குஜராத்தில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஹிமாச்சல்லில் மக்கள் பிரச்னைகளை பா.ஜ., தொடர்ந்து எழுப்பும் எனவும் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்று கொள்வதாக அறிவித்துள்ள அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரகு சர்மா, அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
குஜராத் தேர்தலில் 4 இடங்களில் ஆம் ஆத்மி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தேசிய கட்சியாக மாறி உள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில மக்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். விரைவாக காங்கிரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனக்கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜ., தோல்வியை ஏற்று கொண்ட முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.
புதுடில்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) நடந்து வருகிறது. குஜராத்தில் 150 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்., மெஜாரிட்டிக்கு தேவையான அளவுக்கு முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தை பொறுத்தவரை இந்த முறை அபரித வெற்றி பெற்றுள்ளது. 1985 ல் காங்கிரஸ் 149 தொகுதிகளை பெற்றது. தற்போது பா.ஜ,. இந்த பெரும் சாதனையை முறியடித்து பா.ஜ., 155 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
குஜராத்
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 182 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2017 லோக்சபா தேர்தலில், 68..39 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு வழக்கமாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்தக் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான, 92 தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் வெல்லும் என, கருத்துக் கணிப்பில் கூறினர். இந்நிலையில் ஓட்டுகளை எண்ணிக்கை இன்று(டிச.,08) 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களை பாஜ., பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹிமாச்சலப் பிரதேசம்:
ஹிமாச்சலப் பிரதேசத்தில், 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை இன்று நடை பெற்று வருகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மிகவும் குறைந்த சீட்களே வித்தியாசமாக இருக்கும் என தெரிவிக்கின்றன. இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது மாறி மாறி கட்சிகள் ஆட்சிக்கு வரும் பாரம்பரியம் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல் வெற்றி
குஜராத்தில் பா.ஜ., 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஹிமாச்சலில் இழுபறி ஏற்பட்டால் சுயேச்சைகளை வளைப்பதற்காக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளன.கடந்த 2௦17 தேர்தலில், பா.ஜ., 44ல் வென்றது. காங்கிரஸ், 21ல் வென்றது. ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றது.