dinamalar telegram
Advertisement

மாஸ்டர்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

Share

விஜ் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்று போட்டியை இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.

நெதர்லாந்தில், 84வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதில் 'நடப்பு உலக சாம்பியன்' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் 'ரவுண்டு ராபின்' முறையில் விளையாடுகின்றனர். இதன் முதல் சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 44வது நகர்த்தலின் போது 'டிரா' செய்தார்.



மற்றொரு போட்டியில் இந்தியாவின் விதித் சந்தோஷ், அமெரிக்காவின் சாம் ஷாங்க்லாண்ட் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய விதித், 65வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.



நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் காருணா, அஜர்பெய்ஜானின் மமெத்யாரோவ் ஷாக்ரியார் ஆகியோர் தங்களது முதல் சுற்றுப் போட்டியை 'டிரா' செய்தனர்.



கங்குலி வெற்றி: டாடா ஸ்டீல் சேலஞ்சர்ஸ் தொடரின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, பிரான்சின் மார்க் ஆன்ட்ரியா மவுரிசியை வீழ்த்தினார். இந்தியாவின் அர்ஜூன், நெதர்லாந்தின் லுாகாஸ் வான் பாரஸ்ட் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement