பள்ளி, கல்லூரிகள் மூட மாநில அரசுகள் உத்தரவு
லக்னோ: ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூட மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மாநில அரசு தாக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 23ஆம் தேதிவரை மூட உத்தரவிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் அரசு ஜனவரி 16ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்கள் பல, இதேபோல பள்ளி, கல்லூரிகளை மேலும் சில காலத்துக்கு மூட உத்தரவிட்டு உள்ளன. கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுகள் மாணவர்கள் நலன் கருதி இந்த உத்தரவை இட்டுள்ளன. முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் கொரோனா தாக்கம் குறித்து அறிய முக்கிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.
தலைநகர் லக்னோவில் உள்ள கிங்ஸ் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். விரைவில் உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதிக்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!