ந்தது. இதுவரை 1,60,357 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1,20,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11:30 PM IST
சத்தீஸ்கரில் ஒரு நாளில் அதிகபட்சமாக 197 பேருக்கு கொரோனா

சத்தீஸ்கரில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் (செவ்வாய்) பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, 25 மாவட்டங்களில் உள்ள 112 தொகுதிகளில், தொற்று பரவியுள்ள சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களின் புதிய பட்டியலை மாநில அரசு வெளியிட்டது.

10:15 PM IST
கேரளாவில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது: பினராயி

கேரளாவில் சில இடங்களில், கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா, வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்களால் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 791 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஒருவர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

9:10 PM IST
கொரோனா தடுப்பு பணிகளில் உலகிற்கே இந்தியா முன்மாதிரி

'கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியா, உலகிற்கே முன்மாதிரியாக திகழுகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, வைரசுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது' என ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: இந்தியாவின் சுகாதார முறைகள், பிற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம். 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். இந்திய சுகாதார முறைகள் பிற உலக நாடுகளை விட சிறப்பாக உள்ளது. சிறப்பான செயல்பாட்டால், கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை விடவும், இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் அதிகம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறோம். இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டிருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்கி வருகிறோம். 50 கோடி இந்தியர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய காப்பீடு திட்டம் இந்தியாவில் செயல்படுகிறது .இவ்வாறு மோடி பேசினார்.


8:22 PM IST
கொரோனா: குணமடைந்தோர் விகிதம் 63.33 சதவீதமாக உயர்வு

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமம் 63.33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7:21 PM IST
கோவையில் இன்று 141 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆறு பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில், 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,785 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,071 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6:40 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.60 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) புதிதாக 4,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆகவும், பலி எண்ணிக்கை 2,315 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,463 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 75 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 109 ஆய்வகங்கள் (அரசு-55 மற்றும் தனியார் 54) மூலமாக, இன்று மட்டும் 48,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 18 லட்சத்து 31 ஆயிரத்து 304 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 3,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உள்ளது.தற்போது 47,782 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:00 PM IST
83 லட்சத்து 07 ஆயிரத்து 516 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.17ம் தேதி ) மாலை : 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 39லட்சத்து , 82 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 93 ஆயிரத்து 465 பேர் பலியாகி உள்ளனர். 83 லட்சத்து 07 ஆயிரத்து 516 பேர் மீண்டுள்ளனர்.

12:11 PM IST
5 லட்சத்து 92 ஆயிரத்து 778 பேர் பலி

இன்று ( ஜூலை.17ம் தேதி ) நன்பகல் : 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 39லட்சத்து , 53 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 92 ஆயிரத்து 778 பேர் பலியாகி உள்ளனர். 82 லட்சத்து 85 ஆயிரத்து 183 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
82 லட்சத்து 72 ஆயிரத்து 677 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.17ம் தேதி ) காலை : 06; 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 39 லட்சத்து , 37 ஆயிரத்து 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 91 ஆயிரத்து 962 பேர் பலியாகி உள்ளனர். 82 லட்சத்து 72 ஆயிரத்து 677 பேர் மீண்டுள்ளனர்.

6:16 AM IST
கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி

சிலி நாட்டில் மனிதர்களின் வியர்வையை வைத்து கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

5:25 AM IST
கொரோனா பாதிப்பு: 20 லட்சத்தை கடந்த பிரேசில்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக பிரேசில் உள்ளது.தற்போது அங்கு பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது. அதே போல அமெரிக்காவில் 1,40954 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்து பிரேசிலில் 76,688 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்குள் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. அதேவேளையில்,13 லட்சத்து66 ஆயிரத்து 775 பேர் இதுவரை சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்.

4:01 AM IST
பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

2:08 AM IST
உலக நாடுகளை விட சிறப்பாக செயல்படுகிறோம்: ஹர்ஷ்வர்தன்

கொரோனாவை கட்டுப்படுத்தில் உலக நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாட்டில் அடுத்த 3 மாதங்களில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தினமும் 3.25 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், புதிதாக அதிக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் 2.57% ஆகவும், கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் சதவீதம் 63.25ஆகவும் உள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் மேம்பட்டு கொண்டு வருகிறோம். அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாடு, கொரோனாவை கட்டுப்படுத்தில் உலக நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

12:46 AM IST
நாகாலாந்து முதல்வருக்கு கொரோனா அறிகுறி

நாகாலாந்து முதல்வருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து தனக்கு தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, கடந்த வாரம் தனது அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோருடன் டில்லி சென்று அங்கு மாநில சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய ராணு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். டில்லியிருந்து நாகாலாந்து திரும்பியவர், கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில் நெய்பியு ரியோ உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனக்கு தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

11:35 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று(ஜூலை 16) ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சமானது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 55.63 ஆக உயர்ந்துள்ளது.இன்று மட்டும் 266 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 11,194ஆக உயர்ந்தது. இதுவரை 1,58,140 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 55.63 ஆக அதிகரித்துள்ளது. 1,14,648 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

10:40 PM IST
மஹா.,வின் முதல் பெண் தேர்தல் கமிஷனர் கொரோனாவுக்கு பலி

மஹா.,வின் முதல் பெண் தேர்தல் கமிஷனரான நீலா சத்யநாராயண்(72) கொரோனாவுக்கு பலியானார்.

10:02 PM IST
அபுதாபியில் சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி சோதனை

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ), மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை துவங்கியது. அபுதாபி சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி, பரிசோதனை முயற்சியாக போடப்பட்டது.இந்த பரிசோதனை முயற்சிகள் 3 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும்.

9:08 PM IST
இந்தியாவால் உலகிற்கே வழங்க முடியும்: பில் கேட்ஸ்

இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

பில்கேட்ஸ் கூறியதாவது:இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு துறை அதிக பலம் வாய்ந்தது. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவில்தான் நடக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும் மருந்து தயாரிப்புக்கான சிஇபிஐ குழுமத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பினர். இந்தியாவால், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும். அங்கு சீரம் இன்ஸ்டிடியூட், பயோ இ, பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் உள்ளன.

8:30 PM IST
அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கிரீ்னவேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளார்.

8:04 PM IST
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ' ஏர் பிரான்ஸ் நிறுவனம் இம்மாதம் 18 ம் தேதி முதல் ஆக., 1ம் தேதி வரை டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்க உள்ளது. அதே போல் வரும் 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. நியூயார்க் மற்றும் டில்லி இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்படும், டில்லி-சான்பிரான்ஸிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று நாளும் விமானங்கள் இயக்கப்படும்.ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 6,87,467 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்' இவ்வாறு ஹர்தீப்சிங்பூரி கூறினார்.


7:07 PM IST
தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூலை 16) புதிதாக 4,549 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆகவும், பலி எண்ணிக்கை 2,236 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,483 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 66 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 107 ஆய்வகங்கள் (அரசு-54 மற்றும் தனியார் 53) மூலமாக, இன்று மட்டும் 45,888 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 17 லட்சத்து 82 ஆயிரத்து 635 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,714 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:54 PM IST
ஒரு கோடியே 37 லட்சத்து ,34 ஆயிரத்து 729 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.16ம் தேதி ) மாலை : 06; 40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 37 லட்சத்து ,34 ஆயிரத்து 729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 87 ஆயிரத்து 835 பேர் பலியாகி உள்ளனர். 81 லட்சத்து 83 ஆயிரத்து 695 பேர் மீண்டுள்ளனர்.

1:13 PM IST
ஒரு கோடியே 36 லட்சத்து ,99 ஆயிரத்து 622 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.16ம் தேதி ) மதியம் : 12; 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 36 லட்சத்து ,99 ஆயிரத்து 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 86 ஆயிரத்து 974 பேர் பலியாகி உள்ளனர். 81 லட்சத்து 57 ஆயிரத்து 677 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 36 லட்சத்து ,83 ஆயிரத்து 686 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.16ம் தேதி ) காலை : 06; 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 36 லட்சத்து ,83 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 86 ஆயிரத்து 193 பேர் பலியாகி உள்ளனர். 80 லட்சத்து 31 ஆயிரத்து 267 பேர் மீண்டுள்ளனர்.

6:35 AM IST
‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்

ஜூலை 20 முதல் 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் நாடு முழுவதும் செயல்பட துவங்கும்' என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


3:49 AM IST
ஊழியருக்கு கொரோனா : மேற்குவங்க சட்டசபை மூடல்

மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது.

மேற்குவங்க மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர். பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது.இந்நிலையில் நேற்று சட்டசபை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இது தொடர்பாக சட்டசபை சபாநாயகர் பீமன் பந்தோபாத்தியாயா சட்டசபை தட்டச்சு ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த 22 பேர் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 27-ம் தேதி வரை 10 நாட்கள் சட்டசபையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளும் நடைபெறாது. இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

2:47 AM IST
சிங்கப்பூரில் 249 பேருக்கு புதிதாக கொரோனா

சிங்கப்பூரில் கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது.

12:44 AM IST
சவுதியில் புதிதாக 2,671 பேருக்கு கொரோனா தொற்று

சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,671 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 42 பேர் பலியாகினர். நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,40,474 ஆக அதிகரித்துள்ளன. நேற்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 42 பேர் பலியாகினர். சவுதியில் நோய் தொற்றுக்கு இதுவரை 2,325 பேர் பலியாகியுள்ளனர்.தற்போது சவுதியில், 5,488 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். நாட்டின் நோய் தொற்றுகளில் இருந்து இதுவரை 1,83,048 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் 76 சதவீதமாக உள்ளது. சவுதியில்தற்போது 55,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவற்றில் 2,221 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

11:41 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 7,975 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று(ஜூலை 15) ஒரே நாளில் 7,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சமானது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 55.37 ஆக உயர்ந்துள்ளது.இன்று மட்டும் 233 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 3606 பேர் இன்று குணமான நிலையில், இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 55.37 ஆக அதிகரித்துள்ளது.

10:34 PM IST
மதுரையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது

மதுரை:மதுரையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது. புதிதாக 341 பேர் பாதிக்கப்பட்டனர். 5 பேர் இறந்தனர்.மாவட்டத்தில் புதிதாக பாதித்தவர்களில் 259 பேர் மதுரை நகரை சேர்ந்தவர்கள். 82 பேர் புறநகர்வாசிகள். மொத்த பாதிப்பு 7331 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 1188 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3347 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 94, 70 வயது முதியவர்கள், 50, 42 வயது ஆண், 53 வயது பெண் பலியாகினர். மொத்த இறப்பு 129 ஆக உயர்ந்துள்ளது

9:37 PM IST
ஒடிசாவில் ஒரே நாளில் 609 பேர் குணமடைந்தனர்

ஒடிசாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 609 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மாநிலத்தில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 9,864 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 14,280 என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒடிசாவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,320 ஆக உள்ளது. இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர்.


8:30 PM IST
கோவையில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில், 188 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். இன்று, மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் எட்டு போலீசார் உட்பட, 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,591 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

7:15 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் இன்று (ஜூலை 15) புதிதாக 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆகவும், பலி எண்ணிக்கை 2,167 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,430 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 66 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 107 ஆய்வகங்கள் (அரசு-54 மற்றும் தனியார் 53) மூலமாக, இன்று மட்டும் 41,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 747 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 310 ஆக உள்ளது.தற்போது 47,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1:23 PM IST
78 லட்சத்து 55 ஆயிரத்து 041 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.15ம் தேதி ) மதியம் : 07; 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 34 லட்சத்து ,65 ஆயிரத்து 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேர் பலியாகி உள்ளனர். 78 லட்சத்து 55 ஆயிரத்து 041 பேர் மீண்டுள்ளனர்.

6:56 AM IST
78 லட்சத்து 41 ஆயிரத்து 476 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.15ம் தேதி ) காலை : 06; 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 34 லட்சத்து , 47 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 80 ஆயிரத்து 282 பேர் பலியாகி உள்ளனர். 78 லட்சத்து 41 ஆயிரத்து 476 பேர் மீண்டுள்ளனர்.

6:42 AM IST
பிரேசிலில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 1,341 பேர் பலி

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,341 பேர் பலியானார்கள். ஒரே நாளில் பாதிப்பு 43,245 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு 19 லட்சத்து 31 ஆயிரத்து 204 பேருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு 74,262 ஆனது.

5:12 AM IST
கொரோனா தடுப்பூசி உற்பத்தி: அமெரிக்கா தீவிரம்

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம். என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிஎன்பிசி டெலிவிஷன் சேனல் தெரிவித்துள்ளது.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிற டிரம்ப் நிர்வாகம், சுகாதாரத் துறையையும், விஞ்ஞானிகளையும், தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் தீவிரப்படுத்தி உள்ளது.

