Load Image
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் ஆலயத்தில் அன்னையர் தின சிறப்பு வழிபாடு

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அன்னையர் தின சிறப்பு வழிபாடு மே திங்கள் 7 ஆம் தேதி ஞாயிறு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னிரு நாட்களிலேயே லோக மாதாவான ஸ்ரீ மகாலட்சுமித் தாயாருக்கு – வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் வேத விற்பன்னர்கள் ஸ்ரீ அஷ்டலட்சுமி மகா யாகத்தை நடத்தினர். தொடர்ந்து 308 நாமங்கள் அர்ச்சனை ( திரிசதி ) கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.. திரிசதி அர்ச்சனை செய்வதால் தனம் – தாண்யம் – கல்வி – வீரம் – மகப் பேறு பாக்கியம் – எடுத்த செயலில் வெற்றி மற்றும் வேண்டும் வரங்களை அன்னை நல்குவார். மிக உயர்ந்த வழிபாடாக இது கருதப்படுகிறது. 27 மங்கல மகளிர் கலந்து கொண்டு உருக்கத்தோடு வழிபட்டனர்.

ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு திருப்பாவாடை சாற்றும் நிகழ்வும் நடைபெற்றது பக்தப் பெருமக்களுக்கு சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் மெய்சிலிர்க்க வைத்தது. திருப்பாவாடைக் காட்சி அற்புதம். தாயார் பதினாறு செல்வங்களும் வழங்க ஆசி வழங்கியதும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருப்பாவாடை சாற்றி எழுந்தருளியதும் கிடைத்தற்கரிய பெரும் பேறாகப் பக்தப் பெருமக்கள் போற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தப் பெருமக்கள் பங்கேற்று அருட் பிரசாதமும் அன்னப் பிரசாதமும் பெற்று மகிழ்ந்தனர். ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement