dinamalar telegram
Advertisement

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் ஜோதிகா ராஜகோபாலன் பரதநாட்டியம் அரங்கேற்றம்

Share

டெக்சாஸின் பியர்லாண்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோயிலில் திரு.ராஜகோபாலன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் புதல்வி செல்வி ஜோதிகா ராஜகோபாலனின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது நிகழ்வை இன்னும் மறக்க முடியாததாக மாற்றியது. ஜோதிகாவின் சகோதரி ஹேமஸ்வேதா ராஜகோபாலன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விழாவை சிறக்கச் செய்தார்.இந்த நிகழ்ச்சி முதலில் நடராஜ பூஜையுடன் தொடங்கியது. ஜோதிகா தனது குரு மற்றும் குடும்பத்தினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றார். பின் அவரும் அவரது குரு திருமதி. இந்திராணி பார்த்தசாரதியும் நடராஜாவுக்கு ஒரு ஸ்லோக பாராயணம் செய்தனர். இதனை அடுத்து குருவிடமிருந்து தன் பாத சலங்கைகளைப் பெற்றுக்கொண்டு அரங்கேற்றத்தை துவங்கினார்.தன் நடனத்தை வெவ்வேறு கடவுள்களை/தெய்வங்களைக் குறித்து 8 பகுதிகளாக அவர் நிகழ்த்தினார். அவரது முதல் பகுதி ஆனந்த நர்த்தன கணபதி. கணபதியைப் பற்றிய மிகவும் மகிழ்ச்சியான நடனம் அதைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு ஒரு சப்தம். கிருஷ்ணன் மணலை உட்கொண்டு வெண்ணெய் திருடும் போது அவரின் குறும்புத்தனத்தை இந்த பகுதி சித்தரித்தது. அவருடைய மூன்றாவது பகுதி நடராஜருக்கு வர்ணம். வர்ணங்கள் மிகவும் நுணுக்கங்கள் கொண்ட சற்றே கடினமான பகுதிகள்.ஏனெனில் அவை 30 நிமிடங்களுக்கும் மேலாக இருந்தும், வேகமான ஜதிகளுக்கும் அதன் கதைக்கேற்றார்ப் போல முகபாவங்களுடன் ஆடியது சிறப்பு! அடுத்து அனைவரையும் கவர்ந்தது அவர் ஆடிய முருக பகவானுக்கு ஒரு காவடிச் சிந்து. அதைத் தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த 'மகா காளி தியானம்'- துர்கா தேவிக்கு. மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் மகாஷகியின் வடிவத்தை அவள் சித்தரித்தார். அப்போது அவரது நாக்கு வெளியேயும் அகன்ற கண்களோடும் காண்பித்தது மிக நன்று. அடுத்து கிருஷ்ணருக்கு ‘ஆடினாயே கண்ணே’. கிருஷ்ணா தனது புல்லாங்குழல் வாசிப்பதை சித்தரித்த இப்பகுதி வேகமான பாத அசைவுகளுடன் அமைந்திருந்தது. இறுதியாக, ஜோதிகா தனது தில்லானாவைத் தொடர்ந்து அய்யப்ப பகவானுக்கு மங்களத்துடன் முடித்தார். நிகழ்வு முழுவதும் அவரது ஆற்றலையும் மென்மையான நடன அசைவுகள் மற்றும் அழகான முக பாவனைகளையும் பார்வையாளர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் பேசினர்.நிகழ்ச்சிகளுக்கு இடையில், ஜோதிகாவின் சிறப்பு விருந்தினர் மற்றும் அவரது இசை ஆசிரியரான திருமதி. ராஜிஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி,ஜோதிகாவை பற்றி தனி நபராக அவரது சிறப்புகளையும், நடனக் கலைஞராக அவரது வளர்ச்சியைப் பற்றியும் சில வார்த்தைகள் கூறினார். ஜோதிகாவின் மிக நெருங்கிய நண்பர்கள் தங்களின் அருமையான அழகான நட்பைப் பற்றி சில வார்த்தைகளைச் சொன்னார்கள். இறுதியாக,ஜோதிகாவின் குரு திருமதி. இந்திராணி பார்த்தசாரதி அரங்கேற்றத்தை முடித்ததற்கான சான்றிதழை வழங்கினார். ஜோதிகாவின் பெற்றோர் ராஜகோபாலன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் நன்றியுரை கூற இந்நிகழ்வு இனிதே முடிந்தது.ஜோதிகா பற்றி: ஜோதிகா தனது ஐந்து வயதில் குரு இந்திராணி பார்த்தசாரதியிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். இடையில் சில காலம் விட்டு பதினொரு வயதில் மீண்டும் சேர்ந்தார். படிப்பில் சுட்டி.தமிழ் சமூக அமைப்பில் ஓர் உறுப்பினர். பாரதி கலை மன்றம் போன்ற பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்ட பல கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரது பெற்றோர் சென்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஆனால் அமெரிக்காவில் 23 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஜோதிகா தற்போது ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு ஹானர்ஸ் உளவியல்(முதன்மை),மருத்துவம் மற்றும் சமூகவியல் மாணவி.திருமதி. இந்திராணி பார்த்தசாரதி: “அபிநயா ஸ்கூல் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸின்” நிறுவனர் மற்றும் இயக்குநர். பெங்களூரைச் சேர்ந்த திருமதி.ராதா ஸ்ரீதர்-கர்நாடக கலா திலக குருவின் மகள் மற்றும் சீடர். மேலும் குரு முத்தையா பிள்ளையிடம் பந்தநல்லூர் பாணி பரத நாட்டியமும், கலாக்ஷேத்ரா பாணியில் பிரபல நடன தம்பதியினர் தனஞ்சயன்கள் மற்றும் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இடமும் கற்ற மாணவர் ஆவார்! குச்சிபுடி பாணியில் நடனம் மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். திருமதி. இந்திராணி பார்த்தசாரதி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இளம் நடனக் கலைஞர்களுக்கு பரதநாட்டியத்தின் அனைத்து நிலைகளையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து அற்புதமான நடனக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார்.செல்வி.ஜோதிகாவுக்கு தினமலர் சார்பாக வாழ்த்துக்கள்!- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement