Advertisement
கொரோனா தடுப்பூசி போடும் பணி: பிரதமர் துவக்கி வைத்தார்
Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (5)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
1:00 PM IST

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் சிஇஒ அடார் பூனவாலா தடுப்பூசி போட்டு கொண்டார்.

12:55 PM IST

உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள பல்ரம்பூர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பணியை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார். இன்று 102 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக யோகி தெரிவித்துள்ளார்.

12:50 PM IST
காலக்கெடு

தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் காஷ்மீர் மாகாண கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். முதல் கட்டமாக தடுப்பூசி போடும் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெற்றிகரமாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நடைமுறைகள் வழக்கம் போல் தொடரும் என்றார்

12:45 PM IST

காஷ்மீரில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது. ஜம்மு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

12:35 PM IST

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் எஸ்ஓஏ பல்கலை துணைவேந்தருமான அசோக் மஹாபாத்ராவிற்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

12:30 PM IST
வதந்திகளை நம்ப வேண்டாம்

டில்லியில் எல்ஜேபி மருத்துவமனையில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் உள்ள 81 மையங்களில் 8,100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். தடுப்பூசி பாதுகாப்பானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

12:20 PM IST
அனுபவம் உள்ளது

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக, உலகளவில் இது பெரிய தடுப்பூசி திட்டமாகும். இது போன்ற விஷயங்களில் இந்தியாவிற்கு பெரிய அளவில் அனுபவம் உள்ளது. போலியா மற்றும் சின்னம்மை நோயை நாம் ஏற்கனவே அகற்றியுள்ளோம். எனக்கூறினார்.

12:15 PM IST
பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

தடுப்பூசி திட்டம் துவங்கியதை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் கட்கோபார் பகுதியில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

12:15 PM IST
பூடான் பிரதமர் பாராட்டு

தடுப்பூசி திட்டம் துவக்கப்பட்டதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் தடுப்பூசி, பதிலளிப்பதாக இருக்கும் என தெரிவித்தார்.

12:01 PM IST

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் முதலாவதாக, தூய்மை பணியாளருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

12:00 PM IST

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தடுப்பூசி போட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார்

12:00 PM IST
பயம் வேண்டாம்

தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், கொரோனா தடுப்பூசி திட்டம் துவங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதார பணியாளர்களுக்கு முதலில் போடப்படுகிறது. தொடர்ந்து பொது மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இலவச தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தடுப்பூசி பாதுகாப்பானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் அரசி தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். அவருக்கு வயது93, அவரது கணவருக்கு 99 வயது. இருவரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். யாரும் பயப்பட வேண்டாம் என்றார்

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான போரில், நமது வெற்றியை தடுப்பூசி உறுதிபடுத்தும் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன. நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிரா மாநில புனேயை சேர்ந்த, 'சீரம்' இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' எனப்படும் தடுப்பூசியை, உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அவசரகாலத்திற்கு பயன்படுத்த, மத்திய அரசு, சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்கியது.

உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைத்து பேசியதாவது:நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், டாக்டர்களுக்கு பாராட்டு.தடுப்பூசி மருந்துக்காக அனைத்து விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். விஞ்ஞானிகள் உழைப்பால் குறைந்த காலத்தில் 2 தடுப்பூசி கிடைத்துள்ளது. உலகம் முழுதும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுக்க இன்று தொடங்கியது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கொரோனா வேகமாக பரவியபோது மருத்துவ பணியாளர்களும் முன்களப் பணியாளர்களும் பல நாட்கள் வீடுகளுக்கே செல்லாமல் இரவுபகலாக உழைத்தனர் என மோடி கூறியபோது உணர்ச்சி வசப்பட்டார். முதலில் தடுப்பூசியை அவர்களுக்கு போடுவதுதான் சரியாக இருக்கும்; அதுதான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும் என மோடி உருக்கமாக கூறினார்.

தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால், அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல.நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும். முதல் கட்டமாக அடுத்த 2-3 மாதங்களில் 3 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்.





தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடர்கிறது. 2 டோஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம். ஒரு மாத கால இடைவெளியில் இரண்டு டோஸ்களை செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய தடுப்பூசி விலை குறைவு.முதல் டோஸ் போட்டவுடன், மாஸ்க்குகளை கைவிடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தொடர வேண்டும். இரண்டாவது டோஸ் போட்ட உடன் தான் எதிர்ப்பாற்றல் நமது உடலில் உருவாகும்.கொரோனாவுக்கு எதிரான போரில், நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும். மற்ற தடுப்பூசிகளை காட்டிலும், இந்திய தடுப்பூசிகளை பாதுகாப்பது எளிது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202113:40:47 IST Report Abuse
kulandhai Kannan ஏதாவது தவறு ஏற்படாதா என்று ராகுல், ஸ்டாலின் வகையறாக்கள், டென்ஷனாகக் காத்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஜன-202113:05:25 IST Report Abuse
g.s,rajan இது ஒரு வியாதியே இல்லை ஆனால் ஏகப்பட்ட பில்ட் அப் . ஜி .எஸ்.ராஜன் சென்னை
Rate this:
16-ஜன-202116:16:10 IST Report Abuse
ஆரூர் ரங்இதனை கொரோனாவால் குடும்பத் தலைவரை இழந்தவர்களிடம் போய்ச் சொல்லிப்பாருங்க. 😡நல்ல அர்ச்சனை கிடைக்கும் . கொரோனாவிலிருந்து மீண்ட பலருக்கு அதான் பின்விளைவுகளாக வரும் புதுப்புது நோய்களை நேரில் கண்டால் மன்னிப்புக் கேட்பீர்கள்....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
16-ஜன-202112:42:32 IST Report Abuse
ShivRam ShivShyam வாழ்த்துக்கள் மோடிஜி .. தங்கள் ஆட்சியில் நமது இந்தியா மென்மேலும் பலசாதனைகளை நிகழ்த்தி மானிடம் காக்க பாடுபடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X