அரசு பள்ளியில் காகித கலை பயிற்சி; புதுடில்லி கலைஞர்களுக்கு அனுமதி
சென்னை: அரசு பள்ளிகளில் காகித கலை திறன்களை வளர்க்க, புதுடில்லி கலைஞர்கள் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பின், அரசு பள்ளி மாணவர்களுக்கு, புதிய கல்வி கொள்கையின் பல முக்கிய அம்சங்கள், பல்வேறு திட்டங்களாக அமல்படுத்தப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் வழியே, கற்பித்தல் பணிக்கான திட்டங்களும் செயல்படுத்தப் படுகின்றன.
இந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, அரசு பள்ளிகளில் ஆய்வக பயிற்சிகளை வழங்க, தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதற்கு சங்கங்கள் மற்றும் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த அனுமதி அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, காகித கலை திறன் வளர்ப்பு பயிற்சியை மேற்கொள்ள, புதுடில்லியை சேர்ந்த உமேஷ்ராய், புராண்லால் ஆகிய இரண்டு கலைஞர்கள், பள்ளிக்கல்வி துறையில் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள், புதுடில்லி கலைஞர்களிடம் பயிற்சி பெற, உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!