Advertisement
இந்தியாவில் ஏறுமுகத்தில் கொரோனா; ஒரேநாளில் 3.14 லட்சம் பேர் பாதிப்பு
Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (14)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
5:45 PM IST

உத்தர்கண்ட் மாநிலத்தில் நேற்று 3,998 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.19 பேர் உயிரிழந்து உள்ளனர்.

3:16 PM IST

லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,739 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆகவும் அதிகரித்து உள்ளது. நேற்று உறுதுியான 183 பேரில், 171 பேர் லே பகுதியையும், 12 பேர் கார்கில் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

3:14 PM IST

உ.பி., துணை மதல்வர் தினேஷ் சர்மாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ளனர்.

11:30 AM IST
மேலும் 5,567 பேருக்கு கொரோனா

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,567 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 2,251 பேர் குணமடைந்து உள்ளனர். 23 பேர் உயிரிழந்து உள்ளனர்.மாநிலத்தில், 3,73, 468 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 49,781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11:15 AM IST
புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி 987 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் 4 பேர் பலியானார்கள்.

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது.

ஒரே நாளில் 1,78,841 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டியது. 22.91 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர்.




பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை கோடியாக உயர்வு



இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 84.46 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.16 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 14.38 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி






சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 21) ஒரே நாளில் 16,51,711 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 27 கோடியே 27 லட்சத்து 05 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.






உலக பாதிப்பு


இன்று (ஏப்ரல் 22-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 44 லட்சத்து 54 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 71 ஆயிரத்து 791 பேர் பலியாகினர். 12 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 518 பேர் மீண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
22-ஏப்-202117:38:54 IST Report Abuse
Poongavoor Raghupathy கும்பமேளாவையும் தேர்தலையும் நிறுத்தியிருந்தால் கரோணஆ இந்த அளவில் அதிகமாய் இருக்காது. விநாசகாலம் விபரீத மூளையால் வருவது தானே.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-202123:22:31 IST Report Abuse
தமிழவேல் இதுக்கு எவனும் பதில் சொல்ல மாட்டான்....
Rate this:
Cancel
22-ஏப்-202116:42:31 IST Report Abuse
ஆப்பு 130 கோடி ஜனத்தொகையில் 3 லட்சம் பாதிப்பு மிக மிகக் குறைவு. வாங்க சங்கிகளே முட்டு குடுக்க வாங்க....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-202123:24:42 IST Report Abuse
தமிழவேல் ஒரேநாளில் 3.14 லட்சம் பேர் பாதிப்பு, உலக record break என்று BBC யில் அறிவிக்கப்பட்டது....
Rate this:
Cancel
MURUGESAN - namakkal,இந்தியா
22-ஏப்-202115:42:02 IST Report Abuse
MURUGESAN கொரோனாவை கண்டு பயமா? அது தெளிய அருமையான வைத்தியம். மொபைல்போன், டிவி, செய்தித்தாள்கள் இவற்றை ஒரு வாரத்துக்கு மறந்துவிட்டு ஒரு அழகிய கிராமத்தில் உங்கள் மனம்போல வாழ்ந்துவிட்டு வாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X