dinamalar telegram
Advertisement

உபரி ஆசிரியர்கள் எவ்வளவு: பட்டியல் சேகரிப்பு நடக்குது

Share

கோவை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பட்டியல், 2021 ஆக., 1ம் தேதி நிலவரப்படி சமர்ப்பிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் எண்ணிக்கை பட்டியல் தயார் செய்யப்படும். ஆக., நிலவரப்படி, பள்ளி மாதாந்திர அறிக்கை, எமிஸ்., இணையதள பதிவு விபரங்கள் படியும், பட்டியல் தவறுகள் இன்றி இருக்க வேண்டியது அவசியம்.
ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டு ஆசிரியர்களுடன் உபரி, ஆசிரியர்கள் இன்றி உபரி என்ற பிரிவுகளில் பட்டியல் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கொடுக்கப்படும் விபரங்களில் தவறுகள் இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அளவில் ஒட்டுமொத்தமாக பள்ளிகள் விபரங்கள் தொகுக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர்கள் கையொப்பம் பெற்று, மாவட்ட கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மேலொப்பம் இட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இப்பட்டியலை தொகுப்பதற்கான ஆய்வு பணிகளை, வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement