பஹ்ரைனில் நடனம் மற்றும் இசைத் திருவிழா
மனாமா : பஹ்ரைன் இந்திய தூதரகம், பஹ்ரைன் கேரளிய சமாஜத்துடன் இணைந்து இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நடனம் மற்றும் இசைத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த திருவிழாவை இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவாஸ்தவா குத்து விளக்கு ஏற்றி பாரம்பரிய முறைப்படி தொடங்கி வைத்தார். பஹ்ரைன் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையத்தின் பொது இயக்குநர் ஷேக்கா ஹாலா பிந்த் முஹம்மது அல் கலீபா இந்திய தூதருடன் இணைந்து இந்த விழாவை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் பத்ம விபூஷன் உமையாள்புரம் மிருதங்கமும், ஸ்டீபன் தேவசி கீ போர்டும், ஆட்டுகல் பாலசுப்ரமணியம் வயலினும், அமித் நடிக் புல்லாங்குழலும் வாசித்து பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். பிரபல நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞருமான ஆஷா சரத்தின் நடனம் அனைவரையும் பரசவப் படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த விழாவில் தூதரக அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!