தற்கொலை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்ற கருத்தை மையமாக வைத்து தயாரித்த அறி என்ற குறும்படத்தின் விளம்பர தட்டியை, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் தலைவர் குணசீலன் வெளியிட, இயக்குநர் மில்லத் அகமது பெற்றுக்கொண்டார். வரும் பொங்கல் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக மில்லத் வீடியோ சர்வீஸ் என்ற யூடியூப் ஒளியலையில் குணசீலன் வெளியீடு செய்கிறார்.
ஏழு நிமிடத்தில் தனி ஒரு கதாபாத்திரமாக, வசனம் பேசாமல், தன் முகப் பாவனைகள் மூலம் மிக சிறப்பாக நடித்து ஒரு நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லியிருக்கிறார். இக்குறும்படம் சில விருதுகளும், உலக சாதனையும் செய்துள்ளது. எங்கள் கலைஞர்கள் சங்கத்தின் மூலம் எங்கள் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறோம் என்கிறார் குணசீலன்.
என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா என்ற திரைப்படத்தின் இயக்குநர் நவீன் மணிகண்டன், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கதை சொல்லியிருக்கிறார். மனிதன் என்பவன் போராட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் மிக பயனுள்ள குறும்படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்றார்.
மேலக்காண்டை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்ற செயலாளர் கவிஞர் தமிழ்ப்பிரியன், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அதனை அறிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் என்பதை அறி குறும்படம் அருமையாக விளக்குகிறது, இதுபோல பல குறும்படங்களை தயாரித்து நண்பர் மில்லத் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்றார்.
குறும்படத்திற்கு வசனம் பேசிய கவிஞர் பானு சுரேஷ், மோனலிசா, அஃபீஃபா, சியா லிம், இசையமைத்த பால் மற்றும் ஒளிப்பதிவு செய்த அலிஃப் அஹ்மது ஆகியோருக்கு இயக்குநர் நன்றி தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் வெ.புரு ேஷாத்தமன்
உலகச் சாதனை குறும்படம் "அறி" பொங்கலுக்கு வெளியீடு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!