புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி
மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி ரியாம் பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். எளிய வகை யோகா பயிற்சிகளை பயிற்றுநர்கள் செய்து காண்பித்தனர். அதனை பின்பற்றி பலரும் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய பொதுமக்கள், மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!