Load Image
dinamalar telegram
Advertisement

சுதந்திர தின கவிதை போட்டி:பல்கலை அறிவிப்பு

சென்னை: சுதந்திர தின கவிதை போட்டியை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
நாட்டின், 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி, ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், தமிழ் வளர்ச்சி மையம் சார்பில், கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரம் போற்றுவோம், தியாகிகளின் தியாகங்களை போற்றுவோம் மற்றும் பெற்ற சுதந்திரத்தை பேணி போற்றுவோம் என்ற தலைப்புகளில், கவிதைகள் எழுத வேண்டும். பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கலாம்.
நாளைக்குள் ஆன்லைனில் கவிதைகளை அனுப்ப வேண்டும். கவிதை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் விதிகளை, www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement