கோவா: கொரோனா காரணமாக நேற்று நடக்க இருந்த கேரளா-மும்பை அணிகள் மோத இருந்த ஐ.எஸ்.எல்., போட்டி ஒத்திவைக்கப்பட்டது.இந்தியாவின் கோவாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் 8 வது சீசன் தற்போது நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் கேரளா (20 புள்ளி), ஜாம்ெஷட்பூர் (19), ஐ தராபாத் (17), மும்பை (17) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. சென்னை அணி 15 புள்ளியுடன் ஆறாவது இடத்தில் உள்ளன. இதனிடையே கடந்த ஒருவாரமாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களில் கொரோனா பரவியது.
மோகன் பகான் வீரர்கள் 5 பேர் உட்பட, ஒடிசா, கோவா, பெங்களூரு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மோகன் பகான்-ஒடிசா, மோகன் பகான்-பெங்களூரு மோதல் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது கேரளா வீரர்களுக்கும் கொரோனா ஏற்பட்டது தெரியவர, நேற்று நடக்க இருந்த கேரளா-மும்பை மோதல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஐ.எஸ்.எல்., தரப்பில் வெளியான செய்தியில்,'வீரர்கள், பயிற்சியாளர்கள் உடல் நலன் தான் முக்கியம். இதுகுறித்து ஐ.எஸ்.எல்., மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கேரளா அணியில் களமிறங்கத் தேவையான வீரர்கள் தயாராக இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஐ.எஸ்.எல்., மருத்துவ குழுவினர் ஆலோசனைப் படி, மும்பை அணிக்கு எதிரான மோதல் ஒத்தி வைக்கப்பட்டது,' என தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.எல்., மீண்டும் ஒத்திவைப்பு * கேரளா–மும்பை மோதல் நிறுத்தம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!