மெல்போர்னில் இந்திய உத்சவ்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் மே மாதம் 22ம் நாள் மிக புகழ்பெற்ற என்.ஜி வி (National Gallery of Victoria ) கலைக்கூடத்தில் இந்தியா உட்ஸவ் என்ற நிகழ்வு நடைபெற்றது.
'உலகங்களை மாற்றுதல்' என்ற தலைப்பில் இன்றைய இந்தியா எவ்வாறு மாறுதலையும் மரபையும் ஒரே சமயத்தில் சந்தித்து கையாண்டு வருகிறது என்பதை விளக்கும் வழியாக ஓவியம் மற்றும் நிகர கலைகள் மூலம் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒரு தளத்தில் சிதார் தபலா பாரம்பரிய இசை , அதே சமயம் மற்றொரு தளத்தில் பாலிவுட், பங்கரா நடனங்கள் என்று பழமையும் புதுமையும் அததற்குரிய ஊக்கத்தோடு நடைபெற்றன. ஏராளமான இந்திய வம்சாவளி மற்றும் ஆஸ்திரேலிய மக்கள் திரளாய் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!