தமிழ்த்தாய் வாழ்த்து அனைவராலும் பாடப்பட்டது. ஷ்ராவண் மதன்ராஜ் முழுப்பாடலையும் பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சென்னைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தினர்.
தமிழ்ப் புத்தாண்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அலங்கார வண்டியை மந்திர் இசைப்பள்ளி உருவாக்கி இருந்தது. பரத நாட்டியம், குச்சிப்படி நடனம், பல்வேறு நடனங்கள், பாடல்கள் இடம் பெற்றன. நிறைவாக புராஜக்ட் ஒன் குழுவினரின் பிரேக் டான்ஸ் நடைபெற்றது.
இந்த கழகத்தின் 6 இளைஞர்கள் பாரம்பரிய உடையில் வந்து ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசினர். கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் படத் தொகுப்பு காட்டபபட்டது.
இந்திய துணைத்தூதர் சுனீத் மேத்தா பேசுகையில், ஆஸ்திரேலிய பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு தமிழ்ச் சமுதாயம் அரிய பங்காற்றியுள்ளதை ஆஸ்திரேலியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்றைய நிகழ்வு தென் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலிய பல்கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்துவதாக தமிழ்க் கலாச்சாரம் அமைந்துள்ளது என்றார்.
டேவிட் ஸ்மித் எம்.பி., பேசுகையில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான சிறந்த உறவு மற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார்.
செனட் உறுப்பினர் மேடி நார்தம் நிகழ்ச்சியை பாராட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய தலைநகர் பகுதி பல்கலாச்சாரத் துறை அமைச்சர் சூஸன் ஓர் பேசுகையில், இந்த நிகழ்வு ஆஸ்திரேலியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சிறப்பான உறவைப் பிரதிபலிக்கிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான பிணைப்பை ஒன்றாக சேர்ந்து கொண்டாட ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
அன்னையர் தின வாழ்த்துக்களுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!