Advertisement
இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (1)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
5:35 PM IST
தடை

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

4:32 PM IST
உபி., நிலவரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 71, 241 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6, 11,622 பேர் நலமடைந்துள்ளனர். தற்போது வரை மாநிலத்தில், 85,15,296 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

4:31 PM IST

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

2:14 PM IST

சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100 ஐ தாண்டி உள்ளது. தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ளது.

1:06 PM IST
புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 306 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,043 ஆக அதிகரித்து உள்ளது. 691 பேர் உயிரிழந்துள்ளனர்.

10:35 AM IST
அண்ணாமலைக்கு கொரோனா

நடந்து முடிந்துள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், ‛என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், சோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.

10:00 AM IST
முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்தை கடந்தது.

ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது. 11.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,69,275 பேர் உயிரிழந்துள்ளனர்.




இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 90.44 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.27 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 8.29 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி






சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 10) ஒரே நாளில் 14,12,047 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 66 லட்சத்து 26 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.






உலக பாதிப்பு


இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) காலை 10:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரத்து 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 39 ஆயிரத்து 234 பேர் பலியாகினர். 10 கோடியே 93 லட்சத்து 72 ஆயிரத்து 359 பேர் மீண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S BASKAR - coimbatore,இந்தியா
11-ஏப்-202110:39:30 IST Report Abuse
S BASKAR இதில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டவங்க என்ற தகவலையும் தரலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X