Advertisement
இந்தியாவில் ஒரு நாளில் 97 ஆயிரம் பேர் நலம்
Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
5:43 PM IST

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 6826 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 3,518 பேர் குணமடைந்து உள்ளனர். 65 பேர் உயிரிழந்துள்ளனர்

4:39 PM IST
உ.பி., நிலவரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவாக 18,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

11:45 AM IST

திருவரூரில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதியானது.

11:44 AM IST
புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரியில் 418 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,973 ஆக அதிகரித்து உள்ளது.

11:27 AM IST

நாகூரில் உள்ள மீன்வள பல்கலை பதிவாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், ஈரோடு கொடுமுடி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

11:27 AM IST
10.85 கோடி தடுப்பூசி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தடுப்பூசி திருவிழாவின் 3வது நாளான இன்று வரை 10.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும் 40 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

11:22 AM IST
பா.ஜ., எம்.பி.,க்கு கொரோனா

பா.ஜ., எம்.பி., சரோஜ் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

11:09 AM IST
மத்திய அமைச்சருக்கு கொரோனா

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. அறிகுறி இல்லாமல் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதனையடுத்து, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொண்டு உள்ளார்.

11:03 AM IST
சுகாதாரத்துறை திட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கூடுதலாக டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது.

11:02 AM IST
தடுப்பூசிக்கு அனுமதி

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர , டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, மூன்றாவது தடுப்பூசி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

11:00 AM IST
நெல்லையில் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(ஏப்.,13) புதிதாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகரத்தில் 102 பேருக்கும், புறநகரில் 115 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 997 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில்உள்ளனர்.

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியது.

ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்தது. 12.64 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,71,058 பேர் உயிரிழந்துள்ளனர்.




இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 89.51 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.25 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 9.24 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி






சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 12) ஒரே நாளில் 14,00,122 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 25 கோடியே 92 லட்சத்து 07 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.






உலக பாதிப்பு

இன்று (ஏப்ரல் 13-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 58 ஆயிரத்து 863 பேர் பலியாகினர். 11 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 035 பேர் மீண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X