Load Image
dinamalar telegram
Advertisement

தற்கொலைக்கு முயன்ற மாணவர்கள்; அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆறுதல்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு முடிவுகளால் தற்கொலைக்கு முயன்ற மாணவர்களை அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெளியான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் 5 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உடனடி மறு தேர்வு எழுதி உயர் கல்வியை தொடர ஆலோசனை வழங்கினார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்படத் தேவையில்லை. தோல்விதான் வெற்றிக்கான முதல் படியாகும். இம்மாத இறுதியில் மறுதேர்வு தேதி அறிவிக்கப்படும். அடுத்த மாதம் நடைபெறும் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்று உயர் கல்வியில் சேரலாம். வரும் ஆகஸ்ட் மாதம் வரை உயர்கல்வியில் சேர அரசு அனைத்து கல்லுாரிகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது என்றார்.
கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement