பள்ளிகளில் உயர் நிலை அலுவலர்கள் ஆய்வு
ரெட்டியார்சத்திரம்: பள்ளிகளில் உயர் நிலை அலுவலர்கள் ஆய்வுக்காக 30 நெறிமுறைகளுடன் தயார்நிலை ஏற்பாடுகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் ஜன.19, 20ல் இயக்குனர், இணை இயக்குனர் அளவிலான உயர் நிலை அலுவலர் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதற்காக 30 நெறிமுறைகளை கடைபிடிக்க தயார் நிலையில் இருக்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பள்ளி வளாகம், ஆசிரியர் அறை, வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூட தூய்மை, 3 ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை, தேர்ச்சி வீதம், வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பள்ளி கட்டமைப்பில் தேவை, கல்வி தொலைக்காட்சிக்கான கால அட்டவணை வழங்குதல், மாணவர் மனசு புகார் பெட்டி, மாணவர்கள் தடுப்பூசி போட்ட விவரம், மனநல ஆலோசனை தொலைபேசி எண்கள், பல்வகை பதிவேடுகள், உள்பட 30 நெறிமுறைகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தி உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!