sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

பொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல்

/

பொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல்

பொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல்

பொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல்


PUBLISHED ON : ஜன 15, 2019

Google News

PUBLISHED ON : ஜன 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைப்பொங்கல் கொண்டாட மாமனார் வீட்டுக்குப் போனா மாப்பிள்ளை செய்யும் அலப்பறையை நீங்களே பாருங்க...

'என்ன மாப்பிள்ளை தலையில் பொங்கல் பானை வைச்சுகிட்டு தையா தக்க தையா தக்கான்னு ஆடுறீங்க',

'இது தான் மாமா தல தை பொங்கல்'

'ஏம்மா மாது என்ன உம்முன்னு இருக்கே',

'எம்புட்டு ஆசையா எனக்கு 'மாது'ன்னு பேரு வைச்சீங்க' உங்க மாப்பிள்ளை மாடு, மாடுன்னு கூப்பிடுறாரு'...

'ஒரு நாள் உங்க பொண்ணு என் தலையில் முட்டிட்டா. மறுபடி முட்டலேன்னா கொம்பு முளைக்கும்னு திரும்பவும் முட்டுனா. அதுல இருந்து மாது, மாதுன்னு கூப்பிட்டா கூட உங்க பொண்ணு காதுக்கு மாடு, மாடுன்னு தான் 'மாடுலேஷன்' கேட்குது'

'ஏன் மாப்பிள்ளை ஜல்லிக்கட்டு போனீங்களே காளைய அடக்குனீங்களா'

'உங்க பொண்ணையே அடக்க முடியலை இதுல காளையை வேற'...

'என்ன முனங்குறீங்க'

'அது வந்து மாமா நானும் ரொம்ப நேரம் அடக்குனேன். முடியலை விட்டுட்டேன்'

'அடக்கியிருந்தா பரிசு கிடைச்சிருக்கும்'

'என்னது தும்மலை அடக்கினா பரிசா', 'அப்போ நீ'

'ஆமா... நான் எங்க காளைய அடக்கினேன் தும்மலை தானே அடக்கினேன்'

'அட தும்மலுக்கு பிறந்த தும்மலு'

'கரெக்ட்டா சொன்னீங்க எங்க அப்பாவும் மூக்குபொடி போட்டு தும்முற பழக்கம் இருக்கு'...

'இளவட்ட கல்லாவது துாக்குறீங்களா'

'ஏன்ப்பா, சோத்துல கல் கிடந்தாலே அவரால துாக்க முடியாது'

'ஏ மாது ஒரு நாள் துாக்குறேன் பாரு'

'இளவட்ட கல்லையா'

'இல்லை சோத்துல கிடக்குற கல்லை'

'மாப்பிள்ளை பொங்கல் பானைக்கு 'பெயின்ட்' பூசுங்க'

'உங்க பொண்ணு தான் ஏற்கனவே மேக்கப் பூசியிருக்காளே மாமா',

'யோவ் 'ஹஸ்பன்ட்' என்னை பார்த்தா பானை மாதிரி இருக்கா',

'ச்சீ ச்சீ அப்படி இல்லை'

'அந்த பயம் இருக்கட்டும்'

'அந்த பானை தான் உன்னை மாதிரி இருக்கு'

'நான் பனையின்னா நீ குண்டா சட்டி, உங்கப்பா துாக்கு சட்டி, உங்கம்மா பருப்பு சட்டி'

'மாப்பு சண்டை போட்டது போதும் கரும்பு கடிங்க'

'ஹூம்ம் துருப்பிடிச்ச பல்லை வைச்சுகிட்டு கரும்பை இல்லை ஒரு துரும்பை கூட உங்க மாப்புக்கு கடிக்க முடியாதுப்பா'...

'இப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தா அடுப்புல பொங்கல் வைக்க முடியாது கடுப்புல தான் வைக்க முடியும்'

'ஏன் மாமா உங்க பொண்ணு அடுப்புல பொங்கல் வைச்சாலே அது புளியோதரை மாதிரி தான் இருக்கும் கடுப்புல வைச்சா கந்தரகோலமாவுல இருக்கும்'

'யோவ் மாப்பு பொங்கல் பொங்க போகுதுய்யா. குலவையை போடு குலவையை போடு'

'அங்கே என்னப்பா சத்தம்'

'உன் புருஷன்கிட்ட குலவை போடச் சொன்னா அம்மி குழவியை காலில் போட்டுட்டான்மா'

'மாமா, பட்ட காலிலயே படும்ன்னு சொல்வாங்க'

'அப்போ நேத்து காலில் பித்தளை சொம்பை போட்டது'

'வேற யாரு நான் தான் பொங்கலோ பொங்கல் 'பேமிலி' பொங்கல்'...






      Dinamalar
      Follow us