ரஷ்யா - உக்ரைன் போர்; வெற்றி யாருக்கு? | Dinamalar
Advertisement
ரஷ்யா - உக்ரைன் போர்; வெற்றி யாருக்கு?
Updated : ஏப் 15, 2022 | Added : பிப் 26, 2022 | கருத்துகள் (450)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
12:38 PM IST
அமெரிக்க அதிபர் மனைவி திடீர் விசிட்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உக்ரைனுக்கு திடீர் விசிட் செய்தார். தொடர்ந்து அவர் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியின் மனைவி ஒலினா செலன்ஸ்காவை சந்தித்து பேசினார்.

11:46 AM IST
கூடுதல் தாக்குதல் நடத்த திட்டம்

உக்ரைனில் டோன்டஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் நகரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கிடையில் பிரிட்டன் ராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

2:32 PM IST
அமெரிக்க சபாநாயகர் விசிட்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைன் சென்றார். அங்கு அவர் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் கூறுகையில் தன் நாட்டை காப்பாற்ற செலன்ஸ்கி போராடி வருவதாக கூறியுள்ளார்.

12:55 PM IST
பள்ளி மீது தாக்குதல் நடத்தியது யார் ?

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள பள்ளி மீது உக்ரைன் படையினரே குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் சிக்கியிருக்கலாம். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

8:56 AM IST
பள்ளி மீது தாக்குதல் நடத்தியது யார் ?

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள பள்ளி மீது உக்ரைன் படையினரே குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் சிக்கியிருக்கலாம். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

1:38 PM IST
அணு ஆயுத தாக்குதலா ?

ரஷ்யாவில் அணு ஆயுத தளவாடங்களை அலர்ட்டாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. நேட்டோ நாடுகள் அதிர்ச்சியில் உள்ளது.

10:51 AM IST
ஐ.நா., பொதுசெயலர் ஒப்புதல்

உக்ரைனில் நடந்து வரும் போர் பெரும் விரக்தி கோபத்தின் உச்சமாக இருக்கிறது. முன்கூட்டியோ அல்லது விரைவில் போரை நிறுத்தவோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறி விட்டது. என ஐ.நா., பொதுசெயலர் அன்டோனியா கூறியுள்ளார்.

3:31 PM IST
ரஷ்ய சிலைகள் அகற்றம்

உக்ரைனின் அதிபர் செலன்ஸ்கி உத்தரவுப்படி அங்குள்ள ரஷ்ய தலைவர்களின் சிலைகள் மற்றும் படங்களை அகற்றும் பணி துவங்கி உள்ளது. மேலும் ரஷ்யா தெருபெயர்களும் நீக்கப்படுகின்றன.

8:39 AM IST
உக்ரைனில் ஐ.நா., பொதுசெயலர்

ஐ.நா., பொதுசெயலர் அன்டோனியா நேற்று மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று (ஏப்.28) உக்ரைன் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார். மனித உரிமையை காக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அகதிகளாக மாறும் நிலையை தடுக்கவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

5:44 PM IST
கேஸ் விநியோகம் நிறுத்தம்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேடோ அமைப்பில் இடம்பெற்றுள்ள போலந்து மற்றும் பல்கேரியா நாடு கேஸ் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

10:13 AM IST
5 ரயில்வே ஸ்டேஷன்களில் ரஷ்யா குண்டு வீச்சு

உக்ரைனின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 5 ரயில்வே ஸ்டேஷன்களில் ரஷ்யா குண்டு வீசி தாக்கியுள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை.

1:55 PM IST
ரஷ்ய முயற்சி தோல்வி; அமெரிக்கா சொல்கிறது

அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் பிளிங்கன் உக்ரைன் சென்றார். அங்கு கியூ நகரில் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்: உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவியை செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றும் கூறினார்.

11:44 AM IST
பேச்சு நடத்துங்கள்: ஐ.நா.,

போரை நிறுத்த இரு தரப்பும் பேச்சு நடத்த வேண்டும். என ஐ.நா., வலியுறுத்தி உள்ளது.

3:22 PM IST
அமெரிக்க அதிபர் செயலர் பயணம் ?

உக்ரைனில் போர் நடந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் பைடனின் செயலர் ஒருவர் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய படையினரை தாக்க கூடுதல் ஆள் இல்லா டூரோன்கள் வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

11:32 AM IST
உக்ரைனில் தெற்கு பகுதிக்கு ரஷ்யா குறி

உக்ரைனில் மரியூபோல் நகரை கைப்பற்றிய ரஷ்யா தற்போது தெற்கு பகுதியை நெருங்கி செல்ல திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மெலிட்டோபோல், கெர்சன், கிரிமியா, லுகான்ஸ்க், டான்பாஸ்சில் சில இடங்கள் ரஷ்யாவின் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு பகுதியில் ஒரளவுக்கு ரஷ்ய ஆதிக்கம் வந்த பின்னர் தெற்கு பகுதிக்கு இப்போது குறி வைக்கப்பட்டுள்ளது.

3:05 PM IST
போர் குற்றத்தை மறைக்க ரஷ்யா திட்டம்

போர் குற்றத்தை மறைக்க ரஷ்யா பிணங்களை மொத்தம், மொத்தமாக புதைத்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

11:41 AM IST
அடுத்தடுத்து நகரங்களை பிடிக்க ரஷ்யா திட்டம்

உக்ரைனின் கெர்சன் மற்றும் ஷபோரிஷியா பகுதி மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் செலன்ஸ்கி மக்களிடம் கேட்டுள்ளார். மரியூபோல் நகரை கைப்பற்றிய ரஷ்யாவின் அடுத்த இலக்கு இந்நகரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

1:29 PM IST
மரியூபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மரியூபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. அதிபர் புடின் ராணுவ வீரர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.

12:17 PM IST
இன்றைய (ஏப்.21) துயரக்காட்சிகள்

5:31 PM IST
ராணுவ நிலைகள் மீது தாக்குதல்

ஒரே நாள் இரவில் 1,053 உக்ரைன் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆளில்லா கண்காணிப்பு வாகனங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

5:30 PM IST
53 லட்சம் பேர் வெளியேறினர்

ரஷ்யா தாக்குதலை துவக்கிய பின்னர், உக்ரைனில் இருந்து சுமார் 53 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.போலாந்திற்கு 28,25,000ருமேனியாவிற்கு 7,57,000ரஷ்யாவிற்கு 5,55,000ஹங்கேரிக்கு 4,71,000ஸ்லோவேகியாவிற்கு 3,43,000மால்டோவாவிற்கு 4,27,000பெலாரசிற்கு 24,000 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்.

5:24 PM IST
விம்பிள்டன் தொடரில் ரஷ்ய வீரர்களுக்கு தடை

லண்டன்: உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1:47 PM IST
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன்

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் உடனடியாக தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறிய உக்ரைன், அதற்காக முறையாக விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில் நேற்று ஐரோப்பிய யூனியனின் உறுப்பினருக்கான கேள்வி தாள்களை பூர்த்தி செய்து, அதை ஐரோப்பிய யூனியன் துாதர் மட்டி மாசிக்காசிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்து உள்ளார். ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை உறுப்பினராக இணைப்பது குறித்து முடிவு எடுப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இது கருதப்படுகிறது.

1:47 PM IST
உதவி கேட்கிறது ரஷ்யா

பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதை அடுத்து ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி தடைபட்டுள்ளது.இந்நிலையில் ரஷ்யாவில் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு குறைந்துள்ளதை அடுத்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுமாறு இங்குள்ள நிறுவனங்களிடம் ரஷ்ய வர்த்தக கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு வர்த்தக அமைப்புகள் நாளை மறுநாள், 'ஆன்லைன்' வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளன.

1:46 PM IST
உக்ரைன் வீரர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்ய படையினர் தொடுத்துள்ள போர், எட்டாவது வாரத்தை எட்டியுள்ளது.உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படையினர், அந்நகரத்தை (ஏப்.,18) முற்றிலுமாக அழித்தனர். உக்ரைன் ராணுவத்தினர், அங்குள்ள ஸ்டீல் தொழிற்சாலையில் பதுங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் சரணடைய ரஷ்ய ராணுவ ஜெனரல் மிகெயில் மிஸின்ட்சேவ் அவகாசம் அளித்துள்ளார். உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்அடைந்தால், உயிர் பிழைக்க உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

5:30 PM IST

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடைபெற்றுவரும் சூழலில், ரஷ்ய வீரர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட்போன் காப்பாற்றிய நிகழ்வு நடந்துள்ளது.

11:09 AM IST
விட்டு கொடுக்க மாட்டோம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:டாஸ்போஸ் நகரை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை துவக்கி உள்ளன. இதற்காக, அவர்கள் நீண்ட காலமாக தயாராகி வந்தனர். கணிசமான அளவு படைகள் அங்கு குவிக்கப்பட்டு தாக்குதல் நடந்து வருகிறது.எவ்வளவு வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டாலும் கவலையில்லை. நாங்கள் தொடர்ந்து போராடி தற்காத்து கொள்வோம். நாங்கள் அதனை தினமும் செய்வோம். உக்ரைனின் எதனையும் விட்டு கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

10:34 AM IST
டான்போஸ் நகரில் தாக்குதல்

உக்ரைன் கிழக்கு பகுதியான டான்போஸ் நகரில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.

12:39 PM IST
அமெரிக்க அதிபர் வருவார் ?

போர் உச்சமாக நடந்து வரும் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் வந்து பார்வையிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

6:48 AM IST
53 வது நாளாக தொடரும்உக்ரைன் ரஷ்யா போர்

ரஷ்யா உக்ரைன் இடையோன போர் துவங்கி இன்றுடன் 53 நாளாக தொடர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றும் பணியில் உக்ரைன் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

4:33 PM IST
தாக்குதல் தீவிரம்

உக்ரைனின் மரியூபோல் நகரில் ரஷ்யபடை தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய ரஷ்யா வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

2:37 PM IST
ரஷ்யா மீண்டும் புதிய தாக்குதல் !

உக்ரைன் தலைநகர் கியூவில் 16 இடங்களில் ரஷ்யா புதிய தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் , இதில் ராணுவ கிடங்குகள் சில தகர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது . உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை.

7:43 AM IST
ஆயுதங்கள் வழங்க வேண்டாம்; ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் நாட்டிற்கு போர் தளவாட ஆயுதங்களை அனுப்பி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தங்கள் நாட்டின் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளார்.

4:50 PM IST
தாக்குதலை அதிகரிப்போம்; ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டாலோ அல்லது சதி செய்தாலோ, கீவ் நகரில் ஏவுகணை மூலம் கடுமையான தாக்குதல் நடத்துவது அதிகரிக்கப்படும். கீவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீண்ட தூரம் மற்றும் குறுகிய தூர விமானங்களை தாக்கிஅழிக்கும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன.ரஷ்யாவின் கிலிமோவா பிராந்தியத்தில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைனின் எம்ஐ- 8 ஹெலிகாப்டர்களை,எஸ்-400 ஏவுகணை அமைப்பு தாக்கி வீழ்த்தியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4:49 PM IST
ரஷ்யா மீது தாக்குதல்

இரு நாட்டு எல்லையில் உள்ள பிரைன்ஸ்க் பகுதியில் வெடிகுண்டுகளை வீச உக்ரைன் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்ததாகவும், அதில் 8 பேர் காயமடைந்ததாக நேற்று(ஏப்.,14) ரஷ்யா குற்றம்சாட்டியது. அதேநாளில் ரஷ்யாவின் பெ்கோரோட் பகுதி உயர் அதிகாரி கூறுகையில், எல்லை பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு மற்றும் அண்டை கிராமங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஆனால், இதனை மறுத்த உக்ரைன், ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிர்ப்பு மனநிலையை அதிகப்படுத்த அந்நாடு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

1:33 PM IST
கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கியூவில் பல இடங்களில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தவகல்கள் தெரிவிக்கின்றன. பலத்த சபத்தத்துடன் இந்த தாக்குதல் இருந்ததாகவும், நகரின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் சப்தத்துடன் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

10:07 AM IST
ரஷ்ய கப்பல் மீது தாக்குதல் வெற்றி

கருங்கடலில் ரஷ்ய ஆயுத கப்பல் ஏவுகணை தாக்குதலில் அழிந்தது. இதனை உக்ரைன் அரசு உறுதி செய்துள்ளது. தாங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தான் இந்த கப்பல் அழிக்கப்பட்டது என அறிவித்துள்ளது.

3:38 PM IST
ரஷ்ய போர்க்கப்பல் கடும் சேதம்

கருங்கடல் பகுதியில், உக்ரைன் கடற்கரை நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போர்க்கப்பல் ஆயுதங்கள் வெடித்ததில் பலத்த சேதமடைந்துள்ளது. இதற்கு, உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம் என அந்நாட்டின் மாகாண கவர்னர் கூறியுள்ளார்.இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், தீவிபத்தின் விளைவாக வெடிமருந்துகள் வெடித்தது. இது குறித்து விசாரணை நடக்கிறது. கப்பலில் இருந்தவர்கள் மீட்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இருந்து தான், மரியபோல், ஒதீசா உள்ளிட்ட கடற்கரை நகரங்களை ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

3:33 PM IST
ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட அதிகார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

3:33 PM IST

7 வது வாரமாக ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு, ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ ரீதியில் 800 கோடி டாலர் மதிப்பில் உதவி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.

3:30 AM IST

துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்ய வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. அங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிக்கி உள்ளதாக மேயர் வாடிம் பொய்சென்கோ தெரிவித்து உள்ளார்.

3:32 PM IST
சரண்

மரியுபோல் நகரில், உக்ரைன் ராணுவ வீரர்கள், 1,026 பேர், சரணடைந்துள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2:58 PM IST

கீவ் நகரில் இருந்து வெளியேறிய ரஷ்ய படையினர், நாட்டின் கிழக்குப் பகுதிகளில், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். கார்கிவ் நகரில், ரஷ்ய படையினர் நேற்று நடத்திய பீரங்கித் தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; 22 பேர் காயமடைந்துள்ளனர்.

1:51 PM IST
தனிமைப்படுத்த முடியாது

ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில் , உக்ரைன் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாக்கவும், ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தாக்குதல் முழுமை பெறும் வகையிலும், நிர்ணயிக்கப்பட்ட பணிகள் முழுமை பெறும் வரையிலும் போர் தொடரும். ரஷ்யாவை தனிமைப்படுத்த முடியாது எனக்கூறினார்.

1:50 PM IST
விசாரணை

கிழக்கு பகுதியில் உள்ள டோன்போஸ் நகரிலும் தாக்குதல் நடக்கிறது. அங்கு, தங்கள் நாட்டு வீரர்களை குறிவைத்து விஷவாயு வீசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள உக்ரைன், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

6:58 AM IST
இனப்படுகொலை; பைடன் விமர்சனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இனப்படுகொலை செய்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

4:39 PM IST
சிறை

உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2:01 PM IST
பெண்களை பலாத்காரம் செய்த ரஷ்ய வீரர்கள்

உக்ரைனில் போர் நடத்திய வீரர்கள் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ நகரில் பல பெண்களை பலவந்தப்படுத்தி அந்த செயலில் ஈடுபட்டதாகவும் பல பெண்களே கூறியுள்ளனர். அதே நேரத்தில் சில மனைவிகள் கண்முன்னே கணவனை சுட்டு கொன்று பின்னர் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் சிலர் கூறியுள்ளனர்.

11:37 AM IST
உக்ரைன் மக்கள் 20 ஆயிரத்தை தாண்டும் !

மரியூபோல் நகர மேயர் வாடீம்பாய்ஷென்கோ கூறியுள்ளதாவது; இந்நகரில் இது வரை 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இன்னும் தெருக்களில் பிணங்கள் சிதறி கிடக்கிறது. மொத்தம் 20 ஆயிரத்தை இறந்தவர்கள் எண்ணிக்கை தொடலாம் என்றார். நட்புநாடுகள் முன்கூட்டியே கூடுதல் ஆயுதங்கள் தந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என உக்ரைன் ஆளும் கட்சி குறை கூறியுள்ளது.

7:05 AM IST
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் தீவிரம்

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா அடுத்த தாக்குதலுக்காக ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் ரசாயண ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளதாக வந்த செய்திகளை ஆய்வு செய்துவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூறியுள்ளது.

2:55 PM IST
ரஷ்யாவை எதிர்க்க உக்ரைன் வியூகம் !