3:46 AM IST
மதுரையில் இன்று முதல் தளர்வுகள் அமல்

மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வருகிறது.வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா, மதுரை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள, கடிதம்:மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு, 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.இன்று முதல், ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறக்க அனுமதிக்கலாம். வழிபாட்டின் போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.நகர்ப்புற பகுதிகளில், அனுமதி கிடையாது.அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 8:00 வரை செயல்படலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2:44 AM IST
தெலுங்கானா: மருத்துவ அறிவியல் கழகத்தில் கொரோனா சிகிச்சை

தெலுங்கானாவின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:42 AM IST
அவசியமற்ற பயணங்களுக்கு அமெரிக்கா,கனடா தடை

கொரோனா தொற்றுகளையொட்டி, கனடாவும், அமெரிக்காவும் அவசியமற்ற பயணங்களுக்கு தடைவிதிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


12:39 AM IST
கொரோனா இறுதி சடங்கிற்கு ரூ. 15 ஆயிரம் நிதி

கொரோனா பாதிப்பால் இறக்கும் நபர்களின் இறுதி சடங்கிற்கு ஆந்திர அரசின் சார்பில் ரூ. 15 ஆயிரம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

11:38 PM IST
பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரு நாளில் 733 பேர் பலி

பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து நேற்று ஒருநாளில் 20,286 பேர் பாதிக்கப்பட்டனர். 733 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 733 பேர் நோய் தொற்றால் பலியாகியுள்ளனர். பிரேசிலில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 72,833 ஆக உயர்ந்தது. பிரேசிலில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 12,13,512 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

11:19 PM IST
பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரு நாளில் 733 பேர் பலி

பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து நேற்று ஒருநாளில் 20,286 பேர் பாதிக்கப்பட்டனர். 733 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
10:19 PM IST
பாட்னா எய்ம்சில் மனிதர்களிடம் கோவாக்சின் பரிசோதனை

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான 'கோவாக்சின்', மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும் நடைமுறை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 18 தன்னார்வலர்களுக்கு நேற்று(ஜூலை 13) முதல் சோதனை துவங்கப்பட்டது.
18 முதல் 55 வயதுக்கு உற்பட்ட 18 தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட பின், 3 மணி நேரம் அவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்துள்ளனர். பின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 14 நாட்களுக்கு பின் அவர்களுக்கு 2வது டோஸ் போடப்பட உள்ளது.

8:52 PM IST
10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து தான், 80 சதவீத கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறையின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து தான் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 50 சதவீதம், மஹா., மற்றும் தமிழகத்தில் உள்ளது. நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 63ஆக உள்ளது.தேசிய சராசரியைவிட குணமடைந்தவர்கள் 20 மாநிலங்களில் குணமடைந்தோர் சதவீதம் அதிகமாக உள்ளது. குஜராத்தில் 70%, ஒடிசாவில் 67%, அசாமில் 65%, தமிழகத்தில் 64% குணமடைந்துள்ளனர். மே 30க்கு பின், சிகிச்சை பெறுபவர்களை விட, குணமடைந்தவர்கள் 1.8 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

8:00 PM IST
நான்கு மாவட்டங்களில் 300ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 14) நான்கு மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் 1,078 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 79,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, பேருக்கும், மதுரையில் 450 பேருக்கும், திருவள்ளூரில் 360 பேருக்கும், விருதுநகரில் 328 பேருக்கும், செங்கல்பட்டில் 264 பேருக்கும், வேலூரில் 194 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

7:21 PM IST
தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,099 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

7:04 PM IST
77 லட்சத்து 38 ஆயிரத்து 086 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.14ம் தேதி ) இரவு : 07; 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 32 லட்சத்து ,69 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 76 ஆயிரத்து 432 பேர் பலியாகி உள்ளனர். 77 லட்சத்து 38 ஆயிரத்து 086 பேர் மீண்டுள்ளனர்.

4:13 PM IST
நாட்டின் 50 சதவீத கொரோனா

மஹாராஷ்ட்டிரா, தமிழகத்தில் நாட்டின் 50 சதவீத கொரோனா உள்ளது; சுகாதார துறை

12:07 PM IST
ஒரு கோடியே 32 லட்சத்து ,40 ஆயிரத்து 994 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.14ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 32 லட்சத்து ,40 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 75 ஆயிரத்து 627 பேர் பலியாகி உள்ளனர். 77 லட்சத்து 07 ஆயிரத்து 300 பேர் மீண்டுள்ளனர்.

7:14 AM IST
ஒரு கோடியே 32 லட்சத்து , 29 ஆயிரத்து 695 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.14ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 32 லட்சத்து ,29 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 74 ஆயிரத்து 981 பேர் பலியாகி உள்ளனர். 76 லட்சத்து 91 ஆயிரத்து 451 பேர் மீண்டுள்ளனர்.

6:25 AM IST
பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.5 லட்சத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,753 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,625 ஆக உள்ளது. ஒரே நாளில் புதிதாக 69 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை பாக்கில் கொரோனாவுக்கு 5,266 பேர் பலியாகி உள்ளனர்.

பெருந்தொற்றிலிருந்து அந்நாட்டில் இதுவரை மொத்தம் 1,61,917 பேர் குணமடைந்தனர். அதிக பட்சமாக சிந்து மாகாணத்தில் 1,05,533 பேரும் பஞ்சாப் மாகாணத்தில் 87,043 பேரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

5:30 AM IST
‛கொரோனா' மாத்திரை விலை குறைப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'பாபிப்ளூ' என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மருந்து, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறந்த பலனை அளிப்பதாக, கூறப்படுகிறது.

இந்த மாத்திரையை, 'கிளன்மார்க்' நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 21ல், இந்த மருந்து, இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஒரு மாத்திரை, 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மருந்து தயாரிப்புக்கு தேவையான, முக்கிய மூலப்பொருட்களை, இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதி கிடைத்ததை அடுத்து, மாத்திரையின் விலையை குறைக்க, தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.இதையடுத்து, ஒரு மாத்திரையின் விலை, 103 ரூபாயில் இருந்து, 75 ரூபாயாக குறைக்கப்படுவதாக, கிளன்மார்க் நிறுவனம், அறிவித்தது. இதே மாத்திரை, சீனாவில், 215 ரூபாய்க்கும், வங்கதேசத்தில், 315 ரூபாய்க்கும், ரஷ்யாவில், 600 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுவதாக, கிளன்மார்க் நிறுவனம், தெரிவித்தது.

4:33 AM IST
கர்நாடகாவில் மேலும் 2,738 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,378 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 73 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது.அதே நேரம் கடந்த ஒரு நாளில் கொரோனாவிலிருந்து 839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,248 பேர் குணமடைந்தனர். அங்கு தற்போது வரை 24,572 பேர் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 1,315 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.

3:46 AM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒரே நாளில் 401 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று ஒரு நாளில் 401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 333 ஆகவும், நாட்டில் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,140 ஆகவும் உயர்ந்துள்ளது. UAE யில் நேற்று ஒரு நாளில் 50,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

2:50 AM IST
இன்று முதல் பெங்களூருவில் முழு ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இந்த ஊரடங்கின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கான கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பெங்களூருவாசிகள் நேற்று கிடைத்த வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

1:36 AM IST
கொரோனா மீட்பு விகிதம் 63.02 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63.02 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

11:04 PM IST
கேரளாவில் புதிதாக 449 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,322 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 140 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 64 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் மீதிப் பேர்களுக்கு தொடர்பின் மூலம் தொற்று ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.இதுவரை 2,44,388 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 5,407 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வெளியாகவில்லை இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

8:15 PM IST
உலக அளவில் கொரோனாவுக்கு 3000 மருத்துவ பணியாளர்கள் பலி

உலக அளவில் இதுவரை 3,000 மருத்துவ பணயாளர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள் என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறைந்த பட்ச எண்ணிக்கை மட்டுமே எனவும், பல நாடுகள் மருத்துவ பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் என மேலும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களிடம் பதிவான விவரங்களின் அடிப்படையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 545 பேரும், பிரிட்டனில் 540 பேரும், அமெரிக்காவில் 507 பேரும் பலியாகி உள்ளதாக அது தெரிவித்துள்ளது.


7:13 PM IST
கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைகிறது

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 1140 பேருக்கு கொரோனா உறுதியானது. மாற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இன்று சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில், இதுவரை இல்லாத அளவாக 464 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கட்டவர்களின் எண்ணிக்கை 6,539 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 337 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், கன்னியாகுமரியில் 184 பேருக்கும், விழுப்புரத்தில் 136 பேருக்கும், தேனியில் 134 பேருக்கும், வேலூரில் 129 பேருக்கும், ராணிப்பேட்டையில் 126 பேருக்கும், திருநெல்வேலியில் 113 பேருக்கும், தூத்துக்குடியில் 122 பேருக்கும் இன்று கொரோனா உறுதியானது

6:30 PM IST
தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42, 978 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 105 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதில்(53 அரசு ஆய்வகம் மற்றும் 52 தனியார் ஆய்வகம்) இன்று 4,328 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில் 4,270 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என 58 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 44,560 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து 16,54,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15,85,782 ஆக அதிகரித்தது.


இன்று மட்டும், 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 48, 196 பேர் பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

6:12 PM IST
76 லட்சத்து 11 ஆயிரத்து 300 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.13ம் தேதி ) மாலை: 05;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 30 லட்சத்து ,62 ஆயிரத்து 999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 72 ஆயிரத்து 234 பேர் பலியாகி உள்ளனர். 76 லட்சத்து 11 ஆயிரத்து 300 பேர் மீண்டுள்ளனர்.

11:53 AM IST
75 லட்சத்து 88 ஆயிரத்து 125 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.13ம் தேதி ) காலை: 11;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 30 லட்சத்து ,41 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 71 ஆயிரத்து 675பேர் பலியாகி உள்ளனர். 75 லட்சத்து 88 ஆயிரத்து 125 பேர் மீண்டுள்ளனர்.

6:44 AM IST
75 லட்சத்து 75 ஆயிரத்து 523 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.13ம் தேதி ) காலை: 06;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 30 லட்சத்து , 28 ஆயிரத்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 71 ஆயிரத்து 080 பேர் பலியாகி உள்ளனர். 75 லட்சத்து 75 ஆயிரத்து 523 பேர் மீண்டுள்ளனர்.


4:48 AM IST
கொரோனாவில் இருந்து 75 லட்சம் பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது.

3:50 AM IST
தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கொரோனா இல்லை

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனைக்கு பின் தெரியவந்துள்ளது.

2:18 AM IST
கொரோனா குறித்த அச்சம் வேண்டாம்: வைரலாகும் அமிதாப் வீடியோ

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன், 77. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது மகன் அபிஷே க் பச்சனுக்கு கொரோனா உறுதியானது. லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமிதாப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியது, கொரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. நெருக்கடியான இந்த இக்கட்டான சூழ்நிலைகளில், வெள்ளை கோட்டில் உள்ள மருத்துவர்கள் கடவுளின் உருவம்., அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நமது உயிர்களை காப்பாற்றுகிறார்கள்.நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொடிய வைரசிலிருந்து அனைவரும் கண்டிப்பாக மீண்டு வருவோம். இவ்வாறு கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

1:30 AM IST
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

திருநெல்வேலி, துாத்துக்குடியில் நேற்று கொரோனா பாதிப்பில் 5 பேர் பலியாயினர்.திருநெல்வேலி மாவட்டத்தில் நேaற்று 131 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மூலைக்கரைப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., மற்றும் குடும்பத்தினர் நான்கு பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்தனர். நேற்று எஸ்.ஐ.,யின் தந்தை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் கோவில்பட்டி வானரமுட்டியை சேர்ந்தவர். திசையன்விளையை சேர்ந்த அ.தி.மு.க.,பிரமுகர் ஒருவர் கொரோனா பாதித்து இறந்தார். மேலப்பாளையத்தில் 55 வயதான ஒரு பெண்ணும், நெல்லை கிருஷ்ணன்கோயில் தெருவை சேர்ந்த 24 வயது வாலிபரும் இறந்தனர்.

கோவில்பட்டி சீனிவாச அக்ரஹார தெருவில் 59 வயது பிளம்பர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இறந்தார். துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 136 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தென்காசியில் நேற்று 17 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

12:35 AM IST
கேரளாவில் புதிதாக 435 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆனது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 128 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 87 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் மற்றும் 206 பேர் மற்றவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என அறியப்பட்டது. கொரோனாவுக்கு இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர்.

11:40 PM IST
அமிதாப்பின் 4 பங்களாக்கள் சீல்: 30 ஊழியர்களுக்கு கொரோனா

மும்பையில் ஜல்சா, பிரதிக்ஷா, ஜனாக், வெஸ்டா என அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களில் பணியாற்றி வந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நேற்று 4 பங்களாக்கள் சீல் வைக்கப்பட்டன.இந்நிலையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

10:48 PM IST
ரஷ்யாவில் உச்சத்தை தொடும் கொரோனா

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 6,615 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,27,162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றுக்கு 130 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்தது.நேற்று ஒரு நாளில் 3,615 பேர் குணமடைந்தனர். இதுவரை நோய் தொற்றுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 501,061 ஆக உயர்ந்தது. ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோய் தொற்று பரிசோதனை அதிகரித்து வருகிறது.


9:47 PM IST
வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கான கிட்

தெலுங்கானாவில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படுவதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வீட்டு தனிமைப்படுத்துதல் பெட்டகம் (Home Isolation Kit) இது மிக முக்கியமானது. ஏனெனில் சுமார் 83 சதவீதம் பேர் (லேசான அறிகுறியுடன்) வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் 12,000 நோயாளிகள் வரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அதிலிருந்து 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்துமீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டோர் மருத்துவரை அணுகவோ, மருந்துகளை வாங்குவதற்கான நிதி ஆதாரம் இருக்காது. வீட்டு தனிமைப்படுத்தலில் கிட் மூலம் சரியான வழிகாட்டுதலை கொண்டு சேர்க்க முடியும் என சுகாதாரதுறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

9:29 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 62.93 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து 62.93 சதவீதமாக உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

8:46 PM IST
மஹா.,வில் புதிதாக 7,827 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 173 பேர் பலியாகினர். மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,54,427 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 173 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 10,289 ஆக உயர்ந்தது. இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,40,325 ஆக உயர்ந்தது.

8:00 PM IST
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை

கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போராடுவதால் தொற்று கட்டுக்குள் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.


7:35 PM IST
கோவையில் இன்று 117 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது.

6:30 PM IST
தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (ஜூலை 12) புதிதாக 4,244 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆகவும், பலி எண்ணிக்கை 1,966 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,210 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 34 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 105 ஆய்வகங்கள் (அரசு-53 மற்றும் தனியார் 52) மூலமாக, இன்று மட்டும் 42,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 16 லட்சத்து 09 ஆயிரத்து 448 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,543 பேர் ஆண்கள், 1,700 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 84,535 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 53,912 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 532 ஆக உள்ளது. தற்போது 46,969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

5:24 PM IST
75 லட்சத்து 02 ஆயிரத்து 155 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.12ம் தேதி ) மாலை: 05;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 28 லட்சத்து ,72 ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 68 ஆயிரத்து 312 பேர் பலியாகி உள்ளனர். 75 லட்சத்து 02 ஆயிரத்து 155 பேர் மீண்டுள்ளனர்.

4:55 PM IST
அமிதாப், ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

11:46 AM IST
ஒரு கோடியே 28 லட்சத்து ,47 ஆயிரத்து 293 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.11ம் தேதி ) காலை: 11;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 28 லட்சத்து ,47 ஆயிரத்து 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 67 ஆயிரத்து 734 பேர் பலியாகி உள்ளனர். 74 லட்சத்து 83 ஆயிரத்து 287பேர் மீண்டுள்ளனர்.

7:00 AM IST
சென்னையில் இன்று 1,168 பேருக்கு கொரோனா

கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,168 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,668 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் 17,469 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:27 AM IST
74 லட்சத்து 73 ஆயிரத்து 907 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.12ம் தேதி ) காலை: 06;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 28 லட்சத்து , 33 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 67 ஆயிரத்து 035பேர் பலியாகி உள்ளனர். 74 லட்சத்து 73 ஆயிரத்து 907 பேர் மீண்டுள்ளனர்.

5:27 AM IST
மாஸ்க் அணிந்தார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியபோதும் பொதுவாக முகமூடி அணிவதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமையன்று வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கான வருகை தந்தார். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். ட்ரம்ப் முன்பு முகமூடி அணிய மறுத்து வந்த அவர் ,மற்ற அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டார்,வைரஸின் பரவலை தடுக்க மாஸ்க்குகளை பயன்படுத்துமாறு உயர் பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், அமெரிக்காவில் கொரோனாவால் வெள்ளிக்கிழமைக்குள் கிட்டத்தட்ட 1,34,000 அமெரிக்க உயிர்கள் பலியான நிலையில், ட்ரம்ப் மட்டுமே அணிய மறுத்தது தலைமைத்துவத்தின் குறைபாட்டைக் காட்டியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

4:19 AM IST
கொரோனா: இறந்தவர் உடல் ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்

தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவால் பலியானவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்நிகழ்ந்துள்ளது.

3:30 AM IST
பல்கலை., தேர்வுகள் மாணவர்களை மோசமாக பாதிக்கும்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என்ற யு.ஜி.சி.,யின் உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2:33 AM IST
டாக்டர்களை வீட்டிற்கே அழைக்கும் இணையதளம்

கொரோனா ஊரடங்கில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில், மத்திய அரசின் இணையதளம் வாயிலாக, டாக்டர்கள் இலவச சிகிச்சை அளிக்கின்றனர்.கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல இணைய தளம், செயலிகளை மக்களுக்காக வழங்கி வருகிறது. இதில், அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக, 'ஆரோக்கிய சேது' இருக்கும் நிலையில், 2009ல் அரசால் துவங்கப்பட்ட, 'இ.சஞ்சீவனி நேஷனல் டெலி கன்சல்டேஷன் சர்வீஸ்' இன்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.ரிஜிஸ்ட்ரேஷன்இதன்படி www.esanjeevaniopd.in என்ற இணையதளம் அல்லது ஆப் திறந்தவுடன், 'பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன், பேஷன்ட் லாகின், டாக்டர் லாகின்' என பட்டன்கள் இருக்கும்.


1:29 AM IST
சித்த மருத்துவத்தை நம்புகிறோம்: சுகாதாரத்துறை செயலாளர்

''சித்த மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வாயிலாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

12:30 AM IST
ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கொரோனா கொல்லும்!

கொரோனா வைரஸ் நோயாளி ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு சில நாட்கள் உயர்ந்து காணப்பட்டாலும் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக பாதிக்கப்படும், சில சந்தர்ப்பங்களில் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டு என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

11:40 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அமிதாப் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கடந்த 10 நாளில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10:43 PM IST
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ; முதல்வர் பினராயி எச்சரிக்கை

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் அதற்கு எதிரான போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாம் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல. நாம் கொரோனா தொற்றுக்கான போரில் அதிகம் தியாகம் செய்துள்ளோம். கொரோனா தொற்றை ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளோம். மீண்டும் அதுபோல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதிப்புகளை குறைக்க முடியும். அது நிச்சயம் சாத்தியமாகும்.
பாதிப்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் நமக்கு தெரியும். ஆயினும் நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

10:00 PM IST
கொரோனா சிகிச்சையில் 'இட்டோலிசுமாப்' மருந்திற்கு அனுமதி

கொரோனா சிகிச்சையில் 'இட்டோலிசுமாப்' மருந்தினை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் உயரிழப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புகளை தவிர்க்க கொரோனா சிகிச்சையின் போது வெவ்வேறு மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சொரியாஸிஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படும் இட்டோலிசுமாப் மருந்தை தீவிர மற்றும் மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அவசர சூழல்களில் கட்டுப்பாடுடன் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

9:30 PM IST
பெங்களூருவில் ஜூலை 14 முதல் கடும் ஊரடங்கு அமல்

கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அங்கு நோய் தடுப்புநடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது .இந்நிலையில் பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் வரும் ஜூலை 14 இரவு 8 மணி முதல் ஜூலை 22-ம் தேதி அதிகாலை 5 மணி வரை 8 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

9:01 PM IST
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரிசோதனை

தெலுங்கானாவில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொற்றுக்கான பரிசோதனை (RAT) அதிகரித்து வருவதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தெலுங்கானாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முன்பை விட மாநிலத்தில் பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் நடத்தப்படும் பரிசோதனை களின் எண்ணிக்கை 6000 வரை உயர்த்த முடியும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, ஐதராபாத், ரங்காரெட்டி மற்றும் மேட்சல் மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை (RAT) கருவிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

8:15 PM IST
ஒடிசாவில் மேலும் 570 பேருக்கு கொரோனா

ஒடிசாவில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 570 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,526 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றுக்கு ஒரு பெண் உட்பட 5 பேர் புதிதாக பலியாகியுள்ளனர், ஒடிசாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பலியானவர்களில் 2 பேர் கஞ்சாமில் இருந்தும், பூரி, கட்டாக் மற்றும் குர்தாவில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 384 பேர் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், மற்றும் 186 பேர் தொடர் கண்காணிப்பு மூலமாகவும் கண்டறியப்பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


7:30 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 62.78 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து 62.78 சதவீதமாக உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

6:45 PM IST
சென்னையில் 1,185 பேருக்கு கொரோனா

சென்னையில் 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 76,158 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 1,791 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 17,989 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.34 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று (ஜூலை 11) புதிதாக 3,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆகவும், பலி எண்ணிக்கை 1,898 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3,907 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 58 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 102 ஆய்வகங்கள் (அரசு-53 மற்றும் தனியார் 49) மூலமாக, இன்று மட்டும் 37,825 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 15 லட்சத்து 66 ஆயிரத்து 917 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 3,591 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 915 ஆக உள்ளது.

5:55 PM IST
பரவலை தடுத்து நிறுத்துங்கள்; மோடி

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, கொரோனா பரவலை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

11:25 AM IST
73 லட்சத்து 66 ஆயிரத்து 491 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.11ம் தேதி ) காலை: 11;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 26 லட்சத்து ,31 ஆயிரத்து 067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 62 ஆயிரத்து 889 பேர் பலியாகி உள்ளனர். 73 லட்சத்து 66 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 26 லட்சத்து ,16 ஆயிரத்து 579 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.11ம் தேதி ) காலை; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 26 லட்சத்து ,16 ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 62 ஆயிரத்து 039 பேர் பலியாகி உள்ளனர். 73 லட்சத்து 27 ஆயிரத்து 360 பேர் மீண்டுள்ளனர்.

5:19 AM IST
தாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.ஏற்கனவே, தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.4:28 AM IST
பாகிஸ்தானில் 5 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

பாகிஸ்தானில் ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,43,599 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் நேற்று 2 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

3:27 AM IST
திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

திருவனந்தபுரத்தில் பூந்துறை பகுதியில் மிக வேகமாக நோய் பரவி வருகிறது. கேரளா தற்போது நோய்ப் பரவலில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2:14 AM IST
மதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது

மதுரையில் கொரோனா பலி நேற்று 100ஐ தாண்டியது. தினமும் 250 முதல் 350 வரை இருந்த பாதிப்பு 14 நாட்களுக்கு பின்னர் 200க்கு கீழே வந்தது.மதுரையில் நேற்று 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் பகுதிகளில் சென்னையிலிருந்து வந்தவர்கள் உட்பட 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டிக்குள் வெளி நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.மதுரையில் கொரோனா பலி நேற்று 100ஐ தாண்டியது. தினமும் 250 முதல் 350 வரை இருந்த பாதிப்பு 14 நாட்களுக்கு பின்னர் 200க்கு கீழே வந்தது.மதுரையில் நேற்று 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் பகுதிகளில் சென்னையிலிருந்து வந்தவர்கள் உட்பட 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டிக்குள் வெளி நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

1:41 AM IST
‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா' அச்சுறுத்தலையும் மீறி பார்லிமென்ட் தேர்தல் நேற்று(ஜூலை 10) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக ஓட்டளித்தனர்.

12:39 AM IST
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை:12) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.அதன்படி, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கடைகள் எதுவும் திறக்கப்படாது. வாகன போக்குவரத்து எதுவும் அனுமதிக்கப்படாது. எனவே, மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கி இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை, 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

11:36 PM IST
கேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,950 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று எண்ணிக்கை வந்த நிலையில் இன்று (ஜூலை 10) இது வரை இல்லாத அளவாக புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக உள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 123 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 51 பேருக்கும், தொற்று மூலாக 204 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று எண்ணிக்கை வந்த நிலையில் இன்று (ஜூலை 10) இது வரை இல்லாத அளவாக புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக உள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 123 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 51 பேருக்கும், தொற்று மூலாக 204 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர்.


10:06 PM IST
குணம் அடைவோர் விகிதம் 62.45 சதவீதமாக உயர்வு

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ' கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 2.72க்குள் இருக்கிறது. எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது என்பது குறித்து கவலை இல்லை. ஆனால், சோதனைகளை அதிகரித்து அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது'.'தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 2,70,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நம் நாடு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இருந்தாலும், கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளூர் பரவல் அதிகமாக காணப்படுகிறது'. இவ்வாறு ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்


9:12 PM IST
கோவையில் தினமும் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு 1,071 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 14 ஆகவும் உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 43 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்தது. இதில், 320 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; 744 பேர் இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8:08 PM IST
2021ம் வரை கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமா ?

கொரோனா தடுப்பூசி மருந்து 2021 வரை பயன்பாட்டிற்கு கொண்டு வர சாத்தியமில்லை என பார்லி. நிலைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தயாரான தடுப்பு மருந்துகளை மனிதர்களிடம் சோதனை செய்யும் முதல் முயற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகளை வரும் 2021ம் ஆண்டுக்கு முன்வரை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

7:30 PM IST
சென்னையில் குறைந்து வரும் பாதிப்பு

சென்னையில் 1,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று 2,869 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 18,616 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

7:10 PM IST
தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 3,680 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்தது. மேலும் 64 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 1,829 ஆனது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும், 3,680 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 101 ஆய்கவகங்கள் உள்ளன(53 அரசு மற்றும் 48 தனியார் ஆய்வகம்) இன்று ஒரே நாளில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 105 பேர் உள்ளனர்.
இன்று கொரோனா உறுதியானவர்களில், தமிழகத்தில் உள்ளவர்கள் 3,636 பேர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: 19 பேர்
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்: 25 பேர்.

இன்று மட்டும் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்தனர். அதில் 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,829 பேர் உயிரிழந்துள்ளனர்.

5:56 PM IST
ஒரு கோடியே 24 லட்சத்து ,24 ஆயிரத்து 398 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.10ம் தேதி ) மாலை; 05;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 24 லட்சத்து ,24 ஆயிரத்து 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 58 ஆயிரத்து 158 பேர் பலியாகி உள்ளனர். 72 லட்சத்து 47 ஆயிரத்து 340 பேர் மீண்டுள்ளனர்.

5:19 PM IST
கொரோனா மருந்து வேலை செய்கிறது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ, தினமும் ஒரு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அது தனக்கு வேலை செய்கிறது என்றும் கூறியுள்ளார்.


11:40 AM IST
ஒரு கோடியே 23 லட்சத்து ,93 ஆயிரத்து 692 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.10ம் தேதி ) காலை: 11;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 23 லட்சத்து ,93 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 57 ஆயிரத்து 495 பேர் பலியாகி உள்ளனர். 72 லட்சத்து 24 ஆயிரத்து 987 பேர் மீண்டுள்ளனர்.

6:46 AM IST
ஒரு கோடியே 23 லட்சத்து ,78 ஆயிரத்து 854 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.10 ம் தேதி ) காலை: 06;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 23 லட்சத்து ,78 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 56 ஆயிரத்து 601 பேர் பலியாகி உள்ளனர். 71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டுள்ளனர்.

6:14 AM IST
2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து

“கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து, 2021ம் ஆண்டின் துவக்கத்தில், தயாரிக்கப்பட்டுவிடும்,” என, அமெரிக்க தேசிய தொற்று நோய் மையத்தின் இயக்குனர், டாக்டர் அந்தோனி பாசி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது, 2021ம் ஆண்டின் துவக்கத்திலோ, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என, நான் முழுமையாக நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

5:23 AM IST
பொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா

தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக உள்ள ஜீனைன் ஏயெஸ் , நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உரையாற்றினார். அப்போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.முன்னதாக அந்நாட்டு சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு அமைச்சர் என இரு அமைச்சர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

4:04 AM IST
கொரோனாவை வென்றவர்கள் சென்னையில் 68 சதவீதம் பேர்

சென்னையில், அனைத்து மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60 சதவீதத்திற்கும் மேல் குணமடைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், ஏப்., முதல் வாரம் முதல், பரவலாக தொற்று கண்டறியப்படுகின்றன. நேற்றுடன், 72 ஆயிரத்து, 500 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது

இதில், 49 ஆயிரத்து, 587 பேர் குணமடைந்தனர். இது, 68 சதவீதமாகும். தவிர, 21 ஆயிரத்து, 766 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், 1,146 பேர் இறந்துள்ளனர் .தொற்று பாதிப்பில் இருந்து, சென்னை மாநகராட்சி, மின்னல் வேகத்தில் மீண்டு வருகிறது. அனைத்து மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து உள்ளனர்

3:06 AM IST
1.07 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா வைரசை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 2.67 லட்சம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.நேற்று வரை மொத்தம் 1,07,40,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 2,67,061 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.


2:40 AM IST
முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை

இதுகுறித்து, முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வருக்கு அவ்வப்போது, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை, பரிசோதனை நடத்தப்படுகிறது' என்றனர்.

2:01 AM IST
திருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா

திருமலையில், பணிபுரியும் தேவஸ்தான ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க, திருமலையில் மார்ச், 20 முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு கட்ட பொது முடக்கத்திற்கு பின், அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஜூன், 8 முதல், ஏழுமலையான் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி, 12 ஆயிரமாக உயர்ந்தது.இந்நிலையில், தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என, 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தேவஸ்தானம் நடத்தி வரும், 'சிம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.இதில், கொரோனா தொற்று எண்ணிக்கை, 50க்கும் அதிகமாக உயர்ந்தது. இதையடுத்து, ஊழியர்களின் நலன் கருதி, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த் குமார் தலைமையில், குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

1:01 AM IST
சமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை குறைக்கிறது

முகக்கவசம் அணிவது கொரோனா பாதிக்கும் அபாயத்தை 65 சதவீதமும், சமூக இடைவெளி 90 சதவீதமும் குறைத்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.இது பற்றி ஆய்வாளர்கள் கூறியதாவது: முகக்கவசம் அணிவது நோய்வாய்ப்பட்ட நபரிடம் வைரஸ் பரவுவதை தடுப்பதோடு, ஆரோக்கியமான மக்களையும் நோய்க்கு ஆளாகாமல் தடுக்கிறது. முகக்கவசங்கள் வேலை செய்வதாக நான் நம்பவில்லை என்பவர்கள் அறிவியல் ஆதாரங்களை புறக்கணிப்பவர்கள் ஆவர். இது ஈர்ப்பு விசையை நான் நம்பவில்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். இரண்டு முறைகளில் கொரோனா வைரஸ் பரவுகிறது. ஒன்று இருமும்போது அல்லது தும்மும்போது காற்றில் வெளியேற்றப்படும் நீர்த்துளிகள் வழியாகவும், இரண்டாவது நாம் பேசும்போது காற்றில் தெளிக்கும் துகள்கள் வழியாகவும் பரவுகிறது.

12:07 AM IST
கேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அங்கு தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மொத்தம் 2,795 பேர் சிகிச்சயைில் உள்ளனர். கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 74 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் உள்ளூர்வாசிகள் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

11:04 PM IST
உபி.யில் நாளை இரவு முதல் 13-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்

உ.பி.யில் நாளை இரவு முதல் ஜூலை 13-ம் தேதி வரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

உ.பி.யில் கொரோனா பாதிப்ப அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உ.பி.யில் நாளை இரவு 10 மணி முதல் 13-ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.

இதையடுத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

10:33 PM IST
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தானாக முன் வந்துள்ள இளைஞர்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தானாக முன்வந்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிரஞ்ஜித் திபார் என்ற 30 வயது இளைஞர் இம்மருந்தின் மனித பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள, தானாக முன் வந்துள்ளார். இவர் ஆசிரியராக பணிபுரிகிறார். ஆர். எஸ்.எஸ். இயக்கத்திலும் சேர்ந்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள சிரஞ்ஜித் தயாராக உள்ளார். இவர் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் முதல் மனிதராக உள்ளார்.

இவருக்கு பாட்னாவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்திலிருந்து வந்த அழைப்பை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இவருக்கு பரிசோதனை ஒடிசாவி்ல் நடக்கும் என தெரிகிறது. இவர் ஏற்கனவே மருந்து பரிசோதனைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விண்ணப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் ஈடுபாடுள்ள இவர் மருத்துவ பரிசோதனைக்காக தன் உடலை நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும் அர்பணிப்பதாக தெரிவித்தார்.10:10 PM IST
கோவையில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

கோவையில், மொத்த கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி கோவையில் இன்று 98 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது. 702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்ததால், கோவையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.9:20 PM IST
சென்னையில் ஐ.டி., நிறுவனங்களுக்கு புது உத்தரவு

சென்னையில் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களும் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணிக்கு செல்லும் 10 சதவீத ஊழியர்களும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

8:35 PM IST
இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருந்து: மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக மேலும் ஒரு மருந்து சோதனை அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் தவிர மேலும் ஒரு மருந்து ஆய்வில் உள்ளது. ஐ.சி.எம்.ஆர்., உடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட, காடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் முயற்சித்து வருகிறது.

இரு மருந்துகளும், முறையான ஆய்வுக்கு உட்படுத்தி, விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்ய உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்..


7:40 PM IST
சிக்னல்களில் நிற்கும் வாகனங்களால் நோய் தொற்றும் அபாயம்

சென்னை சிக்னல்களில் பைக்குகள் அருகருகே நின்றிருக்கும் போது கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு 10 முக்கிய சாலை சந்திப்புகளில் ஆயுதப்படை போலீசார் உதவியுடன் போக்குவரத்தினை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அண்ணா சாலை, ஸ்பென்சர், அண்ணா மேம்பாலம், கீழ்ப்பாக்கம், ஈகா சிக்னல் வேளச்சேரி, கிண்டி, அடையாறு உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த 10 சந்திப்புகளில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டு வாகன ஓட்டிகள் வெகு நேரம் நிற்காமல் போக்குவரத்தை சீர் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

7:00 PM IST
சென்னையில் இன்று 1,216 பேருக்கு கொரோனா

சென்னையில் 1,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,700 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 20,271 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

6:33 PM IST
தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

5:37 PM IST
ஒரு கோடியே 21 லட்சத்து ,97 ஆயிரத்து 837 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.9ம் தேதி ) மாலை: 05;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 21 லட்சத்து ,97 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 52 ஆயிரத்து 785 பேர் பலியாகி உள்ளனர். 70 லட்சத்து 94 ஆயிரத்து 347 பேர் மீண்டுள்ளனர்.

12:50 PM IST
70 லட்சத்து 71 ஆயிரத்து 467 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.9ம் தேதி ) மதியம்: 12;40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 21 லட்சத்து ,72 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேர் பலியாகி உள்ளனர். 70 லட்சத்து 71 ஆயிரத்து 467 பேர் மீண்டுள்ளனர்.

2:43 PM IST
69 லட்சத்து 16 ஆயிரத்து 529 பேர் மீண்டர்

இன்று ( ஜூலை.8ம் தேதி ) மதியம்: 2;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 19 லட்சத்து ,69 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 47 ஆயிரத்து 049 பேர் பலியாகி உள்ளனர். 69 லட்சத்து 16 ஆயிரத்து 529 பேர் மீண்டுள்ளனர்.

6:43 AM IST
ஒரு கோடியே 19 லட்சத்து , 41 ஆயிரத்து 783 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.8ம் தேதி ) காலை: 06;35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 19 லட்சத்து , 41 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 45 ஆயிரத்து 652 பேர் பலியாகி உள்ளனர். 68 லட்சத்து 44 ஆயிரத்து 973 பேர் மீண்டுள்ளனர்.

5:25 AM IST
கொரோனா தடுப்பு குழு தலைவர் ககன்தீப் கங் ராஜினாமா

அரியானா மாநிலம் பரிதாபாதில் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (டி.எச்.எஸ்.டி.ஐ.,) செயல் இயக்குனர் ககன்தீப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனத்தின் செயல் இயக்குனராக மருத்துவ ஆராய்ச்சியாளர் ககன்தீப் கங் செயல்பட்டார். இவர் தலைமையிலான குழு கொரோனா தொற்றுக்கான நோய்தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் ககன்தீப்ப கங் தனது பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பணியில் இருந்து விடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், 'சொந்த காரணத்துக்காக பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன்' என்றார். இவர் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4:10 AM IST
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6-ம் தேதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது:உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் .இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


3:08 AM IST
கொரோனா பிடியிலிருந்து வெகுவாக மீண்டு வரும் சென்னை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.தற்போதைய நிலையில் 22374 பேர் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். பல்லாயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். சென்னையில் நேற்று மட்டும் 2,853 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். விரைவில் சென்னை கொரோனாவில் இருந்து மீண்டுவிட வாய்ப்பு உள்ளது.

2:20 AM IST
'பானி பூரி ஏடிஎம்': 10ம் வகுப்பு மட்டுமே முடித்த இளைஞர் சாதனை

கொரோனா பரவல் பயமின்றி பானி பூரி சாப்பிட, 'பானி பூரி ஏடிஎம்' தயாரித்த இந்தியரின் படைப்பு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் சாலையோரம் அதிகம் விற்கப்படும் பானிபூரியை அதிகம் விரும்பி சாப்பிடும் பலரும், யூடியூப் பார்த்து வீட்டில் தயாரித்து உண்ண ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், கொரோனா பயமின்றி பானிபூரி சாப்பிட, இந்தியர் ஒருவர் மிஷின் ஒன்றை தயாரித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த இளைஞரான பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி, இந்த 'பானி பூரி ஏடிஎம்'மை தயாரித்துள்ளார்.இந்த மிஷினில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால், கன்வேயர் பெல்டில், பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு சேர்த்த கலவை, ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் பயமின்றி பானி பூரி சாப்பிடவும் இந்த மிஷினை, பிரஜாபதி கண்டுபிடித்துள்ளார்.10ம் வகுப்பு மட்டுமே படித்த பிரஜாபதியின் இந்த கண்டுபிடிப்பும், அவரது மிஷின் எவ்வாறு செயல்படுகிறது என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


1:45 AM IST
அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்

கொரோனா பாதிப்பையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த (என்95 முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க்)முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் போன்றவற்றை, அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 100 நாட்களைக் கடந்து 7 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் தேவையான அளவு தற்போது இரு பொருட்களும் மக்களுக்கு கிடைப்பதால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்.

12:45 AM IST
ஏழைகளின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்குவதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ரூ.9 கோடி வழங்கியுள்ளார்.

12:00 AM IST
மனைவியை வீட்டிற்குள் விட மறுத்த கணவன்

கொரோனா அச்சம் காரணமாக மனைவியை வீட்டிற்குள் விட மறுத்தார் கணவர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார்.

மூன்று மாத தவிப்பிற்கு பின்னர் கர்நாடக மாநில அரசு ஒரு சில நிபந்தனைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இதனை பயன்படுத்தி கொண்ட அப்பபெண் கணவர் வீட்டிற்கு திரும்பினார்.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கணவர் கொரோனா வைரஸ் பரவுவதை காரணம் காட்டி தன் மனைவியை வீட்டிற்குள் விட மறுத்தார் அதுமட்டுமல்லாது வேறு எங்காவது சென்று தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தினார்.இதனையடுத்து அப்பெண் வர்தூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் பெண்கள் ஹெல்ப் லைனையும் துணைக்கு அழைத்தார். போலீசார் மற்றும் பெண்கள் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கணவருக்கு ஆலோசனை வழங்கியதுடன் கொரோனா அச்சம் குறித்த அவரது தவறான எண்ணங்களை உடைத்தனர். அதன் பின்னர் அப்பெண் தனது கணவர் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டார்.

11:00 PM IST
தெலுங்கானாவில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நேற்று சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கூறுகையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும், கொரோனா நோயாளிகளுக்கு முழு அளவிலான சிறந்த சேவையை வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், பாதிப்புகளை கண்காணிக்க, கண்காணிப்பாளர்கள் அவசியமாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றுடையை நோயாளிகளை முறையாக சோதனை செய்வது, வழிகாட்டுதலின்படி, நடப்பதாக உறுதிபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கடுமையான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மாவட்டங்களில் உள்ள பயிற்சி மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

10:20 PM IST
கோவையில் நீதிபதி உள்பட 43 பேருக்கு கொரோனா: இருவர் பலி

கோவையில், இன்று(ஜூலை 7) ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதன்மூலம், பாதிப்பு எண்ணிக்கை, 839 இறப்பு எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.கோவை மாவட்ட விரைவு நீதிமன்றம் எண் ஒன்றில் பணியாற்றி வரும், நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நீதிபதிக்கும் அவருடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கோவை மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் எண் 2ல் பணியாற்றி வரும், ஆண் நீதிபதி, 33. கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 42 வயது பெண் போலீஸ்க்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.மொத்தம் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.9:43 PM IST
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா

பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சொனாரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜாயிர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். இது தொடர்பாக அதிபர் இன்று டி.வி. வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்தார்.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

9:00 PM IST
சீனாவுக்கு செல்ல வேண்டாம்: ஆஸ்திரேலியா எச்சரிக்கை

தன்னிச்சையாக தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால், சீனாவுக்கு செல்ல வேண்டாமென, ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

8:36 PM IST
பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பாகும் கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஐ.எஸ் பயங்கரவாத குழு, அல்-கொய்தா மற்றும் அதன் துணை அமைப்புகள் போன்றவற்றிற்கு பையோ டெரரிஸம் போன்ற வாய்ப்புகளை வழங்குவதாக ஐ.நா தலைவர் அந்தோனியோ குடரெஸ் எச்சரித்துள்ளார்.

8:00 PM IST
கொரோனா குறித்து பீஹார் அரசுக்கு கவலையில்லை

பீஹாரில் கொரோனா தொற்றை விட வரவிருக்கும் தேர்தல் குறித்து மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.


7:46 PM IST
சென்னையில் இன்று 1,203 பேர் பாதிப்பு

சென்னையில் 1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,853 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 22,374 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

7:24 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,18,594; பலி 1,636 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று (ஜூலை 07) மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆகவும், பலி எண்ணிக்கை 1,636 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3,551 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 96 ஆய்வகங்கள் (அரசு-50 மற்றும் தனியார் 46) மூலமாக, இன்று மட்டும் 36,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 14 லட்சத்து 13ஆயிரத்து 435 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக உள்ளது.

6:27 PM IST
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: முதல்வர் இபிஎஸ்

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை என முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:கிண்டியில் கொரோனா சிகிச்சை மையத்தில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக்கூடம், வைபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. டாக்டர்களுடனும், உறவினர்களுடனும் நோயாளிகள் காணொலி மூலம் பேசும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை. சென்னையில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டியுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. பொதுமக்கள் மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். அரசின் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம்.

2:05 PM IST
கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா

கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் 10 நீதிபதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

1:34 PM IST
ஒரு கோடியே 17 லட்சத்து ,56 ஆயிரத்து 375 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.7ம் தேதி ) மதியம்: 1;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 17 லட்சத்து ,56 ஆயிரத்து 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 41 ஆயிரத்து 085 பேர் பலியாகி உள்ளனர். 67 லட்சத்து 52 ஆயிரத்து 819 பேர் மீண்டுள்ளனர்.

6:30 AM IST
ஒரு கோடியே 17 லட்சத்து ,32 ஆயிரத்து 169 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.7 ம் தேதி ) காலை : 06;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 17 லட்சத்து ,32 ஆயிரத்து 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 40 ஆயிரத்து 119 பேர் பலியாகி உள்ளனர். 66 லட்சத்து 23 ஆயிரத்து 204 பேர் மீண்டுள்ளனர்.

5:26 AM IST
டில்லியில் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

டில்லியில் ஒரே நாளில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.இந்நிலையில், தலைநகர் டில்லியில் ஒரே நாளில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரம், தமிழகத்தை அடுத்து டில்லியிலும் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.

இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,00,823 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,115 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

4:26 AM IST
34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்

34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இப்பட்டறையில் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். செல்வபுரம் பகுதியில் தொடர்ந்து அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து சுகாதார துறை சார்பில் செல்வபுரம் பகுதியில், 140 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில், ஐயப்பா நகரில் செயல்பட்டு வரும் தங்க நகைப்பட்டறையில் பணிபுரிந்த, 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பாதிப்புக்குள்ளான அனைவரும் கோவை கொடீசியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அப்பட்டறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.3:07 AM IST
பாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கு இன்று (ஜூலை 6) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த வெள்ளியன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், கீழ்சபை சபாநாயகர் ஆசாத் கைசர் உள்பட ஏராளமான பாக்.,அரசியல்வாதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாக்.,சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சா தனது டுவிட்டரில், 'இன்று எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவ ஆலோசனைப்படி, எனது வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். எனக்கு லேசான அறிகுறி இருந்தது. எனக்காக நீங்கள் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.2:30 AM IST
மாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று

மாஜி நடிகையும், லோக்சபா எம்.பி.யுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் பக்கத்தில் நடிகை சுமலதா வெளியிட்டுள்ளதாவது:
கடந்த சனிக்கிழமை (ஜூலை 4ம் தேதி), எனக்கு தலைவலியும், தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டது.உடனே கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். சோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதித்த எனது தொகுதியில்ஆய்வு நடத்தியதால் ஒரு வேளை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, பொதுமக்களின் ஆசீர்வாதம் இருப்பதால் இந்த நோயிலிருந்து வேகமாக குணமடைவேன் இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.
1:30 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு உண்டு

'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்' என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஆண்டின் இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை.இந்த தேர்வுகளை நடத்துவதா ரத்து செய்து விட்டு முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா என மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானிய குழுவின் வழிமுறைகளின்படி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படவேண்டும்.தேர்வுகளை நடத்தும் போது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


12:30 AM IST
2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை

சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டடம், இரண்டு வாரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூலை 7) துவக்கி வைக்க உள்ளார்.

11:39 PM IST
இந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..!

உலகளவில் கொரோனா பாதிப்பில் 3 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத யூனியன் பிரதேசமாக லட்சத்தீவுகள் இருந்து வருகிறது.இது குறித்து கவரட்டியின் துணை கலெக்டரான காசிம் கூறுகையில், 'சுமார் 1,000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை காரணங்களுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்தனர். அவர்களின் விவரங்களை பட்டியலிட்டு, திட்டமிடப்பட்ட முறையில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். குறிப்பாக, லட்சத்தீவை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் போன்ற வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. லட்சத்தீவை சேர்ந்தவர்கள் திரும்புவதற்கு முன்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

10:44 PM IST
தெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து நேற்று ஒரு நாளில் 1,590 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) மேலும் 1,590 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,902 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் புதிதாக 7 பேர் பலியாகினர். இதனால் தெலுங்கானாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக அதிகரித்தது. நேற்று ஒரு நாளில் 1,166 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,703 ஆக உயர்ந்தது.

10:05 PM IST
கோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் டிஸ்சார்ஜ்

கோவையில் இன்று, 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்வபுரம் ஐயப்பா நகரில் மட்டும், 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் இன்று, 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 802 ஆக உயர்ந்துள்ளது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த, 26 ஆண்கள், 12 பெண்கள், தலா ஒரு ஆண், பெண் குழந்தைகள் என, 40 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

9:39 PM IST
கேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்

கேரள மாநிலத்தில் கொரோனா பரவலையடுத்து ஓராண்டுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது, சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

9:05 PM IST
கல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி

அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தேர்வுகள் தள்ளியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:அனைத்து கல்லூரிகள், பல்கலை.களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம். இதில் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களின்டி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:30 PM IST
தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆக்ராவில் கொரோனா பரவல் காரணமாக 71 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தாஜ்மஹால் மட்டுமின்றி அருகில் உள்ள மற்ற நினைவுச் சின்னங்களும் மூடப்பட்டிருக்கும். இதன்படி பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை, அக்பர் டோம்ப், மேஹ்தாப் பாக் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிடப்பட்ட சுற்றுலாதலங்களுக்கு வரும் பயணிகள் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவை அனைத்தும் தொடர்ந்து மூடப்படுவதாக ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

8:00 PM IST
மஹா.,வில் இன்று மட்டும் 279 போலீசாருக்கு கொரோனா

மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று (ஜூலை 6) ஒரே நாளில் 279 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹா., உள்ளது. அங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது இந்நிலையில் இன்று ஒரே நாளில் அங்கு புதிதாக 279 போலீசாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட போலீசாரின் மொத்த எண்ணிக்கை 5,454ஆக உயர்ந்தது. இதுவரை அங்கு 70 போலீசார் பலியாகி உள்ளனர். 1,078 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7:05 PM IST
ஆந்திராவில் ஜூலை 13-ல் பள்ளிகளை திறக்க முடிவு

ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளி கல்வி நிறுவனங்கள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தொடக்கப்பள்ளிகள் , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும். பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

6:32 PM IST
சென்னையில் 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,747 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 70,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 2,573 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 24,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:02 PM IST
தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 571 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 61 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

11:26 AM IST
65 லட்சத்து 38 ஆயிரத்து 502 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.6ம் தேதி ) காலை : 11;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 15 லட்சத்து ,63 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 36 ஆயிரத்து 877 பேர் பலியாகி உள்ளனர். 65 லட்சத்து 38 ஆயிரத்து 502 பேர் மீண்டுள்ளனர்.

6:53 AM IST
ஒரு கோடியே 15 லட்சத்து ,50 ஆயிரத்து 542 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.6 ம் தேதி )காலை : 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 15 லட்சத்து , 50 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 36 ஆயிரத்து 445 பேர் பலியாகி உள்ளனர். 65 லட்சத்து 31 ஆயிரத்து 107 பேர் மீண்டுள்ளனர்.

5:27 AM IST
உலக அளவில் பாதிப்பு: 3வது இடத்தில் இந்தியா

உலக அளவில் கொரோனாவா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.


4:26 AM IST
கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒரே நாளில் புதிதாதக 225 பேருக்கு கொரோனா உறுதியானது.இதயைடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,429 ஆனது. பாதிப்பு அடைந்தவர்களில் 2,228 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 3,174 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.கேரளாவில் மொத்தம் 1,80939 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மொத்தம் 153 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளன. இவ்வாறு மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

3:29 AM IST
கொரோனா பரிசோதனை ; 5.60 லட்சம் சோதனை கருவிகள் கையிருப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு செய்யப்படும் பரிசோதனையில் 5.60 லட்சம் சோதனை கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர், உமாநாத் கூறியதாவது: அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் தென்கொரியாவிடம், 15.50 லட்சம், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் வாங்கப்பட்டன. அதைதொடர்ந்து, கூடுதலாக, 10 லட்சம் கருவிகள் வாங்குவதற்காக, தென்கொரியாவிடம் ஏழு லட்சமும், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இந்திய நிறுவனத்திடம், தலா, ஒரு லட்சம் கருவிகள், ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.

இதில், முதற்கட்டமாக, ஒரு லட்சம் கருவிகள் வந்துள்ளன. இன்னும், மூன்று அல்லது நான்கு வாரங்களில், அனைத்து உபகரணங்களும் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அரசிடம், 5.60 லட்சம் கருவிகள் உள்ளன. அதில், மருத்துவ பணிகள் கழகத்திடம் 4 லட்சமும், மருத்துவமனைகளில், 1.60 லட்சமும் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

3:00 AM IST
ஆந்திராவில் 466 போலீசாருக்கு கொரோனா

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கத்தால் 466 போலீசார் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று 'மீட்-தி-பிரஸ்' என்ற நிகழ்ச்சியில் போலீஸ் ஜெனரல் கெளதம் சவாங் கலந்து கொண்டார்.அவர் கூறுகையில், கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு எனது பாராட்டுக்கள். ஆயினும் பாதிப்புகளில் சுமார் 466 போலீசார் நோய் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தனர். 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பிரச்னை உள்ளவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்புகளில் ஆந்திர மாநிலம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. மற்ற சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறந்தது. இவ்வாறு கூறினார்.


2:28 AM IST
கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்

உ.பி.,யில் கொரோனா தொற்று இல்லையென போலி சான்றிதழ் அளிக்க மருத்துவமனை ஊழியர் பேரம் பேசும் வீடியோ வெளியானதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.இது தொடர்பாக மீரட் மாவட்ட மாஜிஸ்திரேட் அனில் திங்காரா கூறுகையில், 'மீரட்டில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. இது தொடர்பாக நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். தனியார் மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். அதனோடு இன்று மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்தில், இது போன்று வேறு யாரேனும் செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


1:27 AM IST
ஆந்திராவில் மேலும் 998 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று 998 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,697 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 14 பேர் பலியாகினர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் இறப்பு விகிதம் 1.24 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 391 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 8,422 பேர் நோய் பாதிப்புகளில் இருந்து மீண்டனர்.

12:32 AM IST
கொரோனாவில் தமிழகம் மீள வேண்டும்: குரு பவுர்ணமி விழாவில் சத்குரு ஆசி

'கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டு, வெற்றிகரமாக வெளியே வர வேண்டும்' என்று, குரு பவுர்ணமி விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.

சத்குரு பேசியதாவது: கொரோனா வைரஸ் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.யோகா என்னும் நோய் எதிர்ப்பு சக்திக்கான பாதுகாப்பு கவசம் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். கவசம் வலுவாக இல்லாவிட்டால் எந்த மருத்துவர் வந்தாலும், எந்த மருந்தை உட்கொண்டாலும் அது வேலை செய்யாது.ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்தால் உங்களுக்கு வைரஸ் வந்துவிட்டால், 'என் உடலில் இருந்து மற்ற உடல்களுக்கு அதுபோக கூடாது' என்ற ஒரு உறுதியை அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும். அனைவரும் உறுதி ஏற்றால், தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து முதலில் மீண்டு வர முடியும். இவ்வாறு, சத்குரு பேசினார்.

11:34 PM IST
மஹா.,வில் புதிதாக 6,555 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 6,555 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,06,619 ஆக அதிகரித்தது. மேலும் 151 பேர் கொரோனா தொற்றால் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,822 ஆக உயர்ந்தது. மஹா.,வின் இறப்பு விகிதம் 4.27 சதவீதமாக உள்ளது.மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,658 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 1,11,740 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மீட்பு விகிதம் 54.8 சதவீதமாக உள்ளது.

10:30 PM IST
வீட்டுத் தனிமைப்படுத்துதல் ; முன்னேற்ற பாதையில் தெலுங்கானா

தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டு தனிமைப் படுத்துதல் மூலமாக குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்து முன்னேற்ற பாதையில் மாநிலம் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.தற்போது இது தெலுங்கானாவில் நல்ல ஊக்கமிக்கும் முடிவுகளை தர துவங்கியது. மாநிலத்தில் 12,000 நோயாளிகள் வரை 'வீட்டு தனிமை' பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களில் பாதி பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 6,782 நோயாளிகள் தொலைபேசி மூலமாகவும், டெலிமெடிசின் மூலம் அரசு மருத்துவர்களால் கண்காணிக்கப் படுகிறார்கள். மாநிலத்தில் ஏற்கனவே 1,436 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

9:27 PM IST
கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் ஜூலை 2021 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

அடுத்த ஓராண்டிற்கு மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை

.அரசு அனுமதி பெற்று நடத்தும் சமூக கூட்டங்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. 10 பேரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு பங்கேற்க அனுமதி இல்லை.

இறப்பு போன்ற தூக்க நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.பணியிடங்களில், பேருந்துகளில், வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம்.

8:44 PM IST
21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகம்

நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் 21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

கொரோனா உலகையே உலுக்கி வருகிறது. ஐரோப்பா நாடுகளில் தொற்று சற்று குறைந்து வந்தாலும், அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தொடரும் அதிகரிக்கும் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவிலிருந்து குணைமடைபவர்கள் விகிதம் தேசிய சராசரி விகிதமான 60.77 ஐ விட அதிகமாக இருப்பது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதத்தைப் பொறுத்தவரை சண்டிகர் 85.9 சதவிகிதத்துடனும், லடாக் 82,2 விகிதத்துடனும், உத்தரகாண்ட் 80.9 சதவீதத்துடனும், சட்டீஸ்கர் 80.6 சதவீதத்துடனும், ராஜஸ்தான் 80.1 சதவீதத்துடனும், மிசோரம் 79.3 சதவீதத்துடனும் உள்ளது.

8:03 PM IST
கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு

கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை அடுத்தாண்டு ஜூலை வரை கடைபிடிக்க வேண்டும் என கேரள அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படாமல், இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதுஎன தெரிவித்துள்ளது.

7:27 PM IST
ஒரு கோடியே 14 லட்சத்து ,17 ஆயிரத்து 510 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.5ம் தேதி ) இரவு : 7;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 14 லட்சத்து ,17 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 34 ஆயிரத்து 278 பேர் பலியாகி உள்ளனர். 64 லட்சத்து 65 ஆயிரத்து 550 பேர் மீண்டுள்ளனர்.

7:01 PM IST
சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. 24,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:37 PM IST
தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

1:07 PM IST
64 லட்சத்து 45 ஆயிரத்து 354 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.5ம் தேதி ) பகல்: 1;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 13 லட்சத்து ,87 ஆயிரத்து 395பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 33 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர். 64 லட்சத்து 45 ஆயிரத்து 354 பேர் மீண்டுள்ளனர்.

6:29 AM IST
ஒரு கோடியே 13 லட்சத்து , 71 ஆயிரத்து 989 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.5 ம் தேதி ) காலை; 06;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 13 லட்சத்து , 71 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 32 ஆயிரத்து 861 பேர் பலியாகி உள்ளனர். 64 லட்சத்து 33 ஆயிரத்து 931 பேர் மீண்டுள்ளனர்.

5:31 AM IST
நிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா ஊரடங்கு காலத்தில், பா.ஜ.,வினர் மேற்கொண்ட மக்கள் நிவாரண பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பணம், அத்தியாவசிய பொருட்கள், உணவு உட்பட பல உதவிகள், பா.ஜ., சார்பில் செய்யப்பட்டன. இப்படி, ஊரடங்கு காலத்தில், பா.ஜ., மேற்கொண்ட, மக்கள் நிவாரண பணிகள் பற்றி, பிரதமர் மோடி நேற்று கேட்டறிந்தார். இந்த சந்திப்பில், பா.ஜ.,வினர், தாங்கள் செய்த பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமரிடம் தெரிவித்தனர்.

அப்போது, பிரதமர் கூறியதாவது:ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும், பா.ஜ., மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை நாம் உணர்த்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும், ஊரடங்கு காலத்தில், பா.ஜ.வினர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டத்தக்கது.நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு செய்யும் உதவிகள், ஆண்டவனுக்கு செய்யும் தொண்டை விட சிறப்பானது.இவ்வாறு, பிரதமர் கூறினார்.

5:00 AM IST
98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு

கோவா மருத்துவமனையில், 98 நாட்கள் தங்கியிருந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் பணாஜியில், இ.எஸ்.ஐ., எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு பிரிவு உள்ளது. இதில், டாக்டர் எட்வின் கோம்ஸ் தலைமையில், சிறப்பு மருத்துவ சிகிச்சை குழு அமைக்கப்பட்டுள்ளது.இவர், கடந்த, 98 நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து விட்டு, நேற்று முன்தினம், தன் வீட்டிற்கு திரும்பினார்.அங்கு, எட்வினின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், அவரது சேவையை பாராட்டி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

4:49 AM IST
மஹாராஷ்டிராவில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.மஹாராஷ்டிராவில் நேற்று மேலும் 7 ஆயிரத்து 074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 064 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,671 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


4:00 AM IST
டில்லியில் 97 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

டில்லியில் ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது.டில்லியில் ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97,200 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,004 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 68 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.3:03 AM IST
திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று

''திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், 17 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது,'' என, அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறினார்.சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில், ஏழுமலையான் தரிசனம் ஜூன், 8ம் தேதி துவங்கப்பட்டது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், திருமலையில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என, 17 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.2:04 AM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் 716 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 716 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.நாட்டின் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 50,857 ஆக உயர்ந்தது.அரபு எமிரேட்சில் புதிதாக 3 பேர் பலியாகினர். இதனையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புகளில் இருந்து இன்று 704 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,857 ஆக உயர்ந்தது. அரபு எமிரேட்சில் 71,000 க்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


1:09 AM IST
கொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்

நாட்டில், நேற்று வரை, ஆறு லட்சத்து, 48 ஆயிரத்து, 315 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், குணமடைந்தோர் விகிதம்,60.8 சதவீதமாக உயர்ந்து உள்ளது.இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கை:நேற்று ஒரேநாளில், 22 ஆயிரத்து, 771 பேரிடம், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆறு லட்சத்து, 48 ஆயிரத்து, 315 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 1.93 லட்சம் பேருடன், மஹா.,முதலிடத்திலும், 1.02 லட்சம் பேருடன் தமிழகம் அடுத்த இடத்திலும், 94 ஆயிரத்து, 695 பேருடன், டில்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நாட்டில் தொற்றுக்குஉள்ளானவர்களில், இரண்டு லட்சத்து, 35 ஆயிரத்து, 433 பேர் சிகிச்சையில் உள்ளனர்; 3.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோர் விகிதம், 60.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில், நேற்று, 442 பேர் வைரஸ் பாதிப்பில் இறந்துள்ளனர். இது, தொற்றில் பலியானோர் எண்ணிக்கையை, 18 ஆயிரத்து, 655 ஆக அதிகரித்துள்ளது.

12:05 AM IST
தெலுங்கானாவில் மேலும் 1,892 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 1,892 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20,462 ஆக உயர்ந்தது. நோய் தொற்றுக்கு புதிதாக 8 பேர் பலியாகினர். தெலுங்கானாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 1,658 பேர் ஐதராபாத் நகரத்தை (GHMC) சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம், 1,126 பேர் குணமடைந்தனர். இதுவரை 10,195 பேர் குணமடைந்துள்ளனர்.

11:06 PM IST
13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு

சென்னை, செங்கல்பட்டு, கடலுார், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் என, 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.எனவே, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

10:16 PM IST
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 168 பேர் பலி

ரஷ்யாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 168 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 6,632 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,74,515 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றுக்கு 168 பேர் பலியாகினர். நாட்டில் நோய் பாதிப்புக்கு இதுவரை 10,027 பேர் பலியாகினர்.நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 8,986 பேர் குணமடைந்தனர். ரஷ்யாவில் நோய் பாதிப்புகளில் இருந்து இதுவரை 446,879 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நோய் பாதிப்புகளை குறைக்க மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நாள்தோறும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

9:25 PM IST
ராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா

ராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து இன்று மேலும் 204 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,256 ஆகஉயர்ந்தது. நோய் தொற்றுக்கு பரத்பூர் , ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 3 நகரங்களில் தலா ஒருவர் பலியாகினர். ராஜஸ்தானில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தின் நோய் பாதிப்புகளில் இருந்து 15,352 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,461 பேர் மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளனர்.

8:28 PM IST
புதிதாக இ-பாஸ் பெற அவசியம் இல்லை

ஜூலை 6ம் தேதிக்குப் பிறகு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர முழு ஊரடங்குக்கு முன் மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பணியாளர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரை இ-பாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்துக் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

7:40 PM IST
கோல்கட்டாவில் ஜூலை 19 வரை 6 நகரங்களின் விமான சேவைக்கு தடை

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தின் கோல்கட்டா விமானநிலையத்தில் ஜூலை 19 வரை சென்னை உள்ளிட்ட 6 நகரங்களின் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.டில்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து எந்தவித விமானங்களும் கோல்கட்டாவிற்கு இயக்கப்படாது.

7:00 PM IST
சென்னையில் மேலும் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று (ஜூலை 04) அதிகபட்சமாக சென்னையில் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரை 24,195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

6:34 PM IST
தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,450 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

6:26 PM IST
5 லட்சத்து 29 ஆயிரத்து 780 பேர் பலி

இன்று ( ஜூலை.4ம் தேதி ) மாலை; 06;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 12 லட்சத்து ,23 ஆயிரத்து 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 29 ஆயிரத்து 780 பேர் பலியாகி உள்ளனர். 63 லட்சத்து 66 ஆயிரத்து 982 பேர் மீண்டுள்ளனர்.

5:46 PM IST
சென்னையில் சில தளர்வுகள், மதுரையில் முழு ஊரடங்கு

சென்னையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும் ஆன்லைன் டெலிவரிக்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. நகை, ஜவுளிக்கடைகள் மாலை 6 மணி வரை திறக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் ஜூலை12 ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

2:47 PM IST
ஆண்களுக்கு பாதிப்பு அதிகம்

வயது வேறுபாடின்றி கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மாநில அளவில் மட்டுமின்றி கோவை மாவட்ட அளவிலும் புள்ளிவிபரங்களை ஒப்பிடும் போது, பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

11:59 AM IST
ஒரு கோடியே 11 லட்சத்து ,97 ஆயிரத்து 285 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.4ம் தேதி ) காலை;11;55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 11 லட்சத்து ,97 ஆயிரத்து 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 29 ஆயிரத்து 197 பேர் பலியாகி உள்ளனர். 63 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேர் மீண்டுள்ளனர்.

6:48 AM IST
ஒரு கோடியே 11 லட்சத்து ,82 ஆயிரத்து 576 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.4ம் தேதி ) காலை ; 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 11 லட்சத்து ,82 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 28 ஆயிரத்து 409 பேர் பலியாகி உள்ளனர். 62 லட்சத்து 92 ஆயிரத்து 523 பேர் மீண்டுள்ளனர்.


6:12 AM IST
இரவு நேர விமான சேவை தூத்துக்குடியில் துவங்கியது

துாத்துக்குடியில்நேற்று முதல் இரவு நேர விமான சேவை துவங்கியது.துாத்துக்குடி, வாகைகுளம் விமானநிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவிற்கு இதுவரையிலும் பகல் நேர விமானங்கள் இயக்கப்பட்டன.துாத்துக்குடியில் நேற்று முதல் இரவு நேர விமான சேவை துவங்கியது.துாத்துக்குடி, வாகைகுளம் விமானநிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவிற்கு இதுவரையிலும் பகல் நேர விமானங்கள் இயக்கப்பட்டன.5:11 AM IST
4 சிறப்பு விமானங்கள் மூலமாக 559 பேர் சென்னை வருகை

சூடான், கிர்கிஸ்தான், ஓமன், குவைத் நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், நான்கு சிறப்பு விமானங்களில், நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.இந்த விமானங்களில் தகுந்த பாதுகாப்பு அமைப்புகளுடன் 559 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் தகுந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அரசு விதிமுறைகளின்படி, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டனர். கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து வந்த விமானத்தில், அந்நாட்டில் மருத்துவம் படித்து வந்த, இந்திய மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர். சென்னையில் இருந்து நேற்று பல்வேறு நகரங்களுக்கும், பல்வேறு நகரங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கும் 27 விமானங்கள் இயக்கப்பட்டன.

4:10 AM IST
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வேண்டுகோள்

'வங்கிகளில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு, வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாதுகாவலர்களும் பெரும்பாலான வங்கிகளில் கிடையாது. இதனால், வங்கி பணிகளை மேற்கொள்ளவே, நேரம் கிடைப்பதில்லை.எனவே, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தாங்களாகவே தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


3:07 AM IST
கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இடநெருக்கடி?

கொரோனா சிகிச்சை மையமான கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், இடநெருக்கடி நிலவுவதாக கூறப்படுகிறது.கோவை மாவட்டம் மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.நோயாளிகளுக்கு, ஆரம்பத்தில், 300 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டன. நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக, கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.நோயாளிகளுக்கு, ஆரம்பத்தில், 300 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டன. நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக, கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.


2:12 AM IST
ஆந்திராவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 8 பேர் பலி

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 837 பேர் பாதிக்கப் பட்டனர். 8 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.ஆந்திராவில் நோய் பாதிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 837 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆந்திராவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,934 ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 8 பேர் பலியாகினர். இதுவரை மாநிலத்தில் 206 பேர் பலியாகியுள்ளனர்.ஆந்திராவில் நேற்று ஒரு நாளில் 258 பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் நோய் பாதிப்புகளில் இருந்து 7,632 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9,096 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

1:32 AM IST
கொரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளின் விகிதத்தை குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என பல்வேறு துறை நிபுணர்கள் கூறினர்.சுகாதார பராமரிப்பு மையத்தின் பேராசிரியரான டாக்டர் சுபோத் காந்தமுதன் கூறுகையில், ஐதராபாத்தின் தற்காலிக ஊரடங்கு, திறன் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வீட்டு தனிமைப்படுத்துதல் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உதவுதல் போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும். தற்போதைய சூழலில், அரசு மீண்டும் ஊரடங்கை தேர்ந்தெடுப்பதை விட நோய்த்தொற்றுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பரிசோதனையை அதிகரிக்கவும் வேண்டும்.1:09 AM IST
கோவையில் டாக்டர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா; பாதிப்பு 645 ஆக உயர்வு

கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உட்பட, ஒரே நாளில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 645 ஆக உயர்ந்துள்ளது.கோவை மாவட்டத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் போக, தற்சமயம் 391 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


12:30 AM IST
மஹா.,வில் புதிதாக 6,364 பேருக்கு கொரோனா; 198 பேர் பலி

மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 198 பேர் பலியாகினர். மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,92,990 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 198 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 8,376 ஆக உயர்ந்தது. இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,04,687 ஆக உயர்ந்தது. 79,911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


12:07 AM IST
பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் 4,087 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 4,087 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.பாக்.,கின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனா பாதிப்புகளுக்கு 78 பேர் பலியாகினர். நாட்டின் மொத்தமாக கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,551 ஆக உயர்ந்துள்ளது.பாகிஸ்தானில் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 1,13,623 பேர் குணமடைந்துள்ளனர்.நாட்டில் மொத்தமாக பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,50,773 ஆக உள்ளது.

11:15 PM IST
பிரேசிலில் 15 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 47,984 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த மாதம் 19ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 54,771 பேருக்கு கொரோனா உறுதியானது.ஒரே நாளில் புதிதாக அங்கு 1,277 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 62,045 ஆக உள்ளது. பாதிப்பு அடைந்தவர்களில் மொத்தம் 9,16,147 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

10:40 PM IST
ஒடிசாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 561 பேருக்கு கொரோனா

ஒடிசாவில் கொரோனா தொற்று அதிகரித்து ஒரே நாளில் 561 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,106 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா பாதிப்புகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். தற்போது வரை ஒடிசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்தது.. மாநிலத்தில் 2,567 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,502 ஆக உயர்ந்தது.

9:50 PM IST
கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு இன்று(ஜூலை 3) ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில், இன்று ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 4,964 ஆக உயர்ந்தது.இன்று பாதிப்பு உறுதியானவர்களில், 138 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 39 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். புதிதாக 201 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9:11 PM IST
திருப்பதி கோவிலில் அர்ச்சகர் உட்பட 10க்கும் அதிகமானோருக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர், விஜிலென்ஸ் ஊழியர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது.

இது குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, ' தினமும் ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதே போல் கோவில் ஊழியர்கள் 100 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த சில தினங்களாக 400 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா உறுதியானது. ஆனால் பக்தர்கள் ஒருவருக்கு கூட இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை' இவ்வாறு அவர் கூறினார்

8:32 PM IST
சென்னை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் 18 அதிகாரிகளுக்கு கொரோனா

சென்னையில், அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கிருமி நாசினி கொண்டு அலுவலகம் சுத்தப்படுத்தப்பட்டது.மேலும், உடன் பணியாற்றிய சக அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 70க்கும் மேற்பட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் சட்டவிரோத பணி பரிமாற்ற வழக்கில் தி.மு.க. எம்.பி., ஜெகத் ரட்சகளிடம் அதிகாரிகள் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7:45 PM IST
சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலானது. இதையடுத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு படிப்படியாக தளர்த்தியது. முதலில் உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதே நேரம் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஜூலை 15ம் தேி வரை தடை நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்த தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

7:15 PM IST
கொரோனாவுக்கு எதிரான மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதனை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் இணைந்து கோவாக்ஸின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதனை மனிதர்களிடம் பரிசோதனை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. முதல்கட்ட பரிசோதனை வரும் 7 ம் தேதி நடைபெற உள்ளது. மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்ததை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை தலைவர் டாக்டர் வி.கே. ஸ்ரீநிவாஸ் முதல்நபராக இந்த பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் தான் மற்றும் தனது குழுவினர் உருவாக்கிய மருந்தை , எடுத்து கொண்ட முதல் நபர் நான் தான் என்றார்.

6:30 PM IST
சென்னையில் இன்று 2,082 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று (ஜூலை 03) அதிகபட்சமாக 2,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 40,111 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளனர். 23,581 பேர் சிகிச்சையில் உள்ளனர். 996 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 03) புதிதாக 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆகவும், பலி எண்ணிக்கை 1,385 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,264 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 12 லட்சத்து 70 ஆயிரத்து 720 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,385 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:11 PM IST
தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய பாதிப்பு

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,385 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

5:39 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 95 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

5:25 PM IST
ஒரு கோடியே 10 லட்சத்து ,18 ஆயிரத்து 642 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.3ம் தேதி ) மாலை;05;25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 10 லட்சத்து ,18 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 24 ஆயிரத்து 825 பேர் பலியாகி உள்ளனர். 61 லட்சத்து 75 ஆயிரத்து 535 பேர் மீண்டுள்ளனர்.

11:26 AM IST
5 லட்சத்து 24 ஆயிரத்து 175 பேர் பலி

இன்று ( ஜூலை.3ம் தேதி ) காலை; 11;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 9 லட்சத்து ,91 ஆயிரத்து 872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 24 ஆயிரத்து 175 பேர் பலியாகி உள்ளனர். 61 லட்சத்து 50 ஆயிரத்து 606 பேர் மீண்டுள்ளனர்.

6:54 AM IST
ஒரு கோடியே 9 லட்சத்து , 74 ஆயிரத்து 421 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை.3ம் தேதி ) காலை; 06;50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 9 லட்சத்து , 74 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 23 ஆயிரத்து 242 பேர் பலியாகி உள்ளனர். 61 லட்சத்து 35 ஆயிரத்து 272 பேர் மீண்டுள்ளனர்.

4:27 AM IST
'ஊரடங்கில் கொரோனா கட்டுப்படவில்லை'''ஊரடங்கில் கொரோனா கட்டுப்படவில்லை,'' என பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.இதுகுறித்து பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:மக்கள் அடர்த்தி நடமாட்டம் ஆகியவற்றின் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கிறது.வளர்ந்த நாடுகள் அனைத்திலும் 'ஸ்பூன்' மற்றும் காகிதங்களை பயன்படுத்துகின்றனர். நம்மிடம் இயல்பாகவே கை கழுவும் பழக்கம் உள்ளது. இதனால் தான் மற்ற நாடுகளை விட குறைவான தொற்று பாதிப்பு உள்ளது.சென்னை, வேலுார், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் தீவிர கொரோனா பரவும் மாவட்டங்களாக உள்ளன.
இந்த மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி மட்டுமின்றி மருத்துவமனைகளும் அதிகளவில் உள்ளன. அதனால் மருத்துவமனைகளில் இருந்து நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். இந்த மாவட்டங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் கை கழுவ சோப்பு மற்றும் தண்ணீரை வைக்க வேண்டும்.மேலும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள முதியவர்கள் நாள்பட்ட நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது.மற்ற 60 சதவீதம் பேருக்கு சிகிச்சையாலும் எவ்வித சிகிச்சையுமின்றியும் தானாக தொற்று குணமாகி வருகிறது. அவ்வாறு குணமடைந்தவர் உடலில் கிருமிகள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தற்போதைய சூழலில் ஊரடங்கால் கொரோனா கூண்டுக்குள் அடைப்பட்டது போல உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய மக்கள் வெளியே வருவதால் கொரோனா குறிப்பிட்ட காலத்தில் அதிகரிப்பதுடன் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.அப்போது இயல்பாகவே கொரோனா கட்டுக்குள் வரும். ஆனால் நாள்பட்ட நோயாளிகள் முதியவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

3:25 AM IST
பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரப்ம் கூறுகையில், ''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய், தான் இது. சீனா, கொரோனா வைரஸ் பரவாமல் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் பரவ அனுமதித்து விட்டனர். அந்த நேரத்தில் தான் நாங்கள் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு முன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.

2:32 AM IST
சிறையில் கொரோனா பீதியில் சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும் பீதியடைந்துள்ளார்.பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.சிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது. ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியடைந்துள்ளனர்.புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1:30 AM IST
சாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..!

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததை அடுத்து சாலையின் நடுவே 1,600 அடி நீளத்திற்கு மேஜையில் உணவு பதார்த்தங்களை பகிர்ந்து செக் குடியரசு மக்கள் கொண்டாடி உள்ளனர்.கொரோனா வைரஸ் நெருக்கடியின் முடிவை கொண்டாடவும், மற்றவர்களைச் சந்திக்க மக்களுக்கு இனி பயமில்லை என்பதை காட்ட நாங்கள் விரும்புகிறோம். ஒருவர் கடித்த சாண்ட் விச்சை மற்றவர்கள் உண்ண ஏற்க பயப்படவில்லை. எல்லோரும் இங்கே உணவு அல்லது ஒரு பூ கொண்டு வர வேண்டுமென கூறப்பட்டிருந்தது. குறிப்பாக எல்லோரும் இதில் பங்கெடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது என பிரமாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான பிராகுவே கஃபே உரிமையாளர் ஒன்ட்ரேஜ் கோப்ஸா தெரிவித்தார்.

12:34 AM IST
கொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம்

உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜூன் 30ம் தேதி சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதே நாளில் டில்லியில் 2,199 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சென்னையில் கடந்த மார்ச் மாதம் 9ல் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச்சில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. ஏப்ரலில் சற்று வேகமாக பரவல் ஆரம்பித்தது.தற்போது சென்னையில் தான் கொரோனா பரவல் அதிக வேகமாக உள்ளது. ஜூன் 30ம் தேதி இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை மாறியது. சென்னைக்கு அடுத்தபடியாக டில்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன.இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அதிகம் பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டில்லி கொரோனா அதிகம் பரவும் நகரமானது. தற்போது சென்னை, டில்லியை முந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

11:33 PM IST
ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இதுவரை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது, கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஊட்டி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது, அங்கு 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

10:44 PM IST
இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா

கோவையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் உட்பட இன்று ஒரே நாளில், 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 600ஐ கடந்துள்ளது.கோவை இ.எஸ்.ஐ, மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இ.எஸ்.ஐ, மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 37 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இங்கு, கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மொத்தம் 572 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம், 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.

10:04 PM IST
மஹா.,வில் புதிய உச்சம்; ஒரே நாளில் 6,330 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 125 பேர் பலியாகினர்.
இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 2) மட்டும் 6,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,86,626 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 125 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 8,178 ஆக உயர்ந்தது. புதிதாக 8,018 பேர் குணமானதையடுத்து, இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,01,172 ஆக உயர்ந்தது.

9:30 PM IST
டில்லியில் புதிதாக 2,373 பேருக்கு கொரோனா; 61 பேர் பலி

தலைநகர் டில்லியில், இன்று (ஜூலை 2) ஒரே நாளில் 2,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 61 பேர் பலியாகினர்.டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 61 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 92,175 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 2,864 ஆனது. இதுவரை 63,007 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; 26,304 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். டில்லியில், இன்று மட்டும் 20,822 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:00 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களில் 59.52% பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 59.52 சதவீதம் பேர் குணமடைந்ததாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சற்று ஆறுதலான விஷயமாக இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 859 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 881 பேர் குணைமடைந்துள்ளனர்.இதுவரை குணைமடைந்தவர்களின் விகிதம் 59.52 சதவீதமாக உள்ளது. மொத்தம் 2,26,947 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோரின் வரிசையில் முதலாவதாக மஹாராஷ்டிரமும், அடுத்தடுத்த இடங்களில், டில்லி மற்றும் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டிகர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக சதவீதத்தில் மக்கள் குணமடைந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:29 PM IST
பெங்களூருவில் சிகிச்சைக்கு மறுப்பு; கொரோனா நோயாளி உயிரிழப்பு!

பெங்களூருவைச் சேர்ந்த 52 வயது நபர், 18 மருத்துவமனைகளால் சிகிச்சை மறுக்கப்பட்ட பின், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 52 வயதாகும் பவர்லால் சுஜானி என்பவருக்கு, தொடர்ந்து வாந்தி மற்றும் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பவர்லாலை, அவரது சகோதரன் தினேஷ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் எந்த வொரு மருத்துவமனையிலும் அவருக்கு சிக்கிச்சையளிக்க வில்லை. இந்நிலையில் பவர்லால் உயிரிழந்துள்ளார்.

8:02 PM IST
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை: விஜயபாஸ்கர்

சென்னையில் சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழகத்தில் இதுவரை குடிசை பகுதி மக்களுக்காக 46 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரை, ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொரோனா பாசிட்டிவ் வந்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

7:36 PM IST
சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா

இன்று (ஜூலை 02) சென்னையில் 2,027 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 38,947 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 22,686 பேர் சிகிச்சையில் உள்ளனர். 964 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:00 PM IST
தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா; ஒரே நாளில் 4,343 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 02) புதிதாக 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,270 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 73 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 33,488 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 692 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,551 பேர் ஆண்கள், 1,792 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 60,395 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 37,975 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் 91 ஆய்வகங்கள் (அரசு-48 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 021 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:32 PM IST
60 லட்சத்து 54 ஆயிரத்து 016 பேர் மீண்டனர்

இன்று ( ஜூலை.2ம் தேதி ) மாலை; 05;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 8 லட்சத்து ,34 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 19 ஆயிரத்து 585 பேர் பலியாகி உள்ளனர். 60 லட்சத்து 54 ஆயிரத்து 016 பேர் மீண்டுள்ளனர்.

12:06 PM IST
5 லட்சத்து 19 ஆயிரத்து 085 பேர் பலி

இன்று ( ஜூலை.2ம் தேதி ) நன்பகல்; 12;05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 8 லட்சத்து ,10 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 19 ஆயிரத்து 085 பேர் பலியாகி உள்ளனர். 60 லட்சத்து 32 ஆயிரத்து 985 பேர் மீண்டுள்ளனர்.

10:29 AM IST
6 லட்சத்தை தாண்டியது

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,85,493 ல் இருந்து 6,04,641 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 434 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 17, 834 ஆக அதிகரித்துள்ளது.

8:41 AM IST
முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

8:41 AM IST

வேலூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது.

6:33 PM IST

தமிழகத்தில் இன்று (ஜூலை 01) புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 63 பேர் உயிரிழந்தனர். அதில், 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது.

6:10 PM IST
தமிழகத்தில் மேலும் 3,882 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 63 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 39,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

1:33 PM IST

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை காணும் போது சீனா மீதான எனது கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

10:32 AM IST

இந்தியாவில் ஒரே நாளில் 18,653 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,85,493 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 17,400 ஆக அதிகரித்துள்ளது.

6:54 AM IST
ஒரு கோடியே 5 லட்சத்து , 77 ஆயிரத்து 756 பேர் பாதிப்பு

இன்று ( ஜூலை .1 ம் தேதி ) காலை; 06;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 5 லட்சத்து , 77 ஆயிரத்து 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 5 லட்சத்து 13 ஆயிரத்து 186 பேர் பலியாகி உள்ளனர். 57 லட்சத்து 90 ஆயிரத்து 762 பேர் மீண்டுள்ளனர்.

6:00 AM IST
வங்கிகளில் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து

சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும். பிற பகுதிகளில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும்.

ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம். பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜென்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் டீலர்களிடம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது. இருந்தாலும் 6ம் தேதி முதல் 31ம் தேதிவரை 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல மாலை 4:00 மணி வரை வங்கிகள் செயல்படும்.

5:21 AM IST
தமிழகத்தில் ஜூனில் தான் கோரதாண்டவம்

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனாவால் 67 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டு 1028 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் மார்ச் 7 முதல் நேற்று வரை 90 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜூன் மாதத்தில் மட்டும் 67 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 1201 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில் 1028 பேர் ஜூனில் இறந்துள்ளனர்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் அதிகளவு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், மதுரை, வேலுார், திருவண்ணாமலை என 15 மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது 4000 என்ற எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படுவதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சுகாதாரத் துறைக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

4:25 AM IST
நீலகிரியில் 5 பேருக்கு தொற்று; பாதிப்பு 89 ஆக அதிகரிப்பு

நீலகிரியில், நேற்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் படி தொற்று எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று எண்ணிக்கை, 89 ஆக அதிகரித்தது. இதில், முதன் முறையாக ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் தந்தை பணி புரியும் இடத்தில் தொற்று ஏற்பட்டு, தாய் மூலம் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 5,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

3:49 AM IST
தீட்சிதர்கள் வீடுகளில் 'நோட்டீஸ்' : சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீடுகளில், 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்' என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், 150 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இரு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த, 10 பேர் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு தொற்று இல்லை என தெரிந்ததும், 60 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தீட்சிதர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, வருவாய் துறை உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், பாதிக்கப்பட்டவர் பெயர் குறிக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், 100க்கும் மேற்பட்டோர், 'கொரோனா தொற்று பாதிக்காதவர்களின் வீடுகளில், அறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியது ஏன்' என கேட்டு, நகராட்சி சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் அரிதாஸ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தீட்சிதர்களிடம் பேசினர். பின், தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.

2:39 AM IST
ஒரே பள்ளத்தில் 9 சடலங்களை வீசி எறிந்த கொடுமை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒன்பது சடலங்களை, மனிதாபிமானம் இல்லாமல், ஒரே பள்ளத்தில் வீசி எறிந்த வீடியோ, பல்லாரியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.பல்லாரி மாவட்ட கலெக்டர் நகுல், நேற்று கூறியதாவது:பல்லாரியில் இரண்டு நாட்களாக, ஒன்பது பேர், கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை, குக்கரஹட்டி என்ற ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைக்கப்பட்டன.

சடலங்களை மனிதாபிமானமற்ற முறையில் புதைத்து இருந்தால், அத்தகைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

2:01 AM IST

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட டில்லியில் ஜூம்மா மசூதி, வரும் 4ம் தேதி திறக்கப்படும் என இம்மசூதியின் ஷாகி இமாம் தெரிவித்துள்ளார்.

1:10 AM IST
வழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : அரசு உத்தரவு

வழி பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, அனுமதிக்கப்பட்ட சிறிய வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள்அனுமதிக்க வேண்டும். வழிபாட்டுதலங்களுக்கு வருபவர் 6 அடி தள்ளி நின்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமேவழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.பஜனை உள்ளிட்ட இறைபாடல்கள் பாட அனுமதி இல்லை. அன்னதான கூடங்களில்தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகள் சுத்தமாக தோன்றினாலும் மீண்டும் ஒருமுறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பிரசாதம் ,தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை. தேங்காய் ,பூ,பழங்கள் போன்றவற்றை வழங்க கூடாது.வழிபாட்டு தலங்களில் உள்ள கடைகளில் பிரசாதம் வாங்கினாலும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சிலைகள் , புனித நூல்களை தொட்டு வணங்க கூடாது. என அரசு வெளியிட்டுள்ள வழிபாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:11 AM IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 421 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 421 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,667 ஆக அதிகரித்தது. அரபு எமிரேட்சில் புதிதாக ஒருவர் பலியானார். நாட்டில் தற்போது வரை 315 பேர் பலியாகியுள்ளனர். 63,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அரபு எமிரேட்சில் இன்று 490 பேர் புதிதாக குணமடைந்தனர். மொத்தமாக 37,566 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தற்போது 11,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11:18 PM IST
பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.இந்நிலையில் பாக்.,கில் கடந்த 24 மணிநேத்தில் புதிதாக 2,846 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையொட்டி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,337 ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 118 பேர் பலியாகினர். பாக்.,கின் கொரோனா தொற்றுக்கு இதுவரை 4,304 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 98,503 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

10:30 PM IST
யு.ஏ.இ.,யில் அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை முதல் திறப்பு

ஐக்கிய அரபு எமிரேட்சில்(யு.ஏ.இ.,) மசூதிகள், கோவில்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் நாளை(ஜூலை 1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.அதேசமயம் மறுஉத்தரவு வரும் வரை, வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், தொழில்துறை பகுதிகள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மசூதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10:02 PM IST
மாஸ்க் அணியுங்கள் என கூறிய பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி

ஆந்திர மாநிலம் நெல்லூரில், அம்மாநில சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் துணை மேலாளராக பாஸ்கர் என்பவர் உள்ளார். அவர் மாஸ்க் அணியாமல் ஊழியர்களிடம் பேசியதாக தெரிகிறது. அவரை மாஸ்க் அணிந்து பேசும்படி சக பெண் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திமடைந்த துணை மேலாளர், அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.ஆத்திரம் அடங்காத அவர், பெண்ணை கீழே தள்ளி, தலைமுடியை பிடித்து அடித்தும், கட்டையால் கடுமையாக தாக்கியும் உள்ளார். ஜூன் 27ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகாரில், நெல்லூர் போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

9:06 PM IST
கோவையில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 538 ஆக உயர்வு

கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், ஒரு வயது பெண் குழந்தை உட்பட இன்று ஒரே நாளில், 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.போத்தனுார் அழகு நகர், துடியலுார், விளாங்குறிச்சி, வடவள்ளி, செட்டி வீதி, தெலுங்கு வீதி, பீளமேடு, சுண்டக்காமுத்துார், வெள்ளக்கிணர் பிரிவு, மதுக்கரை, தெலுங்கு பாளையம், மசக்காளிபாளையம், பாலன் நகர் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம், 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 538 ஆக உயர்ந்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மூவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

8:15 PM IST
மதுரையில் ஒரே நாளில் 257 பேர் பாதிப்பு; பலி 3

மதுரையில் இன்று 257 பேருக்கு தொற்று உறுதியானது. பெண் உட்பட மூவர் பலியாகினர்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர், நர்ஸ், சுகாதாரப்பணியாளர்கள், போலீஸ் என 51 பேர், காய்ச்சல் அறிகுறியுடன் 122 பேர், ஏற்கனவே பாதித்தோருடன் தொடர்பில் இருந்த 59 பேர், கர்ப்பிணிகள் இருவர், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 11 பேர் உட்பட 257 பேருக்கு இன்று தொற்று உறுதியானது. இவர்கள் கொரோனா மருத்துவமனை, தோப்பூர், கல்லுாரி முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். 67 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்த பாதிப்பு 2,557 ஆக உயர்ந்தது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண், 65 வயது மூதாட்டி, 70 வயது முதியவர் இறந்தனர். இதில் இருவருக்கு கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்தது. ஒருவர் மூச்சுத்திணறி பலியானார். மொத்த பலி 32 ஆக உயர்ந்தது.

7:40 PM IST
கேரளத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து கேரளாவில் இன்று மேலும் 131 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்தார்.

இது குறித்து அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் கூறுகையில், கேரளத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,311 ஆக உயர்ந்தது.

தற்போது வரை 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,304 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர். மருத்துவ மனையிலும், வீடுகளிலும் 2,781 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 1,84,657 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

7:05 PM IST
அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியானது

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: ‛தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்தது. இதனால், இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பழகனுக்கு கொரோனா இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அமைச்சர் மறுத்திருந்தார்.

6:30 PM IST
சென்னையில் இன்று அதிகபட்சமாக 2,393 பேருக்கு பாதிப்பு

இன்று (ஜூன் 30) அதிகபட்சமாக சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 34,828 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டனர். 22,160 பேர் சிகிச்சையில் உள்ளனர். 888 பேர் உயிரிழந்துள்ளனர