
திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை, நடுநிலைப் பள்ளியில், 1959ல், இ.எஸ்.எல்.சி., படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார், எஸ்.என்.கருப்புசாமி கவுண்டர். தலைமையாசிரியராகவும் பொறுப்பு வகித்தார்.
இறுதி தேர்வு எழுத, பழனி நகர பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது; அதற்கு, இரண்டு நாள் உணவு மற்றும் பேருந்து கட்டணம், குரூப் புகைப்படம் எடுப்பதற்கு செலவாக, 30 ரூபாய் ஆகும் என கணக்கிட்டு வசூலித்தார்.
உடனடியாக கொடுக்க பணம் இல்லை. வீட்டில் வளர்த்த ஒரு கன்று குட்டியை விற்று கொடுத்தார் என் பாட்டி. இதை அறிந்த அந்த ஆசிரியர், அந்த கன்றுக்குட்டியை வாங்கியவரை வரவழைத்து, அதை மீட்டு, என் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். அன்று, அவர் வாங்கிய சம்பளத்தில், நான்கில் ஒரு பகுதி அந்த பணம். அந்த உதவியால் தேர்வு எழுதி வாழ்வில் முன்னேறினேன்.
இப்போது என் வயது, 75; அன்று அவர் செய்த உதவியை மறக்க முடியவில்லை.
- மு.முகமது இஸ்மாயில், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 96299 56037