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ டாங்குககளை நிறுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்மாடோஸ், செர்னிகிவ், மக்கோரியு பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. நேட்டோ நாடுகள் வழங்கிய கூடுதல் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கூடுதல் தைரியத்தை தந்துள்ளது.

11:38 PM IST
மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயார்!

ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கெலோ பொடொல்யாக் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலூம், இரு பிரிவினைவாத பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு டோன்பாஸ் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யப் படைகளை உக்ரைன் முறியடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

12:53 PM IST
உக்ரைன் சென்றார் பிரிட்டன் பிரதமர் போரீஸ்

ரஷ்ய படை தாக்குதல் ஒரு பக்கம், சாலைகளில் பிணங்கள் , பல எரிந்து சாம்பலான கட்டடங்கள் , மறு புறம் படைகள் குவிப்பு என பதட்டம் நிலவும் சூழலில் பிரிட்டன் பிரதமர் ஜான் போரீஸ் உக்ரைன் சென்றார். அங்கு அவர் உக்ரைன் நாட்டு அதிபர் செலன்ஸ்கியுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு படையினருடன் சென்று பார்வையிட்டனர். போரீஸ் வருகையால் செலன்ஸ்கி கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளார்.

1:27 PM IST
போர் தலைமை ஜெனரல் மாற்றம்

உக்ரைனில் போரை வழிநடத்தி வரும் போரை தலைமை ஏற்று நடத்தும் கவர்னர் மாற்றப்பட்டுள்ளார். ஜெனரல் அலெக்சாண்டர் டி வோர்னிகோவ் பொறுப்பேற்க உள்ளதாக ஐரோப்பிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது . இவர் சிரிய மீதான போர் நடவடிக்கைக்கு பொறுப்பேற்று நடத்தியவர் ஆவார்.

4:10 PM IST
பிரிட்டன் தடை

உக்ரைன் மீது தாக்குதலை கண்டித்து, ரஷ்ய அதிபர் புடின் மகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், பிரிட்டனும் தடை விதித்து, அவர்களின் சொத்துகளை முடக்கியுள்ளது.

4:10 PM IST
35 பேர் பலி

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக ரயில்வே நிறுவனம் வெளியிட்ட அறிக்கை; இந்த தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரயில் நிலையத்தில், பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக மக்கள் காத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2:06 PM IST
கிழக்கு பகுதியில் தாக்குதல் துவக்கம்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய தாக்குதல் துவங்கியதாக அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள 2 ரயில் நிலையங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், இது குறித்த சேதம் ஏதும் வெளியாகவில்லை.

12:31 PM IST
போர் சட்ட மீறல் எத்தனை ?

உக்ரைனில் ரஷ்யா போர்குற்றம் புரிந்துள்ளது என உக்ரைனின் நட்பு நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதற்கிடையில் ரஷ்ய நடத்திய போர்குற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதன் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில்: ரஷ்யா இது வரை மொத்தம் 5,149 போர் குற்றம் புரிந்துள்ளது. உக்ரைன் தேசிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக குற்றம் புரிந்தததாக 2,541 வழக்குகளும், மிக முக்கிய போரகொடூர குற்றம் 432 என்றும் தெரிவித்துள்ளது. இதுபோல் 169 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 306 குழந்தைகள் காயமுற்றதாகவும் இந்த விவரத்தில் கூறப்பட்டுள்ளது. போர் சட்டங்களை மீறிய ரஷ்யா , உக்ரைன் நாட்டு சட்டங்களை மீறியதாகவும் தெரிவிக்கிறது சட்ட அமைச்சகம்.

9:50 AM IST
உக்ரைன் படையினர் ஆய்வு

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மக்கள் மாற்று இடம் நோக்கி நகர்ந்து செல்கின்றனர். கியூ மற்றும் மரியுபோல், புச்சா உள்ளிட்ட நகரங்களை விட்டு ரஷ்ய படையினர் வெளியேறி உள்ளனர். இந்த பகுதிகளில் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என உக்ரைன் படையினர் மோப்ப நாய் உதவியுடன் தேடி வருகின்றனர்.

9:43 PM IST
ஐ.நா., மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்

நியூயார்க்: ஐ.நா., மனித உரிமை அமைப்பில்இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3:11 PM IST
கூடுதல் ஆயுதங்கள் தாருங்கள்

ரஷ்யாவுடன் போரிட எங்களுக்கு கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுகிறது. எனவே நேட்டோ நாடுகள் விரைந்து ஆவன செய்ய வேண்டும் என உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

8:48 AM IST
உக்ரைன் மக்களுக்கு துணிச்சல்: அமெரிக்கா பாராட்டு

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என அமெரிக்க பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக தங்களின் நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள் துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.

7:35 AM IST
ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம்; உக்ரைன் துணை பிரதமர்

உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க், கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் துணை பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏனெனில் ரஷ்யா அப்பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

11:33 AM IST
இந்தியா வலியுறுத்தல்

உக்ரைனின் புச்சா நகரில் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இந்த சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறியுள்ளது.

11:29 AM IST

பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் மரியபோல் நகரில், கடுமையான மோதல் நடந்து வருகிறது. விமானப்படைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்து வருகிறது. அங்கு சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

11:28 AM IST

உக்ரைனுக்கு இன்னும் ஆதரவு அளிப்பது தொடர்பாக நேடோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பிரஸ்ஸல்ஸ் நகரில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

11:07 AM IST

11:06 AM IST
சோகத்தை ஏற்படுத்திய படம்

உக்ரைன் நாட்டவர்களை ரஷ்ய வீரர்கள் சித்ரவதை செய்து, கொலை செய்து உடல்களை சாலைகளில் வீசியுள்ள படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான படம் ஒன்று போரின் சோகத்தை உணர்த்தியுள்ளது.தன் சிறு குழந்தையின் முதுகில் தாய் தன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஒருவேளை தான் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டால் அல்லது பிரிய நேரிட்டால், குழந்தையால் குடும்பம் குறித்த விபரங்களை தெரிவிக்க முடியாது என்பதால், அதன் முதுகில் எழுதியுள்ளதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். இதுபோல, பல பெற்றோர், தங்களுடைய விபரங்களை குழந்தைகளின் முதுகில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

11:06 AM IST
'ஆசிட் டேங்கர்' வெடிப்பு

உக்ரைனின் கிழக்கே உள்ள லுஹான்க்ஸ் பகுதி மக்களுக்கு அந்தப் பிராந்திய அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில், 'நைட்ரிக் ஆசிட்' ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், நச்சுப் புகை பரவும் அபாயம் உள்ளது. அதனால், ஜன்னல் உள்ளிட்டவற்றை மூடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமபடி, பிராந்திய அரசு எச்சரித்துள்ளது.

11:06 AM IST
பயங்கரவாத நாடு

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவின் போர் நடவடிக்கை, எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் சற்றும் குறைவில்லாததாக இருக்கிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடே இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், உக்ரைனில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

11:05 AM IST
குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நிலையில், நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

5:21 AM IST
எந்த போர் குற்றத்தையும் செய்யவில்லை; ரஷ்யா

ரஷ்யா எந்தவொரு போர் குற்றத்தையும் செய்யவில்லை. புச்சா பகுதியில் கிடக்கும் உடல்கள், ரஷ்ய படையினரால் கொல்லப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.

3:07 PM IST
உக்ரைனுக்கு பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில்; உக்ரைன் மக்களின் எழுச்சியை புடின் தடுக்க முடியாது. அது போல் அவரால் உக்ரைனை கைப்பற்றவும் முடியாது. நாங்களும் ஆயுதம் உள்ளிட்ட எங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளோம். உக்ரைன் மக்கள் மீண்டு வருவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

12:15 PM IST
கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணங்கள்

உக்ரைனின் புச்சா நகரில் ஒரு இடத்தில் 10 க்கும் மேற்பட்ட பிணங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் நெற்றியில் சுடப்பட்டு கிடந்தன.

11:40 AM IST
மொத்தமாக பிணங்கள் புதைப்பு

உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கான பிணங்கள் சிதறி கிடப்பதாகவும், பல பிணங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

7:39 AM IST
போர்க்குற்றம்; உலக நாடுகள் கண்டனம்

கொடூரமான போர்க் குற்றம் நடந்துள்ளது; ஜெர்மனி கண்டனம். போர்க்கள காட்சிகளின் படங்கள் தாங்க முடியாத அளவில் இருக்கிறது என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார். போர்க்குற்றத்துக்கு ஆதாரமாக வெறுக்கத்தக்க தாக்குதல் நடந்துள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

3:52 PM IST
உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதல்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா புதிய தாக்குதலை துவக்கி இருக்கிறது. துறைமுக நகரான ஓடேசாவில் ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இங்கு பலத்த சப்தத்துடன் பெரும் குண்டு வெடித்தாதாகவும் தொடர்ந்து கரும்புகை கிளம்பி வான் அளவை தொட்டதாகவும் அங்குள்ள உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள எண்ணெய் கிடங்கை அழிக்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணையை வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.

8:41 AM IST
ராணுவ பணி கட்டாயம் !

உக்ரைனில் வசிக்கும் மக்களை ராணுவத்தில் இணைந்து பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஐ.டி. மாணவன் இவான் என்பவர் இந்த புகாரை கூறியுள்ளார். வாழ்வில் துப்பாக்கியை கையில் ஏந்தாத என்னை துப்பாக்கி எடுக்க சொல்கின்றனர் என்கிறார்.

7:30 AM IST
கீவ் நகர் முழுவதும் உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்தது

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதால், உக்ரைன் படைகள் கிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன என்று உக்ரைன் துணைப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2:59 PM IST
பிரிட்டனும் தாக்கியது !

உக்ரைனில் ரஷ்ய போர் துவங்கியதில் இருந்து இரு படையினர் இடையேகடும் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்களின் ஆதரவை தெரிவித்து கூடுதல் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு லுகான்ஸ்க் ரஷ்யாவின் எம்.ஐ28என்ற ஹெலிகாப்டரை பிரிட்டன் ஏவுகணை தாக்கி வீழ்த்தியது.

8:32 AM IST
ரஷ்யாவின் எண்ணை நிறுவனம் மீது தாக்குதல்

உக்ரைனின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய பெல்குரோட் என்ற பகுதியில் உக்ரைன் ஹெ லிகாப்டர்கள் சென்று குண்டுகளை போட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதனை ரஷ்ய, உக்ரைன் படையினர் உறுதி செய்யவில்லை .

10:57 AM IST
நேட்டோ அதிகாரிகள் கவலை

உக்ரைனில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் கிழக்கு பகுதியை தாக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் பேர் கொண்ட ராணுவ வீரர்களை அனுப்ப ரஷ்யா தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

3:09 PM IST
அச்சமுறும் ஆலோசகர்கள்

உண்மையை சொல்ல ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகர்கள் அஞ்சுவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புடினின் முக்கிய ஆலோசகர் ஒருவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

10:28 AM IST
ராணுவ தளபதி -புடின் இடையில் மோதலா ?

உக்ரைன் மீது நடத்திய போரில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை என்பதால் ரஷ்ய ராணுவ தளபதிகள், அதிபர் புடின் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. போரை நடத்த சில தளபதிகளே முன்மொழிந்ததாகவும், இதனை புடின் புறக்கணித்திருக்கலாமோ என்று தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது.

9:04 AM IST
மரியூபோல் நகரில் ஒரு நாள் போர் நிறுத்தம்

உக்ரைனின் மரியூபோல் நகரில் இன்று மனிதாபிமான அடிப்படையில் இன்று (மார்ச்.31) ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மரியூபோல் நகரம் ரஷ்ய கட்டப்பாட்டுக்குள் இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

7:11 AM IST
யூரோக்களையே அனுமதிக்க வேண்டும்; ஜெர்மனி

ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கும் இயற்கை எரிவாயுவிற்கு ஈடாக யூரோக்களையே செலுத்த ரஷ்யா அனுமதிக்க வேண்டும். மாறாக ரூபில்களை செலுத்தச் சொல்வது, அச்சுறுத்துவது போல் உள்ளது என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

6:25 AM IST
உக்ரைன் மீது தாக்குதலை தொடரும் ரஷ்யா

கீவ்: ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வதாக ரஷ்யா கூறியிருந்த நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் தாக்குதலை மீண்டும் துவங்கி உள்ளது. செனிசிவ் மற்றும் கீவ் நகரங்களில் புதன் இரவு முதல் தாக்குதலை ரஷ்யா துவங்கியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது

5:15 PM IST
முன்னேற்றமில்லை

ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தாங்கள் என்ன முன்மொழிகிறோம் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது மட்டுமே சாதகமாக விஷயம். தற்போது வரை அதனை எங்களால் பெற முடியவில்லை. மற்ற விஷயங்களை தற்போது எதுவும் கூற முடியாது. தற்போதைய நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

5:15 PM IST
நிபந்தனை

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், மரியபோல் நகர் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.அதேநேரத்தில், அந்நகரில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு உதவும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக புடின் உறுதி அளித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

8:55 AM IST
அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டினர் உடனே வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா தடுத்து வைக்கலாம் என்பதால் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும். ரஷ்யாவுக்கு பயணம் செய்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறுவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

8:48 PM IST
நேட்டோ உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் அழைப்பு

ஏப்ரல் 6-7 தேதிகளில் திட்டமிடப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு உக்ரைன் அழைத்துள்ளது. இந்த உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ளது. ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகியவை உறுப்பினர் அல்லாத பிற நாடுகள் அழைக்கப்படுகின்றன.

5:49 PM IST
படைகளை குறைக்கும் ரஷ்யா

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே செர்னிகிவ் பகுதியில் ரஷ்யா படைகளை குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஷ்ய குழுவினர் தகவல் தெரிவித்தனர்.

3:04 PM IST
பிற நாடுகளிடம் ஆயுதம் கேட்கிறார்

ரஷ்யாவுக்கு அஞ்சி பிற நாட்டவர்கள் எங்களுக்கு உதவுவதில் அஞ்ச வேண்டாம். மாஸ்கோவுக்கு பதிலடி கொடுத்திட தைரியமான ஆயுதங்களை வழங்குங்கள். அச்சம் சிலரை கட்டிப்போடுகிறது. ஆயுதங்கள் வரவில்லை என்பதால் உக்ரைனியர்கள் சாகக்கூடாது. இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

2:17 PM IST
நாய், பூனை கறி சாப்பிடும் ரஷ்ய படையினர் ?

கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர். இதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார். இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். அதிலும் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.

10:16 AM IST
ரஷ்யா, உக்ரைன் 6 வது சுற்று பேச்சு

ரஷ்யா , உக்ரைன் இடையிலான 6 வது சுற்று பேச்சு இன்று துருக்கியில் நடக்கிறது. இதற்கான பேச்சு குழுவினர் இன்று காலையில் துருக்கியில் கூடினர்.

3:17 PM IST
பிரிட்டன் வர்த்தகம் தொடர்பான உத்தரவு

ரஷ்யாவுடன் பொது நிறுவனங்கள் எந்தவொரு வர்த்தக தொடர்பையும் வைத்து கொள்ள வேண்டாம். என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

1:39 PM IST
கியூ நகரில் ஆன்லைன் வகுப்புகள்

ஒரு புறம் போர் நடந்தாலும் மாணவர்கள் பள்ளி படிப்பை கருதி ஆன்லைனில் பாடம் துவக்கி இருப்பதாக கியூ நகர மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறியுள்ளார். ராணுவ சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் கல்விப்பணி மிக முக்கியமானதாகும். என்றும் தெரிவித்துள்ளார் மேயர்.

11:49 AM IST
அமைதியை எதிர்நோக்கி.,

கடும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்தால் ரஷ்யா உக்ரைனுடன் உடனடி பேச்சு நடத்த வேண்டும். தாமதிக்காமல் அமைதியை நிலைநாட்ட பேச்சு மிக அவசியம். அமைதியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

6:22 AM IST
உக்ரைனின் விவ் நகரில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்

விவ்: உக்ரைன் ரஷ்யா இடையே 33 நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரின் விவ் நகரில் ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்நகரில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே துகுக்கியில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

8:05 PM IST
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி

உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

3:14 PM IST
சீயோலில் ஆர்பாட்டம்

ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக தென்கொரியா தலைநகர் சீயோலில் ஆர்பாட்டம் நடந்தது.

1:01 PM IST
இன்றைய (மார்ச்-27) காட்சிகள்

8:30 AM IST
உக்ரைன் மக்களோடு நாங்களும் நிற்கிறோம்: பைடன்

போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்களிடம் உரையாற்றுகையில்: உக்ரைனில் ரஷ்யா வெற்றி பெற முடியாது. உக்ரைனில் ஒரு அங்குல இடத்தைகூட விட்டு தர மாட்டார்கள். அங்கு நடப்பது சுதந்திரத்திற்கான போராட்டம். உக்ரைனில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலுக்கு பின்னர் நேட்டோ நாடுகளின் உறவுகள் மற்றும் நெருக்கம் அதிகரிக்கிறது. உக்ரைனில் புடின் தவறு செய்துள்ளார். அவர் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். உலக நாடுகள் அமைதியை பின்பற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போர் காரணமாக உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். மக்களை கொன்று புடின் இறைச்சி வியாபாரியாக மாறியுள்ளார். அவர் இன்னும் அதிகாரத்தில் நீடிக்க முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும். இவ்வாறு பைடன் பேசினார். முன்னதாக உக்ரைன் அகதிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

9:32 PM IST
உக்ரைன் அகதிகளை சந்தித்தார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள பிஜிஇ நரோடோவி ஸ்டேடியத்திற்கு சென்றார். அங்கு உக்ரேனிய அகதிகள் மற்றும் மனிதாபிமான உதவி செய்யும் ஊழியர்களை சந்தித்தார்.

1:18 PM IST
1,200 ஏவுகணைகள் தாக்குதல்

உக்ரைன் போரில் கடந்த 30 நாட்களில் 1200 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது.

10:42 AM IST
பலத்த அடி கொடுத்தோம் !

ரஷ்ய படையினருக்கு உக்ரைன் பலத்த அடி கொடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு ரஷ்யாவுக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

9:33 AM IST
ரஷ்ய ராணுவ ஜெனரல் டிஸ்மிஸ்

ஜெனரல் விளாடிஸ்லாவ் யார்சோவ் என்ற ரஷ்ய ஜெரனல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் அவர் வீட்டு சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. உக்ரைன் மீதான போரை நேர்த்தியாக கொண்டு செல்லாமல் பின்னடவை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

8:31 AM IST
7 ராணுவ ஜெனரல்கள் பலி

உக்ரைனில் ரஷ்யாவின் 7 ராணுவ ஜெனரல்கள் பலியாகி இருப்பதாக லண்டன் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

10:23 PM IST
ரஷ்ய போர்க்கப்பலை அழித்த உக்ரைன் படைகள்

பெர்டியன்ஸ்கில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனியப் படைகள் அழித்ததாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

9:44 PM IST
ரஷ்ய ராணுவ அதிகாரி பலி

கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. தற்போதைய நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டையின் போது ரஷ்ய நாட்டின் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது

9:01 PM IST
3.7 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதலால் இதுவரை சுமார் 3.7 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா அகதி அதிகாரி தெரிவித்துள்ளார்.

3:00 PM IST
சிறுவர்கள் பலி ; உக்ரைன் அரசு கவலை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் துவங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 184 பேர் காயமுற்றதாகவும் இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.

12:27 PM IST
தாமதமான ஆதரவு: செலன்ஸ்கி கவலை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கியும் ஐரோப்பிய நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. கொஞ்சம் தாமதமான முடிவுகள் ரஷ்யாவுக்கு தைரியத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

8:57 AM IST
உக்ரைன் தனி ஆள் இல்லை: பிரிட்டன் பிரதமர்

உக்ரைன் தனியாக போராடவில்லை. நாங்களும் இருக்கிறோம் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார். நேட்டோ மாநாட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புடின் அமைதியை விரும்பவில்லை. மாறாக உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார். தாக்குதல் தொடரும் பட்சத்தில் பிரிட்டன் தனது ஆயுத உதவியை அதிகரிக்கும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தினால் அவர் பேரழிவை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

5:49 AM IST
6,000 ஏவுகணைகள் வழங்க பிரிட்டன் முடிவு

உக்ரைனுக்கு, பிரிட்டன் சார்பில் ஏற்கனவே, 4,000க்கும் அதிகமான பீரங்கி தகர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 6,000 ஏவுகணைகளை வழங்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

10:19 PM IST
ரஷ்யா ரசாயண குண்டுகளை பயன்படுத்தும் அபாயம்: உக்ரைன் அதிபர்

ரஷ்யா ராசாயண குண்டுகளை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு கூறினார். மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறவதற்கும் உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் நேட்டோ நாடுகள் கட்டுப்பாடற்ற ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

3:00 PM IST
சீனி, வெங்காயம் விலை விர்ர்.,

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர்.

12:12 PM IST
உக்ரைன் துறைமுகம் தீ பற்றி எரிகிறது

பெர்டியான்ஸ்க் என்ற துறைமுகத்தில் ரஷ்ய கப்பல்கள் கடும் தாக்குதலை துவக்கியது. இதில் துறைமுகம் முழுவதும் தீ பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:58 AM IST
" ஒரு மாத போர்" - மக்களை அழைக்கிறார் உக்ரைன் அதிபர்

கியூ: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவக்கி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ரஷ்யாவை எதிர்கொண்டு ஒரு மாதம் தொடர்ந்து போராடி வரும் நமது தைரியத்தை பாராட்டி மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவியுங்கள் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கேட்டு கொண்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் மக்கள் தங்களின் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10:03 AM IST
உக்ரைனுக்கு பிரிட்டன், சுவீடன் ஆயுத உதவி

உக்ரைனுக்கு பிரிட்டன், சுவீடன் ஆயுதங்கள் அனுப்பின. பிரிட்டன் 6 ஆயிரம் ஏவுகணைகளையும், சுவீடன் ராணுவ டாங்குகளை வீழ்த்தும் 5 ஆயிரம் ஏவுகணைகளையும் அனுப்பி வைத்துள்ளன.

9:10 AM IST
ரஷ்ய தீர்மானம் தோல்வி

மனித நேயம் நிலவரம் குறித்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவு அளிக்காததால் ஐ.நா., பாதுகாப்பு குழு கூட்டத்தில் தோல்வியை தழுவியது ரஷ்யா.

8:40 AM IST
ரஷ்யா பின்வாங்குமா ?

உக்ரைனின் அருகில் உள்ள போலந்து நாட்டில் அமெரிக்கா தன் படைகளை இறக்கி உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் கூடுதல் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா போரை துவக்கி 4 வாரங்களுக்கு மேல் ஆகியும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாததால் அந்நாட்டு அதிபர் புடின் கவலை அடைந்துள்ளார். ரஷ்ய படையை, இத்தனை நாள் சமாளித்து களத்தில் நிற்கிறது என்றால் உக்ரைனுக்கு இது பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. ரஷ்ய வீரர்கள் பலரை இழந்துள்ளதால் போரை நிறுத்தலாமா என்றும் யோசிக்க துவங்கி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 3 நாளில் போர் நிறுத்த அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.

5:08 PM IST
ஜெர்மனி தலையிடாது

ஜெர்மனி சான்சிலர் ஒலாப் ஷோல்ஜ் கூறுகையில், உக்ரைன் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஜெர்மனி ராணுவம் அதில் தலையிடாது. இந்த போரில் நேடோ ஒரு அங்கம் இல்லை. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி செய்துள்ளது. ஆயிரகணக்கான உக்ரைன் அகதிகளை ஜெர்மனிக்கு வந்துள்ளனர் எனக்கூறிய அவர், ரஷஅயா எண்ணெய், காஸ், நிலக்கரியை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் எனக்கூறினார்.

5:07 PM IST
பிரான்ஸ் உதவி

ரஷ்ய தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனக்கு உதவும் வகையில் மீட்பு வாகனங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது. 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு வீரர்கள், 11 தீயணைப்பு வானங்கள், 16 மீட்பு வாகனங்கள், 49 டன் சுகாதார மற்றும் அவசர கருவிகளுடன் 23 டிரக்குகள் உக்ரைனுக்கு செல்வதாக பிரான்ஸ் வெளியுறுவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4:54 PM IST
அச்சுறுத்தல்

அமெரிக்காவின் பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்யாவின் அறிவிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அணுசக்தி வைத்துள்ள நாடு செயல்படும் விதம் இதுவல்ல என்றார்.

4:54 PM IST
ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் அணுஆயுதங்களை பயன்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு கொள்கை உள்ளது. அது வெளிப்படையானது. அனைவரும் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணுஆயுதங்களை பயன்படுத்துவோம் எனக்கூறினார்.

4:00 PM IST
மஸ்கோவில் ரெட் கிராஸ் தலைவர்

உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக தடைபட்டுள்ள மனிதாபிமான பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச ரெட் கிராஸ் தலைவர் பீட்டர் மயுரர், ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க உள்ளார்.

3:53 PM IST
ரஷ்யா சலுகை

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்பவர்களுக்கு ராணுவ வீரர்கள் என்ற சலுகை அளிக்கும் சட்டம் ரஷ்யா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த அந்தஸ்தை பெறுபவர்களுக்கு மாத சம்பளம், வரி சலுகை, மருத்துவ சிகிச்சையில் முன்னுரிமை உள்ளிட்டவை கிடைக்கும்.

3:53 PM IST
நிவாரண பணியளர்களை தடுத்த ரஷ்யா

மரியபோல் நகரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வந்தவர்களை ரஷ்ய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது

1:08 PM IST
ஆயுதம் ரஷ்யாவிடம் குறைந்ததா ?

300 ரஷ்யவீரர்கள் போர் நடத்த மறுத்து திரும்பியதாக உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் ரஷ்ய படையினரிடம் இன்னும் 3 நாட்களுக்கே தேவையான குண்டுகளும், எரிபொருளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை ரஷ்யாவின் பெரியதாக கருதப்படும் 13 தாக்குதலை முறியடித்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

10:55 AM IST
குடியிருப்பு மீது தாக்குதல்

குடியிருப்பு மற்றும் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது.

7:49 AM IST
ரஷ்யா ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தலாம்; ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில், ரஷ்யா தோற்கும் நிலை வந்தால், அதிபர் புடின் ரசாயண அல்லது உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

12:12 AM IST
ஆயுதங்களை கைவிட மாட்டோம்; உக்ரைன்

ஆயுதங்களை கைவிட்டால், பொதுமக்களும் மற்றும் ராணுவத்தினரும் மரியபோல் நகரத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற வழிசெய்து கொடுப்பதாக ரஷ்யா அறிவிப்பு செய்தது. இதனை உக்ரைன் ஏற்க மறுத்து, ஒருபோதும் மரியபோல் நகரத்தை கைவிட மாட்டோம், சரணடையவும் மாட்டோம் என தெரிவித்துள்ளது.

5:37 PM IST
அம்மோனியா ஆலைகள் மீது தாக்குதல்

ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனில் உச்சமடைந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. சரண் அடைந்தால் விட்ருவோம் என ரஷ்யா எச்சரித்தும் உக்ரைன் பின்வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் அணு ஆயுதம் மற்றும் அம்மோனியா ஆலைகள் மீது தாக்குதல் நடந்திருப்பதால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

10:36 AM IST
போலந்துக்கு பைடன் செல்வாரா ?

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நடந்து வரும் வேளையில் ரஷ்ய அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. நேட்டோ நாடானா போலந்துக்கு பைடன் செல்லும் விவரத்தை வெளிப்படையாக வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை.

6:21 AM IST
ரஷ்யா செய்வது யுத்தம் அல்ல; பயங்கரவாதம்: ஜெலன்ஸ்கி

கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 26வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் :உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா தற்போது செய்து வருவது யுத்தம் அல்ல பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மேலும், ரஷ்யா அதிபர் புடினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

8:20 PM IST
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தகவல்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் மார்ச் 19 வரை பொதுமக்கள் 902 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1459 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

6:11 PM IST
குழந்தைகள் பலி

ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

3:21 PM IST
உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர்

உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3:06 PM IST
பள்ளி மீது தாக்குதல் !

உக்ரைனில் மரியூபோல் நகரத்தில் மக்கள் தங்க வைக்கப்பட் பள்ளி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 400 பேர் காயமுற்றனர்.

8:42 AM IST
ராணுவ முகாம் அழிப்பு

உக்ரைன் மைகோலைவ் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது ரஷ்ய படை அதிரடி தாக்குதல் நடத்தியது. ராணுவ வீரர்கள் பலர் இரவு நேரம் என்பதால் உறங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் பலர் காயமுற்றனர். சேதம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக இல்லை.

8:35 PM IST
அமைதியான தீர்வு தேவை: ஜப்பான் பிரதமர்

உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியான தீர்வு தேவை: ஜப்பான் பிரதமர்

3:29 PM IST
பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் !

ரஷ்யா அமைதி பேச்சு நடத்த கால தாமதமின்றி வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் இன்று 4 வது முறையாக வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ரஷ்யா பொருட்படுத்தவில்லை. அமைதிக்கு வழி ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

12:52 PM IST
பைடனுக்கு ரஷ்யா கண்டனம்

ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி பெறும் எண்ணெய் மூலப்பொருட்கள் இறக்குமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க அதிபர் போர் குற்றம் புரிந்துள்ளார் என கூறியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

8:04 AM IST
30 குடியிருப்புகளை கைப்பற்றியது உக்ரைன் ராணுவம்

உக்ரைன் ராணுவம் கீவ் அருகே உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தனது கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவந்துள்ளது. தலைநகர் கீவ்-ல் இருந்து 70 கிமீ தொலைவுக்கு ரஷ்ய ராணுவத்தை பின்னுக்குத் தள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

7:54 AM IST
65 லட்சம் உக்ரைன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்வு

ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உள்நாட்டில் 65 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

12:50 AM IST
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடையில் நார்வே இணைந்தது

ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்து வருகின்றன. இதில் நார்வே நாடும் இணைந்துள்ளது. நார்வேயில் இருந்து பொருட்கள், சேவைகள், மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நார்வே அறிவித்துள்ளது.

4:04 PM IST
ரஷ்யா தொடர் தாக்குதல்

3:51 PM IST
அழிப்பு

உக்ரைன் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

3:51 PM IST
ஏவுகணை தாக்குதல்

லிவிவ்: உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், லிவிவ் நகரில் பல ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இதில், ராணுவ விமானங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் இடம் மற்றும் பஸ் ரிப்பேர் செய்யும் இடம் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதனால், அந்த இடங்கள் உடனடியாக மூடப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.

3:43 PM IST
உலக சுகாதார அமைப்பு கவலை

ஐக்கிய நாடுகள் சபையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னாம் கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் என மொத்தம் 43 தாக்குதல் நடந்துள்ளன. அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம். மருத்துவ சேவை தடைபடுவதால், புற்றுநோய், நீரழிவு, எச்ஐவி, காசநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதால், கோவிட், நிமோனியா மற்றும் போலியோ போன்ற நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. மன நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து , உணவு உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது என்றார்.

3:40 PM IST
ஜெலன்ஸ்கி நன்றி

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்க அதிபர் பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஆனால், என்ன உதவிகள் செய்யப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், அது எங்களின் பாதுகாப்பு. ரஷ்யாவிற்கு கூடுதல் தகவல்களை ரெிவிக்க விரும்பவில்லை. போரை சந்திக்க எப்படி தயாராகி உள்ளோம், எங்களிடம் உள்ள தற்காப்பு நடைமுறைகளை பற்றி ரஷ்யாவிற்கு தெரியாது எனவும் கூறினார்.

3:31 PM IST
கச்சா எண்ணெய் இறக்குமதி

கடந்த வாரம், 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை, ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது.இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில்,அமெரிக்கா மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, இந்தியாவின் ஒர நாளைய கச்சா எண்ணெய் தேவை 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

3:30 PM IST
போரை நிறுத்துங்கள்

பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா முன்னாள் கவர்னருமான அர்னால்ட் வெளியிட்ட வீடியோவில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். ரஷ்யா தான் போரை துவக்கி உள்ளது. உக்ரைன் துவக்கவில்லை எனக்கூறியுள்ள அவர், உக்ரைன் வீரர்கள் தான் புதிய கதாநாயகர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

3:30 PM IST
அமெரிக்கர் பலி

செர்னிஹிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

3:28 PM IST
விசாரணைக்கு கோரிக்கை

உக்ரைனில் குடிமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

3:28 PM IST
தேடும் பணி தீவிரம்

மரியபோல் நகரில், மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் நிலையில் அங்கு உயிருடன் உள்ளவர்களை மீட்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உறுதியான தகவல் இல்லை.

3:17 PM IST
ரஷ்ய ஆதரவு சேனலுக்கு தடை

ரஷ்யாவின் ஒளிபரப்பு நிறுவனம் நிதியுதவியுடன் செயல்படும் டிவி சேனலின் லைசென்சை பிரிட்டன் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

3:17 PM IST
சீனாவுக்கு எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் பைடன் பேச உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உதவி செய்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

7:11 PM IST
போலந்திற்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்குகிறது இங்கிலாந்து

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக நோட்டோ உறுப்பு நாாடன போலந்திற்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இங்கிலாந்து வழங்குகிறது என இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலாளர் பென்வாலஸ் கூறி உள்ளார்.

5:22 PM IST

உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது.

4:20 PM IST

சுதந்திரம் மற்றும் அடிமைதனத்திற்கு இடையே போர் மூலம் ரஷ்யா சுவர் எழுப்பி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

12:45 PM IST

மெலிடோபோல் மேயரை மீட்பதற்காக, தனது பிடியில் இருந்த 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் அரசு விடுதலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

11:55 AM IST

உக்ரைனில் 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியபோல் நகரில் ஆயிரகணக்கான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தியது. அதில், எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது தகவல் இல்லை.

11:17 AM IST
தியேட்டர் மீது தாக்குதல்

உக்ரைன் மரியூபோல் நகரத்தில் உள்ள தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்ய தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

7:05 AM IST
பைடனின் கருத்து மன்னிக்க முடியாதது: கிரெம்ளின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை ஒரு போர்க் குற்றவாளியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாத பேச்சு என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

6:50 AM IST
உக்ரைன் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது

உக்ரைனுக்கு வேண்டிய மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அவசரமாக இன்று(மார்ச்-17) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

12:47 AM IST

உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:46 PM IST
உக்ரைனுக்கு நீண்டதூர விமான எதிர்ப்பு ஆயுதங்கள்; அமெரிக்கா

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு நீண்ட தூர விமான எதிர்ப்பு ஆயுதங்களை அமெரிக்க விரைவில் வழங்க உள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மரியபோல் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

5:50 PM IST
டாக்டர்கள் எச்சரிக்கை

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, கோவிட் மட்டுமின்றி, காலரா, போலியோ உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

5:49 PM IST
அகதி

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், உக்ரைனில் ஒவ்வொரு நிமிடத்திற்கும், ஒரு குழந்தை அகதி உருவாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

3:59 PM IST
வேண்டுகோள்!

அமெரிக்க பார்லிமென்டிடம் கூடுதல் உதவிகளை கோர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மரியபோல் நகரில் தாக்குதல் கடுமையான நிலையில், ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

3:58 PM IST
ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில், ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.

3:56 PM IST
ஐரோப்பா செல்கிறார் பைடன்

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பா செல்ல உள்ளார்.

3:51 PM IST
வாய்ப்பு இல்லை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று பேட்டியளிக்கும் போது, நேடோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டதாகவும், உக்ரைனின் அரசியலமைப்பின் படி சாத்தியமில்லை ஒப்பு கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், எந்த நேரத்திலும் நேடோ அமைப்பில் உக்ரைன் இணைய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

3:51 PM IST

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த கோரிய வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஆனால், அதற்கு ரஷ்யா பணியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

9:00 PM IST
நேட்டோவில் இணையப்போவதில்லை ஏற்றுக்கொள்ளுங்கள்

நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2:51 PM IST
இன்றைய துயரக்காட்சிகள் ! (மார்ச்.15 )

2:19 PM IST
13,500 ரஷ்ய வீரர்கள் பலி

ரஷ்யா மீதான தாக்குதலுக்கு உக்ரைன் அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் 20வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதலில் இதுவரை 13,500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 81 போர் விமானங்கள், 95 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோல் உக்ரைனின் டிவி டவர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 19 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

11:37 AM IST
கட்டடங்கள் எரிந்து சாம்பல்

உக்ரைன் மொசூன் நகரில் ரஷ்ய படை தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள், பெரும் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகி கிடக்கிறது. இது தொடர்பான சேட்டிலைட் படம் வெளியாகி உள்ளது. ஆள் அரவமின்றி அமைதிக்காடாக காட்சி அளிக்கிறது.

9:14 AM IST
பிரிட்டன் நிருபர் காயம்

பிரிட்டன் பாக்ஸ் நிருபர் பெஞ்சமின் ராணுவ தாக்குதலில் காயமுற்றார்.

1:02 PM IST
சீனா வருமா ?

உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல் 20 நாட்களை தொடப்போகிறது. இருப்பினும் இன்னும் ரஷ்யாவால் உக்ரைனை தன் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் உக்ரைன் படையை சமாளிக்க ரஷ்யா , சீன உதவியை கேட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சீன தூதரகம் இதனை மறுத்துள்ளது.

8:51 AM IST
இன்று 19ம் நாள்

உக்ரைனில் தொடர்ந்து 19ம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் குண்டு மழை பொழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5:53 AM IST
ரஷ்யாவுக்கு ரூ 38,000 கோடி ராணுவ தளவாடங்கள் இழப்பு

உக்ரைனுடனான போரில் ரஷ்யா ரூ 38,000 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

4:45 PM IST
35 பேர் பலி

மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாக லிவிவ் மாகாண கவர்னர் கூறியுள்ளார்.

4:45 PM IST
விமானம் மூலம் தாக்குதல்

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலயிவ் நகரில், விமானம் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

2:46 PM IST
போலந்து அதிர்ந்தது !

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. போலந்து - உக்ரைன் எல்லை பகுதியான யவோரிவ் நகரில் விழுந்த ஏவுகணையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

11:30 AM IST
மேயர் கடத்தல் ; மக்கள் ஆர்பாட்டம்

உக்ரைன் மெலிடோபால் நகர மேயர் ரஷ்ய படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் வீதிகளில் வந்து ஆர்பாட்டம் நடத்தினர்.

8:28 AM IST
இன்றைய துயரக்காட்சிகள் ! (மார்ச்.13 )

இன்றைய துயரக்காட்சிகள் (மார்ச்.13 )

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery
Prev
6:34 AM IST
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உக்ரைன் அதிபர்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 17 வது நாளாக நீடித்து வரும் வேளையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.

1:52 PM IST
குண்டுவெடிப்பில் தப்பிய கர்ப்பிணி

உக்ரைனின் மரியூபோல் நகர் குழந்தைகள் மருத்துவமனையில் ரஷ்ய படை தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இந்நேரத்தில் முகம் முழுவதும் ரத்த துளிகளுடன் கையில் கிடைத்த சில உடமைகளை மட்டும் எடுத்து கொண்டு மருத்துவமனையில் இருந்து தப்பி வெளியேறினார். பின்னர் அவர் ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் தப்பி வரும் படம் வைரலாகி வருகிறது.

8:04 AM IST
சாதகமான முன்னேற்றம்

உக்ரைனில் பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

4:12 PM IST

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் எங்கிருந்து வந்தும் ரஷ்யா ராணுவத்தில் இணையலாம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

8:20 AM IST
தலைநகர் கியூவில் கடும் சண்டை

உக்ரைன் தலைநகர் கியூவை நெருங்கியது ரஷ்ய படை. இங்குள்ள நகர எல்லையில் கடும் சண்டை நடந்து வருகிறது. இன்னும் சில கிலோ மீட்டர் தொலைவே கியூ நகருக்குள் ரஷ்ய படை நுழைய வேண்டும்.

5:20 PM IST
மொத்தமாக உடல்கள் புதைப்பு

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் 3வது வாரத்தை தொட்டிருக்கிறது. இங்குள்ள மரியூபோல் நகரில் நடந்த தாக்குதலில் பலர் கொத்து, கொத்தாக மடிந்துள்ளனர். இறந்தவர்களை எவ்வித சடங்குமின்றி மொத்தம், மொத்தமாக புதைக்க உள்ளூர் அதிகாரிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

2:33 PM IST
கொதிக்கிறார் செலன்ஸ்கி

கியூ: உக்ரைனில் மரியூபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ராணுவ தாக்குதல் நடத்தி போர் குற்றம் புரிந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

6:17 PM IST
அனுமதி

உடைந்த பாலத்தில் உக்ரைன் அகதிகள் பயணித்து அண்டை நாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு ரஷ்ய ராணுவமும் வழிவிட்டு அவர்கள் நாட்டை விட்டுச் செல்ல அனுமதிக்கிறது.

5:11 PM IST
வேண்டுகோள்

உக்ரைன் அதிபர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

5:06 PM IST
அடைக்கலம் தேடி...

அடைக்கலம் தேடி...

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

அடைக்கலம் தேடி...

Photo Gallery
Prev
4:43 PM IST
பிரிட்டனுக்கு நன்றி

பிரிட்டன் பார்லிமென்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆற்றிய உரை: ரஷ்யாவிற்கு எதிரான போரில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஆதரவிற்கு பிரிட்டனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பதுடன், அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். உக்ரைனின் வான்வெளியை பாதுகாப்பாக வைக்க வேண்டும். உக்ரைன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2:41 PM IST
10 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் 14வது நாளாக தாக்குதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ், கார்கிவ், ஈர்பின் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இன்று இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கீவ் நகரில், ரஷ்ய படைகள், விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இதனிடையே, செவ்ரோடோநெஸ்ட்க் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

12:42 PM IST
போலந்து யோசனை நிராகரிப்பு

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள போலந்து நாடு, இதற்காக தன்னிடம் உள்ள மிக் 29 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடம் வழங்க தயாராக உள்ளதாகவும், அதனை அந்நாடு, உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால், இந்த திட்டம் ஏற்கத்தக்கது அல்ல எனக்கூறியுள்ள அமெரிக்கா, நேடோ அமைப்பிற்கு பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

12:00 PM IST
தகவல் துண்டிப்பு

உக்ரைனில் இருந்த செர்னோபில் அணு உலையை ரஷ்யா கைப்பற்றியதை தொடர்ந்து அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. அந்த அணு உலையுடனான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

10:05 AM IST
2 பேர் பலி

கார்கிவ் நகரில் விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அதில், குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள்.

10:03 AM IST
தடை

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

6:49 AM IST
லிவிவ் நகரில் தவிக்கும் மக்கள்

போர் துவங்கிய பின் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிவிவ் நகரில் தஞ்சம் அடைந்தனர். இங்குள்ள விளையாட்டு கூடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், தேவாலயங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்தார். இவர்களுக்கு உணவளிப்பது மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும், சமையலறைகளுடன் கூடிய மிகப் பெரிய கூடாரங்கள் தேவைப்படுவதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

6:47 AM IST
694 மாணவர்கள் வெளியேற்றம்

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் புரிகூறியதாவது: உக்ரைனில் போர் தீவிரம் அடைந்துள்ள சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதை நேற்றுமுன் தினம் உறுதி செய்தேன். அவர்கள் அனைவரும் பஸ் வாயிலாக, உக்ரைனின்போல்டாவா நகருக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். விரைவில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர்அரிந்தம் பக்சியும் இதை உறுதி செய்துள்ளார்.

6:44 AM IST
உக்ரைன் ஓட்டுனருக்கு பாராட்டு

இந்தியாவை சேர்ந்த ஹர்ஜோத் சிங், 31, என்ற மாணவர் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்தார். அவர் தற்போது பத்திரமாக டில்லி அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது உடலில் குண்டுகள் துளைத்த நிலையில், கீவ் நகரில் இருந்து சாலை மார்கமாக 700 கி.மீ., பயணித்து போலந்து நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான போர் நடந்து கொண்டிருந்த சூழலிலும், பல்வேறு தடைகளை கடந்து மாணவரை வேனில் பத்திரமாக அழைத்து வந்த உக்ரைன் நாட்டு ஓட்டுனரை இந்திய துாதரகம் பாராட்டி உள்ளது.

6:44 AM IST
இரு ரஷ்ய அதிகாரிகள் பலி

ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் விடாலி கெராசிமோவ், 45, என்பவர் கார்கிவ் நகரில் நடந்த சண்டையில் உயிரிழந்தார். இவர் சிரியா, செசன்யா மற்றும் கிரிமியாவில் நடந்த போரின்போது ரஷ்ய படையில் சிறப்பாக செயல்பட்டவர். ரஷ்ய விமானப் படையின் மேஜர் ஜெனரல் ஆன்ரே சுகோவெட்ஸ்கி என்பவரும் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6:44 AM IST
நிறுத்தப்படுமா எரிவாயு 'சப்ளை'

ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான இயற்கை எரிவாயு, ரஷ்யாவில் இருந்து குழாய் வாயிலாக அனுப்பப்படுகிறது. ரஷ்யா மீது பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளதை அடுத்து, இயற்கை எரிவாயு வினியோகத்தை ரஷ்யா தடை செய்ய வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து ஐரோப்பிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை உச்சத்தை எட்டியுள்ளது.

7:34 PM IST
போல்டாவாவுக்கு சென்ற 700 இந்தியர்கள்

உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள 700 இந்தியர்கள், பாதுகாப்பாக போல்டாவாவுக்கு சென்றனர்.

3:00 PM IST
" யாருக்கும் அஞ்ச மாட்டேன் " - செலன்ஸ்கி

உக்ரைன் நாட்டு அதிபர் செலன்ஸ்கி; " தான் நகரை விட்டு எங்கும் செல்லவில்லை. யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் உக்ரைன் கியூ நகரில் 500 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

1:35 PM IST
பலி

உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு வீசியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

1:25 PM IST

உக்ரைனில் கண்ணீர் காட்சிகள்

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

Photo Gallery

உக்ரைனில் கண்ணீர் காட்சிகள்

Photo Gallery

உக்ரைனில் கண்ணீர் காட்சிகள்

Photo Gallery
Prev
12:50 PM IST
எச்சரிக்கை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ள ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

11:58 AM IST
வீரர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்: புடின்

ராணுவ வீரர்களின் குடும்ப பெண்கள் அனைவரும் தியாகத்தை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: நமது ராணுவ வீரர்கள் பெருமை தரும் பணியை மேற்கொண்டுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர்களின் அன்புக்குரியவர்களான மனைவிகள், சகோதாரிகள் ,நண்பர்கள் அனைவரது உணர்வையும் நான் அறிந்துள்ளேன். நீங்கள் யாரும் கவலை கொள்ளாமல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி உறவுக்காரர்களும் பெருமை கொள்ள வேண்டும். போரில் யாரும் கட்டாயபடுத்த மாட்டார்கள். இவ்வாறு புடின் கூறியுள்ளார்.

8:04 AM IST
4 நகரங்களில் மேலும் போர்நிறுத்தம் : ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் கியூ, செர்னிவ், சுமி, மரியூபால் ஆகிய 4 நகரங்களில் மேலும் சில மணி நேரங்கள் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

7:57 AM IST
ரஷ்ய மேஜர் ஜெனரல் பலி

உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் ரஷ்ய மேஜர் ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

8:57 PM IST
ரஷ்யா - உக்ரைன் 3வது கட்ட பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாடுகளிடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது.

5:48 PM IST
மார்ச் 10ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் திமிட்ரோ குலோபா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் வரும் 10ம் தேதி துருக்கியில் உள்ள கடற்கரை மாகாணமான அண்டாலியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:17 PM IST
விசாரணை துவக்கம்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.

12:52 PM IST
செலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேசினார். உக்ரைன் மீது போர் துவங்கியது முதல் பிரதமர் மோடி தலையிட்டு புடினிடம் பேச வேண்டும் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்சி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று செலன்ஸ்கியுடன் போனில் 30 நிமிடங்கள் பேசினார்.

12:26 PM IST
4 நகரங்களில் போர் நிறுத்தம்

மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக சில மணி நேரங்கள் மட்டும் கியூ, கார்கிவ், மரியூபோல், சுமி நககரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11:42 AM IST
சரண் அடைய சொல்கிறார் புடின்

உக்ரைன் நாடு சரண் அடையும் வரை விட மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

8:20 AM IST
பொய் பழி சுமத்த உக்ரைன் திட்டம்

அணு உலை மீது தாங்களாகவே தாக்குதல் நடத்தி ரஷ்ய படை மீது பொய் பழியை சுமத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர்.

5:23 AM IST
ஆப்ரேஷன் கங்கா இறுதி கட்டம் இன்று துவக்கம்

உக்ரைன் மாணவர்களை மீட்கும் விதமாக மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் படி அந்நாட்டிலிருந்து மாணவர்கள் இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆப்ரேஷன் கங்கா இறுதி கட்டத்தை துவக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

5:16 AM IST
பைடனுடன் ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினார். அதில், ரஷ்யா மீது விதிக்கப்பட உள்ள பொருளாதார தடைகள் குறித்தும், உக்ரைனுக்கு அமெரிக்கா சார்பில் செய்யப்பட உள்ள உதவிகள் குறித்தும், இரு நாட்டு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.

5:14 AM IST
ராணுவத்தில் இணையும் மக்கள்

கீவ்: போர் தொடுத்து வரும் ரஷ்ய படையினருக்கு எதிராக சண்டையிட, ராணுவத்தில் இணையும்படி உக்ரைன் மக்களுக்கு, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று, தலைநகர் கீவில் உள்ள ராணுவ முகாமில், 18 - 60 வயது வரையிலான ஆண்கள் வரிசைகளில் காத்திருந்து, ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

5:08 AM IST
12வது நாளாக உக்ரைன் மீது தாக்குதலை தொடரும்ரஷ்யா

உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று கூறுகையில், “உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களை கீழே போடும் வரை, ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் முடிவுக்கு வராது,” என்றார்.

4:49 PM IST
ரஷ்யா திட்டம்

உக்ரைனின் துறைமுக நகரமான ஒதிசா நகர் மீது வெடிகுண்டுகளை வீச ரஷ்ய படைகள் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

1:19 PM IST
மாஸ்டர் மற்றும் விசா கார்டுக்கு தடை

உக்ரைன் மீதான தாக்குதல் நடத்துவதை கண்டிக்கும் வகையில், மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்கள் ரஷ்யா மீது நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி வெளிநாடுகளில் பெற்ற கார்டுகள் ரஷ்யாவிலும், ரஷ்யாவில் பெற்ற கார்டுகள் வெளிநாடுகளிலும் செல்லாது என அறிவித்துள்ளன.

8:22 AM IST
இஸ்ரேல் பிரதமர் சமாதான முயற்சி

உக்ரைன் மீதா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து உக்ரைன் அதிபருடனும் அவர் பேச்சு நடத்துவார். சமாதான தூதர் முயற்சி பலன் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

6:18 AM IST
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் துவங்கியது

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் துவங்கியது. உக்ரைனின் எல்லைப் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் பொதுமக்கள் 350 பேர் போரில் பலியானதாக சொல்லப்படுகிறது.

7:10 PM IST
தாயகம் திரும்பியோர் எண்ணிக்கை 13,300பேர்: வெளியுறவுத்துறை

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் இருந்து இது வரையில் 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்து இருப்பதாவது: உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். அந்நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 2,900 பேர் நாடு திரும்பி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

12:52 PM IST
உக்ரைனில் ரஷ்யா போர் நிறுத்தம்

உக்ரைனில் ரஷ்யா 10வது நாளாக (மார்ச்.5 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று காலை 11;30 மணி முதல் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. மனித பலி குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த வேளையில் ரஷ்யா மக்களின் நலன் கருதி இந்த போர் நிறுத்தம் முடிவை எடுத்திருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த நிறுத்தம் ஐந்தரை மணி நேரம் அமலில் இருக்கும் என தெரிகிறது.

10:44 AM IST
கூட்டம், கூட்டமாக மக்கள்

உக்ரைன் நாட்டில் ரஷ்ய தாக்குதலில் அங்குள்ள மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

2:35 PM IST
போயிங் நிறுவனம் நிதி

உக்ரைனிற்கு ரூ.15.23 கோடி நிதியுதவி அளிப்பதாக போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

12:21 PM IST
யாருக்கும் சேதம் இல்லை !

உக்ரைனின் ஷபோரிஷியா என்ற நகரில் உள்ள அணுமின் நிலையம் ஐரோப்பியாவிலேயே பெரியது ஆகும். இங்கு நடந்த தாக்குதலில் யாரும் காயம் இல்லை என்றும் அணு உலையில் சாதாரண நிலையே இருக்கிறது என்றும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

8:55 AM IST

உக்ரைனின்அணு உலை மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

6:26 AM IST
உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்

கீவ்: உக்ரைன் மீது 9வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள அணுமின் நிலையம் மீது ரஷ்யா படை தாக்குதல் நடத்தி உள்ளது.இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது: சபோரிசியாவில் உள்ள அணு உலை மீது ரஷ்ய படை நாலாபுறமும் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அணு உலை வெடித்தால் செர்னோபிலை விட 10 மடங்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.

6:26 AM IST
எல்லையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, அதன் அண்டைநாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். ஸ்லோவாக்கியாசென்றுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை சந்தித்து, அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

6:26 AM IST
ரஷ்யாவின் 130 பஸ்கள் தயார்“

உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரை, ரஷ்யாவின் பெல்கோரோட் நகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல 130 பஸ்கள் தயாராக உள்ளன,” என ரஷ்ய ராணுவத்தின் தலைமை அதிகாரி மிக்கேல் மிஸின்செவ் கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் போனில் பேசியபோது, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்தே ரஷ்ய ராணுவ அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

6:25 AM IST
கீவ் நகரில் ஏவுகணை தாக்குதல்

ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் கீவில் அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் இருக்கும் பகுதியில், சக்திவாய்ந்த ஏவுகணையை வீசி ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

6:25 AM IST
தேசிய கொடிகள் அகற்றம்

'ஒன் வெப்' என்ற தொலைதொடர்பு நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை, 'சோயுஸ்' ராக்கெட் வாயிலாக, ரஷ்யா நாளை விண்ணில் செலுத்துகிறது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் ஜப்பான் பங்கு பெற்றுள்ளன. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் மீது கோபத்தில் உள்ள ரஷ்யா, சோயுஸ் ராக்கெட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த மூன்று நாடுகளின் தேசிய கொடிகளை அகற்றி உள்ளது; இந்திய மூவர்ண கொடியை மட்டும் அகற்றவில்லை.

6:25 AM IST
பீரங்கியில் உல்லாச பயணம்

உக்ரைனில் நுழைந்து, தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் பீரங்கி ஒன்றை, உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அதில் அமர்ந்து அவர்கள் உல்லாசமாக பயணித்துள்ளனர். பின், அதை, 'செல்பி வீடியோ'வாக எடுத்து பதிவிட்டனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

6:24 AM IST
பேச்சுக்கு ரஷ்யா தயார்

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சு நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. எனினும் அதுவரை, உக்ரைன் நாட்டின் ராணுவ உள்கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

6:24 AM IST
உக்ரைனில் 227 பேர் பலி

ரஷ்ய படையினர் போர் தொடுத்து வரும் உக்ரைனில், பொதுமக்கள் 227 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 525 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.,வுக்கான மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. எனினும், உறுதிபடுத்தப்பட்ட உயிரிழப்புகள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்ககூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:23 AM IST
அகதிகளான 10 லட்சம் மக்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்றுள்ளதாக, ஐ.நா.,வின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்தது.

8:40 PM IST
போருக்கு எதிராக ரஷ்ய மக்கள் போராட்டம்

மாஸ்கோ:உக்ரைன்மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிராக ரஷ்யர்கள் போராட்டம் நடத்தினர். உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி விட்டு ரஷ்ய படைகள் நாடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

8:19 PM IST
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் புதிய சட்டம்

உக்ரைன் நாட்டில் ரஷ்ய அரசு மற்றும் ரஷ்யர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் இருந்தால் அதனை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

8:09 PM IST
ரஷ்யர்களின் சொத்துக்கள் பறிமுதல்

உக்ரைனில் உள்ள ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது

5:33 PM IST
எதுவும் இல்லை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைன் மீது போரை துவக்கி உள்ளதற்கு ரஷ்யா உரிய விலையை கொடுக்கும். நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சுதந்திரத்தை இழந்துள்ளோம். அனைத்து வீடுகள், தெருக்கள், நகரங்கள் அனைத்தையும் சீரமைப்போம். உக்ரைனுக்கு எதிராக செய்த அனைத்திற்கும் நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என ரஷ்யாவிற்கு கூறி கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

4:34 PM IST
உறவு துண்டிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

3:21 PM IST
வெளிநாட்டு மக்கள் வெளியே இடையூறு

வெளிநாட்டு மக்கள் உக்ரைனை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு இடையூறு செய்வதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது.

1:13 PM IST
தடகள வீரர்களுக்கு தடை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதன் எதிரொலியாக, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள், குளிர்கால பாராலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்து சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.

11:17 AM IST
10 லட்சம் பேர் வெளியேறினர்

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் 8-ம் நாளாக (மார்ச்.3) தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுவரை உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

11:05 AM IST
மறுப்பு

உக்ரைனில், இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, மாணவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

8:06 AM IST
கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்ய படை

உக்ரைனில் தலைநகர் கியூ உள்பட பல நகரங்ளை ரஷ்ய படை நெருங்கி உள்ளது. தற்போது கெர்சன் என்ற 3 வது முக்கிய நகர் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அந்நகர மேயர் உறுதி செய்துள்ளார்.

7:29 AM IST
போரை விரும்பாத ரஷ்ய வீரர்கள்

கீவ்: உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்ய அதிபரின் உத்தரவால் மட்டுமே உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள், இந்த போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் சொந்த ராணுவ வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர். சிலர் கண்ணீர் விட்டு அழுதும், தங்கள் கவலையை போக்கிக்கொள்கின்றனர்.

7:28 AM IST
3ம் உலகப் போர்: ரஷ்ய அமைச்சர் எச்சரிக்கை!

மாஸ்கோ: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நேற்று கூறுகையில், ''உக்ரைன் அணு ஆயுதத்தை கையில் எடுத்தால் இந்த போர் மிகவும் ஆபத்தானதாக மாறும். இந்த சண்டை மூன்றாம் உலகப் போராக மாறினால், அதில் அணுஆயுதங்களின் பங்கு நிச்சயம் இருக்கும். அது மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்'' என்றார்.

7:27 AM IST
அதிகரிக்கும், 'டிவி' பார்வையாளர்கள்

கீவ்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் போர் மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இதுகுறித்த தகவலை அறிந்துகொள்ள, அமெரிக்க மக்கள், 'டிவி' செய்தி சேனல்களை பார்க்க துவங்கி உள்ளனர். இதனால், அவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில், 64 லட்சம் பார்வையாளர்கள் செய்தி சேனல்களை பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.

7:26 AM IST
'பாபி யர்' நினைவு வளாகம் தகர்ப்பு: உக்ரைன் அதிபர் கண்டனம்

கீவ்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறுகையில், “வரலாற்று சிறப்புமிக்க, 'பாபி யர்' நினைவு வளாகத்தை ரஷ்ய படையினர் தகர்த்துள்ளது கண்டனத்திற்கு உரியது. இந்த தாக்குதல்கள், மத வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. உக்ரைன் வரலாற்றை அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது,” என்றார்.

7:26 AM IST
சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

கீவ்: தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, ஐ.நா.,வின் சர்வதேச நீதிமன்றத்தில், உக்ரைன் முறையிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, வரும் 7ம் தேதி, உக்ரைன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க உள்ளனர். 8ம் தேதி, ரஷ்ய வழக்கறிஞர்கள் வாதாட உள்ளனர்.

7:24 AM IST
உக்ரைனில் பஞ்சாப் மாணவர் மரணம்

கீவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில், ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடர், 21, என்ற மருத்துவ மாணவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் உக்ரைனில் உள்ள வினிட்சியா நகரில் வசித்த பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால், 22, என்ற மாணவர், மூளை நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். வினிட்சியா தேசிய மருத்துவ பல்கலையில், நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூளை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தன் ஜிண்டால் மரணம் அடைந்தார்.

7:24 AM IST
போலீஸ் தலைமையகம் தகர்ப்பு

கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள போலீஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தை, ரஷ்ய ராணுவத்தினர் நேற்று ஏவுகணை வீசி தகர்த்துள்ளனர். அந்த கட்டடத்தின் மேல்பகுதியில் தீ பற்றி எரியும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

7:23 AM IST
வானொலி நிலையம் மூடல்

மாஸ்கோ: ரஷ்யாவில் செயல்பட்டு வந்த, 'எக்கோ மோஸ்க்வி' என்ற வானொலி நிலையம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்நிலையில்,ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து போலி தகவல்கள் ஒலிபரப்பியதாக கூறி, அந்த வானொலி நிலையத்தை ரஷ்ய அரசு மூடியது.

7:23 AM IST
ரஷ்ய கப்பல்களுக்கு பிரிட்டன் அரசு தடை

லண்டன்: ரஷ்யா மீது, உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், தங்கள் நாட்டு துறைமுக பகுதிகளுக்குள் நுழைய, ரஷ்யா தொடர்புடைய அனைத்து கப்பல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக, பிரிட்டன் அரசு நேற்று அறிவித்தது. இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல் நாடாக பிரிட்டன் உள்ளது.

7:22 AM IST
போலந்து நாட்டிற்குள் விரைவாக நுழைய இந்தியர்களுக்கு அறிவுரை

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்நிலையில், நீண்ட வரிசைகளில் காத்திருக்காமல், போலந்து நாட்டிற்குள் விரைவாக நுழைய, புடோமியர்ஸ் எல்லை வழியாக செல்லுமாறு, இந்தியர்களுக்கு உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் நேற்று அறிவுறுத்தியது.

7:18 AM IST
இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது: இந்திய விமானப்படை

கீவ்: உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், நேற்று இதுகுறித்து இந்திய விமானப் படையின் துணை தளபதி சந்தீப் சிங் கூறுகையில், “ இந்த தடையால் சில சவால்கள் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், இவை இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது,” என்றார்.

10:19 PM IST
இந்திய மாணவர் பலி :உக்ரைன் தூாதர் இரங்கல்

உக்ரைன் ரஷ்யா தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்காக ஆழ்ந்த இரங்கலை உக்ரைன் தரப்பில் தெரிவித்து கொள்கிறேன் னெ ஐநாவிற்கான உக்ரைன் தூதர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் எங்களதுஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். என தெரிவித்து உள்ளார்.

8:37 PM IST
ரஷ்யாவுக்கு எதிராக 4-வது கட்ட பொருளாதார தடை :ஐரோப்பிய ஒன்றியம்

ரஷ்யாவுக்கு எதிராக 4-வது கட்ட பொருளாதார தடை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரையில் மூன்று கட்ட பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்ட உள்ள 4-ம் கட்ட பொருளாதார தடையானது ரஷ்ய நாட்டின் பெரு வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கை இந்த தடையில் இருக்கும் என கூறப்படுகிறது.

8:30 PM IST
ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீடககப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை பார்வையிட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ருமேனியா நாட்டிற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

8:30 PM IST
இந்தியர்களை மீட்க மேலும் 15 விமானங்கள் : வெளியுறவுத்துறை

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு வந்துள்ள இந்தியர்களை மீட்க மேலும் 15 விமானங்கள் இயக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8:10 PM IST
உக்ரைன் நாட்டு மகளிருக்கு போர் பயிற்சி அறிவிப்பு

உக்ரைன் நாட்டில் போருக்கு வந்து ரஷ்ய படைகள் தங்களது துருப்புகளை பறி கொடுத்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அந்த ஆயுதங்களை தங்கள் நாட்டு பெண்களுக்கு வழங்க உக்ரைன் அரசு திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து ஆயுதங்களை பெற்றுக்கொள்ள வருமாறு தங்கள் நாட்டு பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது உக்ரைன் அரசு.

7:22 PM IST
ரஷ்ய படைகள் தாக்குதலில் கார்கிவ் நகர பள்ளிகட்டடம் சேதம்

கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பள்ளி கட்டடம் சேதம் அடைந்தன.பள்ளி கூட சுவரை துளைத்து கொண்டு சென்ற ஏவுகணையால் பள்ளிகட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. பள்ளி கட்டடத்தை போலவே பல்வேறு கட்டடங்களும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6:57 PM IST
உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு : வெளியுறவுத்துறை

புதுடில்லி: உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

5:51 PM IST
மரணம்

உக்ரைனில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பஞ்சாபை சேர்ந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

5:50 PM IST
உடனடியாக வெளியேறுங்கள்

இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுரை- பாதுகாப்பு கருதி அனைவரும் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியே வேண்டும். வெகு விரைவில் பெசோசின், பபயே, பெஜ்லுடோவ்கா நகரங்களுக்கு செல்ல வேண்டும். மாலை 6 மணிக்குள் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

3:35 PM IST
அனுமதிக்க மாட்டோம்

வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை உக்ரைன் வாங்குவதை அனுமதிக்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.

3:35 PM IST
தயார்

இன்று(மார்ச்2) இரவு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

1:26 PM IST
6 ஆயிரம் வீரர்கள் பலி

கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார்.

1:11 PM IST
அண்டை நாடுகள் வழியாக

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் கடந்த பிப்.,24 வரை 4 ஆயிரம் பேர் திரும்பினர். நேற்று வரை மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர். மற்ற இந்தியர்களையும் ருமேனியோ, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா, மோல்டோவா வழியாக அழைத்து வரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1:10 PM IST
விமானப்படை தகவல்

இந்திய விமானப்படை துணைத்தளபதி சந்தீப் சிங் கூறியதாவது: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க 3 விமானப்படை விமானங்கள் சென்றுள்ளன. 24 மணி நேரமும் மீட்பு பணி நடக்கும். நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுகின்றன.

11:56 AM IST
கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்குள்ள ராணுவ அகாடமி மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடந்தது.

9:14 AM IST
ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

10:24 PM IST
நேட்டோ அமைப்பு நாடுகள் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை

நேட்டோ அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

9:40 PM IST
ரஷ்ய நாட்டு தடகள வீரர்கள் வீராங்கனைகளுக்கு தடை

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து சர்வதேச தடகள சங்கம் ரஷ்ய நாட்டு தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க கூடாது என தடை விதித்துள்ளது.

9:39 PM IST
கீவ் நகர தொலைக்காட்சி மீது ரஷ்ய படைகள் தாக்குதல் : 5 பேர் பலி

கீவ்: உக்ரைன் நாட்டின் டி.வி கோபுரம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பை தடை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், மேலும் இத்தாக்குதலில் 5பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

8:25 PM IST
சர்வதேச கடன் தள்ளுபடி :உக்ரைன் கோரிக்கை

ரஷ்யா உடனான போரில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில்உக்ரைன் பெற்றுள்ள சுமார் 57 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

7:53 PM IST
உக்ரைன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் போனில் பேச்சு

உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீனநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போனில் பேசினர். அப்போது உக்ரைன் போரை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது குறித்து சீன அமைச்சர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

7:28 PM IST
உக்ரைன் ரஷ்யா இடையே நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்தை

போலந்து பெலராஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் உக்ரைன் ரஷ்யா இடையே நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்தை நடைபெற உள்ளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பேச்சுவார்ததை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

7:28 PM IST
உக்ரைன் போரில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பாதிப்பு

நியூயார்க்: உக்ரைன் போரால் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா.,சபை தெரிவித்த உள்ளது. மேலும் அந்நாட்டிற்கு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்க நிதி உதவி தேவைப்படுவதாகவும் அவை தெரிவித்துள்ளது.

7:17 PM IST
கீவ் நகர மக்களுக்கு ரஷ்யா அறிவுறுத்தல்

கீவ் நகரில் உளவுத்துறை அலுவலகங்கள் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தி உள்ளது

6:51 PM IST
4-வது முறையாக ஆலோசனை

உக்ரைன் விவகாரம் : 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி 4-வது முறையாக அவசர ஆலோசனை

6:40 PM IST
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராகிறது உக்ரைன்

கீவ்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய உள்ளது உக்ரைன். இதற்காக உக்ரைன் கொடுத்த விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய யூனியன்.

6:39 PM IST
உறுப்பினராகிறது

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராகிறது உக்ரைன்

5:21 PM IST
பிரதமர் ஆறுதல்

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீனின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

4:44 PM IST
தூதர்களுக்கு சம்மன்

டில்லியில் உள்ள ரஷ்யா, உக்ரைன் நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டு கொண்டுள்ளது.

3:08 PM IST
இந்திய மாணவன் பலி

உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவன் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாணவன் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்பதும், அவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்ற போது, வெடிகுண்டு வீச்சில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ரஷ்யா, உக்ரைன் தூதர்களிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

1:06 PM IST
5 பேர் பலி

உக்ரைனின் கார் கிவ் நகரில் கட்டடம் ஒன்றின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. அதி்ல் 5 பேர் உயிரிழந்தனர். கட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

12:41 PM IST
உக்கிரமான தாக்குதல்

உக்ரைன் தாக்குதல் தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் கீவ், கார்கிவ், செர்னிகிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷஅய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. வான்வெளி மூலமாகவும் தாக்கி வருகின்றன. மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால், மக்கள் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரவிலும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

12:33 PM IST
தூதரகம் அறிவுரை

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கீவ் நகரில் வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் ,இன்று உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு கிடைக்கும் ரயில் அல்லது சாலை வழியாக எந்த வழியிலாவது வெளியேற வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

11:53 AM IST
70 உக்ரைன் வீரர்கள் பலி

ஒக்ட்ரிகா நகரில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9:12 AM IST
துப்பாக்கிகள் பேசுகிறது ; ஐ.நா., பொதுசெயலர் கவலை

ஐ.நா. : உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைப்பின் பொதுசெயலர் அன்டோனியா கட்டர்ஸ் வலியுறுத்தி உள்ளார். படைகள் திரும்ப பெறப்பட வேண்டும். தலைவர்கள் அமைதி பேச்சு முடிவுக்கு வர வேண்டும். மக்கள் காக்கப்பட வேண்டும். சர்வதேச எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது துப்பாக்கிகள் பேசி கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். எந்தவொரு விஷயத்திற்கும் போர் ஒரு தீர்வாக முடியாது. இது உயிர்ச்சேதமாகத்தான் இருக்கும். மனிதர்களை பாதிப்பதாகத்தான் இருக்கும். பேச்சு வார்த்தை வரவேற்கப்பட வேண்டியது. பேச்சு வார்த்தைக்கு ஐ.நா., துணை நிற்கும் என்றார்.

5:04 AM IST
ரஷ்யாவில் வலுக்கும் போராட்டம்

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, அந்நாட்டு மக்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தலைநகர் மாஸ்கோவில், சாலைகளில் இறங்கி அதிபர் புடினுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போலீசின் கைது நடவடிக்கைகளை பொருட்படுத்தாமல், புடின் அரசுக்கு எதிராக பேரணிகள் நடத்துகின்றனர்.

5:03 AM IST
ரஷ்ய நாணய மதிப்பு சரிவு

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல பொருளாதார தடைகளை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. குறிப்பாக, 'ஸ்விப்ட்' பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட, ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அதிரடி நடவடிக்கைகளால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் நாணய மதிப்பு, 26 சதவீதம் சரிவடைந்துஉள்ளது. வீழ்ச்சி அடையும் நாணய மதிப்பை உயர்த்தும் முயற்சியாக, வட்டி விகிதத்தை 9.5 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்தி, ரஷ்ய மத்திய வங்கி நேற்று அறிவித்தது.

5:03 AM IST
கதிரியக்க தளத்தில் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில், கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்தும் தளத்தில், ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இருந்தும் அங்கிருந்த கதிரியக்க பொருட்கள் வெளியேறியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இதை, அணுசக்தி தொடர்பான ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. அந்த பகுதியை, உக்ரைன் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

5:02 AM IST
தடையை மீறிய ரஷ்ய விமானம்

\வட அமெரிக்க நாடான கனடாவின் வான்வழிக்குள் பறக்க, ரஷ்ய விமானங்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. எனினும், தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், ரஷ்யாவின், 'ஏரோபிலோட்' நிறுவனத்தின் விமானம் ஒன்று, தடையை மீறி, கனடா வான்வழிக்குள் பறந்துள்ளது. இதை, கனடா போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் ஒமர் அல்காப்ரா நேற்று உறுதிபடுத்தினார்.

4:28 AM IST
பீர் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் பெட்ரோல் குண்டு

லீவ்: ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவமும், நாட்டு மக்களும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள், மது குடிப்பது குறைந்துள்ளது. அதையடுத்து, லீவ் நகரில் உள்ள 'பீர்' தயாரிக்கும் ஆலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீர் பாட்டில்களை, பெட்ரோல் குண்டுகளாக மாற்றும் வேலை நடந்து வருகின்றது. காலி பாட்டில்களில், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிரப்பி, நீண்ட துணி போன்ற திரியைப் பொருத்துகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக இந்த பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

10:58 PM IST
போலந்து எல்லையில் அடுத்த சுற்று பேச்சு

உக்ரைன்- ரஷ்யா இடையேயான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை போலந்து-பெலாரஸ் எல்லையில் நடைபெற உள்ளது

10:39 PM IST
ருமேனியா பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி

உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்கள் ருமேனியா நாட்டிற்கு விசா இன்றி வருவதற்கு அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடி, ருமேனியா பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

10:15 PM IST
ரஷ்ய கப்பல்களுக்கு இங்கிலாந்து தடை

ரஷ்ய கப்பல்களுக்கு இங்கிலாந்து துறைமுகங்களை பயன்படுத்த இங்கிலாந்து தடை விதித்துள்ளது

9:06 PM IST
உக்ரைனுக்கு ராணுவ உதவி அதிகரிக்க முடிவு

உக்ரைனுக்கு ராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

9:05 PM IST
ரஷ்யாவில் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

7:15 PM IST
பெலாரஸ் உடன் துாதரக உறவு முறிவு: அமெரிக்கா

பெலாரஸ் நாட்டுடன் துாதரக உறவை துண்டித்து கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

6:47 PM IST
6 வது விமானம் 240 பயணிகளுடன் டில்லி வந்தது

புதாபெஸ்ட் நகரிலிருந்து 240 இந்தியர்களுடன் வந்த 6 வது விமானம் டில்லி வந்தது

4:27 PM IST
பேச்சுவார்த்தை துவக்கம்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரசில் துவங்கி நடைபெற்று வருகிறது.

3:16 PM IST
கைதிகளை போரில் ஈடுபடுத்துவோம்: உக்ரைன் அதிபர்

ரஷ்ய படையினர் எங்கள் நாட்டில் இருந்து வெளியேறுங்கள். தங்களின் உயிரை காப்பாற்ற திரும்பி செல்லுங்கள். தாக்குதலை நிறுத்தா விட்டால் கடும் விளைவை ரஷ்யா சந்திக்கும். மேலும் உக்ரைனில் உள்ள ராணுவ அனுபவம் உள்ள கைதிகளை விடுதலை செய்து போரில் ஈடுபடுத்துவோம். இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

2:19 PM IST
பாதுகாப்பாக வெளியேறலாம்

உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

12:49 PM IST
" 5, 300 பேரை கொன்று விட்டோம் " - உக்ரைன்

ரஷ்ய வீரர்கள் 5, 300 பேரை கொன்றதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்களை அழித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

11:06 AM IST
உலகின் மிக பெரிய சரக்கு விமானம் அழிப்பு

உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரஷ்ய படையால் குண்டு வீசி அழிக்கப்பட்டது . அண்டானோவ் அன் 225 மிரியா என்ற இந்த விமானம் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 22 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிகிறது. இந்த விமானம் அழிக்கப்பட்டதை உக்ரைன் அரசும் உறுதி செய்துள்ளது.

10:36 AM IST
5வது நாளாக (பிப்.28) உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்

ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

8:19 AM IST
ராணுவ பயிற்சியில் உக்ரைன் மக்கள்

நாட்டை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று உக்ரைன் மக்கள் ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெற்றனர்.

8:16 AM IST
அணு ஆயுத போரா !

அணு ஆயுதப் படைப் பிரிவுகளை தயார் நிலையில் இருக்கும்படி புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்துடன், ரஷ்யா படைகளை இறக்கியுள்ளது. இந்நிலையில், புடினின் புதிய உத்தரவு, அணு ஆயுதப் போருக்கு வித்திடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது

5:54 AM IST
கார்கிவ் நகரை மீட்ட உக்ரைன்

கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்த நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிிட்டு ரஷ்ய படைகளை விரட்டியடித்து கரர்கிவ் நகரை மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.

3:52 AM IST
ஆயுதங்கள் அனுப்பும் ஜெர்மனி

உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வினியோகிக்க, ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 1,000 பீரங்கி தகர்ப்பு ஆயுதங்களும், 500 ஏவுகணைகளும், உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார்.

8:38 PM IST
ரஷ்ய விமானங்கள் பறக்க கனடா தடை

ரஷ்ய விமானங்கள் இனி கனடா வான்வெளியை பயன்படுத்த கூடாது என கனடா அரசு ரஷ்யாவுக்கு தடை விதித்துள்ளது

7:56 PM IST
உக்ரைனுக்கு மேலும் 54 மில்லியன் டாலர்

உக்ரைனுக்கு மேலும் 54 மில்லியன் டாலர் உதவி செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது

7:03 PM IST
7 விமானங்கள்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் இயக்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது

7:02 PM IST
ஆலோசனை

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி உயர்மட்ட குழு உடன் அவசர ஆலோசனை

6:27 PM IST
ஒப்புதல்

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

6:16 PM IST
அறிவுறுத்தல்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தற்போது உள்ள இடங்களிலேயே தங்கியிருக்க இந்திய துாதரகம் அறிவுறுத்தல்

5:41 PM IST
தேவையில்லை

உக்ரைனில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள், தங்கள் நாட்டின் எல்லைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என போலந்து அரசு கூறியுள்ளது.

5:26 PM IST
ஆலோசனை

மால்டோவா, ஹங்கேரி நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது, உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

5:26 PM IST
ஜப்பான் உதவி

உக்ரைனுக்கு நிதி உதவி அளிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் 100 மில்லியன் டாலர் நிதியை உக்ரைனுக்கு வழங்குவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

5:14 PM IST
அகதிகளான மக்கள்

உக்ரைனில் இருந்து அகதியாக ஹங்கேரிக்கு ரயிலில், பெற்றோருடன் வந்திறங்கிய பின்னர் கதறி அழுத சிறுவன். இடம்: ஜஹோனி.

Photo Gallery

அகதிகளாக அண்டை நாடுகளுக்கு கிளம்பிய உக்ரைன் மக்கள்

Photo Gallery

அகதிகளாக அண்டை நாடுகளுக்கு கிளம்பிய உக்ரைன் மக்கள்

Photo Gallery

அகதிகளாக அண்டை நாடுகளுக்கு கிளம்பிய உக்ரைன் மக்கள்

Photo Gallery

அகதிகளாக அண்டை நாடுகளுக்கு கிளம்பிய உக்ரைன் மக்கள்

Photo Gallery
Prev
5:14 PM IST
அகதிகளான 3.68 லட்சம் பேர்

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மால்டோ, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

5:04 PM IST
அழிப்பு

உக்ரைனின் 976 ராணுவ மையங்களை அழித்துள்ளதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.

5:04 PM IST
நீக்கம்

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் நீக்கப்பட்டுள்ளார்.

4:52 PM IST
தடை

பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகளும், ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன.

4:41 PM IST
முறையீடு

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் அரசு முறையீடு செய்துள்ளது.

4:00 PM IST
அறிவுரை

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், தலைநகர் கீவ்வில் , அந்நாட்டு அரசு இலவச ரயில்களை இயக்குகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்திய மாணவர்கள் இதனை பயன்படுத்தி மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

3:03 PM IST
போரை நிறுத்துக: பிரிட்டன்

ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

2:14 PM IST
வான்வெளி மூடல்

ரஷ்யாவுடன் 1,300 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள பின்லாந்து, ரஷ்யாவின் விமானங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையாதவாறு வான்வெளியை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது.

2:13 PM IST
500 ஏவுகணை

உக்ரைனுக்கு உதவி செய்ய ஆயிரம் டாங்குகள், தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் 500 ஏவுகணைகளை அனுப்பி வைக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

1:27 PM IST
நிராகரிப்பு

பெலாரசில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக, பெலாரசில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

12:58 PM IST
உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் : ரஷ்யா

உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கென பெலாரசில் தங்களின் அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

12:48 PM IST
கூகுள் நிறுவனம் தடை

கூகுள் நிறுவனம் ரஷ்ய நிறுவனங்கள், தனிநபர்கள் விளம்பரம் செய்யும் முறைக்கு தடை விதித்துள்ளது. மேலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது போல் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யும் ஸ்விப்ட் என்ற முறையில் ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டுள்ளன.

12:40 PM IST
தாக்குதல்

உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றின. அப்போது , அந்நகர மக்கள் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

11:08 AM IST
தமிழகம் வந்த 5 பேர்

உக்ரைனில் தவித்த 5 தமிழர்கள் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் வரவேற்றார்.

9:55 AM IST
உக்ரைன் பயணிகளுடன் 3 வது விமானம் டில்லி வந்தது

ஹங்கேரியில் இருந்து பயணிகளுடன் 3 வது இந்திய விமானம் டில்லி வந்தடைந்தது. இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு ஆப்பரேஷன் கங்கா என திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. இன்று வந்த விமானத்தில் 240 பேர் டில்லி வந்து சேர்ந்தனர்.

7:58 AM IST
4 வது நாளாக இன்றும் பலத்த குண்டு வெடிப்பு

உக்ரைன் தலைநகர் கியூவில் 4 வது நாளாக இன்றும் பலத்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. பெரும் புகையுடன் முக்கிய இடங்கள் தீ பற்றி எரிகிறது.

5:41 PM IST
அதிகரிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

4:48 PM IST
30 கி.மீ., தொலைவில்

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ரஷ்ய படைகள் கீவ் நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. தற்போது நகரின் மையத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளன. நாடு முழுவதும் உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

4:12 PM IST
ஒரு லட்சம் அகதிகள்

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரு லட்சம் பேர் அண்டை நாடான போலாந்திற்கு அகதிகளாக வந்துள்ளதாக, போலாந்து அரசு தெரிவித்துள்ளது.

4:00 PM IST
ஆயுதம் வழங்குவோம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், தலைநகர் கீவ் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளை எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எங்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளோம். இந்த போரை நிறுத்த விரும்புகிறோம். அமைதியான சூழலில் வசிக்கலாம் என்றார்.

4:00 PM IST
மறுப்பு

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போலாந்து, உலக கோப்பை கால்பந்து தொடரின் பிளே ஆப் சுற்றில் ரஷ்யாவிற்கு எதிரான போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது.

3:45 PM IST
கண்டனம்

இந்தியாவிற்கான போலாந்து தூதர் அடாம் புராகோவ்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆதரவாக போலாந்து இ ருக்கும். ரஷ்யாவின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உக்ரைன் மக்கள், தேசப்பற்று மிக்கவர்கள். தங்கள் நாட்டிற்காக போராடி வருகின்றனர் எனக்கூறினார்.

முழு விபரம்:

கருங்கடல் பகுதியில், உக்ரைன் கடற்கரை நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போர்க்கப்பல் ஆயுதங்கள் வெடித்ததில் பலத்த சேதமடைந்துள்ளது. இதற்கு, உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம் என அந்நாட்டின் மாகாண கவர்னர் கூறியுள்ளார்.இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், தீவிபத்தின் விளைவாக வெடிமருந்துகள் வெடித்தது. இது குறித்து விசாரணை நடக்கிறது. கப்பலில் இருந்தவர்கள் மீட்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இருந்து தான், மரியபோல், ஒதீசா உள்ளிட்ட கடற்கரை நகரங்களை ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

உக்ரைனின் ஒதீசா மாகாண கவர்னர் கூறுகையில், உக்ரைன் ஏவுகணை மூலம் நடந்த தாக்குதலில் போர்க்கப்பல் சேதமடைந்துள்ளதாக கூறினார். ஆனால், கவர்னரின் ஆலோசகர், என்ன நடந்தது என்பது புரியவில்லை எனக்கூறியுள்ளது.7 வது வாரமாக ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு, ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ ரீதியில் 800 கோடி டாலர் மதிப்பில் உதவி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
ரஷ்யா எச்சரிக்கை


இதனிடையே, ரஷ்யா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட அதிகார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும்
உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது தொடர்ந்து 7 வது வாரமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மரியபோல் நகரம் எந்நேரத்திலும் ரஷ்யாவின் பிடியில் செல்லும் என்ற நிலையில் உள்ளது. அந்நகரில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என மேயர் கூறியுள்ளார். பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு பகுதியில் உள்ள டோன்போஸ் நகரிலும் தாக்குதல் நடக்கிறது. அங்கு, தங்கள் நாட்டு வீரர்களை குறிவைத்து விஷவாயு வீசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள உக்ரைன், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில் , உக்ரைன் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாக்கவும், ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தாக்குதல் முழுமை பெறும் வகையிலும், நிர்ணயிக்கப்பட்ட பணிகள் முழுமை பெறும் வரையிலும் போர் தொடரும். ரஷ்யாவை தனிமைப்படுத்த முடியாது எனக்கூறினார்.
உக்ரைன் மக்கள் 20 ஆயிரத்தை தாண்டும் !


மரியூபோல் நகர மேயர் வாடீம்பாய்ஷென்கோ கூறியுள்ளதாவது; இந்நகரில் இது வரை 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இன்னும் தெருக்களில் பிணங்கள் சிதறி கிடக்கிறது. மொத்தம் 20 ஆயிரத்தை இறந்தவர்கள் எண்ணிக்கை தொடலாம் என்றார். நட்புநாடுகள் முன்கூட்டியே கூடுதல் ஆயுதங்கள் தந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என உக்ரைன் ஆளும் கட்சி குறை கூறியுள்ளது.உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ டாங்குககளை நிறுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்மாடோஸ், செர்னிகிவ், மக்கோரியு பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. நேட்டோ நாடுகள் வழங்கிய கூடுதல் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கூடுதல் தைரியத்தை தந்துள்ளது.


ரஷ்ய படை தாக்குதல் ஒரு பக்கம், சாலைகளில் பிணங்கள் , பல எரிந்து சாம்பலான கட்டடங்கள் , மறு புறம் படைகள் குவிப்பு என பதட்டம் நிலவும் சூழலில் பிரிட்டன் பிரதமர் ஜான் போரீஸ் உக்ரைன் சென்றார். அங்கு அவர் உக்ரைன் நாட்டு அதிபர் செலன்ஸ்கியுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு படையினருடன் சென்று பார்வையிட்டனர். போரீஸ் வருகையால் செலன்ஸ்கி கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளார்.உக்ரைனில் நடந்து வரும் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இந்த தாக்குதல் தீவிரமடையலாம் என தெரிகிறது. நேற்று ( ஏப்.8) ல் ரயில்வே ஸ்டேஷன்களில் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை நேட்டோ எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய தாக்குதல் துவங்கியதாக அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள 2 ரயில் நிலையங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், பலர் காயமுற்றதாகவும் அஞ்சப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது.

Advertisement5,149 குற்றப்பட்டியல்


உக்ரைனில் ரஷ்யா போர்குற்றம் புரிந்துள்ளது என உக்ரைனின் நட்பு நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யா நடத்திய போர்குற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதன் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில்: ரஷ்யா இது வரை மொத்தம் 5,149 போர் குற்றம் புரிந்துள்ளது. உக்ரைன் தேசிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக குற்றம் புரிந்தததாக 2,541 வழக்குகளும், கொடூர குற்றம் 432 என்றும் தெரிவித்துள்ளது. இதுபோல் 169 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 306 குழந்தைகள் காயமுற்றதாகவும் இந்த விவரத்தில் கூறப்பட்டுள்ளது. போர் சட்டங்களை மீறிய ரஷ்யா , உக்ரைன் நாட்டு சட்டங்களை மீறியதாகவும் தெரிவிக்கிறது சட்ட அமைச்சகம்.


ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என அமெரிக்க பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக தங்களின் நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.


புச்சா: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நிலையில், நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தின் எதிர் தாக்குதலால், தலைநகர் கீவ் நகருக்குள் நுழைய முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின.கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணங்கள்


இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சில், தலைநகர் கீவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.அதன்படி அங்கிருந்து ரஷ்யப் படைகள் திரும்பத் துவங்கியுள்ளன. இந்நிலையில், கீவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில், எரிந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பல சடலங்கள் சாலைகளில் கிடப்பது தெரியவந்தது. இதற்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், உக்ரைன் ராணுவம் கூறிஉள்ளதாவது:ரஷ்யா அப்பாவி மக்களை கொன்று போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட உள்ளது. தலைநகர் கீவ் நகரில் இருந்து வெளியேறிய ரஷ்ய ராணுவம், நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ரஷ்ய ராணுவ ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் வழியாக உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது. இதை எதிர்க்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.பயங்கரவாத நாடு


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவின் போர் நடவடிக்கை, எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் சற்றும் குறைவில்லாததாக இருக்கிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடே இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், உக்ரைனில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
'ஆசிட் டேங்கர்' வெடிப்பு


உக்ரைனின் கிழக்கே உள்ள லுஹான்க்ஸ் பகுதி மக்களுக்கு அந்தப் பிராந்திய அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில், 'நைட்ரிக் ஆசிட்' ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், நச்சுப் புகை பரவும் அபாயம் உள்ளது. அதனால், ஜன்னல் உள்ளிட்டவற்றை மூடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமபடி, பிராந்திய அரசு எச்சரித்துள்ளது.
சோகத்தை ஏற்படுத்திய படம்

உக்ரைன் நாட்டவர்களை ரஷ்ய வீரர்கள் சித்ரவதை செய்து, கொலை செய்து உடல்களை சாலைகளில் வீசியுள்ள படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான படம் ஒன்று போரின் சோகத்தை உணர்த்தியுள்ளது.தன் சிறு குழந்தையின் முதுகில் தாய் தன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஒருவேளை தான் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டால் அல்லது பிரிய நேரிட்டால், குழந்தையால் குடும்பம் குறித்த விபரங்களை தெரிவிக்க முடியாது என்பதால், அதன் முதுகில் எழுதியுள்ளதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். இதுபோல, பல பெற்றோர், தங்களுடைய விபரங்களை குழந்தைகளின் முதுகில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.அதிபர் பார்வை

உக்ரைனில் 40 நாட்களுக்கும் மேலாக ரஷ்யபடையினரின் தாக்குதல் நீடித்து வருகிறது. அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அசராமல் அவரது மாளிகையில் இருந்தாவறு மக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் பேட்டி அளித்து வந்தார். மேலும் வெளிநாட்டு உதவிகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அதிபர் செலன்ஸ்கி ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் புச்சா என்ற நகருக்கு சென்றார். அங்கு ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதல் சேதத்தை பார்வையிட்டார். இந்நகரில் மட்டும் ஏறக்குறைய 300 க்கும் அதிகமானார் ரஷ்ய படையினரால் டார்ச்சர் செய்யப்பட்டு கொலை செய்யபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த புச்சா நகரில்தான் உக்ரைன் மக்கள் பலர் கைகள் கட்டப்பட்டு சுட்ட நிலையில் பிணமாக கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கான பிணங்கள் சிதறி கிடப்பதாகவும், பல பிணங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பலரது பின்னங்கைகள் கட்டப்பட்டு நெற்றியில் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர். குறிப்பாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா புதிய தாக்குதலை துவக்கி இருக்கிறது. துறைமுக நகரான ஓடேசாவில் ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இங்கு பலத்த சப்தத்துடன் பெரும் குண்டு வெடித்தாதாகவும் தொடர்ந்து கரும்புகை கிளம்பி வான் அளவை தொட்டதாகவும் அங்குள்ள உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உக்ரைனில் ரஷ்ய போர் துவங்கியதில் இருந்து இரு படையினர் இடையே கடும் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்களின் ஆதரவை தெரிவித்து கூடுதல் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு லுகான்ஸ்க் ரஷ்யாவின் எம்.ஐ28என்ற ஹெலிகாப்டரை பிரிட்டன் ஏவுகணை தாக்கி வீழ்த்தியது.உக்ரைனில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் கிழக்கு பகுதியை தாக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் பேர் கொண்ட ராணுவ வீரர்களை அனுப்ப ரஷ்யா தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


உக்ரைன் மீது நடத்திய போரில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை என்பதால் ரஷ்ய ராணுவ தளபதிகள், அதிபர் புடின் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. போரை நடத்த சில தளபதிகளே முன்மொழிந்ததாகவும், இதனை புடின் புறக்கணித்திருக்கலாமோ என்று தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது.பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், மரியபோல் நகர் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், அந்நகரில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு உதவும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக புடின் உறுதி அளித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னேற்றமில்லை


ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தாங்கள் என்ன முன்மொழிகிறோம் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது மட்டுமே சாதகமாக விஷயம். தற்போது வரை அதனை எங்களால் பெற முடியவில்லை. மற்ற விஷயங்களை தற்போது எதுவும் கூற முடியாது. தற்போதைய நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.


முன்னதாக நேற்று, இரண்டு வாரங்களுக்கு பின், மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புலில் அமைதி குழுவினர் மீண்டும் நேற்று பேச்சை துவக்கினர்.இக்குழுவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நண்பரும், தொழிலதிபருமான ரோமன் அப்ரமோவிச் இடம் பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமாக குழுவில் இவர் இடம்பெறவில்லை என்றாலும், சில தொடர்புகளை ஏற்படுத்தி தருவார் என்ற அடிப்படையில், இருதரப்பும் இவருக்கு அனுமதி அளித்துள்ளன.


இந்த பேச்சு வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின் ரஷ்ய ராணுவ துணை அமைச்சர் அலெக்சாண்டர் போபின் வெளியிட்டுள்ள அறிக்கை இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. அதன் விபரம்:சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலும் அமைதிப் பேச்சில் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹவ் நகரங்களில் தாக்குதல்களை குறைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


ரஷ்யாவுக்கு அஞ்சி பிற நாட்டவர்கள் எங்களுக்கு உதவுவதில் அஞ்ச வேண்டாம். மாஸ்கோவுக்கு பதிலடி கொடுத்திட தைரியமான ஆயுதங்களை வழங்குங்கள். அச்சம் சிலரை கட்டிப்போடுகிறது. ஆயுதங்கள் வரவில்லை என்பதால் உக்ரைனியர்கள் சாகக்கூடாது. என கூறியுள்ளார் செலன்ஸ்கி.

கடும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்தால் ரஷ்யா உக்ரைனுடன் உடனடி பேச்சு நடத்த வேண்டும். தாமதிக்காமல் அமைதியை நிலைநாட்ட பேச்சு மிக அவசியம். அமைதியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.


உக்ரைன் ரஷ்யா இடையே 33வது நாட்களாக போர் நீடிக்கும் வேளையில் உக்ரைனின் விவ் நகர் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் விவ் நகர் மக்கள் அச்சத்தில் பதுங்கு குழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.


ரஷ்ய போர் நடந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அண்டை நாடானா போலந்து சென்றார். அங்கு அவர் போலந்து நாட்டில் அகதியாக வந்துள்ள உக்ரைன் மக்களை சந்தித்து கை குலுக்கி ஆறுதல் தெரிவித்தார். அம்மக்கள் இடையே பைடன் பேசியது உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது. " உக்ரைனில் புடின் தவறு செய்துள்ளார். அவர் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். " என கூறியிருப்பது மக்களுக்கு ஆறுதலையும், தெம்பையும் தந்துள்ளது. பைடன் பேச்சின்போது மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.


ரஷ்ய ராணுவ ஜெனரல் ஜெனரல் விளாடிஸ்லாவ் யார்சோவ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் அவர் வீட்டு சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. உக்ரைன் மீதான போரை நேர்த்தியாக கொண்டு செல்லாமல் பின்னடவை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் போரில் இது வரை 7 ரஷ்ய ராணுவ ஜெனரல்கள் பலியாகி இருப்பதாக லண்டன் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.


உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் துவங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 184 பேர் காயமுற்றதாகவும் இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.“உக்ரைன் மீது, 'பாஸ்பரஸ்' ரசாயன குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்,” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.'நேட்டோ' எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பிய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. அதோடு, உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றன.இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறியதாவது: உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த துவங்கி உள்ளனர். மிகவும் அபாயகரமான பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், ஏராளமான குழந்தைகளும், இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.உக்ரைனுக்கு, உலக மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்கள் அனைவரும் பொதுவெளியில் இறங்க வேண்டும்; சாலைகளில் திரண்டு உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
'டப் ' கொடுக்கும் உக்ரைன்


உக்ரைனின் அருகில் உள்ள போலந்து நாட்டில் அமெரிக்கா தன் படைகளை இறக்கி உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் கூடுதல் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா போரை துவக்கி 4 வாரங்களுக்கு மேல் ஆகியும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாததால் அந்நாட்டு அதிபர் புடின் கவலை அடைந்துள்ளார். ரஷ்ய படையை, இத்தனை நாள் சமாளித்து களத்தில் நிற்கிறது என்றால் உக்ரைனுக்கு இது பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. ரஷ்ய வீரர்கள் பலரை இழந்துள்ளதால் போரை நிறுத்தலாமா என்றும் யோசிக்க துவங்கி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 3 நாளில் போர் நிறுத்த அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.


ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் அணுஆயுதங்களை பயன்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு கொள்கை உள்ளது. அது வெளிப்படையானது. அனைவரும் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணுஆயுதங்களை பயன்படுத்துவோம் எனக்கூறினார்.


இது தொடர்பாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்யாவின் அறிவிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அணுசக்தி வைத்துள்ள நாடு செயல்படும் விதம் இதுவல்ல என்றார்.
திணறல்உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. அதே நேரத்தில் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது.


தலைநகர் கீவ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த அதன் புறநகர் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.இதையடுத்து, கீவ் நகருக்குள் வருவதற்கான முக்கிய நெடுஞ்சாலை, உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.அதே நேரத்தில், கீவ் நகரை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் பீரங்கி வாயிலாக ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.இதற்கிடையே, தெற்கே உள்ள முக்கிய துறைமுக நகரான மரியுபோலைப் பிடிக்க ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது.இதற்காக ரஷ்யா வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இங்கு மின்சாரம், குடிநீர், உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்நிலையில், நகரை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.இந்தப் போரால், உக்ரைனில் இருந்து ஒரு கோடி மக்கள் வெளியேறிஉள்ளதாக கூறப்படுகிறது. அதில், 35 லட்சம் பேர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 65 லட்சம் பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
மறுப்பு


இதுவரை, 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, ஐ.நா., கூறுகிறது. ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என கூறப்படுகிறது.இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, 'டிவி' வாயிலாக உரையாற்றி, மக்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார்.இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சரணடைய வேண்டும் என்ற ரஷ்யா வின் கோரிக்கையை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது.ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனில் உச்சமடைந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. சரண் அடைந்தால் விட்ருவோம் என ரஷ்யா எச்சரித்தும் உக்ரைன் பின்வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் அணு ஆயுதம் மற்றும் அம்மோனியா ஆலைகள் மீது தாக்குதல் நடந்திருப்பதால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. 26வது நாளாக இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்யா செய்வது யுத்தம் அல்ல, பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புடினை நேருக்கு நேர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ரஷ்யா அமைதி பேச்சு நடத்த கால தாமதமின்றி வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் இன்று 4 வது முறையாக வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ரஷ்யா பொருட்படுத்தவில்லை. அமைதிக்கு வழி ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், லிவிவ் நகரில் பல ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இதில், ராணுவ விமானங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் இடம் மற்றும் பஸ் ரிப்பேர் செய்யும் இடம் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதனால், அந்த இடங்கள் உடனடியாக மூடப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.அதேநேரத்தில் உக்ரைன் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
தியேட்டர் மீது தாக்குதல்உக்ரைன் மரியூபோல் நகரத்தில் உள்ள தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்ய தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சம் புகுந்த மக்கள் பலர் காயமுற்றனர்.


உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், போர்க்குற்றவாளி எனவும், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தை, குடியரசு கட்சியின் லிண்ட்சே கிரஹாம் கொண்டு வந்தார்.. இது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஒரு மித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக, நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச போர் சட்டத்தை ரஷ்யா மீறினால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. நேட்டோ அமைப்பு இதுகுறித்து விழிப்புடன் இருப்பதாக, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
புதிய சேட்டிலைட் படம் வெளியீடு


உக்ரைன் மொசூன் நகரில் ரஷ்ய படை தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள், பெரும் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகி கிடக்கிறது. இது தொடர்பான சேட்டிலைட் படம் வெளியாகி உள்ளது. ஆள் அரவமின்றி அமைதிக்காடாக காட்சி அளிக்கிறது.


உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல் 20 நாட்களை ( மார்ச்.15) தொட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ரஷ்யாவால் உக்ரைனை தன் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் உக்ரைன் படையை சமாளிக்க ரஷ்யா , சீன உதவியை கேட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சீன தூதரகம் இதனை மறுத்துள்ளது. உக்ரைன் தாக்குதல் 19 வது நாளை ( மார்ச்.14) கடந்து சென்று கொண்டிருக்கிறது.உக்ரைன் தாக்குதல் 18 வது நாளை ( மார்ச்.13) கடந்து சென்று கொண்டிருக்கிறது. ரஷ்ய படைக்கு உக்ரைன் நல்லவே டப் கொடுத்து வருகிறது. கியூவ் நகரை ரஷ்ய படை நெருங்கி உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், முடிவுக்கு வரும் வரை எதிர்த்து நிற்போம். இவ்வாறு உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.உக்ரைனில் மரியூபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ராணுவ தாக்குதல் நடத்தி போர் குற்றம் புரிந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.


ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதிக்கு தடை எதுவும் விதிக்காமல் இருந்தன. இதனால் எரிபொருள் ஏற்றுமதி வாயிலாக ரஷ்யா அதிக வருவாயை ஈட்டி வருகிறது.
பெருமைபட வேண்டும்" - புடின்கீவ்: ராணுவ வீரர்களின் குடும்ப பெண்கள் அனைவரும் தியாகத்தை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது:


நமது ராணுவ வீரர்கள் பெருமை தரும் பணியை மேற்கொண்டுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர்களின் அன்புக்குரியவர்களான மனைவிகள், சகோதாரிகள் ,நண்பர்கள் அனைவரது உணர்வையும் நான் அறிந்துள்ளேன். நீங்கள் யாரும் கவலை கொள்ளாமல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி உறவுக்காரர்களும் பெருமை கொள்ள வேண்டும். போரில் யாரும் கட்டாய ஈடுபடுத்த மாட்டார்கள். இவ்வாறு புடின் கூறியுள்ளார்.உக்ரைனில் ரஷ்யா 13வது நாளாக (மார்ச்.8 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாடு சரண் அடையும் வரை விட மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. .

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது நேற்று (மார்ச் 06) தாக்குதலை மீண்டும் துவக்கியுள்ளது. உக்ரைனின் எல்லைப் பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றின. உக்ரைனில் பொதுமக்கள் 350 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றனமனித பலி குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த வேளையில் ரஷ்யா மக்களின் நலன் கருதி இந்த போர் நிறுத்தம் முடிவை எடுத்திருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த நிறுத்தம் 2 முக்கிய நகரங்களில் அமலில் இருக்கும் கிழக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் இல்லை என்றும் தெரிகிறது.உக்ரைனின் ஷபோரிஷியா என்ற நகரில் உள்ள அணுமின் நிலையம் அருகே ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அணு உலை காப்பாற்றப்பட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் கூறப்படுகிறது. அணு உலை மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.‛ரஷ்ய அதிபர் புடின் என்னுடன் நேரடியாக அமர்ந்து பேசுவது மட்டுமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி' என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.ஜெலன்ஸ்கி மேலும் கூறியதாவது: மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை அதிகரிக்க வேண்டும். வான் வெளியை மூட உங்களுக்கு அதிகாரம் இல்லையெனில் எங்களுக்கு விமானங்களை அளியுங்கள். இல்லையெனில் நாளை இதர ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கும்.ரஷ்யாவை தாக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை. எங்களிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும். எங்கள் நிலத்தை விட்டு வெளியேறுங்கள். ரஷ்ய அதிபர் புடின் என்னுடன் நேரடியாக அமர்ந்து பேசினால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர் குண்டு மழை


உக்ரைன் தலைநகர் கியூவில் தொடர் குண்டு மழையை ரஷ்யா பொழிந்து வருகிறது. இங்கு பல கட்டடங்கள் தரைமட்டமாகின. தொடர்ந்து பலத்த குண்டு சப்தம் கேட்டு வருவதாக பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


உக்ரைனில் நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
இந்திய மாணவர் பலி


உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவன் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரி பகுதியை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது. இவர் அங்குள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து ரயில் நிலையம் சென்றுக்கொண்டிருந்தபோது ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஐ.நா., வலியுறுத்தல்

உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைப்பின் பொதுசெயலர் அன்டோனியா கட்டர்ஸ் வலியுறுத்தி உள்ளார். படைகள் திரும்ப பெறப்பட வேண்டும். தலைவர்கள் அமைதி பேச்சு முடிவுக்கு வர வேண்டும். மக்கள் காக்கப்பட வேண்டும். சர்வதேச எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது துப்பாக்கிகள் பேசி கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். எந்தவொரு விஷயத்திற்கும் போர் ஒரு தீர்வாக முடியாது. இது உயிர்ச்சேதமாகத்தான் இருக்கும். மனிதர்களை பாதிப்பதாகத்தான் இருக்கும். பேச்சு வார்த்தை வரவேற்கப்பட வேண்டியது. பேச்சு வார்த்தைக்கு ஐ.நா., துணை நிற்கும் என்றார்.எச்சரிக்கை


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்ய படையினர் எங்கள் நாட்டில் இருந்து வெளியேறுங்கள். தங்களின் உயிரை காப்பாற்ற திரும்பி செல்லுங்கள். தாக்குதலை நிறுத்தா விட்டால் கடும் விளைவை ரஷ்யா சந்திக்கும். மேலும் உக்ரைனில் உள்ள ராணுவ அனுபவம் உள்ள கைதிகளை விடுதலை செய்து போரில் ஈடுபடுத்துவோம். இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.அழிப்பு


உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரஷ்ய படையால் குண்டு வீசி அழிக்கப்பட்டது . அண்டானோவ் அன் 225 மிரியா என்ற இந்த விமானம் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ஏறக்குறைய 22 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடிக்கும் நிலையில் ரஷ்ய படைகள் முன்னேறி கார்கிவ் நகரை கைப்பற்றியிருந்தன. இந்நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு கார்கிவ் நகரை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.


உக்ரைனை ஒட்டிய நாடுகளின் எல்லையில் 15 கி.மீட்டர் தூரத்திற்கு உக்ரைன் மக்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல வாகனங்கள் ஏதும் வராதா என கவலையுடன் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பெலாரஸ், ஹங்கேரி, போலந்து, ரோமானியா நாடுகளின் எல்லலையில் மக்கள் சாரை, சாரையாக 2 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய ஜெட் விமானங்கள் 14 சுட்டு வீழ்த்தி உள்ளோம். இது வரை 3, 500 வீரர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு கங்கா ஆப்பரேஷன் என பெயரிட்டு விமானங்களை அனுப்பி வைத்தது. உக்ரைனின் 2வது கார்கிவ் நகரை கைப்பற்றியது ரஷ்யா.


கூகுள் நிறுவனம் ரஷ்ய நிறுவனங்கள், தனிநபர்கள் விளம்பரம் செய்யும் முறைக்கு தடை விதித்துள்ளது. மேலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, ஸ்லோவேனியா ஆகிய 4 நாடுகளின் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


இதனிடையே, கீவ் நகரை தாக்கிய ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. மேலும் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போரில் இதுவரை 3,500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாபடர்கள், 102 போர் டாங்கிகள் 836 கவச வாகனஙகள்,15 பீரங்கிகளையும் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; போர் சூழல் பெரும் பாதிப்பான சூழல் இருக்கிறது. எனவே இந்தியர்கள் யாரும் அரசு தரப்பு வழிகாட்டுதல் இல்லாமல் வெளியே வர வேண்டாம். என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் கியூ நகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.


உக்ரைனின் ராணுவ தளங்கள் நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் ''உக்ரைனுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார்'' என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா நேற்று இரண்டாவது நாளாக தாக்குதல்களை தொடர்ந்தது. தலைநகர் கீவ்வில் அதிகாலை முதலே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க துவங்கியதாக உக்ரைன் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.'பொது மக்கள் வெளியே வரவேண்டாம்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் முழுதும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கீவ் நகரை சுற்றி ரஷ்ய உளவாளிகளும் நாச வேலைகளில் ஈடுபடுவோரும் அதிக எண்ணிக்கையில் தென்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.'நகரங்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல' என ரஷ்யா தெரிவித்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்த ரஷ்ய படையினருடன் இவான்கிவ் என்ற இடத்தில் உக்ரைன் ராணுவத்தினர் நேற்று கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த இடம் கீவ் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனாலும் ரஷ்ய படைகள் கீவ் நகரை நெருங்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிழக்கு ஐரோப்பிய எல்லையில் 'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் படை தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு வலுசேர்க்க கூடுதலான அமெரிக்க படையினர் ஜெர்மனியில் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.போர் நாளை உங்கள் கதவுகளையும் தட்டும்


ஆனாலும் உலக நாடுகளின் மவுனம் உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கியை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அவர் நேற்று கூறியதாவது:


ரஷ்ய படையெடுப்பில் 137 அப்பாவி மக்களும் ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர். ராணுவ தளங்களை மட்டுமே அழிப்பதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் மக்களை கொன்று குவிக்கும் அத்துமீறலில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. உலக நாடுகள் எங்களுக்கு இப்போது உதவாமல் போனால் போர் நாளை உங்கள் நாட்டு கதவுகளையும் தட்டும். எங்களுக்கு உதவுவதாக கூறிய பெரிய நாடுகள் இப்போது எங்களை தனிமையில் விட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில் கீவ் புறநகர் பகுதியில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ள ரஷ்ய ராணுவம் இனி மற்ற நாடுகளில் இருந்து கீவுக்கு விமானங்கள் வர முடியாது என தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில் 'ரஷ்ய போர் விமானங்கள் சிலவற்றை சுட்டு வீழ்த்தி விட்டோம். 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்' என தெரிவித்துள்ளன. இதற்கிடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: உக்ரைன் மக்களை ராணுவம் மற்றும் சர்வாதிகார பிடியில் இருந்து மீட்கவே அதிபர் விளாடிமிர் புடின் இந்த படையெடுப்பை முன்னெடுத்தார். உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்தால் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


'ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார்' என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் அதற்கு ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து பதில் வந்துள்ளது.இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறுகையில் ''பெலாரஸ் தலைநகரான மின்ஸ்கில் உக்ரைனுடன் பேச்சு நடத்த உயர்நிலைக் குழுவை அனுப்ப அதிபர் புடின் தயாராக உள்ளார்'' என தெரிவித்தார்.1000 பேர் பலி


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்ததை தொடர்ந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் பொதுமக்கள் 137 பேர், ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் பதிலடியில் இங்கு 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி போரில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவின் நிலைப்பாடு


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டியது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை நாம் எடுக்கா விட்டால் அதன் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தைரியம் வந்துவிடும். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா 'நேட்டோ' நாடுகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தால் அமெரிக்கா அதில் தலையிடும்.ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளும் இதில் குற்றவாளிகள் தான். உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படவில்லை. நேட்டோ நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கவே அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff

வாசகர் கருத்து (450)

A. Muthu -  ( Posted via: Dinamalar Android App )
10-ஏப்-202217:17:12 IST Report Abuse
A. Muthu ஒரு புரம் உக்ரைன் அதிபரைப் பார்க்க பாவமாக இருந்தாலும் இவர் கொடுக்கும் விலை மிக அதிகம்.முதல் வாரத்திலேயே சரண் அடைந்திருந்தால் மக்கள் பலர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-ஏப்-202214:40:39 IST Report Abuse
Sivagiri ஆசிய ஆப்ரிக்க அரேபியா நாடுகளில் , போர் , இனப்படுகொலைகள் , பயங்கரவாத தாக்குதல்கள் , என்று எத்தனையோ நடந்தாலும் அவை எல்லாம் , அமெரிக்க - ஐரோப்பியர்களுக்கு காலை 10-நிமிட நியூஸ் மட்டுமே - அதற்காக எந்த ஒரு அமெரிக்க-ஐரோப்பிய நாடோ தலைவரோ , வெள்ளைத்தோல் பொதுஜனமோ , ஒரு நிமிடம் கூட சிந்தித்தது இல்லை . . ஏனென்றால் அவை எல்லாம் கருப்பு, மாநிற தோல் உயிரினங்கள் . . . ஆனால் இப்போது தன்னைப் போன்ற வெள்ளைத் தோல் உயிரினம் பாதிக்கப் படும்போதுதான் , அது அநியாய போராம் , இனப்படுகொலையாம் , உலகம் முழுவதும் அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டுமாம் , - - - ஆனால் முக்கியமான சூட்சுமம் என்னவென்றால் , அவர்கள் நேரடியாக போர்க்களத்துக்கு வர மாட்டார்கள் , ஆசிய நாடுகளில் கூலிக்கு சண்டை போட ஆள் தேடுகிறார்கள் , ஐ நா - அமைதி படை என்று சொல்லி அவர்கள் கட்டளை விடுவார்களாம் சண்டை போட்டு மடிவது கூலி ஆட்கள் . . . அதாவது உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இப்படி சும்மா பார்த்து கொண்டிருக்க கூடாதாம் அதாவது உலகிலேயே பெரிய ராணுவம் கொண்டுள்ள இந்தியா சும்மா இருக்க கூடாதாம் - வெள்ளைத்தோல் உயிரினங்களை காப்பாற்ற நாம் ரத்தம் சிந்த வேண்டுமாம் - அது நமது கடமையாம் . ? . . .
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
08-ஏப்-202213:41:08 IST Report Abuse
மணி ///////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X