துபாய் : துபாய் நகருக்கு குவைத் நாட்டின் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் என். அமீர் அஹமது வருகை புரிந்தார். அவருக்கு அமீரக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் புதிய தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் மற்றும் புதிய பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மேலும் நினைவுப் பரிசும் வழங்கினர்.
அதனையடுத்து அமீரகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரிக்கப்பட்டது.
இதனை கேட்டறிந்த அமீர் அஹ்மது அமீரக சங்கத்தின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் மாணவர் சங்கங்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
-நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!