நிலநடுக்கத்தால், பெரும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கி, சிரியா நாடுகளில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல் படி 4800 பேர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்காரா: துருக்கியில் இன்று (பிப்-7) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 6 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே நேற்று 3 முறை துருக்கியை நிலநடுக்கம் குலுக்கியதில் பல மாடி கட்டடங்கள் சரிந்தன. 4 ஆயிரத்திற்கும் மேலாக உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவி வழங்கி வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்தது. இதில் துருக்கியில் 1,500 பேரும் சிரியாவில் 800 பேரும் அடங்குவர்.
துருக்கியில் 3வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்திய பிரதமர் மோடி கூறியதாவது: துருக்கியைத் தாக்கிய அழிவுகரமான நிலநடுக்கத்தை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலரின் இறப்புகள் மற்றும் சேதங்கள் பற்றிய செய்திகள் வந்தவாறு உள்ளன. துருக்கிக்கு அருகிலுள்ள நாடுகளில் கூட சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிலநடுக்கம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், ‛நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி - சிரியா எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பையை ஏற்படுத்திய நிலையில், தெற்கு துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக இதுவரை துருக்கியில் 912 பேரும், சிரியாவில் 700 பேரும் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500ஐ தாண்டியது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை கூடுதலாகும் என அஞ்சப்படுகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை இதுவரை கிடைத்த தகவல்படி,பலி எண்ணிக்கை 500யை தாண்டியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு, உடைமைகள் சேதமடைந்துள்ளது வேதனை தருகிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உச்சக் கட்டத்தை தொட்டு வருகிறது. இதுவரை சிரியாவில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 300யை தாண்டியது.
இதுவரை கிடைத்த தகவல் படி, 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியைத் தொடர்ந்து, சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அதேபோல் இத்தாலியிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 100 பேர் உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தை அடுத்து இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டடங்கள் இடிந்து சேதமாகியுள்ள பகுதியில் மீட்பு பணி நடந்து வருகிறது. அதன் படி, இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் உள்ள பல்வேறு கட்டடங்கள் இடிந்து சேதமாகியுள்ளது. அதேபோல் மக்கள் குடியிருப்பு பகுதியிலும் கட்டடங்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சேதம் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இதுவரை கிடைத்த தகவல் படி, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் (பிப்.,06) அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் உயிர்ச்சேதம் பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
(பிப்.,06) அன்று துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9ஆக பதிவாகியுள்ளது. காசியன் தெப்பின் 26 கிலோமீட்டர் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பா நாடான, தெற்கு துருக்கியில் அங்காரா, காசியான்டேப், கரோமான்மராஸ், ஹாதாய், உஸ்மானியா, அடியமான், மலாட்டியா, சன்லிபிரா, அதானா,உள்ளிட்ட 10 நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மூன்று முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கதால் பெரிய கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதையடுத்து மக்கள் பாதுகாப்பு கருதி, சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் அருகேயுள்ள இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால், சேதங்கள் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு உலகின் 12க்கும் மேற்பட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என தெரிவித்துள்ளார்.
கடும் குளிர்
நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் மீட்பு படையினர் சவாலினை சந்தித்து வருகின்றனர். நிலநடுக்கம் பீதி காரணமாக வெளியில் தங்கியுள்ள மக்கள் பெரும் ்அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.