dinamalar telegram
Advertisement

தமிழ் தலைவாஸ்–ஜெய்ப்பூர் 'டை' : புரோ கபடியில் 'விறுவிறு'

Share

பெங்களூரு: தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் அணிகள் மோதிய புரோ கபடி லீக் போட்டி 31-31 என, 'டை' ஆனது.

பெங்களூருவில், புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) எட்டாவது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் அணியை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 17-13 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் அணி, ஜெய்ப்பூர் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்து 21-18 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து அசத்திய தமிழ் தலைவாஸ் அணி, ஒரு கட்டத்தில் 31-29 என முன்னிலையில் இருந்தது. 'டூ ஆர் டை' முறையில் கடைசியாக 'ரெய்டு' சென்ற தமிழ் தலைவாஸ் அணியின் மன்ஜீத் ஏமாற்றத்துடன் திரும்ப, ஜெய்ப்பூர் அணிக்கு 2 புள்ளி வழங்கப்பட்டது. ஆட்டநேர முடிவில் போட்டி 31-31 என்ற கணக்கில் 'டை' ஆனது.



தமிழ் தலைவாஸ் அணிக்கு மன்ஜீத் (9 புள்ளி), சுர்ஜீத் சிங் (5) கைகொடுத்தனர். ஜெய்ப்பூர் சார்பில் அர்ஜூன் தேஷ்வால், நவீன் தலா 6, சந்தீப் துல் 5 புள்ளி பெற்றனர். தமிழ் தலைவாஸ் அணி, 10 போட்டியில், 3 வெற்றி, 5 'டை', 2 தோல்வி என, 30 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி, 10 போட்டியில், 5 வெற்றி, ஒரு 'டை', 4 தோல்வி என, 31 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.



மற்றொரு லீக் போட்டியில் பாட்னா, பெங்களூரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பாட்னா அணி 38-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணிக்கு சுனில் (9 புள்ளி), சச்சின் (8 ), குமன் சிங் (7) கைகொடுத்தனர். பெங்களூரு சார்பில் பவான் ஷெராவத் 10 புள்ளி பெற்றார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement