தோஹாவில் சர்வதேச தொழிலாளர் தினம்
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள ஆசிய நகரில் சர்வதேச தொழிலாளர் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் தலைமை வகித்தார். இந்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி வி. முரளீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்திய அரசு தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நலப் பணிகள் குறித்து விவரித்தார். இந்த விழாவில் கத்தார் நாட்டு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!