பிரான்ஸில் இந்திய உணவு திருவிழா
பாரிஸிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் எபினாய்-சுர்-சீன்(Epinay sur Seine) இஙஂகு ஆர்கானிக் பொருட்களின் நுகர்வை ஊக்குவிக்கவும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு அதன் குடிமக்களை அறிமுகப்படுத்தவும், Epinay sur Seine மாதாந்திர திருவிழாவை நடத்துகிறது, இது உலகில் தற்போதுள்ள பல்வேறு உணவுவகைகளை சிறப்பித்துக் காட்டுகிறது. அநஂத வரிசையிலஂ இந்த ஜூன் மாதத்தில் இந்திய உணவுகள் கௌரவிக்கப்பட்டன.ஆர்கானிக் தயாரிப்புகள் செயற்கை இரசாயனப் பொருட்கள் (நைட்ரஜன்உரங்கள், பூச்சிக் கொல்லிகள்) இல்லாததால், நீரை மாசுபடுத்தும் செலவைக் குறைக்கிறது. பலரையும், குறிப்பாக பிரெஞ்சு மக்களையும் ஒன்றிணைத்த இந்த நிகழ்வின்போது, பிரியாணி, நாண், பாயாசம், வடை என பல இந்திய உணவு வகைகளை தயாரித்த கேத்தரின் என்ற இந்திய சமையற் பிரியர்களைச் சந்தித்தோம்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேத்தரின், உயர்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக உள்ளார். அவர் 20 ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே அவருகஂகு சமையலில் ஆர்வம் அதிகம். கேத்தரின் தனது ஓய்வுநேரத்தை பிரிச் (marché de la Briche) சந்தையில் இந்திய உணவுகளைத் தயாரிதஂது விறஂபனை செயஂது வருகிறாரஂ. இதனாலஂ அவர் தனது உணவுகளை மிகவும் விரும்பும் பல பிரெஞ்சு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளார். மேலும் பிரெஞ்சுக்காரர்கள் இந்திய சைவ உணவுகளை விரும்புகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.பன்முகத்தன்மை கொண்ட உணவு வகைகளாலும், இந்திய உணவுவகைகளை ரசித்த பிரஞ்சுக்காரர்களின் பெருமளவிலான வருகையாலும் இவ்விழா மாபெரும் வெற்றி பெற்றது.- நமது செய்தியாளர் ஜெயகௌரி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!