Load Image
dinamalar telegram
Advertisement

என்ன பாடம்; எந்த கல்லுாரி? இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் நடைமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டுதல்கள் வழங்கக்கூடிய, உங்களால் முடியும் என்ற சிறப்பு நிகழ்ச்சி, சென்னையில் இரண்டு இடங்களில், தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது.
குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மற்றும் அண்ணாநகர் மேற்கில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி வளாகம் ஆகியவற்றில், இந்த நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை பேராசிரியர் ராஜேந்திர பூபதி பங்கேற்று, கவுன்சிலிங் நடைமுறைகளை விளக்கினார்.
அவர் பேசியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான இணைய தளத்தில், கவுன்சிலிங் குறித்த விபரங்கள் அடங்கிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். கவுன்சிலிங்கில், இந்தாண்டு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தவர்கள், ஒரு வாரத்திற்குள் தங்களுக்கான இடங்களில் சேர்ந்து, கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு சேராவிட்டால், அவர்கள் கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறியதாக கருதப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பின், பாடப்புத்தகங்களை கடந்து, பல்வேறு பாடப்பிரிவுகளை படிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் செமஸ்டர் விடுமுறையில், தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிக்கு சென்று, அனுபவங்களை வளர்த்து கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் படித்தால் மட்டுமே வேலை கிடைக்காது. உங்களின் திறமைகளை வளர்த்தால் தான், வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:
கடந்த, 12 ஆண்டுகளாக நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும், கவுன்சிலிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். அடுத்து வரும் நாட்களில், ஆன்லைன் வழியாக நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதிலும், மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்கலாம். புதிதாக உருவாகும் வேலைகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டவையாக உள்ளன. பெரிய மென்பொருள் நிறுவனங்களில், இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஒரு லட்சம் பேர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில், வேலைக்கு தேவையான, அடிப்படை திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், எந்த துறையில் வேலைக்கு சேர விரும்புகிறோமோ, அதற்கேற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், கல்லுாரிகளையும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வது குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.
அதேபோல் கவுன்சிலிங்கில், விருப்பப் பதிவில் கவனமாக மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள்; கல்லுாரிகளின் குறியீட்டு எண்களையும் பயன்படுத்தி, கவுன்சிலிங்கில் எளிதாக இடங்களை தேர்வு செய்யும் முறை குறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் நாகராஜன் வழிகாட்டுதல்கள் வழங்கினார். மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் நேரடியாக விளக்கங்கள் அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement