3 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 347 பேர் மீண்டனர் | Dinamalar
Advertisement
3 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 347 பேர் மீண்டனர்
Updated : அக் 23, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (255)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
12:06 PM IST
11 லட்சத்து 42 ஆயிரத்து 864 பேர் பலி

இன்று (அக்.,- 23 ம் தேதி ) நன்பகல்: 12: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 42 ஆயிரத்து 864 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 347 பேர் மீண்டனர்.

7:30 AM IST
3 கோடியே 11 லட்சத்து 77 ஆயிரத்து 362 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 23 ம் தேதி ) காலை 07: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 19 லட்சத்து 67 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 42 ஆயிரத்து 161 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 11 லட்சத்து 77 ஆயிரத்து 362 பேர் மீண்டனர்.

3:15 AM IST
3 கோடியே 11 லட்சத்து 3 ஆயிரத்து 064 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 23 ம் தேதி ) அதிகாலை 03: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 41 ஆயிரத்து 210 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 11 லட்சத்து 3 ஆயிரத்து 064 பேர் மீண்டனர்.

1:11 AM IST
சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி

சீனாவிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வாங்கப் போவது இல்லை என பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.பிரேசில் மக்கள் பரிசோதனைக்காக அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

12:11 AM IST
கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.


இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ,இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.


அம்மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டில்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது.

இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனக்கா மருந்து 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

9:30 PM IST
கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்: ராகுல் தகவல்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் என பா.ஜ.க., அறிவித்துள்ள நிலையில், உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை அறிய தேர்தல் அட்டவனையை பாருங்கள் என ராகுல் கிண்டல் அடித்துள்ளார்.

6:40 PM IST
சென்னையில் இன்று 1,077 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,22) அதிகபட்சமாக சென்னையில் 1,077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.78 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 833 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 285 பேருக்கும், செங்கல்பட்டில் 193 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும், திருப்பூரில் 155 பேருக்கும், சேலத்தில் 140 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 99 பேருக்கும், ஈரோடில் 80 பேருக்கும், நாமக்கலில் 74 பேருக்கும், தஞ்சாவூரில் 72 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,077 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,78,623 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 290 பேரும், செங்கல்பட்டில் 271 பேரும், திருப்பூரில் 252 பேரும், சேலத்தில் 200 பேரும், வேலூரில் 197 பேரும், திருவள்ளூரில் 176 பேரும், கடலூரில் 145 பேரும், காஞ்சிபுரத்தில் 133 பேரும், தர்மபுரியில் 120 பேரும், ஈரோடில் 111 பேரும், தேனியில் 94 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:20 PM IST
தமிழகத்தில் மேலும் 4,314 பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (அக்.,22) 4,314 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6.55 லட்சத்தை கடந்தது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 197 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-131) மூலமாக, இன்று மட்டும் 81,259 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 92 லட்சத்து 75 ஆயிரத்து 108 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,829 பேர் ஆண்கள், 1,248 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,22,711 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,77,450 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரத்து 170 ஆக உள்ளது.


இன்று மட்டும் கொரோனா பாதித்த 45 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 25 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,825 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 34,198 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:20 PM IST
11 லட்சத்து 37 ஆயிரத்து 229 பேர் பலி

இன்று (அக்.,- 21 ம் தேதி ) மாலை 03: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 37 ஆயிரத்து 229 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் பேர் மீண்டனர்.

1:11 PM IST
4 கோடியே 15 லட்சத்து 855 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 21 ம் தேதி ) மதியம் 01: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 15 லட்சத்து 855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 9 லட்சத்து 18 ஆயிரத்து 824 பேர் மீண்டனர்.

2:49 PM IST
இரவு 10 மணி வரை கடைகளை திறக்கலாம்

முதல்வர் பழனிசாமி பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் நாளை(அக்., 22) முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதியளிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பானது காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் பொருந்தும். நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 வரை கடைகள் இயங்கலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

10:00 AM IST
9. 7 லட்சம் பரிசோதனை

இந்தியாவில் நேற்று(அக்.,20) ஒரே நாளில் மட்டும் 10,83,608 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 9,72,00,379 ஆக அதிகரித்துள்ளது.

9:45 AM IST
67.9 லட்சம் பேர் நலம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 61,775 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதனையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 67,95,103 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 7,40,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 717 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,15,914 ஆக அதிகரித்துள்ளது.

7:30 AM IST
3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 419 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 21 ம் தேதி ) காலை: 07: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 10 லட்சத்து 23 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 28 ஆயிரத்து 938 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 419 பேர் மீண்டனர்.

6:30 AM IST
கொரோனாவால் சிறுமிக்கு கண் பார்வை கோளாறு: எய்ம்ஸ்

டில்லியில் கொரோனா தொற்றால் சிறுமிக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டதாகவும், இது முதல் பாதிப்பு எனவும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

3:50 AM IST
கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத பிரபல துணிக்கடைக்கு 'சீல்'

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், வாடிக்கையாளர்களை அதிகமாக கூட்டிய, சென்னை - தி.நகரில் உள்ள பிரபல துணி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று(அக்.,20), 'சீல்' வைத்தனர்.

7:30 PM IST
சென்னையில் மேலும் 1,235 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,20) அதிகபட்சமாக சென்னையில் 1,235 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.76 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 857 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,91,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 263 பேருக்கும், செங்கல்பட்டில் 191 பேருக்கும், சேலத்தில் 169 பேருக்கும், திருவள்ளூரில் 137 பேருக்கும், திருப்பூரில் 125 பேருக்கும், நாமக்கல்லில் 95 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 93 பேருக்கும்,ஈரோடில் 72 பேருக்கும்,கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,235 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,76,363 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 328 பேரும், செங்கல்பட்டில் 242 பேரும்,சேலத்தில் 226 பேரும், திருப்பூரில் 179 பேரும் திருவள்ளூரில் 174 பேரும், காஞ்சிபுரத்தில் 143, ஈரோடில் 134 பேரும், நாமக்கல்லில் 129 பேரும், நீலகிரி 111 பேரும், நீலகிரி 129 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும், திருவாரூரில் 96 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:45 PM IST
தமிழகத்தில் 6.46 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (அக்.,20) 4,403 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6.46 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 194 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-128) மூலமாக, இன்று மட்டும் 80,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 91 லட்சத்து 12 ஆயிரத்து 067 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,830 பேர் ஆண்கள், 1,264 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,19,046 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,74,952 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,403 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 555 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 50 பேர் உயிரிழந்தனர். அதில், 19 பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,741 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 36,734 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:10 PM IST
அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமர் மோடி உறுதி

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், இந்தியர்கள் அனைவருக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 7 மாதங்களில், இது 7 வது உரையாகும்
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறது. ஊரடங்கு முடிந்து நாம் வீட்டை விட்டு வெளியே வர துவங்கியுள்ளோம். நாட்டின் நிலைமை ஸ்திரதன்மையோடு உள்ளது. பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி கொண்டுள்ளது. ஊரடங்கு முடிந்துவிட்டது. ஆனால், கொரோனா இன்னும் செல்லவில்லை. நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது. நமது நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. குணமடைவோர் விகிதம் சிறப்பாக உள்ளது.
கொரோனா விஷயத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது. அதை நாம் கெடுத்து விடக்கூடாது. கொரோனா முற்றிலும் நம்மை விட்டு போகவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அதிகளவு பரிசோதனை, இந்த போரில் முக்கியமான ஆயுதமாக உள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்கு உரியது.தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. விழிப்புணர்வுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள். தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிந்து பண்டிகைகளை கொண்டாடுங்கள். நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

3:05 PM IST
4 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரத்து 326 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 20 ம் தேதி ) மாலை: 03: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 23 ஆயிரத்து 463 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 3 லட்சத்து 72 ஆயிரத்து 750 பேர் மீண்டனர்.

12:17 PM IST
11 லட்சத்து 23 ஆயிரத்து 117 பேர் பலி

இன்று (அக்.,- 20 ம் தேதி ) நன்பகல்: 12 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 23 ஆயிரத்து 117 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 182 பேர் மீண்டனர்.

7:30 AM IST
3 கோடியே 3 லட்சத்து 47 ஆயிரத்து 651 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 20 ம் தேதி ) காலை ; 07 : 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 6 லட்சத்து 35 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 22 ஆயிரத்து 758 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 3 லட்சத்து 47 ஆயிரத்து 651 பேர் மீண்டனர்.

9:31 PM IST
கொரோனா தடுப்பு மூலக்கூறு கண்டுபிடிப்பு:அமெரிக்க, இந்திய சிறுமிக்கு பரிசு

கொரோனா வைரஸை தடுக்கும் முலக்கூறு குறித்து அமெரிக்க-இந்திய- 14 வயது பள்ளி மாணவி செய்த ஆய்வுக்காக 25,000 டாலர் (ரூ.18,33,907 )பரிசு கிடைத்துள்ளது. 8வது வகுப்பு படித்து வரும் அனிகா செப்ரோலு,டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கிறார்.
கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கப்பட்டு, அந்த வைரஸ் செயல்படுவதைத் தடுக்கக்கூடிய ஒரு மூலக்கூறை அனிகா கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.

7:00 PM IST
சென்னையில் மேலும் 1,236 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,19) அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.75 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 885 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,90,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 290 பேருக்கும், செங்கல்பட்டில் 241 பேருக்கும், சேலத்தில் 192 பேருக்கும், திருவள்ளூரில் 172 பேருக்கும், திருப்பூரில் 140 பேருக்கும், நாமக்கல்லில் 98 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும்,ஈரோடில் 90 பேருக்கும்,கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,75,128 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 297 பேரும்,கோவையில் 208 பேரும், சேலத்தில் 241 பேரும், திருப்பூரில் 202 பேரும் திருவள்ளூரில் 161 பேரும், நீலகிரி 129 பேரும், காஞ்சிபுரத்தில் 151, ஈரோடில் 134 பேரும், நீலகிரி 129 பேரும், நாமக்கல்லில் 128 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், திருவாரூரில் 111 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் இதுவரை 6.42 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (அக்.,19) ஒரே நாளில் 4,515 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.42 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3.536 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 192 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-126) மூலமாக, இன்று மட்டும் 85,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 90 லட்சத்து 31 ஆயிரத்து 696 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,095 பேர் ஆண்கள், 1,441 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,17,216 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,73,688 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 49 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,691 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

9:47 AM IST
4 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரத்து 207 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 19 ம் தேதி ) காலை ; 09 : 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 18 ஆயிரத்து 321 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 204 பேர் மீண்டனர்.

7:15 AM IST
3 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 34 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 19 ம் தேதி ) காலை ; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 4 கோடியே 2 லட்சத்து 64 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 18 ஆயிரத்து 167 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 34 பேர் மீண்டனர்.

6:45 AM IST
கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்

பண்டிகை காலங்களில் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் பொறுப்புடனும், பாதுகாப்பாகவும் விழாக்களை கொண்டாட தெலுங்கானா சுகாதாரதுறை அறிவுறுத்துகிறது.

3:34 AM IST
இந்தியாவில் கொரோனாவிலிருந்து 88 சதவீதம் பேர் மீட்பு

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நேற்று, 75 லட்சத்தை நெருங்கிஉள்ளது. இவர்களில், 88 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.

2:19 AM IST
புதிதாக ஊரடங்கு தேவை இல்லை

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்று நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:05 PM IST
சென்னையில் மேலும் 1,359 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,18) அதிகபட்சமாக சென்னையில் 1,359 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.73 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,036 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,89,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 319 பேருக்கும், சேலத்தில் 188 பேருக்கும், செங்கல்பட்டில் 174 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும், திருப்பூரில் 166 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 130 பேருக்கும், நாமக்கலில் 117 பேருக்கும், ஈரோடில் 111 பேருக்கும், கடலூரில் 99 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும், வேலூரில் 88 பேருக்கும், நீலகிரியில் 86 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,359 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,73,892 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 365 பேரும், செங்கல்பட்டில் 285 பேரும், சேலத்தில் 268 பேரும், திருவள்ளூரில் 225 பேரும், நாமக்கல்லில் 185 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், திருவாரூரில் 152 பேரும், திருப்பூரில் 133 பேரும் பேரும், கடலுாரில் 147 பேரும், வேலுாரில் 110 பேரும், தஞ்சாவூரில் 131 பேரும், நீலகிரியில் 123 பேரும், ஈரோடில் 122 காஞ்சிபுரத்தில் 112 பேரும், நீலகிரியில் 105 பேரும், பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:10 PM IST
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (அக்.,18) ஒரே நாளில் 4,929 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.37 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 4,000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,87,400 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 192 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-126) மூலமாக, இன்று மட்டும் 90,286 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,319 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,15,121 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,72,247 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 56 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 27 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,642 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 39,121 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

11:46 AM IST
சோதனைஇந்தியாவில் நேற்று (அக்.,17) ஒரே நாளில் 9,70,173 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 9 கோடியே 42 லட்சத்து 24 ஆயிரத்து 190 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

10:46 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61, 871 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,94,552 ஆக அதிகரித்துள்ளது. 7,83,311 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 72,614 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,97,210 ஆக உயர்ந்துள்ளது.

2:40 AM IST
2 கோடியே 98 லட்சத்து 21 ஆயிரத்து 642 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 18 ம் தேதி ) அதிகாலை; 02 : 40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 98 லட்சத்து 99 ஆயிரத்து 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 13 ஆயிரத்து 439 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 98 லட்சத்து 21 ஆயிரத்து 642 பேர் மீண்டனர்.

12:08 AM IST
அதிகரிக்கும் கொரோனா ;அமெரிக்காவில் நெருக்கடி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், முக்கிய மாகாணங்களில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது, கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், வாக்காளர்களுக்கும் புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

6:40 PM IST
சென்னையில் மேலும் 1,458 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,17) அதிகபட்சமாக சென்னையில் 1,458 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.72 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,88,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 389 பேருக்கும், சேலத்தில் 240 பேருக்கும், செங்கல்பட்டில் 231 பேருக்கும், திருவள்ளூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், நாமக்கலில் 131 பேருக்கும், ஈரோடில் 122 பேருக்கும், கடலூரில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 101 பேருக்கும், வேலூரில் 91 பேருக்கும், நீலகிரியில் 88 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,458 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,72,533 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 428 பேரும், செங்கல்பட்டில் 337 பேரும், சேலத்தில் 297 பேரும், திருப்பூரில் 193 பேரும், திருவள்ளூரில் 182 பேரும், ஈரோடில் 157 பேரும், தஞ்சாவூரில் 131 பேரும், கடலூரில் 123 பேரும், காஞ்சிபுரத்தில் 119 பேரும், நீலகிரியில் 105 பேரும், நாமக்கலில் 100 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் 6.32 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (அக்.,17) 5,005 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6.32 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,83,486 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 192 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-126) மூலமாக, இன்று மட்டும் 90,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 88 லட்சத்து 56 ஆயிரத்து 280 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,594 பேர் ஆண்கள், 1,701 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,12,802 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,70,652 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,586 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 40,192 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:08 PM IST
11 லட்சத்து 9 ஆயிரத்து 833 பேர் பலி

இன்று (அக்.,- 17 ம் தேதி ) மாலை; 03 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 9 ஆயிரத்து 833 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 96 லட்சத்து 78 ஆயிரத்து 446 பேர் மீண்டனர்.

11:03 AM IST
11 லட்சத்து 9 ஆயிரத்து 130 பேர் பலி

இன்று (அக்.,- 17 ம் தேதி ) காலை; 11 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 95 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 9 ஆயிரத்து 130 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 707 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 547பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 17 ம் தேதி ) காலை; 02 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 95 லட்சத்து 66 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 8 ஆயிரத்து 622 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 547பேர் மீண்டனர்.

2:30 AM IST
ஜோ பிடனின் பிரசார குழுவுக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனின் பிரசார குழுவில், மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

2:00 AM IST
2 கோடியே 95 லட்சத்து 47 ஆயிரத்து 769 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 17 ம் தேதி ) அதிகாலை; 02 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 7 ஆயிரத்து 116 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 95 லட்சத்து 47 ஆயிரத்து 769 பேர் மீண்டனர்.

1:47 AM IST
கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்தது

கொரோனா பரவல் தீவிரமாக உள்ள கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்துள்ளது.

இதுபற்றி சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்துவதை வலுப்படுத்துதல், கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறமையான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மாநிலங்களுக்கு மத்திய குழு உதவும். உரிய நேரத்தில் தொற்று பாதிப்பை கண்டறிவதிலும், தொடர்சிகிச்சை அளிப்பதிலும் எழுந்துள்ள சவால்களை திறமையாக எதிர்கொள்வதற்கு மத்திய குழு வழிகாட்டும்” என கூறியது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பப்பட்ட குழுக்களில் ஒரு இணைச்செயலாளர், ஒரு பொது சுகாதார நிபுணர், ஒரு மருத்துவ நிபுணர் இடம் பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

10:14 PM IST
மஹாராஷ்டிராவில் இன்று 13,885 பேர் குணமடைந்தனர்

இன்று ஒரே நாளில் 13,885 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 13,44,368 பேர் குணமடைந்துள்ளனர். மராட்டியத்தில் மேலும் 11,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,76,062 ஆக அதிகரித்துள்ளது. 1,89,715 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7:30 PM IST
காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்திற்கு கொரோனா

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

6:30 PM IST
சென்னையில் இதுவரை 1.7 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,16) அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.7 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,87,852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 387 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும், சேலத்தில் 244 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும், திருப்பூரில் 147 பேருக்கும், ஈரோடில் 138 பேருக்கும், நாமக்கலில் 132 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 130 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும், கடலூரில் 116 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,71,075 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 913 பேரும், செங்கல்பட்டில் 322 பேரும், சேலத்தில் 314 பேரும், திருப்பூரில் 229 பேரும், திருவள்ளூரில் 195 பேரும், நாமக்கலில் 137 பேரும், கடலூரில் 126 பேரும், வேலூரில் 120 பேரும், நீலகிரியில் 102 பேரும், காஞ்சிபுரத்தில் 99 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:10 PM IST
தமிழகத்தில் மேலும் 5,245 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (அக்.,16) 5,245 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6.27 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 192 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-126) மூலமாக, இன்று மட்டும் 91,245 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 87 லட்சத்து 66 ஆயிரத்து 038 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,631 பேர் ஆண்கள், 1,758 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,10,208 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,68,951 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,245 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,529 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 40,959 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:15 PM IST
குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டாக்டர்களின் ஆலோனைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் குலாம்நபி ஆசாத் கேட்டு கொண்டுள்ளார்.

3:04 PM IST
3 கோடியே 92 லட்சத்து 28 ஆயிரத்து 900 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 16 ம் தேதி ) மாலை; 03 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 92 லட்சத்து 28 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 3 ஆயிரத்து 708 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 94 லட்சத்து 8 ஆயிரத்து 995 பேர் மீண்டனர்.

10:21 AM IST
11 லட்சத்து 2 ஆயிரத்து 941 பேர் பலி

இன்று (அக்.,- 16 ம் தேதி ) காலை; 10 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 91 லட்சத்து 75 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 2 ஆயிரத்து 941 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 743 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 93 லட்சத்து 71 ஆயிரத்து 406 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 16 ம் தேதி ) காலை; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 2 ஆயிரத்து 431 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 93 லட்சத்து 71 ஆயிரத்து 406 பேர் மீண்டனர்.

2:11 AM IST
கொரோனா வைரஸ் பார்முலாவைத் திருட பயங்கரவாதிகள் திட்டம்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தற்போது பிரிட்டன் உளவு நிறுவனமான எமை-5 (MI-5) அமைப்பு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஃபார்முலாவை திருட சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது.

1:29 AM IST
ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா

பாரீஸ்: ஐரோப்பாவின் மிகப்பெரிய தலைநகரங்களான லண்டன் மற்றும் பாரீஸில் கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்துள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஜெர்மனில் மார்ச் மாதம் உச்சபட்சமாக 6,294 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 6,638 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கலும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளார். தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் 11 மணிக்குள் உணவு விடுதிகள், பார்களை மூட வேண்டும். சமூக நிகழ்வுகளில் 10 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஒரு பகுதியில் ஏழு நாட்களில் 1 லட்சம் பேருக்கு 35 பேர் வீதம் பாதிக்கப்பட்டால் இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இந்த விகிதம் 50 ஆக உயர்ந்தால் மேலும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

10:25 PM IST
சபரிமலை தரிசனம்; கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

6:30 PM IST
சென்னையில் மேலும் 1,257 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,15) அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.69 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,148 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,86,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 395 பேருக்கும், சேலத்தில் 263 பேருக்கும், செங்கல்பட்டில் 255 பேருக்கும், திருவள்ளூரில் 192 பேருக்கும், நாமக்கலில் 148 பேருக்கும், திருப்பூரில் 146 பேருக்கும், ஈரோடில் 126 பேருக்கும், கடலூரில் 120 பேருக்கும், வேலூரில் 114 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 112 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,69,890 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 670 பேரும், செங்கல்பட்டில் 349 பேரும், திருப்பூரில் 260 பேரும், சேலத்தில் 219 பேரும், திருவள்ளூரில் 164 பேரும், நாமக்கலில் 158 பேரும், காஞ்சிபுரத்தில் 137 பேரும், நீலகிரியில் 131 பேரும், கடலூரில் 130 பேரும், ஈரோடில் 122 பேரும், திருவண்ணாமலையில் 116 பேரும், கன்னியாகுமரியில் 111 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:10 PM IST
தமிழகத்தில் இதுவரை 6.22 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (அக்.,15) மேலும் 5,055 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6.22 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 192 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-126) மூலமாக, இன்று மட்டும் 90,752 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 86 லட்சத்து 74 ஆயிரத்து 793 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,660 பேர் ஆண்கள், 1,750 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,07,577 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,67,193 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,055 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 49 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 27 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,472 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 41,872 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:12 PM IST
10 லட்சத்து 97 ஆயிரத்து 567 பேர் பலி

இன்று (அக்.,- 15 ம் தேதி ) மாலை; 03 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 87 லட்சத்து 89 ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 97 ஆயிரத்து 567 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 91 லட்சத்து 49 ஆயிரத்து 578 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 91 லட்சத்து 20 ஆயிரத்து 018 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 15 ம் தேதி ) காலை 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 87 லட்சத்து 30 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 96 ஆயிரத்து 323 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 91 லட்சத்து 20 ஆயிரத்து 018 பேர் மீண்டனர்.

2:00 AM IST
பள்ளிகள், தியேட்டர்கள், பூங்காக்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி

கொரோனா ஊரடங்கில் ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகிறது. பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.எனினும், இது பற்றி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி, மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்கள், பள்ளிகளை இப்போது திறக்கப்போவதில்லை என, அறிவித்துள்ளன. உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில், 19ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்தாலும், நேரில் வர அச்சப்படும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் தொடர வேண்டும்.பள்ளிக்கு நேரில் வர விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

11:00 PM IST
கொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

9:40 PM IST
நாளை மறுநாள் முதல் ஆம்னி பஸ்கள் இயக்கம்

நாளை மறுநாள் முதல் ஆம்னி பஸ்கள் சேவை துவக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்ப்பட்டது. கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் ஆம்னி பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பபட்ட போதிலும் ஆம்னிபஸ்களை இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் நளை மறுநாள் முதல் ஆம்னி பஸ்களின் சேவை துவக்கப்படும்., பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளி்ன வழிகாட்டுதல்படி பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

8:15 PM IST
சூப்பர் மேனாக உணர்கிறேன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ள நிலையில் டிரம்ப்பிற்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்கு பின் குணமடைந்து மீண்டும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.
பென்சில்வேனியா மாகாணத்தில், டிரம்ப் பேசியதாவது :கொரோனா சிகிச்சைக்குப் பின், நான் புதிய தெம்புடன் இருப்பதாக உணர்கிறேன். நோய் எதிர்ப்பு சக்தி கூடியுள்ளதாக உணர்கிறேன். என்னை ஒரு சூப்பர்மேனாக உணர்கிறேன். சரியான சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

7:25 PM IST
சென்னையில் மேலும் 1,349 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,14) அதிகபட்சமாக சென்னையில் 1,349 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.85 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,217 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,67,284 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 478 பேரும், செங்கல்பட்டில் 326 பேரும், திருவள்ளூரில் 294 பேரும், சேலத்தில் 282 பேரும், நீலகிரியில் 192 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும், ஈரோடில் 160 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:20 PM IST
தமிழகத்தில் 4,500க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (அக்.,14) ஒரே நாளில் 5,083 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 4,500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,70,392 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 192 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-126) மூலமாக, இன்று மட்டும் 95,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 85 லட்சத்து 84 ஆயிரத்து 041 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் 5,083 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 52 பேர் உயிரிழந்தனர். அதில், 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,423 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 42,566 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10:07 AM IST
63 லட்சம் பேர் நலமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,632 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்தது.
மேலும் ஒரே நாளில் 63,509 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 72.39 லட்சத்தை கடந்தது. 8.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 14 ம் தேதி ) காலை; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 83 லட்சத்து 48 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 90 ஆயிரத்து 225 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.

11:42 PM IST
மகாராஷ்டிராவில் குறைந்த கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 356 பேர் குணமடைந்துள்ளனர்.தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.
மாநிலத்தில் இன்று 8 ஆயிரத்து 522 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 43 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 05 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 356 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

9:23 PM IST
தடுப்பு மருந்து; ஆசிய, ஆப்ரிக்கர்களுக்கு முன்னுரிமை- பிரிட்டன் அரசு

லண்டன், ஸ்டான்போர்ட்ஷயர் உள்ளிட்ட பகுதிகளில் ஆசியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பிரிட்டனிலுள்ள சிறுபான்மையினரான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆசியர்கள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பு மருந்து சோதனையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இனப் பாகுபாடு இல்லாமல் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சிறுபான்மையினரே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கே தடுப்பு மருந்து சோதனையில் முன்னுரிமை வழங்கப்படும் என பிரிட்டன் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

8:23 PM IST
கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா

உலகின் முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 35. கிளப் கால்பந்தில் யுவண்டஸ் அணிக்காக விளையாடுகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் இவருக்கு கொரோனா சோதனை நடந்தது.

இதில் ரொனால்டோவுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்ற போதும், வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதை போர்ச்சுகல் கால்பந்து அமைப்பு அறிவித்தது. இதையடுத்து இன்று சுவீடனுக்கு எதிராக மோத உள்ள போர்ச்சுகல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


இச் செய்தி வெளியாகும் முன், ரொனால்டோ சக போர்ச்சுகல் வீரர்களுடன் இணைந்து சாப்பிட்டார். இதனால் மற்ற வீரர்களும் அச்சத்தில் உள்ளனர்.

7:00 PM IST
சென்னையில் மேலும் 1,217 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,13) அதிகபட்சமாக சென்னையில் 1,217 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.67 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,164 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,84,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 398 பேருக்கும், சேலத்தில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 252 பேருக்கும், திருவள்ளூரில் 236 பேருக்கும், திருப்பூரில் 166 பேருக்கும், கடலூரில் 138 பேருக்கும், காஞ்சிபுரம், நாமக்கலில் தலா 129 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,217 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,67,284 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 478 பேரும், செங்கல்பட்டில் 326 பேரும், திருவள்ளூரில் 294 பேரும், சேலத்தில் 282 பேரும், நீலகிரியில் 192 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும், ஈரோடில் 160 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


6:25 PM IST
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு ; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேபோல் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை (4,879) விட குறைவாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 191 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-125) மூலமாக, இன்று மட்டும் 85,509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 84 லட்சத்து 88 ஆயிரத்து 503 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 5,117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 19 பேர் தனியார் மருத்துவமனையிலும், 38 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இது நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை (62) விட குறைவாகும். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,371 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 43,239 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

11:08 AM IST
10 லட்சத்து 85 ஆயிரத்து 375 பேர் பலி

இன்று (அக்.,- 13 ம் தேதி ) காலை; 11 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்து 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 85 ஆயிரத்து 375 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 86 லட்சத்து 6 ஆயிரத்து 252 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 85 லட்சத்து 92 ஆயிரத்து 813 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 13 ம் தேதி ) காலை; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 80 லட்சத்து 31 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 85 ஆயிரத்து 151 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 85 லட்சத்து 92 ஆயிரத்து 813 பேர் மீண்டனர்.

4:06 AM IST
சீனாவில் மீண்டும் கொரோனா: கிங்டாவோ நகரில் வைரஸ் பரவல்

சீனாவில், இரண்டு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதனால், கிங்டாவோ நகரில் வசிக்கும் ஒன்பது லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

2:12 AM IST
பாலகிருஷ்ணனுக்கு கொரோனா: கோகுல இந்திராவுக்கும் பாதிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் 67. கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வந்த அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதியானது.நேற்று அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைபெறுகிறார்.

9:27 PM IST
இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 81% கொரோனா பாதிப்பு

இந்தியாவின் புதிய கொரோனா பாதிப்புகளில் 81 சதவீதம் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

8:26 PM IST
திரிபுரா: வழிகாட்டுதலுடன் துர்கா பூஜை கொண்டாட அனுமதி

திரிபுராவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில், துர்கா பூஜையை (நவராத்திரி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் பாதுகாப்பாக கொண்டாட அரசு வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

7:15 PM IST
சென்னையில் 1.66 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,12) அதிகபட்சமாக சென்னையில் 1,219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.66 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,212 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,83,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 393 பேருக்கும், சேலத்தில் 304 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், திருவள்ளூரில் 229 பேருக்கும், திருப்பூரில் 185 தஞ்சாவூர், ஈரோடில் தலா 146 பேருக்கும், நாமக்கலில் 145 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 139 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,219 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,66,067 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 466 பேரும், செங்கல்பட்டில் 315 பேரும், சேலத்தில் 332 பேரும், தஞ்சாவூரில் 317 பேரும், வேலூரில் 143 பேரும், திருவள்ளூரில் 201 பேரும், நாமக்கலில் 146 பேரும், நீலகிரி 148 பேரும், நாமக்கல்லில் 146 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் 42 நாட்களுக்கு பின் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா

தமிழகத்தில் இன்று (அக்.,12) ஒரே நாளில் 5,165 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.7 லட்சத்தை கடந்தது. 42 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 191 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-125) மூலமாக, இன்று மட்டும் 80,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 84 லட்சத்து 2 ஆயிரத்து 994 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,877 பேர் ஆண்கள், 2,001 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,99,382 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,61,850 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 33 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,314 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 43,747 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:07 PM IST
10 லட்சத்து 81 ஆயிரத்து 934 பேர் பலி

இன்று (அக்.,- 12 ம் தேதி ) மாலை; 04 : 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 77 லட்சத்து 95 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 81 ஆயிரத்து 934 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரத்து 094 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 83 லட்சத்து 43 ஆயிரத்து 063 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 12 ம் தேதி ) காலை; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 81 ஆயிரத்து 252 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 83 லட்சத்து 43 ஆயிரத்து 063 பேர் மீண்டனர்.

5:30 AM IST
'தடுப்பூசியை பயன்படுத்த அவசர அனுமதி கிடையாது!' : ஹர்ஷ வர்தன்

''கொரோனா வைரசுக்கு எதிராக, இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்த அவசர அனுமதி அளிக்கப்படாது,'' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

9:36 PM IST
கொரோனாவை வெல்ல மக்களின் அர்ப்பணிப்பு அவசியம்: உத்தவ்

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம் என மஹா., முதல்வர் உத்தவ் தாககரே தெரிவித்துள்ளார்.

8:00 PM IST
கர்நாடகா பள்ளிகள் மூன்று வார காலத்திற்கு விடுமுறை: எடியூரப்பா

கொரோன தொற்று அச்சம் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு வரும் 12 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.


7:05 PM IST
சென்னையில் 1.64 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,11) அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.64 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,82,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 389 பேருக்கும், சேலத்தில் 294 பேருக்கும், செங்கல்பட்டில் 258 பேருக்கும், திருவள்ளூரில் 198 பேருக்கும், தஞ்சாவூரில் 181 பேருக்கும், திருப்பூரில் 172 பேருக்கும், ஈரோடில் 163 பேருக்கும், நாமக்கலில் 159 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 158 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,64,848 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 390 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும், சேலத்தில் 303 பேரும், தஞ்சாவூரில் 286 பேரும், வேலூரில் 163 பேரும், திருவள்ளூரில் 158 பேரும், நாமக்கலில் 154 பேரும், திருவாரூரில் 153 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:40 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 6 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று (அக்.,11) ஒரே நாளில் 5,005 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,56,385 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 191 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-125) மூலமாக, இன்று மட்டும் 90,107 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 83 லட்சத்து 22 ஆயிரத்து 832 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் 5,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 038 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், 26 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,252 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,095 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:35 PM IST
கொரோனா இல்லாத தேசம் என அறிவித்த அமைச்சருக்கு கொரோனா

நேபாளத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக கொரோனாவில் இருந்து நாடு மீண்டுவிட்டதாக அறிவித்திருந்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

6:00 PM IST
தினசரி கொரோனா உயிரிழப்பு ஆயிரத்திற்கு கீழ் சென்றது

கொரோனாவிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பவர்களின் எண்ணிக்கையும், கடந்த 8 நாட்களாக ஆயிரத்திற்கு கீழ் பதிவாகிவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2:24 PM IST
3 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 626 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 11 ம் தேதி ) மதியம்; 02 : 20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 77 ஆயிரத்து 808 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 81 லட்சத்து 41 ஆயிரத்து 701 பேர் மீண்டனர்.

10:57 AM IST
10 லட்சத்து 77 ஆயிரத்து 501 பேர் பலி

இன்று (அக்.,- 11 ம் தேதி ) காலை; 10: 55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 77 ஆயிரத்து 501 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 068 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 81 லட்சத்து 8 ஆயிரத்து 278 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 11 ம் தேதி ) காலை; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரத்து 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 77 ஆயிரத்து 291 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 81 லட்சத்து 8 ஆயிரத்து 278 பேர் மீண்டனர்.

7:00 AM IST
2 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 089 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 11 ம் தேதி ) காலை; 07: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 74 லட்சத்து 51 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 77 ஆயிரத்து 226 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 089 பேர் மீண்டனர்.

5:59 AM IST
ஜனவரியில் தடுப்பூசி அமெரிக்கா அறிவிப்பு

''கொரோனா தடுப்பூசி மருந்து வினியோகம், அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும்,'' என, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலர் ராபர்ட் கேட்லெக் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலர் ராபர்ட் கேட்லெக் கொரோனா தடுப்பூசி மருந்தை, பாதுகாப்பான முறையில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், ஒரு தடுப்பூசி மருந்திற்கான அங்கீகாரம் கிடைத்து விடும் என, எதிர்பார்க்கிறோம்.

2:55 AM IST
ரீ ஜெனரான் கொரோனா தடுப்பு மருந்தின் வீரியம் அளப்பரியது

கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பு மருந்துகள் அமெரிக்காவில் சோதனை நிலையில் உள்ளன. ஆனால் ரீஜனரான் நிறுவனத்தின் இந்த தடுப்பும் 2 நோயெதிர்ப்பு சக்திகளின் கூட்டாக செயல்பட்டு வைரஸின் புரதத்தை உடைக்கிறது. இது ஏற்கனவே 243 நோயாளிகளில் உடலில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வெற்றிகண்ட தடுப்பு மருந்தாகும். ஆனால் இது பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காது. இந்த தடுப்பு மருந்தின் விலை மிக அதிகம்.

12:52 AM IST
பள்ளிகளை திறக்க வேண்டாம்: கர்நாடக மாஜி முதல்வர்கள் வற்புறுத்தல்

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று மாஜி முதல்வர்கள் மாநில அரசை வற்புறுத்தி உள்ளனர்.கர்நாடகாவில் கொரோனா பரவல் குறையாத சூழலில் மாநிலத்தி்ல் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்று மாஜி முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் அரசை வற்புறுத்தி உள்ளனர்.

10:52 PM IST
உ.பி.,யில் அக்.,19 முதல் பள்ளிகளை திறக்க முடிவு

உ.பி.,யில் அரசு வழிகாட்டுதலின்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்.,19 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

8:26 PM IST
கர்நாடகாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா

கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டத்திலுள்ள திம்மாபூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இத்திட்டத்தின் படி பெலகெவி மாவட்டத்தில் 195 மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்றனர். அதில் 34 மாணவர்களுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 6 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மாணவர்கள் அனைவரும் 3 அல்லது 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக உள்ளனர்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கொரோனா பரவியதையடுத்து வித்யகாமா திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை மாநில கல்வித்துறை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6:50 PM IST
சென்னையில் மேலும் 1,173 பேர் டிஸ்சார்ஜ்

இன்று (அக்.,10) அதிகபட்சமாக சென்னையில் 1,173 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.63 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,272 பேருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,80,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 392 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 199 பேருக்கும், தஞ்சாவூரில் 189 பேருக்கும், திருப்பூரில் 183 பேருக்கும், ஈரோடில் 161 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 160 பேருக்கும், நாமக்கலில் 153 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,173 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 455 பேரும், தஞ்சாவூரில் 354 பேரும், சேலத்தில் 250 பேரும், திருவள்ளூரில் 229 பேரும், கோவையில் 216 பேரும், திருப்பூரில் 201 பேரும், வேலூரில் 167 பேரும், கடலூரில் 165 பேரும், காஞ்சிபுரத்தில் 143 பேரும், ஈரோடில் 129 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 5,222 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,222 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனையடுத்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.97 லட்சமாக அதிகரித்துள்ளது.


இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 5,222 பேர் குணமடைந்தனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,97,033 ஆக அதிகரித்துள்ளது. 44,150 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா காரணமாக, இன்று மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பலி 10,187 ஆக அதிகரித்துள்ளது.

3:18 PM IST
3 கோடியே 71 லட்சத்து 52 ஆயிரத்து 125 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 10 ம் தேதி ) மாலை; 03: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 71 லட்சத்து 52 ஆயிரத்து 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 73 ஆயிரத்து 323 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 79 லட்சத்து 18 ஆயிரத்து 636 பேர் மீண்டனர்.

10:34 AM IST
10 லட்சத்து 72 ஆயிரத்து 712 பேர் பலி

இன்று (அக்.,- 10 ம் தேதி ) காலை; 10: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரத்து 712 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 79 லட்சத்து 351 பேர் மீண்டனர்.

7:05 AM IST
2 கோடியே 78 லட்சத்து 85 ஆயிரத்து 855 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (அக்.,- 10 ம் தேதி ) காலை ; 07: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரத்து 158 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 78 லட்சத்து 85 ஆயிரத்து 855 பேர் மீண்டனர்.

6:45 AM IST
2 கோடியே 78 லட்சத்து 84 ஆயிரத்து 931 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 10 ம் தேதி ) காலை ; 06: 50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 70 லட்சத்து 92 ஆயிரத்து 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரத்து 146 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 78 லட்சத்து 84 ஆயிரத்து 931 பேர் மீண்டனர்.

2:55 AM IST
கொரோனா தடுப்பூசி வழங்கும் அமைப்பில் இணைந்தது சீனா

கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க உள்ள 'கோவக்ஸ்' அமைப்பில் நம் அண்டை நாடான சீனா இணைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 'கோவக்ஸ்' அமைப்பு வாயிலாக ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய உள்ளது.இதில் அமெரிக்கா சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தவிர 172 நாடுகள் இணைந்துள்ளன.உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் கோவக்ஸ் அமைப்பில் இடம் பெறவில்லை.சீனாவும் வளரும் நாடுகளுக்கு தானேநேரடியாக கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவக்ஸ் அமைப்பில் சீனா இணைந்தது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சீனாதெரிவித்துள்ளது.இதன் மூலம் சீனாவில் தயாராகும் தடுப்பூசி மருந்துகள் கோவக்ஸ் அமைப்பு மூலம் வளரும் நாடுகளுக்குவழங்கப்படும்.சீனாவில் தற்போது 11 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

9:33 PM IST
டில்லியில் கொரோனா பாதிப்பு வீடு: ஸ்டிக்கர் ஒட்டும் பணி கைவிடல்

டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் வீட்டின் முகப்பில் பாதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டுவதை மாநகராட்சி கைவிட்டுள்ளது.
பொதுவாக கொரோனா பாதித்தவர்கள் விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வீட்டின் கதவிலோ அல்லது நுழைவாயிலோ ஒட்டப்படுகிறது. அதில் எத்தனை பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரம் இருக்கும்.
இதனால் டில்லியில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் கூட ஸ்டிக்கர் ஒட்டப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு பயந்து கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக டில்லி உயர்நீதி மன்றம் வீட்டின் முன் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து தற்போது வீடுகளின் முன்பு கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் தவிர்த்துள்ளது.

8:32 PM IST
75 சதவீத விமான சேவைக்கு விரைவில் அனுமதி ; ஹர்தீப் சிங் புரி

இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நோய் பரவலை குறைக்க, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளை முடக்கியுள்ளன. இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகள் செயல்படுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

7:30 PM IST
சென்னையில் மேலும் 1,128 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,09) அதிகபட்சமாக சென்னையில் 1,128 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.62 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,288 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 397 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், தஞ்சாவூரில் 240 பேருக்கும், திருவள்ளூரில் 226 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், கடலூரில் 150 பேருக்கும், நாமக்கலில் 148 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 147 பேருக்கும், வேலூரில் 141 பேருக்கும், ஈரோடில் 137 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,128 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,62,605 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 442 பேரும், கோவையில் 413 பேரும், சேலத்தில் 364 பேரும், தஞ்சாவூரில் 261 பேரும், திருவள்ளூரில் 222 பேரும், திருப்பூரில் 197 பேரும், திருவாரூரில் 170 பேரும், வேலூரில் 158 பேரும், ஈரோடில் 149 பேரும், கடலூரில் 142 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:29 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 5,357 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,09) ஒரே நாளில் 5,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.91 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,166 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 19 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 190 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-124) மூலமாக, இன்று மட்டும் 97,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 81 லட்சத்து 41 ஆயிரத்து 534 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் 5,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,120 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,197 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:04 PM IST
10 லட்சத்து 67 ஆயிரத்து 456 பேர் பலி

இன்று (அக்.,- 9 ம் தேதி ) மாலை ; 03: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 67 லட்சத்து 92 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 67 ஆயிரத்து 456 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 76 லட்சத்து 90 ஆயிரத்து 318 பேர் மீண்டனர்.

6:05 AM IST
2 கோடியே 76 லட்சத்து 29 ஆயிரத்து 656 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 9 ம் தேதி ) காலை ; 06: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 66 ஆயிரத்து 339 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 76 லட்சத்து 29 ஆயிரத்து 656 பேர் மீண்டனர்.

4:30 AM IST
'தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டக வசதி போதாது'

'கொரோனா தடுப்பூசி மருந்துகளை கையாள, போதுமான குளிர் சாதன பெட்டக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

10:13 PM IST
100 பேருக்கும் அதிகமான திறந்த வெளி அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி

100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கும் அரசியல் கூட்டங்கள் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்த்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறவிக்கப்பட்டுள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இதையடுத்து பீகார் மாநிலத்தில் 100க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் உள் அரங்குகளில் நடைபெறும் கூட்டங்களில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு 200 பேருக்கு மேல் கூட்டத்தை திரட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

7:12 PM IST
சென்னையில் 1,144 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,08) அதிகபட்சமாக சென்னையில் 1,144 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.61 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,78,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 448 பேருக்கும், செங்கல்பட்டில் 363 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும், தஞ்சாவூரில் 239 பேருக்கும், திருவள்ளூரில் 194 பேருக்கும், திருப்பூரில் 173 பேருக்கும், நாமக்கலில் 147 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 137 பேருக்கும், வேலூரில் 133 பேருக்கும், கடலூரில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,144 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,61,477 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 628 பேரும், சேலத்தில் 467 பேரும், செங்கல்பட்டில் 427 பேரும், திருவள்ளூரில் 296 பேரும், தஞ்சாவூரில் 265 பேரும், நாமக்கலில் 184 பேரும், திருவாரூரில் 168 பேரும், திருப்பூரில் 158 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 5.86 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று (அக்.,08) ஒரே நாளில் 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.86லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,088 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,079 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 9 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,40,943 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 190 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-124) மூலமாக, இன்று மட்டும் 87,341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 80 லட்சத்து 44 ஆயிரத்து 447 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 31 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,052 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,437 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:39 PM IST
3 கோடியே 64 லட்சத்து 29 ஆயிரத்து 108 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 8 ம் தேதி ) மதியம் ; 02: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 64 லட்சத்து 29 ஆயிரத்து 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 61 ஆயிரத்து 144 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 74 லட்சத்து 32 ஆயிரத்து 096 பேர் மீண்டனர்.

12:21 PM IST
10 லட்சத்து 60 ஆயிரத்து 567 பேர் பலி

இன்று (அக்.,- 8 ம் தேதி ) நன்பகல்; 12: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 64 லட்சத்து ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 60 ஆயிரத்து 567 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 838 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 74 லட்சத்து 2 ஆயிரத்து 859 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (அக்.,- 8 ம் தேதி ) காலை; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 63 லட்சத்து 81 ஆயிரத்து 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 60 ஆயிரத்து 002 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 74 லட்சத்து 2 ஆயிரத்து 859 பேர் மீண்டனர்.

2:43 AM IST
இன்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: பிரதமர் மோடி துவக்கம்

பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா கண்டறியும் சோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கொரோனா பரவல் குறையவில்லை.
இந்நிலையில் பண்டிகை காலம் துவங்க உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் அவற்றை கொண்டாட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் 'ஜன் அந்தோலன்' என்ற மக்கள் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

8:37 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 5.80 லட்சத்தை எட்டியது

தமிழகத்தில் இன்று (அக்.,07) ஒரே நாளில் 5,524 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.80 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,524 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,014 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 3 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,35,855ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,524பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80ஆயிரத்து 736ஆக உள்ளது.

7:05 AM IST
2 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 033 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 7 ம் தேதி ) காலை; 07: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 54 ஆயிரத்து 036 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 033 பேர் மீண்டனர்.

4:57 AM IST
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சுகாதாரத் துறை எதிர்ப்பால், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது.கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் கார்த்திகை, 1ம் தேதியான நவ., 16 முதல் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் எனவும், அதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:ஐப்பசி மாத பூஜையில், பக்தர்களை அனுமதிப்பதன் மூலம் மண்டல, மகரவிளக்கு காலத்தில், பக்தர்களை அனுமதிக்க உதவியாக இருக்கும் என கருதப்பட்டது. சுகாதாரத் துறை எதிர்ப்பால், எங்கள் முடிவை வாபஸ் பெற்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

12:54 AM IST
வால்பாறை செல்ல இ பாஸ் கட்டாயம்: கலெக்டர்

வால்பாறை பகுதிக்கு செல்வோர் இபாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.தமிழக அரசின் வழிகாட்டுதல்நெறி முறைகளின் படி சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்கள் குவிய துவங்கினர். வால்பாறையிலும் மக்கள் அதிகளவில் வரத்துவங்கினர்.இதனிடையே வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வால்பாறை செல்வதற்கு இபாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

11:20 PM IST
டில்லியில் கொரோனாவின் 2ம் அலை கட்டுப்படுத்தப்படுகிறது ; கெஜ்ரிவால்

டில்லியில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், அரசின் வழிகாட்டுதலின் படி, டில்லி கொரோனா பாதிப்புகளை கையாள சிறப்பாக செயல்படுகிறது. கட்டுப்பாட்டு நடவடிக்கையால் தேசிய தலைநகரம், கொரோனா வைரசின் இரண்டாம் அலையையும் அதன் உச்சத்தையும் கடந்து விட்டது. நிலைமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோயைக் கண்டறிய டில்லி அரசு சோதனையை அதிவேகமாக அதிகரித்தது. ஆயினும் அதன் தாக்கத்தில் இருந்து இரண்டாவது அலை மெதுவாக கடந்து செல்லும் என்று நான் நம்புகிறேன். ஆக., மாதத்தில் 1 நாளைக்கு நடத்தப்படும் 20,000 சோதனைகளுடன் ஒப்பிடுகையில், டில்லியில் சோதனை ஒரு நாளைக்கு 60,000 ஐ எட்டியது.இப்போது 10,000 படுக்கைகள் மருத்துவமனைகளில் இல்லை. ஒரு கட்டத்தில், 7,200 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. டில்லி அரசாங்க தரவுகளின்படி, நேற்று 1,947 புதிய பாதிப்புகள் பதிவாகியது. நேற்று கொரோனா பாதிப்பு விகிதம் 5.47 சதவீதமாகவும், மொத்த நோய் பாதிப்பு விகிதம் 8.82 சதவீதமாக இருந்தது. கடந்த 10 நாட்களில் சராசரி இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

9:30 PM IST
30 நிமிடத்தில் கொரோனா முடிவு: புதிய சோதனை கருவி அறிமுகம்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தற்போது தீவிர தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வீட்டிலேயே 30 நிமிடத்தில் சோதனை செய்து முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு புதிய கருவியை, தென் கொரியாவைச் சேர்ந்த போஹாங் அறிவியல் பல்கலை கண்டுபிடித்துள்ளது. இதன் முடிவுகள் வழக்கமாக செய்யப்படும் பி.சி.ஆர்., டயக்னாஸ்டிக் சோதனை முடிவுகள்போல கச்சிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

9:13 PM IST
பிளாஸ்மா சிகிச்சையால் பலன் இல்லை: ஐசிஎம்ஆர்

பிளாஸ்மா சிகிச்சையால் கொரேனா இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.

8:35 PM IST
இந்தியாவில் ஆக., மாதத்திற்கு பின் மிகக் குறைந்த தினசரி பாதிப்பு

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக.,மாதத்தில் இருந்து மிகவும் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக, 61,267 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,85,082 ஆக உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்தது. ஆக., மாதத்துக்கு பின் மிகக் குறைந்த தினசரி பாதிப்பு இதுவாகும். நாட்டில் கொரோனா தொற்றுக்கான சோதனைகள் அதிகரிக்கப்பட்டு பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

8:05 PM IST
கொரோனாவிலிருந்து 84% பேர் மீண்டுள்ளனர்: மத்திய அரசு

நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 84 சதவீதமாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இருவாரங்களாக 10 லட்சம் பேருக்கும் குறைவாகவே, கொரோனா சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் விகிதம் 84 சதவீதமாக உள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை விட, குணமடைவோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 77 சதவீதம் பேர், மஹா., கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம், உ.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ளனர். கொரோனா பலிகளில் 48 சதவீத பலி எண்ணிக்கை, 25 மாவங்களில் மட்டும் பதிவாகி உள்ளது. அதில் 15 மாவட்டங்கள் மஹா.,வில் உள்ளன. கொரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வருவதே இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

7:33 PM IST
என்-95 மாஸ்க் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

என்-95 ரக மாஸ்க்குகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் துவங்கிய போது, மருத்துவத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் 'என்-95' ரக மாஸ்க்குகளுக்கான உள்நாட்டு தேவை அதிகரித்தது. இதனையடுத்து அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மாஸ்க் உற்பத்தி அதிகரித்த பின், கடந்த ஆக., முதல், மாதம் 50 லட்சம் மாஸ்க்குகளை ஏற்றுமதி செய்யலாம் என தளர்வு அறிவித்தது.இந்நிலையில், என்-95 மாஸ்க்குகள் மீதான ஏற்றுமதி தடையை முற்றிலும் நீக்கி மத்திய வர்த்தகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'கட்டுப்படுத்தப்பட்டது' என்ற பிரிவிலிருந்து, 'தாராளம்' என்ற பிரிவுக்கு இதனை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

6:31 PM IST
சென்னையில் 947 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,06) அதிகபட்சமாக சென்னையில் 947 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.59 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,306 பேருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 434 பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 263 பேருக்கும், தஞ்சாவூரில் 224 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும், திருப்பூரில் 152 பேருக்கும், நாமக்கலில் 146 பேருக்கும், கடலூரில் 145 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 947 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,59,237 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 494 பேரும், சேலத்தில் 372 பேரும், செங்கல்பட்டில் 357 பேரும், தஞ்சாவூரில் 344 பேரும், கடலூரில் 276 பேரும், திருப்பூரில் 254 பேரும், திருவள்ளூரில் 207 பேரும், திருவண்ணாமலையில் 174 பேரும், திருவாரூரில் 165 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 5.75 லட்சத்தை எட்டியது

தமிழகத்தில் இன்று (அக்.,06) ஒரே நாளில் 5,548 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.75 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,017 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,014 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 3 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,30,408 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 189 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-123) மூலமாக, இன்று மட்டும் 81,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 78 லட்சத்து 63 ஆயிரத்து 864 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 71 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 41 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,917 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 45,279 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:03 PM IST
10 லட்சத்து 46 ஆயிரத்து 484 பேர் பலி

இன்று (அக்.,- 6 ம் தேதி ) மாலை; 03: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 57 லட்சத்து 31 ஆயிரத்து 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 46 ஆயிரத்து 484 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 68 லட்சத்து 89 ஆயிரத்து 768 பேர் மீண்டனர்.

12:19 PM IST
10 லட்சத்து 46 ஆயிரத்து 053 பேர் பலி

இன்று (அக்.,- 6 ம் தேதி ) நன்பகல்; 12: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 57 லட்சத்து 8 ஆயிரத்து 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 46 ஆயிரத்து 053 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 599 பேர் மீண்டனர்.

7:25 AM IST
2 கோடியே 68 லட்சத்து 65 ஆயிரத்து 091 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (அக்.,- 6 ம் தேதி ) காலை; 07: 25 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரத்து 406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 45 ஆயிரத்து 892 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 68 லட்சத்து 65 ஆயிரத்து 091 பேர் மீண்டனர்.

6:27 AM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா? இன்று ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்வது குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(அக்.,6) அவசர ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி, சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. காலை, 10:30 முதல், மாலை வரை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, நாகராஜ முருகன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன், உஷாராணி, குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

5:25 AM IST
கொரோனா பரவல் நிலை அறிய 30 ஆயிரம் பேரிடம் பரிசோதனை

''தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி வாயிலாக கண்டறிய 30 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை விரைவில் துவங்கும்'' என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: மாநிலம் முழுதும் கொரோனா பாதித்த பகுதிகளில் 30 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும். பொதுவாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும். இதை 'ஆன்டிபாடி' என்கிறோம். இந்த முறையில் ஒருவரின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். இதன் அளவை கொண்டு பாதிப்பின் தன்மை தெரிந்து கொள்ள முடியும். இதற்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி இந்த வாரத்தில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

4:22 AM IST
விசாரணையை துரிதமாக்கும் உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கொரானா வைரஸ் தாக்கம் குறித்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறது.
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகிற்கு பரவியது என உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை வைரஸ் பரவல் குறித்து இந்த குழு புதிதாக உண்மைகளை சிலவற்றை கண்டுபிடித்தால் சீனா உலக நாடுகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

12:21 AM IST
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: மத்திய அரசு இன்று ஆலோசனை

பொது மக்களிடையே, கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரசார நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.கொரோனா பரவலை தடுக்க அமலான ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்து உள்ளன.
எதிர்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு, மேலும் தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதற்கு முன், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும், புதிய பிரசார வழிமுறைகளை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய உள்துறை செயலர் அஜய்பல்லா தலைமையில், இன்று டில்லியில் நடக்கிறது.

11:38 PM IST
ஆந்திரா: பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.ஆந்திர மாநில அரசு அக்., 5ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பள்ளிப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,‛ மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை பள்ளிக்கு வந்த முதல் நாள் அன்று (அக்.,5) நடந்துள்ளது. எனவே இவர்களுக்கு பள்ளியில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இவர்கள் பள்ளிக்கு வரும் முன்னரே வெளியிடங்களில் கொரோனா கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்' இவ்வாறு தெரிவித்தனர்.

11:02 PM IST
தடுப்பூசிக்கான முன்னுரிமை குழுக்கள்: பட்டியலிட மத்திய அரசு வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முன்னுரிமை நபர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க மாநிலங்கள் விதிமுறையை பின்பற்ற மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இது தொடர்பான விபரங்கள் குறித்து நேற்று மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெறும் முன்னுரிமை அளிக்கப்படும் நபர்கள் குறித்த பட்டியலை வழங்க மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கொண்ட வடிவமைப்பை சுகாதாரதுறை தயாரித்துள்ளது.
முதற் கட்டமாக, மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்கள், நான்காம் நிலை ஊழியர்கள், ஆஷா போன்ற கள அளவிலான தொழிலாளர்கள் , பாதிப்புகளை கண்காணிக்கும் ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறையில் முன்னணி சுகாதார பணியாளர்களாக இருக்கும் பணியாளர்களுக்கு தடுப்பூசி டோஸ் விநியோகிக்கப்படும்.10:35 PM IST
கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி: உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

9:35 PM IST
மேற்கு வங்கத்தில் பூல்பாகன் மெட்ரோ ரயில் நிலையம் திறப்பு

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் பூல்காகன் மெட்ரோ ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைத்தார். இது துர்கா பூஜை பரிசாக இருக்கும் எனவும் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பணிகளை முடிக்க கூடுதல் முயற்சி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். கோல்கட்டாவில் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இருந்து பூல்பாகன் (1.5 கி.மீ. நீளம்) வரை இந்த சேவைகளை விரிவுபடுத்துவது பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கோல்கட்டா பயணிகளுக்கு இந்த மெட்ரோ நிலையம் துர்கா பூஜைக்கான பரிசாக அமையும். இந்த மெட்ரோவானது கோல்கட்டாவில் பாதுகாப்பான, தூய்மையான மற்றும் வேகமான போக்குவரத்து முறையை வழங்குகிறது. இந்த மெட்ரோ ரயிலில் பூல்பாகன் நிலையத்தில் இருந்து சால்ட் லேக் செக்டர் 5 க்கு செல்வதற்கான நேரம் 16 நிமிடங்கள் மட்டுமே. இது சாலை வழியாக பயணிக்க 1 மணி நேரத்திற்கும் அதிகமாக எடுக்கும்.

7:30 PM IST
மெரினா பீச்: அக்.,31 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா பரவல் காரணமாக அக்.,31 வரை சென்னை மெரினா பீச்சில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரானா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் முழுமையாக குறையாத காரணத்தால் வரும் அக்.,31 வரை சென்னை மெரினா பீச்சிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

6:47 PM IST
சென்னையில் மேலும் 1,074 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (அக்.,05) அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.58 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,367 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,74,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 468 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 337 பேருக்கும், தஞ்சாவூரில் 251 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும், நீலகிரியில் 169 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 155 பேருக்கும், நாமக்கலில் 147 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,58,290 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 460 பேரும், தஞ்சாவூரில் 399 பேரும், சேலத்தில் 373 பேரும், செங்கல்பட்டில் 215 பேரும், திருவள்ளூரில் 207 பேரும், கடலூரில் 188 பேரும், காஞ்சிபுரத்தில் 169 பேரும், கன்னியாகுமரியில் 158 பேரும், திருப்பூரில் 152 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் இதுவரை 5.69 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,05) ஒரே நாளில் 5,572 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.69 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,388 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 7 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,25,391 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 189 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-123) மூலமாக, இன்று மட்டும் 82,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 77 லட்சத்து 82 ஆயிரத்து 736 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,356 பேர் ஆண்கள், 2,139 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,77,541 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,47,819 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்தனர். அதில், 31 பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,846 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 45,881 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:36 PM IST
10 லட்சத்து 42 ஆயிரத்து 289 பேர் பலி

இன்று (அக்.,- 5 ம் தேதி ) மாலை; 03: 35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 42 ஆயிரத்து 289 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 66 லட்சத்து 43 ஆயிரத்து 410 பேர் மீண்டனர்.

12:11 PM IST
3 கோடியே 54 லட்சத்து 5 ஆயிரத்து 567 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 5 ம் தேதி ) நன்பகல்; 12: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 54 லட்சத்து 5 ஆயிரத்து 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 41 ஆயிரத்து 874 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 66 லட்சத்து 31 ஆயிரத்து 114 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 66 லட்சத்து 14 ஆயிரத்து 877 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 5 ம் தேதி ) காலை; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 51 லட்சத்து 63 ஆயிரத்து 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 38 ஆயிரத்து 325 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 66 லட்சத்து 14 ஆயிரத்து 877 பேர் மீண்டனர்.

9:47 PM IST
டிரம்ப் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது உண்மை: வெள்ளை மாளிகை

கொரோனா தொற்றால் ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களில் வெளியான தகவலை விடவும் அவர் நிலைமை மோசமாக இருந்ததாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மேடோஸ் கூறியுள்ளார்.

8:46 PM IST
இந்தியாவில் அக்., வரை 7.7 கோடி கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டது

இந்தியாவில் அக்., வரை 7.7 கோடி கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

7:37 PM IST
கொரோனா தொற்று: டில்லியில் அக்., 31 வரை பள்ளிகள் மூட உத்தரவு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதையொட்டி, டில்லியில் பள்ளிகள் மூடுவதற்கான உத்தரவை அக்.,31 வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:45 PM IST
சென்னையில் ஒரேநாளில் 1,374 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (அக்.,04) அதிகபட்சமாக சென்னையில் 1,374 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.57 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,348 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,72,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 474 பேருக்கும், செங்கல்பட்டில் 381 பேருக்கும், சேலத்தில் 357 பேருக்கும், தஞ்சாவூரில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 197 பேருக்கும், நாமக்கல்லில் 165 பேருக்கும், ஈரோடில் 149 பேருக்கும், திருவாரூரில் 148 பேருக்கும், திருப்பூரில் 147 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 146 பேருக்கும், கடலூரில் 141 பேருக்கும், வேலூரில் 140 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,374 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,57,216 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று தஞ்சாவூரில் 311 பேரும், சேலத்தில் 306 பேரும், கோவையில் 301 பேரும், செங்கல்பட்டில் 297 பேரும், திருப்பூரில் 241 பேரும், தர்மபுரியில் 188 பேரும், நாமக்கலில் 167 பேரும், நீலகிரி, திருவள்ளூரில் தலா 158 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:25 PM IST
தமிழகத்தில் மேலும் 5,558 பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (அக்.,04) ஒரே நாளில் 5,558 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.64 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,482 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 7 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,19,996 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 189 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-123) மூலமாக, இன்று மட்டும் 86,012 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 77 லட்சத்து 11 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 5,558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 092 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 66 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,784 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,120 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:02 PM IST
3 கோடியே 51 லட்சத்து 63 ஆயிரத்து 726 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 4 ம் தேதி ) மாலை; 03: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 51 லட்சத்து 63 ஆயிரத்து 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 38 ஆயிரத்து 325 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 128 பேர் மீண்டனர்.

11:02 AM IST
10 லட்சத்து 37 ஆயிரத்து 977 பேர் பலி

இன்று (அக்.,- 4 ம் தேதி ) காலை; 11: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 51 லட்சத்து 35 ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 37 ஆயிரத்து 977 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 61 லட்சத்து 26 ஆயிரத்து 909 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 61 லட்சத்து 17 ஆயிரத்து 253 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 4 ம் தேதி ) காலை; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 51 லட்சத்து 22 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 37 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 61 லட்சத்து 17 ஆயிரத்து 253 பேர் மீண்டனர்.

2:16 AM IST
வெள்ளை மாளிகையில் வேகமாக பரவும் கொரோனா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பணியாற்றியும் பெண் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு முதலில் கொரோனா உறுதியானது. அவரைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,க்களான தோம் டில்லிஸ், மைக் லீ ஆகியோருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அதிபரின் முன்னாள் ஆலோசகர் கெல்லியானோ கான்வே, பிரசாரக் குழு மேலாளர் பில் ஸ்டீபன், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் மூன்று பேர் என, பலருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

1:13 AM IST
டிரம்புடன் தொடர்பில் இருந்த உதவியாளர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொடர்பில் இருந்த உதவியாளர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

10:15 PM IST
பிளாஸ்மா தானம் செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

கொரோனாவில் இருந்து குணமடைந்த பின் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கட்டாக் மருத்துவ மனையில் பிளாஸ்மா தானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

9:12 PM IST
தெலுங்கானாவில் 2வது கொரோனா அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து இரண்டாவது கொரோனா அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெலுங்கானாவில் கொரோனா தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை குறைக்க அம்மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இண்டாம் அலைகளில் உள்ளன. தற்போது இந்தியாவில் கேரளா அதிக பாதிப்புகளை பதிவு செய்து வருவதால் அங்கு பாதிப்புக்கான இரண்டாம் அலையை காண முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கொரோனா கட்டுப்பாட்டு உத்திகளை முறையாக பின்பற்றி, பாராட்டை பெற்ற கேரள சுகாதாரதுறை தற்போது கொரோனாவின் தீவிரத்தை சமாளிக்க போராடி வருகிறது.

8:08 PM IST
கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடை உத்தரவு ;பினராயி

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடை உத்தரவு நடைமுறைக்கு வரும். அத்துடன் நோய் பாதிப்புகளும் குறையும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

7:07 PM IST
சென்னையில் இதுவரை 1.55 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,03) அதிகபட்சமாக சென்னையில் 1,071 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.55 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,70,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 486 பேருக்கும், செங்கல்பட்டில் 395 பேருக்கும், சேலத்தில் 351 பேருக்கும், திருவள்ளூரில் 290 பேருக்கும், தஞ்சாவூரில் 244 பேருக்கும், திருப்பூரில் 167 பேருக்கும், காஞ்சிபுரம், நாமக்கலில் தலா 150 பேருக்கும், நீலகிரியில் 146 பேருக்கும், கடலூரில் 145 பேருக்கும், ஈரோடில் 144 பேருக்கும், திருவாரூரில் 143 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,071 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,55,842 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 685 பேரும், தஞ்சாவூரில் 335 பேரும், சேலத்தில் 331 பேரும், திருப்பூரில் 286 பேரும், செங்கல்பட்டில் 213 பேரும், திருவள்ளூரில் 210 பேரும், ஈரோடில் 178 பேரும், திருவண்ணாமலையில் 177 பேரும், விழுப்புரத்தில் 158 பேரும், காஞ்சிபுரத்தில் 152 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் 5.58 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,03) ஒரே நாளில் 5,596 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.58 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,622 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,614 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 8 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித் துள்ளது. தமிழகத்தில் உள்ள 189 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-123) மூலமாக, இன்று மட்டும் 87,311 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 76 லட்சத்து 13 ஆயிரத்து 999 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 5,596 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 58 ஆயிரத்து 534 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 41 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,718 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:40 PM IST
3 கோடியே 48 லட்சத்து 61 ஆயிரத்து 358 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 3 ம் தேதி ) மாலை; 03: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 48 லட்சத்து 61 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 59 லட்சத்து 12 ஆயிரத்து 515 பேர் மீண்டனர்.

1:26 PM IST
3 கோடியே 48 லட்சத்து 38 ஆயிரத்து 209 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 3 ம் தேதி ) மதியம்; 01: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 48 லட்சத்து 38 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 33 ஆயிரத்து 356 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 926 பேர் மீண்டனர்.

7:10 AM IST
2 கோடியே 58 லட்சத்து 85 ஆயிரத்து 375 பேர் மீட்பு

இன்று (அக்.,- 3 ம் தேதி ) காலை; 07: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 32 ஆயிரத்து 712 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 58 லட்சத்து 85 ஆயிரத்து 375 பேர் மீண்டனர்.

5:32 AM IST
'கொரோனா வைரஸ் பரவும் திறன் 10 நாள் மட்டுமே'

'கொரோனா வைரஸின் பரவும் திறன் ஒருவரது உடலில் 10 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்' என்று அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

3:29 AM IST
அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்; முழு ஊரடங்கை தவிருங்கள்

கர்நாடகாவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
‛ கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டாலும் மாநிலத்தில் முழு ஊரடங்கினை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. இருந்தாலும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.. மக்கள் அரசுக்கு ஒத்துழைக்காத போது முழு ஊரடங்கு தவிர்க்க முடியாததாகிவிடும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.கர்நாடகாவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

12:28 AM IST
கொரோனா தடுப்பூசி காய்ச்சலை ஏற்படுத்துவது இயல்பானது

மனித பரிசோதனையில் இருக்கின்ற கொரோனா தடுப்பூசிகள் காய்ச்சல், உடல் வலி, சோர்வு போன்றவற்றை ஏற்படுவது இயல்பானது என மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

11:28 PM IST
கொரோனா விதிமீறல்: நொய்டா போலீசார் எச்சரிக்கை

கொரோனா பாதுகாப்பு விதிமுறையையொட்டி, மூக்கு மற்றும் வாயை சரியாக மூடியபடி, மாஸ்க்கை அணிய வேண்டும் அல்லது விதிமீறலுக்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என நொய்டா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


10:20 PM IST
தினசரி கொரோனா பரிசோதனை: அதிகரிக்க பட்னாவிஸ் வலியுறுத்தல்

மஹா.,வில் தினசரி கொரோனா பரிசோதனைகளை 1.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

9:15 PM IST
கர்நாடகாவில் தினசரி கொரோனா சோதனைகளை அதிகரிக்க முடிவு

கர்நாடகாவில் தினசரி கொரோனா சோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாதிரி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா சோதனை மையத்தை திறந்து வைத்து மருத்துவக் கல்விதுறை அமைச்சர் கே. சுதாகர் கூறுகையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, சோதனையை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கையை தற்போது 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

8:25 PM IST
உ.பி.,யில் பாதுகாப்பு விதிமுறையுடன் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு அனுமதி

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறது. ஊரடங்குகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. தொற்று பாதிப்புக்கு மத்தியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களை அரசு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எளிமையான முறையில் கொண்டாட உ.பி.,மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. துர்கா பூஜைக்கான கொண்டாட்டங்களில் பந்தல்கள் திறந்த வெளியில் நடத்தப்பட வேண்டும்.

திறந்த வெளி அல்லாமல், மூடப்பட்ட / குறுகிய இடங்களில் பண்டிகையை கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. துர்கா பூஜை கொண்டாடப்படும் மண்டபத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 200 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படும் நவராத்திரி விழா அக்.,17 முதல் துவங்குகிறது. அரசின் வழிகாட்டுதல் அக்.,15 முதல் நடைமுறைக்கு வரும். துர்கா பூஜைக்கான அனுமதி கிடைத்தது, பக்தர்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

7:50 PM IST
2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்' டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

7:20 PM IST
மம்தாவை தழுவுவேன் என விமர்சித்த பா.ஜ. தலைவருக்கு 'கொரோனா'

''எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தழுவிக் கொள்வேன் என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய பா.ஜ. தலைவருக்கு இன்று அவருக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.

6:34 PM IST
தமிழகத்தில் 5.5 லட்சத்தை தாண்டிய கொரோனா டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,02) ஒரே நாளில் 5,603 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.52 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,588 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 7 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்து உள்ளது.இன்று மட்டும் 5,603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,653 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:05 PM IST
3 கோடியே 45 லட்சத்து 19 ஆயிரத்து 530 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 2 ம் தேதி ) மாலை; 03: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 45 லட்சத்து 19 ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 28 ஆயிரத்து 230 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 56 லட்சத்து 91 ஆயிரத்து 031 பேர் மீண்டனர்.

12:01 PM IST
10 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர் பலி

இன்று (அக்.,- 2 ம் தேதி ) நன்பகல்; 12: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 44 லட்சத்து 84 ஆயிரத்து 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 56 லட்சத்து 75 ஆயிரத்து 090 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 56 லட்சத்து 53 ஆயிரத்து 812 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 2 ம் தேதி ) காலை ; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 27 ஆயிரத்து 054 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 56 லட்சத்து 53 ஆயிரத்து 812 பேர் மீண்டனர்.

5:03 AM IST
பண்டிகை காலத்தை முன்னிட்டு 200 ரயில்களை இயக்க முடிவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்., 15ம் தேதி முதல், கூடுதலாக, 200 சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுதும் நிறுத்தப்பட்ட பயணியர் ரயில் சேவை, ஜூன், 1 முதல், குறிப்பிட்ட வழித் தடங்களில் மட்டும் மீண்டும் துவங்கியது.

12:58 AM IST
கொரோனா தாக்கம்: கனடாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு

ஊரடங்கு இன்னும் முழுவதுமாக நீக்கப்படாத நிலையில் கனடாவில் உள்ள மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி கனடாவில் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து தடை செய்யப்பட்டதுதான் எனவும் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது எனவும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

10:03 PM IST
கேரளாவில் டிசம்பர் வரை சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாது

கேரளாவில் டிசம்பர் மாதம் வரை சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு அக்., 15 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட வாய்ப்பு உள்ளது' இவ்வாறு கேரள திரைப்பட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

9:59 PM IST
கர்நாடகாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1,000 அபராதம்

கர்நாடகாவில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.முதலில் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பட்சத்தில் ரூ 200/- அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ 1,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது கிராமப்புற மக்கள் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தால் ரூ 500/- அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7:59 PM IST
காங். தலைவர் அகமது படேலுக்கு கொரோனா

காங்.மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அகமது படேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அகமது பட்டேல் கூறியது, எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாக்டர் அறிவுறுத்தலின் படி என்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு டுவிட்டரில் அகமது படேல் கூறியுள்ளார்.

7:05 PM IST
சென்னையில் ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (அக்.,01) அதிகபட்சமாக சென்னையில் 1,289 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,68,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 550 பேருக்கும், செங்கல்பட்டில் 356 பேருக்கும், சேலத்தில் 341 பேருக்கும், திருவள்ளூரில் 260 பேருக்கும், தஞ்சாவூரில் 232 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், கடலூரில் 180 பேருக்கும், வேலூரில் 149 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், ஈரோடில் 145 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.53 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,53,846 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 511 பேரும், செங்கல்பட்டில் 474 பேரும், சேலத்தில் 378 பேரும், திருவள்ளூரில் 236 பேரும், கன்னியாகுமரியில் 186 பேரும், திருப்பூரில் 169 பேரும், கடலூரில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 152 பேரும், ஈரோடில் 150 பேரும், விழுப்புரத்தில் 147 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:35 PM IST
தமிழகத்தில் 5.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (அக்.,01) ஒரே நாளில் 5,516 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.47 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,683 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 187 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-121) மூலமாக, இன்று மட்டும் 87,647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 74 லட்சத்து 41 ஆயிரத்து 697 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 66 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 39 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,586 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:07 PM IST
10 லட்சத்து 18 ஆயிரத்து 961 பேர் பலி

இன்று (அக்.,- 1 ம் தேதி ) மதியம் ; 02 : 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 18 ஆயிரத்து 961 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 835 பேர் மீண்டனர்.

10:11 AM IST
3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 60 பேர் பாதிப்பு

இன்று (அக்.,- 1 ம் தேதி ) காலை ; 10: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 54 லட்சத்து 30 ஆயிரத்து 448 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 54 லட்சத்து 21 ஆயிரத்து 174 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 1 ம் தேதி ) காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 18 ஆயிரத்து 211 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 54 லட்சத்து 21 ஆயிரத்து 174 பேர் மீண்டனர்.

6:50 AM IST
2 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 633 பேர் மீண்டனர்

இன்று (அக்.,- 1 ம் தேதி ) காலை ; 06: 50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 18 ஆயிரத்து 208 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 633 பேர் மீண்டனர்.

4:21 AM IST
தியேட்டர், பள்ளி, கல்லூரி திறக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

அக்., 15ல் இருந்து, சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.கொரோனா ஊரடங்கின், ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

12:19 AM IST
குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

அமெரிக்காவில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், கொரோனா வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரலில், 2 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது, 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்து உள்ளது.மிசிசிபி மாகாணத்தில் தான், அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஜூலை மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டது தான், பாதிப்பு அதிகரிக்க காரணம்.

10:18 PM IST
கர்நாடகாவில் அக்.,15 வரை பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு இல்லை

கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வரும் அக்.,15ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

9:40 PM IST
கொரோனா குமார், சானிடைசர் குமாரி, பிரபலமாகி வரும் கொரோனா பெயர்கள்

உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா குமார், சானிடைசர் குமாரி என்று கொரோனா கால பெயர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு வைப்பது என்பது பிரபலமாகி வருகின்றன.

8:40 PM IST
அக். 15 முதல் தியேட்டர்கள் திறக்கலாம்

5-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மத்திய அரசு அனுமதியளித்தது.
* ஐந்தாம் கட்ட தளர்வில் வரும் அக். 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள், மல்டிப்ளக்ஸ் அரங்குகள் திறக்க அனுமதி .
* அக். 15-க்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம்.மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்
* நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக். 31 வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும்.
* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

6:45 PM IST
சென்னையில் மேலும் 1,205 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,30) அதிகபட்சமாக சென்னையில் 1,250 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.52 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,205 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,52,846 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 697 பேரும், செங்கல்பட்டில் 373 பேரும், சேலத்தில் 350 பேரும், திருவள்ளூரில் 188 பேரும், காஞ்சிபுரத்தில் 161 பேரும், நாமக்கலில் 154 பேரும், திருப்பூரில் 143 பேரும், வேலூரில் 142 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:40 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 5,610 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,30) ஒரே நாளில் 5,610 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.41 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,659 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,646 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 13 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 186 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-120) மூலமாக, இன்று மட்டும் 86,928 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 73 லட்சத்து 54 ஆயிரத்து 050 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,520 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,263 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

9:10 AM IST
10 லட்சத்து 12 ஆயிரத்து 657 பேர் பலி

இன்று (செப்- 30 ம் தேதி ) காலை ; 09: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 12 ஆயிரத்து 657 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 51 லட்சத்து 45 ஆயிரத்து 067 பேர் மீண்டனர்.

7:05 AM IST
2 கோடியே 51 லட்சத்து 38 ஆயிரத்து 649 பேர் மீண்டனர்

இன்று (செப்- 30 ம் தேதி ) காலை ; 07: 05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 38 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 11 ஆயிரத்து 981 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 51 லட்சத்து 38 ஆயிரத்து 649 பேர் மீண்டனர்.

4:38 AM IST
10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா.,

உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கும் மைல்கல் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


3:39 AM IST
கொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க்கில்பள்ளிகள் மீண்டும் திறப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தாக்கம் குறைந்த பின் தொடக்க பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

12:35 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை

ஸ்டாலின் உட்பட, தி.மு.க., நிர்வாகிகள், 10 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.சென்னை அறிவாலயத்தில், நேற்று(செப்.,29) தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தலைமை நிலைய செயலர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, மேலாளர்கள் ஜெயகுமார், பத்மநாபன் மற்றும் ஊழியர்கள் உட்பட, 10 பேருக்கு, தனியார் மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள், தொற்று பரிசோதனை செய்தனர். இதில், ஸ்டாலினுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

10:13 PM IST
10 மாநிலங்களில் 73% கொரோனா நோயாளிகள் மீட்பு

இந்தியாவில் மஹாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் இருந்து, கொரோனாவிலிருந்து 73 சதவீதம் பேர் மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவிக்கிறது.8:35 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் மணீஷ் சிசோடியா

டில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

7:30 PM IST
தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

* தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

* சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள் நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி.

* பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிப்பு.

* அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்

* டீக்கடை, உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.

* உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் வாங்குவதற்கு அனுமதி.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

6:30 PM IST
சென்னையில் மேலும் 1,119 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,29) அதிகபட்சமாக சென்னையில் 1,119 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,119 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,641 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 534 பேரும், செங்கல்பட்டில் 372 பேரும், சேலத்தில் 341 பேரும், திருவள்ளூரில் 253 பேரும், கன்னியாகுமரி, திருப்பூரில் தலா 204 பேரும், தர்மபுரி 158 பேரும், வேலூரில் 139 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

5:45 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 5.36 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (செப்.,29) ஒரே நாளில் 5,501 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.36 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,537 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 9 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 209 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 70 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 41 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,453 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:22 PM IST
10 லட்சத்து 6 ஆயிரத்து 8 94பேர் பலி

இன்று (செப்- 29 ம் தேதி ) மாலை ; 03: 20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 35 லட்சத்து 75 ஆயிரத்து 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 6 ஆயிரத்து 8 94பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 48 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் மீண்டனர்.

12:13 PM IST
10 லட்சத்து 6 ஆயிரத்து 458 பேர் பலி

இன்று (செப்- 29 ம் தேதி ) நன்பகல்; 12: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்து 6 ஆயிரத்து 458 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 607 பேர் மீண்டனர்.

7:37 AM IST
3 கோடியே 35 லட்சத்து 46 ஆயிரத்து 651 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 29 ம் தேதி ) காலை; 07: 35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 35 லட்சத்து 46 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 10 லட்சத்து 6 ஆயிரத்து 337 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 48 லட்சத்து 76 ஆயிரத்து 169 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 996 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 29 ம் தேதி ) காலை; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 35 லட்சத்து 42 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 10 லட்சத்து 6 ஆயிரத்து 121 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 996 பேர் மீண்டனர்.

5:24 AM IST
பொது ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி இன்று(செப்.,29) ஆலோசனை நடத்த உள்ளார்.

4:23 AM IST
'கோவிஷீல்டு' சோதனை சென்னையில் துவக்கம்

ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரித்துள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பூசி பரிசோதனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்த, 'கோவாக்சின்' தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.அதேபோல, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த சோதனை துவக்கப்பட்டுள்ளது.

1:43 AM IST
கொரோனா சிகிச்சை: 'டீகோப்ளானின்' மருந்து 20 மடங்கு பலன் தருகிறது

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் டீகோப்ளானின், மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது என்று டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

11:43 PM IST
கொரோனா தடுப்பூசி 2021 காலாண்டில் கிடைக்கும்: அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி 2021 முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

10:50 PM IST
வனவிலங்கு சரணாலயங்கள்: மஹா.,வில் அக்.,1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மஹாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் வரும் அக்., 1 முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் மூடப்பட்டன. சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் ஊரடங்கிற்கு முன் தினசரி 500 நடைப்பயிற்சியாளர்கள், வார விடுமுறை நாட்களில் 3000 சுற்றுலா பயணிகளும் வந்து கொண்டிருந்தனர்.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அக்., 1 முதல் குறிப்பிட்ட நேரம் வரை காலையில் நடைப்பயிற்சியாளர்கள் சஞ்சய் காந்தி பூங்காவில் அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தற்போது பூங்காவில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:48 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் அக்., மாதத்திற்கு பிறகு சுற்றுலா துறை திறப்பு

அருணாச்சல பிரதேசத்தில் அக்., மாதத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்காக சுற்றுலா துறை திறக்கப்படலாம் என முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.

10:00 PM IST
கொரோனா பரவல்: கேரளாவில் செப்.29 ல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை செப்.,29ல் கூட்ட அரசு முடிவெடுத்துள்ளது.

9:30 PM IST
துர்கா பூஜை கொண்டாட்டங்கள்:முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.,யில் கொரோனா பரவலால் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,28) தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தொற்றை குறைக்க அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிகரிக்கும் நோய் பாதிப்புகளுக்கு மத்தியில் உ.பி.,யின் பல இடங்களில், துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,28) தெரிவித்தார்.

8:20 PM IST
கொரோனா வந்தால் மம்தாவை கட்டி அணைப்பேன்: பா.ஜ., தேசிய செயலர்

'நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், மம்தா பானர்ஜியை கட்டி அணைத்து கொள்வேன்' என பா.ஜ., தேசிய செயலர் அனுபம் ஹஸ்ரா தெரிவித்துள்ளார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., தேசியச் செயலாளராக அனுபம் ஹஸ்ராவை பா.ஜ., சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில், நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 'கொரோனாவை விட பெரிய எதிரியான மம்தாவுடன் பா.ஜ., தொண்டர்கள் போராடி வருகின்றனர். மம்தாவுடன் மாஸ்க் இல்லாமல் போராட முடிந்தால், கொரோனாவுக்கு எதிராகவும் மாஸ்க் இல்லாமல் போராட முடியும்.

ஒரு வேளை எனக்கு கொரோனா உறுதியானால், நான் மம்தாவை நேரில் சந்தித்து அவரை கட்டி அணைப்பேன். கொரோனாவால் உயிரிழந்தவர்களை மம்தா அரசு மோசமாக நடத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

7:15 PM IST
சிவில் சர்வீஸ் தேர்வுகளை தள்ளிப் போட முடியாது:யுபிஎஸ்சி

கொரோனா பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை தள்ளிப்போட முடியாது என உச்சநீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

6:40 PM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 1.5 லட்சம் பேர் நலம்

சென்னையில் கொரோனா பாதித்த 1,64,644 பேரில் 1,50,522 பேர் குணமடைந்துள்ளனர். 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:20 PM IST
தமிழகத்தில் 5.30 லட்சம் பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் மேலும் 5,554 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.30 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது 46,306 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று(செப்., 28) தமிழகத்தை சேர்ந்த 5,577 பேர், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 12 பேர் என மொத்தம் 5,589 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை, தமிழகத்தில் 5,86,397 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து, 5,30,708 ஆக அதிகரித்துள்ளது. இன்று 70 பேர் உயிரிழந்தனர். (41 பேர் அரசு மருத்துவமனையிலும், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்)இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:13 PM IST
10 லட்சத்து 2 ஆயிரத்து 985 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 28 ம் தேதி ) மாலை; 05: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 10 லட்சத்து 2 ஆயிரத்து 985 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 46 லட்சத்து 56 ஆயிரத்து 153 பேர் மீண்டனர்.

1:40 PM IST
2 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 017 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 28 ம் தேதி ) மதியம்; 01: 40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 10 லட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 017 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 064 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 28 ம் தேதி ) காலை; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 10 லட்சத்து 2 ஆயிரத்து 452 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 064 பேர் மீண்டனர்.

5:40 AM IST
தடுப்பூசி பற்றி பேச்சு: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துஉள்ளது.

12:17 AM IST
மக்களை எலியாக்கிய சீனா; ரகசிய தடுப்பூசி பரிசோதனை

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக, தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது.

11:40 PM IST
இந்தியாவில் ஒரு நாளைக்கு 5 லட்சம் கொரோனா கவச உடைகள் தயாரிப்பு

இந்தியாவில் ஒரு நாளைக்கு 5 லட்சத்திற்கும் அதிகமானா கொரோனா கவச உடைகள் தயாரிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

11:05 PM IST
'மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு'

கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

10:11 PM IST
மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தற்போது நோய் தொற்றின் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்குகளில் தளர்வுகளை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

9:10 PM IST
கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, திருமழிசையில் இயங்கி வந்த 194 கடைகள், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று திறக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மொத்த வியாபாரகடைகள் 600 சதுர அடியிலிருந்து 1200 சதுர அடி உள்ள கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

8:09 PM IST
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் கிடையாது

கொரோனா பரவல் காரணமாக குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் கிடையாது என முதல்வர் விஜயரூபானி அறிவித்துள்ளார்.

7:35 PM IST
புதுச்சேரியில் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் வகுப்புகள் துவக்கம்

புதுச்சேரியில் வரும் அக்.,5 முதல் பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகள் துவங்கப்படும் என மாநில முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 6 மாதங்களாக நாடெங்கும் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்புக்கு பின் திறக்கப்படுகின்றன.6:30 PM IST
தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 5,706 பேர் நலம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,706. சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80. என தமிழக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

3:35 PM IST
9 லட்சத்து 99 ஆயிரத்து 114 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 27 ம் தேதி ) மாலை; 03 : 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரத்து 013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 99 ஆயிரத்து 114 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 541 பேர் மீண்டனர்.

7:10 AM IST
2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 255 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 27 ம் தேதி ) காலை; 07 : 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 30 லட்சத்து 47 ஆயிரத்து 067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 98 ஆயிரத்து 285 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 255 பேர் மீண்டனர்.

1:58 AM IST
சீனாவில் இருந்து வந்த வைரசை மறக்க மாட்டோம்: - டிரம்ப்

சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்

9:56 PM IST
கொரோனா பாதித்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

8:54 PM IST
அக்., மாத ரேஷன் பொருள் வாங்க டோக்கன்: தமிழக அரசு

அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குதற்கு இம் மாத இறுதியில் டோக்கன் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்., மே, மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன்பொருட்களை வாங்குவதற்கு டோக்கன் முறையை கடைபிடித்தது. தற்போது தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

7:52 PM IST
பீஜிங்கில் துவங்கி உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி

சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (செப்.,26) முதல் சர்வேதேச ஆட்டோமொபைல் கண்காட்சி துவங்கியது.

கொரோனா பரவல் காரணமாக, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த கண்காட்சி, ஒத்திவைக்கப்பட்டு இன்று செப்.,26 துவங்கி அக்., 5 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி பீஜிங்கில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் சுமார் 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் நடக்கிறது.

இக்கண்காட்சியில் சர்வேதேச கார் நிறுவனங்களின் கார்கள் இடம் பெறுகின்றன. தற்போது பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன . ஆடி, ஜி.எம்., நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் இடம் பெறுகின்றன. எலக்ட்ரிக் கார்கள் தவிர இணைப்பு வாகனங்கள், ஆடம்பர வாகனங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

7:00 PM IST
சென்னை, கோவையில் 1,462 பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,26) அதிகபட்சமாக சென்னையில் 867 பேரும், கோவையில் 595 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 656 பேருக்கும், சேலத்தில் 296 பேருக்கும், செங்கல்பட்டில் 259 பேருக்கும், திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், தஞ்சாவூரில் 179 பேருக்கும், விழுப்புரத்தில் 161 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், நீலகிரியில் 145 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 867 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 595 பேரும், காஞ்சிபுரத்தில் 340 பேரும், கடலூரில் 276 பேரும், தஞ்சாவூரில் 274 பேரும், செங்கல்பட்டில் 256 பேரும், சேலத்தில் 213 பேரும், தர்மபுரியில் 169 பேரும், திருவள்ளூரில் 166 பேரும், திருப்பூரில் 158 பேரும், திருவண்ணாமலையில் 149 பேரும், வேலூரில் 144 பேரும், விழுப்புரத்தில் 134 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:20 PM IST
தமிழகத்தில் மேலும் 5,612 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (செப்.,26) ஒரே நாளில் 5,612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.19 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,645 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 2 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,75,017 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 182 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-116) மூலமாக, இன்று மட்டும் 94,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 70 லட்சத்து 04 ஆயிரத்து 558 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,448 பேர் ஆண்கள், 2,199 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,46,918 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,28,069 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 85 பேர் உயிரிழந்தனர். அதில், 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,233 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,336 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2:33 PM IST
9 லட்சத்து 93 ஆயிரத்து 802 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 26 ம் தேதி ) மதியம்; 02 : 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 27 லட்சத்து 84 ஆயிரத்து 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 93 ஆயிரத்து 802 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் மீண்டனர்.

7:30 AM IST
2 கோடியே 41 லட்சத்து 67 ஆயிரத்து 448 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 26 ம் தேதி ) காலை ; 07: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 27 லட்சத்து 52 ஆயிரத்து 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 92 ஆயிரத்து 968 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 41 லட்சத்து 67 ஆயிரத்து 448 பேர் மீண்டனர்.

5:30 AM IST
புட்டபர்த்தியில் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், நாளை(செப்., 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி நிலையத்தின் சத்ய சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தியில், சத்திய சாயி பாபாவின் ஆஸ்ரமமான பிரசாந்தி நிலையம் உள்ளது. ஊரடங்கால், ஆஸ்ரமத்துக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், நாளை முதல், பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

11:01 PM IST
ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை

தெலுங்கானாவின் ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரில் இன்று மாநகர போக்குவரத்து சேவை துவங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

9:58 PM IST
உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

8:56 PM IST
இந்தியாவில் 7 கோடியை நெருங்கும் கொரோனா சோதனைகள்

இந்தியாவின் கொரோனா சோதனை 7 கோடியை நெருங்குகிறது. இதுவரை 6,89,28,440 சோதனைகள் நடத்தப்பட்டதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

7:30 PM IST
சென்னையில் இன்று 1,164 பேர் கொரோனாவிலிருந்து மீட்பு

தமிழகத்தில் இன்று (செப்.,25) அதிகபட்சமாக சென்னையில் 1,164 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,193 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 661 பேருக்கும், திருப்பூரில் 158 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், கடலூரில் 235 பேருக்கும், செங்கல்பட்டில் 277 பேருக்கும், திருவாரூரில் 139 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 165 பேருக்கும், தஞ்சாவூரில் 150 பேருக்கும், ஈரோடில் 151 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,164 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 517 பேரும், கடலூரில் 424 பேரும், திருப்பூரில் 158 பேரும், செங்கல்பட்டில் 306 பேரும், திருவள்ளூரில் 254 பேரும், சேலத்தில் 152 பேரும், திருவண்ணாமலையில் 164 பேரும், விழுப்புரத்தில் 126 பேரும், ஈரோடில் 123 பேரும், காஞ்சிபுரத்தில் 100 பேரும், நாகப்பட்டினத்தில் 117 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:50 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 5.13 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (செப்.,25) ஒரே நாளில் 5,626 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.13 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,679 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,671 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 8 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,69,370 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 182 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-116) மூலமாக, இன்று மட்டும் 94,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 69 லட்சத்து 10 ஆயிரத்து 521 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,455 பேர் ஆண்கள், 2,224 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,43,470 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,25,870 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,626 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 72 பேர் உயிரிழந்தனர். அதில், 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,148 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,386 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:35 PM IST
9 லட்சத்து 88 ஆயிரத்து 496 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 25 ம் தேதி ) மாலை ; 04: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 88 ஆயிரத்து 496 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 229பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 102 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 25 ம் தேதி ) காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 24 லட்சத்து ஆயிரத்து 710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 87 ஆயிரத்து 156 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 102 பேர் மீண்டனர்.

6:50 AM IST
சென்னையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்

சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் ஞாயிறு முதல் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.

6:01 AM IST
ஊரடங்கு துவங்கி 6 மாதங்கள் நிறைவு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.

5:30 AM IST
கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை!

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது.

3:55 AM IST
தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா?: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்!

'முன்னேறிய நாடுகளின் சுயநலப் போக்கால், எங்களைப் போல ஏழை நாடுகளின் மக்கள் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் சாக வேண்டுமா?'' என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஹோண்டுராஸ் அதிபர் ஜூவன் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ் உணர்ச்சிகரமாக பேசினார்.

2:04 AM IST
கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

12:49 AM IST
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை: ரஷ்யா அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என்று சோதித்துப் பார்த்த ரஷ்யா அறிவித்துள்ளது.கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து 'ஆட்5-என்கோவ்' என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷ்ய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது.

8:55 PM IST
5 நாட்களாக கொரோனாவில் குணமடைவோர் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவில் இருந்து தினசரி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை விட அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,614 ஆக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 89746 பேர் குணமடைந்திருந்தனர்.

இதேபோல் 22ம் தேதி புதிய பாதிப்பு 75,083 ஆகவும், குணமடைந்தவர்கள் 101468 ஆகவும் இருந்தது. 21ம் தேதி பாதிப்பு 86961 ஆகவும், குணமடைந்தவர்கள் 93356 ஆகவும், 20ம் தேதி புதிய பாதிப்பு 92605 ஆகவும், குணமடைந்தவர்கள் 94612 ஆகவும் இருந்தது. 19ம் தேதி பாதிப்பு 93337 ஆகவும், குணமடைந்தவர்கள் 95880 ஆகவும் இருந்தது.

இதன்மூலம், 5 தினங்களாக தொடர்ச்சியாக புதிய நோயாளிகள் எண்ணிக்கையை விட தினசரி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு பணியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

7:30 PM IST
சென்னையில் இன்று 1005 பேர் கொரோனாவிலிருந்து மீட்பு

சென்னையில் இன்று 1005 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.சென்னையில், 1,089 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 21 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,683ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 3,111 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4, 603 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 25 வது நாளாக பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 642 பேருக்கும், திருவள்ளூரில் 533 சேலத்தில் 311 பேருக்கும், செங்கல்பட்டில் 299 பேருக்கும், கடலூரில் 250 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், விழுப்புரத்தில் 145 பேருக்கும், திருவாரூரில் 143 பேருக்கும், நெல்லையில் 115 பேருக்கும் புதுக்கோட்டையில் 112 பேருக்கும், திருச்சியில் 126 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.

7:15 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 5.08 லட்சம் பேர் நலம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,470 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தை சேர்ந்த 5,679 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் உட்பட 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,63,691 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் - 3,40,016 பேர்; பெண்கள் 2,23,646 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர். தற்போது 46,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 88,784 பேருக்கும், 90,607 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 66,08,675 ஆகவும், மாதிரிகளின் எண்ணிக்கை 68,15,691 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 50,08,210 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.

4:49 PM IST
9 லட்சத்து 82 ஆயிரத்து 715 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 24 ம் தேதி ) மாலை ; 04: 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 21 லட்சத்து 36 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 82 ஆயிரத்து 715 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 953 பேர் மீண்டனர்.

12:38 PM IST
3 கோடியே 21 லட்சத்து 4 ஆயிரத்து 110 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 24 ம் தேதி ) நன்பகல்; 12: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 21 லட்சத்து 4 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 82 ஆயிரத்து 045 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 839 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 764 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 24 ம் தேதி ) காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 81 ஆயிரத்து 288 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 764 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 33 லட்சத்து 88 ஆயிரத்து 802 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 23 ம் தேதி ) காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 74 ஆயிரத்து 760 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 33 லட்சத்து 88 ஆயிரத்து 802 பேர் மீண்டனர்.

6:10 AM IST
2 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 416 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 23 ம் தேதி ) காலை ; 06: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 74 ஆயிரத்து 546 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 416 பேர் மீண்டனர்.

5:50 AM IST
ஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

1:23 AM IST
கொரோனா இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைவு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.

11:15 PM IST
இந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா

தென் ஆப்பிரிக்கா அக்., 1 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அத்துடன் கொரோனா தொற்று காரணமாக, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தென் ஆப்ரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

10:14 PM IST
கொரோனா வைரஸ் பரவல்: சீனா பொறுப்பேற்க செய்ய டிரம்ப் வலியுறுத்தல்

உலகிற்கு கொரோனா நோய் தொற்றை பரவச்செய்த சீனாவை பொறுப்பேற்க செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

9:25 PM IST
டில்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம்

டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 9 நாட்களில் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக 2000 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிப்பதாக DMRC தெரிவித்து உள்ளது.

8:45 PM IST
1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் திரும்பினர்

இந்தியாவில் மார்ச் - ஜூன் மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதாக அரசு தெரிவித்துள்ளது.

6:55 PM IST
சென்னையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.44 லட்சமானது

தமிழகத்தில் இன்று (செப்.,22) அதிகபட்சமாக சென்னையில் 831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னையில் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1.44 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 595 பேருக்கும், திருப்பூரில் 369 பேருக்கும், சேலத்தில் 391 பேருக்கும், கடலூரில் 233 பேருக்கும், செங்கல்பட்டில் 231 பேருக்கும், திருவாரூரில் 230 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 209 பேருக்கும், தஞ்சாவூரில் 155 பேருக்கும், ஈரோடில் 136 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 831 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,511 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 507 பேரும், திருப்பூரில் 394 பேரும், செங்கல்பட்டில் 371 பேரும், திருவள்ளூரில் 281 பேரும், சேலத்தில் 267 பேரும், கடலூரில் 231 பேரும், திருவண்ணாமலையில் 220 பேரும், விழுப்புரத்தில் 171 பேரும், ஈரோடில் 165 பேரும், காஞ்சிபுரத்தில் 161 பேரும், நாகப்பட்டினத்தில் 125 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் மேலும் 5,406 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,22) ஒரே நாளில் 5,406 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.97 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,334 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 3 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 176 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-110) மூலமாக, இன்று மட்டும் 84,730 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 66 லட்சத்து 40 ஆயிரத்து 058 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,228 பேர் ஆண்கள், 2,109 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,33,187 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,19,457 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 76 பேர் உயிரிழந்தனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,947 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,350 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 841 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 58 ஆயிரத்து 513 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 71 ஆயிரத்து 320 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:30 PM IST
3 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரத்து 944 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 22 ம் தேதி ) மாலை ; 05: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரத்து 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 70 ஆயிரத்து 097 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 31 லட்சத்து 41 ஆயிரத்து 860 பேர் மீண்டனர்.

12:30 PM IST
9 லட்சத்து 69 ஆயிரத்து 392 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 22 ம் தேதி ) நன்பகல்; 12: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 14 லட்சத்து 90 ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 69 ஆயிரத்து 392 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 419 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 536 பேர் நலம்

இன்று (செப்டம்பர்- 22 ம் தேதி ) காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 14 லட்சத்து 76 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 69 ஆயிரத்து 018 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்.

6:00 AM IST
கொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; விஞ்ஞானிகள் அறிவிப்பு

கனடாவில் ஜிசி 376 என்ற புதிய நோய்த்தடுப்பு மருந்து தற்போது பூனைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பூனைகள் உடலில் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டு பின்னர் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இது வெற்றி பெற்றதால் இதனை கொரோனா நோயாளி களுக்கும் செலுத்தலாம் என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சார்ஸ் நோய் அப்போது கொரோனாவைப் போலவே பலரை பாதித்து வந்த நிலையில் இந்த தடுப்பு மருந்து ஆரம்ப நிலையில் இருந்த நோயாளிகள் பலரை குணப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கொரோனா சுவாசக் குழாயை பாதிக்கும் நோய் என்பதால் இதனையும் இந்த தடுப்பு மருந்து குணப்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

4:57 AM IST
2 லட்சம் 'ரெம்டெசிவீர்' மருந்துக்கு 'ஆர்டர்'

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'ரெம்டெசிவீர்' மருந்தை கூடுதலாக இரண்டு லட்சம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் நோயின் தாக்கத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவீர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து முதலில் சென்னை ராஜிவ் காந்தி மற்றும் ஓமந்துாரார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதி பெற்று வழங்கப்பட்டது.
தற்போது தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கூடுதலாக இரண்டு லட்சம் மருந்துகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கை யில் மருந்துகள் பெறப்பட்டுள்ளன.மீதமுள்ள மருந்துகள் சில நாட்களுக்குள் பெறப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

3:54 AM IST
ஐதராபாத்தில் இருந்து கத்தார், அரபு எமிரேட்சிற்கு மீண்டும் விமான சேவை

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இருந்து கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மீண்டும் விமான சேவை துவக்கப்படுகின்றன.மேலும் துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பயணத்திற்கு முன்னதாக 96 மணி நேரம் / 72 மணி நேரம் (சில நாடுகளில்) கொரோனா தொற்றுக்கான சோதனை செய்திருக்க வேண்டும். அந்த சோதனையில் தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தியதற்கான சான்றிதழை அவசியம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறெனில் மட்டுமே பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

2:05 AM IST
கொரோனாவுக்கு சிகிச்சை: 25 ஆயிரம் 'ரெம்டிசிவிர்' மருந்துகள் சென்னை வருகை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் சென்னைக்கு நேற்று வந்தது.

2:00 AM IST
புனே மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனை தொடக்கம்

புனே சசூன் அரசு மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.இதில் 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக மருத்துவமனை டீன் டாக்டர் முரளிதர் தாம்பே தெரிவித்தார்.

12:49 AM IST
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குறைகிறது கொரோனா தொற்று

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று குறைந்து 3 மாதங்களுக்கு பின் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தொற்று பாதிப்பு தற்போது குறைந்தாலும், முழுமையாக முடியவில்லை என்பதால் கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தும் எண்ணம் இல்லை என விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட பெரும்பாலான கொரோனா தொற்றுகள் (சுமார் 27,000 பாதிப்புகள்) மற்றும் 849 கொரோனா இறப்புகள் ஆகியவற்றில் 90 சதவீதம் விக்டோரியா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. மேலும் இந்த ஆண்டில் மற்ற நாடுகளுடனான எல்லை மூடலை தொடரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

11:44 PM IST
அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முடிவு

ராஜஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலால் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக உயர்நீதிமன்ற நிர்வாகம் உத்தவு பிறப்பித்துள்ளது.

10:36 PM IST
கர்நாடகா - மஹா இடையே செப்.,22 முதல் பஸ் போக்குவரத்து

கர்நாடகா மஹாராஷ்டிரா இடையே செப்.,22 முதல் பஸ் போக்குவரத்து துவங்கும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

9:00 PM IST
கொரோனா தொற்றால் ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

ராஜஸ்தானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 11 மாவட்டங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

8:26 PM IST
கொரோனா பரவலுக்கு தப்லிகி ஜமாத் மாநாடும் ஒரு காரணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில், பலரும் பங்கேற்றதே காரணம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7:28 PM IST
சென்னையில் மேலும் 805 பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,21) அதிகபட்சமாக சென்னையில் 805 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும், ஈரோடில் 201 பேருக்கும், திருப்பூரில் 161 பேருக்கும், கடலூரில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 136 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 117 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது.


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 805 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,43,680 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 531 பேரும், திருப்பூரில் 374 பேரும், சேலத்தில் 361 பேரும், கடலூரில் 255 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், நாமக்கல்லில் 192 பேரும், திருவள்ளூரில் 188 பேரும், காஞ்சிபுரத்தில் 171 பேரும், நாகப்பட்டினத்தில் 149 பேரும், வேலூரில் 123 பேரும், கள்ளக்குறிச்சியில் 109 பேரும், கன்னியாகுமரியில் 103 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

7:15 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 4.91 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (செப்.,21) ஒரே நாளில் 5,492 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.91 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,341 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 3 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 174 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-108) மூலமாக, இன்று மட்டும் 80,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 65 லட்சத்து 55 ஆயிரத்து 328 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,260 பேர் ஆண்கள், 2,084 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,29,959 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,17,348 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,871 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,495 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6:30 PM IST
கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் விகிதம் இந்தியாவில் அதிகம்

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக 90 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனையடுத்து, கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் சதவீதம் 80 ஐ தாண்டியுள்ளது. இது உலகிலேயே அதிகம் ஆகும்.

4:14 PM IST
9 லட்சத்து 65 ஆயிரத்து 398 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 21 ம் தேதி ) மாலை ; 04: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 12 லட்சத்து 63 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 65 ஆயிரத்து 398 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 551 பேர் மீண்டனர்.

12:18 PM IST
9 லட்சத்து 65 ஆயிரத்து 097 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 21 ம் தேதி ) நன்பகல் ; 12: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 65 ஆயிரத்து 097 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 28 லட்சத்து 35 ஆயிரத்து 563 பேர் மீண்டனர்.

7:15 AM IST
2 கோடியே 28 லட்சத்து 17 ஆயிரத்து 541 பேர் மீட்பு

இன்று (செப்டம்பர்- 21 ம் தேதி ) காலை; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 12 லட்சத்து 23 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 64 ஆயிரத்து 762 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 28 லட்சத்து 17 ஆயிரத்து 541 பேர் மீண்டனர்.

6:35 AM IST
இந்தியாவின் 5 மாநிலங்களில் இருந்து 60 % பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

இந்தியாவில் 5 மாநிலங்களில் இருந்து 60 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். அதே நேரத்தில் அதே மாநிலங்களில் இருந்து 52 சதவீத நோய் பாதிப்புகளும் பதிவாகியதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

5:45 AM IST
குளிர்காலங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவும்

குளிர்காலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி, முன்பை விட அதி வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக சுகாதார வல்லுனர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

4:45 AM IST
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது.

2:03 AM IST
வழிகாட்டுதலுடன் பள்ளிகள் இன்று முதல் திறப்பு

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகள் இன்று(செப்.,21) திறக்கப்படுகின்றன.மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு, இன்று முதல், பள்ளிகளை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வகுப்புகள் துவங்குகின்றன.

11:48 PM IST
ஆக., மாதத்தில் நடந்த 2.39 கோடி கொரோனா சோதனைகள்

இந்தியாவில் ஆக., மாதத்தில் 2.39 கோடி கொரோனா சோதனைகள் நடத்தப் பட்டதாகவும், ஆன்டிஜென் சோதனை கருவிகளால், 1,24,17,396 சோதனை நடத்தப்பட்டதாகவும் சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10:05 PM IST
கர்நாடகாவில் செப்.,21 முதல் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகள் நடக்காது

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் செப்.21 முதல் பள்ளிகளில் வழக்கமான வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் செப்.,21ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி திறக்கப்படும். ஆனால் வழக்கமான வகுப்புகள் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பேசிய மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சுரேஷ்குமார், ‛மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட 9, 10,11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடக்காது. ஆனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள்.

ஆனால், வழக்கமான வகுப்புகள் நடக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் 10 லட்சம் புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்வார்கள். இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக செப்., மாதம் இறுதியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்' இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


9:10 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் 106 வயதான மூதாட்டி

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து 106 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார்.

8:30 PM IST
இந்தியாவில் ஒரே நாளில் 94,612 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 94,612 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 94,612 பேர் குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,03,043ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 79.68 சதவீதம் ஆக உள்ளது.

குணமடைந்தவர்களில் 60% பேர், தமிழகம், மஹா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., ஆகிய மாநிலங்களில் உள்ளனர். அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் பதிவான 92,605 கொரோனா பாதிப்புகளில், இந்த 5 மாநிலத்தில் இருந்து மட்டும் 52 சதவீதத்தினருக்கு தொற்று உறுதியானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:46 PM IST
சென்னையில் மேலும் 1,263 பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,20) அதிகபட்சமாக சென்னையில் 1,263 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 996 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 568 பேருக்கும், கடலூரில் 297 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 207 பேருக்கும், திருப்பூரில் 169 பேருக்கும், தஞ்சாவூரில் 162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும், ஈரோடில் 148 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,263 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,42,875 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 488 பேரும், சேலத்தில் 259 பேரும், கடலூரில் 248 பேரும், கள்ளக்குறிச்சியில் 204 பேரும், கன்னியாகுமரியில் 155 பேரும், வேலூரில் 150 பேரும், திருவள்ளூரில் 149 பேரும், நாகப்பட்டினத்தில் 140 பேரும், காஞ்சிபுரம், மதுரையில் தலா 135 பேரும், திருப்பூரில் 124 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

7:25 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 4.86 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (செப்.,20) ஒரே நாளில் 5,206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.86 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,514 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 2 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 174 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-108) மூலமாக, இன்று மட்டும் 86,073 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 64 லட்சத்து 74 ஆயிரத்து 656 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,409 பேர் ஆண்கள், 2,107 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,26,699 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,15,264 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 38 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,811 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,703 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 675 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 49 ஆயிரத்து 002 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 70 ஆயிரத்து 316 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:34 PM IST
3 கோடியே 10 லட்சத்து 22 ஆயிரத்து 401 பேர் பாதிப்பு

சென்னை : இன்று (செப்டம்பர்- 20 ம் தேதி ) மாலை; 04: 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 10 லட்சத்து 22 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 62 ஆயிரத்து 032 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 26 லட்சத்து 21 ஆயிரத்து 603 பேர் மீண்டனர்.

3:59 PM IST
கர்நாடக மாநில துணை முதல்வருக்கு கொரோனா

கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்வருமான அஸ்வத் நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தனது டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு இருந்தாலும், எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லை. கொரோனா அறிகுறி இல்லாத காரணத்தால், டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

12:40 PM IST
9 லட்சத்து 61 ஆயிரத்து 471 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 20 ம் தேதி ) மதியம் 12: 35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 9 லட்சத்து 92 ஆயிரத்து 855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 61 ஆயிரத்து 471 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 25 லட்சத்து 87 ஆயிரத்து 905 பேர் மீண்டனர்.

7:10 AM IST
2 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 767 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 20 ம் தேதி ) காலை 07: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 9 லட்சத்து 76 ஆயிரத்து 559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 60 ஆயிரத்து 872 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 767 பேர் மீண்டனர்.

6:33 AM IST
சபரிமலை சீசன்: ஒரு நாளைக்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி வரும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6:10 AM IST
2 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 823 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 20 ம் தேதி ) காலை 06: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 60 ஆயிரத்து 863 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 823 பேர் மீண்டனர்.

1:04 AM IST
வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பாதுகாப்பானது: ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தவிர்க்க வீடுகளில் தயாரித்து பயன்படுத்தப்படுகிற முக கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

11:57 PM IST
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: 3வதுகட்ட சோதனை புனேவில் அடுத்த வாரம் துவங்கும்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை அடுத்த வாரம் புனேவின் மருத்துவமனையில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:55 PM IST
தமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,19) ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.81 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 175 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-109) மூலமாக, இன்று மட்டும் 85,117 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 63 லட்சத்து 88 ஆயிரத்து 583 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.தமிழகத்தில் இன்று 83265 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 6190593 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.இன்று மட்டும் 5,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 ஆக உள்ளது.


இன்று மட்டும் கொரோனா பாதித்த 66 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,751 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,453 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் 987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 154624 பேர் சென்னையில் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 9,966 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

கோவையில் 562 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், சேலத்தில் 286 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8:28 PM IST
கொரோனா அச்சம் எதிரொலி :பார்லி.,கூட்டத்தொடர் விரைவில் முடிக்க முடிவு?

கொரோனா அச்சம் எதிரொலியாக திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே பார்லி.,கூட்டத்தொடரை முடித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

7:25 PM IST
வியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்

கொரோனா தொற்றுக்கு மத்தியில், வியட்நாம் 5 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவையை துவங்கியது.

4:50 PM IST
9 லட்சத்து 57 ஆயிரத்து 156 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 19 ம் தேதி ) மாலை 04: 45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 7 லட்சத்து 31 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 57 ஆயிரத்து 156 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 23 லட்சத்து 59 ஆயிரத்து 976 பேர் மீண்டனர்.

1:23 PM IST
3 கோடியே 7 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 19 ம் தேதி ) மதியம் 01: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 7 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 56 ஆயிரத்து 506 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரத்து 720 பேர் மீண்டனர்.

7:10 AM IST
2 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரத்து 074 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 19 ம் தேதி ) காலை 07: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 6 லட்சத்து 85 ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 55 ஆயிரத்து 725 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரத்து 074 பேர் மீண்டுள்ளனர்.

6:10 AM IST
2 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 964 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 19 ம் தேதி ) காலை 06: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 6 லட்சத்து 85ஆயிரத்து 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 55 ஆயிரத்து 694 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 964 பேர் மீண்டுள்ளனர்.

4:39 AM IST
ஆந்திரா, அசாமில் பள்ளிகளை திறக்க முடிவு

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில், நாளை மறுநாள்,(செப்.,21) பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3:56 AM IST
ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு

கொரோனா தடுப்பு மருந்து சோதனை உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலநாடுகள் கொரோனா தடுப்பு மருந்து சோதனை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மெசச்சுஸஸ்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஸ்டாப் கோவிட் என்ற தடுப்பு மருந்து சோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


2:04 AM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் ஊரடங்கினை அமல்படுத்த திட்டம்

பிரிட்டனில் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

11:30 PM IST
டிரம்ப் கூறுவதை நம்பாதீர்கள்! விஞ்ஞானிகள் கூறுவதை நம்புங்கள்

கொரோனா தொடர்பான உண்மைகளை அறிய டிரம்ப் கூறுவதை நம்பாதீர்கள் விஞ்ஞானிகள் கூறுவதை நம்புங்கள் என்று ஜனநாயாக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கூறியுள்ளார்.

10:36 PM IST
கொரோனா கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகளை வறுமையில் தள்ளுகிறது

கொரோனா தொற்றுநோயால் பல பரிமாண வறுமையில் ( Multi-dimensional Poverty ) வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று யுனிசெப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

8:33 PM IST
கொரோனா பரவலால் இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகளற்ற ஊரடங்கு

கொரோனா பரவல் காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு, 'மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கினை தவிர்க்கமுடியாது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7:55 PM IST
சென்னையில் கொரோனா டிஸ்சார்ஜ் 1.40 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (செப்.,18) அதிகபட்சமாக சென்னையில் 963 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சமானது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,53,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 543 பேருக்கும், சேலத்தில் 288 பேருக்கும், செங்கல்பட்டில் 265 பேருக்கும், திருவள்ளூரில் 258 பேருக்கும், கடலூரில் 254 பேருக்கும், திருப்பூரில் 187 பேருக்கும், தஞ்சாவூரில் 162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 151 பேருக்கும், திருவண்ணாமலையில் 148 பேருக்கும், விழுப்புரத்தில் 139 பேருக்கும், திருச்சியில் 136 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 963 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,40,633 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 350 பேரும், செங்கல்பட்டில் 346 பேரும், கடலூரில் 292 பேரும், சேலத்தில் 269 பேரும், திருச்சியில் 218 பேரும், திருப்பூரில் 189 பேரும், காஞ்சிபுரத்தில் 174 பேரும், நாமக்கல்லில் 172 பேரும், ஈரோடில் 171 பேரும், மதுரையில் 165 பேரும், கிருஷ்ணகிரியில் 139 பேரும், வேலூரில் 135 பேரும், திண்டுக்கலில் 131 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

7:32 PM IST
தமிழகத்தில் 4.75 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,18) ஒரே நாளில் 5,525 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.75 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,478 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 10 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 175 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-109) மூலமாக, இன்று மட்டும் 85,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 63 லட்சத்து 03 ஆயிரத்து 466 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,293 பேர் ஆண்கள், 2,194 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,19,939 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,10,939 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்து 717 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 33 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,685 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,506 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 448 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 39 ஆயிரத்து 449 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 69 ஆயிரத்து 011 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:40 PM IST
3 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரத்து 219 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 18 ம் தேதி ) மாலை 05: 35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 51 ஆயிரத்து 183 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 20 லட்சத்து 64 ஆயிரத்து 876 பேர் மீண்டுள்ளனர்.

11:19 AM IST
9 லட்சத்து 50 ஆயிரத்து 557 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 18 ம் தேதி ) காலை; 11: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 50 ஆயிரத்து 557 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 437 பேர் மீண்டுள்ளனர்.

7:10 AM IST
2 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 730 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 18 ம் தேதி ) காலை; 07: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 3 லட்சத்து 35 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 50 ஆயிரத்து 176 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 730 பேர் மீண்டுள்ளனர்.

6:10 AM IST
2 கோடியே 20 லட்சத்து 19 ஆயிரத்து 324 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 18 ம் தேதி ) காலை; 06: 10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 3 லட்சத்து 33 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 50 ஆயிரத்து 133 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 20 லட்சத்து 19 ஆயிரத்து 324 பேர் மீண்டுள்ளனர்.

2:18 AM IST
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் பணக்கார நாடுகள்

கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுவதாவும், பாதிக்கும் மேலான முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

12:29 AM IST
கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

10:03 PM IST
நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8:01 PM IST
ரஷ்ய கொரோனா தடுப்பூசி மருந்தால் 7ல் ஒருவருக்கு பக்கவிளைவு

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தால் 7 ல் ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்படுவது உறுதியாகி உள்ளது.

உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி மருந்துகள் பரிசோதனையில் இருந்து வருகின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி மருந்தினை பதிவு செய்தது. இம்மருந்திற்கு ‛ஸ்புட்னிக்-5' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்புட்னிக்-5 செலுத்தப்பட்ட 7 ல் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.உடல் சோர்வு, உடல்வெப்பம் அதிகரிப்பு, தசைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இத்தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

7:40 PM IST
வந்தே பாரத் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்

கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களில் 14.6 லட்சம் பேர், வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: செப்.,16 வரை,21 நாடுகளில் இருந்து 14.6 லட்சம் பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதற்காக அந்தநாடுகளில் இருந்து, நமது நாட்டில் 22 விமானங்களுக்கு விமானங்கள் வந்துள்ளன. 82 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதி வரை, இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இன்னும் 1,20,000 பேர் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

6:55 PM IST
சென்னையில் மேலும் 956 பேர் கொரோனாவிலிருந்து நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,17) அதிகபட்சமாக சென்னையில் 956 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 992 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 239 பேருக்கும், கடலூரில் 206 பேருக்கும், திருப்பூரில் 191 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 187 பேருக்கும், திருவண்ணாமலையில் 169 பேருக்கும், தஞ்சாவூரில் 155 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 956 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 518 பேரும், கோவையில் 364 பேரும், கடலூரில் 296 பேரும், செங்கல்பட்டில் 256 பேரும், வேலூரில் 245 பேரும், சேலத்தில் 242 பேரும், கன்னியாகுமரியில் 200 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:35 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4.70 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று (செப்.,17) ஒரே நாளில் 5,524 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.70 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,555 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,420 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 174 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-108) மூலமாக, இன்று மட்டும் 84,524 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 62 லட்சத்து 17 ஆயிரத்து 923 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,319 பேர் ஆண்கள், 2,241 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,16,646 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,08,745 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 59 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,618 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,610 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:43 PM IST
3 கோடியே 73 ஆயிரத்து 744 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 17 ம் தேதி ) மாலை; 04: 40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 73 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 45 ஆயிரத்து 817 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 660 பேர் மீண்டுள்ளனர்.

12:14 PM IST
9 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 17 ம் தேதி ) நன்பகல் ; 12: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 42 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரத்து 409 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 894 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 17 ம் தேதி )காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 25 ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 44 ஆயிரத்து 707 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 894 பேர் மீண்டுள்ளனர்.

5:45 AM IST
'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை'

'' கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது; உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,'' என, ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர் வலியுறுத்தியுள்ளார்.

11:44 PM IST
கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்!

கொரோனா சூழலில் உள்நாட்டு தேவைகளை முக்கியத்துவம் அளித்து கவச உடைகள், சானிடைசர்களுக்கான ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

11:05 PM IST
கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸி தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு

பத்மஸ்ரீ விருது வென்ற கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸியின் தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

10:40 PM IST
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா

தனக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: எனது உடல் பலவீனமாக இருப்பதாக உணர்ந்து மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டேன். அப்போது எனக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதனையடுத்து நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும். மற்றும் முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கட்கரி பதிவிட்டுள்ளார்.

10:05 PM IST
வந்தே பாரத் மிஷன் மூலமாக ரூ,2556.60 கோடி வருமானம்

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் ஆக.,31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரூ. 2556.60 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

9:37 PM IST
பிரான்சில் கொரோனா அதிகரிப்பால் 81 பள்ளிகள் மூடல்

பிரான்சில் உள்ள பள்ளிகளில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் 81 பள்ளிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

7:05 PM IST
தமிழகத்தில் 4.64 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,16) ஒரே நாளில் 5,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.64 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,645 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 7 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 170 ஆய்வகங்கள் (அரசு-65 மற்றும் தனியார்-105) மூலமாக, இன்று மட்டும் 84,567 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 61 லட்சத்து 33 ஆயிரத்து 399 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,489 பேர் ஆண்கள், 2,163 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,13,327 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,06,504 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,559 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,633 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 218 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 29 ஆயிரத்து 796 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 ஆயிரத்து 846 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10:25 AM IST
5.9 கோடி பரிசோதனைஇந்தியா முழுவதும் நேற்று (செப்.,15) ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 5,94,29,115 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

10:25 AM IST
பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 90,123 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு 50,20,360 ஆக உள்ளது. அதேபோல், 82,961 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,42,361 ஆக உள்ளது. தற்போது, 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1,290 பேர் உயிரிழந்ததால், கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,066 ஆக அதிகரித்துள்ளது.

7:15 AM IST
2 கோடியே 15 லட்சத்து 31 ஆயிரத்து 203 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 16 ம் தேதி )காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 97 லட்சத்து 17 ஆயிரத்து 934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 38 ஆயிரத்து 483 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 15 லட்சத்து 31 ஆயிரத்து 203 பேர் மீண்டுள்ளனர்.

5:50 AM IST
2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 442 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 16 ம் தேதி )காலை ; 05: 50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 38 ஆயிரத்து 375 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 442 பேர் மீண்டுள்ளனர்.

3:40 AM IST
கொரோனா தடுப்பு பணியாளரை தாக்கினால் 2 ஆண்டு சிறை நிச்சயம்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரியூட்டவும் எதிர்ப்பு தெரிவித்தால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேபோல, கொரோனா நோய் தடுப்பு பணியாளரை தாக்கினாலும், இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

12:10 AM IST
உலகிலேயே டில்லியில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம்

உலகிலேயே கொரோனா சோதனைகள் டில்லியில் தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

11:20 PM IST
இந்தோனேசியாவில் மாஸ்க் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை

இந்தோனேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாஸ்க் அணியாதவர்கள் விதிமீறல் குற்றங்களுக்காக கல்லறைகளை தோண்ட வேண்டும் என நுாதன தண்டனை வழங்கப்படுகிறது.

10:40 PM IST
ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா இறப்பு இல்லை

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை என அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:17 PM IST
4 மாநிலங்களில் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

9:16 PM IST
கொரோனா அச்சுறுத்தலால் மியான்மர் எல்லை நகரத்தை சீனா பூட்டுகிறது

மியான்மரில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால், மியான்மர் - சீனாவுடனான எல்லை நகரத்தை பூட்டுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா சோதனையை அதிகரித்து எல்லையில் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளது.

8:30 PM IST
அருணாச்சல் முதல்வர் பெமா காண்டுக்கு கொரோனா

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இருப்பினும் அறிகுறி எதுவும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

8:03 PM IST
பாக்.,கில் 5 மாத இடைவெளிக்கு பின் பள்ளி கல்லூரிகள் திறப்பு

பாகிஸ்தானில் ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

7:40 PM IST
ரூ. 9 ஆயிரம் கோடியை இழந்த தியேட்டர்கள்

நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

7:00 PM IST
கொரோனா தடுப்பூசி - இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை: பில்கேட்ஸ்

தடுப்பு மருந்து விநியோகத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. தடுப்பு மருந்துவிநியோகத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

6:30 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,530 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (செப்.,15) அதிகபட்சமாக சென்னையில் 1,530 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1.37 லட்சமானது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,50,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 485 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும், சேலத்தில் 292 பேருக்கும், திருவள்ளூரில் 283 பேருக்கும், கடலூரில் 268 பேருக்கும், திருப்பூரில் 262 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 198 பேருக்கும், திருவண்ணாமலையில் 189 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,530 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,37,685 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 523 பேரும், கோவையில் 437 பேரும், திருப்பூரில் 291 பேரும், திருவள்ளூரில் 268 பேரும், செங்கல்பட்டில் 236 பேரும், திருவண்ணாமலையில் 211 பேரும், சேலத்தில் 166 பேரும், விழுப்புரத்தில் 161 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:20 PM IST
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 5,735 பேர் நலம்

தமிழகத்தில் இன்று (செப்.,15) ஒரே நாளில் 5,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.58 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,687 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 170 ஆய்வகங்கள் (அரசு-65 மற்றும் தனியார்-105) மூலமாக, இன்று மட்டும் 80,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 60 லட்சத்து 48 ஆயிரத்து 832 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,484 பேர் ஆண்கள், 2,213 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,09,838 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,04,341 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,735 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 40 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,502 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,806 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 118 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 24 ஆயிரத்து 933 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 ஆயிரத்து 157 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:01 PM IST
2 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 15 ம் தேதி ) மாலை ; 05: 00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 33 ஆயிரத்து 424 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 12 லட்சத்து 99 ஆயிரத்து 062 பேர் மீண்டுள்ளனர்.

1:57 PM IST
9 லட்சத்து 32 ஆயிரத்து 937பேர் பலி

இன்று (செப்டம்பர்- 15 ம் தேதி ) மதியம் ; 01: 50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 94 லட்சத்து 59 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 32 ஆயிரத்து 937பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 12 லட்சத்து 86 ஆயிரத்து 937 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 12 லட்சத்து 69 ஆயிரத்து 459 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 15 ம் தேதி ) காலை; 07:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 94 லட்சத்து 35 ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 32 ஆயிரத்து 431 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 12 லட்சத்து 69 ஆயிரத்து 459 பேர் மீண்டுள்ளனர்.

4:40 AM IST
கொரோனா நெருக்கடி: எம்.பி.,க்கள் சம்பளம் பிடித்தம்

கொரோனா நெருக்கடி காலத்தில் ஏற்படும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய, எம்.பி.,க்களின் சம்பளத்தில், 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் ஆனது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. அடுத்த ஒரு ஆண்டிற்கு, எம்.பி.,க்களின் சம்பளத்தில் இருந்து, 30 சதவீதம் பிடித்தம் செய்து வழங்குவதற்கான மசோதாவை, லோக்சபாவில், மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தாக்கல் செய்தார்.

2:00 AM IST
கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் எச்சரிக்கை அவசியம்

தெலுங்கானாவில் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது. ஆயினும் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு தனிநபர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெலங்கானா மாநிலத்தின் மூத்த பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

11:18 PM IST
கொரோனா தடுப்பூசி போட 5 வருடங்கள் ஆகலாம்: சீரம் நிறுவன தலைவர்

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 5 வருடங்கள் வரை ஆகலாம் என்று சீரம் நிறுவன தலைவர் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

10:12 PM IST
மேற்கு வங்கத்தில் கொரோனா குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது முன்பை விட குறைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

9:02 PM IST
டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

8:46 PM IST
5 மாநிலங்களில் இருந்து 60% கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரதுறை

இந்தியாவின் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரில் 60 சதவீதம் மஹாராஷ்டிரா உள்ளிட்ட 5 முக்கிய மாநிலங்களில் இருந்து பதிவாகுவதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளில் 60 % க்கும் அதிகமானவை மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரதுறை இன்று (செப்.,14) தெரிவித்தது. இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதமும் 78 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

6:55 PM IST
சென்னையில் இதுவரை 1.36 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (செப்.,14) அதிகபட்சமாக சென்னையில் 940 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1.36 லட்சமானது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 498 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், கடலூரில் 296 பேருக்கும், திருவள்ளூரில் 294 பேருக்கும், திருவண்ணாமலையில் 222 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 167 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 940 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,36,155 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 448 பேரும், கடலூரில் 435 பேரும், திருவள்ளூரில் 330 பேரும், செங்கல்பட்டில் 323 பேரும், மதுரையில் 287 பேரும், திருவண்ணாமலையில் 278 பேரும், சேலத்தில் 233 பேரும், ராணிப்பேட்டையில் 145 பேரும், விழுப்புரத்தில் 144 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:34 PM IST
தமிழகத்தில் 4.5 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று (செப்.,14) ஒரே நாளில் 5,799 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.53 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,742 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 170 ஆய்வகங்கள் (அரசு-65 மற்றும் தனியார்-105) மூலமாக, இன்று மட்டும் 80,123 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 59 லட்சத்து 68 ஆயிரத்து 209 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,153 பேர் ஆண்கள், 2,599 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,06,354 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,02,128 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 53 பேர் உயிரிழந்தனர். அதில், 19 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,434 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,912 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 006 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 20 ஆயிரத்து 043 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 66 ஆயிரத்து 462 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:03 PM IST
9 லட்சத்து 29 ஆயிரத்து 066 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 14 ம் தேதி ) மாலை; 05:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 92 லட்சத்து 17 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 29 ஆயிரத்து 066 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 816 பேர் மீண்டுள்ளனர்.

11:11 AM IST
9 லட்சத்து 28 ஆயிரத்து 290 பேர் பலி

சென்னை : இன்று (செப்டம்பர்- 14 ம் தேதி ) காலை ; 11:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 91 லட்சத்து 85 ஆயிரத்து 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 28 ஆயிரத்து 290 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 029 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 10 லட்சத்து 20 ஆயிரத்து 920 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 14 ம் தேதி ) காலை ; 07:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 91 லட்சத்து 75 ஆயிரத்து 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 27 ஆயிரத்து 986 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 10 லட்சத்து 20 ஆயிரத்து 920 பேர் மீண்டுள்ளனர்.

6:40 AM IST
கோல்கட்டாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் இன்று ( செப்.,14) பயணிகள் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

6:30 AM IST
டில்லியில் ஜிம்கள் மற்றும் யோகா நிலையங்களுக்கு அனுமதி

டில்லியில் ஜிம்கள் மற்றும் யோகா நிலையங்களுக்கு இன்று ( செப்.14) முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5:45 AM IST
ஆக்ஸ்போர்டு வைரஸ் தடுப்பூசி 3வது கட்ட பரிசோதனை துவக்கம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள், பிரிட்டனில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.


11:44 PM IST
ஐஐடி கான்பூர் மாணவர்கள் உருவாக்கிய சூப்பர் ஆக்டிவேட் கார்பன் மாஸ்க்

ஐஐடி கான்பூர் மாணவர்கள் சூப்பர் ஆக்டிவேட் கார்பனை பயன்படுத்தி பல்நோக்கு திறன் கொண்ட மாஸ்க்குகளை உருவாக்கி உள்ளனர்.இந்த கார்பன் துகள்கள் துர்நாற்றத்தை உருவாக்கும் துர்நாற்ற துகள்களை வைத்திருக்கின்றன மற்றும் அவற்றை வேதியியல் செயல்முறையின் கீழ் உறிஞ்சுகின்றன. கார்பன் சார்ஜ் செய்யப்பட்டு தயாரிக்கப்படும் போது மாறுகிறது. எனவே இது உடலுக்கு தீங்கு விளைவிப்ப தில்லை. அதே நேரத்தில், மாஸ்க் வெளிப்புற அடுக்கு எலக்ட்ரோசார்ஜ் செய்யப் பட்ட நானோதுகள்களின் பூச்சுடன் பூசப்பட்டுள்ளது. அதன் மீது வைரஸ் வெளிப்படும் போது பயனற்றதாகி விடும்.

10:05 PM IST
ஐஐடி கான்பூர் மாணவர்கள் உருவாக்கிய சூப்பர் ஆக்டிவேட் கார்பன் மாஸ்க்

ஐஐடி கான்பூர் மாணவர்கள் சூப்பர் ஆக்டிவேட் கார்பனை பயன்படுத்தி பல்நோக்கு திறன் கொண்ட மாஸ்க்குகளை உருவாக்கி உள்ளனர்.இந்த கார்பன் துகள்கள் துர்நாற்றத்தை உருவாக்கும் துர்நாற்ற துகள்களை வைத்திருக்கின்றன மற்றும் அவற்றை வேதியியல் செயல்முறையின் கீழ் உறிஞ்சுகின்றன. கார்பன் சார்ஜ் செய்யப்பட்டு தயாரிக்கப்படும் போது மாறுகிறது. எனவே இது உடலுக்கு தீங்கு விளைவிப்ப தில்லை. அதே நேரத்தில், மாஸ்க் வெளிப்புற அடுக்கு எலக்ட்ரோசார்ஜ் செய்யப் பட்ட நானோதுகள்களின் பூச்சுடன் பூசப்பட்டுள்ளது. அதன் மீது வைரஸ் வெளிப்படும் போது பயனற்றதாகி விடும்.

9:32 PM IST
கொரோனாவிலிருந்து மீண்ட கர்நாடகத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்.

கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்திலுள்ள கடர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம்மா லிங்கனகவுடா ஹயர்கவுடர். இவருக்கு 105 வயதாகிறது. இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டதால். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இவருக்கு வேறு எந்த நோய்த் தொந்தரவும் இல்லை. மேலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க விருப்பம் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கமலம்மா. இவருடைய பேரன் ஸ்ரீனிவாஸ் ஹியாதி மருத்துவர் என்பதால் வீட்டிலிருந்தபடிலேய சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதியானது.


8:31 PM IST
கொரோனா நோயாளிகளுக்கு 80 % படுக்கைகளை ஒதுக்குங்கள்

டில்லியில் கொரோனா நோயாளிகளுக்கு 80 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு அறிவித்துள்ளது.

8:07 PM IST
2021 முதல் காலாண்டிற்குள் கோவிட் 19 க்கான மருந்து

2021-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கோவிட் 19-க்கான மருந்து அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கோவிட்-19 மருந்து அறிமுகப்படுத்துவதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இது தயாராக இருக்கலாம். தடுப்பூசி மருந்துகளை தனி மனிதர்களிடம் சோதனை நடத்துவதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி பாதுகாப்பு , செலவு, தேவை, உற்பத்திக்கான காலக்கெடு போன்றவை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்தியாவில் பல தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகிறது. அது குறித்து தற்போது எதையும் கணிக்க முடியாது. சோதனை முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் உற்பத்தி துவக்கப்படும். வரும் 2021-ம் ஆண்டு முதல் காலாண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படும். தடுப்பூசி தயாரானால் அது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும்.

7:30 PM IST
ஆஸியில் கொரோனா ஊரடங்கை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளை காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கடந்த 6 வாரங்களாக கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரின் மையப்பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பழங்களை வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய 176 பேரிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கை தளர்த்துவதற்கு போராடுவதால் பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதாக போலீசார் தெரிவித்தனர்.இதுவரை ஆஸியில் 26,651 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 810 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தினசரி பாதிப்பு 700 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஆஸியில் 44 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.

6:30 PM IST
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 4.47 லட்சம் பேர் மீண்டனர்

தமிழகத்தில் இன்று (செப்.,13) ஒரே நாளில் 5,717 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.47 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 74 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,381 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,012 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 84, 308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மட்டும் 82, 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,01,399 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:42 PM IST
9 லட்சத்து 24 ஆயிரத்து 915 பேர் பலி

சென்னை : இன்று (செப்டம்பர்- 13 ம் தேதி ) மாலை ; 03:35 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரத்து 954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 24 ஆயிரத்து 915 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 228 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 8 லட்சத்து 209 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 13 ம் தேதி ) காலை ; 07:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 89 லட்சத்து 31 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 24 ஆயிரத்து 080 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 8 லட்சத்து 209 பேர் மீண்டுள்ளனர்.

6:20 AM IST
2 கோடியே 7 லட்சத்து 99 ஆயிரத்து 605 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 13 ம் தேதி ) காலை ; 06:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரத்து 098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 24 ஆயிரத்து 058 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 7 லட்சத்து 99 ஆயிரத்து 605 பேர் மீண்டுள்ளனர்.

5:50 AM IST
தாஜ்மஹால் செப்.,21ல் திறப்பு: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

தாஜ்மஹால் வரும் செப்.,21ல் திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் கடந்த மார்ச் 25 முதல் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் அதை பார்வையிட சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்

1:08 AM IST
கொரோனா தடுப்பூசிக்கு தயார்: சவாலை ஏற்றார் இவாங்கா டிரம்ப்

'அமெரிக்கா கண்டுபிடிக்கும் புதிய கொரோனா தடுப்பூசி மருந்தை என் உடலில் செலுத்திக் கொள்ள தயாராக உள்ளேன்'' என அந்நாட்டு அதிபர் டிரம்பின் மகளும் அவரது ஆலோசகருமான இவாங்கா தெரிவித்துள்ளார்.

11:07 PM IST
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: பரிசோதனையை மீண்டும் தொடங்க பிரிட்டன் அனுமதி!

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் ஒருவருக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தியதால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பரிசோதனை தொடங்க பிரிட்டன் அரசு அனுமதி தந்துள்ளது.

9:06 PM IST
செப்., இறுதிக்குள் விமான சேவைக்கான முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினசரி விமானங்களுக்கான முன்பதிவு செப்.,மாத இறுதிக்குள் தொடங்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

7:45 PM IST
கோவாக்சின் தடுப்பூசி சோதனை: முதல் கட்டத்தில் வெற்றி

கோவாக்சின் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல விளைவுகள் கிடைத்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனமும் ஐ.எம்.சி.ஆர்., எனப்படும் இந்திய மருத்து கவுன்சிலும் இணைந்து கொரோன தடுப்பூசி மருந்தாக கோவாக்சினை தயாரித்துள்ளன. இம்மருந்து நாடு முழுவதும் 12 பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 20 செம்முகக் குரங்குகளை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. 20 குரங்குகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அனைத்து குரங்குளிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7:15 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,215 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (செப்.,12) அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 978 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 428 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும், செங்கல்பட்டில் 267 பேருக்கும், திருப்பூரில் 256 பேருக்கும், கடலூரில் 253 பேருக்கும், விழுப்புரத்தில் 175 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 153 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,215 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 612 பேரும், கோவையில் 495 பேரும், திருவள்ளூரில் 342 பேரும், திருவண்ணாமலையில் 235 பேரும், செங்கல்பட்டில் 233 பேரும், சேலத்தில் 225 பேரும், திருவாரூரில் 222 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:55 PM IST
தமிழகத்தில் மேலும் 6,227 பேர் கொரோனாவிலிருந்து நலம்

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,12) ஒரே நாளில் 6,227 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.41 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 649 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 76 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,307 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,110 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

12:05 PM IST
9 லட்சத்து 19 ஆயிரத்து 797 பேர் பலி

சென்னை : இன்று (செப்டம்பர்- 12 ம் தேதி ) நன்பகல்; 12:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 86 லட்சத்து 63 ஆயிரத்து 3042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 19 ஆயிரத்து 797 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 5 லட்சத்து 87 ஆயிரத்து 770 பேர் மீண்டுள்ளனர்.

6:55 AM IST
2 கோடியே 56 லட்சத்து 5 ஆயிரத்து 594 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (செப்டம்பர்- 12 ம் தேதி ) காலை; 06:55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 86 லட்சத்து 41 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 18 ஆயிரத்து 973 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 56 லட்சத்து 5 ஆயிரத்து 594 பேர் மீண்டுள்ளனர்.

5:45 AM IST
2 கோடியே 56 லட்சத்து 323 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 12 ம் தேதி ) காலை; 05:45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 86 லட்சத்து 37 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 18 ஆயிரத்து 898 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 56 லட்சத்து 323 பேர் மீண்டுள்ளனர்.

4:45 AM IST
மதுரையில் 12 வது முறையாக யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக துாத்துக்குடி யாசகர் பூல்பாண்டியன் 65, மதுரை கலெக்டர் வினய்யிடம் நேற்று 12வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். இதுவரை ரூ.1.20 லட்சம் வழங்கியுள்ளார்.

2:42 AM IST
தெலுங்கானா: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிரம்

தெலுங்கானாவில் கொரோனா நோயாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில சுகாதாரதுறை முயன்று வருவதாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கூறினார்.

12:37 AM IST
மியான்மர் எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துகிறது தாய்லாந்து

மியான்மரில் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தாய்லாந்து அதன் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறது.கடந்த வாரம் வரை, உள்நாட்டு பாதிப்புகள் இல்லாமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்தது. மியான்மரில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது, பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடுவது, உள்நாட்டு விமான சேவை மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கையை செயல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

11:38 PM IST
இந்திய கிராமங்களில் 69.4 % கொரோனா பாதிப்பு ; தேசிய செரோ கணக்கெடுப்பு

இந்திய கிராமங்களில் 69.4 சதவீதத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தேசிய செரோ கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது, வயது வந்தோரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் 2020 மே நடுப்பகுதியில் கொரோனாவிற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகும் குறைவான பாதிப்பு இந்தியா தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதைக் குறிக்கிறது.

9:53 PM IST
மஹாவில் இதுவரை கொரோனாவில் 7,15,023 பேர் குணமடைந்தனர்

மஹாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது.மஹாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மஹாராஷ்டிராவில் மேலும் 24,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,15,681 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 393 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,724 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,15,023 ஆக உள்ளது. மேலும் 2,71,566 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8:54 PM IST
தமிழகத்தில் இன்று மட்டும் 6,006 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று(செப்.,11) மட்டும் 6,006 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதையடுத்து இதுவரை மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,591ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 5,519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,5916ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 77 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,321 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 6,006 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 4,35,422ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 987 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு 2,942 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,593ஆக அதிகரித்துள்ளது.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12 வது நாளாக 5 ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு பதிவாகி உள்ளது.

4:50 PM IST
2 கோடியே 83 லட்சத்து 63 ஆயிரத்து 561 பேர் பாதிப்பு

சென்னை : இன்று (செப்டம்பர்- 11 ம் தேதி ) மாலை; 04:45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 83 லட்சத்து 63 ஆயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 14 ஆயிரத்து 469 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 694 பேர் மீண்டுள்ளனர்.

11:43 AM IST
9 லட்சத்து 13 ஆயிரத்து 930 பேர் பலி

சென்னை : இன்று (செப்டம்பர்- 11 ம் தேதி ) காலை; 11:40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 13 ஆயிரத்து 930 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 776 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 3 லட்சத்து 31 ஆயிரத்து 838 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 11 ம் தேதி ) காலை; 07:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 83 லட்சத்து 16 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 13 ஆயிரத்து 284 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 3 லட்சத்து 31 ஆயிரத்து 838 பேர் மீண்டுள்ளனர்.

6:05 AM IST
2 கோடியே 3 லட்சத்து 26 ஆயிரத்து 912 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 11 ம் தேதி ) காலை; 06:05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 13 ஆயிரத்து 204 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 3 லட்சத்து 26 ஆயிரத்து 912 பேர் மீண்டுள்ளனர்.

3:45 AM IST
4,300 பணியாளர்களை நீக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு


கொரோனாவால் போதிய வருமான இல்லாத காரணத்தால் தனது பணியாளர்களில் 4 ஆயிரத்து 300 பேரை நீக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2:15 AM IST
இந்தியாவில் 5.29 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 11.29 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

11:20 PM IST
ஆந்திர மாநிலத்தில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி

ஆந்திர மாநிலத்தில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆந்திராவின் மக்கள் தொகை 5.34 கோடி அதில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளதாக ‛செரோ' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 5000 பேரிடம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 19.7 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

11:20 PM IST
ஆந்திர மாநிலத்தில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி

ஆந்திர மாநிலத்தில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆந்திராவின் மக்கள் தொகை 5.34 கோடி அதில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளதாக ‛செரோ' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 5000 பேரிடம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 19.7 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

9:05 PM IST
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை இந்தியாவில் தற்காலிக நிறுத்தம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

8:10 PM IST
பேட்டரியால் இயங்கும் நவீன மாஸ்க்: தென்கொரிய நிறுவனம் அறிமுகம்

பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன மாஸ்க்கினை எல்.ஜி., என்ற தென்கொரிய நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கொரோனா பரவி வரும் சூழலில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகி விட்டது. சாதாரண மாஸ்கினால் பலருக்கு சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மாஸ்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியதும் உள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நவீன மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை வேலை செய்யக் கூடியதாக இந்த புது வகை மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரு முறை சார்ஜ் செய்தால் low power mode ல் எட்டு மணி நேரம் வரை செயல்படக் கூடியதாக இருக்கும் மாஸ்க் செயல் திறனை கூட்டும் பொழுது குறைந்த பட்சம் 2 மணி நேரம் வரை மாஸ்க் செயல்பட முடியும். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


7:15 PM IST
சென்னையில் மேலும் 1,009 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (செப்.,10) அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 440 பேருக்கும், சேலத்தில் 300 பேருக்கும், திருவள்ளூரில் 296 பேருக்கும், செங்கல்பட்டில் 279 பேருக்கும், கடலூரில் 263 பேருக்கும், விழுப்புரத்தில் 189 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 173 பேருக்கும், திருப்பூரில் 155 பேருக்கும், வேலூரில் 152 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று சேலத்தில் 567 பேரும், கோவையில் 545 பேரும், கடலூரில் 476 பேரும், செங்கல்பட்டில் 362 பேரும், கள்ளக்குறிச்சியில் 252 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும், தஞ்சாவூர் 197 பேரும், விழுப்புரத்தில் 171 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:54 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,185 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,10) ஒரே நாளில் 6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.29 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,522 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 6 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 163 ஆய்வகங்கள் (அரசு-64 மற்றும் தனியார்-99) மூலமாக, இன்று மட்டும் 85,473 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 56 லட்சத்து 30 ஆயிரத்து 323 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,377 பேர் ஆண்கள், 2,151 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,93,154 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,92,869 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,154 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 48,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:42 PM IST
9 லட்சத்து 8 ஆயிரத்து 651 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 10 ம் தேதி ) மாலை; 04:40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 80 லட்சத்து 56 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 8 ஆயிரத்து 651 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரத்து 196 பேர் மீண்டுள்ளனர்.

11:21 AM IST
9 லட்சத்து 8 ஆயிரத்து 002 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 10 ம் தேதி ) காலை; 11:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 80 லட்சத்து 26 ஆயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 8 ஆயிரத்து 002 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 939 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
2 கோடியே 91 ஆயிரத்து 745 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (செப்டம்பர்- 10 ம் தேதி ) காலை; 07:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 80 லட்சத்து 14 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 7 ஆயிரத்து 304 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 91 ஆயிரத்து 745 பேர் மீண்டுள்ளனர்.

6:15 AM IST
2 கோடியே 83 ஆயிரத்து 628 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (செப்டம்பர்- 10 ம் தேதி ) காலை; 06:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 80 லட்சத்து 11 ஆயிரத்து 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 7 ஆயிரத்து 248 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 83 ஆயிரத்து 628 பேர் மீண்டுள்ளனர்.

10:05 PM IST
5 மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் மேலும் 5,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப் பட்டுள்ளது.10 வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. மாநிலத்தில் 49,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,940 ல் இருந்து 4,80,524 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 80,401பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை 55,44,850 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. குணடமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,516 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணி்க்கை அதிகரித்து வருகிறது.கொரோனாவால் குணமடைந்தவர்களி்ன எண்ணிக்கை 4,16,715 ல் இருந்து 4,23,231 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனா பலி 2,910 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்மேலும் 993பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.சென்னையில் கொரோன பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,43,605-ல் இருந்து 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 78 பேர் பலியாகி உள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக உள்ளது. பிற மாவட்டங்களில் 9 வது நாளாக 5 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் கோவை 445, கடலூர் 344 செங்கல்பட்டு237, திருவள்ளூர் 281 சேலம் 279, நாகை 172, காஞ்சிபுரம் 171 தி.மலையில்142, வேலூர் 140 விழுப்புரம், நெல்லையில் தலா 139 கன்னியாகுமரியில்136 தஞ்சை 131 திருவாரூர் 127,திருப்பூர்120 புதுக்கோட்டை 118, கள்ளக்குறிச்சியில் 114 பேர்களுக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9:05 PM IST
பள்ளிகள் திறப்பது எப்போது :முதல்வர் இ.பி.எஸ்., விளக்கம்

பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளிதிறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும். என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார்.பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளிதிறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும்.கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 2013 -ல் ஆசிரியர்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

8:39 PM IST
டில்லியில் கொரோனா சோதனை:மருத்துவர் பரிந்துரை அவசியமில்லை

டில்லியில் கொரோனா சோதனை மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரை அவசியமில்லை என டில்லி அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

10:10 AM IST

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 74,894 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின்னர், வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 89,706 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,70,129 ஆக அ திகரித்துள்ளது. 73,890 பேர் உயிரிழந்துள்ளனர்.

7:15 AM IST
ஒரு கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 349 பேர் மீண்டனர்

சென்னை : இன்று (செப்டம்பர்- 9 ம் தேதி ) காலை; 07:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 878 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 349 பேர் மீண்டுள்ளனர்.

5:55 AM IST
ஒரு கோடியே 98 லட்சத்து 07 ஆயிரத்து 251பேர் மீண்டனர்

சென்னை : இன்று (செப்டம்பர்- 9 ம் தேதி ) காலை; 05:55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 77 லட்சத்து 19 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 826 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 98 லட்சத்து 07 ஆயிரத்து 251பேர் மீண்டுள்ளனர்.

5:38 AM IST
கொரோனா பரப்புவோருக்கு அபராதம்; மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு

கொரோனா தொற்றை பரப்பும் வகையில், நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க, மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

2:38 AM IST
மக்கள் அலட்சியம் : மத்திய அரசு கவலை

கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதாக, பெரும்பாலான மாநிலங்களில் இருந்து புகார்கள் வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்து உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவரும், 'நிடி ஆயோக்' அமைப்பின் உறுப்பினருமான, வி.கே.பால் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு, மக்களிடையே தயக்கமும், பயமும் நிலவுகிறது. இதில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கெல்லாம் கொரோனா அறிகுறி உள்ளதோ, அவர்கள், தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை அதிகரித்தால் மட்டுமே, கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.

12:38 AM IST
கொரோனா தடுப்பூசி தயாரிப்பு; இந்தியாவுடன் ரஷ்யா பேச்சு

'கொரோனா' வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பது மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்திய அரசுடன் ரஷ்யா தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது.

10:10 PM IST
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது.

9:45 PM IST
5 மாநிலங்களில் இருந்து 70 சதவீத கொரோனா இறப்புகள்

இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் இருந்து பதிவாகியதாக மத்திய சுகாதாரதுறை இன்று தெரிவித்துள்ளது.

9:05 PM IST
9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி

செப்.,21 முதல் 9ம் வகுப்பு முதல் 12 ம்வகுப்பு மாணவர்கள், சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது.இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 9-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம். பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.

7:25 PM IST
சென்னை, கோவையில் 2,184 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,08) அதிகபட்சமாக சென்னையில் 1,097 பேரும், கோவையில் 1,087 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 988 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும், திருவள்ளூரில் 277 பேருக்கும், திருவண்ணாமலையில் 242 பேருக்கும், திருவாரூரில் 198 பேருக்கும், சேலத்தில் 164 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும், திருப்பூரில் 142 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,097 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 1,087 பேரும், சேலத்தில் 552 பேரும், செங்கல்பட்டில் 392 பேரும், கடலூரில் 346 பேரும், விழுப்புரத்தில் 324 பேரும், திருவள்ளூரில் 232 பேரும், ஈரோடில் 226 பேரும், காஞ்சிபுரத்தில் 194 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:50 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,599 பேர் நலம்பெற்று டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,08) ஒரே நாளில் 6,599 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.16 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,682 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 2 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 163 ஆய்வகங்கள் (அரசு-64 மற்றும் தனியார்-99) மூலமாக, இன்று மட்டும் 83,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரத்து 277 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,310 பேர் ஆண்கள், 2,374 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,86,383 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,88,528 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 87 பேர் உயிரிழந்தனர். அதில், 43 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,012 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 50,213 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:34 PM IST
2 கோடியே 75 லட்சத்து 12 ஆயிரத்து 385 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 8ம் தேதி ) மாலை; 04:30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 75 லட்சத்து 12 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 97 ஆயிரத்து 242 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 96 லட்சத்து 08 ஆயிரத்து 137 பேர் மீண்டுள்ளனர்.

6:45 AM IST
ஒரு கோடியே 95 லட்சத்து 73 ஆயிரத்து 109 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 8ம் தேதி ) காலை 06:45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 74 லட்சத்து 79 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 96 ஆயிரத்து 421 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 95 லட்சத்து 73 ஆயிரத்து 109 பேர் மீண்டுள்ளனர்.

3:51 AM IST
3வது கட்ட பரிசோதனை செய்யாத சீன கொரோனா தடுப்பு மருந்து

மூன்று கட்ட பரிசோதனை செய்யப்படாமல் தடுப்பு மருந்தை விற்பனை செய்வது சரியல்ல என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் ராணுவ விஞ்ஞானிகள் மற்றொரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸின் மாறுபடும் டிஎன்ஏக்களுக்கு ஏற்ப இந்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது என சீனா அறிவித்துள்ளது.

10:35 PM IST
‛ஸ்புட்னிக்-5' தடுப்பூசி குறித்த தகவல்கள்: இந்தியாவிடம் ரஷ்யா வழங்கல்

ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து ஸ்புட்னிக்-5 குறித்த தகவல்களை அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் அம்மருந்தினை தயாரிக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்த நிலையில் அம்மருந்து குறித்த விவரங்களை அந்நாட்டின் கமாலேயா ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தியா கேட்டிருந்தது. தற்போது மருந்து குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து அனுப்பப்பட்ட நிலையில் இந்திய வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

9:13 PM IST
தமிழகத்தில் இன்று மட்டும் 5930 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று(செப்.,7) மட்டும் 5,930 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதையடுத்து இதுவரை மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,116ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 5,776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,69,256ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 89 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 5,930 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,116ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 949 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,603ஆக அதிகரித்துள்ளது.8:55 PM IST
உ.பி.,: கோரக்பூரில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை

உத்தரபிரதேசம், கோரக்பூரில் 300 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கொரோனா மருத்துவமனையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

8:30 PM IST
இந்தியாவில் 5 கோடியை நெருங்கும் கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவில் தினமும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11.70 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது வரை 4,95,51,507 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,20,362 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,33,33,904 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக., 3வது வாரம் தினமும் 7 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், செப்., முதல் வாரம் தினமும் 10 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:57 PM IST
மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி ; கெஜ்ரிவால்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைவதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

7:30 PM IST
பீஜிங் கண்காட்சியில் இடம் பெற்ற சீன கொரோனா தடுப்பூசி மருந்துகள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் நடந்த கண்காட்சியில் இடம் பெற்றன.

6:54 PM IST
பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா இல்லை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

5:02 PM IST
2 கோடியே 73 லட்சத்து 12 ஆயிரத்து 773 பேர் பாதிப்பு

சென்னை : இன்று (செப்டம்பர்- 7 ம் தேதி ) மாலை 05:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 73 லட்சத்து 12 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 93 ஆயிரத்து 463 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 93 லட்சத்து 83 ஆயிரத்து 476 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
ஒரு கோடியே 93 லட்சத்து 67 ஆயிரத்து 165 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 7 ம் தேதி ) காலை 07 :15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 72 லட்சத்து 83 ஆயிரத்து 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 87 ஆயிரத்து 305 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 93 லட்சத்து 67 ஆயிரத்து 165 பேர் மீண்டுள்ளனர்.

5:30 AM IST
பிரான்சில் ஐசியு படுக்கை நோயாளிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்பு

பிரான்சில் கொரோனா தொற்று தீவிரமாகி, அடுத்த இரண்டு வாரங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5:15 AM IST
மஹா.,வில் 45 சதவீதம் அதிகரித்த மருத்துவ கழிவுகள்

மஹா.,வில் கடந்த மே இறுதி மாதம் வரை மருத்துவ கழிவுகள் அதிகம் சேர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 45 சதவீதம் அதிகம் ஆகும்.

4:42 AM IST
சத்தீஸ்கரில் கொரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயம்

சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டண விகிதத்தை மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

11:42 PM IST
கேரள நிதியமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்(67) உள்பட 3,082 பேருக்கு கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, அமைச்சர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

8:50 PM IST
கோரோனா நோயாளி பலாத்காரம்: ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், காயம்குளத்தைச் சேர்ந்தவர் நவ்பல், 29. பத்தனம்திட்டாவில், '108' ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்த, 42 வயது மற்றும் அவரது, 19 வயது மகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றார்.

ஆறன்முளை அரசு மருத்துவமனையில், பெண் அனுமதிக்கப்பட்டார். அவரது மகளை அடூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பினர். செல்லும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்பல், அந்த பெண்ணை சிறிதும் இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின், மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் நவ்பலை கைது செய்தனர். அவர் உடனடியாக, பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கேரள மகளிர் நல ஆணையம் நேரடியாக வழக்கு பதிவு செய்தது.

8:20 PM IST
கொரோனா தரும் மன அழுத்தம்: - 1,000 அரசு மருத்துவர்கள் ராஜினாமா முடிவு!

கொரோனா பெருந்தொற்றை அரசு கையாளும் விதம் சரியில்லை, ஒழுங்கான ஊதியமும் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.


6:45 PM IST
சென்னையில் ஒரேநாளில் 1,100 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,06) அதிகபட்சமாக சென்னையில் 1,100 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 955 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும், செங்கல்பட்டில் 361 பேருக்கும், திருவண்ணாமலையில் 272 பேருக்கும், திருவள்ளூரில் 246 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 184 பேருக்கும், வேலூரில் 158 பேருக்கும், திருப்பூரில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 150 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,100 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று சேலத்தில் 519 பேரும், கோவையில் 473 பேரும், கடலூரில் 397 பேரும், செங்கல்பட்டில் 367 பேரும், காஞ்சிபுரத்தில் 198 பேரும், திருநெல்வேலியில் 197 பேரும், ஈரோடில் 191 பேரும், தஞ்சாவூரில் 175 பேரும், வேலூரில் 150 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் 4 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று (செப்.,06) ஒரே நாளில் 5,820 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,773 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 161 ஆய்வகங்கள் (அரசு-64 மற்றும் தனியார்-97) மூலமாக, இன்று மட்டும் 85,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 52 லட்சத்து 98 ஆயிரத்து 508 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,449 பேர் ஆண்கள், 2,334 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,79,704 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,83,747 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 04 ஆயிரத்து 186 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 58 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,836 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,458 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3:38 PM IST
பாலிவுட் நடிகருக்கு கொரோனா

பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனை, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டாக்டர்கள் அறிவுரைப்படி, வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2:56 PM IST
எம்.பி.,க்கு கொரோனா

ஹரியானா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீபிந்தர் சிங் ஹூடாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

9:55 AM IST
இந்தியாவில் 31 லட்சம் பேர் நலமடைந்தனர்

இந்தியாவில் நேற்று (செப். 05) ஒரே நாளில் புதிய உச்சமாக 90,633 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,13,812 ஆக உள்ளது. 8,62,320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (செப். 05) ஒரே நாளில் மட்டும் 1,065 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70,626 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவாக, 73,643 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31,80,866 ஆக உள்ளது.

6:05 AM IST
ஒரு கோடியே 91 லட்சத்து 46 ஆயிரத்து 599 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 6 ம் தேதி ) காலை 06 :05 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்து 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 82 ஆயிரத்து 988 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 91 லட்சத்து 46 ஆயிரத்து 599 பேர் மீண்டுள்ளனர்.


5:30 AM IST
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே வலியுறுத்தி உள்ளார்.


2:58 AM IST
மஹாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 165 போலீசார் பலி

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 165 போலீசார் பலியாகி உள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.


1:30 AM IST
தமிழகத்தில் இன்று வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும்

தளர்வு இல்லா ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால், வழக்கமான நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும்.

11:08 PM IST
‛ஸ்புட்னிக்-5' கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா விருப்பம்

ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தினை இந்தியாவில் தயாரிக்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

8:35 PM IST
திருப்பதி கோவிலில் செப்.30 ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து

திருப்பதி திருமலை கோவிலில் செப். 30 ம் தேதி வரையில் இலவச ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

8:15 PM IST
டில்லியில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது ; கெஜ்ரிவால்

டில்லியில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. கொரோனா இறப்பு விகிதம் குறைந்து, மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


7:30 PM IST
திரிபுராவில் கொரோனா நிலைமை குறித்த கண்காணிப்பு அவசியம்

திரிபுராவில் கொரோனா பாதித்த நோயாளிகள் அலட்சியம் காரணமாக இறக்கவில்லை என்பதை உறுதி செய்ய அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என மாநில சட்டத்துறை அமைச்சர் ரத்தன் லாத் நாத் தெரிவித்தார்.

7:15 PM IST
ஓட்டல்களில் 'ஏசி' வசதி தமிழக அரசு அனுமதி

உணவு விடுதிகள், 'ஏசி' வசதியுடன் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
தமிழகத்தில், உணவு விடுதிகள், தினமும் காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 'ஏசி' பயன்படுத்தக் கூடாது. உணவு விடுதியில் உள்ள மொத்த இருக்கையில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட, அனுமதிக்க வேண்டும் என, அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.இம்மாதம் முதல், வணிக வளாகங்கள், நகைக் கடைகள், துணிக் கடைகள், 'ஏசி' வசதியுடன் செயல்பட, அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, உணவு விடுதிகளும், 'ஏசி' வசதியுடன் செயல்பட, அனுமதி வழங்கக் கோரின; அதை ஏற்று, அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி, காலை 6:00 மணியிலிருந்து, இரவு 8:00 மணி வரை, 'ஏசி' வசதியுடன், உணவு விடுதிகள் செயல்படலாம்.

இரவு, 9:00 மணி வரை, உணவு பார்சல் வழங்கலாம். டீக்கடைகள், காலை 6:00 மணியிலிருந்து, இரவு 8:00 மணி வரை செயல்படலாம் என, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.

6:49 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,537 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,05) அதிகபட்சமாக சென்னையில் 1,537 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,40,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 545 பேருக்கும், கடலூரில் 434 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், சேலத்தில் 250 பேருக்கும், திருவள்ளூரில் 244 பேருக்கும், திருவண்ணாமலையில் 239 பேருக்கும், திருப்பூரில் 196 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,537 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,26,428 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 366 பேரும், செங்கல்பட்டில் 357 பேரும், கடலூரில் 314 பேரும், சேலத்தில் 276 பேரும், காஞ்சிபுரத்தில் 240 பேரும், திருவண்ணாமலையில் 225 பேரும், திருவாரூரில் 187 பேரும், ராணிப்பேட்டையில் 186 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,05) ஒரே நாளில் 5,859 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,861 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 9 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 160 ஆய்வகங்கள் (அரசு-64 மற்றும் தனியார்-96) மூலமாக, இன்று மட்டும் 81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 52 லட்சத்து 12 ஆயிரத்து 534 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 61 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,748 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,583 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:59 PM IST
தெலுங்கானா நிதியமைச்சருக்கு கொரோனா

தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஸ் ராவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அறிகுறி காணப்பட்டதால், பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்யும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார்.

10:15 AM IST
31 லட்சம் பேர் குணமடைந்தனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 70,072 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 7 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இதுவரை இல்லாத அளவாக, நேற்று ஒரே நாளில் 86 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 23 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8 லட்சத்து 46 ஆயிரத்து 395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும், 1,089 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.

7:15 AM IST
ஒரு கோடியே 88 லட்சத்து 86 ஆயிரத்து 463 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 5 ம் தேதி ) காலை; 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 67 லட்சத்து 76 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 78 ஆயிரத்து 185 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 88 லட்சத்து 86 ஆயிரத்து 463 பேர் மீண்டுள்ளனர்.

5:23 AM IST
ஒரு கோடியே 88 லட்சத்து 79 ஆயிரத்து 736 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 5 ம் தேதி ) காலை; 05 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 67 லட்சத்து 72 ஆயிரத்து 043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 78 ஆயிரத்து 061 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 88 லட்சத்து 79 ஆயிரத்து 736 பேர் மீண்டுள்ளனர்.

4:59 AM IST
அசாமில் கொரோனா தொற்றில் இருந்து 88,726 பேர் மீட்பு

அசாமில் கொரோனா தொற்றில் இருந்து 88,726 பேர் மீட்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

3:58 AM IST
தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 75 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 75 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

2:45 AM IST
செப்.,7 முதல் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் நொய்டாவில் மெட்ரோ சேவை

உ.பி.,யின் நொய்டாவில் செப்.,7 முதல் தரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறையின் கீழ் மெட்ரோ ரயில் சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

12:57 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.

10:19 PM IST
ஜார்க்கண்டில் கொரோனாவில் இருந்து 30,886 பேர் மீட்பு

ஜார்க்கண்டில் கொரோனா தொற்றில் இருந்து 30,886 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

9:30 PM IST
கர்நாடகா: ஒரே நாளில் மேலும் 6,161 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 6,161 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,74,196 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.29 சதவீதமாக உள்ளது.

9:15 PM IST
பார்லி.,யில் எம்.பி.,க்கள் அனுமதிக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் தான், எம்.பி.,க்களுக்கு பார்லி.,க்குள் அனுமதிக்கப்படுவர் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பார்லி., மழை கால கூட்டத்தொடர். செப்.,14ம் தேதி துவங்கிறது. இந்நிலையில், ஐசிஎம்ஆர் தயாரித்த வழிகாட்டு நெறிமுறைகளை லோக்சபாவும், ராஜ்யசபாவும் வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பார்லி., அமர்வு துவங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த பரிசோதனை முடிவு 'நெகடிவ்' என வர வேண்டும். அதற்கான சான்றிதழ் இருந்தால் தான் பார்லி., வளாகத்துக்குள் எம்.பி.,க்கள் அனுமதிக்கப்படுவர்.

8:45 PM IST
கேரளா: ஒரே நாளில் 2,716 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கேரளாவில் ஒரே நாளில் 2,716 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.மாநில அளவில் இதுவரை 1,97,937 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,80,743 பேர் வீடுகளிலும், தனிமை முகாம்களிலும் இருந்து வருகின்றனர். 17,194 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

8:10 PM IST
புதுச்சேரியில் கொரோனா மீட்பு விகிதம் 66 சதவீதமாக உயர்வு

புதுச்சேரியில் கொரோனா தொற்றில் இருந்து புதிதாக 395 பேர் மீட்கப்பட்டனர். இதனால் புதுச்சேரியில் மீட்பு விகிதம் 66 சதவீதமாக உயர்ந்துள்ளது.8:07 PM IST
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி 'ஸ்புட்னிக்-5' பாதுகாப்பானது என்று லான்செட் மருத்துவ இதழ் ஆய்வுக்குப் பின் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்பட்டவரின் உடலில் ஆன்டிபாடிஸை அதிகரிக்கிறது. எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படுத்தவில்லை. மொத்தம் 76 பேரில் 21 நாட்களுக்குள் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. 28 நாட்களுக்குள் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் டி செல்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு 42 நாட்களில் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை' இவ்வாறு அந்த அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:25 PM IST
அசாமில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் தண்டனை

அசாமில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என குவஹாத்தி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

6:45 PM IST
சென்னை: கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.24 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (செப்.,04) அதிகபட்சமாக சென்னையில் 1,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1.24 லட்சமானது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 992 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,39,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 595 பேருக்கும், கடலூரில் 499 பேருக்கும், செங்கல்பட்டில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 260 பேருக்கும், சேலத்தில் 239 பேருக்கும், திருவண்ணாமலையில் 216 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 182 பேருக்கும், தஞ்சாவூரில் 164 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,040 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,24,891 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 428 பேரும், செங்கல்பட்டில் 404 பேரும், விழுப்புரத்தில் 379 பேரும், காஞ்சிபுரத்தில் 330 பேரும், திருவள்ளூரில் 309 பேரும், சேலத்தில் 293 பேரும், கன்னியாகுமரியில் 225 பேரும், விருதுநகரில் 222 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:35 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,334 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (செப்.,04) ஒரே நாளில் 6,334 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.92 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 25 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 155 ஆய்வகங்கள் (அரசு-64 மற்றும் தனியார்-91) மூலமாக, இன்று மட்டும் 83,699 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 51 லட்சத்து 30 ஆயிரத்து 741 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 6,334 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 79 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,687 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

12:26 PM IST
8 லட்சத்து 73 ஆயிரத்து 825 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 4 ம் தேதி ) நன்பகல்; 12 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 73 ஆயிரத்து 825 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 86 லட்சத்து 65 ஆயிரத்து 737 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
ஒரு கோடியே 86 லட்சத்து 53 ஆயிரத்து 009 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 4 ம் தேதி ) காலை : 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 64 லட்சத்து 59 ஆயிரத்து 029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 72 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 86 லட்சத்து 53 ஆயிரத்து 009 பேர் மீண்டுள்ளனர்.

5:05 AM IST
மதுரை, கோவை, தூத்துக்குடிக்கு 7ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம்

மதுரை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை உட்பட முக்கிய நகரங்கள் இடையே, 13 ஜோடி ரயில்கள் இயக்க, வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில், வரும், 7ம் தேதியில் இருந்து, ரயில்கள் இயக்கப்பட உள்ளன.செங்கல்பட்டு -- திருச்சி உட்பட, முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வந்த, ஏழு ஜோடி ரயில்களுடன், சென்னை, எழும்பூரில் இருந்து,பாண்டியன், கன்னியாகுமரி, முத்துநகர், செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களும், இரு வழிகளிலும் இயக்கப்பட உள்ளன.

ஏற்கனவே, திருச்சி -- நாகர்கோவில் இடையே, தினமும் இயக்கப்பட்ட, சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி ரயிலையும், கோவை -- மயிலாடுதுறை இடையே, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட, ஜனசதாப்தி ரயிலையும், அதே வழித்தடத்தில் மீண்டும் இயக்கவும், தெற்கு ரயில்வே ஆலோசித்துஉள்ளது.இது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.

3:30 AM IST
கர்நாடகாவில் மேலும் 7,122 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் மேலும் 7,122 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.68 லட்சமாக உயர்ந்தது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து மீ்ண்டவர்களின் விகிதம் 70.27 சதவீதமாக உள்ளது.

2:28 AM IST
அமெரிக்காவில் வரலாறு காணாத நிதிப்பற்றாக்குறைக்கு வாய்ப்பு

'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், அமெரிக்காவில், 242 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

1:30 AM IST
கேரளா: ஒரே நாளில் 1,950 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,950 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,728 ஆக உயர்ந்தது. கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.5 சதவீதமாக உள்ளது.

12:10 AM IST
உலக சுகாதார அமைப்புக்கு பணம் தர அமெரிக்கா மறுப்பு

வளர்ந்த நாடுகள், உலக சுகாதார அமைப்புக்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பிரச்னையை சரிவர கையாளவில்லை என, குற்றஞ்சாட்டி, அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதாக, ஜூலையில் அறிவித்தது. அதனால், உலக சுகாதார அமைப்புக்கு தர வேண்டிய நிலுவையில், 465 கோடி ரூபாய் தான் தர முடியும், என, அமெரிக்கா கறாராக தெரிவித்துள்ளது.

10:49 PM IST
அமெரிக்காவில் நவ., 1 முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டம்!

மாநில கவர்னர்களுக்கு, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இயக்குனர், நவம்பர் முதல் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகிக்க தயார் நிலையில் இருக்கும் படி கடிதம் எழுதியுள்ளார்.'அக்டோபர் ஆச்சரியம்' மூலம் பதிலடி தர டிரம்ப் முடிவு செய்துள்ளார். 'அக்டோபர் ஆச்சரியம்' என்ற வாசகம் அமெரிக்க அரசியலில் பிரபலமானது. அதிபர் தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான செய்திகளை வேண்டுமென்றே உருவாக்குவது அல்லது தன்னிச்சையாக நடப்பதை அப்படி அழைப்பார்கள். டிரம்ப் அதற்காக கொரோனா தடுப்பூசியை கையிலெடுத்துள்ளார். தேர்தலுக்கு முன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து விநியோகிக்க சுகாதாரத் துறையினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

9:30 PM IST
புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது கொரோனா: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவல் காலம், அனைவரையும் முடக்கிப் போட்டாலும், புதிய சிந்தனையை விதைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்க - இந்திய உத்திகள் திட்டமிடல், பங்களிப்பு மாநாட்டில் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றியதாவது: கொரோனா அனைவரையும் முடக்கி போட்டாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது. இதுவரை இல்லாத நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதிய சிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதவள ஆற்றலை நமது மேம்பாட்டுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற புதிய சிந்தனையை விதைத்துள்ளது.

2020ம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் துவக்கத்தில் நாம் நினைத்தோமா? இப்படியான இக்கட்டான சூழல் ஏற்படும் என நினைத்திருக்க மாட்டோம். உலகையே உலுக்கி இருக்கும் கொரோனா பரவல், தனிமனிதன் ஒவ்வொருவரையும் கடுமையாக பாதித்திருக்கிறது. கொரோனா காலம், மனிதவள ஆற்றலை எப்படி பயன்படுத்தலாம் என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது.இந்தியாவில் மருத்துவ வசதிகளை விரைவாக உருவாக்கியதால், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் விகிதமும் உயர்ந்து வருகிறது. கொரோனா பலவிவகாரங்களை பாதித்துள்ள போதும், 130 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை பாதிக்க முடியவில்லை. உலகிலேயே மிகப்பெரிய வீட்டு வசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவ வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது எடுக்கப்படும் நடவடிக்கை, இந்தியாவை நாளை வளம் மிக்கதாக மாற்றுவதுடன், தற்சார்பு இந்தியா உருவாக அடித்தளமிடும். வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

8:25 PM IST
யாசகம் பெற்று 11வது முறையாக ரூ.10,000 கொரோனா நிதி!

யாசகம் பெற்று, 11வது முறையாக, ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.இவர், மே முதல் யாசகம் பெற்று சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று பதினோறாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். கொரோனா நிதியாக இதுவரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வழங்கிய அவரை பலரும் பாராட்டினர்.

7:17 PM IST
சிகிச்சையில் உள்ளோரை விட குணமடைந்தவர்கள் 3.5 மடங்கு அதிகம்

கொரோனா வைரசால் சிகிச்சை பெறுபவர்களை விட 3.5 மடங்கு பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், இந்தியாவில், கொரோனாவில் இருந்து 29.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இது தற்போது சிகிச்சையில் பெறுபவர்களை(8,15,538) விட 3.5 மடங்கு அதிகம். நேற்று ஒரே நாளில், அதிகபட்சமாக 68,584 பேர் நலமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.

கொரோனா பாதிப்பில், நாட்டில், தமிழகம், உ.பி., கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தான் 61 சதவீதம் பேர் உள்ளனர். அதேபோல், ஆந்திரா, டில்லி, கர்நாடகா, தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் தான் 70 சதவீதம் பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

வாரந்தோறும் ஆந்திராவில் 13.7 சதவீதம், கர்நாடகாவில் 16.1 சதவீதம், மஹாராஷ்டிராவில் 6.8 சதவீதம், தமிழகத்தில் 23.9 சதவீதம், உ.பி.,யில் 17.1 சதவீதம் பேர் குணமடைந்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். ஆல்கஹால் கலந்த சானிடைசர் மூலம் கைகளை கழுவுவதுடன், அடிக்கடிமுகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

6:50 PM IST
சென்னையில் மீண்டும் ஆயிரத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த நிலையில், இன்று (செப்.,03) 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 968 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 593 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும், செங்கல்பட்டில் 378 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், சேலத்தில் 214 பேருக்கும், திருநெல்வேலியில் 163 பேருக்கும், ராணிப்பேட்டையில் 157 பேருக்கும், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் 150 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,444 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,23,851 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 486 பேரும், சேலத்தில் 350 பேரும், திருவள்ளூரில் 335 பேரும், செங்கல்பட்டில் 323 பேரும், கடலூரில் 315 பேரும், தேனியில் 211 பேரும், காஞ்சிபுரத்தில் 201 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் மேலும் 6,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,03) ஒரே நாளில் 6,110 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.86லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,892 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,855 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 37 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 154 ஆய்வகங்கள் (அரசு-64 மற்றும் தனியார்-90) மூலமாக, இன்று மட்டும் 82,901 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 48 லட்சத்து 80 ஆயிரத்து 769 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 6,110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 92 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,608 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 20 ஆயிரத்து 322 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 416 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 58 ஆயிரத்து 113 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:42 PM IST
8 லட்சத்து 68 ஆயிரத்து 034 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 3 ம் தேதி ) மாலை : 04 : 40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 62 லட்சத்து 9 ஆயிரத்து 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 68 ஆயிரத்து 034 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 84 லட்சத்து 68 ஆயிரத்து 775 பேர் மீண்டுள்ளனர்.

12:32 PM IST
8 லட்சத்து 67 ஆயிரத்து 374 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 3 ம் தேதி ) நன்பகல்: 12 : 30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 61 லட்சத்து 84 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 67 ஆயிரத்து 374 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 84 லட்சத்து 48 ஆயிரத்து 201 பேர் மீண்டுள்ளனர்.

7:15 AM IST
ஒரு கோடியே 84 லட்சத்து 35 ஆயிரத்து 707 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 3 ம் தேதி ) காலை : 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரத்து 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 66 ஆயிரத்து 614 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 84 லட்சத்து 35 ஆயிரத்து 707 பேர் மீண்டுள்ளனர்.

4:35 PM IST
கோவா முதல்வருக்கு கொரோனா

கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாமல் அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. அவர், வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

10:20 AM IST
இந்தியாவில் 29 லட்சம் பேர் நலமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,69,524 ஆக உள்ளது. 8,01,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். 29,019,09 பேர் நலமடைந்துள்ளனர். 66,333 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,357 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1045 பேர் உயிரிழந்துள்ளனர். 62,026 பேர் நலமடைந்துள்ளனர்.

7:15 AM IST
ஒரு கோடியே 81 லட்சத்து 86 ஆயிரத்து 186 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 2 ம் தேதி ) காலை : 07 : 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 58 லட்சத்து 91 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 60 ஆயிரத்து 301 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 81 லட்சத்து 86 ஆயிரத்து 186 பேர் மீண்டுள்ளனர்.

5:39 AM IST
'மெத்தனால் கலந்த சானிடைசரால் பார்வையிழப்பு ஏற்படும்'

கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்கும் சூழலில், நச்சுத்தன்மை மிக்க மெத்தனால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவதால் பார்வையிழப்பு போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுமென இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் தெரிவித்துள்ளது.


3:35 AM IST
2 லட்சம் கொரோனா உயிரிழப்பை தடுப்பது எப்படி!

முக கவசம், தனி மனித இடைவெளி பின்பற்றி இந்தியாவில் 2 லட்சம் கொரோனா உயிரிழப்பை தடுக்கலாம்.

1:35 AM IST
வடபழநி ஆண்டவர் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம்

சென்னையில், பிரசித்தி பெற்ற வடபழநி முருகன் கோவிலில், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, இன்று(செப்.,2) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் கோவிலின் பிரதான வாசலில், மாநகராட்சியின் மழை நீர் சேகரிப்பு பணி நடந்ததால், இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தினமும் காலை, 7:00 மணி முதல், காலை, 11:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்கு உட்பட்ட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.அறநிலையத்துறை அறிவுரைப்படி, கோவில் அலுவலகத்தின் பின்புறம், இலவச காலணி பாதுகாப்பகத்திற்கு எதிரில், தரிசனத்திற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும்.பக்தர்கள், தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மூலவரை தரிசித்து, கிழக்கு வாயில் வழியாக, வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.


10:23 PM IST
மஹா.,வில் கொரோனா மீட்பு விகிதம் 72.32 சதவீதமாக உயர்வு

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 72.32 சதவீதமாக உயர்ந்தது என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில் புதிதாக 15,765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. இதனால் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,08,306 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் ஒரே நாளில் 320 பேர் தொற்றால் பலியாகினர். மாநிலத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 24,903 ஆக உயர்ந்தது.மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 10,978 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் இதுவரை மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5,84,537 ஆக உயர்ந்தது. மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 72.32 சதவீதமாக உள்ளது.

9:20 PM IST
ஒடிசாவில் கொரோனாவில் இருந்து 77,286 பேர் மீட்பு

ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 77,286 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாநிலத்தில் புதிதாக 3,025 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. ஒடிசாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,541 ஆக அதிகரித்தது. மேலும்கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 503 ஆக உயர்ந்தது.ஒடிசாவில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 1,844 புதிய நோய்த் தொற்றுகள் கண்டறியப் பட்டன. அதேநேரத்தில் 1,181 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து இதுவரை 77,286 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 28,719 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,421 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தமாக நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 18,39,854 என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


8:55 PM IST
இந்தியாவில் ஆக., மாதத்தில் 54 சதவீதம் கொரோனா தொற்று பதிவு

இந்தியாவின் கொரோனா பாதிப்புகளில் கடந்த ஆக., மாதத்தில் 54 சதவீத பாதிப்புகள் பதிவாகியதாகவும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆகஸ்டில் கொரோனாதொற்று பெருமளவில் பாதித்துள்ளன. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில், கடந்த ஆக., மாதத்தில் 2 மில்லியன் நோய் தொற்று பதிவாகியுள்ளது. இது நாட்டின் பாதிப்புகளில் 54 சதவீதமாகும். ஆக., (ஒரே மாதத்தில்) மட்டும் 19,87,705 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக பரவியுள்ளது. நேற்று முன்தினம் (ஆக.,30) ம் தேதி இதன் விகிதம் 45.7 சதவீதமாகவும், இறப்பு விகிதத்தில் 50 % ஆக உள்ளன. மஹா.,வில் மட்டும் கிட்டத்தட்ட 21% பாதிப்பு மற்றும் 30% க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலமும் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் பாதிப்பு விகிதத்தை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவு செய்யப் பட்ட 78,512 பாதிப்புகளில் 70 சதவீதம் இந்த 7 மாநிலங்களில் இருந்து தான் என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7:16 PM IST
கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு 'கொரோனா'

கர்நாடகா பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று இவருக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருந்துள்ளது.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஸ்வரப்பா பூரண குணமடைய முதல்வர் எடியூரப்பா பிரார்த்திப்பாக தெரிவித்துள்ளார்.

6:30 PM IST
தமிழகத்தில் 3.74 லட்சம் பேர் நலமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,1) ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.7 லட்சத்தை தாண்டியது


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,928 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,897 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 31 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 150 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்- 87) மூலமாக, இன்று மட்டும் 75,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,62,223 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,71,717 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உள்ளது.


இன்று மட்டும் கொரோனா பாதித்த 96 பேர் உயிரிழந்தனர். அதில், 65 பேர் தனியார் மருத்துவமனையிலும், 31 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,418 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,379 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:53 PM IST
2 கோடியே 56 லட்சத்து 64 ஆயிரத்து 94 பேர் பாதிப்பு

இன்று (செப்டம்பர்- 1 ம் தேதி ) மாலை : 04 : 50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 56 லட்சத்து 64 ஆயிரத்து 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 55 ஆயிரத்து 377 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 79 லட்சத்து 63 ஆயிரத்து 674 பேர் மீண்டுள்ளனர்.

12:21 PM IST
8 லட்சத்து 54 ஆயிரத்து 510 பேர் பலி

இன்று (செப்டம்பர்- 1 ம் தேதி ) நன்பகல்: 12 :20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 54 ஆயிரத்து 510 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 79 லட்சத்து 43 ஆயிரத்து 734 பேர் மீண்டுள்ளனர்.

7:20 AM IST
ஒரு கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 635 பேர் மீண்டனர்

இன்று (செப்டம்பர்- 1 ம் தேதி ) காலை : 07 :20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 56 லட்சத்து 28 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 54 ஆயிரத்து 424 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 635 பேர் மீண்டுள்ளனர்.

5:49 AM IST
'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை'

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் தமிழகம் வரும் அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்

* தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்யலாம். அறிகுறி உள்ள முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை கட்டாயம்

* அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்பு உள்ளவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்

* வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

5:05 AM IST
கர்நாடகாவில் ஒரே நாளில் 7,238 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,238 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,49,567 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 72.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

4:45 AM IST
அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு

அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் இதுவரை மீ்ட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 60,931 ஆக உயர்ந்தது. தற்போது 8,916 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 82,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

3:44 AM IST
பாக்.,கில் இதுவரை 2.8 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்

பாக்.,கில் இதுவரை 2.8 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 95 சதவீதமாக உள்ளது.இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,849 ஆக உள்ளது. ஒரே நாளில் மேலும் 6 பேர் தொற்று பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 6,294 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை உள்ளவர்களில் 604 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.இதுவரை 26,21,146 கொரோனா பரிசோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 18,017 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

2:36 AM IST
தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 73.3 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 73.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

1:34 AM IST
தெலுங்கானா: கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

தெலுங்கானாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுடன் மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறெனில் பாதிப்பை குறைக்க முடியும் என அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் தெரிவித்தார்.

12:33 AM IST
கேரளத்தில் கொரோனாவில் இருந்து 1,693 பேர் மீட்பு

கேரளாவில் கொரோனா தொற்றில் இருந்து 1,693 பேர் மீட்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கேரளத்தில் கொரோனா தொற்றில் இருந்து புதிதாக 1,693 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை தொற்றில் இருந்து 51,542 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 23,488 பேர் உள்ளனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 54 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 80 பேர் பிற மாநிலங்களில் இருந்தும் கேரளாவிற்கு வந்தவர்கள். அத்துடன் 1,367 பேர் உள்ளூர் பரவல் மூலமாக பாதிக்கப்பட்டனர். மேலும் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 1,98,843 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

11:08 PM IST
மஹா.,வில் புதிதாக 11,158 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 11,158 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.73 லட்சமாக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 184 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 24,583 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் புதிதாக 11,158 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,73,559 ஆக உயர்ந்தது. 1,94,056 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

10:25 PM IST
திருச்செந்தூர் கோவிலில் செப்.1 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் செப்.,1 முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

9:50 PM IST
'இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 23.9 % வீழ்ச்சியடைந்துள்ளது': மத்திய அரசு

கொரோனா காரணமாக நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9:15 PM IST
டில்லியில் புதிதாக 1,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

டில்லியில் ஒரே நாளில் 1,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,55,678 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 89 சதவீதமாக உள்ளது.

8:45 PM IST
மே.வங்கத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

7:30 PM IST
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 43% மூன்று மாநிலங்களில் பதிவாகிறது

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 43 சதவீதம் மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பதிவாகுவதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

6:45 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,391 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,31) அதிகபட்சமாக சென்னையில் 1,391 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,19,626 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 589 பேருக்கும், சேலத்தில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 347 பேருக்கும், கடலூரில் 307 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 187 பேருக்கும், விழுப்புரத்தில் 176 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,391 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,626 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 436 பேரும், சேலத்தில் 390 பேரும், கடலூரில் 278 பேரும், திருவள்ளூரில் 277 பேரும், கன்னியாகுமரியில் 261 பேரும், காஞ்சிபுரத்தில் 259 பேரும், செங்கல்பட்டில் 208 பேரும், ராணிப்பேட்டையில் 199 பேரும், விழுப்புரத்தில் 186 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 6,008 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,31) ஒரே நாளில் 6,008 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.7 லட்சத்தை நெருங்கியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,925 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 31 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 150 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-87) மூலமாக, இன்று மட்டும் 75,100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 48 லட்சத்து 13 ஆயிரத்து 147 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,533 பேர் ஆண்கள், 2,423 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,58,370 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,69,642 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 91 பேர் உயிரிழந்தனர். அதில், 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,322 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 19 ஆயிரத்து 748 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 674 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 55 ஆயிரத்து 619 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:02 PM IST
8 லட்சத்து 51 ஆயிரத்து 078 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) மாலை : 04 :00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 54 லட்சத்து 13 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 51 ஆயிரத்து 078 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 23 ஆயிரத்து 289 பேர் மீண்டுள்ளனர்.

8:04 AM IST
கோவாக்சின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட சோதனைக்கான ஏற்பாடுகள்

கொரோனா தொற்றுக்கான 'கோவாக்சின்' தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனையின் இரண்டாம் கட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

6:43 AM IST
ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) காலை: 06:40 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 977 பேர் மீண்டுள்ளனர்.

6:01 AM IST
ஒரு கோடியே 77 லட்சத்து 828 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 31 ம் தேதி ) காலை: 06:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 77 லட்சத்து 828 பேர் மீண்டுள்ளனர்.

5:33 AM IST
கர்நாடகா: 7,101 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,42,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.1 சதவீதமாக உள்ளது.

4:31 AM IST
மஹா.,வில் புதிதாக 7,690 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 7,690 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.62 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 16,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7,80,689 ஆக அதிகரித்தது.புதிதாக 296 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 24,399 ஆக உயர்ந்தது. ஒரே நாளில், புதிதாக 7,690 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,62,401 ஆக உயர்ந்தது. 1,93,548 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் புனேயில் மட்டும் 51,909 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

3:45 AM IST
கேரளாவில் ஒரே நாளில் 1,766 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,766 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,849 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 67.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2:28 AM IST
கொரோனா தொற்று 2ம் முறை தாக்க வாய்ப்பில்லை

ஏற்கனவே கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அது கடந்த கால தொற்றின் இறந்த வைரஸ்களால் வரும் முடிவுகள் என்றும், அதை நினைத்து அச்சம் தேவையில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

1:30 AM IST
டில்லியில் 1,54,171 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

டில்லியில் கொரோனா தொற்றில் இருந்து 1,54,171 பேர் குணமடைந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டில்லியில் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,54,171 ஆக உயர்ந்தது. தற்போது 14,793 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 6,881 RTPCR/CBNAAT/ TrueNat சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 13,555 விரைவான ஆன்டிஜென் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 15,69,096 ஆக உள்ளன. டில்லியில் தற்போது 820 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.

1:01 AM IST
கொரோனா திடீர் இறப்புகளை தடுக்கும் 'LMWH' மருந்து

கொரோனாவால் ஏற்படக்கூடிய திடீர் இறப்புகளை 'LMWH' மருந்து தடுக்கும் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் உலகின் பலநாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனாவால் ஏற்படும் உயரிழப்பை 'LMWH' மருந்தினால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் 90 சதவீத உயிரிழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:32 AM IST
பீஹாரில் கொரோனா மீட்பு விகிதம் 86.88 சதவீதமாக உயர்வு

பீஹாரில் கொரோனாவில் இருந்து புதிதாக 2,231 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 86.88 சதவீதமாக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.

12:05 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டார் கேரளாவின் 110 வயது பாட்டி

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது பாட்டி முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரந்தாதனி வரியத் பத்து (110) என்பவர் கடந்த 18 ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது அதிகம் என்றாலும் அவருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன. இவர் எந்தவித பதற்றமும் இன்றி சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனிடையே கேரள மாநிலத்திலேயே கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்த மிக வயதான நபர் வரியத் பத்து பாட்டி தான் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாதெரிவித்துள்ளார். மாநில சுகாதார அமைச்சர் பாட்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார். பாட்டியை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாட்டி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

11:20 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 76.61 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.79 சதவீதமாக குறைந்து, நோய் தொற்றில் இருந்து மீட்கப்படுவோரின் விகிதம் 76.61 சதவீதமாக உயர்ந்ததாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:45 PM IST
அமெரிக்காவில் டிரம்ப்பின் புதிய வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் குறையாத நிலையில் பெரும்பாலான மாகாணங்களில் டிரம்ப் நிர்வாகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து ஹார்வார்டில் உள்ள டி.எச் சான் பொது சுகாதார கல்வி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் மைக்கேல் மினா கூறுகையில், ' அமெரிக்காவின் 33 மாகாணங்களிலும் பரிசோதனை மயைங்களில் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர். இந்த முரண்பாடு டிரம்ப் நிர்வாகத்தின் மீதான அவநம்பிக்கையை காட்டுவதாக தெரிகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்

10:03 PM IST
இந்தியாவில் கொரோனாவிலிருந்து 27 லட்சம் பேர் மீண்டனர்

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்தது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்தியாவில் கடந்து 24 மணி நேரத்தில் 64,935 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்தது. இதுவரை 27,13,933 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து குணமடைந்தவர்களின் விகிதம் 76.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 3.55 மடங்கு அதிகமானோர் குணமாகி உள்ளனர். 7,65,302 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 19,48,631 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 21.60 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி ஆனவர்கள் விகிதம் 1.79 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:53 PM IST
சென்னையில் இதுவரை 1.18 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,30) அதிகபட்சமாக சென்னையில் 1,427 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.18 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,249 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,34,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 498 பேருக்கும், சேலத்தில் 329 பேருக்கும், கடலூரில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், திருவள்ளூரில் 293 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 193 பேருக்கும், வேலூரில் 167 பேருக்கும், விழுப்புரத்தில் 183 பேருக்கும், கன்னியாகுமரியில் 122 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,427 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,235 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலுாரில் 483 பேரும் கோவையில் 451 பேரும் செங்கல்பட்டு 382 பேரும், சேலம் 274 பேரும், ராணிபேட்டை 267 பேரும், காஞ்சிபுரம் 223 பேரும், தேனி 216 பேரும் திருவள்ளூர் 192 பேரும் திருவாரூர் 165 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

9:20 PM IST
கொரோனா தடுப்பூசி சோதனை: மைசூரு மருத்துவமனையில் தொடங்கியது

கொரோனா நோய் தொற்றுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியின் சோதனை மைசூரு மருத்துவமனையில் தொடங்கியதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


9:01 PM IST
தமிழகத்தில் மேலும் 6,406 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,30) ஒரே நாளில் 6,406 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.62 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,468 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 27 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 149 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-86) மூலமாக, இன்று மட்டும் 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 6,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 94 பேர் உயிரிழந்தனர். அதில், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,231 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,721 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


8:42 PM IST
'கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்': ஆஸி இமாம் சர்ச்சை பேச்சு

'ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள், கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டாம்' என, இமாம் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


8:21 PM IST
இந்தியாவில் ஆக.,29 வரை 4.14 கோடி மாதிரிகள் சோதனை ; ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆக.,29 வரை 4.14 கோடி பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்தது.

7:38 PM IST
சபரிமலை: நவ., முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.நவ.16 ல் துவங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தெரிவித்துள்ளது.

5:06 PM IST
8 லட்சத்து 47 ஆயிரத்து 361 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 30 ம் தேதி ) மாலை: 05;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 52 லட்சத்து 368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 47 ஆயிரத்து 361 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 75 லட்சத்து 48 ஆயிரத்து 464 பேர் மீண்டுள்ளனர்.

11:22 AM IST
லட்சத்து 46 ஆயிரத்து 755 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 30 ம் தேதி ) காலை: 11;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரத்து 014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 46 ஆயிரத்து 755 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 75 லட்சத்து 9 ஆயிரத்து 856 பேர் மீண்டுள்ளனர்.

7:00 AM IST
ஒரு கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 592 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 30 ம் தேதி ) காலை: 07;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 45 ஆயிரத்து 956 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 592 பேர் மீண்டுள்ளனர்.

6:03 AM IST
ஒரு கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 739பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 30 ம் தேதி ) காலை: 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 51 லட்சத்து 53 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 45 ஆயிரத்து 925 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 739பேர் மீண்டுள்ளனர்.

4:20 AM IST
கர்நாடகா: ஒரே நாளில் 8,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 8,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,35,128 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 72 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2:54 AM IST
மஹா.,வில் கொரோனா மீட்பு விகிதம் 72.58 சதவீதமாக உயர்வு

மஹாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து 11,541 பேர் மீட்கப்பட்டனர். மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 72.58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

12:53 AM IST
கேரளா: 2,225 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

கேரளாவில் ஒரே நாளில் 2,225 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,079 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 67 சதவீதமாக உயர்ந்தது.

11:30 PM IST
இந்தியாவில் கொரோனா சோதனை 40 மில்லியனை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக, நாளொன்றுக்கு 9 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 40 மில்லியனை தாண்டியதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

9:54 PM IST
மலேசியாவில் நோய் தொற்றை குறைக்க டிச.,31 வரை கொரோனா கட்டுப்பாடுகள்

மலேசியாவில் கொரோனா பாதிப்புகளை குறைக்க டிச.,31 வரை பொது முடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப் பட்டதாக அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

அரசின் விதிமுறைகளை மீறும் எவருக்கும் தண்டனை வழங்கப்படும். விதிமுறைகளை மீறினால் அபராத தொகையை 2 அல்லது 3 மடங்காக உயர்த்த அரசு அனுமதி வழங்கும். அத்தடன் கொரோனா தொற்று பிற இடங்களில் இருந்து பரவுவதை தடுக்க இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (ஆக.,28) மலேசிய பிரதமர் கூறுகையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மலேசியாவில் புதிய நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தாலும், உலகளவில் கொரோனா வைரஸ் இன்னும் அதிகரித்து வருகிறது. அரசின் விதிமுறைகளை மீறும் எவருக்கும் தண்டனை வழங்கப்படும். விதிமுறைகளை மீறினால் அபராத தொகையை 2 அல்லது 3 மடங்காக உயர்த்த அரசு அனுமதி வழங்கும். அத்தடன் கொரோனா தொற்று பிற இடங்களில் இருந்து பரவுவதை தடுக்க இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

8:16 PM IST
ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து 62,971 பேர் மீட்பு

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 62,971 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

8:03 PM IST
4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் வெளியீடு

4.0 எனப்படும் 4வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

7:43 PM IST
அரசு மருத்துவமனையில் கழிவறையை சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் , அரசு மருத்துவமனை பார்வையிட சென்ற போது அங்கு கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார்.

6:50 PM IST
சென்னையில் இதுவரை 1.16 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,29) அதிகபட்சமாக சென்னையில் 1,159 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.16 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,285 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,33,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 491 பேருக்கும், சேலத்தில் 432 பேருக்கும், கடலூரில் 420 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், திருவள்ளூரில் 284 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 241 பேருக்கும், வேலூரில் 178 பேருக்கும், விழுப்புரத்தில் 171 பேருக்கும், கன்னியாகுமரியில் 161 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,159 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,16,808 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று காஞ்சிபுரத்தில் 479 பேரும், திருவள்ளூரில் 436 பேரும், தேனியில் 382 பேரும், சேலத்தில் 359 பேரும், கோவையில் 345 பேரும், வேலூரில் 295 பேரும், கன்னியாகுமரியில் 271 பேரும், செங்கல்பட்டில் 257 பேரும், ராணிப்பேட்டையில் 242 பேரும், கடலூரில் 157 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:30 PM IST
தமிழகத்தில் மேலும் 6,045 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,29) ஒரே நாளில் 6,045 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.55 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,326 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 26 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 149 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-86) மூலமாக, இன்று மட்டும் 80,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,881 பேர் ஆண்கள், 2,471 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,51,013 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,64,548 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 87 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 59 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,137 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,726 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:08 PM IST
2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்து 215 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 29 ம் தேதி ) மாலை: 04;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்து 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 41 ஆயிரத்து 984 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 73 லட்சத்து 17 ஆயிரத்து 786 பேர் மீண்டுள்ளனர்.

12:02 PM IST
8 லட்சத்து 41 ஆயிரத்து 372 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 29 ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 41 ஆயிரத்து 372 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 73 லட்சத்து ஆயிரத்து 531 பேர் மீண்டுள்ளனர்.

7:00 AM IST
ஒரு கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்து 153 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 29 ம் தேதி ) காலை: 07;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 48 லட்சத்து 98 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 40 ஆயிரத்து 661 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்து 153 பேர் மீண்டுள்ளனர்.

6:49 AM IST
பிரேசில்: இதுவரை 29.7 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

பிரேசிலில் இதுவரை 29,76,796 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 78 சதவீதமாக உயர்ந்தது.


5:43 AM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 74.6 சதவீதமாக வீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 74.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 1,580 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,675 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விதம் 74.6 சதவீதமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீட்பு விகிதம் 76.33 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 28,941 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் 22,097 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இந்நிலையில் புதிதாக 61,863 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 2,932 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மாநிலத்தில் 12,04,343 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

4:34 AM IST
கர்நாடகா:இதுவரை 2.27 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் இதுவரை 2,27,018 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் வீதம் மாநில அளவில் 71.3 சதவீதமாக உள்ளது.அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,960 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3.18 லட்சமானது. ஒரே நாளில் மேலும் 136 பலியானதால் பலி எண்ணிக்கை 5,368 ஆக உயர்ந்துள்ளது.பெங்களூருவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,721 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அதிகபட்சமாக தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 448 பேருக்கும், தேவன்கெரே மாவட்டத்தில் 314 பேருக்கும், சிவமோகா மாவட்டத்தில் 314 பேருக்கும், பெலகெவி மாவட்டத்தில் 290 பேருக்கும், பெல்லாரி மாவட்டத்தில் 484 பேருக்கும் புதிதாக தொற்று உறுதியானது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
3:26 AM IST
கேரளாவில் ஒரே நாளில் 2,097 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கேரளாவில் ஒரே நாளில் 2,097 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,858 ஆக உயர்ந்தது. மீட்பு விகிதம் மாநில அளவில் 66 சதவீதமாக உள்ளது.இதுவரை மொத்தம் 1,94,431 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,75,306 பேர் வீடுகளிலும், தனிமை வார்டுகளிலும் இருந்து வருகின்றனர். 19,125 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் உள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

2:22 AM IST
மஹா.,வில் புதிதாக 11,607 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 11,607 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.43 லட்சமாக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 331 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 23,775 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் புதிதாக 11,607 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,43,170 ஆக உயர்ந்தது. 1,80,718 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1:21 AM IST
டில்லியில் 1,466 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு

டில்லியில் கொரோனா தொற்றில் இருந்து புதிதாக 1,466 பேர் குணமடைந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டில்லியில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 1,446 பேர் குணமடைந்தனர். டில்லியில் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,51,473 ஆக உயர்ந்தது. தற்போது 13,550 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


12:20 AM IST
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அவரது டுவிட்டரில் பதவிவேற்றியிருப்பதாவது: ' வியாழனன்று எனக்கு நடந்த சோதனையில் கொரோனா தொற்று இருந்துள்ளது. தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். நாளை எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சோதனை நடைபெற உள்ளது. என்னுடன் தொடர்பிலிருந்த நண்பகள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.

11:19 PM IST
கொரோனாவால் 100 கோடி பேர் மனநலம் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் பரவலால், உலகில் 100 கோடி மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா பரவலால், மனநல ஆலோசனை மையங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், வைரஸ் பாதிக்கப்பட்டவகளை, மக்கள் புறக்கணித்ததால், அவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகினர். குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் மனநல பாதிப்புக்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. வரும் அக்.,10ம் தேதி உலக மனநலனை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


11:05 PM IST
தமிழகத்தில் மேலும் 5,752 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,28) ஒரே நாளில் 5,752 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.49 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,996 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,979 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 17 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,09,238 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 146 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-83) மூலமாக, இன்று மட்டும் 75,103 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 45 லட்சத்து 73 ஆயிரத்து 809 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,543 பேர் ஆண்கள், 2,453 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,47,132 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,62,077 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 682 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 102 பேர் உயிரிழந்தனர். அதில், 33 பேர் தனியார் மருத்துவமனையிலும், 69 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,050 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,506 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10:19 PM IST
தயார் நிலையில் மாஸ்க், சானிடைசர்கள்; ஜே.இ.இ., தேர்வு பணிகள் மும்முரம்

ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு 10 லட்சம் மாஸ்க்கள், 10 லட்சம் ஜோடி கையுறைகள், 6,600 லிட்டர் சானிடைசர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

9:55 PM IST
கொரோனாவைக் கண்டு அஞ்சுகிறார் டிரம்ப்- கமலா ஹாரிஸ்

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் நிலையில் டிரம்ப் அரசு வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை சரியாக கவனிக்கவில்லை என விமர்சித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டு டிரம்ப் அஞ்சுவதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு தற்போது குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பாக ஜமைக்கா மற்றும் இந்திய பூர்விகம் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

9:05 PM IST
தெலுங்கானா: தயார் நிலையில் படுக்கை வசதிகள்

தெலுங்கானாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.

7:28 PM IST
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்(70) காலமானார்.கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார். இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா, வசந்தகுமார். தமக்கு ரூ412 கோடி சொத்து இருப்பதாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டவர் வசந்தகுமார்.

6:50 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், 'தடுப்பூசி ஒன்று தான் அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என, மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.'2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டங்களைக் கடந்து மக்களுக்குச் செலுத்துவதற்கான ஒப்புதல்களைப் பெறும். எனவே, இந்தியா 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் பெறும். உலகளாவிய தேவையில் 40 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்யும்' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6:25 PM IST
சென்னை அணி வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று


பிரிமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள சென்னை அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சில உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பரிசோதனையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபாயில் உள்ள அந்த அணியின் உறுப்பினர்கள் 12 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னை அணி வீரர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை செப்.,1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரிமியர் லீக் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

4:23 PM IST
2 கோடியே 46 லட்சத்து 59 ஆயிரத்து 519 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 28 ம் தேதி ) மாலை: 04;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 46 லட்சத்து 59 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 36 ஆயிரத்து 312 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 949 பேர் மீண்டுள்ளனர்.

11:19 AM IST
8 லட்சத்து 35 ஆயிரத்து 639 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 28 ம் தேதி ) காலை : 11;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 46 லட்சத்து 28 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 35 ஆயிரத்து 639 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 70 லட்சத்து 94 ஆயிரத்து 868 பேர் மீண்டுள்ளனர்.

7:00 AM IST
ஒரு கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 097 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 28 ம் தேதி ) காலை : 07;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 34 ஆயிரத்து 791 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 097 பேர் மீண்டுள்ளனர்.

6:30 AM IST
ஒரு கோடியே 70 லட்சத்து 76 ஆயிரத்து 537 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 28 ம் தேதி ) காலை : 06;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 34 ஆயிரத்து 776 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 70 லட்சத்து 76 ஆயிரத்து 537 பேர் மீண்டுள்ளனர்.

5:24 AM IST
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆக.,29ல் முடிவு: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் முழு ஊரடங்கு ஆக.,31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, ஆக.,29ம் தேதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

3:24 AM IST
கோயம்பேடு மார்க்கெட் செப்.,28ம் தேதி திறப்பு: ஓபிஎஸ்

கோயம்பேடு மார்க்கெட், செப்., 28ம் தேதி திறக்கப்படும் எனவும், முதற்கட்டமாக உணவு தானிய விற்பனை அங்காடி, செப்., 18ம் தேதி திறக்கப்படும் எனவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1:24 AM IST
பாக்.கில் இதுவரை கொரோனாவிலிருந்து 95 சதவீதம் பேர் மீண்டனர்

பாக்.,கில் இதுவரை 2.79 லட்சம் பேர் கொரேனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அந்நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது.

10:08 PM IST
கேரளா: ஒரே நாளில் 2,067 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 2,067 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து நலமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,761 ஆக உயர்ந்தது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 65.51 சதவீதமாக உள்ளது.

9:36 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 9,136 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 9,136 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.31 லட்சமாக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 355 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 23,444 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் புதிதாக 9,136 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,31,563 ஆக உயர்ந்தது. 1,78,234 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8:46 PM IST
'கிரேட் அந்தமான்' பழங்குடிகளில் 5 பேருக்கு கொரோனா

அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியின இனங்களில் ஒன்றான கிரேட் அந்தமான் பழங்குடிகளில் மொத்தமுள்ள 56 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்தமான் தீவுகளில் இதுவரை 2,985 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 41 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சைக்குப்பின், 2,309 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 635 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


8:05 PM IST
செப்.1-ல் துவங்குகிறது 6-ம் கட்டமாக வந்தே பாரத் திட்டம்

மீண்டும் வந்தே பாரத் திட்டத்தை செப்-1 ம் தேதி முதல் மத்திய அரசு துவக்குகிறது.6-ம் கட்டமாக வரும் செப்.1-ம் தேதி முதல்மீண்டும் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.7:30 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,356 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,27) அதிகபட்சமாக சென்னையில் 1,356 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.14 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,286 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,30,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 439 பேருக்கும், சேலத்தில் 413 பேருக்கும், திருவள்ளூரில் 323 பேருக்கும், செங்கல்பட்டில் 298 பேருக்கும், கடலூரில் 261 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 256 பேருக்கும், ராணிப்பேட்டையில் 162 பேருக்கும், வேலூரில் 161 பேருக்கும், விருதுநகரில் 152 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,356 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,448 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 482 பேரும், கடலூரில் 406 பேரும், கோவையில் 357 பேரும், செங்கல்பட்டில் 263 பேரும், சேலத்தில் 217 பேரும், தேனியில் 202 பேரும், காஞ்சிபுரத்தில் 193 பேரும், வேலூரில் 187 பேரும், நாகப்பட்டினத்தில் 183 பேரும், விழுப்புரத்தில் 175 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

7:10 PM IST
தமிழகத்தில் மேலும் 5,870 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,27) ஒரே நாளில் 5,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.43 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,981 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 30 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 146 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-83) மூலமாக, இன்று மட்டும் 76,345 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 44 லட்சத்து 98 ஆயிரத்து 706 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 5,870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 109 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 79 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:16 PM IST
2 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 919 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 27 ம் தேதி ) மாலை : 05;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 30 ஆயிரத்து 377 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 68 லட்சத்து 96 ஆயிரத்து 936 பேர் மீண்டுள்ளனர்.

12:09 PM IST
8 லட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 27 ம் தேதி ) நன்பகல்: 12;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 207 பேர் மீண்டுள்ளனர்.

6:56 PM IST
தடுப்பூசி: கேம்பிரிட்ஜ் பல்கலை தீவிரம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மட்டுமின்றி, எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் கட்டுப்படுத்தும் புதிய தடுப்பூசியைக் கண்டறிவதற்கான சோதனையை துவங்குவதற்கான திட்டங்களை, இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு, இங்கிலாந்து அரசு 1.9 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளித்துள்ளது.

6:55 PM IST
சென்னையில் 1,290 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,290 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 484 பேருக்கும், சேலத்தில் 451 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும், செங்கல்பட்டில் 294 பேருக்கும், கடலூரில் 286 பேருக்கும், திருவள்ளூரில் 280 பேருக்கும், விழுப்புரத்தில் 189 பேருக்கும், தேனியில் 184 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

6:54 PM IST
3.38 லட்சம் பேர் மீண்டனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,26) ஒரே நாளில் 5,606 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.38 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 5,959 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. . கடந்த 24 மணி நேரத்தில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

9:53 AM IST
24.6 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,67,759 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,34,475 ஆக அதிகரித்துள்ளது. 7.07 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 59,449 பேர் உயிரிழந்துள்ளனர்.

6:55 AM IST
ஒரு கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 204 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 26 ம் தேதி ) காலை: 06;55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 40 லட்சத்து 43 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 22 ஆயிரத்து 528 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 204 பேர் மீண்டுள்ளனர்.

6:00 AM IST
ஒரு கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 338 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 26 ம் தேதி ) காலை: 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 22 ஆயிரத்து 499 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 338 பேர் மீண்டுள்ளனர்.

4:47 AM IST
தடுப்பூசி உற்பத்தி: இந்தியாவின் ஒத்துழைப்பை நாடும் ரஷ்யா

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷ்யா நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3:46 AM IST
கொரோனா தடுப்பூசி:இங்கிலாந்து நிறுவனம் முதல்கட்ட பரிசோதனை

இங்கிலாந்து நாட்டின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

12:25 AM IST
கொரோனா பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை

கொரோனா பாதித்த இளைஞருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம், கருப்பகவுண்டன் புதுாரில் வடமாநிலத்தை சேர்ந்த விக்ரம் குமார் என்ற 20 வயது இளைஞர் வசித்து வந்தார். இவர் தினங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார். வயிற்றினுள் குடலில் துளை ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் குடலோடு குடல் இணைக்கப்பட்டே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சைக்குபின், வெளியான பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது தெரியவந்தது. எனினும், டாக்டர்கள் முழு பாதுகாப்புடன் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும், சிகிச்சை அளிக்கப்பட்ட இடமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுவிட்டது.

சிகிச்சைக்கு பின், இளைஞர் நலமாக உள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்தார். கொரோனா நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை அனைவரும் பாராட்டினர்.

11:36 PM IST
டில்லியில் கொரோனாவில் இருந்து புதிதாக 1,155 பேர் மீட்பு

டில்லியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 1,155 பேர் மீட்கப் பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கான பாதிப்பு மற்றும் பலியாவோரின் விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரதுறை தெரிவிக்கின்றது. டில்லியில் நோய் தொற்றை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டில்லியில் இன்று புதிதாக 1,544 பேருக்க கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் டில்லியில் கொரோனா பாதித்த நோயாளி களின் மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக அதிகரித்தது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 17 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4330ஆக உள்ளது.

10:33 PM IST
தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 77.44 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 77.44 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

10:01 PM IST
மஹா.,வில் ஒரே நாளில் 12,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 12,300 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.14 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஆகஸ்ட் 25) மட்டும் 10,425 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7,03,823 ஆக அதிகரித்தது.இன்று மட்டும் 329 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 22,794 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் புதிதாக 12,300 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,14,790 ஆக உயர்ந்தது. 1,65,921 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:30 PM IST
பீஹாரில் பஸ் சேவை மீண்டும் துவங்கியது

பீஹாரில் 5 மாதங்களுக்கு பிறகு பஸ் சேவை மீண்டும் இன்று முதல் துவங்கப்பட்டது.இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின், பீஹாரில் பஸ் போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கப்பட்டது. ஓட்டுனர், நடத்துனர்கள், சானிடைசர் மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

9:01 PM IST
கர்நாடக காங்., தலைவர் சிவகுமாருக்கு கொரோனா

கர்நாடக காங்., தலைவர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: எனக்கு லேசான காய்ச்சலும், இருமலும் இருந்ததையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளால், விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வருவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

8:45 PM IST
யாசகம் பெற்று ரூ.1 லட்சம் கொரோனா நிதி

யாசகம் பெற்று, 10வது முறையாக, ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 1 லட்சம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

8:25 PM IST
அவசர அவசரமாக தடுப்பு மருந்து தயாரிக்க நினைப்பது ஆபத்தானது

'அவசர அவசரமாக கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து தயாரிக்க நினைப்பது ஆபத்தானது' என, அமெரிக்க அரசு ஆலோசகரும் நோய்த்தொற்று நிபுணருமான ஆண்டனி பவுசி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனை முழுவதுமாக முடியாமல் அரைகுறையாக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதித்துப் பார்ப்பது ஆபத்தானது. அவ்வாறு செய்தால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தடைபடும். முழுமையான பலகட்ட பரிசோதனைகளை கடந்துவந்த தடுப்பு மருந்தை மட்டுமே மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்கவேண்டும். அதற்கு சிறிது கால அவகாசம் அதிகமானாலும் பரவாயில்லை' என எச்சரித்துள்ளார்.

7:40 PM IST
தெலுங்கானா: கொரோனா பாதிப்புகளை குறைக்க அரசு தீவிரம்

தெலுங்கானாவில் கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து அதற்கேற்ப பாதிப்பு விகிதங்களை குறைக்க அரசு முயன்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது பாதிப்புகளின் அடிப்படையில் மண்டலங்களாக பிரித்து கட்டுப்பாட்டு விதிமுறையை விதிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ஏறக்குறைய மாநிலத்தில் 958 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.ஐதராபாத்தில் பாதிப்பு விகிதத்தை குறைக்க அரசு முக்கிய கட்ட நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இது ஆக., மாதத்தில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதைக் குறிக்கிறது. மேலும் புதிய தொற்று பாதிப்புகளுக்கு ஏற்ப அவ்வபோது கட்டுப்பாட்டு மண்டலங்கள் மாறும் என மூத்த சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொற்று பரவல் காரணமாக அதிகாரிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தடுப்பதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக ஹிட்டாம் மொபைல் பயன்பாடு மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நோயாளிகளைக் கண்காணிக்கும் நுட்பத்தை ஏற்றுக்கொண்டனர்.


7:20 PM IST
பொறுப்பற்றவர்களால் இந்தியாவில் கொரோனா பரவல்

கொரோனா பரவலுக்கு பொறுப்பில்லாமல் செயல்படுபவர்களே காரணம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்.,) தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியதாவது: இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் முன்னணியில் உள்ளன. சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி 3வது கட்ட பரிசோதனையில் உள்ளது. மற்ற இரு தடுப்பூசிகளும் முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளன. இளைஞர்களோ, வயதானவர்களோ, மாஸ்க் அணியாமல் பொறுப்பில்லாமல் இருப்பவர்களால் தான் கொரோனா பரவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

6:45 PM IST
சென்னை 1,136 பேர்; திருவள்ளூரில் 1,839 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,25) அதிகபட்சமாக திருவள்ளூரில் 1,839 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,270 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,27,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கடலூரில் 370 பேருக்கும், கோவையில் 322 பேருக்கும், செங்கல்பட்டில் 321 பேருக்கும், திருவள்ளூரில் 305 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், தேனியில் 226 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 214 பேருக்கும், திருநெல்வேலியில் 204 பேருக்கும், ராணிப்பேட்டையில் 196 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 1,839 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று சென்னையில் 1,136 பேரும், கடலூரில் 497 பேரும், கோவையில் 329 பேரும், செங்கல்பட்டில் 324 பேரும், காஞ்சிபுரத்தில் 270 பேரும், சேலத்தில் 217 பேரும், தேனியில் 216 பேரும், புதுக்கோட்டையில் 167 பேரும், தஞ்சாவூர், திருநெல்வேலியில் தலா 152 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் இதுவரை 3.32 லட்சம் பேர் நலமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,25) ஒரே நாளில் 6,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.32 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,937 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 14 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 141 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-78) மூலமாக, இன்று மட்டும் 70,221 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 43 லட்சத்து 46 ஆயிரத்து 861 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று மட்டும் 6,998 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 107 பேர் உயிரிழந்தனர். அதில், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:21 PM IST
8 லட்சத்து 17 ஆயிரத்து 606 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 25 ம் தேதி ) மாலை: 04;20 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 38 லட்சத்து 36 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 17 ஆயிரத்து 606 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 63 லட்சத்து 79 ஆயிரத்து 868 பேர் மீண்டுள்ளனர்.

1:48 PM IST
2 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 792 பேர் பாதிப்பு

இன்று ( ஆகஸ்ட்- 25 ம் தேதி ) மதியம்: 01;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 17 ஆயிரத்து 243 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 63 லட்சத்து 70 ஆயிரத்து 717 பேர் மீண்டுள்ளனர்.

9:13 AM IST
8 லட்சத்து 17 ஆயிரத்து 005 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 25 ம் தேதி ) காலை: 09;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 17 ஆயிரத்து 005 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 63 லட்சத்து 59 ஆயிரத்து 043 பேர் மீண்டுள்ளனர்.

7:16 AM IST
ஒரு கோடியே 63 லட்சத்து 49 ஆயிரத்து 839 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 25 ம் தேதி ) காலை: 07;15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 38 லட்சத்து ஆயிரத்து 729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 16 ஆயிரத்து 552 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 63 லட்சத்து 49 ஆயிரத்து 839 பேர் மீண்டுள்ளனர்.

6:00 AM IST
ஒரு கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 834 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 25 ம் தேதி ) காலை: 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 38 லட்சத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 16 ஆயிரத்து 534 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 834 பேர் மீண்டுள்ளனர்.

4:16 AM IST
கர்நாடகா: ஒரே நாளில் 8,061 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் 8,061 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதயைடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,625 ஆக உயர்ந்தது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 69.61 சதவீதமாக உள்ளது.

3:16 AM IST
ரஷ்யா: 7.73 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

ரஷ்யாவில் இதுவரை பேர் கொரோனாவிலிருந்து 7,73,095 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 80.4 சதவிகிதமாக உள்ளது.உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்ய கொரோனா தடுப்பு மருந்தின் மீது நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இதை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் அந்நாடு இம்மருந்தினை மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு கொண்டு செல்ல உள்ளது. அடுத்த வாரம் 40,000 பேருக்கு இம்மருந்தினை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:34 AM IST
மெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்?

நாட்டில், 'மெட்ரோ ரயில்' சேவை, செப்., 1ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளது என, தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, ஊரடங்கு அமலுக்கு வந்ததால், மார்ச் மாதம் முதல், மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்., 1ம் தேதி முதல், நான்காம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வர உள்ளன.இந்த தளர்வுகளின் போது, மெட்ரோ ரயில் சேவைகள், செப்., 1 முதல் மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்படலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், பள்ளி மற்றும் கல்லுாரிகள் அடுத்த மாதம் திறக்க வாய்ப்பில்லை என, அவர்கள் கூறினர்.

1:34 AM IST
தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.67 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 77.67 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 1,825 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,411 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.67 சதவீதமாக உள்ளது.இதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீட்பு விகிதம் 74.90 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 22,919 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் 16,482 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். தினமும் 20,000 பேரின் மாதிரிகள் பரிசோதினைக்காக சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக 36,282 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 1,842 பேருக்கு தொற்று உறுதியானது.

12:03 AM IST
கேரளா: ஒரே நாளில் 1,238 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,238 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,883 ஆக உயர்ந்தது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 65.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
11:45 PM IST
பிறந்த நாள் கொண்டாடிய உசேன் போல்டிற்கு 'கொரோனா'

ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ் தடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் உசேன் போல்ட்,34, மின்னல் வேக ஒட்டத்தால் உலகமுழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து உசேன் போல்ட் பங்கேற்கும் அனைத்து போட்டிகளும், பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கும்.
100 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக்க பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் விடை பெற்றார்.இந்நிலையில் கடந்த 21-ம் தேதி தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவருடன் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பல்வேறு விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதை யடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:30 PM IST
கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் லாக்டவுன் விதிகள் அமலில் உள்ளன. இதில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.இ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கம்.

கர்நாடகா செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை.


மாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கம்.

ரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது.

கையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டது.

14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது.

வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கம்.செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:55 PM IST
அரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து மேலும் 94 பேர் மீட்பு

அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 94 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 94 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 58,582 ஆக உயர்ந்தது. தற்போது 8,324 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் 71,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அரபு எமிரேட்சில் மொத்தம் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


10:36 PM IST
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 75.27 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 1.85 சதவீதமாக குறைந்து மீட்பு விகிதம் 75.27 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.சுகாதாரதுறை அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 57,468 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,38,035 ஆக உயர்ந்தது. இதன் மூலம் இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 75.27 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலமாகவும் , சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.

10:05 PM IST
மஹா.,வில் 5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

மஹா.,வில் ஒரே நாளில் 14,219 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.இன்று மட்டும் 212 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 22,465 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் புதிதாக 14,219 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,02,490 ஆக உயர்ந்தது. 1,68,126 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

9:30 PM IST
கொரோனா: பிளாஸ்மா சிகிச்சை முற்றிலுமாக பலனளிக்காது

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை முற்றிலுமாக பலனளிக்காது. அதில் நிறைய சவால்கள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

8:20 PM IST
தெலுங்கானா: தினசரி கொரோனா பரிசோதனையை உயர்த்த முடிவு

தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு தினசரி நடத்தப்படும் சோதனையை 50,000 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆகஸ்ட் 21 அன்று, சுகாதார பிரிவு ஒரு நாளைக்கு 50,000 சோதனைகள் என்ற இலக்கை அடைவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது, அது ஒரு நாளைக்கு 43,095 கோவிட் சோதனைகளை நடத்த முடிந்தது, ஆக., 22 அன்று மேலும் 40,666 கோவிட் சோதனைகளை மேற்கொண்டது. நோய் தொற்றுக்கான பரிசோதனையில் விரைவான ஆன்டிஜென் சோதனை (RAT) துவங்கப்பட்டதற்கு பின்பு சோதனையை அதிகரிப்பது எளிதானது / சாத்தியமானது. சமீபத்தில் TSMSIDC 4 லட்சம் சோதனை கருவிகளை பெற்றது. இது சோதனைகளை அதிகப்படுத்தவும் தூண்டியது. மாநிலத்தில் உள்ள நகர்ப்புற / கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( Primary Health Center ) மிக விரைவான சோதனை கருவிகளை சேமிக்கத் தொடங்கியுள்ளன, இதனால் உள்ளூர் மருத்துவர்கள் தங்கள் சோதனைத் திறனை அதிகரிக்க அனுமதிக்கின்றனர்.

7:39 PM IST
அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா

அரியானா மாநில பா.ஜ. முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அரியானா பா.ஜ. முதல்வர் மனோகர்லால் கட்டார் உடல் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:இன்று எனக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வாரங்களில் என்னுடன் தொடர்பிலிருந்த நண்பர்கள், உறவினர்கள் உடனடியாக தங்களது குடும்பத்திலிருந்து விலகி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.

6:38 PM IST
சென்னையில் ஒரே நாளில் 1,234 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று (ஆக.,24) அதிகபட்சமாக சென்னையில் 1,234 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.10 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 387 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், சேலத்தில் 273 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 226 பேருக்கும், தேனியில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,234 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,10,819 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 800 பேரும், கோவையில் 338 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், தேனியில் 295 பேரும், தென்காசியில் 243 பேரும், செங்கல்பட்டில் 238 பேரும், திண்டுக்கல்லில் 222 பேரும், கடலூரில் 218 பேரும், கன்னியாகுமரியில் 206 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

6:15 PM IST
தமிழகத்தில் 3.25 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-- தமிழக சுகாதாரத்துறை

6:15 PM IST
தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 3.25 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் இன்று (ஆக.,24) ஒரே நாளில் 6,129 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,941 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 26 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 140 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-77) மூலமாக, இன்று மட்டும் 70,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 42 லட்சத்து 76 ஆயிரத்து 640 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இன்று மட்டும் 6,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 67 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5:59 PM IST
8 லட்சத்து 13 ஆயிரத்து 059 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 24 ம் தேதி ) மாலை: 06;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரத்து , 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 13 ஆயிரத்து 059 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 61 லட்சத்து 5 ஆயிரத்து 426 பேர் மீண்டுள்ளனர்.

12:16 PM IST
8 லட்சத்து 12 ஆயிரத்து 537 பேர் பலி

இன்று ( ஆகஸ்ட்- 24 ம் தேதி ) நன்பகல்: 12;10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 35 லட்சத்து 86 ஆயிரத்து , 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 12 ஆயிரத்து 537 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 960 பேர் மீண்டுள்ளனர்.

7:00 AM IST
ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 325 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 24 ம் தேதி ) காலை 07;00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து , 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 12 ஆயிரத்து 181 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 325 பேர் மீண்டுள்ளனர்.

5:35 AM IST
ஒரு கோடியே 60 லட்சத்து 71 ஆயிரத்து 259 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 24 ம் தேதி ) காலை 05;30 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 35 லட்சத்து 76 ஆயிரத்து , 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 8 லட்சத்து 12 ஆயிரத்து 157 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 60 லட்சத்து 71 ஆயிரத்து 259 பேர் மீண்டுள்ளனர்.

3:28 AM IST
கர்நாடகா: 4,996 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கர்நாடகாவில் ஒரே நாளில் மேலும் 4,996 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,89,564 ஆக உயர்ந்தது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 68.21 சதவீதமாக உயர்ந்தது.


2:28 AM IST
வங்கதேசத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 3,524 பேர் மீட்பு

வங்கதேசத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,524 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.வங்க தேசத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 3,524 பேர் மீட்கப்பட்டு வீடு திரும்பினர். நாட்டில் இதுவரை மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,79,091 ஆக உயர்ந்தது. நாட்டில் உள்ள 91 சோதனை மையங்கள் மூலம் 10,801 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மீட்பு விகிதம் 60.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் ( Case Fertility Rate - CFR ) 1.34 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1:28 AM IST