Load Image
dinamalar telegram
Advertisement

நெஞ்சுக்கு நீதி

தயாரிப்பு - ஜி ஸ்டுடியோஸ், பே வியு புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இயக்கம் - அருண்ராஜா காமராஜ்
இசை - திபு நினன் தாமஸ்
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், தன்யா, ஷிவானி
வெளியான தேதி - 20 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ஹிந்தியில் 2019ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'நெஞ்சுக்கு நீதி'.
“ஒரு இந்தியக் குடிமகனுக்கு சாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது,” என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டிகிள் 15'.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளை இந்த 'நெஞ்சுக்கு நீதி' படம் சொல்லியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வழக்கு. அந்தக் காரணத்தால் இந்தப் படத்தின் கதைக் களமாக பொள்ளாச்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தலித் சிறுமிகள் மூவர் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கிறது. ஒரு சிறுமி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவரை அந்த வழக்கை விசாரிக்க விடாமல் மேலதிகாரியான காவல் துறை கண்காணிப்பாளரும், கீழதிகாரியான சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் அழுத்தம் கொடுக்கிறார்கள். மூன்று சிறுமிகளின் விவகாரத்தில் அமைச்சரின் அக்கா மகன் சம்பந்தப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் விசாரிக்க ஆரம்பிக்கிறார் உதயநிதி. குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தாரா, காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு த்ரில்லர் படமாகக் கொடுக்க வேண்டிய கதையை சாதிய பாகுபாடுகள் இங்கு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படமாகக் கொடுக்க நிறையவே மெனக் கெட்டிருக்கிறார்கள். அந்த சிறுமிகளின் வழக்கு விசாரணையையும் மீறி சாதிய பிரச்சினைகளைத்தான் திரைக்கதை, வசனத்தில் அதிகம் சேர்த்திருக்கிறார்கள். ஒரு ரீமேக் படமாகப் பார்க்க முடியாத அளவிற்கு நம் ஊர் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதைக்களம், கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் அவருக்கு கூடுதல் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் இமேஜை எந்த அளவிற்கு உயர்த்த முடியுமோ அந்த அளவிற்கு வசனங்கள் மூலம் அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தி வைக்க முயற்சித்திருக்கிறார்கள் இயக்குனரும் வசனகர்த்தாவும். இதற்கு முந்தைய திரைப்படங்களில் கலகலப்பாகவே பார்த்த உதயநிதியை இந்தப் படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு புதிதாக இருக்கிறது. ஐபிஎஸ் முடித்து முதல் பணியிடத்தை விட்டு மாற்றலாகி இரண்டாவது பணியிடமாக பொள்ளாச்சிக்கு வருகிறார். வெளிநாட்டிலேயே படித்து வளர்ந்தவருக்கு, இந்த ஊரின் சாதிய அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும் என சட்டத்திற்காகக் பாடுபடும் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார் உதயநிதி. அவர் பேசும் வசனங்கள் மூலமே அவருடைய ஹீரோயிசத்திற்கு நிறைய பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அது யதார்த்தத்தை மீறி போய்விடுவதுதான் இந்தப் படத்திற்கான ஒரு நெகட்டிவ்வாக அமைகிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். முழு படத்திலும் உதயநிதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் மனைவியாக தன்யா ரவிச்சந்திரன். கணவன், மனைவி இருவரும் போனில் உரையாடும் காட்சிகள்தான் படத்தில் இருக்கிறது. கிளைமாக்சில் மட்டும் நேரில் வருகிறார் தன்யா. காணாமல் போன தன் தங்கைக்காகப் போராடும் கதாபாத்திரத்தில் ஷிவானி ராஜசேகர். அக்கதாபாத்திரத்தில் யதார்த்த தோற்றத்தில் முத்திரை பதிக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் ஆரி அர்ஜுனன் அவரது கதாபாத்திரத்தைப் பேச வைக்கிறார்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி. தவறு செய்பவர்களுக்கு துணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். கடைசியில் அவருடைய கதாபாத்திரத்தில் வரும் ஒரு திருப்புமுனை நாம் சிறிதும் எதிர்பாராத ஒன்று. சப்--இன்ஸ்பெக்டராக இளவரசு. உதயநிதிக்குப் பிறகு படத்தில் அதிகம் வரும் கதாபாத்திரங்கள். படத்தின் முக்கிய வில்லனாக அரசியல்வாதியாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுல்.

திபு நினன் தாமஸ் இசையில் கதையுடன் ஒட்டிய இரண்டு பாடல்கள். பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். சினிமாவில் அழகான பொள்ளாச்சியை மட்டுமே பார்த்த நமக்கு பொள்ளாச்சியின் மற்றொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதை எடிட்டர் கவனித்திருக்கலாம்.

இது வழக்கமான ஒரு மசாலா திரைப்படமல்ல. தலித் மக்களின் பிரச்சினைகளையும், அவர்களைச் சுற்றிய அரசியலைப் பற்றியும் பேசும் ஒரு படம். ஒரு பக்கம் தலித் மக்கள் படித்து முன்னேறியிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள், மற்றொரு பக்கம் அவர்கள் இன்னமும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள். எந்த ஒரு சாதியையும் விமர்சிக்கக் கூடாது என சொல்லும் படத்தில் மேல் சாதி என்று குறிப்பிடப்படுபவர்களையும் விமர்சிப்பது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. எதை நோக்கி படத்தைக் கொண்டு செல்வதில் ஒரு குழப்பம் தெரிகிறது. ஒரே ஒரு மையப்புள்ளியை மட்டும் நோக்கி திரைக்கதை நகர்ந்திருந்தால் இந்தப் படம் நெஞ்சுக்குள் இடம் பெறும் படமாக அமைந்திருக்கும்.

நெஞ்சுக்கு நீதி - கொஞ்சம் குறையுடன் நிறையும்…

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • RAMESH BABU - KARUR,இந்தியா

  நல்ல சீரியல்

 • ram - mayiladuthurai,இந்தியா

  யார் நன்றாக இருக்கிறது என்று சொல்லுகிறார்களோ, அவர்கள் இந்த வருடம் முழுவதும் இலவசமாக பார்க்கலாம், மந்திரிகள், வட்டம், மாவட்டம் ஸ்பொன்சோர்ஸ்.

 • Aarkay - Pondy,இந்தியா

  தமிழ் திரையுலகே ஜாதியை விட்டு வெளியே வாருங்கள் ப்ளீஸ்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஓசியில் டிக்கட் கிடைத்தால் இரண்டுமுறை படம் பார்த்து (1.5 + 1.5) 3/5 ரேட்டிங்கா?

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  ரீமேக் படம், குள்ளன் சூர்யா நடிச்சிருந்தானாகூட நல்ல இருந்து இருக்கும். பேசாம சரவணா ஸ்டார் அண்ணாச்சி நடிச்சிருக்கலாம். நடிப்புனா என்னவென்று கேட்கும் ஊத்த நிதிக்கு இந்த தூக்கி வாசிப்பு விமர்சனம். இதற்கு அல்லக்கைகள் பாராட்டு பாத்திரம் வேற கருமம்.

 • Suppan - Mumbai,இந்தியா

  பல தமிழக கிராமங்களில் இன்னும் தீண்டாமை நிலவுகின்றது. அதில் மிக அதிகமான கிராமங்கள் உள்ள மாவட்டம் திருவாரூர். ஆம் கருணாவின் சொந்த மாவட்டம். இதை அதிமுகவும் வெளிக்கொணரவில்லை. இப்பொழுது அண்ணாமலை இதைப் போட்டு உடைத்துவிட்டார்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  எனது வாழ்க்கை அனுபவத்தில் சொல்கிறேன் எனக்கு தலித் நண்பர்கள் உண்டு. இரண்டு பேர். ஒருவர் தந்தையை group 1 officer நல்ல சொத்து , இன்னொருவர் ஊர் பஞ்சாயத்து தலைவர். ஆனால் கல்லூரி பீஸ் கட்டவே கஷ்ட பட்டான். நல்ல மனிதன் நன்றாக விளையாடவும் செய்வான் , முதல் பணக்கார நண்பன் கல்லூரி சித்தாள் வேலை செய்யும் வேறு மாநிலங்களை சேர்ந்த சற்று வெளுப்பாக உள்ள ஏழை பெண்களிடம் தவறாக நடக்கலாமா என்று பேசியிருக்கிறான். இப்படி அவன் எண்ணம் , இன்னொரு நண்பனோ கல்லூரி நண்பனோ கல்லூரி முடித்து சுய தொழில் செய்தான் , சில அரசு கான்ட்ராக்கல் முடித்தான். ஆனால் அவனுக்கு உள்ளூர் அரசியல் வாதிகள் செய்த செய்த கான்ட்ராட்களுக்கு பணம் கொடுப்பதில்லை ஏமாத்துகிறார்கள். உள்ளூர் மாவட்டமும் ஒன்றிய செயலாளர்களும் தங்கள் சொந்தங்களுக்குள் மட்டும் சரியாக நடந்து கொள்கிறார்கள் என்று அதாங்க பட்டான். இருவரும் தலித்துகள் தான் வேறு பட்ட மனப்பான்மை கொண்டவர்கள் எதையும் நான் மிகை படுத்தி சொல்லவில்லை.

 • mindum vasantham - madurai,இந்தியா

  படம் பார்த்தேன் நல்ல பாய்ண்ட்ஸ் உண்டு. ஆனால் அதிகாரம், கேவலமான மனநிலையில் இருக்கும் எவனும் தவறு செய்யலாம், குறிப்பிட்ட சில ஜாதிகள் தான் தவறு செய்வர் என்பது கேவலமான எண்ணம். ஆ ராசா தவறு செய்யலாம், எளிமையாக வாழும் நாகர்கோயில் மிஸ்டர் காந்தி தவறு செய்ய மாட்டார்...

 • nizamudin - trichy,இந்தியா

  படத்தில் எல்லாமே சிறப்பு எதை பாராட்டுவது /உதயநிதி இசை பாடல்கள் எல்லாமே படு சிறப்பு தினமலர் ரேட்டிங் 3 நன்றி

  • Aarkay - Pondy,இந்தியா

   அப்படியா? சூப்பர் உங்களுக்கு நல்ல எதிர்காலமுள்ளது.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இன்றைய முதல்வரின் மகன் கார்பொரேட் குடும்பத்தின் வாரிசு என்றொரு தகுதியை மட்டும் வைத்து கொண்டு, தமிழகத்தில் நசுக்கப்பட்டுக் கொண்டுள்ளோரின் கதையை எடுக்கும் துணிவில்லாமல் கூட்டணி கட்சியினரின் சாதியை நசுக்கப்பட்டோரின் சாதியாக காட்டுவது ஆனால் அந்த சாதியினரின் இளசுகளை டாஸ்மாக்கின் வாடிக்கையாளராக்கி விட்டு அவர்களின் காசை பிடுங்கும் கார்பொரேட் குடும்பம் அல்லவா மேல்சாதி? அவர்கள் ஐந்து முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளனர் இன்னமும் தமிழகம் முழுதும் ஏழு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறதே? எப்படி?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நடுநிலையாக விமர்சனம் போட்ட மலருக்கு பாராட்டுக்கள்..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement