கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ, தோல்வியடைந்தையடுத்து, முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
நாளை மாலை கர்நாடகா காங்., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா பேட்டி: பெரு முதலாளிகளை காப்பாற்றும் பாஜ., அரசு கர்நாடகாவில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் மதசார்பற்ற, ஜனநாயக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில் பாஜ., விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் சோனியா, ராகுலுக்கு தொலைபேசியின் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளர்.
வெற்றியை கொடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தேர்தலுக்கு உழைத்த சித்தராமையா மற்றும் தொண்டர்களுக்கு நன்றி என சிவகுமார் கூறினார்.
நிருபர்கள் சந்திப்பில் சித்தராமையா கூறுகையில், 2018ல் தோல்வி அடைந்த பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை அமைத்தது. கர்நாடகா தேர்தல் முடிவு, மக்களின் பாஜ., மீதான அதிருப்தியை வெ ளிப்படுத்தியுள்ளது. பண பலத்தால் பாஜ., வெற்றி பெற முயற்சித்தது. ஆனால் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரசிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்றார்.
நிருபர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகாவில் நடைபெற்று வந்த மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்றார்.
கர்நாடக முதல்வராக உள்ள பா.ஜ.,வின் பசவராஜ் பொம்மை, ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாஷிர் அகமது கான் பதானை தோற்கடித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த நிலையில், அக்கட்சி சார்பில் வெற்றி பெறும் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நாளை பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்., சார்பில் முதல்வர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகல் 11.45 மணி நிலவரப்படி, காங்., 123, பா.ஜ.,- 71-ல் முன்னிலையில் உள்ளது.
ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் சூழலில், முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். ஊழல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். பா.ஜ.,வின் ஊழல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர்' என்றார்
கர்நாடா மாநிலம் ஷிகானில் உள்ள பாஜ., அலுவலக வளாகத்தில் புகுந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், ஹரப்பனஹள்ளி, மாலூர், அப்சல்பூர், புட்டூர் கவுரிபிடனூர் ஆகிய 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
காலை 11:30 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 118 இடங்களிலும், பா.ஜ., 72 இடங்களிலும், ம.ஜ.த 25 இடங்களிலும் முன்னிலை வகித்தன
காலை 11 மணி நிலவரப்படி, காங்., 117, பா.ஜ.,- 72-ல் முன்னிலையில் உள்ளது.
காலை: 10;45 நிலவரப்படி, காங்., 116, பா.ஜ.,- 72-ல் முன்னிலை வகித்து வருகிறது.
காலை: 10;30 நிலவரம்: காங்., 114, பா.ஜ.,- 77-ல் முன்னிலையில் உள்ளது.
வெற்றி பெற்று வரும் காங்., எம்எல்ஏ.,க்கள் யாரும் கட்சி மாறிவிடக்கூடாது என்பதற்காக அனைத்து எம்எல்ஏ.,க்களையும் பெங்களூரு வரச்சொல்லி தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சொகுசு விடுதி தயாராகிறது.
காலை: 10;00 மணி நிலவரப்படி, காங்., 112, பா.ஜ.,- 79-ல் முன்னிலையில் உள்ளது.
காலை:09;45 மணி நிலவரப்படி பா.ஜ.,-75 , காங்., 101-ல் முன்னிலை பெற்று வருகிறது
‛முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். கூட்டணி குறித்து எந்த கட்சியும் எங்களை இதுவரை தொடர்ப்பு கொள்ளவில்லை. 30 முதல் 32 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெல்லும்' என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாராசாமி கூறியுள்ளார்.
காலை:09;00 பா.ஜ.,- 86, காங்., 110-ல் முன்னிலை
காலை:08;45 பா.ஜ.,- 92, காங்., 102ல் முன்னிலை
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி, நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 135, பா.ஜ., 65 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைக்கிறது.
கர்நாடகாவில் புதிய அரசை தேர்வு செய்ய, கடந்த 10ம் தேதி மாநிலத்தின் 224 தொகுதிகளிலும், ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். இது, 73.19 சதவீதம். பெங்களூரில் 55 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகின.
இந்நிலையில், 36 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 306 அறைகளில், இன்று(மே 13) காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஆட்சி அமைக்க, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜ., பின்னடைவை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்றுக்கொள்ள தயார்
‛முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். கூட்டணி குறித்து எந்த கட்சியும் எங்களை இதுவரை தொடர்ப்பு கொள்ளவில்லை. 30 முதல் 32 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெல்லும்' என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.
காங்., தொண்டர்கள் கொண்டாட்டம்
காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக டில்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமையகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா சிம்லாவில் உள்ள ஹனுமன் கோவியில் வழிபாடு செய்தார்.
பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு
கர்நாடகா மாநிலம் ஷங்கான் தொகுதியில் பாஜ., தேர்தல் அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது. இதனால், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பாஜ.,வினர் அலறியடித்து வெளியே ஓடினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பாஜ., அலுவலகத்தில் இருந்த பாம்பை மீட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கார்கே கருத்து:
நிருபர்கள் சந்திப்பில் கார்கே கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகாவில் நடைபெற்று வந்த மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்றார்.
மிகப்பெரிய வெற்றி
நிருபர்கள் சந்திப்பில் சித்தராமையா கூறுகையில், 2018ல் தோல்வி அடைந்த பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை அமைத்தது. கர்நாடகா தேர்தல் முடிவு, மக்களின் பாஜ., மீதான அதிருப்தியை வெ ளிப்படுத்தியுள்ளது. பண பலத்தால் பாஜ., வெற்றி பெற முயற்சித்தது. ஆனால் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி வந்தாலும் எதுவுமே நடக்காது என்று முன்பே கூறினோம். நாங்கள் 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் பெரும்பான்மையை பெறுவோம். ஊழல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். பா.ஜ.,வின் ஊழல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா காங்., தலைவர் சிவக்குமார்
நிருபர்கள் சந்திப்பில் சிவகுமார் கூறுகையில், வெற்றியை கொடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தேர்தலுக்கு உழைத்த சித்தராமையா மற்றும் தொண்டர்களுக்கு நன்றி என்றார். தொடர்ந்து கண்ணீர் விட்டு சிவ குமார் அழுதார்.