dinamalar telegram
Advertisement

துபாயில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Share

துபாய் : துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இந் த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு டிவைன் பிளாக் மஜ்லிசின் அமைப்பாளர் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்த மஜ்லிசின் நோக்கம் குறித்தும், நேரடியாக நடந்து வந்த நிகழ்ச்சியானது தற்போது காணொலி வழியாக நடத்தப்படுவதாக தெரிவித்தார். தொடக்கமாக சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவாளராக கோயம்புத்தூர் மஸ்ஜிதுல் ஜன்னா இமாம் மற்றும் அல் மத்ரஸா இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியின் ஆசிரியருமான மௌலானா அல் ஹாபிழ் ஏ.கே.ஏ. ஷர்புதீன் பைஜி அவர்கள் ” மாசில்லா குர்பானியும், மறையோனின் மஃரிஃபதும்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

மஹ்ரூப் காக்கா எழுதிய மார்க்க விழிப்புணர்வு பாடலை சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் வெளியிட்டு விளக்கவுரை நிகழ்த்தினார். ஜலாலுதீன் துஆ ஓதினார். நிகழ்வில் அபுதாபி அய்மான் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், இலங்கை மௌலவி அஹில் முஹம்மது, நத்தம் சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் உசேன், கீழை அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement