மாலத்தீவில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா பொங்கல் விழா-2022 மாலத்தீவு தமிழ் நண்பர்கள் மற்றும் ராயல் டைகர் அணியின் சார்பாக 14-02-2022 அனறு சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு ஒருங்கிணைப்பாளர் கர்னல் வினோ தேவராஜ் தலைமை தாங்கினார். தமிழ்தாய் வாழ்த்துடன் விழா துவங்கபட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய கலாச்சார மையத்தின் இயக்குனர் டாக்டர் சையத் நஸ்ரின் தன்வீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.விழாவில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மாலத்தீவு நாட்டு மக்கள் கலந்து கொண்டார்கள், விழாவில் பல நாட்டு மக்கள் கலந்து கொண்ட போட்டிகள் நடைபெற்றது, அத்துடன் தமிழ் பாரம்பரிய உறியடி போட்டி, வடம் இழுத்தல் போட்டி மற்றும் இசை நாற்காலி போட்டி , கபடி போட்டி , குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.வட இந்தியாவில் கொண்டாடும் மகர்சங்கராந்தி நினைவாக பட்டங்கள் பறக்கவிடப்பட்டன, போட்டிகளில் மாலத்தீவு வாழ் தமிழ் உறவுகள் பல ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் கடந்த ஆண்டு சமூக சேவை செய்தவர்களுக்கும் விளையாட்டுகளில் சிறப்பித்வர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.விழா நிகழ்ச்சிகளை மாலத்தீவு தமிழ் நண்பர்கள் மற்றும் ராயல் டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அண்ட் சர்வீஸ் டீம் செயற்குழு உறுப்பினர்கள் எட்வின் மோகன், ஹரிலால் , உதய ராஜன் , வறுவேல் ராஜன், ஜோதி ஸ்டாலின் , ரவி பலராமன், ஜேயதாஸ் விஷ்ணுவர்தன் ராஜ்குமார் பிரைமெண்ட், போபன், பாண்டியன், பிரவின், ரமேஷ், ராஜரத்தினம், சரவணன், சுரேஷ், சஜித், வினு ஜெபராஜ், பரத் பாண்டியன், மற்றும் ராயல் டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் டீம் உறுப்பினர்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.- நமது செய்தியளர் அபுஹிஃபா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!