Advertisement
புதிய உச்சத்தில் கொரோனா; இந்தியாவில் ஒரேநாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
Updated : ஏப் 14, 2021 | Added : ஏப் 14, 2021 | கருத்துகள் (6)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
5:49 PM IST

உ.பி.,யில் கடந்த 24 மணி நேரத்தில் 20,510 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,517 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,11, 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2:53 PM IST
துரைமுருகன் டிஸ்சார்ஜ்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

1:52 PM IST
திமுக எம்.பி.,க்கு கொரோனா

திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் அவரை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.

1:24 PM IST

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 11,11,79,578 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும், 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

1:03 PM IST
யோகி. ஆதித்யநாத்திற்கு கொரோனா

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா உறுதியானது. தற்போது, அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

12:54 PM IST

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், சென்னையில் வீடுகள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. எவ்வித அறிகுறிகளும் இன்றி சிலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவித்தார்.

12:51 PM IST

தமிழகத்தில் ஊரடங்கு போடும் சூழ்நிலை இல்லை எனவும், பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் தனிக்கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், போதிய அளவில் வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

12:51 PM IST

உ.பி.,யில் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் இருந்து உடனடியாக 25 ஆயிரம் மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

12:49 PM IST
டில்லி அமைச்சருக்கு கொரோனா

டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டு உள்ளார்.

12:48 PM IST

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் போதுமான அளவு படுக்கைகள் உள்ளதாக, அம்மாநில சுகாதார செயலர் தெரிவித்து உள்ளார்.

11:33 AM IST
சென்னை நிலவரம்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,673 ஆக அதிகரித்து உள்ளது. 4,337 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில், மொத்தம், 2.69,614 பேர் பாதிக்கப்பட்டு 2,46,604 பேர் குணமடைந்து உள்ளனர்.மண்டல வாரியாக,தேனாம்பேட்டையில் 2,109 பேரும், அண்ணா நகரில் 2,037 பேரும், கோடம்பாக்கத்தில் 1,708 பேரும், ராயபுரத்தில 1,698 பேரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11:33 AM IST
மதுரையில் 6 போலீசாருக்கு கொரோனா

மதுரையில், ஆயுதப்படையில் பணியாற்றும் 6 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

11:26 AM IST
அகிலேசுக்கு கொரோனா

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேசுக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளார்.

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 82 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியது. 13.65 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்கொரோனா பாதித்த 1,027 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது.





இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 88.92 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.24 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 9.84 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி






சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்.,13) ஒரே நாளில் 14,11,758 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 06 லட்சத்து 18 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.






உலக பாதிப்பு

இன்று (ஏப்ரல் 14-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 80 லட்சத்து 24 ஆயிரத்து 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 72 ஆயிரத்து 039 பேர் பலியாகினர். 11 கோடியே 10 லட்சத்து 59 ஆயிரத்து 757 பேர் மீண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202119:34:45 IST Report Abuse
Rajagopal மக்களும், தலைவர்களும் பொறுப்பில்லாமல் நடந்ததால் வந்த வினை இது. முதல் முறை கொரோனா அலை வந்த பொழுது ஓரளவுக்கு ஊரடங்குகள் விதித்து சமாளிக்க முடிந்தது. இப்போது மருந்து வந்தாலும், இடையில் தேர்தல்களும், போராட்டங்களும், திருவிழாக்களும் என்று எல்லாவற்றையும் திறந்து விட்டது பெரிய தவறு. மக்கள் எப்போதும் ஆட்டு மந்தையைப் போலத்தான் செயல் படுவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்திருக்க வேண்டும். தேர்தல்களை ஒத்திப்போட்டிருக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பு ஊசி போடும் வரை எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தேசிய அளவில் எமெர்ஜென்சி பிரகடனம் செய்திருந்தாலும் பரவாயில்லை. பொருளாதாரம் வீழ்ந்தாலும், அதை எதிர்காலத்தில் மீட்டுக்கொள்ள முடியும். போன உயிர்கள் திரும்பாது. பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இப்போது இழக்கும் நிலைக்கு எல்லாம் வந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள், தேர்தலை மனதில் வைத்து, நிர்வாகத்தை சரியாக செய்யவில்லை. இந்தியா இப்போதாவது அவசர நிலை பிரகடனம் செய்து, எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். எல்லாம் நன்றாகப்போய்க் கொண்டிருந்த நிலையில், மடையைத் திறந்து விட்டிருக்கக் கூடாது. இப்போது வந்திருக்கும் அலையானது பெரும் சேதத்தை விளைவிக்க இருக்கிறது. அனைவரும் ஆண்டவனை வேண்டுங்கள். பொறுப்போடு இருங்கள். அரசாங்கம் எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பாராதீர்கள். முடிந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவுங்கள். மிகவும் கவலைக்கிடமான நிலையில் நம் நாடு இருக்கிறது.
Rate this:
Cancel
14-ஏப்-202116:03:54 IST Report Abuse
ஆப்பு நீரோ மன்னன் பிடில் வாசிச்ச மச்திரி இங்கே பெரீவங்க மே.வங்கத்தில் பரப்புரை...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-202115:57:25 IST Report Abuse
J.V. Iyer மக்கள் தொகை குறையும் காலம். மக்களுக்கு பொறுப்பில்லை. அனுபவித்தே ஆகவேண்டும். தேர்தலில் மட்டுமல்ல, வாழ்விலும், பொதுநலத்திலும் நமக்கென்ன என்று இருந்தால், வீடுதேடி நம்மையும் பாதிக்கும், மக்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X