dinamalar telegram
Advertisement

கோப்பை வெல்வாரா நடால் * இன்று துவங்குகிறது ஆஸி., ஓபன்

Share

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் துவங்குகிறது. ஜோகோவிச் இல்லாத நிலையில் 2009க்குப் பின் இங்கு நடால் கோப்பை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில் கோப்பை வெல்ல ஸ்பெயினின் ரபெல் நடால், மெத்வெடேவ், அலெக்சாண்டர் ஜிவரேவ் இடையே பலத்த போட்டி காணப்படும். கடந்த 2009க்குப் பின் இங்கு கோப்பை வெல்லாத நடால், இம்முறை சாதிக்க அதிக வாய்ப்புள்ளது. எனினும் கடந்த இரு தொடர்களில் காலிறுதியுடன் வெளியேறிய நடால், இதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

கடந்த ஆண்டில் பைனலில் ஜோகோவிச்சிடம் கோப்பை இழந்தவர் ரஷ்யாவின் மெத்வெடேவ். இம்முறை 'நம்பர்-2' வீரராக களமிறங்கும் இவர், காலிறுதியில் நடாலை சந்திக்க நேரிடும். 'நம்பர்-3' வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவ், மெக்சிகோவின் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

பெண்கள் பிரிவில் கோப்பை வெல்ல பலத்த போட்டி காணப்படுகிறது. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஏற்கனவே கோப்பை வென்ற 14 வீராங்கனைகள் பந்தயத்தில் உள்ளனர். எனினும் நடப்பு சாம்பியன் ஜப்பானின் ஒசாகா, உலகின் 'நம்பர்-1' வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. இவர்கள் காலிறுதியில் மோதும் நிலை உள்ளது.

மற்றொரு பிரிவில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்ஜிகோவா, சிட்னி ஓபன் சாம்பியன் ஸ்பெயின் பவுலா படோசா இடையே எதிர்பார்ப்பு உள்ளது. இவர்களுக்கு பெலாரசின் அசரன்கா, முன்னாள் சாம்பியன் சோபியா கெனின் சவால் தருவர். இவர்களுடன் ஸ்பெயினின் முகுருஜா, ருமேனியாவின் ஹாலெப், பிரிட்டனின் ரடுகானு என பலர் களத்தில் உள்ளனர்.



ரூ. 15.32 கோடி

ஆஸ்திரேலிய ஓபனின் மொத்த பரிசுத் தொகை ரூ. 400 கோடி. ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 15.32 கோடி பரிசுத் தொகை தரப்படும். 2வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ. 8.4 கோடி கிடைக்கும்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement