மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க., பொது செயலாளராக பொறுப்பேற்ற பழனிசாமி அளித்த பேட்டியில்; தொண்டர்களால் நான் பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். தொண்டர்களுக்கும், நிர்வாகிககளுக்கும் நன்றி. என்றார்.
வழக்கில் தீர்ப்பு வெளியானதும், பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகம் வந்தார். அங்கு அவரை அதிமுக பொதுசெயலாளராக பழனிசாமியை நிர்வாகிகள் அறிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அப்பீல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர். மகாதேவன், சபீக் ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்முன்பு அதிமுக வழக்கு நாளை (மார்ச்29 ) விசாரணை நடக்கிறது.
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பழனிசாமி அதிமுக.,வின் பொதுச்செயலாளராக இன்றே அறிவிக்கப்பட்டார்.
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் கோர்ட் மறுத்து விட்டது.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இந்த வழக்கு நாளை (மார்ச் 29) 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மார்ச் 22ம் தேதி இம்மனுக்களின் விசாரணை நீதிபதி குமரேஷ் பாபு முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இவ்வழக்கில் இன்று ( மார்ச் 28 ) காலை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கு தீர்ப்பு வெளியானதும், பழனிசாமி அதிமுக அலுவலகம் வந்தார். அங்கு அவரை கட்சியின் பொதுச்செயலாளராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.