Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கல்வி கொள்கை கவர்னர் ரவி பெருமிதம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான முன்னெடுப்பு. ஆரோக்கியமான, புத்திசாலியான குடிமக்களை உருவாக்கும் என, கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள செய்தி:மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியா வளர்ச்சி அடைய, நம் குடிமகன்களை நன்கு படித்தவர்களாக உருவாக்க வேண்டியது அவசியம். புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020 புரட்சிகரமான முன்னெடுப்பு. இது, ஆரோக்கியமான, புத்திசாலியான, விமர்சன சிந்தனை உள்ள அனுபவ படிப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக, நம் குடிமக்களை உருவாக்கும். தமிழகம் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்று. நம் மாநிலத்தின் மனிதவள குறியீடு, நாட்டில் சிறந்ததாக உள்ளது.
நாம் நமது பலம் மற்றும் பலவீனங்களை அறிய வேண்டும். பலவீனங்களை களைய, நம் பலத்தை பயன்படுத்த வேண்டும். மாநில அளவில் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். நம் மாநிலத்தில் தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க, தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், நம் அண்டை மாநிலங்களில் சில, நம் மாநிலத்தை விட பல மடங்கு முதலீடுகளை ஈர்க்கிறது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்து, அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்ற வேண்டும். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement