Load Image
dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி கமிஷனரகம் சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

சர்வதேச அளவிலான 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள், ஜூலை 27 முதல் ஆக.,10 வரை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு, சதுரங்க போட்டிகளை நடத்தி, அதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்.
இதற்காக, பள்ளி அளவில், ஜூலை 11 முதல் 15 வரை செஸ் போட்டி நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறுவோருக்கு, வட்டார அளவில், ஜூலை 20; மாவட்ட அளவில், ஜூலை 25லும் போட்டிகள் நடத்த வேண்டும்.மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகள், ஆக., 1 முதல் 5ம் தேதி வரையில் நடத்த வேண்டும்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.செஸ் சங்கங்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களை வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement