Load Image
dinamalar telegram
Advertisement

மருத்துவ துறையில் செயற்கை கோள்; விஞ்ஞானி மயில்சாமி பெருமிதம்

தஞ்சாவூர்: &'&'வருங்காலங்களில், மருத்துவ அறுவை சிகிச்சையைக்கூட செயற்கைகோள் வழியாக கண்டறியலாம்,&'&' என, &'சந்திராயன்&' முன்னாள் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.தஞ்சாவூரில், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின், 45வது மாநில மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற சந்திராயன் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:அறிவியல் தொழில்நுட்பம், அனைத்து துறைகளிலும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. மருத்துவ அறுவை சிகிச்சையிலும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது.

கத்திரிகோலால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலத்தில் இருந்து, தற்போது இயந்திரம் மூலம் மிக சிறப்பாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு, ஒரு புதிய வகை அறுவை சிகிச்சை தொழில் நுட்பங்கள் வெளியாகிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
டாக்டர்களின் ஆயுள் காலம் முழுவதும் ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டு இருக்கின்றனர்.கொரோனா தாக்கத்தில் இருந்து, மூன்று ஆண்டுகளில் மீண்டு வர, அறிவியல் வளர்ச்சி தான் காரணம். அறிவியல் வளர்ச்சி இல்லை என்றால், கொரோனாவில் இருந்து மீள, 10 ஆண்டு ஆகி இருக்கும்.உலகளவில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.
நம் நாட்டிலிருந்து நுாறுக்கும் மேற்பட்டவை விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும், மற்ற நாடுகளுக்காக, இந்தியாவில் இருந்து, 350 செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் மட்டும், உலகளவில் 3,000 செயற்கை கோள்கள் ஏவப்பட்டுள்ளன. வரும் காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட, செயற்கைகோள் வழியாக கண்டறியலாம் என, கூறுகின்றனர்.
கம்ப்யூட்டர் புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement