Advertisement

டி.வி காமெடி நடிகர் மீது தாக்குதல்: டிக்டாக் பெண் மீது புகார்

Share

சின்னத்திரை சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடித்து வந்தவர் நாஞ்சில் விஜயன். தனியாக யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். வனிதா விஜயகுமாரின் 3வது திருமணத்தை மிக கடுமையாக தனது யூ டியூப் சேனலிலும், டிக்டாக் செயலியிலும் விமர்சித்து வந்தார். இவரைப்போலவே வனிதாவை விமர்சித்தவர் சூர்யாதேவி என்கிற பெண்.

வனிதா விஜயகுமார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபோது சூர்யா தேவிக்கு ஆதரவாக இருந்தவர் நாஞ்சில் விஜயன். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்தார்கள். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நான் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக கருதிக் கொண்டு சூர்யாதேவி அடியாட்களுடன் எனது வளசரவாக்கம் வீட்டுக்கு வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் என்னுடன் இருந்த நடிகை சீபாவையும் கடுமையாக தாக்கி விட்டுச் சென்றார் என்று கூறியிருந்தார். தற்போது நாஞ்சில் விஜயனும, நடிகை சீபாவும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து நாஞ்சில் விஜயன் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement